Tuesday, August 26, 2008

முடிந்துபோன அத்தியாயமும் தொடரப்போகும் வரலாறும்






ஜனநாயகம், தீவிரவாதம் என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்த முஷாரப்பை ஜனநாயகவாதிகளும் தீவிரவாதிகளும் புறம் தள்ளிவிட்டனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற போர்வையில் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை நடத்தி வந்த ஜனாதிபதி முஷாரப்பை அவர் பெரிதும் நம்பி இருந்த இராணுவமும் கைவிட்டு விட்டது.
பாகிஸ்தானுக்கு இராணுவ ஆட்சி புதியதல்ல, ஆனால் சர்வ அதிகாரத்தையும் வைத்திருந்த இராணுவ ஜனாதிபதி ஒருவரை ஜனநாயகக் கட்சிகள் ராஜினாமாச் செய்ய வைத்தமை புதியது.
நவாஸ் ஷெரீப் பிரதமரான போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல்ஜெஹாங்கிர் கராமத் இராஜினாமாச் செய்தார். அப்போது அப்பதவிக்கு தகுதியானவர்கள் பலர் இருந்த போதும் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முஷாரப்பை இராணுவத் தளபதியாக நியமித்து அழகு பார்த்தார் நவாஸ் ஷெரீப்.
தனக்கு விசுவாசமாக முஷாரப் இருக்கும் வரை தனது பதவிக்கு ஆபத்து இல்லை என்று நவாஸ் ஷெரீப் நம்பினார். முஷாரப் மீதான நம்பிக்கை தகர்ந்தபோது அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நவாஸ் ஷெரீப் தயாரானார். அதனை அறிந்த முஷாரப் அதிரடியாக தனது விசுவாசமான இராணுவ அதிகாரிகளின் துணையுடன் பாகிஸ்தானின் ஆட்சியை பிடித்தார்.
1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெற்ற இராணுவ விழா ஒன்றில் கலந்து விட்டு நாடு திரும்பிய முஷாரப்பை விமான நிலையத்தில் கைது செய்ய நவாஸ் ஷெரீப் திட்டமிட்டார். இதனை அறிந்த முஷாரப் நடுவானில் பறந்தபடியே தனக்கு விசுவாசமான இராணுவத் தளபதிகளின் உதவியுடன் நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைத்தார்.
நவாஸ் ஷெரீப்புக்கு விசுவாசமான அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். தொலைக்காட்சி, வானொலி ஆகியன முஷாரப்பின் விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அன்றிலிருந்து இன்றுவரை பாகிஸ்தானில் ஆட்சி செய்த முஷாரப்பை எதிர்த்த எவரும் வெற்றியடையவில்லை.
முஹமது அயூப்கான் என்பவரே பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முதன் முதலில் அமுல்படுத்தியவர். 1969 ஆம் ஆண்டு இராணுவத் தளபதி யஹியா கானிடம் அவர் ஆட்சியை ஒப்படைத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதனை ஏற்க மறுத்த யஹியா கான் கிழக்கு பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தார். இந்தியாவின் தலையீட்டினால் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகியது. பங்களாதேஷ் என்ற பெயருடன் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை பூட்டோ கையேற்றார். அவரது ஆட்சியை வீழ்த்திய ஜெனரல் ஷியா உல் ஹக் பாகிஸ்தானின் ஆட்சியை தன் வசப்படுத்தினார். பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜெனரல் ஷியா உல் ஹக் சென்ற விமானம் வெடித்துச் சிதறி அவர் பலியானார்.
அதன் பின்னர் பூட்டோவின் மகளான பெனாசிர் பூட்டோவை தமது தலைவியாக ஏற்ற பாகிஸ்தான் மக்கள் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் தமது உறவுகளை வலுப்படுத்த பெரிதும் பிரயத்தனப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் யுத்த முறுகல் அமெரிக்காவின் பக்கம் பாகிஸ்தானை தள்ளியது.
தலிபான், அல் குவைதா ஆகிய அமைப்புக்கள் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பவர்களை தமது எதிரியாகவே பார்த்தன. ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது அதிகாரங்களை திணித்தபோது கிளர்ந்தெழுந்த தலிபான்கள் அதனை எதிர்த்துப் போரிட்டனர். அவர்களுக்கு உதவியாக அல் குவைதா களம் இறங்கியது. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் சகல உதவிகளையும் செய்து வந்தது.
தலிபான் அல் குவைதா ஆகியவற்றை அடக்குவதற்கு பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என விரும்பிய அமெரிக்கா அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அதற்கு பாகிஸ்தான் சகல உதவிகளையும் வழங்கியது. பாகிஸ்தானின் இப்போக்கு அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் குழுக்கள் அத்தனையையும் வெறுப்பேற்றின. அதன் விளைவாக பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.
முஷாரப்பை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற முனைப்புடன் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டன. முஷாரப்பை கொல்வதற்கு ஒன்பது தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்பது தடவையும் அவர் தப்பிவிட்டார்.
தனக்கு எதிராகச் செயற்படும் பெனாசிர், நவாஸ் ஷெரீப் இருவரையும் கட்டாயத்தின் பேரில் நாட்டை விட்டு வெளியேற்றினார் முஷாரப்.
நவாஷ் ஷெரீப்பை நாட்டை விட்டு வெளியேற்றியது தவறு என்று நீதிமன்றம் விடுத்த தீர்ப்பினையும் முஷாரப் மதிக்கவில்லை.
முஷாரப்பை எதிர்ப்பதற்காக நவாஸ் ஷெரீப்பும் பெனாசிரும் எடுத்த முயற்சிகளை அவ்வப்போது முஷாரப் முறியடித்து வந்தார்.
செம்மசூதி மீதான தாக்குதலில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்ற காரணங்களினால் முஷாரப்புக்கு எதிராக பாகிஸ்தானில் பேராட்டம் வெடித்தது. அப்போராட்டங்களை இராணுவத்தின் உதவியுடன் அடக்கி வந்தார் முஷாரப்.
பாகிஸ்தானில் இருந்து தனக்கு எதிராகப் போரõடும் ஆயுதம் ஏந்தியவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி உதவி செய்தது. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்ற விபரம் அமெரிக்காவுக்குத் தெரியாது. தனக்கு எதிரான தீவிரவாதம் பாகிஸ்தானில் வளர்வதற்கு முஷாரப் உதவி செய்கிறார் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் அவரை பதவியில் இருந்து இறக்குவதற்கு அமெரிக்கா சந்தர்ப்பம் பார்த்திருந்தது. தன்னை இறுதிவரை அமெரிக்கா காப்பாற்றும் என்று முஷாரப் நம்பி இருந்தார். அமெரிக்கா கைவிட்டதும் முஷாரப்பின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
ஜனாதிபதி இராணுவத் தளபதி என்ற இரட்டைப் பதவியில் சொகுசாக இருந்த முஷாரப் அதில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது ஜனாதிபதி என்ற உயர் பதவியை தக்க வைக்க விரும்பினார். ஜனாதிபதியாக இருந்த தான் இராணுவத் தளபதியாகி புதிய ஜனாதிபதிக்கு தலை வணங்க அவர் விரும்பவில்லை. இராணுவத்தில் தனக்கு விசுவாசமான கியானியை இராணுவத் தளபதியாக்கினார்.
முஷாரப் தன்னை காப்பாற்றுவார் என்று நவாஸ் ஷெரீப் நினைத்தது போன்று கியானி தன்னை காப்பாற்றுவார் என்று முஷாரப் நினைத்தார். நவாஸ் ஷெரீப்பை தான் முஷாரப் ஏமாற்றியது போன்று கியானி தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்த முஷாரப் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தியாவுடனான முஷாரப்பின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை. கார்க்கில் யுத்தத்தின் சூத்திரதாரி முஷாரப் தான் என்பது உலகறிந்த உண்மை. முஷாரப்புடன் ஒரு மேசையில் இருக்க மாட்டேன் என்று இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் கூறியதால் சார்க் மாநாடு ஒன்று ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதனையும் முஷாரப் நடைமுறைப்படுத்தவில்லை.
ஒன்பது ஆண்டு கால முஷாரப்பின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. முஷாரப்பை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒற்றுமைப்பட்ட எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் என்ற நாட்டைப் பற்றி இனிமேல் கவலைப்படப் போவதில்லை. தமது ஆட்சி வர வேண்டும் என்பதிலேயே பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டும் குறியாக இருக்கப் போகின்றன.
முஷாரப்பை எதிர்க்கட்சிகள் மன்னித்தாலும் தலிபான், அல் கொய்தா போன்ற இயக்கங்கள் அவரை மன்னிப்பதற்கு தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பாகிஸ்தான் இராணுவமும் உளவு அமைப்பும் முஷாரப்புக்கு பக்கத்துணையாக இருந்தன. அரசியல்வாதிகளாலும் இராணுவத்தாலும் கைவிடப்பட்ட முஷாரப்புக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இருக்காது என்பது அவருக்கும் நன்கு தெரியும். சவூதி அரேபியாவில் தஞ்சமடையும் சூழல் ஏற்படலாம்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தானின் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. சகல அதிகாரங்களையும் பிரதமரிடம் கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் அரசியல்வாதிகளின் விருப்பம்.
ஜனநாயக நீரோட்டத்தில் நீந்துவதற்கு பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் தயாராகி விட்டனர். அவர்கள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தால் இப்போது குறைந்திருக்கும் வன்செயல் மீண்டும் வெடிக்கும் நிலை உருவாகும்.
ஈராக், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகியவற்றுடனான உறவுகளே பாகிஸ்தானின் ஆட்சியில் இருப்பவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.
முஷாரப்பின் பதவி விலகலால் பாகிஸ்தானில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. முஷாரப்பை வீழ்த்திய நவாஸ் ஷெரீப்பும் சர்தாரியும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த முற்படும்போது முஷாரப் விட்ட தவறுகளை விடாது தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியை முன்னெடுத்தால் அவர்களின் ஆட்சிக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது.
அமெரிக்காவையும் அமெரிக்காவின் எதிரிகளையும் சமாளிப்பதென்பது இயலாத காரியம்தான். பாகிஸ்தானில் யார் ஆட்சி பீடம் ஏறினாலும் இரட்டை வேடம் போட வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ் 22 08 2008

Monday, August 25, 2008

அழகிரியை ஓரங்கட்டி முன்னேறுகிறார் ஸ்டாலின்




திராவிட முன்னேற்றக் கழக வாரிசுப் போட்டியில் பின்னடைந்திருந்த மு.கா. ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கழகத்தை வழி நடத்தி செல்பவர் ஸ்டாலின்தான் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. முதல்வரின் இன்னொரு மகனான மு.க. அழகிரியின் வரவினால் ஸ்டாலினின் இடம் கேள்விக்குறியானது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் செல்வி ஜெயலலிதாவும் முதல்வராவார்கள் என்பது வெளிப்படையானது.
விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் கட்சி ஆரம்பித்த பின்னர் அவர்களின் ஆதரவாளர் கள் தமது தலைவரை முதல்வராக்கும் கனவில் செயற்படுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸோ ஒருபடி மேலே போய் 2011 இல் பாட்டாளி மக்கள் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று சவõல் விடுகிறார்.
அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று இன்றுவரை யோசித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்கள் விளம்பரங்களில் அவரை முதல்வராக்கி அழகு பார்க்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஸ்டாலினுக்கு போட்டியாக கழகத்தில் எவரும் இல்லை. தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை கழகத்தின் மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஸ்டாலினுக்கு எதிராக அவரது குடும்பத்தில் இருந்தே ஒருவர் புறப்படுவார் என்று எவரும் நினைக்கவில்லை. முதல்வரின் இன்னொரு மகனான மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
அரசியலில் ஸ்டாலினின் செல்வாக்கு அளப்பரியது. அதேவேளை அழகிரியின் அன்புக் கட்டளைக்கு முதல்வர் மறுப்புத் தெரிவிப்பது குறைவு. மாறன் சகோதரர்களின் பிரச்சினை பெரிதாவதற்கு மு.க. அழகிரியும் ஆற்காடு வீரõசாமியும் தான் காரணம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.
மாறன் சகோதரர்களை மிக்க மூர்க்கமாக எதிர்க்கிறார் மு.க. அழகிரி. மதுரையில் அவரின் செல்வாக்கினால் மாறன் சகோதரர்கள் தலையெடுக்க முடியாது தவிக்கின்றனர். அழகிரியின் அதிகாரம் மதுரையில் கொடி கட்டிப் பறக்கிறது. மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட பின்னர் மாறன் சகோதரர்களின் வியாபார வலைப்பின்னல்கள் அங்கு முடங்கிப் போயுள்ளன.
மாறன் சகோதரர்களுக்கு எதிராக முதல்வரும் அழகிரியும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். கழகத்தில் உள்ள ஏனைய தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர். ஏனைய கட்சித் தலைவர்களைப் போன்று மாறன் சகோதரர்களை தாக்கிப் பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தயாராக இல்லை.
மு.க. அழகிரி அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியதால் ஸ்டாலினுக்கு சற்ற பின்னடைவு ஏற்பட்டது. அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் அவரை கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்துள்ளன.
ஸ்டாலினிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு முதல்வர் கருணாநிதி கட்சிப் பதவிகளில் ஆர்வம் காட்டப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடந்த மாநாட்டில் ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும் என்றும் இளைஞர் மாநாட்டின் போது தொண்டர்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்றும் பூடகமாக செய்திகள் வெளியாகின. ஆனால் இறுதியில் அவை எல்லாம் புஸ் வாணமாகி விட்டன.
தற்போது, ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைக்க முதல்வர் தயாராக இருக்கிறார், கழகத்தின் மூத்த தலைவர்கள் சிலரும் அழகிரியும் முட்டுக் கட்டை போடுகின்றனர் என்ற செய்தி அரசல் புரசலாக வெளி வருகின்றன. அதை உறுதிப்படுத்துவது போன்று கழகத்தினுள் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.தனக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து மௌனமாக இருந்த ஸ்டாலின் இப்போது சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டார். இதுவரை பல விடயங்களில் பட்டும் படாமலும் இருந்த ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்துவதற்குரிய காரியங்களை மளமளவெனச் செய்யத் தொடங்கிவிட்டார்.
தொண்டர்களை தேடி அலுவலகத்தில் சந்திக்காத ஸ்டாலின் தற்போது, தனது அறையில் இருந்தவாறே தொண்டர்களை அழைத்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கிறார். மனு கொண்டு வருபவர்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களை வாங்கி ஆறுதலாக சில வார்த்தைகள் பேசுகிறார். இவை எல்லாம் ஸ்டாலினின் போக்கில் ஏற்படும் மாற்றத்தை வெளிக் காட்டுகின்றன.
கட்சித் தலைமையகம் முதல்வர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கு தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார். அழகிரியின் அரசியல் பிரவேசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. எனவே முதல்வர் பதவியை ஸ்டாலினிடமும் கட்சித் தலைமையை அழகிரியிடமும் கொடுப்பதற்கு முதல்வர் தீர்மானித்துள்ளார் என்று செய்திகள் கசிந்தன. இதனை மறுத்து அறிக்கை எதனையும் முதல்வர் வெளியிடவில்லை.
அழகிரியை தலைவராக ஏற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களும் தொண்டர்களும் தயாராக இல்லை. அழகிரியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் தவறினால் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். அழகிரியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய பிரிவு ஒன்று ஏற்படும்.
அதனை நன்கு உணர்ந்துள்ள ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். அரசியல் விவகாரங்களில் அதிரடி செய்யாது அரசியலில் வளர்ந்து ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;10.08.2008

புதிய கூட்டணிக்குத் தயாராகும் தமிழக அரசியல் கட்சிகள்



இந்திய அரசியலில் ஏற்பட்ட புயல் எதுவித பிரச்சினையும் இன்றி முடிவடைந்தமையினால் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசு தப்பிப் பிழைத்தது. காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருத்திய இடதுசாரிகள் பறித்த குழியில் இருந்து சாமர்த்தியமாக இந்திய மத்திய அரசாங்கம் தப்பிவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கும், வாக்களிக்காமல் இருப்பதற்கும் பலகோடி ரூபா கை மாறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அரசும் தப்பிப்பிழைத்ததனால் மகிழ்ச்சியடைந்த தமிழக முதல்வர் கருணாநிதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸும் டில்லிக்குச் சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்விருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக டில்லிக்குச் சென்றதாகக் கூறப்பட்டாலும் இருவரும் தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தவே டில்லிக்குச் சென்றார்கள் என்பது வெளியில் தெரியாத ரகசியமான சங்கதி.
இதேவேளை, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறிவிட்டனர், தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போய்விட்டது என்று காங்கிரஸ் கட்சி நிம்மதியாக இருக்க முடியாது. இடது சாரிகளின் இடத்தை நிரப்புவதற்கு முலாயம் சிங் யாதவ், ஒமர் அப்துல்லா, சிபுசோரன் ஆகியோரின் கட்சியை இணைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது.
முலாயம் சிங் யாதவ், ஒமர் அப்துல்லா, சிபு சோரன் ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதனால் மத்திய அரசாங்கம் பலமடையுமே தவிர அதனால் தமிழக அரசுக்கு எந்த வகையான இலாபமும் கிடைக்காது.
தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. முலாயம் சிங் யாதவ் ஒமர் அப்துல்லா, சிபு சோரன் ஆகியோரின் கட்சிக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இல்லை. ஆகையினால் தமிழகத்தில் ஏற்படப்போகும் கூட்டணி பற்றிய முன்னோட்டத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி இருக்கலாம்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மத்தியில் உள்ள கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறி விட்டனர். இதேவேளை தமிழகத்தில் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் தொடர்ந்தும் இருக்கின்றனர்.
இடதுசாரிகளின் மீது தமிழக முதல்வர் நம்பிக்கை வைத்துள்ளார். தமிழக முதல்வருக்கு வழங்கும் ஆதரவை இப்போதைக்கு இடதுசாரிகள் விலக்கிக் கொள்ளமாட்டார்கள். ஆகையினால் தமிழக அரசுக்கு இப்போதைக்கு ஆபத்து எதுவும் ஏற்படப்போவதில்லை.
காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் மாற்றீடாக மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். மாயாவதி, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு, தேவகௌடா, ஓம்பிரகாஷ் சௌத்தாலா ஆகியோரை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். இந்தக் கூட்டணியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இணைந்தால் தமிழகத்தின் தி.மு.க. அரசாங்கத்துக்கு ஆபத்தானதாக அமையும்.
இந்தியப் பிரதமராகும் கனவு ஜெயலலிதாவுக்கு இருக்கின்றது. முன்பு ஒரு முறை மூன்றாவது அணி ஆரம்பிக்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு ஜெயலலிதா மிகவும் கடுமையாகப் பாடுபட்டார். மூன்றாவது அணியின் தலைவி போலவே அவர் செயற்பட்டார். பின்னர் மூன்றாவது அணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
மாயாவதி, சந்திரபாபு ஆகியோரும் பிரதமராகும் எண்ணத்தில் உள்ளனர். ஆகையினால், இந்தக் கூட்டணிக்குள் ஜெயலலிதா நுழைவது சற்று சிரமமானதாகும். மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் இடதுசாரிகள் கைகோர்க்க மாட்டார்கள். ஆகையினால் மூன்றாவது அணியை பலமானதாக்குவதற்கு இடதுசாரிகள் கடுமையாக முயற்சி செய்வார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்று முழக்கமிடும் டாக்டர் ராமதõஸ் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசி உள்ளார். தமிழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி ஏறிவதற்கு முயற்சி செய்யும் டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக உறுதிப்படுத்தும் பயணமாக டில்லிப்பயணம் அமைந்தது.
தமிழக அரசை எதிர்க்கும் கைங்கரியத்தில் விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் ஒரே வகையில் செயற்படுகிறார்கள். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இந்திய மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் போன்றவற்றை முன்னெடுத்தே விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் கட்சியை நடத்துகின்றனர். தமிழக அரசாங்கத்தை மிகவும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பட்டும் படாமலும் தமிழக அரசை எதிர்த்து வருகிறது. அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் டாக்டர் ராமதாஸும், விஜயகாந்தும் இணைவார்களா என்ற கேள்வியும் தமிழகத்தில் எழுந்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்து தோற்றுப்போன இடதுசாரிகளை தமிழக முதல்வர் கண்டித்தோ காரசாரமாகவோ விமர்சிக்கவில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரையும் அதன் செயற்பாடுகளையும் முதல்வர் காரசாரமாக விமர்சித்து வருகிறார்.
இடதுசாரிகளுடன் ஒத்துப்போவதற்கு முதல்வர் விரும்புகிறார். பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு முதல்வர் கொஞ்சமும் விரும்புகிறார் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இடதுசாரிகளை மீண்டும் காங்கிரஸுடன் இணைப்பதற்கான முயற்சியை முதல்வர் மேற்கொள்வார் போல் தெரிகிறது.
மத்திய அரசாங்கமும், தமிழக தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை. அணு ஒப்பந்த விவகாரம், சேது சமுத்திரத் திட்டம், விலை வாசி உயர்வுக்கு உரிய பரிகாரம் என்பனவற்றை ஒழுங்குபடுத்திய பின்னரே தேர்தலைச் சந்திக்கும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக்கழகமும் உள்ளன.
இடதுசாரிகளினால் தமிழக அரசாங்கத்துக்கு இப்போதைக்கு பிரச்சினை ஏற்படவாய்ப்பு இல்லை. அதேவேளை, தமிழக அரசை தூக்கி எறிவதற்கு சபதம் செய்திருக்கும் டாக்டர் ராமதாஸ் அதற்குரிய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
விஜயகாந்தை தமது பக்கம் இழுப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி, முயற்சி செய்கிறது. விஜயகாந்த் விரும்பினால் அவருடன் கூட்டுச் சேர்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலர் விருப்பப்படுகின்றனர். திராவிட முன்னேற்றக்கழகத்தை வெளியேற்றிவிட்டு விஜயகாந்தை சேர்க்கலாம் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை தமது கட்சியில் இணைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் காங்கிரஸை நம்பித்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் நகருகிறது.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;03.08.2008

Monday, August 18, 2008

பரபரப்பான அரசியலில் அமைதி காத்த அ.தி.மு.க.


ஒரு வாரமாக இந்திய அரசியலைக் கலக்கிக் கொண்டிருந்த பிரச்சினை ஒருபடியாக முடிவுக்கு வந்துள்ளது. மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தப்பிப் பிழைத்துள்ளது.
தனது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும், அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இடதுசாரிகளும் பாரதீயஜனதாக் கட்சியும் தீவிரமாக களமிறங்கின. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதற்கு எதிராக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் நேரத்துக்கு நேரம் மாறுபட்டன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழக்கவில்லை. அரசாங்கம் கவிழுமா? நிலைக்குமா? என்ற பரபரப்பு தமிழகத்திலும் எதிரொலித்தது. தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருந்ததனால் தமிழ் நாட்டின் பக்கம் காங்கிரஸ் கட்சி தனது நேரத்தை செலவிடவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க. வின் நான்கு நாடாளுமன்ற உறப்பினர்களில் இரண்டு பேர் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியையும் பகைத்துக்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அடுத்த சட்ட மன்றத் தேர்தல் அல்லது பொதுத் தேர்லின்போது பலமான எதிர்க்கட்சி ஒன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறாது என்பது புலனாகின்றது.
முதல்வரால் ஓரங்கட்டப்படும் தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தமிழகத்தில் பரவலாக எழுந்தது. காங்கிரஸை எதிர்த்து தயாநிதி மாறன் வாக்களிக்க மாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டும் தயாநிதி மாறன் நடுநிலை வகிக்கப் போகிறார், வாக்களிக்க மாட்டார் என்று பரவலாக செய்திகள் கசிந்தன.
தயாநிதி மாறனை எதிர்ப்பவர்கள் இந்தச் செய்தியை பிரபலமாக்கினார்கள். இந்த வதந்தி உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளை பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டிய நிலைக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டார்.
தயாநிதி மாறனின் வீட்டில் நடந்த இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளமான பத்திரிகையாளர்களும் தயாநிதி மாறனின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். உணச்சிவசப்பட்ட தயாநிதி மாறனின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அரசியல் தலைவர் ஒருவர் ஓரங்கட்டப்பட்டால் அவருடைய ஆதரவாளர்கள் மிகக் கீழ்த்தரமான வாசகங்களைக் கூறி தமது தலைவனை ஒதுக்கிய அரசியல் தலைவரை வசைபாடுவது வழமை. தயாநிதி மாறனின் வீட்டில் கூடிய ஆதரவாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது முதல்வரையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய தயாநிதி மாறன் முதல்வர் மீதும் கழகத்தின் மீதும் தான் வைத்திருக்கும் நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தினார். அதேவேளை பெயரைக் குறிப்பிடாமல் அழகிரியை தாக்கிப் பேசினார். திராவிட முன்÷னற்றக் கழகத்துக்கு எதிராக அழகிரி செய்தவற்றையும் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைவதற்கு மு.கா. அழகிரி காரணமாக இருந்ததையும் தயாநிதி மாறன் நினைவுபடுத்தினார். இப்போதைக்கு முதல்வரை நெருங்க முடியாது என்பதை தயாநிதி மாறன் பட்டவர்த்தனமாகத் தெரிந்து கொண்டார்.
டில்லி அரசியல் உச்சக் கட்டத்தில் இருந்த போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தது. பாரதீய ஜனதாக் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்த ஜெயலலிதா எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தார். கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைத்தது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. தமக்கு வழங்கப்பட்ட பணத்தை சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் காட்டினார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் தான் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது என்று வட நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சேது சமுத்திரத் திட்டத்துக்கு வட இந்தியாவில் பலத்த எதிர்ப்பு இருப்பதனால் நம்பிக்கைத் தீர்மானத்துக்கும் சேது சமுத்திரத்துக்கும் முடிச்சுப் போட்டு தமது ஆதங்கத்தை வட நாட்டுப் பத்திரிகைகள் நிறைவேற்றியுள்ளன.
தமிழக பத்திரிகைகள் ஒரு படி மேலே போய் முதல்வரின் மகள் கனிமொழிக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது என்று கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் ஆதரவளித்த கட்சிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. ஒரு சில கட்சிகள் தமக்கு இந்தப் பதவி வேண்டும் என்று பேரம் பேசத் தொடங்கி விட்டன. தமிழகக் கட்சிகள் எவையும் பேரம் பேசியதாக தகவல் வெளியாகவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் தமிழக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸை எதிர்த்தால் தமிழக ஆட்சி ஆட்டம் காணும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நன்கு தெரியும். ஆகையினால் பேரம் பேச எதுவும் இன்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகம் வாக்களித்தது.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து விட்டது. இனி அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இடதுசாரிகள் ஆரம்பித்துள்ளன. பலமான ஒரு கூட்டணியை அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் திட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது.
கம்யூனிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சோம்நாத் சட்டர்ஜி மிகத் திறமையாக நாடாளுமன்றத்தில் செயலாற்றினார். சபாநாயகர் கட்சி சார்பானவர் என்பதை அவர் நிரூபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியின் உறுப்புரிமையினையடுத்து அவர் நீக்கப்பட்டார்.கட்சிக்குள் பல பிரச்சினைகள் இருந்தபோதும் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தை அகற்றிவிட வேண்டும் என்று இடதுசாரிகள் கங்கணம் கட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக காய் நகர்த்தும் இடதுசாரிகள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை. மத்திய அரசாங்கத்தை எதிர்க்கும் இடதுசாரிகளையும் எதிர்க்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளõர்.
காங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு மாற்றீடாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க இடதுசாரிகள் முயற்சி செய்கின்றனர். மூன்றாவது அணியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசாங்கத்தை கவிழ்க்க தருணம் காத்திருக்கும் ஜெயலலிதா சில வேளை மூன்றாவது அணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாங்கம் தப்பி பிழைத்து விட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சேர்ந்தால் தமிழக அரசாங்கம் ஆட்டம் காணும் சூழ்நிலை ஏற்பக.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;27.07.2008

தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் காப்பாற்றுமா?


காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் நீடிக்குமா இல்லையா என்ற முடிவு 22 ஆம் திகதி தெரிந்துவிடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்திருந்த இடதுசாரிகள் தமது ஆதரவை வாபஸ் பெற்றதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியை அரியாசனத்தில் இருத்தி அழகுபார்த்த இடதுசாரிகள், தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியது மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியை ஆட்சிபீடத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளன.
இடதுசாரிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் பக்கபலமாக உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காக பலமான கூட்டணி அமைப்பதில் எதிர்க்கட்சிகள ஆர்வமாக உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 260 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியில் 263 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற முடிவை இன்னமும் எடுக்காமல் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தினால் தான் இந்திய அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. இதேவேளை இந்த அரசியல் மாற்றத்துக்கு இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களான அம்பானி சகோதரர்களும் காரணம் என்றும் கூறப்படுகிறது. அம்பானி சகோதரர்களில் ஒருவர் காங்கிரஸை ஆதரிப்பதாகவும் இன்னொருவர் காங்கிரஸை ஆட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும் தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்தியப் பொதுத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நான்கு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டினால் திருப்திப்படாத மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அக்கூட்ட ணியிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணி வரிசைக்கும் போனார்கள்.
மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினையால் அக்கட்சியை விட்டு வெளியேறிய செஞ்சி ராமச்சந்தின், எல். கணேசன் ஆகிய இருவரும் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சங்கமமானார்கள்.
22 ஆம் திகதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எதிர்த்து வாக்களிப்பார்கள். அதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலத்தில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் தாம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்க்க உறுதி பூண்டுள்ளனர்.
ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் வைகோ தமது சகாக்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். காங்கிரஸை ஆதரித்தால் அவர்களின் நாடாளுமன்ற பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று வைகோ சொல்லியுள்ளார்.
செஞ்சி ராமச்சந்திரனும் எல். கணேசனும் தமது பதவியை காப்பாற்றுவார்களா? காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முயற்சிப் பார்களா என்பது மத்திய அரசு பெரும் பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போதுதான் தெரியவரும்.
ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் காடுவெட்டி குருவின் விடு தலைக்காக மறைமுகமாக பேரம்பேசுகிறது. காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டபோது மத்தியில் இருக்கும் தனது செல்வாக்கினால் அவரை வெளியே கொண்டுவந்துவிடலாம் என டாக்டர் ராமதாஸ் நினைத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடி காடுவெட்டி குருவை வெளியே கொண்டுவர முடியவில்லை.
டில்லியில் முதல்வர் கருணாநிதியின் செல்வாக்குக்கு முன்னால் டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு செல்லாக்காசாகி விட்டது. 22 ஆம் திகதிக்கு முன்னர் காடு வெட்டி குருவை விடுதலை செய்வது சிரமம், காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் நீடிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உதவி செய்தால் காடுவெட்டிகுருவைப்பற்றி பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டால் காடுவெட்டி குரு விடுதலையாவது சந்தேகம். அதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு அமைச்சர்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அமைச்சர்களே அரசுக்கு எதிராக
(தொடர்ச்சி 7 ஆம் பக்கம்)
வாக்களிப்பது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.
அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு எதிர்த்து வாக்களிக்கலாம்.
எனினும் அமைச்சு பதவி, காடுவெட்டி குருவின் விடுதலை ஆகிய இரண்டு காரணங்களினால் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றீடான கூட்டணியில் இடம் கிடைத்தால் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் எனக் கருதப்ப டுகிறது. மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சி அணி மாற சந்தர்ப்பம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஒதுக்கப்பட்ட தயாநிதிமாறன் நடுநிலை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். தயாநிதி மாறன் இது தொடர்பாக கருத்து எதனையும் வெளிப்படுத்தவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தயாநிதி மாறனின் மீது மதிப்பு வைத்துள்ளதால் அவர் எதிர்த்து வாக்களிப்பது சாத்தியமில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் மீள தக்க வைத்துக்கொள்வதற்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும். 12உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி பக்கம் சாய்வார்களா அல்லது காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறுவார்களா என்பது 22ஆம் திகதி தெரிந்துவிடும்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;20.07.2008

குழம்பிப் போயிருக்கும் கூட்டணிக் கொள்கைகள்



முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரையும் சுற்றியே தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் முதல்வர் கருணாநிதியும் எந்த ஜென்மத்திலும் இணையமாட்டார்கள். விஜயகாந்தை தம் பக்கம் இழுக்கும் இருவரும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தும் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்தின் கட்சியில் உள்ள சிலர் விரும்புகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும் விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்வதை விரும்புகிறார்கள்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி சேராது, விஜயகாந்த் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியாது. அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய முடியும்.
விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேரக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தனித்துப் போட்டியிட்டால் பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தில் வெற்றி ÷தால்வியை தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர். காங்கிரஸுடன் மல்லுக்கட்டி கூட்டணியில் இருந்து வெளியேறிய இடதுசாரிகள் தமிழகத்தில் கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் என்ற வில்லங்கமான கணக்குடன் தமிழகத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் தயாராகி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை மத்திய அரசில் இருந்து தூக்கி எறிய முயற்சி செய்த கம்யூனிஸ்ட்களை தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு மாற்றீடாக மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸுடன் இணைந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்ற உறுதியான முடிவுடன் முதல்வர் கருணாநிதி செயற்படுகிறார். மூன்றாவது அணியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை.
மூன்றாவது அணி பலமான அணியாக மாறினால் சிலவேளை திராவிட முன்னேற்றக்க கழகம் காங்கிரஸை விட்டு மூன்றாவது அணியில் இணைந்து விடும்.
தமிழக அரசியலின் வெற்றி தோல்வியை தீர்மானித்த கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தங்கள் பலத்தினை இழந்துள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் கவலையில்லை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவில் உள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தபோது தான் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் வெளியேறிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவுடன் இணைந்ததும் அமைதி காக்கிறது. தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிந்தும் வெளியேற முடியாத நிலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் வைகோ.
டாக்டர் ராமதாஸின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. தமிழக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக்கொண்டே எதிர்க்கட்சிபோல் தமிழக அரசாங்கத்தை விமர்சித்து அரசியல் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் ராமதாஸின் நடவடிக்கைகளைப் பொறுக்கமாட்டாத முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினார். காங்கிரஸ் கட்சி மத்தியஸ்தம் பேசி மீண்டும் கூட்டணிக்குள் தனது கட்சியை கொண்டு வரும் என்று டாக்டர் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், தமிழக அரசியலின் சாரதி முதல்வர் கருணாநிதி தான், அவர் எது கூறினாலும் சரிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கைவிட்டால் மூன்றாவது அணியில் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் தயாராக இருக்கிறார்.

வர்மா; வீரகேசரி வார வெளியீடு;17.08.2008

அணி மாறுவதற்குத் தயாராகும் தமிழக அரசியல் கட்சிகள்



அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திடுவதற்கு ஒப்புதலளித்ததனால் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்த இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டமை, பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான பேச்சாளரான காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்களினால் இந்திய அரசியலும் தமிழக அரசியலும் பரபரப்பாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதால் மத்திய அரசாங்கம் கவிழுமா? அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனது எஞ்சிய பதவிக் காலத்தை காப்பாற்றுமா? மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட்டால் தமிழகத்திலும் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பன தற்போதுள்ள கேள்விகள்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரை தாக்கிக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சேருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸுடனான கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி அமைப்பது என்ற சிக்கலில் திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பமாட்டா. ஆகையினால் கம்யூனிஸ் கட்சிகளை விட்டு காங்கிரஸின் பக்கம் போவதையே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பும்.
மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு போதும் இணையமாட்டா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க பாரதீய ஜனதாக் கட்சி ஆர்வமாக உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியா? கம்யூனிஸ்ட்களா? என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கேட்டால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட்களே என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறும்.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சதவீத வாக்குகளே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நான்கு சதவீத வாக்குகள் உள்ளன.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் இந்து மதத்தைத் தவிர ஏனைய மதத்தவர்களின் வாக்குகள் கிடைக்காது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மைச் சமுதாயங்களின் வாக்குகள் பெருமளவில் கிடைக்கும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தில் ஏனைய சிறு கட்சிகள் சிலவற்றுடன் இணையும் சாத்தியம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மாற்றீடாக புதிய கூட்டணியை அமைக்க காத்திருக்கும் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.
மத்தியிலும் தமிழகத்திலும் கூட்டணியில் ஏற்படும் மாற்றங்களினால் ஆதாயம் கிடைக்கக் கூடிய கூட்டணியில் சேர்வதற்கு சில கட்சிகள் இப்போதே தயாராக உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டிகுரு கைது செய் யப்படுவார் என்ற பேச்சு அண்மைக்காலத்தில் பரவலாக எழுந்தது. தமிழக முதல்வரையும் மத்திய அமைச்சரையும் தமிழக அமைச்சர்களையும் தரக் குறைவாகப் பேசியதற்காக காடு வெட்டி குரு கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக செய்தி வெளியானபோது "தமிழக அரசுக்குத் துணிவு இருந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும்' என்று காடு வெட்டி குரு சவால் விடுத்தார்.
காடு வெட்டி குருவின் அசிங்கமான பேச்சின் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றியது. கூட்டணியில் இருந்து வெளியேறி கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
காடு வெட்டி குருவின் பேச்சு கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவரை தட்டிக் கேட்காது உற்சாகப்படுத்தினார். அதன் விபரீதம் இன்று காடு வெட்டி குருவை சிறையில் அடைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரைக் கொலை செய்ய முயற்சித்ததாக காடு வெட்டி குரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றப் பிரமுகரான குணசேகரன் என்பவர் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் காரணமாகவே காடு வெட்டிகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.
குணசேகரன் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். முன்னாள் கட்சி சபை உறுப்பினரான இவர் முன்பு சாராய வியாபாரம் செய்து வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறிய இவர் இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளõர். சாராய வியாபாரத்தையும் கைவிட்டுள்ளார். குணசேகரனின் முயற்சியினால் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கட்சியில் இணைவதும் காடு வெட்டி குருவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு அம்பலவாணர் அரச கட்டளை கிராமத்தில் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியமை, 1997ஆம் ஆண்டு ஜெயங் கொண்டான் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அரசைப் பற்றி அவதூறாகப் பேசியமை, 2000 ஆம் ஆண்டு மேலூர் கிராமத்தில் பொலிஸ்மீது வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டியமை, 2005ஆம் ஆண்டு வீராணம் திட்டத்துக்கு எதி ராக நடந்த கூட்டத்தில் அதிகாரிகளை மிரட்டியமை, 2006ஆம் ஆண்டு ஜெயங்கொண்டத் தில் அதிகாரிகளை மிரட்டியமை, 2008 ஆம் ஆண்டு தன்னூரில் முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் செல்வம் வீட்டில் வெடிகுண்டு வீசியமை, 2008 ஆம் ஆண்டு அரியலூரில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராசா, தமிழக சட்ட மன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகியோரை மிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.
இதேவேளை, அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆண்டி மடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகி யோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் காடு வெட்டிகுரு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காடுவெட்டி குரு கைது செய்யப்பட வேண்டும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு பாட்டாளி மக்கள் கட்சி காய் நகர்த்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. ஆனால் காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதன் காரணம் தான் மாறிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களை தாக்கிப் பேசியதற்காக காடு வெட்டி குரு கைது செய்யப்படுவார் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக காடு வெட்டி குரு மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதனால் தமிழக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் புகார் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டிருந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியனவும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தி இருக்கும்.
காடுவெட்டிகுரு கைது செய்யப்பட்டது சரியானதே. ஆனால் காடு வெட்டி குருவைப் போன்று தரக்குறைவாகப் பேசும் ஏனையவர்களும் கைது செய்யப்பட்டு நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிலும் தரக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பேச்சாளர்கள் பலர் உள்ளனர். அவர்களின் அத்துமீறல் பேச்சுக்கு தமிழக அரசு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு; 13.07.2008

Sunday, August 17, 2008

பாகிஸ்தானைப் பதறவைத்த செம்மசூதித்தாக்குதல்




பாகிஸ்தான் அரசியலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது லால் மசூதி எனப்ப
டும் செம்மசூதி. பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் இந்த மசூதி மீது மிகுந்த
மதிப்பு வைத்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்தின் அருகே அமைந்த இந்த மசூதி
யின் உட்பகுதியில் பெண்களுக்கான இஸ்லாமியப் பள்ளியான ஜாமீயா அப்ஸா மத்ர
ஸாவும் ஆண்களுக்கான மத்ரஸாவும்அமைந்துள்ளன.
பாகிஸ்தானின் ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி என அனைவரும் செம்மசூ
திக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்துவந்தனர். செம்மசூதியில் இஸ்லாமியக்
கோட்பாடுகள் பற்றிய கல்வி போதிக்கப்படுகிறது.
புனிதப் போர் பற்றிய விரிவுரைகளுக்குசெம்மசூதி பிரபலமானது. மசூதியின் முன்னாள்
தலைவர் மௌலானா அப்துல் அஸாவின்உரைகள் இளைஞர்களையும் யுவதிகளை
யும் கவர்ந்திருந்தன.
ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்யாநுழைந்தபோது முஜாகிதீன்கள் கடும் போர்
புரிந்தனர். புனிதப் போருக்கான அழைப்புவிடுக்கப்பட்டது.
செம்மசூதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். 1990 ஆம் ஆண்டு
இறுதியில் மசூதியினுள் மௌலானா அப்துல்லா கொல்லப்பட்டார். மசூதியினுள்
நடைபெற்ற இக்கொலைக்கான காரணம்இதுவரை வெளிவரவில்லை. மௌலானா
அப்துல்லாவின் மகன்களான மௌலானாஅப்துல் அஸீஸ், அப்துல் ரஷீத் காலி ஆகி
யோர் செம்மசூதியை நிர்வகித்தனர்.ஷரீயா சட்டத்திற்கு செம்மசூதி முக்கியத்து
வம் கொடுத்து வந்தது. இஸ்லாத்துக்கு மாறானகொள்கைகளை களைவதில் செம்ம
சூதி முக்கிய பங்கு வகித்தது. ஜிஹாத் என்றபுனிதப் போருக்கு ஊக்கம் கொடுப்பதிலும்
செம்மசூதி முன்னின்றது.
2001 ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா மீதுஅல் கைதா தாக்குதல் நடத்திய பின்னர் பா
கிஸ்தான் அரசு ஜிஹாத்துக்கான ஆதரவிலிருந்து மெதுவாக விலகிக் கொண்டது.
பயங்கரவாதத்தை உலகில் இருந்து அடியோடு ஒழிப்பதற்கு அமெரிக்கா விடுத்த
அழைப்புக்கு பாகிஸ்தான் அரசு துணைபோவதை செம்மசூதி நிர்வாகம் விரும்ப
வில்லை. பாகிஸ்தானின் பழங்குடியினர்தமக்கென சில சட்ட திட்டங்களை வைத்துள்ள
னர். அவர்களின் சட்டங்கள் செம்மசூதியின் சட்டங்களுடன் ஒத்துப் போகின்றன.
பாகிஸ்தானில் உள்ள பழங்குடி மக்களுக்குஉதவி செய்வதில் செம்மசூதி முன்ன
ணியில் உள்ளது. பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடு
களில் தமது மதக்கோட்பாடுகளையும்பரப்புவதில் செம்மசூதி அதிக அக்கறை
கொண்டுள்ளது.


2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைöபற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள்
செம்மசூதியில் இருந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது
செம்மசூதியை சோதனையிட பாகிஸ்தான்இராணுவம் முயற்சி செய்தது. செம்மசூதி
யில் கல்வி கற்ற மாணவிகள் எதிர்த்துநின்று பாகிஸ்தான் இராணுவத்தைத் தடுத்தன
ர். பெண்களின் எதிர்ப்பினால் சோதனைமுயற்சியை பாகிஸ்தான் இராணுவம்
கைவிட்டது.





சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மசூதிகளை
பாகிஸ்தான் அரசு இடித்தது. அதனைஎதிர்த்து செம்மசூதி குரல் கொடுத்தது.
இடிக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும்கட்டிக் கொடுக்க வேண்டும் என செம்ம
சூதி எச்சரிக்கைத் தொனியில் வேண்டுகோள் விடுத்தது.
செம்மசூதியின் மீது அமெரிக்காவுக்கும்ஒரு கண் உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா,
இங்கிலாந்து, ஈராக் ஆகிய நாடுகளில்நடக்கும் பயங்கரவாத சம்பவங்களுடன்
அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாகஅமெரிக்கா கருதுகிறது.
முஷாரப்பைச் கொல்ல நடந்த பல முயற்சிகளின் பின்னணியில் செம்மசூதி இருப்ப
தாக பாகிஸ்தான் அரசு கருதுகிறது.செம்மசூதிக்கு அருகே உள்ள
காவலரண்ஒன்றின் மீது கடந்த 3 ஆம் திகதி தாக்குதல்
நடந்தது. காவலரணில் இருந்தவர்களும்பதில் தாக்குதல் நடத்தினார்கள். காவலர
ணைத் தாக்கியவர்கள் செம்மசூதிக்குள்அடைக்கலம் புகுந்தனர். காவலரணின் மீது
தாக்குதல் நடத்தியவர்கள் சரணடையவேண்டும் என்று இராணுவம் உத்தரவிட்டது.
இராணுவத்தின் உத்தரவை உதாசீனம்செய்தவர்கள் இராணுவத்தின் மீது துப்பாக்கி
ப் பிரயோகம் செய்தனர். இந்தச் சம்பவம்இராணுவத்தை இனங்கொள்ளச் செய்தது.
செம்மசூதியைப் பகைக்க பாகிஸ்தான்
அரசு என்றைக்குமே விரும்பியதில்லை.அங்கு நடைபெறுவதைத் தட்டிக் கேட்கவு
ம் முனைவதில்லை. இராணுவத்தினர்மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை சகித்துக்
கொள்ள முடியாத நிலையில் செம்மசூதியில் உள்ளவர்களை சணடையுமாறு பாகிஸ்தான்
அரசாங்கம் அறிவித்தது.பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிவித்தøல உதாசீனம் செய்த செம்மசூதித் தலை
வர் அப்துல் ரஷீட் இதனை ஏறறுக்கொள்ளாது சரணடைவதை விட உயிரைத்
துறப்பதே மேல் என்று சூளுரைத்தார். செம்மசூதி மீதான முற்றுகை நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தான்ஜனாதிபதி முஷாரப் பயனம் செய்த விமானத்
தின் மீது தாக்குதல் நடத்தப்ட்டது.அதிர்ஷ்டவசமாக விமானம் தப்பிவிட்டது.
இத்தாக்குதலுக்கும் செம்மசூதிக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால்,
செம்மசூதியைக் கைப்பற்ற ஜனாதிபதிமுஷாரப் உத்தரவிட்டார்.
இராணுவத்தின் கடைசி வேண்டுகோளையடுத்து செம்மசூதியில் இருந்தவர்
கள் சரணடைந்தனர். அப்துல் ரஷீட்டின்சகோதரரும் செம்மசூதியின் மதப் போதகரு
மான அப்துல் அஸீஸ் பெண்களைப்போன்று பர்தா உடை அணிந்து தப்பிச்
செல்ல முற்பட்டபோது இராணுவத்தினால்கைது செய்யப்பட்டார்.
"ஒப்பரேஸன் சைலன்ஸ்' என்ற பெயரில்செம்மசூதி மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்
பட்டது. எதிரி நாட்டுடன் போர் புரிவதுபோன்று இராணுவ டாங்கி, ஹெலிகொப்டர்
ஆகியவற்றின் உதவியுடன் செம்மசூதிமீதான தாக்குதல் நடைபெற்றது.
இராணுவ நடவடிக்கை ஆரம்பமாக முன்னர் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவி
கள் சரணடைந்தனர்.பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து மாண
வர்கள் போராடினார்கள். செம்மசூதியின்மதத்தலைவர் அப்துல் ரஷீட் காஸி சுட்டுக்
கொல்லப்பட்டதுடன் இராணுவ நடவடிக்கைமுடிவுக்கு வந்தது.
செம்மசூதி மீதான தாக்குதலில் 160 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்
துள்ளது. மரணமான மாணவர்களின்தொகை அதிகமாக இருக்கலாம் என்று கரு
தப்படுகிறது. செம்சூதி மீதான தாக்குதலும்தலைவர் அப்துல் ரஷீத் காஸி கொல்லப்பட்ட
தனாலும் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும்நாட்களில் அங்கு என்ன நடக்கும் என்பதை
அறிவதற்கு உலகம் தயாராக இருக்கிறது.
வானதி
மெட்ரோநியூஸ்
12 07 2007

Thursday, August 14, 2008

சர்ச்சையைக்கிளப்பியுள்ள



உலக அதிசயங்கள் ஏழு இருப்பதைஉலகமே ஒப்புக் கொண்டிருக்கையில் புதிய
உலக அதிசயங்களைத் தெரிவு செய்வதற்கான அறிவிப்பை இணையதளம் ஒன்று
2000 ஆம் ஆண்டு வெளியிட்டது. எஸ்.எம்.எஸ். மூலமும், இணையதளத்தின் மூல
மும் உலகில் உள்ள மக்களின் கருத்துக்கணிப்புக்கமைய புதிய உலக அதிசயங்கள்
அறிவிக்கப்படும் எனnew7wonders.com என்னும் இணையதளம் அறிவித்த
து.புதிய உலக அதிசயங்கள் பட்டியலிடப்போவதை அறிந்ததும் அதற்கு ஆதரவாகவு
ம் எதிராகவும் பல குரல்கள் ஒலித்தன.பாரம்பரிய மிக்க புராதன காலத்து கட்டடங்
களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ இதற்குஎதிர்ப்புத் தெரிவித்தது. உலக அதிசயங்
களைப் பாதுகாக்க வேண்டுமே தவிரஅவற்றை முதலாவது, இரண்டாவது எனப்
பட்டியலிடுவது தவறு என்ற கருத்துமேலோங்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகஎஸ்.எம்.எஸ். இணையதளம் என்பனவற்றின்
மூலம் போட்டிகள் நடைபெறுவதுசர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு எஸ். எம்.
எஸ். அனுப்புவதற்கு இரண்டு 2 ரூபா அறவிடப்படுவது வழமையானது என்றால் இப்
படிப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டுஎஸ். எம்.எஸ். அனுப்பினால் அதற்கு 10
ரூபா அறவிடப்படுகிறது.
ஆகவே இதில் உலக அதிசயங்களைப்பட்டியலிடுவதற்கு முதலிடம் கொடுக்கப்ப
டவில்லை. எஸ்.எம்.எஸ். இணையதளம்ஆகியவற்றின் மூலம் பெருந்தொகையான
பணம் சம்பாதிக்கும் முறையே நடைபெறுகிறது என இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்
கள் கூறினார்கள்.
இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்ப
டுத்தாது தனது குறிக்கோளில் கண்ணாகஇருந்தார் இதனை நடத்திய பெர்னார்ட்
வெப்பர். சுவிட்ஸர்லாந்து பூர்வீகத்தைச்சேர்த கனடா நாட்டவரான இவரின் முயற்
சியில் உலகில் உள்ள 77 புராதன சின்னங்கள் பட்டியலிடப்பட்டன.
புதிய உலக அதிசயங்களைப் பட்டியலிடும் போட்டி நடைபெறுவதாக அறிவித்த
இந்தியர் இதில் தாஜ் மஹால் இடம்பெறவில்øல என்று வருத்தம் தெரிவித்தனர்.
இந்தியரின் உணர்வுகளைக் கண்டுகொண்ட வெப்பர் 2004 ஆம் ஆண்டு தாஜ்
மஹாலுக்கு முன்னால் ஐஸ்வர்யாராயைநிறுத்தி புகைப்படம் எடுத்து அந்தப் பட்டிய
லில் தாஜ்மஹாலைச் சேர்த்தார்.
புதிய உலக அதிசயப் பட்டியலில் தாஜ்மஹால் இணைக்கப்பட்டதால் இந்தியர்கள்
குதூகலத்துடன் வாக்களித்தார்கள். இந்தியர்களின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட நிறுவன
ம் மதுரை மீனாட்சி அம்மன், குதுப் மினார்போன்ற சில கட்டடங்களையும் புதிய உலக
அதிசயப் பட்டியலில் இணைத்தது. இந்தியாவில் உள்ள புராதன கட்டடங்கள்
இணைக்கப்பட்டதும் வாக்களிப்பின்வேகம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
இணையதளத்தின் மூலம் வாக்களித்ததில்முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம்
எனக் கருதப்படுகிறது. இணையதளத்தைப்பாவிக்கத் தெரியாத ஒருவர் நெற்கபேக்குச்
சென்று உரிய பணத்தைக் கொடுத்து தான்விரும்பிய கட்டடத்துக்கு வாக்களிக்கக்
கூறும் போது அங்கிருப்பவர் வேறொரு கட்டடத்துக்கு வாக்களித்திருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டுபணம் சம்பாதிக்கும் இந்தப் போட்டியில்
சீனாவில் உள்ளவர்களும், இந்தியர்களும்அதிகளவில் கலந்துகொண்டார்கள்.
தனியார் நிறுவனம் நடத்திய இப்போட்டிøய உலகில் உள்ள எந்த ஒரு அரசாங்கமும்
அங்கீகரிக்கவில்லை. இது முழுக்க முழுக்கபணம் சம்பாதிக்கும் வழியே என்கிறார். ஆக்
ராவில் உள்ள வரலாற்று அறிஞரான பேராசிரியர் ஆர். நாத்.
புதிய உலக அதிசயப் பட்டியலுக்குஎதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் போட்டி
யில் பங்குபற்றுபவர்களின் தொகைநாளுக்கு நாள் அதிகரித்தது. 10 கோடி மக்கள்
வாக்களித்துள்ளார்கள்.இதில் வசூலான தொகையில் 75 சதவீதம்
கொம் நிறுவனங்களுக்கும், 10 சதவீதம்தொழில்நுட்பத்துறையினருக்கும் வழங்கப்
படும்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களினால்குண்டு வைத்து தகர்க்கப்பட்ட பர்மியான்
புத்தர் சிலையை இந்த வருமானத்தின்மூலம் அமைக்கப் போவதாக வெப்பர் ஏற்கன
வே அறிவித்துள்ளார்.புதிய உலக அதிசயங்கள் பற்றிய பட்டி
யல் வெளியிடப்பட்டதில் அந்தக் கட்டடங்கள்உள்ள நாடுகளின் மக்கள் குதூகலத்துடன்
உள்ளனர். உலகில் உள்ள சிலர் இதனால்சலிப்படைந்துள்ளனர் அவர்களில்
முக்கியமானவர்கள் எகிப்தியர்.எகிப்தில் உள்ள பிரமிட்கள் உலக அதிச
யம் மிக்கவை. அவை எப்படிக் கட்டப்பட்டன.அங்குள்ள மம்மிகளைப் பாதுகாப்ப
தற்கு எப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதை அறிவதற்கு இன்றும்
ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. புதியஉலகப் பட்டியலில் எகிப்து தெரிவு செய்யப்
பட்டதனால் எகிப்தியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எகிப்திய பிரமிட்கள் போட்டியின்றி தெரிவாகி உள்ளன என்று புதிய உலக அதிசயப்
பட்டியலை வெளியிட்ட ஏற்பாட்டாளர்கள்தெரிவித்துள்ளனர்.பிரான்ஸில் உள்ள ஈபிள்
டவர், இத்தாலியில் சாய்ந்த நிலையில்உள்ள பைஸா கோபுரம், அமெரிக்காவின்
சுதந்திர தேவி சிலை என்பன உலக அதிசயப் பட்டியலில் இல்லாததால் அந்த நாட்டு
மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.புதிய உலக அதிசயங்கள் என்ற பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தப்
பட்டியலினால் யாருக்கும் எந்த நன்மையும்இல்லை. பரீட்சையிலோ அல்லது பொது
அறிவுப் போட்டியிலோ புதிய உலக அதிசயப் பட்டியலைக் கூறி புள்ளிகளைப் பெற
முடியாது. யுனெஸ்கோவும் உலக நாடுகளும் அங்கீகரிக்காத வரை இவை ஏட்டுச்
சுரைக்காயாகவே இருக்கும். புதிய உலகஅதிசயப் பட்டியல் வெளியிடப்பட்டதால்
பழைய உலக அதிசயங்கள் இல்லாமல்போகவில்லை. அவற்றின் மதிப்பு இன்னும்
எட்டு மடங்கு கூடியுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 உலக
அதிசயங்கள் பற்றிய விவரங்கள், அதன்பெருமைகள் வருமாறு
முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல்மனைவி மும்தாஜ் நல்லடக்கம் செய்யப்
பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பளிங்குமாளிகைதான் தாஜ் மஹால். கட்டிட கலை
யின் சிறப்பையும் காதலின் சிறப்பையும்பறைசாற்றிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது.
1632 ஆம் ஆண்டு இந்தக் காதல்மாளிகை கட்டும்
பணி தொடங்கியது.1648 ஆம் ஆண்டில்இந்த பணி முடிவடைந்தது.
தாஜ்மஹாலை வடிவமைத்தவர் யார் என்பதில் சர்ச்சை நிலவுகிறது. என்றாலும்
உஸ்தாத் அகமதுலகாரி என்பவருக்குதாஜ்மஹாலை வடிவø
மத்ததில் முக்கியபங்கு உள்ளது. ஏற்கனவே உலக அதிச
யங்களில் ஒன்றாகஇடம்பெற்ற தாஜ்மஹால் மீண்டும் அதே
பெருமையை தக்கவைத்துக் ண்டுள்ளது
.உலக அதிசயங்கள்பட்டியலில் இடம்பிடித்துள்ள ரோமன்
கொலோசியம் முன்பு"பிளாவியன் அரங்கு' என்று அழைக்கப்
பட்டு வந்தது. இத்தாலியின் ரோம் நகரின்மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த
கொலோசியமும் கட்டிடக் கலையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக் காட்டு.
வீர விளையாட்டுக்களுக்காக இந்தஅரங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 50
ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாள்சண்டை போன்றவற்றை பார்த்து வந்தனர்.
கி.பி. 70 72 ஆம் ஆண்டில் வெஸ்பாசியான் என்ற மன்னரால் இது கட்டப்பட்டது.
ரோம் சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்ட பெரியகட்டிடம் இதுதான். கி.பி. 80 ஆம் ஆண்டில்
"டைட்டஸ்' என்ற மன்னர் காலத்தில் இந்தக்
கட்டிடம் கட்டும் பணி முடிவடைந்தது.டொ மிஷியான் என்ற மன்னர் காலத்தில்
இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.இப்போதும் அந்த மண்டபத்துக்குள் பல்
வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.சிசன் இட்சா பிரமீடு மெக்சிகோவின் யுகாதான்
தீபகற்ப பகுதியில் அமைந்துள்ளது.மாயா மக்களின் நாகரீகத்தையும் தற்கால
மெக்சிகோ நாகரீகத்தையும் கட்டிட கலைநுட்பத்தையும் வெளிப்படுத்தும் பிரமிடு
இது. இந்த பிரமிடுக்குள் இருந்த சில சிற்பங்கள் எரிந்து நாசமாகி விட்டது.
மாயபான் பகுதியில் இதேபோல் இன்னொரு பிரமிடை அமைத்துள்ளனர். ஏராள
மான சுற்றுலா பயணிகள் தினந்தோறும்பார்த்து செல்கிறார்கள்.
மெசுபிச்சு என்பது ஒரு பழங்கால அதிசயநகரம். பல நூற்றாண்டுகளாக இந்த அழகிய
நகரின் பெருமை வெளி உலகுக்கு தெரியவில்லை. தென்னாபிரிக்க நாடான பெரு
நாட்டின் மலைப் பகுதியில் அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 7970 அடி உய
ரத்தில் இது அமைந்துள்ளது.1911 ஆம் ஆண்டு ஹிராம் பிங்காம் என்ப
வர் இதன் பெருமையை உணர்த்த அதிககவனம் செலுத்தினார். இடிந்து போன கட்டிடங்
கள் கூட இயற்கை எழில் குறையாமல்உள்ளது.
புதிய உலக அதிசயங்களில் ஒன்றாகரெடிமர் ஏசு சிலை பிரேசில் நாட்டின் கார்
கோவடோ மலைப் பகுதியில் அமைந்துள்ளது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 12 ஆம் திகதி இந்த பிரமாண்ட ஏசுசிலை திறந்து வைக்கப்பட்டது. பிரான்சு
நாட்டு சிற்பி பால் லாண்டோவ்ஸ்கி என்பவர் இதை உருவாக்கினார். இன்றுவரை
அந்த சிலையில் சில மாற்றங்கள், புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாது
காத்து வருகின்றனர். இப்போது அந்த சிலையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.


உயரமான அந்த சிலையின் பாதம் வரைசெல்ல நகரும் படிக்கட்டுகளும் இப்போது
அமைக்கப்பட்டுள்ளன. 220 படிக்கட்டுகளிலும் சுற்றுலா பயணிகள் ஏறுவது மிகவும்
கடினம் என்பதால் இந்த ஏற்பாடு.ஜோர்டான் நகரில் உள்ள மலைப் பகுதிகளுக்கு
இடையே அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் இது. அராபத் பகுதியில் அகாபா கடீலா
முதல் மரணக் கடல் வரை உள்ள பகுதிபெத்ரா. இங்குள்ள பாறைகளை குடைந்து
அழகிய சிற்பங்களையும் கட்டிடங்களையும்அமைத்துள்ளனர். இதுவும் சிற்பக் கலை
யின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.இந்த கட்டடங்களில் பல கருவூலமாகவு
ம் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்ட கஜானாவாகவும் செயல்பட்டு வந்தன. சிவப்பு
ரோஜா நகரம் என்றும் இதை அழைத்து வந்தனர்.
உலக அதிசயங்கள் பட்டியலில் மீண்டும்இடம்பிடித்துள்ள சீன பெருஞ்சுவர் அந்த
நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. வெறும் கற்களாலும் மண்ணாலும்
அமைக்கப்பட்ட அந்த சுவர் வடக்கு பகுதியின் பாதுகாப்பு அரணாக கட்டப்பட்டது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம்நூற்றாண்டு வரை அதில் புதுப்பிக்கும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி 200ஆம்ஆண்டின் சீனாவின் முதலாவது சக்கர
வர்த்தி கின் சி ஹிவாங் புதிதாக சிலபணிகளை மேற்கொண்டார்.
பண்டைய உலக ஏழு அதிசயங்கள்
1. எகிப்து மன்னர் பாரோகூபுவின் சமாதி
அடங்கியுள்ள கிஸாபிரமீட்.
2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த
தொங்கும் தோட்டம்.
3. ஆர்ட்டிமிஸ் கோவில்
4. ஒலிம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ்
கடவுளின் சிலை.
5. மாசோலஸ் மசோலியம்
6. ரோட்ஸ் சிலை
7. அலெக்சாண்டரியா கலங்கரை
விளக்கம்.
உலக அதிசயங்கள்
பிரிட்டனின் ஸ்டோன் ரென்ஞ்
இத்தாலி கொலோஸியம்
சீனப்பெருஞ் சுவர்
சீனாவின் போர்பெலன்ஸ்கோபுரம்
துருக்கி ஹாக்கியா சோபியா
பைஸா சாய்ந்தகோபுரம்
எகிப்தின் கடகொம்போஸ்
புதிய உலக அதிசயங்கள்
தாஜ்மஹால் இந்தியா
சிஜன் இட்ஷாபிரமிட் மெக்ஸிகோ
ரெடிமர் ஏசு சிலை பிரேஸில்
சீனப் பெருஞ்சுவர் சீனா
மெசுபிட்சு பெரு
பெத்ரா ஜோர்தான்
ரோமன் கொலேõசியம் இத்தாலி.
ரமணி
மெட்ரோநியூஸ் 12 07 2007

Sunday, August 10, 2008

இந்தியாவை அச்சுறுத்தும் பயங்கரவாதம்

பெங்களூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்தவாரம் நடந்த குண்டு வெடிப்புகளால் இந்தியா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் நடைபெற்ற மிகப் பயங்கரமான தொடர் குண்டு வெடிப்புகளாக இவை கருதப்படுகின்றது.
பெங்களூர், அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து உஷாரான இந்திய பொலிஸார் சூரத்திலும் தமிழகத்திலும் நடைபெற இருந்த தொடர் குண்டு வெடிப்புகளைத் தடுத்துள்ளனர்.
சூரத்தில் இரண்டு வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரமான குண்டுகளுமம் அவற்றை இயக்குவ தற்கு பயன்படும் பொருட்களும் கைப்பற்றப் பட் டன. தமிழகத் தில் குண்டுக ளுடனும் பயன்

படுத்தப்படும் கருவிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுகளை பொருத்துவதில் நிபுணத்துவம் மிக்க
ஒருவர் சரணடைந்துள்ளார்.
சென்னையில் கைது செய்யப்பட்டவரின் பெயர் அப்துல் கபூர். அவருக்கு வெடிகுண்டுகளை செய்வது பற்றிய பயிற்சியை சென்னை புழல்
சிறையில் ஆயுள்தண்டனை பெற்று வரும் அலி அப்துல்லா என்பவர் வழங்கி இருந்தார்.
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் அலி அப்துல்லாவிடம் ஒரே நேரத்தில் இரண்டு சிம் காட்டுகளைப் பயன்படுத்தி உரையாடக் கூடிய நவீன தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு லக்ஷர் இ தொய்பா, சிமி, ஹீதிஜி ஆகிய இயக்கங்கள் தான் காரணம் என்று இந்தியப் புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிடும். இந்த இயக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கங்கள்மறைமுகமாக இயங்கி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் இந்த இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை.ஹஸ்புத் தஹிரீன் என்ற இயக்கமே இக் குண்டு வெடிப்புகளை நடத்தியது என்று புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனை கிலாபத் இயக்கம் என்று அழைக்கிறார்கள். உலகளாவியரீதியில் நபிகள் நாயகத்தின் பெயரால் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிலாபத் இயங்கி வருகிறது.
இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் இந்த இயக்கம் உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது விரைந்து உதவும் என்று கூறப்
படுகிறது. இங்கிலாந்து,
அமெரிக்கா, பாகிஸ்தான்
உட்பட சுமார் 50 நாடுகளில் கிலாபத் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின்
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொலை செய்தது லண்டனில் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் ஆகியவற்றுக்கு கிலாபத் இயக்கமே காரணம் என்று விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் தமது கொடூரமான செயல்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் அதனைத் தடுப்பதும் இயலாத காரியமாக உள்ளது.
அஹமதாபாத் குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் பத்திரிகை அலுவலகங்களுக்கும் பொலிஸாருக்கும் ஈ மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஈமெயில் தகவல்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்வதற்கு முன்னர் தொடர் குண்டுகள் வெடித்து தமது அகோரத்தை வெளிப்படுத்திவிட்டன.
ஈமெயில் அனுப்பப்பட்ட
முகவரிக்குரிய அடுக்குமாடி
குடியிருப்பின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அதிர்ந்து விட்டனர். அந்த முகவரியில் அவர்கள் தேடிச் சென்ற தீவிரவாதி இருக்கவில்லை. அந்த வீட்டில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் குடியிருந்தார். அவரது ஈமெயில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருடப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
பெங்களூர், அஹமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் உள்ளன.
கோவை தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட இந்திய உளவுத்துறை அடுத்து நடைபெறவிருந்த பல சதித் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது. தீவிரவாதிகள் அடங்கிவிட்டார்கள். அவர்கள் இனி தலையெடுக்கமாட்டார்கள் என்று உளவுத் துறை கணித்திருந்த வேளையில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று இந்திய உளவுத்துறைக்கு சவால்விட்டுள்ளது.
இந்திய உளவுத்துறையின் ஆள் பற்றாக்குறையே பயங்கரவாத நடவடிக்கைகள் தலை தூக்க காரணமாக உள்ளதென்று தெரியவருகின்றது. ஆள் பற்றாக்குறை காரணமாக பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாது இருப்பதாக ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 வருடங்களில் பல
குண்டு வெடிப்புகள் நடை
பெற்றுள்ளன. கோவை தொடர் குண்டு வெடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு, இந்திய
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய குண்டு வெடிப்புகளுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தான்
காரணம் என்று கூறப்பட்டதே தவிர உண்மையான
குற்றவாளிகள் கண்டு
பிடிக்கப்படவில்லை.
இந்திய அமெரிக்க அணு
ஆயுத ஒப்பந்தத்தின் விளைவே இக்குண்டு வெடிப்புகள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள்
மீது நடைபெற்ற தாக்குதல்களின் பழி வாங்கல் இது
என்பது வெளிப்படையானது.
இந்தியாவின் மத்திய பிரதேசமான போபாவில் தான் லொபத் இயக்கத்தின் தலைமை யுகம் இயங்குவதாக இந்திய உளவுத் துறை சந்தேகப்படுகிறது. இந்தியாவில் இந்த இயக்கம் கால் பதித்துள்ளதால் இந்திய உளவுத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ் 01 08 08

Friday, August 1, 2008

பாரதிரஜாவின் கனவு 2

இளையராஜாவின் தமிழ் சினிமா இசையமைப்பாளர் என்ற கனவு நினைவாகும் வேளையில் மின்தடை ஏற்பட்டது. சக கலைஞர் ஒருவர் நல்லசகுணம் என்று நக்கலடித்தார். மின்சாரம் வந்ததும் ரிகேசல் ஆரம்பமாகியது.

இளையராஜா இசையமைத்த பாடல் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டதை போட்டுப் பார்த்தார்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், என ஐந்து நிமிடங்கள் கழிந்த பின்னரும் இளையராஜாவின் இசை கேட்கவில்லை. அப்போது தான் தெரிந்தது ரெக்கோட் ஆகவில்øல என்ற விபரம்.

சற்றும் மனம் தளராத இளையராஜா மீண்டும் தனது கடமையை ஆரம்பித்தார். ஒலிப்பதிவில் திருப்தி இன்மையால் மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு நடைபெற்றது. பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் வெறுத்துப் போய் வெளியேறிவிட்டனர். பஞ்சு அருணாசலம் பொறுமையுடன் காத்திருந்தார். 12 ஆவது முறை செய்யப்பட்ட ஒலிப்பதிவு திருப்தியளித்தது. பல தடை
களுக்கு மத்தியில் இளையராஜாவின் இனிய இசை வெளிவந்தது.

தமிழ் சினிமா இசையில் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்திய பெருமைக்குரியவராக இளையராஜா நோக்கப்பட்டார். அன்னக்கிளி படப் பாடல்களில் மிகச் சிறந்தது எது எனக் கேட்டால் எவராலும் பதிலளிக்க முடியாது. பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன. இளையராஜாவின் இசை தமிழ்த் திரை உலகை கட்டிப்போட்டது. அன்னக்கிளி படத்துக்கு மிகவும் அருமையாக இசை அமைத்த இளையராஜா தன்னைத்தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காது தனது குருவான ஜி.கே. வெங்கடேஷிடம் சென்று அவருக்கு உதவியாளராக கடமையாற்றினார்.

இளையராஜாவின் அன்பு நண்பனான பாரதிராஜாவுக்கு திரைப்படம் இயக்க சந்தர்ப்பம் கிடைத்தது. 16 வயதினிலே என்ற அப்படத்துக்கு யார் இசையமைப்பது என்று தயா
ரிப்பாளரான ராஜ்கண்ணு கேட்டபோது எனது நண்பன் இளையராஜாதான் இசையமைப்பான் என்று கூறினார் பாரதிராஜா. தமிழ்த் திரை உலகில் இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலம். இளையராஜாவைச் சந்திப்பதற்கே மிகவும் கஸ்டமான நேரம் தனது படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்பதைக் கேள்விப்பட்ட ராஜ்கண்ணு மிகவும் சந்தோஷப்பட்டார்.
பாரதிராஜாவும், ராஜ்கண்ணுவும் இளையராஜாவைச் சந்திக்கச் சென்றனர். தனது படத்துக்கு
இசையமைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டதும் எனது சபதத்தை மறந்து விட்டாயா. என்னால் இசையமைக்க முடியாது எற்றார் இளையராஜா.

பாரதிராஜாவின் முதலாவது படத்துக்கு இளையராஜாவின் குருவான ஜி.கே. வெங்க
டேஷ் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்கு ஜி.கே. வெங்கடேஷின்
வேண்டுகோளின் பிரகாரம் நான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறியிருந்தார். இளையராஜா சும்மாதான் சொல்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். இறுதியில் ஜிகே. வெங்கடேஷின் அதட்டலின் பின்னரே பாரதிராஜாவின் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டார்.


16 வயதினிலே படத்தின் கதாநாயகனாக சிவகுமாரைப் போடலாம் என ராஜ்கண்ணு
கூறினார். கமல்தான் பொருத்தமாக இருப்பார் என்று பாரதிராஜா கண்டிப்பாகக் கூறிவிட்டார். கமலின் நடிப்பு 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.


ரமணி
மித்திரன் 30 06 2007

பாரதிரஜாவின் கனவு 1

சென்னைத் தெருக்களில் அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் பாரதிராஜாவும், இளைய
ராஜாவும் அடக்கம். "மயில்' என்ற திரைக்கதைய உருவாக்கிய பாராதிராஜா அதனை
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கழகம் சிறந்த
திரைக்கதைகளுக்கு நிதி உதவி செய்து வந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு
அனுப்பிய விண்ணப்பப்படிவத்தில் கதை இயக்கம் பாரதிராஜா, கமரா நிவாஸ்,
இசை ராஜா என்று குறிப்பிட்டிருந்தார். ராஜா வேறு யாருமல்ல அவர் தான் இளைய
ராஜா.

நிதி உதவி கிடைக்கும். படம் வெளியாகும். அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் தேடிவ
ருவார்கள் என்று பாரதிராஜா காத்திருந்தார். அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
அவருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. தெலுங்கு இசையமைப்பாளரான பெண்டி
யாலா சீனிவாசன் என்பவர் "பட்டாம்பூச்சி' என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகப்
பணிபுரிந்துவந்தார். மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உதவி இசைய
மைப்பாளராகப் பணி புரிந்த கோவர்த்தன் பட்டாம் பூச்சிக்கு உதவியாளராக பணிபுரிந்தார்.

அந்தப் படத்தில் ஓர்கன் வாசிப்பதற்காக இளையராஜாவையும் அழைத்தார் கோவர்த்தன்.
இளையராஜாவின் இசையில் மயங்கிய கோவர்த்தன்,இளையராஜாவுக்கு நிறைய சந்தர்ப்பம் கொடுத்தார். எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கு. இருவரும் இணைந்து இசையமைப்போம். கோவர்த்தன் ராஜா என்று டைட்டிலில்போடுவோம் என்று ஒரு நாள் கோவர்த்தன் இளையராஜாவிடம் கூறினார். இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

பிரபல திரைக்கதாசிரியரான செல்வராஜ் ஒருநாள் இளையராஜாவைத் தேடிவந்து ""டேய் ராஜா உனக்காக பஞ்சு அருணாசலம் சார் கிட்ட கதைத்திருக்கிறேன். வா போய்ப் பார்க்கலாம் என அழைத்துச் சென்றார். பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை செல்வராஜ் அறிமுகப்படுத்தினார்.

இசை அமைத்திருந்தா ஒரு பாட்டுப் படிச்சுக்காட்டு என்று பஞ்சு அருணாசலம் கேட்டார்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பாத்தீங்களா, சுத்தச்சம்பா ஆகிய மூன்று பாடல்களையும் மேசையில் தாளம் தட்டி படித்துக்காட்டினார் இளையராஜா. இளையராஜாவின் பாடலில் சொக்கிப்போன பஞ்சு அருணாசலம் "டியூன் நன்றாக
உள்ளது. இப்பநான் எடுக்கிறபடம் கொமெடிப்படம். நல்லகதை என்றால் உனது டியூன்
வெற்றி பெறும். நான் படம் தயாரித்ததால் நீதான் இசையமைப்பாளர் என்று கூறினார்.

இதே வசனத்தைப் பலமுறை கேட்டதால் இளையராஜா அதனைப் பெரிதாக எடுக்கவில்øல. வழமைபோல ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றினார் இளையராஜா. பஞ்சு அருணாசலம் கதைவசனம் எழுதிய மயங்குகிறாள் ஒரு மாது வெற்றி பெற்றது. ஒருநாள் மிக அவசரமாக வந்த செல்வராஜ் பஞ்சு அருணாசலம் அழைப்பதாகக் கூறி இளையராஜாவை, அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரையும் கண்ட பஞ்சு அருணாசலம், சொன்னாயா என்று செல்வராஜாவைக் கேட்டார். நீங்களே சொல்லுங்கள் என்று செல்வராஜ் கூறினார்.
செல்வராஜ் ஒரு கதை கூறினார். அருமையாக இருக்கு. நான் தயாரிக்கப்போகிறேன்.
நீதான் இசை அமைப்பாளர் என்று பஞ்சு அருணாசலம் கூறினார்.இளையராஜாவும்
சந்தோசப்பட்டார்.கோவர்த்தனும் தானும் இணைந்து இசை அமைப்பதாகக் கூறினார்.
கைராசி, பட்டணத்தில் பூதம் ஆகிய படங்களுக்கு கோவர்த்தன் தனித்து இசை அமைத்தி
ருந்தார். அதனைப்பஞ்சு அருணாசலம் விரும்பவில்லை.நான் இளையராஜாவுக்குத்தான்
சந்தர்ப்பம் கொடுக்கப்போகிறேன் என்றார்.தனது நிலைமையை கோவர்த்தனிடம்
கூறினார் இளையராஜா. இசையமைக்க சான்ஸ் கிடைப்பது மிகவும் கஷ்டம் .ஆகையினால் நீ தாராளமாக இசை அமை என்று கோவர்த்தனன் உற்சாக மூட்டினார்.

பஞ்சு அருணாசலத்தின் படத்துக்கு விஜயபாஸ்கர்தான் வழமையாக இசை அமைப்பார். விஜய பாஸ்கர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. பஞ்சு விஜய
பாஸ்கர் கூட்டணியைப் பிரிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் சஞ்சலப்பட்டு எதற்கு வீண் வம்பு எம்.எஸ்.விஸ்வநாதனைப் போடலாம் என்றார்கள். இளையராஜாதான் இசை அமைப்பாளர் என்பதில் பஞ்சு அருணாசலம் உறுதியாக இருந்தார்.

பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதுவார் என்று கூறினார்கள். கவிஞர் கண்ணதாசன் அவசரமாகச் சிங்கப்பூருக்குச் சென்று விட்டார். அவர் எப்போ வருவார் என்று கேட்டபோது பூஜை முடிந்தபின்னர்தான் வருவார் என்றார்கள். பாடல்களை தான் எழுதுவதாக பஞ்சு அருணாசலம் கூறினார். பூஜை முடிந்து பாடல்பதிவு ஆரம்பமாகும் வேளையில் கரண்ட் கட்டாகியது. இளையராஜாவுக்கு மனதில் இருந்த உற்சாகம் காணாமல் போனது. டோலக் வாசிப்பவர் நல்ல சகுனம் என்றார்.

ரமணி
மித்திரன் 23 06 2007

ஜொலிக்கப்போவதுயாரு?

உலகக் கிண்ண கிரிக்கட் திருவிழா ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. உலகக் கிண்ணம் எமக்கே என்ற இறுமாப்புடன் கிரிக்கட் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அவுஸ்திரேலிய அணி ஹட்ரிக் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோது இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவை அடித்துத் துவைத்துவிட்டன.

அவுஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற வெற்றி ஏனைய அணிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் 16 அணிகள் பங்குபற்றுகின்றன. ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு நாடுகளுக்கிடையேதான் கடும்
போட்டி நடைபெறும்.

உலகக் கிண்ணத்தை எந்த அணி வென்றாலும் தமது துடுப்பாட்டம் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க சில வீரர்கள் காத்திருக்கிறார்கள். டெண்டுல்கர், ஜயசூரிய,லாரா, ரிக்கி பொண்டிங், இன்சமாம், பிளேமிங், ஜக் கலீஸ், பிளிண்டொப் ஆகிய வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்களும் களத்தடுப்பாளர்களும் கொஞ்சம் அசந்தால் போதும் பவுண்டரிகளும் சிக்ஸரும் அவர்களின் கணக்கில் சேர்ந்து விடும்.

கிரிக்கட்டைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர்தான் அதிரடி நாயகன். நான்கு
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய சாதனையாளன். மகேந்திர சிங் டோனி, ட்ராவிட், கங்குலி, யுவராஜ் சிங் என இந்திய அணியின் துடுப்பாட்ட பட்டாளம் இருந்தாலும் சச்சினின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.



1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் 536 ஓட்டங்களும் 2003 ஆம்
ஆண்டு 628 ஓட்டங்களும் குவித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர்.
1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோது சச்சினின் தகப்பன் காலமாகிவிட்டார். சச்சின் இல்லாதபோது சிம்பாப்வேயுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. கென்யாவுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தகப்பனின் இறுதிக் கிரிகைகளின் பின்னர் கென்யாவுடனான போட்டியில் 140 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார் சச்சின்.

இங்கிலாந்து, இலங்கை ஆகியவற்றையும்வென்று சுப்பர் சிக்ஸுக்கு இந்தியா தகுதிபெற்றது. 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் நமீபியாவுக்கு எதிராக 153 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு எதிராக 98 ஓட்டங்களும், இலங்கைக்கு எதிராக 96 ஓட்டங்களும் அடித்தார் சச்சின்.

2005 ஆம் ஆண்டு எல்போ பிரச்சினையால் அவதிப்பட்ட சச்சின் மீண்டும் தனது
திறமையை நிரூபித்து வருகிறார். உலகக்கிண்ணப் போட்டியில் சச்சினின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்தது. இம்முறையும் அவர் தனது திறமையை நிரூபிப்பார்.

பந்துவீச்சாளராக அணியில் இணைந்து அதிரடி ஆட்டக்காரராக மிளிர்பவர் சனத்
ஜயசூரியா, களுவிதாரண, மஹேல ஜயவர்த்தன ஆகியோரும் இலங்கை அணியில் இருந்தாலும் ஜயசூரிய ஆட்டமிழக்கும்வரை எதிரணி வீரர்கள் பதற்றமாகவே இருப்பார்கள்.



1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக முதன் முதலாக களமிறங்கினார் ஜயசூரிய. பந்துவீச்சாளரால் எப்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகப்பிரகாசிக்க முடியும் என அனைவரும் கேள்வி எழுப்பினர். அன்றைய பயிற்சியாளர் வட்மோரின் எண்ணத்தை ஜயசூரியா பூர்த்திசெய்ததால் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றது.

ஸ்ரீகாந்த், சித்து ஆகியோருக்குப்பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக
களமிறங்கி அதிரடித் துடுப்பாட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ஜயசூரியா. 1996 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர், மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை முடக்கினார்.

2003 ஆம் ஆண்டு ஜயசூரியா தலைமையிலான இலங்கை அணி உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடியது. அரை இறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரைத் தேடி தலைவர் பதவி வந்தது. இப்போது மஹேல தலைமையிலான இலங்கை அணியின் நம்பிக்கை நாயகனாக உள்ளார் சனத் ஜயசூரிய.

நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இன்னொரு சாதனையாளர் பாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக். 1992 ஆம் ஆண்டு வசீம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கிண்ணத்தைப் பெற காரணமானவர் இன்ஸமாம். பாகிஸ்தான் நாட்டின் செல்லப் பிள்ளை.
இவர் ஆட்டம் ஆரம்பித்து ஐந்து ஓவர்களுக்குள் இவரை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் இல்லையேல் களத்தடுப்பாளர்களுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருப்பார். அதன்பின்னர் இவரது துடுப்பு சுழலிலும் பந்துகள் நாலா திசையும் பறக்கும். அடிக்கத் தொடங்கிவிட்டார் என்றால் அடங்கமாட்டார். இந்த உலகக் கிண்ணப் போட்டி இன்ஸமாமுக்கு இறுதிப் போட்டியாக இருக்கும் என்பதால் சிறப்பான ஆட்டத்தை இன்ஸமாம் வெளிப்படுத்துவார்.

உலகக் கிண்ணத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை பெற்று சாதனை படைத்து
மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 1983 ஆம் ஆண்டின் பின்னர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை. அதிரடி வீரர் லாராவின் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குகிறது.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் லாரா முதன் முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினார். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை அணியை அழைத்துச் சென்றார் லாரா. இம்முறை தனது துடுப்பாட்டத்தின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதுடன் மேற்கிந்தியத் தீவுகள் கிண்ணத்தைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் லாரா.

அவுஸ்திரேலிய அணி என்றதும் சாதனையின் சொந்தக்காரர்கள் பலர் கண்முன்னே வந்து போவார்கள். ரிக்கி பொண்டிங்கின் தலைமை அணிக்கு உரமாக உள்ளது. மூன்றாவது முறை கிண்ணத்தை வென்ற அணி அவுஸ்திரேலியா. தொடர்ச்சியாக இரண்டுமுறை கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா இம்முறையும் வென்றால் ஹட்ரிக் சாதனை படைக்கும். ரிக்கி பொண்டிங் அதிரடியில் இறங்கினால் ஹட்ரிக் சாதனை அதிக தூரத்தில் இல்லை. இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிடமும் அடிவாங்கிய அவுஸ்திரேலியா கொஞ்சம் நொந்து போயுள்ளது. பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழும் வல்லமை அவுஸ்திரேலிய அணிக்கு உண்டு.

அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைகளுடன் உள்ளார் நியூசிலாந்து அணியின் பிளெமிங். இளம் வீரர்களுடன் இணைந்த நியூசிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளார்.

பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு மூன்றிலும் சம அளவில் கலக்குபவர் தென்னாபிரிக்க அணியின் ஜக் கலீஸ். தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டி நடைöபற்றபோது முதல் சுற்றிலிருந்து அந்த அணி வெளியேறியது. இம்முறை அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் செல்லவேண்டும் என்ற முடிவில் வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறுகின்றனர். அதிர்ஷ்டமில்லாத தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த அற்புதமான வீரர் ஜக் கலீஸ். அவருடைய விளையாட்டைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இங்கிலாந்தின் அதிரடி நாயகன் பிளிண்டொப். ஏனைய வீரர்களை விட தான் என்றும் குறைந்தவர் அல்ல என்பது தனது துடுப்பாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணி தோல்வியுற்றாலும் பிளின்டொப் தோல்வியடைய மாட்டார்.

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 3 1 என்ற கணக்கிலும் இலங்கையுடனான போட்டியில் 2 1 என்ற கணக்கிலும் வெற்றிபெற்ற இந்திய அணி நம்பிக்கையுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ளது.

ஆஷஷ் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தாலும் கொமன்வெல்த் கிண்ணத்தை கைப்பற்றிய நம்பிக்கையுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமானது இங்கிலாந்து. இங்கிலாந்தைவிட நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது நியூசிலாந்து.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 1என்ற வெற்றிக் கணக்குடன் உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ளது தென்னாபிரிக்கா. இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியநாடுகள் 300 ஓட்டங்களைக் கடந்தன. நியூசிலாந்து அணி இரண்டு முறை 350 ஓட்டங்களைக் கடந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்த அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்கள் அடித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியும் சளைக்காது 8 விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்கள் அடித்தது.இன்னொரு போட்டியில் இந்திய அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 341 ஓட்டங்கள் அடித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 181 ஓட்டங்கள் மட்டும் அடித்தது. அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 343 ஓட்டங்கள் அடித்தது. நியூசிலாந்தும் சளைக்காது ஐந்து விக்கட்டுகளை இழந்து 335 ஓட்டங்கள் அடித்தது.அவுஸ்திரேலியாவில் நடந்த இன்னொரு போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி ஏழு விக்கட்டுகளை இழந்து 318 ஓட்டங்கள் அடித்தது. இங்கிலாந்து 260 ஓட்டங்கள் அடித்தது.

நியூசிலாந்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 375 ஓட்டங்கள் அடித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நான்கு விக்கட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை அடித்தது.

இன்னொரு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆறு விக்கட்டுகளை இழந்து 346 ஓட்டங்கள் அடித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடியநியூசிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 350ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு 100 ஓட்டங்கள் அடித்தவர்கள்
பொண்டிங் 111, 104 அவுஸ்திரேலியா
சந்தர்போல் 149 ஆ.இ. மேற்கிந்தியத் தீவுகள்
சச்சின் 100 ஆ.இ. இந்தியா
ஹெய்டன் 117, 181 அவுஸ்திரேலியா
ஜொய்சி 107 இங்கிலாந்து
ஓரம் 101 ஆ.இ. நியூசிலாந்து
சங்கக்கார 110 இலங்கை
கொலிங்வுட் 120 ஆ.இ. இங்கிலாந்து
மக்மிலன் 117 அவுஸ்திரேலியா
சாமரசில்வா 107 ஆ.இ. இலங்கை
ஹஸே 105 அவுஸ்திரேலியா
டெய்லர் 115 நியூசிலாந்து

சதத்தை தவற விட்டவர்கள்
கங்குலி 98 இந்தியா
ஹட்ஜ் 99 ஆ.இ. அவுஸ்திரேலியா
வின்சென்ட் 90 நியூசிலாந்து
யுவராஜ் சிங் 95 இந்தியா

ரமணி
மெட்ரோநியூஸ் 08 03 2007