Showing posts with label தெரிந்தசினிமா. Show all posts
Showing posts with label தெரிந்தசினிமா. Show all posts

Thursday, November 2, 2023

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி - 85


 

நகைச்சுவை நடிகை சச்சுவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி. இவரது தாத்தா ராமநாத அய்யர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

இவரது தந்தை சுந்தரேசன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். சென்னை மண்ணடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவர் சச்சு. இவருக்கு சரஸ்வதி என்று பெயர் வைத்தனர். சச்சு என்று பெயரை சுருக்கி அழைத்ததால்  அதுவே நிரந்தர பெயராகி விட்டது.

சச்சுவின் அக்காள் லட்சுமியை, சென்னை மைலாப்பூரில் வசித்து வந்த அவரது பாட்டி எடுத்து வளர்த்தார். சச்சுவிற்கு நான்கு வயது ஆனதும், அவரையும் மைலாப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்தார் பாட்டி.

சச்சுவின் பாட்டி வீட்டில், பரத நாட்டிய கலைஞர் தண்டாயுதபாணி பிள்ளை வாடகைக்கு குடியிருந்தார். அவர் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தண்டாயுதபாணி பிள்ளையிடம் சச்சுவின் சகோதரி 'மாடி' லட்சுமியும் பரத நாட்டியம் கற்று கொண்டார். அங்கு பலரும் நாட்டியம் ஆடுவதை பார்க்க செல்வார் சச்சு. அவர்கள் ஆடுவது போலவே இவரும் ஆடுவார். அவரின் ஆர்வத்தைப் பார்த்த தண்டாயுதபாணி பிள்ளை, சச்சுவுக்கும் நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் ஜுபிடர் பிக்சர்சார் 'விஜயகுமாரி' என்ற படத்தை எடுத்தனர். கே.ஆர்.ராமசாமி - டி.ஆர்.ராஜகுமாரி நடித்த இப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். 1950-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சச்சுவின் அக்காள் மாடி லட்சுமி ஒரு பாடலுக்கு நாட்டியமாட வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்புக்கு, மாடி லட்சுமியுடன் அவரது பாட்டி சச்சு ஆகியோரும் செல்வது வழக்கம்.

1952-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்சார் `ராணி' என்கிற படத்தை எடுக்க திட்டமிட்டனர். படத்தின் கதாநாயகி பானுமதி. அவருடைய குழந்தைப்பருவ வேடத்திற்கு, ஒரு குழந்தை நட்சத்திரத்தைத் தேர்வு செய்து இருந்தார் இயக்குனர் எல்.வி.பிரசாத்.

அந்த குழந்தைக்கு படப்பிடிப்பின் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால், அப்போது சச்சுவை பார்த்த இயக்குனர் எல்.வி.பிரசாத், அவரை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார்.

சச்சுவின் தாயார் ஜெயா இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகத்திற்கும் செல்வது உண்டு. அவருக்கு கலைகள் மீது பெரும் மரியாதை உண்டு. ஆனால், இவரது தந்தைக்கு பிடிக்காது. முதலில் அக்காள் மாடி லட்சுமி நடிக்க சென்ற போது எதிர்த்தார். நடனம் தெரிந்தவர். நடனக் காட்சிகள் என்பதால் பிறகு ஒத்துக் கொண்டார்.

'ராணி' படத்தில் சச்சுவை நடிக்க அழைத்த போதும் அதே போல எதிர்த்தார். அம்மா ஜெயா, அவரை சமாதனப் படுத்தி நடிக்க சம்மதம் வாங்கினார். குழந்தை நட்சத்திரமாக ராணி படத்தில் நடித்த சச்சுவின் திறமையை வியந்து குடும்பத்தினர் அனைவரும் பாராடினார்கள். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க சம்மதித்தனர். இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் டியூசன் வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் சொல்லிக் கொடுத்தார்கள். கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொண்டார்.  1950களிலேயே குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட, அனைவராலும் கொண்டாடப்பட்ட குட்டி நட்சத்திரம் என்.எஸ்.சரஸ்வதி என்ற குமாரி சச்சு. இவருக்கு முன்னதாகவே பி.கே.சரஸ்வதி, சி.கே.சரஸ்வதி என பல சரஸ்வதிகளின் கடாட்சம் திரையுலகுக்கு இருந்ததால் இவர் சுருக்கமும் இனிமையுமாக சச்சு ஆனார். 

அவருக்கு புகழ் தேடித் தந்த படம் 'தேவதாஸ்.' 1953-ல் வெளியான இப்படத்தில், சிறு வயது சாவித்திரியாக சச்சு நடித்தார். 'ஓ... தேவதாஸ்' என்று சச்சுவும், 'ஓ... பார்வதி' என்று மாஸ்டர் சுதாகரும் நடித்த காட்சி, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தொடர்ந்து, ஜெமினியின் 'அவ்வையார்' படத்தில், பால அவ்வையாராக நடித்தார். பின்னர் 1954-ல் பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர்.ராமசாமியும், பத்மினியும் ஜோடியாக நடித்த 'சொர்க்க வாசல்' படத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பின்னர் 'மருமகள்', 'எதிர்பாராதது', 'சியாமளா', ஜெமினியின் இந்தி பாலநாகம்மா, மாயாபஜார் முதலிய படங்களில் நடித்தார். 12 வயது ஆன பிறகு 'கோடீஸ்வரன்' படத்தில் சிவாஜியின் தங்கையாகவும், 'கலையரசி' படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாகவும் நடித்த இவர், சிவாஜி - பத்மினி நடித்த 'மரகதம்' படத்தில், ஒரு நடனக் காட்சியில் ஆடினார்.

குழந்தை நட்சத்திரமாகவும், தங்கை வேடங்களிலும் நடித்து வந்த சச்சு, 1962-ல் 'வீரத்திருமகன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம், அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற புகழ் பெற்ற பாடல் இவருக்கு பெருமை சேர்த்தது.   மிகவும் பழமையும், பாரம்பர்யமும் மிக்க குடும்பத்தில் பிறந்து, தனது சிறந்த நாட்டிய மற்றும் குணசித்திர நடிப்பின் மூலம் பிரபலமடைந்தவர்…மாயாபஜார் (குட்டி வத்சலா),வீரத் திருமகன் ஆனந்தன்( 1961, ரோஜா மலரே ராஜகுமாரி) தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் “அன்னை” ( அழகிய மிதிலை நகரினிலே, புத்தியுள்ள மனிதரெல்லாம்…சந்திரபாபு) போன்ற வெற்றி படங்கள் மூலம், ஜீபிடர், ஜெமினி, வாஹினி போன்ற பெரிய பானர்கள் இவர்றிலெல்லாம் வாய்ப்புகள் அவரை தேடிக் குவிந்தது.,  இயக்குனர் சிரீதரின் “காதலிக்க நேரமில்லை”, ஒரு பெரிய திருப்பு முனை என்பதை நாம் அறிவோம். திரு நாகேஷ் அவர்களுடன், காமெடி ட்ராக்…மலரென்ற முகமொன்று…சூப்பர் வெஸ்டர்ன் டான்ஸ்.! அதுபோல் கோவை செழியன் தயாரித்த ஊட்டிவரை உறவு , கே.பி. சாரின், பாமா விஜயம், பூவா தலையா போன்ற படங்கள் இன்னொரு மைல் கல். மேலும் சுருளிராஜன், தேங்காய் சீனீவாசன் மற்றும் திரு எம்.ஆர். ராதா போன்ற தமிழ் நகைச்சுவை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியவர் குமாரி சச்சு அவர்கள்.

அன்னை இல்லம்' படத்தில் இவர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்தவர், 1964-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய "காதலிக்க நேரமில்லை'' படம் இவரை நகைச்சுவை நடிகையாக புகழ் பெற வைத்தது.

தொடர்ந்து, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமைக்குரல், பொம்மலாட்டம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, கலாட்டா கல்யாணம், பூவா தலையா' உள்பட பல படங்களில் சச்சு நடித்தார். அதில் பூவா தலையா படத்தின் வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. "மாட்டுக்கார வேலன்'' படத்தில், பெண் "சி.ஐ.டி''யாக நடித்தார்.

1970-ம் ஆண்டு, "நீரோட்டம்'' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தேவியர் இருவர், மெழுகு பொம்மைகள், தோப்பில் தென்னை மரம், சக்கரம் சுழல்கிறது, முதியோர் இல்லம் உள்பட பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தினேஷ் - கணேஷ், மேல்மாடி காலி, காஸ்ட்லி மாப்பிள்ளை, மாண்புமிகு மாமியார், இப்படிக்கு தென்றல் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கியவர்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தியாக பிரம்மா கானா சபா விருதினை எம். எஸ். சுப்புலட்சுமியிடமும், ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவின் நாடக சூடாமணி விருதும் பெற்றவர்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி,  அண்ணா இப்படி ஐந்து முதல்வர்களுடன் பனியாற்றிய சிறப்பு உடையவர் குமாரி சச்சு.

Tuesday, October 17, 2023

தெரிந்த சினிமா தெரியாதா சங்கதி -83


   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப் படங்களில் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம்  பிடித்தவர்  எஅஜசுலோசனா.

  . தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும், படித்தது வளர்ந்தது, நடித்தது எல்லாமே தமிழகத்தில் தான். இவரது தாய்க்கு நடனம், இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் 8வயதிலேயே ராஜசுலோசனாவுக்கு வாய்ப்பாட்டு, வயலின், சப்தஸ்வரம் என கற்றுக்கொடுத்தார்.

கதாநாயகி, குணசித்திரம், நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்து  முத்திரை பதித்தவர். இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியானாலும் தனி முத்திரை பதித்து  ரசிகர்களைக் கவர்ந்தவர்.  கதாநாயகனுக்கு இணையான வில்லியாக நடித்து மிரட்டியவர்.

எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து தனது யதார்த்தமான அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

1950களில் நடிக்க வந்த நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த நடிகை. இனிமையான குரலும், மென்மையாகப் பேசவும் தெரிந்த நடிகை. அவர் பேசும் வசனங்களே இதற்கு சாட்சி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 15.8.1935ல் பிள்ளையார்சட்டி பக்தவச்சலம் நாயுடு, தேவகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பக்தவச்சலம் வெள்ளைக்காரன் காலத்தில் சென்னையில் ரயில்வேத்துறையில் பணிபுரிந்தார். பெற்றோர் இட்ட பெயர் ராஜீவ லோசனா. மழலை மொழியில் பள்ளியில் இவர் தன் பெயரை ராஜசுலோசனா என சொல்லவே அதுவே பெயரானது.

திரைப்படங்களில் திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி இருவரும் ஆடுவதைப் பார்த்து தானும் அவர்களைப் போலவே நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்தது. இதை அவரது பெற்றோரிடம் சொல்லவே மகளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் நாட்டியமும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

திருவல்லிக்கேணியில் லலிதா என்பவரிடம் நாட்டியத்திற்கான ஆரம்பப் பாடத்தைக் கற்றார். பத்மினி, வைஜெயந்திமாலாவை உருவாக்கிய கே..தண்டபாணியிடம் பரதநாட்டியம் கற்றார். குச்சுப்புடி, கதகளி நடனங்களையும் அந்தந்த வல்லுநர்களிடம் கற்றுத் தேர்ந்தார்.

ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகைதாம்பரம் லலிதா.’ எம்.சி. சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நிகழ்ச்சி. நடன மாது ஒருவர் வரவில்லை. ராஜசுலோசனா தன் தோழிக்குக் கால் கொடுத்தார். பாம்பாட்டியாகவும் , கிருஷ்ணராகவும் ஆடிப் பாடினார்.

அதை நேரில் கண்டு ரசித்தவர் கன்னட சினிமா இயக்குநர் சின்ஹா. ராஜசுலோசனாவை நடிக்கக் கூப்பிட்டார். வீட்டில் எதிர்ப்பு அணிவகுத்தது. ஆருடம் பார்த்தனர் பெற்றோர். ‘ஒப்பனை ஒளி வீசத் திரையில் மின்னுவார்என்றே அத்தனை பண்டிதரும் அடித்துச் சொன்னார்கள். ராஜசுலோசனாவின் முதல் படம் ஹொன்னப்ப பாகவதர்-பண்டரிபாய் நடிக்க, கன்னடத்தில்குணசாகரிஎனவும், தமிழில்சத்தியசோனைஎனவும் தயாரானது. மிகச் சிறிய வேடம். நடனம் ஆடவும் முடிந்தது

  1952ல் வந்த பராசக்தி படத்திலேயே ராஜசுலோசனா சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க வேண்டிய வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பவதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு ஸ்ரீரஞ்சனிக்கு கொடுக்கப்பட்டது.

 .பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான நால்வர் படத்தில் ராஜசுலோசனா அறிமுகமானார்.  தொடர்ந்து மாங்கல்யம், பெண்ணரசி ஆகிய படங்கள் ராஜசுலோசனாவை ரசிகர்கள் அனைவரும்; கவரும் வகையில் வெளியானது.1955ல் வெளியான பெண்ணரசி படத்தில் ஒரு நாட்டின் அரசியல் நிர்வாகத்திற்குள் ஊடுருவி நாட்டின் அமைதியைக் குலைத்துவிடும் நாட்டியக்காரி ஜீவாவாக பேர் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

1955ல் வெளியான டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான குலேபாகாவலியில் தன் வசீகரிக்கும் சிரிப்பாலும், சொக்க வைக்கும் பார்வையாலும் ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாதவாறு கட்டிப்போட்டுள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. அவருடன் காந்தக்கண்ணழகி ஜி.பரலட்சுமி நடித்துள்ளார்.

வில்லியாகவும், பி.எஸ்.வீரப்பாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். படத்தில் .வி.சரோஜா, சூரியகலா என இரு கதாநாயகிகள் இருந்தும் நாட்டியக்காரி ஜீவாவின் நடனத்தில் தான் ரசிகர்கள் அனைவருமே சொக்கிப்போனார்கள்.அப்போது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என அவரது வீட்டு வாசலில் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். மர்மவீரன், அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, எம்ஜிஆருடன் குலேபாகவாலி ஆகிய படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன் அம்பிகாவதி படத்தில் நடித்தார்.

டி.ஆர். ராமண்ணாவின்குலேபகாவலியில் ராஜசுலோசனா முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். ராஜசுலோசனா ஆடிப் பாடியஎன் ஆசையும் உன் நேசமும் ரத்த பாசமும்’ ‘குலேபகாவலியைக் கூடுதல் குஷிப்படுத்தியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ராஜசுலோசனா இல்லாமல் சினிமாவே வராது என்ற நிலை.

1959 பொங்கல் வெளியீடுதை பிறந்தால் வழி பிறக்கும்’. ஓஹோவென்று ஓடிற்று. ராஜசுலோசனாவை மேலும் பிரபலமாக்கியது. ‘அமுதும் தேனும் எதற்குஇரவுகளை சாஸ்வதமாக இனிக்கச் செய்கிறது. அண்ணாவின்நல்லவன் வாழ்வான்திரைப்படத்தில் கவிஞர் வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடலில் (சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்) ஆடிப்பாடும் வாய்ப்பு ராஜசுலோசனாவுக்குக் கிடைத்தது. அதன் மற்றொரு டூயட்டானகுற்றால அருவியிலே குளித்ததைப் போல் இருக்குதாபட்டிதொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பியது

எம்.ஜி.ஆர். ஜோடியாக ராஜசுலோசனா நடித்த படம்    நல்லவன் வாழ்வான்படம். மிக  குருகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம்.  படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள். இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்தது. நாள் முழுவதும் நடித்த அலுப்பு, விடியும் வரை தொடர்ந்தது.

பொலிஸ்  ராஜசுலோசனாவைத்  துரத்தும் காட்சியில் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அவர்  கண் விழித்தபோது கையில் ஆவி பறக்கும் சூடான காபியுடன், முகத்தில் கவலையுடன்  எம்.ஜி.ஆர். நின்றார்.   

அடுத்து   டூயட் ஒன்று படமாவதற்காகக் காத்திருந்தது. முடியுமா...’ என  டைரக்டர் கேட்டதற்கு  ராஜ சுலோசனா ஓமெனத்தலயாட்டினார். எம்.ஜி.ஆர் தலையிட்டு  அன்ரு பாடல் காட்சியை   எடுக்க வேண்டாம் என்றார்.

ராஜசுலோசனாவுக்கு குணவதி - அடாவடிப் பெண் என இரு வேடங்களில்கவிதாபடத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது 100 நாள் படமானகைதி கண்ணாயிரம்’. அதில் ராஜசுலோசனா இடம் பெற்றகொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்பாடல் பெற்ற வரவேற்பு.

படித்தால் மட்டும் போதுமா’- வெற்றிச் சித்திரத்தில் நடிகர் திலகத்தின் மனைவியாக ராஜசுலோசனாவின் குணச்சித்திர நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

சிவாஜி குடித்துவிட்டு வந்து ராஜசுலோசனாவிடம்,

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை’ - என்று உள்ளக் குமுறலை உதடுகளில் உயிரூட்டிப் பாடி நடித்திருப்பார்.

பெரிசுகள் இன்னமும் தங்கள் இதயத்தில் பச்சை குத்திக்கொண்ட காட்சி அது!

இதயக்கனியில் ராஜசுலோசனா ஏற்ற கொள்ளைக் கூட்டத் தலைவி வேடம் எவரும் எதிர்பாராதது.

ஜேம்ஸ்பாண்ட் ஜெய்யுடன் ராஜசுலோசனா மோதியதுணிவே துணைஎமர்ஜென்ஸி காலத்தில் வசூலில் முரசு கொட்டியது. ரஜினியுடன் ராஜசுலோசனா நடித்தகாயத்ரிபரபரப்பாக ஓடியது.

ராஜசுலோசனாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளிவிழா கொண்டாடிய டி.ராஜேந்தரின்எங்க வீட்டு வேலன்’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடித்தவர் ராஜசுலோசனா.

பிரபல தெலுங்கு டைரக்டர் சி.எஸ். ராவ் - ராஜசுலோசனாவின் கணவர். இந்தியத் திரை உலகிலேயே தேவி,  என்று இரட்டைப் பெண் குழந்தைகளை ஈன்ற ஒரே நட்சத்திரத் தாய் ராஜசுலோசனா!

தண்டபாணிபிள்ளையின் மாணவியாக நடனக் கலையைப் பரிபூரணமாகக் கற்றவர். ஆந்திரத்தின்குச்சுப்புடிஉயர்வடைய ராஜசுலோசனாவின் பாதங்கள் பாடுபட்டன.

எழுபதுகளுக்குப் பின்னர் தெலுங்கிலும் தமிழிலும் முகம் சுளிக்கும் விதத்தில் ராஜசுலோசனா நடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆயினும் சக கலைஞர்களால்நல்ல மனுஷி!’ என்று பாராட்டப்பட்டவரும் அவரே!

அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றியவர் ராஜசுலோசனா

Thursday, September 14, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -80

தமிழ்த்திரை உலகில் நடைகை புஷ்பலதா அதிர்ஷ்டம்  இலாதவர் என்ருதான் சொல்ல வேண்டும். ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலும்  இரண்டாஅவ்து நாயகியாகவே வலம் வந்தார். தங்கை வேடத்துக்கு மிகப் பொருத்தமான நடிகையாகத் திகழ்ந்தார்.

நடிப்புத் திறனிலும் குறை சொல்ல முடியாதவர். ஒரு சில படங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகி அல்லது அக்காள், அண்ணி, தங்கை இப்படியான வேடங்களே அவருக்கு அளிக்கப்பட்டது புரியாத புதிர். நாட்டியம் கற்றுத் தேறிய கோயமுத்தூர் பொண்ணு கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த பெண். 6 பெண் மக்கள், 2 ஆண் பிள்ளைகள் என எட்டு குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பத்தில் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவர்.

7 வயது குழந்தை புஷ்பலதாவும் மிகச் சூட்டிகையாக நாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்தார். நோஞ்சான் உடலும் வெகுவேகமாகத் தேறியது. அக்காலகட்டத்தில் இறுக்கமான சூழலைக் கொண்ட குடும்ப உறவுகளுக்கு மத்தியில், பெண் குழந்தையை நாட்டியம் கற்க அனுப்பியது உறவினர்களிடையே பெரும் புரளிப் பேச்சாக மாறியது. குடும்பப் பெண்கள் நாட்டியம் கற்பதும் ஆடுவதும் கௌரவமானதல்ல என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருந்ததால், உறவினர்கள் இவர்கள் குடும்பத்தைத் தங்கள் உறவிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார்கள்.

9 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நிகழ்ந்த்து. புஷ்பலதாவின் வாழ்க்கையை அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு நகர்த்துவதில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அந்தக் கால நாடக நடிகைகளில் ஒருவரும் ஹார்மோனியக் கலைஞருமான பி.எஸ். ரத்னாபாய். வீட்டுக்கு அருகிலேயே இருந்த அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால், புஷ்பலதா மீது மிகுந்த வாஞ்சையும் அன்பும் கொண்டவராக இருந்தார்., பெரும்பாலான நேரங்களை அவர் வீட்டிலேயே கழித்தார் புஷ்பலதா.

அங்கிருந்தான் நாடகத்துறை சார்ந்தவர்களுடன் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தந்தையாரின் நிதி நிலையும் ஆட்டம் கண்டது. குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அதனால், பத்து வயதிலிருந்தே நாட்டிமும் நாடகமும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கைத் தேவையாக ஆனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்துடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு எம்.ஜி.ஆரின் பல நாடகங்களில் நடிப்பதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தது. அது திரையுலகை நோக்கியும் மெல்ல நகர்த்திச் சென்றது. 

மந்திரிகுமாரி’ படத்தில் கள்ளர் கூட்டத் தலைவனாக, பிரதான வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன், கோவையைச் சேர்ந்தவர். தங்கள் ஊர்ப் பெண் என்ற பாசத்திலும் புஷ்பலதாவை நாடகங்களில் பார்த்திருந்ததாலும் அவரது திறமை மீது இருந்த நம்பிக்கையிலும் தான் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ‘நல்ல தங்கை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். 1955ல் ’நல்ல தங்கை’ படத்தில் குழந்தை முகம் மாறாத தோற்றத்தில் பதின்பருவச் சிறுமியாக பாவாடை, தாவணி அணிந்த சிறு பெண்ணாக அறிமுகமானார் புஷ்பலதா.

இரண்டும்கெட்டான் வயதாக இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. நாடகங்களிலும் நாட்டியத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அழகு கொஞ்சும் இளம் பெண்ணாக ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

புஷ்பலதா ஏற்று நடித்த படங்களிலும் மிகவும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவராக, பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகப் பல படங்களில் தோன்றியிருக்கிறார். ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண் சகுந்தலா (புஷ்பலதா). மூத்த அக்காள் கோகிலா (சாவித்திரி), படித்தவள் என்றாலும் உலகம் அறியாத வெகுளிப்பெண். இளம் பெண்ணுக்கே உரிய எந்தப் பண்பு நலன்களையும் கடைப்பிடிக்கத் தெரியாதவள். அதனால் சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் கெட்ட பெயரையும் அபவாதத்தையும் சேர்த்தே சுமக்கிறாள்.

‘பார் மகளே பார்’ படத்தில் வசதியான வீட்டுப் பெண்களேயானாலும் கண்டிப்பு மிக்க தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாக சந்திராவும் காந்தாவும்  (விஜயகுமாரியும் புஷ்பலதாவும்). மூத்த பெண் சந்திரா அப்பாவைப் பார்த்து பயந்து நடுங்க, இளைய மகள் காந்தா, நியாயமான காரணங்களுக்காக அப்பாவிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசும் குணமுள்ளவள்; அதே நேரம் சுயமரியாதை மிக்கவளும் கூட ‘வெட்கமாய் இருக்குதடி, இந்த வேலவர் செய்திடும் வேலை எல்லாமே’ என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து பரத நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.

 

புஷ்பலதா முறையாக பரதம் பயின்றவர். விஜயகுமாரிக்கு நாட்டியம்  பரிச்சயம் இல்லாதது. ஆனால், அந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள் இருவருமே மிகச் சிறப்பாக ஆடியிருப்பார்கள். விஜயகுமாரி பலமுறை ஒத்திகை பார்த்து ஆட, எந்த ஒத்திகைக்கும் வராமலே மிக எளிதாக ஆடி விட்டார் புஷ்பலதா என்று இந்தப் படம் பற்றிய தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகை விஜயகுமாரி.   

விஜயகுமாரி - புஷ்பலதா இருவரும் பல படங்களில் இணைந்து சகோதரிகளாக, உற்ற தோழிகளாக, அண்ணி - நாத்தனார் உறவில் என நடித்திருக்கிறார்கள். அசப்பில் உடன் பிறந்த சகோதரிகள் போன்றே தோற்றம் கொண்டவர்கள் இவர்கள். இருவரும் கோயமுத்தூர் காரர்கள். இருவரும் இணைந்து நடித்த பல பாடல்கள் மிகப் பெரும் ஹிட் பாடல்கள். ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி’, ‘அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்’, ‘கட்டித் தங்க ராஜாவுக்குக் காலை நேரம் கல்யாணம்’ போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமான ஏ.வி.எம் ராஜனுடன் இணைந்து அப்படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அறிமுகம், அதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது. புதுக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட சண்முக சுந்தரம் என்ற ஏ.வி.எம். ராஜன், ஏற்கனவே திருமணமானவர். புஷ்பலதா மீது கொண்ட தீவிர காதல் 1964 ல் திருமணத்தில் முடிந்தது. திரையுலகில் இம்மாதிரியான காதலும் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கை என்பதா? சாபக்கேடு என்பதா? இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகள்கள்.

* எம்.ஜி.ஆரின் கண் பார்வையற்ற தங்கையாக ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடித்தார்.

* சிவாஜிக்கு மகளாக பல படங்களில் நடித்தவர். அதே சிவாஜி கணேசனை வளர்த்து ஆளாக்கும் தாதியாகவும் ‘வசந்த மாளிகை’ படத்தில் நடித்தார். குறைந்த நேரமே தோன்றினாலும், கருணை பொங்கும் கண்களுடன் ஒரு இளம் விதவையாக, அன்பே உருவாகத் தோன்றுவார். அன்பு செலுத்துவதாலேயே ஜமீன்தாரிணியால் (சாந்தகுமாரி) துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் துறப்பார். அந்தக் கொலையை நேரில் பார்க்கும் சிறுவன் வளர்ந்த பின்னும் தாய் மீது பிடிப்பற்றவனாக பெரும் குடிகாரனாக மாறுவான்.

* ஜெமினி கணேசனுடன் இணையாக ‘ராமு’ படத்தில் கொஞ்ச நேரமே தோன்றினாலும் அவர்கள் இருவருக்குமான ‘பச்சை மரம் ஒன்று; இச்சைக்கிளி ரெண்டு’ பாடல் பெரும் வெற்றி பெற்றது.

* முத்துராமன், கல்யாண் குமார், சிவகுமார் என பலருடனும் இணைந்து நடித்தவர்.

* கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளியான, ‘தாயே உனக்காக’ படத்தில் சிவகுமாருக்கு ஜோடி. போர் முனையிலிருந்து விடுமுறையில் திரும்பி வரும் வீரனாக சிவகுமாரும் அவரது காதலியாக புஷ்பலதாவும் நடித்திருந்தனர். இப்படம் ‘Bஅல்லட் ஒf அ ஸொல்டிஎர்” என்ற ஒரு ரஷ்யப் படத்தின் தமிழ் வடிவம். வீட்டில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டுக் கிளம்பும் கதாநாயகி, ஒவ்வோர் இடமாகச் சென்று சேர்வதும் மீள்வதுமாக இருப்பார். நட்புக்காக பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதும் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

* ‘கவிதா’ என்றொரு படம் 60களில் வெளியானது. அதில் இளம் துப்பறிவாளராக பல்வேறு வேடங்களில் நம்பியாருடன் இணைந்து சாகசங்கள் செய்வார்.

70களிலேயே அம்மா வேடங்களுக்கு வந்தவர். பின்னர் கொடுமைக்கார மாமியார் வேடங்களையும் அவர் ஏற்கத் தயங்கவில்லை.  புஷ்பலதாவைப் பொறுத்த வரை கதாநாயகியாக நடித்த படங்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், துடுக்குத்தனமும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். திரையுலக வாழ்வின் இறுதிக் காலத்தில் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களை ஏற்றார்.