Showing posts with label ஆசியக்கிண்ணம்22. Show all posts
Showing posts with label ஆசியக்கிண்ணம்22. Show all posts

Sunday, October 16, 2022

ஆசிய சம்பியனை வீழ்த்திய நமீபியா

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ரி20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்றுக்கு முன்பான முதல் சுற்றின் முதல் போட்டியில்   இலங்கையும் நமீபியாவும் மோதின. அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் போட்டியிலேயே  நமீபியா அணி இலங்கையை 55 ஓட்ட  கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா  20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.  164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது நமீபியா அணியின் பந்துவிச்சை எதிர்கொள்ள முடியாமல்   19  ஓவர்களிலேயே சகல விக்கெட் களையும் இழந்து 108 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கையின் பந்து வீச்சுகு முகம் கொடுக்க முடையாத நமீபிய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.    14 ஓவர்கள் முடிகையில் 5 விக்கெட்களை இழந்த நமீபியா 91 ஓட்டங்கள் எடுத்தது.  கடைசிக்கட்ட ஓவர்களில் ஃப்ரைலிங்கும் ஜேஜே ஸ்மிட்டும் அதிரடியாக ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக பவுண்டரியும் சிக்சர்களும் வந்துகொண்டே இருந்தது. ஃப்ரைலிங் 44  [28]ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, ஸ்மிட் 31 [16] ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நமீபிய வீரர்கலுக்குப் போட்டியால இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.     குஷால் மெண்டிஸ்[6], நிஷாங்க [9], குணதிலக ஆகிய  மூவரும் பவர் பிளேயில் ஆட்டமிழந்தனர்.  அதிகபட்சமாக கப்டன் தசுன் ஷனக 29 ஓட்டங்களும், பானுகா ராஜபக்சே 20 ஓட்டங்களும் அடித்தனர்.

போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே நமீபியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும் 15 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடி பின்னர் கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆடி நல்ல ஓட குவிப்பை வழங்கியது, ஆனால் இலங்கை அணி வீரர்கள் அதுபோன்று களத்தின் தன்மையை கணிக்காமல் துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியதால் விக்கெட்டுகளை இழந்தனர்.   அதிரடியாக விளையாடி எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தல் : நமீபியா 15 ஓவர்களுக்கு மேல் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அடித்தனர். ஆனால் இலங்கை அணி வீரர்கள் நமீபியா சிறிய அணி என்று தப்பு கணக்கு போட்டு எல்லா ஓவர்களிலும் பெரிய ஷாட்டுகளை விளையாட நினைத்து தொடர்ந்து விக்கெடுகளை இழந்தனர்.   இந்த போட்டியில் 15 ஓவர் வரை சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியானது இறுதியில் நமீபியா அணி எவ்வளவு ஓட்டங்கள் அடித்து விடப்போகிறது என்று கடைசி ஐந்து ஓவர்களை எளிதாக வீசிவிட்டனர். குறிப்பாக 15 ஓவர்கள் வரை 95 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்த நமீபியா மீதம் இருந்த கடைசி ஐந்து ஓவர்களில் 68 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி நமீபியா அணியை குறைத்து மதிப்பிட்டதே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆசியக் கிண்ணப்  போட்டியிலும்  இலங்கை அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமாகத்தான் தோற்றிருந்தது. அதிலிருந்து மீண்டு வந்தே தொடரை வென்றது.கடந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் கூட இந்தியா போன்ற பெரிய அணிகளை தவிர்த்து மற்ற அணிகளுக்கு எதிராக நமீபியா சிறப்பாகவே ஆடியிருந்தது. சில போட்டிகளில் வென்றது.