Showing posts with label மெக்ஸிக்கோ. Show all posts
Showing posts with label மெக்ஸிக்கோ. Show all posts

Tuesday, March 17, 2026

மெக்சிக்கோ கோல்கீப்பர் மலகன் உலகக் கிண்ணத்தில் இல்லை


  மெக்சிக்கோ  அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோல்கீப்பர் லூயிஸ் மலகன், அகில்லெஸ் தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு  பீபா உலகக்  கிண்ணப் போட்டியில்  இருந்து விலகுவார் என்று லிகா MX கிளப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

 

செவ்வாய்கிழமை பிலடெல்பியாவில் நடந்த CONCACAF சம்பியன்ஸ் கிண்ண  சுற்று 16க்கான முதல் லெக் போட்டியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் முதல் பாதியில் 29 வயதான அவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் காயம் உறுதி செய்யப்பட்டது.

"லூயிஸ் ஏஞ்சல் மலகனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அகில்லெஸ் தசைநார் சிதைந்திருப்பதைக் காட்டுவதாக கிளப் அமெரிக்கா தெரிவித்துள்ளது" என்று மெக்சிகோ நகரத்தை தளமாகக் கொண்ட கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயம் குணமடைய பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் இருந்து அவர் நீக்கப்படுவார்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து மலகான் 19 மெக்சிகோவிக்காக விளையாடினார். அவற்றில்  13 போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை

 

 

Saturday, November 22, 2025

உலகக்கிண்ண உதைபந்தாட்ட சின்னங்கள்


 

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உலகக்கிண்ண உதைப்ந்தாட்டப் போட்டியை நடத்துவதால்   மூன்று சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்

மேப்பிள் என்ற கடமான், மெக்சிகோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாகுவார் என்ற ஜாயு ,அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளட்ச் என்ற வழுக்கை கழுகு.

  அதிகாரப்பூர்வ உலகக் கிண்ணப் போட்டி பந்துக்கு  - ட்ரையோண்டா  எனப் பெயரிடப்பட்டுள்ளது.- ஸ்பானிஷ் மொழியில் மூன்று அலைகள் என்று பொருள்.

இந்தப் பந்து சிவப்பு  நிறம் கனடாவையும், , பச்சை நிறம் மெக்ஸிகோவையும்  , நீல  நிற‌ம் அமெரிக்காவையும்  குறிப்பிடுகிறது. அடிடாஸ் நிறுவனம் இந்தப் பந்தைத் தயாரித்துள்ளது.

 

உலகக்கிண்ண உதைபந்தாட்டம் 2026 தகுதி பெற்ற நாடுகள்


 உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான  தகுதியை 39நாடுகள்  உறுதி செய்துள்ளன.

அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில்  நடைபெறும்  உலகக் கிண்ண உதைபந்தாட்ட‌ப் போட்டியில் 48 அணிகள் இடம்பெறும்.

போட்டியை நடத்தும் நாடுகள்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ.

ஐரோப்பா (UEFA)வில் இருந்து

ஜேர்மனி, சுவிட்சர்லாந்து,ஸ்கொட்லாந்து, பிரான்ஸ்,ஸ்பெய்ன், போத்துகல்,நெதர்லாந்து ஒஸ்ரியா,நோர்வே, பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா,

தென் அமெரிக்கா (CONMEBOL)வில் இருந்து

ஆர்ஜென்ரீனா, பிறேஸில், கொலம்பியா, ஈக்வடோர், பராகுவே, உருகுவே.

ஆப்பிரிக்கா (CAF)வில் இருந்து

அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

ஆசியா (AFC)வில் இருந்து

அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்தான், கட்டார், சவூதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்.

ஓசியானியாவில் இருந்து

நியூசிலாந்து.

வட அமெரிக்க தகுதைகாண்  போட்டிகள்  இன்னமும் நடைபெறவில்லை.

 


Tuesday, December 6, 2022

உலகக்கிண்ண தோல்வியின் எதிரொலி மூன்று பயிற்சியாளர்கள் இராஜினாமா


 உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறியதால்  பெல்ஜியம்,கானா,மெக்ஸிகோ ஆகிய அணிகளின் பயிற்சியாளர்கள் இராஜினாமாச் செய்துள்ளனர்.

கானா பயிற்சியாளர்  ஓட்டோ அடோ ,  தென் கொரியாவுக்கு எதிரான  போட்டியில் வெற்றி பெற்றதால்   கானா ரசிகர்கள் அடோமீது நம்பிக்கை வைத்தனர்.   தகுதிச் சுற்றில் நைஜீரியாவை வீழ்த்தி   உலகக் கிண்ணப் போட்டிக்கு கானா தகுதி பெற்றது.  உலகக் கிண்ணப் போட்டியில்  இதுவரை விளையாடிய சிறந்த கானா அணி இதுவாகும்.
பெல்ஜியத்தின் பயிற்சியாளர்  ராபர்டோ மார்டினெஸ் பயிற்சியாளராகத் தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டு முதல் மார்டினெஸ் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.   2016 யூரோவில் காலிறுதி, 2018 உலகக் கிண்ணப் போட்டியில்  3 வது இடம் மற்றும் 2020 யூரோவில் காலிறுதி என அணியை முன்னேற்றினார்..
கானா பயிற்சியாளர் ஓட்டோ அடோ, ஒரு மோசமான குழு நிலைக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார், இது அவரது  உருகுவேக்கு எதிரான போட்டியில் மிக  மோசமாகச் செயற்பட்டது.


பதவியைத் தொடருவதா அல்லது விலகுவதா என்ற மனநிலையில்  உள்ள பயிற்சியாளர்களின் பட்டியல் ஃபெலிக்ஸ் சான்செஸ் (கத்தார்), கார்லோஸ் குய்ரோஸ் (ஈரான்), ராப் பேஜ் (வேல்ஸ்), காஸ்பர் ஹ்ஜுல்மண்ட் (டென்மார்க்), டியாகோ அலோன்சோ (உருகுவே), டிராகன் ஸ்டோஜ்கோவிக் (சேர்பியா), , ஹன்சி ஃபிளிக் (ஜேர்மனி) .

Wednesday, November 16, 2022

உதைபந்தாட்ட சூப்பர் ரசிகர் தயாராகிவிட்டார்


 விளையாட்டுகளில் சூப்பர் வீரர்கள் பலர்  இருப்பார்கள். உதைபந்தாட்டத்தில் சூப்பர் ரசிகர் என்றால் மெக்சிகோ தேசிய உதைபந்தாட்ட அணியில் ரசிகரான ஹெக்டர் சாவேஸ் மட்டும்தான். இவரை காரமெலோ என்றும் அழைப்பார்கள்.

தலையில் கறுப்பு நிற தொப்பியுடன், பச்சை நிற எல் ட்ரை சீருடை அணிந்து, முன்பக்கத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட தனது சொந்த மாநிலமான சிஹுவாஹுவாவின் எழுத்துக்களுடன் மெக்சிகன் கொடியை ஏந்தியபடி, "காரமெலோ" - அதாவது மிட்டாய் - எல்லோருக்கும் தெரிந்தவராகிவிட்டார்.  உத்தியோகபூர்வ போட்டிகளுக்கு மட்டுமின்றி மெக்சிகோவிலும் உலகெங்கிலும் மெக்சிகோ விளையாடும் மைதானத்தில் காரமெலோ   இருப்பார்.

40 வருடங்களாக 10 உலகக் கிண்ணப் போட்டிகள்,450 க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் போட்டிகளில் மெக்சிகோவை  உற்சாகப்படுத்த  கலந்துகொண்ட பெருமையைப் பெற்ற சூப்பர் ரசிகர் கேரமலோ

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திக‌தி மெக்சிகோ நாட்டின் தலைநகரில் சோவியத் யூனியனை எதிர்கொண்ட போது தான் கலந்து கொண்ட முதல் தேசிய அணி போட்டி என்று சாவேஸ் கூறினார்.  அதே ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி  பெல்ஜியத்திற்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியை முதன் முதலில் பார்த்தார்.

 1990 இல் இத்தாலியில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில்  மெக்சிகோவுக்கு தடை விதிக்கப்பட்டாலும், சாவேஸ் அந்த போட்டிக்கு சென்று, பின்னர் 1994 இல் அமெரிக்கா, 1998 இல் பிரான்ஸ், 2002 இல் தென் கொரியா மற்றும் ஜப்பான், 2006 இல் ஜேர்மனி, 2010 இல் தென்னாப்பிரிக்கா, பிரேசில்,ரஷ்யா என தொடர்ச்சியாக  உகலக்க்கிண்ணப் போட்டிகளைக் கண்டி ரசித்தார்.

சாவேஸ் வணிக நிர்வாகத்தைப் படித்தார் மற்றும் அவரது தந்தை டிக்கெட் வாங்கியதால் தனது முதல் உலகக் கிண்ணப் போட்டிக்குச்  சென்றார். அவர் தனது தோளில் ஒரு பையுடன் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் இத்தாலிக்குச் சென்றதை நினைவில் கொள்கிறார், ஆனால் பின்னர் அவர் தனது நகைக் கடையைத் திறந்தார், அது 1994 முதல் அவரது செலவுகளைச் சரிக்கட்ட உதவியது.

2012 லண்டன் ஒலிம்பிக், 2005 ஆம் ஆண்டு பெருவில் நடந்த 17 வயதுக்குட்பட்ட உலகக் போடி ஆகியவற்றுக்கும்   சாவேஸ் சென்றார்.

உதைபந்தாட்டப் போட்டிகளில்  மெக்சிகோ தோல்வியடைந்ததை கண்டு கண்ணீர் வடித்துளார்.2002ல் அமெரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வி மிகவும் வேதனையை ஏற்படுத்தியது என்றார். காரமெலோவுக்கு அது மிகவும் சோகமான நாள். அதன் பிறகு மூன்று நாட்களுக்கு  ஹோட்டலை விட்டு வெளியேறவில்லை.

மெக்ஸிகோவில், தேசிய அணியை அதன் அனைத்து போட்டிகளுக்கும் பின்தொடரும் ஒரே ரசிகர் சாவேஸ் மட்டுமே. ஓலா வெர்டே என்று அழைக்கப்படும் மற்றொரு குழு உள்ளது, அது இதேபோன்ற ஒன்றைச் செய்கிறது, ஆனால் அவர்கள் உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வ போட்டிகளுக்கு மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

"மனோலோ எல் டெல் பாம்போ" அல்லது "மனோலோ தி பாஸ் டிரம்மர்" என்று அழைக்கப்படும் மானுவல் கேசரெஸ், 1982 உலகக் கிண்ணப் போட்டிக்கும்  பின்னர் பிறகு ஸ்பெயின் தேசிய அணியைப் பின்தொடர்கிறார்.

  எனது நண்பரான‌ 'மனோலோ எல் டெல் பாம்போ' எனது  நெருங்கிய போட்டியாளர் என்று நான் கூறுவேன். அவர் ஒரு நல்ல நண்பர், நாங்கள் தொலைபேசியில் பேசினோம், ”என்று சாவேஸ் கூறினார், பிறேஸிலிய ரசிகர் க்ளோவிஸ் அகோஸ்டா பெர்னாண்டஸ் - “கௌச்சோ டா கோபா என்று அறியப்பட்டவர், ஆனால் 2015 இல் இறந்தார் .

உலகக்கிண்ண  உதைபந்தாட்ட ரசிகர்களைப் பார்ப்பதற்கு  ரசிகர்  கூட்டம்  இருக்கிறது.

Tuesday, September 12, 2017

உகலக்கிண்ணப் போட்டியில் விளையாட மெக்சிகோ தகுதி பெற்றது.




ரஷ்யாவில் ,2018  ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் கண்டங்கள் வரியாக நடைபெறுகின்றன.வடக்கு,மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் அடங்கிய நாடுகளிலிருந்து முதல் அணியாக மெக்சிகோ தகுதி பெற்றுள்ளது. மெக்சிகோசிற்றியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பனாமாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு மெக்சிகோ தகுதி பெற்றது. 

வடக்கு,மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் அடங்கிய நாடுகளிலிருந்து 35 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின கடைசி ஐந்தாவதுசுற்றில் 
அமெரிக்கா,மெக்சிகோ,பனாமா,கொஸ்ரரிகா,ஹொண்டூராஸ், ரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் விளையாடுகின்றன. ஏழு போட்டிகளில் விளையாடிய மெக்சிகோ ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில்  முடித்துள்ளது. 17 புள்ளிகளுடன் முதளிடத்ஹ்டில் உள்ளது. மெக்சிகோ 10 கோல்கள் அடித்துள்ளது. எதிராக  2  கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.  

ஹொஸ்ரரிக்காவுக்கு  எதிரான போட்டியில்  2-0 என்ற கோல்கணக்கில் தோற்றதால் அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹொஸ்ரரிக்கா 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அமெரிக்காவும் ஹொண்டூராஸும் தலா 8   புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுவிடும். ஏனைய நாடுகளில் ஒன்று   பிளே ஓவ்  சுற்றில் வெற்றி பெற்று தகுதிபெறும்.

 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் ரஷ்யா நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. பிரேஸில், ஜப்பான்,ஈரான் ஆகியவற்றுடன் ஐந்தாவது நாடாக மெக்சிகோ இடம் பிடித்துள்ளது.