Showing posts with label ரெய்னா. Show all posts
Showing posts with label ரெய்னா. Show all posts

Sunday, October 24, 2021

உலகக்கிண்ண ரி20 யில் சதம் அடித்த நாயகர்கள்


  அதிக ஓட்டங்கள் அடிக்க வேண்டும் சதம் அடிக்க வேண்டும் என்பதே  கிறிக்கெற் வீரனின்  கனவு. ரி20 போட்டியில் அடிக்கும் சதம் மிகவும் பெறுமதியானது.  உலகக்கிண்ண ரி20 யில் ஏழு வீரர்கள் எட்டு சதங்களை அடித்துள்ளனர். கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்களை எடுத்துள்ளதே அரிய விஷயமாகும்.

 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  முதல் சதத்தை 2007   எடுத்தவர் கிறிஸ் கெய்ல். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 57 பந்துகளில் 117 ஓட்டங்கள் அடித்தார். இதில்  7 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் அடக்கம்.

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரெய்னா  60 பந்துகளில் 101 ஓட்டங்கள்  அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 160.33.

 மஹேல ஜெயவர்தன ஸிம்பாப்வேக்கு எதிராக 64பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார்.

 பங்களாதேஷுக்கு எதிராக விளையாடிய மெக்கலம் 58 பந்துகளில் 123 ஓட்டங்கள் விளாசினார்.

  இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் இலங்கைக்கு எதிராக 64 பந்துகளில்  11 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட 116 ஓட்டங்கள் அடித்தார்.

பங்களாதேஷுக்கு எதிராக‌ பாகிஸ்தானின் அகமது ஷேஜாத் சதமெடுத்தார்.

  ஒமான் அணிக்கு எதிராக பங்களாதேஷ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்    தமீம் இக்பால் 63பந்துகளில் 103 ஓட்டங்கள் விளாசினார்.

  இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல் 48 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுக்க ஓட்டங்கள்  எடுக்க  மேறு இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Wednesday, October 6, 2021

ஐபிஎல் போட்டியில் தடுமாறும் சின்னதல ரெய்னா


 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று முறை சம்பியனாகியதிலும்   பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதிலும்  ரெய்னாவின் பங்களிப்பு மகத்தானது.சென்னை அணியின்  வெற்றி நாயகர்களில் ஒருவரான சின்னதல ரெய்னா துடுப்பெடுத்தாடுவதில் தடுமாறுவதால் தொடர்ந்தும்  சென்னை சூபர்  கிங்ஸில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அதிக  முறை 400 ஓட்டங்கள் எடுத்த சின்ன தல ரெய்னா, ஐபிஎல் 2021-ல் வான்கடேயில் டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் எடுத்ததோடு சரி. அதன் பிறகு இரட்டை இலக்க எண்ணிகையை நெருங்கவில்லை. 12 போட்டிகளில் ரெய்னா 160 ஓட்டங்களுடன் படுமோசமான சராசரியான 17.77-ல் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 125.

ரெய்னாவை அணியில் இருந்து வெளியேற்றும் திட்டம் இடுப்பதாக  சிலர் தெரிவிக்கின்றனர். அவர் திரும்பி வருவார் என்கின்றனர் சில விமர்சகர்கள்.

ஆனால் மைக்கேல் வான் இது தொடர்பாக கூறும் ஒரு விஷயம் ஆச்சரியமாக உள்ளது, “மற்ற அணியாக இருந்திருந்தால் ரெய்னா கதை இந்நேரம் முடிந்திருக்கும். ஆனால் சென்னை அணியில் ஒரு வீரருக்குப் பதில் மற்றொரு வீரரை உடனே மாற்ற மாட்டார்கள். அதே அணியுடன் தான் ஆடுவார்கள். ஒரு வீரருக்கு போதிய வாய்ப்பளித்து அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். நாம் இதை ஷேன் வாட்சன் ஆடும்போதே பார்த்தோம்.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாகவே உத்தப்பா விளையாடியதை நான் பார்க்கிறேன். ஆகவே இது சுரேஷ் ரெய்னாவின் இறுதி அல்ல, மீண்டும் அவர் வருவார் என்றே நினைக்கிறேன். ரொபின் உத்தப்பாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். சென்னையா மாற்றம் செய்தது என்பது எனக்கு ஆச்சரியமளித்தாலும் ரெய்னாவின் பார்மினால் எனக்கு நீக்கம் ஆச்சரியமளிக்கவில்லை என்கிறார் மைக்கேல் வான்.

Friday, September 24, 2021

உடைந்தது ரெய்னாவின் கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல ரசிகர்களின் மனதும்தான்


சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் ரெய்னா  நான்கு  ஓட்டங்கள் அடித்து தெம்பூட்டினார். டுபிளஸி ஓட்டம் எடுக்காது  ஆட்டம் இழந்ததால்  ரெய்னாவின் பவுண்டரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அடுத்த பந்தை ரெய்னா ஓங்கி அடித்தபோது  பந்துடன் உடைந்த கிரிக்கெட் மட்டையின் துகள்களும் சேர்ந்து காற்றில் பறந்தது.ஆனால் அவர் அடிந்த பந்தை மும்பை அணி வீரர் பிடித்ததால் அவர் ஆட்டம் இழந்தார்.

அந்த நேரம் ஸ்டார் டி.வி.,தமிழ் சேனலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வர்ணனை வந்து விழுந்தது

உடைந்தது கிரிக்கெட் மட்டை மட்டுமல்ல சென்னை சிஎஸ்கே அணி ரசிகர்களின் மனசும்தான்' என்று ரெய்னா ஆட்டமிழந்ததை சோகத்துடன் வர்ணனையாளர் ஒருவர் பதிவு செய்தார்.

அந்த வர்ணனையாளர் பெயர் முத்து, போட்டி முடியும் வரை இப்படியான அவரது வர்ணனை தொடர்ந்த காரணத்தால் போட்டியின் சுவராசியம் கூடியது.

நேரடி வர்னனை செய்வதும் ஒரு கலை அதனை முத்து மிகவும் சிறப்பாகச் செய்கிறார். முத்துவுடைய  வர்னனையால் கவரப்பட்ட பலர் அவரது ரசிகர்கலாக இருக்கின்றனர். அவருடன் புகைபப்டம் எடுக்க கையெழுத்துவாங்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த முத்து கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு பல ஊடகங்களில் பணியாற்றினார்.இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் னலுக்கு ஒரு வர்ணனையாளர் தேவை என்பதை அறிந்து விண்ணப்பித்தார், பலவித  சோதனைகளின் பிறகு வர்ணனையாளராக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக அந்த னலின் தமிழ் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

வர்ணனைக்கு போவதற்கு முன்பாக அன்று நடைபெறும் விளையாட்டு வீரர்களின் வரலாறு மைதானத்தின் தன்மை கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் விவரம் என்று முழுமையாக தெரிந்து கொண்டு செல்கிறார் இதற்காக இரண்டு நாள் கூட செலவிடுகிறார்,கூடவே மொழி அறிவும் செறிவும் இருப்பதால் எளிதாக சாதிக்கிறார். ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடந்த போட்டியை மைதானத்திற்கு நேரிடையாக சென்று வர்ணனை செய்தார் அதன்பிறகு மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்து நாம் எப்படி தொலைக் காட்சியைப்  பார்க்கிறோமோ அதே போல தொலைக் காட்சியைப்  பார்த்து வர்ணனை செய்கிறார்.

முதன்மை வர்னனையாளராக முத்து செயற்படுகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களானஸ்ரீகாந்த்,சடகோபன் ரமேஷ்,பத்திரிநாத் போன்றவர்கள்  முத்துவுடன் இணைந்து வர்ணனை செய்வார்கள்.