Sunday, October 26, 2008

ரஜனியைத் சீண்டிய ரசிகர்கள்



தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இலங்கைப் பிரச்சினையில் தமது கவனத்தை திருப்பி இருக்கும் வேளையில் ரஜினியை அரசியல் களத்துக்கு இழுத்துவரும் முயற்சியை ரஜினி ரசிகர்கள் செய்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த கோவை ரஜினி ரசிகர்கள் தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத்தின் மத்தியில் நட்சத்திரத்தினுள் ரஜினியின் படம் கட்சிக் கொடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கான சின்னம் தெரிவு செய்யப்படவில்லை. விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு அங்கத்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
ரஜினியின் குரலுக்கு தமிழகத்தில் மதிப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார் ரஜினிகாந்த்.
ஜெயலலிதாவுக்கு எதிராக அலையும் மூப்பனார் கருணாநிதி கூட்டணியின் பலரும், ரஜினிகாந்தின் குரலும், சேர்ந்து ஜெயலலிதாவை தோல்வியடையச் செய்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசியல் களத்தில் குதித்தனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சிக்காக குரல் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் தனது அரசியல் நடவடிக்øகயை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு சினிமாவில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமது கதிரைக்கு ஆபத்து ஒன்று வரும் எனப் பயந்த அரசியல் வாதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் இடையிலான பிரச்சி மீண்டும் அரசியல் பக்கம் ரஜினியை இழுத்து வந்தது. ரஜினி நடித்த பாபா திரைப்படத்தை திரையிடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ரஜினி ரசிகர்கள் அதனை எதிரத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த தேர்தலில் தனது ரசிகர்களைத் தாக்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினிகாந்த் குரல் கொடுத்தார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளருக்கு ரஜினி வாக்களித்தார். அன்று நடந்த தேர்தலில் ரஜினி வாக்களித்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது.
தமிழகத் தேர்தலின் போது ரஜினியின் குரல் ஒரு முறை வெற்றியைத் தேடிக்கொடுத்தது. ஒருமுறை தோல்வியடைந்தது. அரசியலில் இறங்கினால், இப்போது உள்ள நல்ல பெயர் நிலைக்காது என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் சினிமாவிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறõர்.
ஆனால்,ரஜினி ரசிகர்களின் கருத்து வேறு மாதிரி உள்ளது. ரஜினி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அக்கட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் விருப்பம்.
மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் கட்சி முக்கியமல்ல. கமலஹாசன் நற்பணி மன்றம் பல நல்ல காரியங்களை முன்னின்று செய்கிறது. அரசியலுக்கு அப்பால், கமல் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்துக்கும் அவரது நற்பணி மன்றம் பக்க பலமாக உள்ளது.
தனது ரசிகர்களுக்கு அரசியல் சாயம் பூசாது இருப்பதனால் அவரால் நிம்மதியாக இருக்க முடிகிறது. ரஜினி நிலை அப்படி அல்ல. அவரது படங்களில் அவர் பேசும் வசனங்கள் அரசியலில் ரஜினி குதிக்கப்போகிறார் என்ற மாயையை உருவாக்கியது. அரசியலுக்கும் தனக்கும் வெகு தூரம் என்பதை குசேலன் படத்தின் மூலம் ரஜினி வெளிப்படுத்தினார்.
ரஜினிக்கு எதிரான சில பத்திரிகைகள் அதனை விமர்சித்து பக்கம் பக்கமாக எழுதின. அரசியலில் இருந்து ரஜினி நழுவுகிறார் என்ற அந்த விமர்சனங்களினால் குசேலன் படத்தின் வசனங்கள் நீக்கப்பட்டன. விமர்சனங்களுக்குப் பயப்படும் ரஜினியால் அரசியலில் நிலைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரஜினியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்பது லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. சினிமா இது மிக மிக ஆபத்தான முன்மாதிரி ரஜினியை மிரட்டும் இவர்கள் உண்மையில் ரஜினி ரசிகர்கள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரஜினியை அரசியல் கைதியாக்க ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள்.
ரஜினியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் பண பலமும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போதுமானது. அதேவேளை அவர் இதுவரை கட்டிக்காத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதும் வெளிப்படை.
ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யப்போகிறாரா? அரசியலை மறந்து விடும்படி ரசிகர்களுக்கு கட்டளையிடப் போகிறாரா என்பதை அறிய தென் இந்தியா காத்திருக்கிறது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் காவிரிப் பிரச்சினைக்கு எப்படிப்பட்ட முடிவை அவர் எடுப்பார் என்ற முதலாவது கேள்விக்கு விளக்கமான பதிலை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசின் வேண்டுகோளுக்கும் நீதிமன்றத்தீர்ப்புக்கும் தலை வணங்காத கர்நாடக அரசு ரஜினியின் குரலுக்கு இசைந்து கொடுக்காது என்பது திண்ணம்.
ஒகனேக்கல் குடி நீர்த்திட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த் கர்நாடகத்தில் தனது படம் திரையிடப்படுவதற்காக மன்னிப்புப் கேட்டதை தமிழகத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருப்பார்கள்.
ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டு தலைமை ஏற்க வரும்படி ரஜினியை அழைக்கிறார்கள்.
நடிகர்களில்
செல்வாக்கானவர் யார் என்ற கேள்விக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் என்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அரசியலில் தோற்றாலும், சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக இருந்த சிவாஜி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை காலமும் மூன்றாம் இடத்தில் இருந்த ரஜினியை முந்திக்கொண்டு விஜய் மூன்றாம் இடத்தைப் பிடித்து ரஜினியை நான்காம் இடத்துக்கு தள்ளிவிட்டார். இந்தக் கருத்துக்கணிப்பு ரஜினி ரசிகர்களை உசுப்பி விட்டது. ரஜினியை முதலமைச்சராக்குவோம் என்று அவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அறிந்தும் ரஜினி வழமைபோல் மௌனம் காக்கிறார்.


வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 12.10.2008

தமிழக அரசின் எச்சரிக்கையால் ஆட்டம் காணுமா மத்திய அரசு?


இலங்கைப் பிரச்சினையில் இதுவரை காலமும் ஒவ்வொரு கோணத்தில் நின்று கருத்துக் கூறி வந்த தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று தமது முடிவை உறுதியாகத் தெரிவித்துள்ளன.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கு இரண்டு வார கெடுவை விதித்துள்ளது தமிழக அரசு.
இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்யசபை உறுப்பினர்களும இராஜினாமாச் செய்வார்கள் என்ற எச்சரிக்கையை தமிழகம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை இந்திய அரசு இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது. விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைகளை அவ்வப்போது கண்டித்து வந்த தமிழக அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்துள்ளது.
வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வேறு வேறு அணிகளில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் தமது கருத்தை ஒன்றாகக் கூறுவதற்கு என்றுமே பின் நின்றதில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜயகாந்த் உணர்வு பூர்வமாகத் தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். அரசியல்வாதியான விஜயகாந்த் மிக அவதானமாக இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் அணியில் இருந்தாலும் இலங்கைப் பிரச்சினை என்பது புலிகளின் பிரச்சினை என்ற கொள்கையையே கொண்டுள்ளன. புலிகளை அழித்து விட்டால் இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்திலே இந்த இரண்டு கட்சிகளும் உள்ளன.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதை தெரிந்து கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் தமது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியேறி விட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமலே அக்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை விமர்சித்துவரும் வைகோவும் டாக்டர் ராமதாஸும் முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
விடுதலைப் புலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின்போது விடுதலைப் புலிகளின் செல்வாக்கும் தலைகாட்டத் தவறுவதில்லை.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போதும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும்போதும் கண்டன அறிக்கைகளும், கடிதங்களும், கவிதைகளும், தந்திகளும் அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி, முடிவைக் காணும் படிகளில் கெடு விதித்தது மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்திய அரசின் ஆதரவும் ஆசீர்வாதமும் தனக்கு இருப்பதாக இறுமாப்பிலிருந்த இலங்கை அரசு இதுவரை காலமும் தான் நினைத்ததைச் சாதித்து வந்துள்ளது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான ஒரு சில நாட்களில் தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கையின் மூலம் இலங்கை அரசை தனது வழிக்கு இழுக்க இந்தியா முயல்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்திருப்பது மத்திய அரசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ""பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு'' என்ற வசனம் எழுதிய முதல்வர் இன்று பொறுமையை இழந்து பொங்கி எழுந்துள்ளார்.
தமிழக அரசு மீது இதுவரை இருந்த விமர்சனங்கள் இப்போது திசை மாறிவிட்டன. மின்வெட்டுக் காரணமாக தமிழக அரசுக்கு எதிராக ஆங்காங்கு எழுந்த ஆர்ப்பாட்டங்கள் அடியோடு இல்லாமல் போயுள்ளன. இலங்கை அரசுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன.
தமிழக அரசின் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில் கூறுவதற்கு முன்னரே முதல்வரின் மகளான கனிமொழி தனது ராஜ்யசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை அரசுக்கு சார்பாக செயற்படும் இந்திய அரசுக்கு ஆதரவு கொடுப்பதை உடனடியாக முதல்வர் வாபஸ் பெற வேண்டும். வாரிசு அரசியலை முதல்வர் ஊக்கப்படுத்துகிறார் என்று குரல் கொடுத்தவர்கள் வாய் மூடிமௌனிகளாக உள்ளனர்.
சரிந்திருந்த தமிழக அரசின் செல்வாக்கு கொஞ்சம் உயர்ந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது என்ற கேள்விக்கு கனிமொழியின் இராஜினாமா பதிலாக உள்ளது. கனிமொழியின் இராஜினாமா வைகோவுக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் மத்திய அரசை திருப்திப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துள்ளார் முதல்வர் என்ற விமர்சனத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
வைகோவின் கட்சியிலிருந்தும், டாக்டர் ராமதாஸின் கட்சியிலிருந்தும் யாராவது இராஜினாமா செய்யாவிட்டால் முதல்வர் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விடும்.
விருப்பம் இல்லாது பெற்ற நடாளுமன்ற உறுப்பினர் பதவியை விருப்பத்துடன் ராஜினாமாச் செய்துள்ளார் கனிமொழி. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையேயான போட்டியில் கனிமொழி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இராஜினாமாவின் மூலம் மீண்டும் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார் கனிமொழி.
இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்திருக்கும் காலக்கெடு மிகவும் குறுகியது. சுமார் 30 வருடகாலப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு விட முடியாது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு இலங்கை அரசு நாள் குறித்திருக்கும் வேளையில் யுத்தம் நிறுத்தப்பட்டால் சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை விவகாரத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது, இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

வர்மா
18.10.2008 வீரகேசரி வாரவெளியீடு

Tuesday, October 7, 2008

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் இலங்கைத்தமிழர் பிரச்சினை

இலங்கைப்பிரச்சினை காரணமாகஅரசியல் மீண்டும் அரசியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. கிளிநொச்சியில் நடத்தப்படும் விமானக்குண்டு வீச்சு, வன்னியை நோக்கிய இராணுவப் படை நகர்வு, மனிதஉரிமை ஆர்வலர்களை வன்னியிலிருந்து இலங்கை அரசாங்கம்வெளியேற்றியது. தமிழக மீனவர்களின்
மீதான தாக்குதல்கள் என்பனவற்றினால் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.இலங்கை அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய எதிர்ப்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக்கழகம் ஆகியவை கலந்துகொண்டு தமது ஆத
ரவை வெளிப்படுத்தின.பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அர
சுக்கு எதிராகவும் அவ்வப்போது கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகமும் சர்ந்தர்ப்பம்கிடைக்கும் போது இலங்கைத் தமிழர் பற்றியதனது அக்கறையை வெளிப்படுத்தியது.தமிழீழ விடுதலைப் புலிகளை தனது விரோதியாகக் கருதும் காங்கிரஸ் கட்சி, இலங்கைத்தமிழர்களையும் தனது எதிரியாகவே கருதுகிறது.காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய இடதுசாரிகள்தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையிலான கூட்டணியில் இருந்துவெளியேறினர்.
தமிழக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவைவிலக்கிய இடதுசாரிகள் தமிழகத்தில் இருந்துதிராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அகற்றுவதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் இந்திய மீனவர்கள்மீதான தாக்குதல், கொலை ஆகியவற்றுக்குமுடிவு கட்டப்படும் என்று கருதப்பட்டது. சார்க்மாநாட்டின் பின்னரும் இந்திய மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படை தாக்குல் நடத்தியது.தமிழக அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இந்தியப் பிரதமரின் ஆலோசகரான எம்.கே.நாராயணன் தமிழக முதல்வரைச் சந்தித்து இந்திய மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தாது என்றுஉறுதியளித்தார். அவர் உறுதியளித்த பின்னரும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்தொடர்கிறதுதிராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி ஆகிய இரண்டையும் தவிர தமிழகத்தின்ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துதமது ஆதங்கத்தை வெளிப்படுத்தின.
தமிழகத்தின்குரல் ஓங்கி ஒலிக்கையில் தனது குரல்அடங்கிப் போனதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் நாளை திங்கட்கிழமை தன்னிலை
விளக்கமளிக்கவுள்ளது.வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்திருமாவளவன், பழ. நெடுமாறன் ஆகியோர்இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வுபூர்வ
மாக குரல் கொடுத்து வருகின்றனர்.கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கு பற்றப் போவதாகஅறிவித்த ஜெயலலிதா இறுதி நேரத்தில்
காலை வாரிவிட்டார். விடுதலைப்புலிகளின்ஆதரவாளர்களும், விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களும் பங்கு பற்றியதால் ஜெயலலிதா தனது முடிவை மாற்றி இருக்கலாம்.பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியபிரமுகர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பற்றவில்லை. இலங்கைத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்கமுடியாத நிலையில் தமிழகக் கட்சிகள்உள்ளன. இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகஅரசியலை விறுவிறுப்பாக்கி உள்ளது. இதே
வேளை தமிழக முதல்வரின் குடும்ப அரசியலும் சூடாகி உள்ளது. மாறன் சகோதரர்களின்சன் பிக்ஸர்ஸ் தயாரித்த காதலில் விழுந்தேன்
என்ற படம் மதுரையில் திரையிட முடியாதநிலை உள்ளது.தமிழக முதல்வரின் மகனான மு.க. அழகிரியின் அச்சுறுத்தல் காரணமாக மதுரையில்
உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் படத்தைத்திரையிடத் தயங்குகிறார்கள். ஆதாரத்துடன்புகார் தந்தால் விசாரணை நடத்தப்படும் என்றுமுதல்வர் பதிலளித்துள்ளார்.
மதுரையில் உள்ள தியேட்டர்களுக்கு உரியபாதுகாப்பை வழங்கி படத்தை திரையிடவேண்டியது தமிழக அரசின் கடமை. புகார்வரும் வரை விசாரணை முடியும் வரை பார்த்துக்கொண்டிருப்பது தமிழக அரசுக்கு அழகல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தில்இருந்து முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை
வெளியேற்றி விட வேண்டும் என்பதில்தமிழக அரசியல் வாதிகள் குறியாக உள்ளனர்.அதற்கான நாளையும் அவர்கள் குறித்து விட்டார்கள். தமிழக அரசியல் கட்சிகளின் மாநாடுகளை நேரடி ஒளிபரப்புச் செய்து முதல்வரின்வெறுப்பைச் சந்தித்துள்ள சன் நிறுவனம் விஜயகாந்தின் அரசியல் கட்சியின் இளைஞர்
அணி மாநாட்டை நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது.ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடுகளையும் கூட்டங்
களையும் நேரடி ஒளிபரப்புச் செய்து அவர்களிடம் நல்ல பெயரை வாங்கியுள்ளது சன்நிறுவனம். தமிழக முதல்வர் கலந்துகொண்டமாநாட்டையும் சன் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்தது. அதற்காக சன் நிறுவனத்தைமுதல்வர் பாராட்டவில்லை.தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சியின்
இளைஞர் அணி மாநாட்டை சன் நிறுவனம்நேரடி ஒளிபரப்புச் செய்த பின்னர் திராவிடமுன்னேற்றக் கழக உறுப்பினர் பதவியில்இருந்து தயாநிதி மாறன் விலக்கப்படுவார்என்ற செய்தியை முதல்வர் உண்மையாக்குவாரா தனது சாணக்கியத்தினால் இந்தப் பிரச்சினையை புஸ்வாணம் ஆக்குவாரா ன்பதைஅறிய தமிழக அரசியல்வாதிகள் ஆர்வமாக
உள்ளனர்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 05 10 2008

Sunday, October 5, 2008

ட்ரவிட்டின்முடிவு சரியா?தவறா?



இங்கிலாந்து மண்ணில் விளையாடியஇந்திய அணி 21 வருடங்களின் பின்னர்
டெஸ்ட் தொடரொன்றை வென்றுள்ளது.இந்திய ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடி
ய செய்திதான் என்றாலும் மூன்றாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலை
வர் ட்ராவிட்டின் முடிவு பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.
லோர்ட்ஸில் நடைபெற்ற முதலாவதுடெஸ்ட்டில் மழை பெய்ததால் இந்திய
அணி தப்பிப் பிழைத்தது. ட்ரன்ட் பிரிட்ஜில்நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துஅணியை வீழ்த்திய இந்திய அணி 1 0
என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்தது. ஓவலில் நடந்த மூன்றாவது
டெஸ்ட்டின் முடிவை கிரிக்கெட் உலகம்ஆவலுடன் எதிர்பார்த்தது.
மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றுதமது கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய
இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்துஅணி களமிறங்கியது. ஆறு வருடங்களாக
டெஸ்ட் தொடரில் தாய் மண்ணில் தோல்வியடையாத இங்கிலாந்து அணி அந்தக் கௌர
வத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யும்நிலைக்குத் தள்ளப்பட்டது.
வெற்றியும் வேண்டாம், தோல்வியும்வேண்டாம் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்தாலேபோதும் என்ற எண்ணத்துடன் இந்தியஅணி களமிறங்கியது.
ஆரம்ப ஜோடி இன்றி தடுமாறிய இந்தியஅணிக்கு தினேஷ் கார்த்திக் ஜபார் ஜோடி
பெரிதும் கை கொடுத்தது. உலகக் கிண்ணப் போட்டியில் பார்
வையாளராக இருந்த கார்த்திக்கின் திறமையை கிரிக்கெட் ரசி
கர்கள் இப்போது தெரிந்துகொண்டார்கள்.மூன்று டெஸ்ட்களிலும் மூன்று
அரைச்சதங்களைக் கடந்து263 ஓட்டங்கள் எடுத்த கார்த்திக்
இந்திய தரப்பில் அதிகூடியஓட்டங்களைப் பெற்றார். சதமடி
க்கும் சந்தர்ப்பத்தை தவறவிட்டார் கார்த்திக். ஜபார் இரண்டு
அரைச்சதங்கள் கடந்து இந்தியஅணிக்கு நல்ல ஆரம்பத்தை
பெற்றுக்கொடுத்தார்.
ஓவல் மைதானத்தில் இந்தியதுடுப்பாட்ட வீரர்களின் அதிரடி
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வெறுப்பேற்றியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்பார்த்து கிரிக்கெட்
உலகமே ஏக்கத்துடன்காத்திருக்க இந்திய அணித்தலைவர் மிக நிதானமாக முடிவைத்
தீர்மானித்துவிட்டார்.மூன்றாவது டெஸ்ட்டிலும்
வெற்றி பெற வேண்டும் என்றேஇந்திய ரசிகர்களும், சில விமர்ச
கர்களும் விரும்பினார்கள்.இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில்
இந்திய வீரர்கள் எவரும் சதமடிக்கவில்லை.டெண்டுல்கர் 91, கார்த்திக் 91, டோனி 92
ஓட்டங்கள் அடித்து சதத்தைத் தவறவிட்டனர்.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான
அனில்கும்ப்ளே சதமடிக்கும் நிலையில்இருந்தார். அவரது வாழ்க்கையில் முதலாவது
சதத்தை அடிப்பாரா அடிக்க மாட்டாராஎன்ற ஆர்வம் ரசிகர்களின் இரத்த ஓட்டத்தை
அதிகமாக்கியது. இந்திய அணி தேவைக்குஅதிகமான ஓட்டங்களை
ப் பெற்றுவிட்டது. ஆகையினால் ஆட்டத்தை நிறுத்தி
இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படி இந்திய
அணித்தலைவர் பணிப்பார்என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
கும்ப்ளே சதமடிக்க இந்தியஅணி ஆட்டத்தை நிறுத்தும்
அல்லது அவர் ஆட்டமிழந்தால் இந்திய அணி ஆட்டத்தை
நிறுத்தும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கும்ப்ளே
சதமடித்துவிட்டார். கிரிக்கெட்வரலாற்றில் முதலாவது
சதத்தை கும்ப்ளே தொட்டுவிட் டார். இந்திய அணி ஆட்டத்தை
நிறுத்தும் என எதிர்பார்த்தவர்களின் எண்ணத்தை
ப் பொய்யாக்கிய ட்ராவிட்,இந்திய அணி வீரர்கள் அனைவரும்
ஆட்டம் இழக்கும்வரை காத்திருந்தார்.கும்ப்ளேயுடன் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீசாந்த்
ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் முதலாவதுஇன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணியின் 667 ஓட்டங்களுக்குபதலளித்தாடிய இங்கிலாந்து அணி முதல்
இன்னிங்ஸில் 345 ஓட்டங்களை எடுத்தது.இங்கிலாந்து அணிக்கு ப்லோ ஒன் கொடுக்காது
இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.இந்திய அணித்தலைவரின் இந்த முடிவு
பெரும் விமர்சனத்துக்குள்ளாகியது.இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்
ஸில் தொடர்ந்து விளையாடும்படிபணிக்காது இந்திய அணி விளையாடியது.
இந்திய அணி வேகமாகஒட்டங்களைக் குவித்து
இங்கிலாந்து அணிக்குமேலும் நெருக்கடி கொடுக்
கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால், இந்திய அணி
யோ துடுப்பாட்டத்தில்கவனம் செலுத்தாது
நேரத்தைக் கடத்துவதிலேயே குறியாக இருந்தது.
அணித் தலைவர் ட்ராவிட்140 பந்துகளுக்கு
12 ஓட்டங்களும், சச்சின் 13 பந்துகளுக்கு
ஒரே ஒரு ஓட்டத்தைப்பெற்று வெறுப்பேற்றினர். இந்திய அணி
யின் வெற்றியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்குஇவர்களின் விளையாட்டு அவமான
மாக இருந்தது.ஆறு விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்த இந்திய அணி இங்கி
லாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படிநான்காம் நாள் மாலையில் கூறியது.
500 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமானஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து
அணி கடைசிவரை போராடி, ஆறு விக்கட்டுகளை இழந்து 369 ஓட்டங்களை மட்டுமே
எடுத்தது.இந்திய பந்துவீச்சாளர்கள் களைத்துவிட்டன
ர். ஆகையினால் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவே இரண்டாவது இன்னி
ங்ஸை தாம் விளையாடியதாக ட்ராவிட் கூறியுள்ளார்.
இந்திய ரசிகர்கள் விரும்பியதுபோல் நடந்திருந்தால் இந்திய அணியின் தொடர்
வெற்றி சில வேளையில் கனவாகிப் போயிருக்கும். இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்
களைவிட போராடும் குணம் அதிகம் உள்ளவர்கள். ஆகையினால் இரண்டாவது இன்னிங்
ஸில் இங்கிலாந்து வீரர்கள் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என ட்ராவிட் எதிர்
பார்த்தார். தனது அணியின் மீதான நம்பிக்கையின்மையினாலேயே பொலோ ஒன்
கொடுக்காது இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி ட்ராவிட் பணித்தார். மூன்றாவது
போட்டியின் முடிவை ட்ராவிட் எப்போதோ முடிவு செய்து விட்டார். அவரது
விருப்பப்படியே மூன்றாவது போட்டியில்முடிவு அமைந்துவிட்டது. இங்கிலாந்தில்
தொடர் வெற்றி பெற்றாலும் ட்ராவிட்டின்தலைமையில் விழுந்த கரும்புள்ளியாகவே
இதனைக் கருத வேண்டியுள்ளது.""வீட்டு ரூமில் இருந்து பார்த்தவர்கள் என
ட்ராவிட் மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டார். வீட்டில் இருந்து பார்த்தவர்களில்
நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியவர்களும் அடங்குவர் என்பதை மறந்துவிட்டார்.
ட்ராவிட் பொலோ ஒன் கொடுத்திருக்கவேண்டும். ட்ரா செய்யும் நோக்கில் தவறான
முடிவை எடுத்துவிட்டார்.''

அன்ஷû மான் கெய்க்வாட், முன்னாள்
வீரர் பயிற்சியாளர்
இந்தியா, ஓவல் டெஸ்ட்டில் பொலோ கொடுக்காதது ட்ராவிட்டின் தனிப்பட்ட
முடிவாக இருந்திருக்காது. இரண்டாவதுடெஸ்ட்டில் அதிரடியாக ரன் எடுத்திருக்க
வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வுகொடுக்க வேண்டிய அவசியம் எனக்குப்
புரியவில்லை.''
கபில்தேவ் முன்னாள் தலைவர் இந்தியா.
""முடிவு எடுக்கும் அதிகாரம் கப்டனுக்குஉண்டு. தொடரை வென்றதால் ட்ராவிட்
எடுத்த முடிவு சரியானதாக இருந்திருக்கும்.ஆனால் ட்ரா செய்யும் நோக்கில் செயற்பட்டது
தவறான முடிவு.''
மதன்லால் முன்னாள் வீரர் இந்தியா
ராகுல் ட்ராவிட்டின் நிலையில் நான் இருந்திருந்தால் பொலோ ஒன் நிச்சயம் கொடுத்தி
ருக்கமாட்டேன். 1 0 என்ற முன்னணியில்இருக்க டெஸ்ட் தொடரை இழக்க யாரும்
விரும்பமாட்டார்கள்.
வோன் தலைவர் இங்கிலாந்து
ட்ராவிட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும்முன்னாள் வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ள
னர். இவர்களில் இங்கிலாந்து அணித்தலைவரின் கருத்து மிக முக்கியமானது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிந்திருந்தால் அல்லது ஒரு
போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தால் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்
தில் ட்ராவிட் முடிவெடுத்திருப்பார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 17 08 2007