Showing posts with label ஒலிம்பிக்2020. Show all posts
Showing posts with label ஒலிம்பிக்2020. Show all posts

Tuesday, July 6, 2021

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் ஐ.ஓ.சி அகதிகள் அணி

அரசியல்,யுத்தம் போன்ற காரணங்களினால்பலவந்தமாக இடம்  பெயர்ந்து   தாய் நாட்டில்  இருந்து  வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக வாழும்  விளையாட்டு  வீரர்களை  ஒன்றிணைத்த ஐநா  பொதுச்சபை அகதிகள் ஒலிம்பிக் அணி[ ஐஓசி] எனப்  பெயரிட்டு ஒலிம்பிக்  போட்டியில்  விளையாடுவதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் 11 நாடுகளைச் சேர்ந்த  29  வீரர்கள் கலந்துகொள்வார்கள் என ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக் லொசேன் அறிவித்துள்ளார்.

  ஐ.நா. அகதிகள் நிறுவனம் (யு.என்.எச்.சி.ஆர்), தேசிய ஒலிம்பிக் குழுக்கள், சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகள், டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

ஒலிம்பிக்  ஆரம்ப  விழாவின்  போது கிரேக்கத்தைத் தொடர்ந்து  ஒலிம்பிக்  கொடியுடன் இந்தக்குழு ஒலிம்பிக்  அரங்கினுள்  நுழையும்.

றியோ2016   ஒலிம்பிக்கில்  ஐ.ஓ.சி அகதிகள் ஒலிம்பிக் அணி  அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து  டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும்  அவர்களை தாம்  வரவேற்பதாக டோக்கியோ 2020 தலைவர் ஹஷிமோடோ சீகோ தெரிவித்தார்.

ஐஓசி அகதிகள் ஒலிம்பிக்  வீரர்களின்  விபரம்:

அப்துல்லா செடிகி (ஆப்கானிஸ்தான்)  - டேக்வாண்டோ (ஆண்கள் -68 கிலோ)

அஹ்மத் பத்ரெடின் வைஸ் (சிரிய அரபு குடியரசு)  - சைக்கிள் ஓட்டுதல் (ஆண்கள் சாலை)

அஹ்மத் அலிகாஜ் (சிரிய அரபு குடியரசு) - ஜூடோ (ஆண்கள் கலப்பு அணி)

அகர் அல் ஒபைடி (ஈராக்)  - மல்யுத்தம் (ஆண்கள் கிரேக்கோ-ரோமன் -67 கிலோ)

ஆலா மாசோ (சிரிய அரபு குடியரசு)  - நீச்சல் (ஆண்கள் 50 மீ ஃப்ரீஸ்டைல்)

அஞ்சலினா நடாய் லோஹலித்  (தெற்கு சூடான்)  - தடகளம் (பெண்கள் 1500 மீ)


அராம் மஹ்மூத் (சிரிய அரபு குடியரசு)  - பூப்பந்து (ஆண்கள் ஒற்றையர்)

சிரில் ஃபாகட் தாட்செட் ஈஈ (கமரூன்)  - பளு தூக்குதல் (ஆண்கள் -96 கிலோ)

டினா பூரிய ஓன்ஸ் லாங்கெரூடி (ஈரான் இஸ்லாமிய குடியரசு) - டேக்வாண்டோ (பெண்கள் -49 கிலோ)

டோரியன் கெலடெலா  (காங்கோ)  - தடகள (ஆண்கள் 100 மீ)

எல்ட்ரிக் செல்லா ரோட்ரிக்ஸ் (வெனிசுலா)  - குத்துச்சண்டை (ஆண்கள் -75 கிலோ)

ஹமூன் டெராஃப்ஷிபூர் (ஈரான் இஸ்லாமிய குடியரசு)  - கராட்டி (ஆண்கள் -67 கிலோ)

ஜமால் அப்தெல்மாஜி ஈசா முகமது (சூடான்)  - தடகளம் (ஆண்கள் 5,000 மீ)

ஜேம்ஸ் நியாங் சியாங்ஜீக் (தெற்கு சூடான்)  - தடகள (ஆண்கள் 800 மீ)

ஜவாத் மஜூப் (ஈரான் இஸ்லாமிய குடியரசு) - ஜூடோ (ஆண்கள் கலப்பு அணி)

கிமியா அலிசாதே ஜெனோசி (ஈரான் இஸ்லாமிய குடியரசு)  - டேக்வாண்டோ (பெண்கள் -57 கிலோ)

லூனா சாலமன் (எரிட்ரியா)  - படப்பிடிப்பு (பெண்கள் ஏர் ரைபிள் 10 மீ)

மசோமா அலி ஜாதா (ஆப்கானிஸ்தான்)  - சைக்கிள் ஓட்டுதல் (பெண்கள் சாலை)

முனா தஹூக் (சிரிய அரபு குடியரசு) - ஜூடோ (பெண்கள் கலப்பு அணி)

நிகாரா ஷாஹீன் (ஆப்கானிஸ்தான்) - ஜூடோ (பெண்கள் கலப்பு அணி)

பாலோ அமோத்துன் லோகோரோ  (தெற்கு சூடான்)  - தடகள (ஆண்கள் 5,000 மீ)

போபோல் மிசெங்கா (டி.ஆர். காங்கோ)  - ஜூடோ (ஆண்கள் கலப்பு அணி)

ரோஸ் நாத்திகே லோகோனியன்  (தெற்கு சூடான்)  - தடகள (பெண்கள் 800 மீ)

சையத் ஃபஸ்ல ஓலா (ஈரான் இஸ்லாமிய குடியரசு)  - கேனோ (ஆண்கள் 500 மீ)

சாண்டா ஆல்டாஸ் (சிரிய அரபு குடியரசு)  - ஜூடோ (பெண்கள் கலப்பு அணி)

டச்லோவினி கேப்ரியோசோஸ் (எரிட்ரியா)  - தடகள (ஆண்கள் மரதன்)

வேல் ஷீப் (சிரிய அரபு குடியரசு)  - கராட்டி (ஆண்கள் கட்டா ர்)

வெசம் சலமனா (சிரிய அரபு குடியரசு)  - குத்துச்சண்டை (ஆண்கள் -57 கிலோ)

யுஸ்ரா மார்டினி (சிரிய அரபு குடியரசு)  - நீச்சல் (பெண்கள் 100 மீ பட்டாம்பூச்சி]

 

 

Monday, July 5, 2021

நான்கு மாத கர்ப்பிணியின் ஒலிம்பிக் ஆர்வம்


 ஒலிம்பிக்  போட்டியில் கலந்து கொள்வதற்கு பல  வீரர்கள் தகுதி  பெற்றுள்ளனர். பல நாடுகளில்  தகுதிகாண்  போட்டிகள்  நடைபெறுகின்றன. அமெரிக்காவில் நடந்த  தகுதிகாண்  போட்டியில்  கலந்துகொள்வதற்கு சமூகமளித்த  நான்கு  மாத  கர்ப்பிணி  வீராங்கனையைப்  பார்த்து  அதிகாரிகள்  ஆச்சரியப்பட்டனர்.

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் ஹெப்டத்லெட் வீராங்கனைகலுக்கான  தகுதிகாண்  போட்டி நடைபெற்றபோது லிண்ட்சே ஃபலாச் எனும் கர்ப்பிணி  கலந்துகொண்டார்.

2012,2016 ஆம்  ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்  போட்டிகலில்  பங்கு  பற்றுவதற்காக  முயற்சி  செய்து  தோல்வியடைந்த லிண்ட்சே ஃபலாச் 2020  ஆம்  ஆண்டு  ஒலிம்பிக்  போட்டியில் கலந்துகொள்ள  விண்ணப்பித்தார். கடந்த  ஆண்டு  நடைபெற  இருந்த  ஒலிம்பிக்  போட்டிக் கொரோனா  காரணமாக நடைபெறவில்லை. ஒலிம்பிக் நடைபெறும் இந்த  வேளையில் லிண்ட்சே ஃபலாச் கர்ப்பமாக  உள்ளார்.

ஹெப்டத்லான் ஹெப்டத்லான் என்பது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 200 மீ, 800மீ ஓட்டப்பந்தயம்,ம் 100மீ தடைகள் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 விதமான போட்டிகளை கொண்டதாகும். இதில் 18 பேர் கலந்துக்கொண்டனர்.ஃப்லான்ச் 15வது இடத்தை பிடித்துள்ளார். அதுவும் 110 டிகிரி வெயிலில் இதனை செய்துள்ளார்.

மருத்துவர்களின்  ஆலோசனைப்படி  குழந்தைக்காக  மிகவும் எச்சரிக்கையுடன் தகுதிகாண் போட்டியில்  கலந்துகொண்டார்.

குண்டு எறியும் போட்டியில் மூன்று முறை முயற்சி செய்யலாம். ஆனால் ஃப்லாச் ஒரே ஒரு முறை மட்டுமே முயற்சித்தார். இதே போல 800மீ ஓட்டப்பந்தயத்தில் 100மீ தூரத்திலேயே ஃப்லான்ச் களத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஏன் இவ்வளவு ஆர்வம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இதில் கலந்துக்கொண்டீர்கள் எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த தகுதிச்சுற்றில் என்னால் வெற்றி பெற முடியாது என்பது எனக்கு தெரியும், எனினும் ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டவே இதில் கலந்துக்கொண்டேன்" எனக்கூறியது ரசிகர்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.