Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, September 15, 2025

இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்

இந்திய பாகிஸ்தான் போட்டி என்றால் பெரும் பரபரப்பு இருக்கும். ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளும்  போட்டி உலகளாவிய ரீதியில் எதிர் பார்க்கப்பட்டது. வீறாப்பு பேச்சுகள், சபதங்கள் என போட்டிக்கு முன்னமேயே பரபரபால் எகிறியது.

 கிறிக்கெற் ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் திக‌தி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது. 128 என்ற  வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய இந்தியா 15.5 ஓவர்களில்  3 விக்கெற்களை இழந்து  131 ஓட்டங்கள் எடுத்து  7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த முகமது ஹரிஸையும் 3  ஓட்டங்களில் வெளியேற்றினார்  பும்ரா  மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் நிதானமாக விளையாடினார்.


ஃபகார் ஜமானை 3 ஓட்டங்களில்  அவுட்டாக்கிய அக்சர் படேல் அடுத்து வந்த பாகிஸ்தான் கப்டன் சல்மான் ஆகாவையும் 3  ஓட்டங்களுடன் அனுப்பினார்.  அடுத்த ஓவரில் ஹசன் நவாஸ் 5, முகமது நவாஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் சுழலில்சிக்கியதால்  12,2 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தது.  மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஃபர்ஹானும் 40 (44)  ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன்  பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கை சிதறியது.  ஃபஹீம் அஸ்ரப் 11, சுபியன் முஹீம் 10 ஓட்டங்கலுடன் வெளியேறினர்.

 சாகின் அப்ரிடி கடைசி நேரத்தில்  4 சிக்சர்களை பறக்க விட்டு 33* (16)  பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றினார். அவருடைய அதிரடியால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை  இழந்து 127 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா   அக்சர் படேல் ஆகியோர் தலா 2, குல்தீப் யாதவ் 3  வருண், பண்டையா ஆகியோர் தலா 1 விக்கெற் எடுத்தனர்.

  128 ஓட்டங்க‌ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்  இறங்கியது இந்தியா.  சுப்மன் கில் 10 ஓட்டங்களுடனும், திலக் வ்ர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல்  47 ஓட்டங்களும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல்  10 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெற்களால் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க  வைத்துள்ளது.

நாணயச் சுழற்சியின்  பின்னர் இந்திய அனி கப்டன் பாகிஸ்தான் கப்டனுடன் கை குலுக்கவில்லை. ஆரம்பமே சர்ச்சையானது.

பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிப்பு  வெளியானதும்  அரங்கமே தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராகியது.  பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கை அகித்தனர். அப்போது தேசிய கீதத்திற்கு பதிலாக   ஜிலேபி பேபி பாடல் ஒலிபரப்பாகியது. பாகிஸ்தான் வீரர்கள் குழம்பினர். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள். அடுத்த நொடியில்  பாகிஸ்தானின் தேசிய கீதம்  ஒலிபரப்பானது.

பும்ராவின் 5 வருட சாதனையை பாகிஸ்தானின்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்,  முடிவுக்குக் கொண்டு வந்தார்.

 உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.அந்த சிக்ஸரைப் பார்த்து  கிறிக்கெற் ரசிகர்கள் வியப்படைந்தனர்.வர்ண்னையாளர்கள்  புகழ்ந்து தள்ளினார்கள்.

 பும்ரா வீசிய 6-வது ஓவரில் அவர் மீண்டும் ஒரு அதிரடியான புல் ஷாட்டை பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் பறக்கவிட்டு இரண்டாவது சிக்ஸரையும் அடித்து, இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்..

ஃபார்ஹானின் இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இது வரை ஒரு சிக்சர் கூட பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை என்கிற 5 வருட சாதனையை உடைத்தார் சாஹிப்சாதா  ஃபார்ஹான்.  பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சிக்சர் இதுவாகும்.  பும்ப்ராவின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என சபதம் செய்த முகமட் ஹரிள்  பண்டையா வீசிய பந்தை  பும்ராவிடம் பிடிகொடுத்து  ஆட்டமிழந்தார்.

பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் , எல்லை தாண்டிய பிரச்னைகளின் அனல்,   போடிட்டியின் போது ஆடுகளத்திலும் உணரப்பட்டது.

நாணயச் சுழற்சியின் பின்னர்  வழக்கமாக இரு அணிகளின் கப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கப்டனின் முகத்தை கூட பார்க்காத, இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்து அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து, போட்டியின் முடிவிலும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது என்பது மரியாதை நிமித்தமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், நேற்றைய போட்டியில் இலக்கை எட்டியதுமே, பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் நேராக இந்திய பெவிலியனை நோக்கி புறப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்குவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், பெவிலியனை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 போடிட்யின்போது கையில் கருப்பு பேட்ஜை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். வெற்றியை இந்திய இராணுவத்திற்கும் பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் சமர்பிப்பதாக கப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கைகுலுக்காததால்  பாகிஸ்தான் கப்டன் பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

  

Friday, June 6, 2025

உயிரைப் பறித்த வெற்றிக் கொண்டாட்டம்

 ஐபிஎல் வரலாற்றில்  முதன்முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஆடும் அணிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்டது பெங்களூர் அணி. சமூக வலைதளங்களிலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும்.

  18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர்  முதன்முறையாக சம்பியனாகியது,  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற்து. வெற்றிவீரர்களைக் காண்பதற்காக‌ கட்டுக்கடங்காமல்  ரசிகர்கள்  குவிந்தனர். நெரிசல் தள்ளு முள்ளு காரணமாகநேற்று மாலை வரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுமார் 100 க்கு மேற்பட்டவர்கள்    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் மயக்கமடைந்திருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பவுரிங் மருத்துவமனையில் 7 பேர், வைதேகி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தை, ஒரு பெண் அடங்குவர். மற்றவர்கள் 30-க்கும் வயதுக்கும் குறைவான ஆண்கள். இந்த இரு மருத்துவமனைகளிலும் 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 18 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக  பெங்களூர் சம்பியனாகியதை ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினார்கள்.    ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய 28 வயதான  மஞ்சுநாத் கும்பார்   என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற 21 வயதான பினந்தன் என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

சம்பியன் கிண்ணத்துடன் பெங்களூருக்குத் திரும்பிய வீரர்களை வரவேற்க  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  விமான நீலயத்துக்குச் சென்றார்.  பின்னர்,   வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமூக அவலைத்தளங்களில் இவை பகிரப்பட்டதால் ஆர்வமடைந்த ரசிகர்களும், மக்களும்  திரண்டனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைபொலிஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

 கிரிக்கெட் மைதானத்தின் 6, 7-வது கேட் பகுதியில் இலவச பாஸ் பெற்ற ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.   ந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்சிபி அணி ரசிகர் நவீன் கூறும்போது, ``கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கொண்டாட்ட மன நிலையில், சப்தம் போட்டுக்கொண்டு எல்லோரும் கும்பலாக ஓடினர். அதனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறியும், கீழே விழுந்தவர்களை யாரும் தூக்காமல், மிதித்துக் கொண்டே ஓடியதாலும் நிறைய பேர் காயமடைந்த‌னர். சிலர் இறந்து விட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை''என்றார்.

: பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த துயர சம்பவத்துக்கு கர்நாடக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது விளம்பரத்துக்காக அவசரகதியில் இந்த‌ விழாவை அரசு ஏற்பாடு செய்தது. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலேயே 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை முதல்வர் சித்தராமையா விளக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் வசதியோ, போதிய பாதுகாப்பு வசதியோ செய்யப்படவில்லை. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஆயிரக்கணக்கான ரசிக‌ர்கள் அம்பேத்கர் மெட்ரோ நிலையம், கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை ஆகிய மெட்ரோ நிலையங்களில் குவிந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறிய நிலையில், தடுப்புகளை தாண்டிக் குதித்து ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. இதனால் கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை உள்ளிட்ட 8 மெட்ரோ நிலையங்களையும் உடனடியாக மூட மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.

 35 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் குடிய மைதானத்தில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.திட்டமிடாது அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்த அநர்த்தம்  ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கிறிக்கெற்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. காலத்திற்கும் நீடிக்கும் வகையில் படிந்துள்ள இந்த கறையை கர்நாடக அரசு எப்படி  சரி செய்யப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.

 சென்னையும், மும்பையும்தலா 5  முறை சம்பியனாகின அந்த அணிகளுக்கும் அப்போது வரவேற்கப்பட்டன. திட்டமிடலும், ரசிகர்களின் கட்டுக்கோப்பும்  இருந்ததால் அசம்பாவிதம் அப்போது தவிர்க்கப்பட்டது.

 

Wednesday, June 4, 2025

ஈ சாலா கப் நம்தே 18 வருட கனவு


 

 

 'ஈ சாலா கப் நம்தே' இந்த ஆண்டு  கிண்ணம்  நமதே  என்ற பெங்களூர் ரசிகர்களின் கனவு 18  வருடங்களின்  பின்னர் நிஜமானது.

பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது சீருடை இலக்கம்  18. தற்போதைய 18வது தொடரின் ராசி கைகொடுக்க,  சம்பியன் கிண்ணத்திக்  கைப்பற்றினார். 'ஈ சாலா கப் நம்தே'   என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவானது. வெற்றி பெற்றதும்  ஆனந்த கண்ணீரில் மிதந்தார் கோலி. பைனலை காண நேற்று அஹ‌தாபாத் வந்த பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்கள் டிவிலியர்ஸ், கெய்ல் உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது.

 ஐபிஎல் , மகளிர் பிரீமியர் லீக் இரண்டிலும் பட்டங்களை வென்ற இரண்டாவது அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 187  ஓட்டங்கள் எடுத்தது. 6 ஓட்டங்களால் தோல்வியடைந்த பஞ்சாப் அணி கடசி ஓவர் வரை பெங்களூருக்கு சவால் விட்டது.

 4 விக்கெற்களை இழந்து  131  ஓட்டங்கள் எடுத்த பெங்களூருக்கு 10 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த ஜிதேஷ் சர்மா கைகொடுத்தார்.

கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தினார், கைல் ஜேமிசனும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் அணியின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது.

பிரப்சிம்ரன் சிங் ம, பிரியான்ஷ் ஆர்யா  ஜோடி 43 ஓட்டங்கள் சேர்த்து அ சத்தியது.  பவர்பிளேயில் ஜோஷ் ஹேசில்வுட்   ஆர்யாவை அவுட்டாக்கி, பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.

பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும்  ஆட்டமிழந்ததால் பஞ்சாப் தடுமாறியது.

ஜோஷ் இங்கிலிஸ் எதிர் தாக்குதல் நடத்திய போதிலும், குருணால் பாண்டியாவின் பந்து வீச்சு ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை அளித்தது.

அவர் நான்கு ஓவர்களில் 17  ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோலி தனது சிறந்த ஆட்டத்தில் இல்லாவிட்டாலும், அந்தப் போட்டியில் அவர் ஆர்சிபியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராவார் அவர் 35 பந்துகலில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம்,  ஐபிஎல்லில்  பஞ்சாப் அணிக்கு எதிராக 1.159  எடுத்த அவர் அதிக  பஞ்சபுக்கு எதிராக அதிக  ஓட்டம் எடுத்த வீரரானார்.

 முன்னதாக  டேவிட் வானர்   1,134  ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

 

Tuesday, June 3, 2025

ஐபிஎல் சம்பியன் பெங்களூரா? பஞ்சாப்பா?


 கிறிக்கெற் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிக்கப்படும் ஐபிஎல்  தொடரின்  இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

கடந்த மார்ச் 22-ஆம் திகதி தொட‌ங்கிய 2025 ஐபிஎல் கிறிக்கெற் தொடரின்  இறுதிப் போட்டியில் பெங்களூரும் ,பஞ்சாப்பும்  மோதுகின்றனர்.

ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சென்னை ,மும்பை ஆகிய  இரண்டு அணிகளும்   இறுதிப் போட்டியில் இல்லை என்ப‌து ஒருபுறம் இருக்க  கிண்ணத்தை கோலி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில்   ஒரு முறை கூட சம்பியனாகாத பெங்களூர்,பஞ்சாப்  அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால்,   ஐபிஎல் மகுடத்தை புதிய சம்பியன் கைப்பற்றப்போவது உறுதியாகியுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ள ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குகிறன.ரி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில் குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில்   பந்துவீச்சாளர்களின் பங்கே அதிகளவு ஆகும்.

ரி20 போட்டிகளைப் பொறுத்தவரை சிக்ஸர், பவுண்டரி விளாசும் நோக்கத்துடனே   களமிறங்குவார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் பெரும் பங்கு பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. திறம்பட இந்த அதிரடி வீரர்களிக்  கையாளும் பந்துவீச்சாளர்களின் கையில்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியும் உண்டு.

நீண்ட பேட்டிங் பட்டாளத்தை இரு அணிகளும் கொண்டுள்ள நிலையில், இந்த பேட்டிங் பட்டாளத்தை சமாளிக்கும் வல்லமை பந்துவீச்சு பட்டாளம் இரு அணிகளிலும் உண்டு

இதுவரை நடந்த 17 சீசன்களில் ஆர்சிபி அணி சம்பியனாகாததற்கு  கு முக்கிய காரணம்   பந்துவீச்சு பலவீனமே ஆகும். இதன்காரணமாகவே கெயில், டிவிலியர்ஸ் ஆகிய ஜாம்பவன்களுடன் இணைந்து கோலி பல வருடங்களாக முயற்சித்தும் கிண்ணம்  வசப்படவில்லை. ஆனால், நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது.

ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள் வேகத்தில் முக்கிய அம்சமாக உள்ளனர். குறிப்பாக,  நட்சத்திர பந்துவீச்சாளராக ஹேசில்வுட் உள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் நெருக்கடியான சூழலில் ஆட்டத்தை மாற்றி ஆர்சிபி வசம் கொண்டு வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார் முக்கிய வீரராக திகழ்கிறார். அவரது அனுபவமும், வேகமும் குவாலிஃபயரில் நன்றாக ஜொலித்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் குவாலிஃபயர் 1ல் சிறப்பாக வீசினார். அவர் மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலே எதிரணிக்கு பெரும் சவால்தான். 

யஷ் தயாள் ஆர்சிபி அணியி்ன் தவிர்க்க முடியாத டெத் பவுலராக உருவெடுத்துள்ளார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் கட்டுக்கோப்பாக வீசுவதில் வல்லவராக உள்ளார். அவர் சிறப்பாக வீசினால் எதிரணிக்கு சவால். இவர்கள் 3 பேர் வேகத்தில் முக்கிய வீரர்களாக உள்ள நிலையில் சுழல் அஸ்திரமாக சுயாஷ் சர்மாவும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர்.

ட்டுக்கோப்பாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீசும் ஆற்றல் கொண்டவராகவும் சுயாஷ் சர்மா உருவெடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1ல் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழல் சாம்ராட்டாக குருணல் பாண்ட்யா உள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கான விதிவிலக்காக பாண்ட்யா உள்ளார். கூக்ளி, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் ஆகியவற்றிற்கு பதிலாக யார்க்கர், பவுன்சர் என சுழலில் யாருமே வீச முடியாத பந்துவீச்சை வீசி வருகிறார். இவர்கள் மட்டுமின்றி ஷெப்பர்ட் மித வேகப்பந்துவீச்சாளர் ஆவார். லிவிங்ஸ்டனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அவர் பந்துவீசும் வாய்ப்பும் கிடைக்கும். அவரும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்.

பஞ்சாப் அணியும் பந்துவீச்சில் அசத்தலாகவே உள்ளது. அந்த அணியில் அர்ஷ்தீப்சிங், ஜேமிசன், விஜயகுமார் வைஷாக், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார், ஓமர்சாய், சாஹல், ஸ்டோய்னிஸ் உள்ளனர். பஞ்சாப் பந்துவீச்சை வழிநடத்தும் பொறுப்பை அர்ஷ்தீப்சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர்  திறம்பட பந்துவீசினால் பஞ்சாப்பிற்கு பலமாக அமையும். அவரும் சிறந்த டெத் பவுலர் ஆவார்.

 , பஞ்சாப்பின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜேமிசன் உள்ளார். ஹேசல்வுட்டைப் போல 6 அடி உயரமுள்ள இவர் மும்பைக்கு எதிராக அசத்தலாக பந்துவீசினார். அவரது அசத்தல் பந்துவீச்சு தொடர்ந்தால் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அதிகரிக்கும். முன்னாள் ஆர்சிபி வீரரான விஜயகுமார் வைஷாக் நல்ல வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர் நன்றாக வீசினால் சவால் அளிக்க முடியும். ஓமர்சாய் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக குவாலிஃபயர் போட்டியில் வீசினால், அவர் இறுதிப்போட்டியில் அப்படி பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான இவர்களுடன் பஞ்சாப்பின் சுழலை முன்னாள் பெங்களூர் வீரரான சாஹல் வழிநடத்த உள்ளார். அனுபவம் நிறைந்த சாஹல் சுழலில் மிரட்டினால்  சவாலாக மாறிவிடும். அவருக்கு பக்கபலமாக ப்ரார் உள்ளார். அவருக்கும் ஐபிஎல் தொடரில் ஏராளமாக பந்துவீசிய அனுபவம் உண்டு. இந்த சுழல் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த பிரதான பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி ஸ்டோய்னிஸ் மிதவேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முஷீர்கானும் சுழலில் அசத்தும் திறன் கொண்டவர்.

இரு அணிகளும் சரிசம பந்துவீச்சு பலத்துடன் காணப்படுவதால்   எந்த அணியின் பந்துவீச்சு மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த அணி முதல் முறையாக கிண்ணத்தை  முத்தமிடும்.

பெங்களூரு அணியின் ஆட்டம் வேற 'லெவலில்' உள்ளது. தகுதிச்சுற்று-1ல் பஞ்சாப்பை வீழ்த்தி, பைனலுக்குள் நேரடியாக நுழைந்தது. அனுபவ கோலி   இன்றும்  சாதித்தால் , 'ஈ சாலா கப் நம்தே'   என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாகலாம். கப்டன் ரஜத் படிதர் 286  ஓட்டங்கள், , பில் சால்ட் 387 ஓட்டங்கள், , 'பினிஷர்' ஜிதேஷ் சர்மா 237 ஓட்டங்கள்,  'அதிரடி' ரொமாரியா ஷெப்பர்டு, மயங்க் அகர்வால் ஆகியோரும் கைகொடுப்பார்கள்.  உடற்தகுதியில் தேறினால் டிம் டேவிட் இடம் பெறுவார்.

   பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் தோற்ற போதும், மும்பைக்கு எதிரான தகுதிச் சுற்று-2ல் அசத்தியது. இதில், கப்டன் ஷ்ரேயஸ் தனி ஒருவனாக 87  ஓட்டங்கள்  விளாசி, அணியை 11 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு அழைத்து சென்றார். இவர் 16  போடிகளில் 603 ஓட்டங்கள், குவித்துள்ளார்.

இவர், இன்றும் நிலைத்து நின்று ஆடினால், கோப்பை வெல்வது உறுதி. ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என பேட்டிங் படை வலுவாக உள்ளது.

பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 36 முறை மோதின. இதில் தலா 18 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.

* இம்முறை 3 முறை மோதின. இதில் பெங்களூரு 2, பஞ்சாப் 1ல் வென்றன.

* ஆமதாபாத் மோடி மைதானத்தில் இரண்டாவது முறையாக மோத உள்ளன. இங்கு ஏற்கனவே நடந்த போட்டியில்  பஞ்சாப் அணி, பெங்களூருவை வீழ்த்தியது.* பைனலில் இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.

 

ஐபிஎல்25,ரி20,பஞ்சாப்,பெங்களூர்,விளையாட்டு

Tuesday, May 27, 2025

இந்தியா U19 அணி கப்டனாக சிஎஸ்கே வீரர் தேர்வு

 இங்கிலாந்துக்குச் செல்லும்  இந்திய அண்டர் 19 அணி 5 ஒரு நாள் போட்டிகலிலும்,  , இரண்டு  டெஸ்ட் போட்டிகளிலும்  விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து அபாரமாக விளையாடி வரும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தற்போது கப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் இந்த தொடரில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பிடித்திருக்கிறார்.

 இந்திய அண்டர் 19 அணியில் துணை கப்டனாக மும்பையைச் சேர்ந்த அபிக்யான் குண்டு என்ற வீரர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சூரியவன்ஷியுடன் தொடக்க வீரராக விளையாடி வந்த விஹான் மல்கோத்ரா என்ற வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 சௌராஷ்டிராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் ஹர்வன்ஸ் , பெங்காலியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் யுதாஜித் குகா, கேரளாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் முகமது ஈனான் , பஞ்சாப்பை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் அன்மோல்ஜித் சிங் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இரண்டு யூத் டெஸ்ட் போட்டியில் முகமது ஈனான் 16 விக்கெட்டுகளையும், அன்மோலிஜித் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். கோச் பிஹார் தொடரில் அபாரமாக விளையாடிய ஆல்ரவுண்டர் கிலான் பட்டேலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்  கிண்ணத்  தொடர் ஸிம்பாப்பேவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

 ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது அண்டர் 19 அணியில் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

 இந்தியா U-19 அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மால்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்டா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவ்ஹான், கிலன் பட்டேல், ஹெனில் பட்டேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது இனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்

Tuesday, May 20, 2025

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்

 இந்திய , பாகிஸ்தான் யுத்தம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள்  மே மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானது.

அவுஸ்திரேலியா,தென் ஆபிரிக்கா,இங்கிலாந்து,மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாட்டுகளின்  வீவெளியேறும் நிலை உள்ளதால் ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.இது பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

  மே 25 உடன் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு நாடுகளின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. முக்கியமாக, அவுஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது.இந்தத் தொடருக்காக சுமார் இரண்டு வாரங்கள் வரை இரு அணி வீரர்களும் பயிற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்தப் போட்டியில் விளையாட உள்ள அவுஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா வீரர்கள் மே மூன்றாவது வாரம் வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இங்கிலாந்து  மேற்கு இந்தியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மே 29  ஆம் திகதி  தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க வேண்டிய   வீரர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு தொடர்களால் மட்டுமே சுமார் 20 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஐபிஎல் தொடரின் தற்காலிக நிறுத்தத்தால் ஆஸ்திரேலியா சென்ற சில வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


ஐபிஎல் அணி வீரர்களும் விலகும் காரணமும்

 

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

  லுங்கி நெகிடி (தென்னாப்பிரிக்கா) ‍  உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பயிற்சி

 ரொமாரியோ ஷெப்பர்டு ( மேற்கு இந்தியா) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர்

  ஃபிலிப்ஸ் சால்ட் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:  ஒருநாள் தொடர்

  ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:

 ஒருநாள் தொடர்

  லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) - விலகும் காரணம்: ஒருநாள் தொடர்

பஞ்சாப் கிங்ஸ்

 மார்க்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

 ஜோஸ் இங்கிலிஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

 மார்க்கஸ் ஸ்டோனிஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை

மும்பை இந்தியன்ஸ் 

  ரியான் ரிகெல்டன் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஸ்ஷிப் 

 கார்பின் போஷ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஸ்ஷிப் 

குஜராத் டைட்டன்ஸ் 

  ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர்

 ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ( மேற்கு இந்தியா) - விலகும் காரணம்:   ஒருநாள் தொடர் 

 காகிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

  ஜெரால்ட் கோட்சி (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி:

  பாட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்:   உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

வீரர்: ட்ராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)   ஆஸ்திரேலிய அணியின் உலக டெஸ்ட் சம்பியஷிப்

டெல்லி கேப்பிட்டல்ஸ் 

 

  மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - விலகும் காரணம்: மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பாததாலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பும்

  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (

 அன்ரிச் நோர்ஜே (தென்னாப்பிரிக்கா) - விலகும் காரணம்: உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்

வர்மா

18/5/25 

ஏமாற்றிய வீரர்களால் விரயமான கோடிகள்


 

  ஐபிஎல்  சீசன் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர். அடிப்படை விலையில் வாங்கிய வீரர்கள் நெருப்பாக விளையாடுகிறார்கள். ஐபிஎல் இல்  விலை போகாத வீரர்களுடன் ஒப்பந்தம் செய்த சென்னை  அச்சுறுத்துகிறது.

  ஏலத்தில் பெருத்த எதிர்பார்ப்புடன் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்கள் இந்த சீசனில்  ஏமாற்றிவிட்டார்கள்.

ரிஷப் பண்ட்  

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருபவர் ரிஷப் பண்ட்    ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். லக்னோ அணியின் நிர்வாகம் அவருக்கு கப்டனாக்கி அழகு பார்த்தது.. கோயங்கா பன்ட் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், இப்போது வரைக்கும் பன்ட் இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு இன்னிங்ஸை கூட ஆடவில்லை.

11 போட்டிகளில் 128  ஓட்டங்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 99 மட்டுமே. நம்பர் 4 இல் தான் இறங்குவேன் என தலைகீழாக நின்று சொதப்பினார். பின்னர் ஓப்பனிங் இறங்கி சொதப்பினார். கன்னாபின்னாவென பேட்டை சுற்றி சகட்டுமேனிக்கு அவுட் ஆகிவிட்டு செல்கிறார். நடப்பு சீசனில் அவர் சொதப்பியிருக்கும் விதம் இந்திய ஒயிட் பால் அணியில் அவரின் இடத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

வெங்கடேஷ் ஐயர்:

கொல்கத்தா அணி நடப்பு சம்பியன். அந்த அணியை சம்பியனாக்கிய ஸ்ரேயாஷ் ஐயருக்கு அவர் கேட்ட தொகையை வழங்காமல்  வெளியேற்றியது. அதேநேரத்தில்தான் ஏலத்துக்கு சென்று வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா 2021 சீசனிலிருந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார்.

ஆனால், இந்த சீசனில் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு அணி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட போதிலும், 11 போட்டிகளில் 142 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். கொல்கத்தாவின் சறுக்கலுக்கு வெங்கடேஷ் பார்மில் இல்லாததும் மிக முக்கிய காரணம்.

ஜோப்ரா ஆர்ச்சர்:

எல்லா சீசனிலும் பெயரை பதிந்துவிட்டு கடைசி நிமிடத்தில் விலகும் ஆர்ச்சர், இந்த முறை  எதிரணிகளிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். அவரை 12.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் வாங்கியிருந்தது.

 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார். இடையில் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக  ஓட்டங்களை கள் வழங்கியவர்  எனும் சாதனையையும் படைத்திருந்தார்.

இஷன் கிஷன்:

இஷன் கிஷனை 11.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் வாங்கியது.. தங்களது அதிரடி பட்டறையின் இன்னொரு கூர் ஆயுதமாக இஷன் இருப்பார் என எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப சதத்தோடுதான் சீசனையும் தொடங்கினார். அவரது பார்மும் அங்கேயே தொடங்கிய இடத்திலேயே முடிந்துவிட்டது.

முதல் போட்டியிலேயே சதமடித்த போதும் 11 போட்டிகளில் சேர்த்து 196  ஓட்டங்களை மட்டும்தான் எடுத்திருக்கிறார். இடையில் மும்பைக்கு எதிரான போட்டியில் அவுட்டே ஆகாமல் பெரிய மனுசத்தனமாக நடையைக் கட்டி ஆரஞ்சு ஆர்மியின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார்.

அஷ்வின் :

அஷ்வினை 9.75 கோடிக்கு சென்னை வாங்கியிருந்தது. ஓய்வுபெற்ற வீரருக்கு இது அதிகமான தொகையாக தெரிந்தாலும் சேப்பாக்கம் எமோஷனை வைத்து சென்னை ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர்.  ஆனால், அஷ்வினின் பௌலிங்க் எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

உள்ளூரான சேப்பாக்கத்திலேயே அவரின் பந்துகளை சரமாரியாக அட்டாக் செய்தனர். 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து பவர்ப்ளேயிலுமே வீசி ஓவருக்கு 15  ஓட்டங்களுக்கு மேல் மனசாட்சியே இல்லாமல் வழங்கினர். மினி ஏலத்துக்கு முன்பாக அவரை ரிலீஸ் செய்து விடுங்கள் என்கிற மனநிலைக்கு ரசிகர்களே வந்துவிட்டனர். 

ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் :

கடந்த சீசனில் டெல்லி அணிக்காக இளம் சூறாவளியாக அசத்தியிருந்தார். அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் அவரை 9 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கியது. ஆனால், இந்த சீசனில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நடப்பு சீசனில் டெல்லி அணி 6 முறை ஓப்பனிங் கூட்டணியை மாற்றிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணமே இந்த ஜேக்தான்.

6 போட்டிகளில் 55  ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 105 மட்டுமே. ஜேக் நல்ல பார்மில் இருந்திருந்தால் டெல்லி அணியின் பல தலைவலிகள் தீர்ந்திருக்கும்.

இவர்களெல்லாம் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்துக்கு முன்பாக பெரிய தொகை கொடுத்து சில வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்திருக்குமே. அந்தப் பட்டியலில் பெரிய தொகையை வாங்கிய வீரர்கள் சிலருமே மோசமாகத்தான் ஆடி வருகின்றனர்.

பதிரன

பதிரன மாதிரியான 22 வயது இளம் வீரரை சென்னை மாதிரியான அணி கோடிகளை கொட்டி தக்கவைப்பதே பெரிய விஷயம். பதிரனாவுக்கு 13 கோடியை சென்னை அணி கொடுத்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு சீசன்களில் கொடுத்தத் தாக்கத்தை பதிரனா இந்த சீசனில் கொடுக்கவில்லை. மிடில் & டெத் ஓவர்களில்தான் பதிரனாவை சென்னை பயன்படுத்துகிறது.

அங்கேதான் பதிரனவால் விக்கெட் வேண்டும் என நினைக்கிறது. பதிரனாவால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 10 க்கும் மேல் இருக்கிறது. சென்னை அணியும் பதிரனாவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ரஷீத் கான்:

 ரஷீத் கானை 18 கோடி கொடுத்து குஜராத் அணி தக்கவைத்தது. அவரைத்தான் தங்களின் முக்கிய ஸ்பின்னராக பார்த்தது. கில் இல்லாத சமயங்களில் கடந்த சீசனில் கேப்டன்சியையும் கொடுத்திருந்தனர். அவ்வளவு முக்கியமாக கருதப்படும் ரஷீத் கான், சமீபமாக அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுப்பதில்லை. 

அவரின் பலவீனத்தை எதிரணி வீரர்கள்  அறிந்துவிட்டனர். வேகமாக ஸ்டம்பை நோக்கி வரும் கூக்ளிகளும் டைட்டான டெலிவரிகளும் மட்டுமே அவரின் ஆயுதம். அதை அணிகள் உடைத்து விட்டன. இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.

ஹெட்மயர்

கையில் இருந்த தரமான வர்களை  தாரை வார்த்து ஹெட்மயரின் அதிரடிக்காக அவரை 11 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி தக்கவைத்தது. அந்த அணிக்காக பினிஷர் ரோலில் இறங்கி போட்டிகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். ஆனால், ஹெட்மயர் அதை ஒரு போட்டியில் கூட செய்யவில்லை.

இந்த சீசனில் நான்கைந்து போட்டிகளை நெருங்கி வந்து கடைசிப் பந்தில் ராஜஸ்தான் தோற்றிருக்கிறது. அந்த சமயங்களிலெல்லாம் ஹெட்மயர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆடியிருக்கவே இல்லை. அடுத்த சீசனில் ஹெட்மயர் தக்கவைக்கப்படுவது கடினமே எனும் சூழல் தான் நிலவுகிறது.

சிலம்பு

18/5/25

 

Tuesday, May 13, 2025

சிஎஸ்கேயின் எல்லைச்சாமி டிவால்ட் பிரெவிஸ்


 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 மறக்க கூடிய சீசனாக மாறியுள்ளது, சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே அணி தொடங்கினாலும் அதன் பின்னர் ஏற்ப்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆஃப் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. சிஎஸ்கே அணியின் நீண்ட நாள் ஃபார்மூலாவாக இருந்த அனுபவம் இந்த சீசனில் பலிக்காமல் போனது.

கப்டன் ருதுராஜும் காயத்தால் விலக சென்னை அணிக்கு மீண்டும் கப்டனானார் எம்.எஸ் டோனி, ஆனால் அவரின் மந்திரமும் இந்த உடைந்த சிஎஸ்கே கப்பலை கரை சேர்க்க முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக  இரண்டு மூன்று வீரர்கள் வெளியேற மாற்றுவீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வந்ததிலிருந்து சென்னை அணி வேறு அணியாக மாறியுள்ளது.

முக்கியமாக சென்னை அணி புதிய எல்லைச்சாமியாக மாறியுள்ளார் டிவால்ட் பிரெவிஸ், சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில்  மொசமானது  என்று சொன்னதற்கு  இது போதுமா  பொதுமா என்று கேட்கிற அளவுக்கு மிரட்டுகிறார் டிவால்ட் பிரெவிஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இறங்கிய முதல் போட்டியிலேயே தனது முத்திரையை பதித்தார் பிரெவிஸ் 25 பந்துகளில் 42  ஓட்டங்கள் என்று விளாசினார். அடுத்த நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான நிலையில்  கைகொடுத்தார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டக் அவுட்டானர்.   கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி  5 விக்கெற்களை இழந்து 61  ஓட்டங்கள் எடுத்து  தத்தளித்து கொண்டு இருந்த போது சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டதும் மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணியை வெற்றிப்பக்கம் திருப்பினார். 25 பந்துகளில் 52  ஓட்டங்கள் விளாசினார். இதில் வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் 30  ஓட்டங்களை விளாசினார். 

சென்னை அணிக்கு துடுப்பாட்டத்தில் மட்டுமில்லாமல் ஃபில்டிங்கிலும் அசத்தி வருகிறார் பிரெவிஸ் சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெசிஸ் முன்னர் என்ன செய்தரோ அதையை மீண்டும் பிரதிப்பலிக்கிறார் பிரெவில் இவரை பேபி ஏபிடி என்று ரசிகர்கள் கூறினாலும், உண்மையில் இவர் பேபி ஃபாப் டூ பிளெசிஸ்  என்றே சொல்லலாம்.

  

Monday, May 12, 2025

அவமானப்படுத்தப்பட்ட ரோஹித் அன்றே கணித்த கில்கிறிஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் திகதி  சர்வதேச டெஸ்ட்டில்   இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின்  வெற்றிகரமான க‌ப்டனாக ரி20 உலகக் கிண்ணம்,  ஐசிசி சம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர்   திடீரென டெஸ்ட் கிறிக்கெற்றில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம்.

  தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக்  கிண்ணத்திக்  கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரி20 , டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

 . 2024-25 இல் நடைபெற்ற இந்தியா ,அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோஹித் சர்மா, அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கப்டன் ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடியிருந்தார்.

 இந்திய மண்ணிலேயே ஓட்டம் குவிக்க முடியாத அவர் அவுஸ்திரேலியாவில் எப்படி  ஓட்டங்களைக்  குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோஹித் சர்மா பங்கேற்றார். முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். ஒரு கப்டன் எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப் பேசியிருந்தார். "'ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் கப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால், அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும். 

ரமணி

11/5/25  


டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கிங் கோலி

 டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கப்டன் டோனியின் அபிமான வீரராக ஆதரவு பெற்றார். அந்த ஆதரவை சரியாகப் பயன்படுத்திய விராட் கோலி நாளடைவில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு துடுப்பாட்டத்தில்  முதுகெலும்பாக உருவெடுத்தார். குறிப்பாக 2013க்குப்பின் உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் சூழ்நிலைகளிலும் அசத்திய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய  ஓட்டங் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.  டோனி 2014இல் கப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய அணியை முழுமையாக மாற்றினார்.

அவரது தலைமையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஐசிசி டெஸ்ட் அணியாக முன்னேறி வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக அவுஸ்திரேலிய மண்ணில் 2018 19 ஆம் ஆண்டு பார்டர்கவாஸ்கர்  கிண்ணத்தை  வென்ற இந்தியா சரித்திர சாதனை படைத்தது.

68 போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய, ஆசிய கப்டன் என்ற இரட்டை சாதனையை விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவரது தலைமையில் இந்தியா ஐசிசி உலகக்  கிண்ணத்தை  வெல்லத் தவறியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் 2022இல் கப்டன்ஷிப் பொறுப்பை இராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண  வீரனாக  விளையாடி வந்தார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு ரி 0 உலகக்  கிண்ண   வெற்றியுடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதைப் போல அவர்கள் மீண்டும் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர்..

 இதுவரை 123 போட்டிகளில் விராட் கோலி 31 அரை சதம் 20 சதம் உட்பட 9230 ஓட்டங்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றை விராட் கோலி தவற விட்டுள்ளார்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனைக் கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது