Showing posts with label நியூஸிலாந்து. Show all posts
Showing posts with label நியூஸிலாந்து. Show all posts

Tuesday, June 9, 2026

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ஸ்டில் வென்றது இங்கிலாந்து

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி   இங்கிலாந்து அணி 115  ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்குச் சென்ற  நியூஸிலாந்து மூன்று டெஸ்ட போட்டித்தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 140 ஓட்டங்களும், நியூஸிலாந்து 113 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தன. 27  ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 226  ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தது.

254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. ஆனால் 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது.   4-ம் நாள் ஆட்டத்தை டேவன்கான்வே 19 ஓட்டங்களுடனும், டாம் பிளண்டல் 2 ஓட்டங்களுடனும் தொடங்கினர். ஆனால் கான்வே 41  , பிளண்டர் 4   , நாதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

  40.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து. . கிளென் பிலிப்ஸ் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.   கஸ்அட்கின்ஸன் 5, ஆலி ராபின்சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.

115  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக ஆலி ராபின்சன் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் திகதி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Sunday, February 8, 2026

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ரி20 

கிண்ணப்  கிண்ண்ணப் போட்டியில், ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 183  ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை 13 பந்துகள் எஞ்சிருக்க எட்டி, நியூசிலாந்து  20 ஒவர்களில்  6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்கள் எடுத்தது.  குலாப்தீன் நைப்   63  ஓட்டங்கள் எடுத்தார்.

183 என்ற இலக்குடன் நியூஆஇலந்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் டிம் செப்பர்ட், இந்த ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்து தனது முதல் ரி20 உலகக் கிண்ண‌ அரை சதத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, 48  ஓட்டங்களில் இருந்தபோது ரஷித் கான் அவரை ஆட்டமிழக்கும் சந்தர்ப்பத்தித் தவற விட்டது  ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு 26 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கப்டன் மிட்செல் சான்ட்னர் களத்தில் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இறுதியில் சாண்ட்னர், டேரல் மிட்செல் ஜோடி 17.5 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

  

Tuesday, January 27, 2026

பொல்லார்ட் சாதனை சமன் ரசல் சாதனை உடைப்பு அபிஷேக் சர்மா புதிய சாதனை


   நியூசிலாந்துக்கு எதிராக  நாக்பூரில் நடந்த   முதல்  ரி20 போட்டியில்   48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா  வென்றது.   அபிஷேக் ஷர்மா 84 ஓட்டங்கள் அடித்தார்.

  சர்வதேசம், உள்ளூர்  , ஐபிஎல் ஆகிய அனைத்து விதமான ரி20 தொடர்களில் அபிஷேக் ஷர்மா 2898 பந்துகளில் 5000 ஓட்டங்கள் கடந்துள்ளார். ரி 20 கிறிக்கெற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. அபிஷேக் சர்மா (இந்தியா): 2895*

2. ஆண்ட்ரே ரசல் ( மேற்கு இந்தியா): 2942

3. டிம் டேவிட் (அவுஸ்திரேலியா): 3117

4. வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து): 3196

5. கிளன் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா):

 நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியில் 2வது அதிக (8) சிக்ஸர்கள் அடித்த வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார்.  2020ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ்க்காக பொல்லார்ட்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2012 ஹமில்டன் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த போட்டியின் போது தான் சந்தித்த 22-வது பந்தில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை அரைசதம் எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 முன்னதாக பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் ஆகியோர் 25 பந்துகளுக்கு குறைவாக ஏழு முறை அரைசதம் கடந்துள்ளனர். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் எட்டாவது முறையாக ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் அடித்து மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

  

Friday, January 16, 2026

எட்டு வருடங்களின் பின்னர் இந்திய மண்ணில் வென்ற நியூஸிலாந்து

நியூசிலாந்துக்கு  கிறிக்கெற் அணி இந்தியாவுக்கு எதிராக‌எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.  முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.  ஜனவரி 14ஆம் திக‌தி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெற்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ள நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் 8 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் தோற்கடித்து நியூசிலாந்து அசத்தியுள்ளது. கடைசியாக 2017இல் இந்தியாவில் வென்ற நியூசிலாந்து அதன் பின் சந்தித்த 8 தொடர்ச்சியான தோல்விகளை உடைத்துள்ளது.


1773  ஓட்டங்கள்  சச்சினின் சாதனையை உடைத்த   கோலி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி விராட்  23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் நியூசிலாந்துக்கு எதிராக அவர் 35 இன்னிங்ஸில் 1773* ஓட்டங்களை 55.40 சராசரியில்  அடித்துள்ளார்.

  1999 – 2009 காலகட்டங்களில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 41 இன்னிங்ஸில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1750  ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

 அத்துடன் உலகளவில் ரிக்கி பாண்டிங்கிற்கு (1971) பின் நியூசிலாந்துக்கு எதிராக  ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரரானார்.

 


கே.எல் ராகுலின் அசத்தலான சாதனை

ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 பந்துகளில் 11 பவுண்டரி , 1 சிக்சர் உட்பட 112  ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அசத்தினார்.  அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்த அவர் மேலும் ஒரு சாதனையாக எம்.எஸ்.டோனியை பின்னுக்கு தள்ளி அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   போட்டி நடைபெற்ற‌ ராஜ்கோட் மைதானத்தில்  சதம் அடித்த இந்திய வீரரானார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது சராசரியை 51.67 என்ற சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளார். இதன் மூலம் டோனியின் சராசரியை (50.23) அவர் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் அதிக சராசரி வைத்திருக்கும் இந்திய வீரராக விராத் கோலி 58.45 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுப்மன் கில் 56.34 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

  

Thursday, March 13, 2025

சம்பியன்ஸ் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெற்களால் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

252 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில் அகியோர் முதல் விக்கெட்டிற்கு 105 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ரோஹித் ஷர்மா 76 ஓட்டங்களுடனும், , , ஷுப்மன் கில் 31 , கோலி இட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

83 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.263 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெற்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்ரா தொடர் நாயகன் விருது பெற்றார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா  ஆகிய‌ இருவரும் 7 ஆவது ஓவரில்  51 ஓட்டங்கள் அடித்து  நம்பிக்கையளித்தனர்.  8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி களத்துக்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கு  மாறியது.   குல்தீபின் பந்தை அடித்த வில்லியம்சன் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 12. 2 ஓவர்களில் 3 விக்கெற்கலை இழந்த நியூஸிலாந்து  75  ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த 81 பந்துகள்  இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

லதாம் 14,  பிலிப்சை 34  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார்.   மிட்சல் 63   ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்  கடைசி 10 ஓவர்களில் 79  ஓட்டங்கள் அடித்தது நியூசிலாந்து.  50 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த நியூஸிலாந்து  251 ஓட்டங்கள் எடுத்தது. பிரேஸ்வெல்  ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்தார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா  சூறாவளியாக சுழன்றடித்தார். ஏதோ ஒரு முடிவுடன் வந்ததுபோல் அவர் விளையாடினார். 41 பந்துகளில் ரோஹித் அரைசதம் அடித்தார்.   முதல் விக்கெட்டுக்கு 105  ஓட்டங்கள் அடித்த நிலையில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்து 31 ஓட்டங்களுடன் சுப்மன் கில்லை வெளியேற்றினார்.

பிரெஸ்வெல்லின் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்த கோலி எல்.பி.டபிள்யுவில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். நியூசிலாந்து வீரர்கள் ஆர்ப்பரித்தனர். 'ரிவியு' கேட்டும்   கோலியின் ஆட்டமிழப்பு உருதியானது. சிறிது நேரத்தில் ரோகித்  76 ஓட்டங்களுடன் வெலியேற  பதற்றம் அதிகரித்தது.

ஸ்ரேயாஸ், அக்சர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தது. பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து 'லாங்-ஆன்' திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராகச் சென்றது.  அவர் 'கேட்ச்சை' நழுவவிட்டார். 48 ஓட்டங்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்

அக்ர் படேல் 29, ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக ரோஹித் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்தர்.  ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டாஸ்' வெல்லாத கப்டன் பட்டியலில் முதலிடத்தை  லாரா பகிர்ந்து கொண்டார் ரோஹித்.இருவரும் 12 முறை தோல்வியடைந்தன.

இறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் நான்கு 'கேட்ச்சை' நழுவவிட்டனர்.ஷமி வீசிய பந்தை  நேராக அடித்தார் ரச்சின். இது ஷமியின் விரலில் பட்டு 'கேட்ச்' நழுவியது. வலியால் அவதிப்பட்ட ஷமிக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார்.  வருண் சக்ரவர்த்தி பந்தை ரச்சின் துாக்கி அடிக்க, எல்லையில் இருந்து ஓடி வந்த ஸ்ரேயாஸ் 'கேட்ச்சை' கோட்டைவிட்டார்.  ஜடேஜாவின் பந்தில்   பிலிப்ஸ் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் கோட்டைவிட்டார் சுப்மன் கில்.

ஐ.சி.சி., ஒருநாள் தொடரின் 'நாக்-அவுட்' போட்டியில் (உலக கோப்பை அல்லது சம்பியன்ஸ் டிராபி) இரு அணிகளின் துவக்க ஜோடியும் 50 ஒட்டங்களுக்கு  மேல் எடுத்தது 2வது முறையாக அரங்கேறியது.   நியூசிலாந்தின் யங்-ரச்சின் 57  ஓட்டங்கள் அடித்தனர். இந்தியாவின் ரோகித்-சுப்மன் 105  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இதற்கு முன் இந்தியா-பாக்., மோதிய உலக கோப்பை காலிறுதியில் (1996, மார்ச் 9, பெங்களூரு) துவக்க ஜோடிகள் (சச்சின்-சித்து 90, அன்வர்-சோகைல் 84  ) எடுத்தனர்.

சம்பியன்ஸ் தொடரில்  அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய வீரரானார் ஷமி  ஷமி(9 ஓவர், 1/74). முதலிடத்தில் உமேஷ் யாதவ்(2/75, எதிர், தென் ஆப்ரிக்கா, கார்டிப், 2013) உள்ளார்.

இந்திய 'ஸ்பின்னர்'கள்   37.3 சதவீத பந்துகளை 'ஸ்டம்ப்சை' தாக்கும் வகையில் துல்லியமாக வீசினர். 38 ஓவர்களில் 144 ஓட்டங்கள் மட்டும் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

 38 ஓவர் வீசி ஒருநாள் அரங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர் வீசியதில், மூன்றாவது இடம்  பிடித்தனர். . முதல் இரு இடங்களில் 41.2 ஓவர் (எதிர், வெ.இ., இந்துார், 2011), 30 ஓவர் (எதிர்,கென்யா, குவாலியர், 1998) உள்ளன.

  சாம்பியன்ஸ் டி கிண்ண  அரங்கில் அதிக ஓவர் 'ஸ்பின்னர்'கள் வீசிய அணிகளின் பட்டியலில் இந்தியா (38 ஓவர்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (39.4 ஓவர், எதிர், ஆஸி., கொழும்பு, 2002, அரையிறுதி) உள்ளது.

நியூசிலாந்து வீரர் வில்லியம்சனின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. 'பீல்டிங்' செய்ய வரவில்லை. மாற்று வீரராக மார்க் சாப்மேன் களமிறங்கினார்.


நாதன் ஸ்மித் பந்தில் (5.3வது ஓவர்) ஒரு இமாலய சிக்சர் (92 மீ., துாரம்) அடித்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (344 சிக்சர், 273 போட்டி) உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார்.

  3வது ரன்னை எடுத்த போது நியூசிலாந்துக்கு எதிராக 1000  ஓட்டங்கள் எட்டினார் ரோகித்.* ஒருநாள் அரங்கில் கப்டனாக 2,500 ஓட்டங்கள் கடந்தார் ரோகித்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலில் வெற்றி பெற்று இந்தியா புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் 2000 சம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில்நியூஸிலாந்திடம்  இந்தியா தோல்வியையே சந்தித்தது. 3 சம்பியன்ஸ் ட்ராபிகளை (2002, 2013, 2025*) வென்ற முதல் அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது இதற்கு முன் அவுஸ்திரேலியா 2 கோப்பைகளை வென்றதே  முன்னைய  சாதனை. 

Friday, March 7, 2025

இந்தியா நியூஸிலாந்து நேருக்கு நேர் புள்ளி விபரம்


சம்பியன் கிண்ண  இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும்  துபாயில் மோத  உள்ளன.   இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது.

இந்திய அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணி என்கிற வரலாறு படைத்தது.  நியூசிலாந்து அணி தங்களது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் 2000 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டும், 2023  ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும், 2021 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளன. 2023 உலகக் கிண்ண  அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது. இது தான் நியூசிலாந்து அணியை இந்திய அணியை நாக் அவுட்டில் வென்ற ஒரே போட்டியாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்  போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் இது வரை இரண்டு முறை மோதியுள்ளன.அதில் இரு  அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ்   இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது, இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. 

ஒரு நாள் உலகக்கிண்ணப் போட்டியில்  இரு அணிகளும் 10 முறை மோதின. இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 4 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண  அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ் டோனியின் கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.

ஐசிசி  ரி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இது  இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இரு அணிகளும் ஐசிசியின் தொடர்களில் மொத்தம் 16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே  இருந்துள்ளது. 

      

சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து மோதல்


 

 இந்தியா , நியூசிலாந்து அணிகள் மோத உள்ள,  ஐசிசி சம்பியன்ஸ்  கிண்ண இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.

 இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் லீக் சுற்றில் மோதியதால், மைதானத்தில் சூழல் எப்படி இருக்கும் என இரண்டு அணிகளும் அறிந்திருக்கின்றன. இதனால், போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவை  விட  நியூசிலாந்து அணி வலுவாக  இருப்பதாக விமர்சகர்கள்  கூறுகிறார்கள்.

இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடிய அணியாக நியூஸிலாந்து உள்ளது.  இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் ,ரச்சின் ரவீந்திர ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே சுழற்பந்து வீச்சில் உள்ள பன்முகத்தன்மையின் அடிப்படையில் வலுவாக உள்ளனர். லீக் சுற்று போட்டியில் அவர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளித்தாலும், இறுதிப்போட்டி கடும் சவாலாக  இருக்கும்.

 : நியூசிலாந்து அணி களத்தில் ஃபீல்டிங் மூலம் மட்டுமே 30/ 40   ஓட்டங்களை  சேமிக்கும் திறன் கொண்டுள்ளது.   அட்டகாசமான கேட்சுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.  சாண்ட்னர், வில் யங் , மைக்கேல் பிரேஸ்வெல் போன்றவர்கள் சிறந்த பீல்டர்களாக திகழ்கின்றனர். கூடுதலாக எதிரணி வீரர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய க்ளென் பிலிப்ஸ்ம் நியூசிலாந்து அணியில் இருக்கிறார். அவர் தனது விதிவிலக்கான பீல்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படும் போது, அவர்களின் சிறந்த ஃபீல்டர்கள் அனைவரும் வளையத்தில் இருப்பதால், அவர்கள்  ஒற்றை ஓட்டத்தை  நிறுத்துவதன் மூலம் அழுத்தத்தை அதிகரிக்கின்றனர்.  

இந்தியாவைப் போலவே, நியூசிலாந்து அணியும் சூழ்நிலைக்கு ஏற்ற துடுப்பாட்ட  வரிசையைக் கொண்டுள்ளது. லீக் போடிட்யில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், கம்பேக் கொடுக்கும் திறன் கொண்டுள்ளனர். ரச்சின், யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் விரைவான தொடக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிடில் ஆர்டருக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கி தருகின்றனர். பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சிரமப்பட்டாலும், டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

  இந்தியாவும் சளைத்ததல்ல 2013 சம்பியன்ஸ் தொடரில் டோனி தலைமையில்  இறுதிப் போட்டியில் விளையாடிய  இந்தியா கோப்பையையும் வென்றதுசம்பியனது. 2017 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில்  விராட் கோலி தலைமையிலிறுதிப் போட்டிக்குச் சென்ற   இந்திய அணிபாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

ச‌ம்பியன்ஸ் கிண்ண   வரலாற்றில் தொடர்ந்து  மூன்று தொடர்களில் (2013, 2017, 2025)  இறுதிப்போட்டிக்குச் சென்ற  பெற்ற முதல் அணி என்ற ஹட்ரிக் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது

 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப்  இறுதிப் போட்டிக்குத்  தகுதிப் பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற 2023 உலகக்கோப்பை,   2024 இல் ரி20 உலகக் கோப்பை ஆகியவற்றில்  இந்திய சம்பியன் பட்டத்தை வென்றது.

  தற்போது நடைபெறும் சம்பியன்ஸ் டிராபி  இறுதிப் போட்டிக்கும்  இந்தியா தகுதி பெற்றுள்ளது.  கடைசியாக நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி  இறுதிப் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளது.   ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற   சாதனையை இந்தியா படைத்துள்ளது.

 இதற்கு முன் 1975 – 1983 காலகட்டங்களில் மேற்கு இந்தியா , 2000 – 2003 காலகட்டங்களில் இந்தியா, 2019 – 2021 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிகள் தலா 3 இறுதிப் போட்டிக்குத் தொடர்ந்து தகுதி பெற்றதே முந்தைய சாதனை. இதிலிருந்து மற்ற அணிகளை காட்டிலும் இந்திய ஐசிசி தொடர்களில் நன்றாக செயல்படுவது தெரிகிறது.

கோலி,ரோஹித் ஆகியோருக்கு கடைசி சம்பியன்  தொடர் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது

 

ரமணி

9/3/25

சம்பியன்கிண்ணம்25,பாகிஸ்தான்,துபாய்,விளையாட்டு,கிறிக்கெற்,தமிழன்,இந்தியா,,நியூஸிலாந்து,

Monday, March 3, 2025

இந்தியச் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து

துபாயில் நடந்த ச‌ம்பியன்ஸ்  கிண்ண லீக்  போட்டியில் நியூசிலாந்தை  எதிர்கொண்ட இந்தியா 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

  இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக  வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார்.  நான்கு 'ஸ்பின்னர்களுடன் இந்தியா களம் புகுந்தது.   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு  செய்தது.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து  249 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது.

  இந்திய அணி  ஆரம்பத்தில் திக்குமுக்கடியது.  மாட் ஹென்றி 'வேகத்தில்'  2  ஓட்டங்கள் எடுத்த சுப்மன் கில்   எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார். ஆனார். ஜேமிசன் பந்தில் கப்டன் ரோஹித் சர்மா 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். 11 ஓட்டங்கள் எடுத்த் கொலியும் பவிலியன் திரும்ப‌ கோலியும் (11) விரைவில் வெளியேற,  7 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த இந்தியா 30 ஓட்டங்கள் எடுத்தது.

 ஸ்ரேயாஸ், அக்சர் படேல் ஜோடி  நான்காவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தது. 42 ஓட்டங்களுடன் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.  ஓட்ட எண்ணீக்கையை உயர்த்துவதற்காக அதிரடியாக விளையாடிய  ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார் நம்பிக்கையுடன்  நின்ற ராகுல் 23 ஓட்டங்களில் வெளியேறினார். 

 கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் இறங்கினார்.    ஜடேஜா, 16  பாண்ட்யா 45,   ஷமியை  5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.ஹென்றி 5 விக்கெற்களை வீழ்த்தினார்.

250 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெறும்  கனவில்  களம் இறங்கிய நியூஸிலாந்து இந்தியாவின் சுழலில் சிக்கி தோல்வியடைந்தது. ரவிந்திரா 6,  ' வில் யங் 22 ,டேரில் மிட்சல் 17  ஓட்டங்களில் வெளியேறினர். 26 ஓவர்களில் 3 விக்கெற்களி இழந்த நியூஸிலாந்து 104 ஓட்டங்கள்  அடித்தது.

  வில்லியம்சன், லதாம் ஆகிய இருவரும்  சிறிது நேரம் போராடினர்.  வில்லியம்சன், 77 பந்துகளில்  ஒருநாள் அரங்கில் 47வது அரைசதத்தை  எட்டினார். லதாம் 14,   கிளன் பிலிப்ஸ் 12, பிரேஸ்வெல் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.  அக்சர் படேல் பந்தில் வில்லியம்சன்   81 ஓட்டங்களுடன் வெளியேற இந்தியாவின் வெற்றி உறுதியானது.  ஹென்றியை 2 ஓட்டங்களில் வெளியேற்றிய  வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது

  ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 13வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. ரோகித் தலைமையில் மட்டும் 10 முறை (2023 நவ.- 2025, மார்ச்) 'டாஸ்' வெல்லவில்லை. அதிக முறை 'டாஸ்' வெல்ல தவறிய கேப்டன் பட்டியலில் ரோகித் (10) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் லாரா (12, 1998 அக்.-1999 மே), நெதர்லாந்தின் பீட்டர் போரன் (11, 2011 மார்ச்-2013 ஆக.) உள்ளனர்.

'சூப்பர்மேன்' பிலிப்ஸ்

தனது 300வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கிய கோலி, மாட் ஹென்றி வீசிய பந்தை (6.4வது ஓவர்) அடித்தார். இதை 'பேக்வார்ட் பாய்ன்ட்' திசையில் நின்ற கிளன் பிலிப்ஸ் அந்தரத்தில் பறந்து, வலது கையை நீட்டி அற்புதமாக பிடிக்க, அதிர்ச்சியில் வெளியேறினார் கோலி (11). இந்த 'கேட்ச்சை' 0.62 வினாடி நேரத்தில் கணித்து கச்சிதமாக பிடித்தார் பிலிப்ஸ். ஜான்டி ரோட்ஸ் போன்ற இவரது 'சூப்பர்மேன்' சாகசத்தை பார்த்து, துபாய் அரங்கில் இருந்த கோலி மனைவி அனுஷ்கா, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

* பின் ஹென்றி வீசிய பவுன்சரை (45.5வது ஓவர்) ஜடேஜா (16) அடிக்க, அனுபவ வில்லியம்சன் பறந்து 'கேட்ச்' பிடித்து அசத்தினார்.

* இத்தொடரில் நியூசிலாந்து அணி 96.0 சதவீத 'கேட்ச்' பிடித்து முதலிடத்தில் உள்ளது. ஒரு கேட்ச் மட்டுமே நழுவவிட்டது.

ஒருநாள் அரங்கில்   தனது மந்தமான அரைசதத்தை எட்டினார் ஸ்ரேயாஸ் (75 பந்தில்). இதற்கு முன் 74 பந்தில் (எதிர், வெ,இ., 2022, ஆமதாபாத்) அரைசதம் அடித்திருந்தார்.

ஷமியை தாக்கிய பந்து

ஹென்றி பந்தை (49.5வது ஓவர்) அடித்த ஷமி 2வது ஓட்டத்துக்கு ஓடினார். அப்போது நியூசிலாந்து பீல்டர் எறிந்த பந்து ஷமியின் முதுகில் பலமாக தாக்கியது. சிறிது நேரம் 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். பின் சகஜ நிலைக்கு திரும்பினார் ஷமி.

ஹென்றி 5 விக்.

  5 விக்கெட் வீழ்த்திய மாட் ஹென்றி (5/42), சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது நியூசிலாந்து வீரரானார். முதலிடத்தில் ஜேக்கப் ஓரம் (5/36, எதிர், அமெரிக்கா, 2004) உள்ளார்.


                                                  கோலி '300'

நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய விராத் கோலி, ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 7வது இந்திய வீரரானார். இதுவரை 300 போட்டியில், 51 சதம் உட்பட 14,096 ஓட்டங்கள்  குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), டோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 300 ஒருநாள், 100 டெஸ்ட், 100 'ரி-20' போட்டிகளில் விளையாடிய முதல் வீரரானார் கோலி. இதுவரை இவர், 300 ஒருநாள், 123 டெஸ்ட், 125 சர்வதேச 'ரி-20'ல் பங்கேற்றுள்ளார்.

முதல் வெற்றி

சம்பியன்ஸ்  தொடரில் அரங்கில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 2 முறை மோதின. இதில் நியூசிலாந்து (2000, நைரோபி), இந்தியா (2025, துபாய்) தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

5 விக்கெட்

சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி (5 விக்கெட், 42 ஓட்டங்கள் , 10 ஓவர்) சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார்.

* சம்பியன்ஸ்தொடரில்  அறிமுகமான முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது பவுலரானார் வருண். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (6/52, எதிர்: நியூசிலாந்து, 2017) உள்ளார்.

* இது, ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன், கட்டாக்கில் (2025, பிப். 9) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

Monday, February 24, 2025

சாதனை வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி சதம்

 ராவல்பிண்டியில் நடைபெற்ற ச‌ம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெற்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற நியூசிலாந்து  அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.

நாமயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது.  தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது. 237 எனும்  வெற்ரி இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந்து 46.1  ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது. 

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கப்டன் நஜ்முல்ஷான்டோ, தன்ஜித் ஜோடி  சிறப்பாக விளையாடியது. பிரேஸ்வெல் பந்துவீச்சில் 24 ஓட்டங்கள் எடுத்த தன்ஜித்  ஆட்டமிழந்தார். மெஹிதி ஹசன் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோது  20 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

நியூஸிலாந்து வீரர்களின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாததால் 21 ஓட்டங்களில் அடுத்தடுத்து  முன்று விக்கெற்கள் வீழ்ந்தன.

 பந்தில் தவ்ஹித் 7,   முஷ்பிகுர் ரகிமும் 2 ,  மகமதுல்லா 4  ஒட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  5 விக்கெற்களை இழந்த பங்களாதேஷ் 118  ஓட்டங்கள் எடுத்துத் திணறியது.மட்டும் எடுத்து அவுட்டானார். வங்கதேசம் 118/5 என திணறியது

 அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த ஷான்டோ, 77  ஓட்டங்களில் ஆட்டமிழக்க  ரிஷாத், ஜாக்கர் ஜோடி இணைந்து அணியை மீட்க போராடியது.

 ரிஷாத் 26 ஜாக்கர், 45 ஓட்டங்களில்  ரன் அவுட்டானதும் பங்களாதேஷ் அடங்கிவிட்டது. வபங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 236 ஓட்டங்கள் எடுத்தது.   நியூசிலாந்தின் பிரேஸ்வெல் அதிகபட்சம் 4 விக்கெற்களை வீழ்த்தினார்.

237 எனும் இலகுவான இலக்கை விரட்டிய நியூஸிலாந்துக்கு  பங்களாதேஷ் அதிர்ச்சியளித்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த யங்டக் அவுட்டானார். டஸ்கின்   பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 5  ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.   ரச்சின் ரவிந்திரா, கான்வே இணைந்தனர். கான்வே 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ரச்சின் உறுதியாக நின்றார். 95வது பந்தில் ஒருநாள் அரங்கில் நான்காவது சதம் எட்டிய‌ ரச்சின் 112 ஓட்டங்களில் , ரிஷாத் பந்தில் ஆட்டமிழந்தார்.55 ஓட்டங்கள் அடித்த லதாம் ரன்  அவுட்டானார். லதாம் (55) ரன் அவுட்டானார். நியூசிலாந்து   46.1 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான  ரச்சின் ரவிந்திரா  3 சதங்கள் அடித்தார்.2025 ஆம் ஆண்டு  ச‌ம்பியன்ஸ் டிராபி கிண்ணத் தொடரில் அறிமுகமான  ரச்சின் ரவிந்திரா மீண்டும் சதத்துடன் ஆரம்பித்துள்ளார்.

11 இன்னிங்ஸ்களில்4 சதங்கள் அடித்த ரச்சின்   ஐ.சி.சி., தொடரில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஆனார், 34  போட்டிகளில் விளையாடிய  வில்லியம்சன்  35 போட்டிகளில் விளையாடிய நாதன் ஆஷ்லே ஆகியோர் தலா 3சதங்கள் அடித்தனர்.

ஐ.சி.சி., தொடர்களில் ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் வீழ்த்திய 4வது நியூசிலாந்து வீரரானார் பிரேஸ்வேல். முன்னதாக வெட்டோரி இரண்டு முறையும்,  சான்ட்னர், பால் வைஸ்மேன் ஆகியோர் தலா ஒரு முறையும் 4 விக்கெற்களை எடுத்தனர்.

'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறின. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நடப்பு சம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை வெளியேறின. சம்பியன் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு கூட செல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக  உள்ளது. 

  30 ஓட்டங்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. இவர், 30 போட்டிகளில் 1082 ஓட்டங்கள் எடுத்தார்.

* நியூசிலாந்தின் பிலிப்ஸ் 4  ஓட்டங் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்கள் என்ற இலங்கை எட்டினார்.

 பாகிஸ்தான்,பங்களாதேஷ் ,நியூஸிலாந்து,விளையாட்டு,சம்பியன்கிண்ணம் 25,கிறிக்கெற்,விளையாட்டு,சாதனை

Thursday, February 20, 2025

நடப்பு சம்பியனை வீழ்த்திய நியூஸிலாந்து


 ச‌ம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 320 ஓட்டங்கள் எடுத்தது.47.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் 270 ஓட்டங்கள் எடுத்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. 

பகிஸ்தானின் பந்து வீச்சு முக்கியமானவர்களை வெளியேறியது.  டெவோன் கான்வே 10  ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன்  ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினர்.அதிரடி ஆட்டக்காரர் டரில் மிட்செல், 10 ஓட்டங்ள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.   வில் யங்கும் டாம் லாத்தமும், பொறுமையாக ஆடி விளையாடினர். ஒரு கட்டத்தில், அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினர்.

சதம் அடித்து அசத்திய வில் யங் 107 ரஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து பவுண்டரி மழை பொழிந்தார் டாம் லாத்தம். அதிரடியாக ஆடிய கிளேன் பிலிப்ஸ் 61 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார்.

 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய‌ விளையாடிய டாம் லாதம்  ஆட்டமிழக்காது 118*  ஓட்டங்கள் எடுத்தார்.

  321  ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி விரர்கள் ஏமாற்றினர். 

தொடக்க வீரர் சவுத் ஷகீல் 6, க‌ப்டன் முகமது ரிஸ்வான் 3 ,  பகர் சமான் 24  ஓட்டங்களில்  ஆட்டம் இழந்தனர். இருப்பினும், பாபர் அசாம், சல்மான அலி அகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச்   சேர்த்தனர்.

42 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, சல்மான தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அரை சதம் அடித்த பாபர் அசாம் 64 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.   குஷ்டில் ஷா, அதிரடியாக ஆடி 69  ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.

பாகிஸ்தான் 47.2 ஓவர்களிலனைத்து விக்கெற்களையுமிழந்து 260 ஓட்டங்கள்  எடுத்தது. ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.

Friday, November 17, 2023

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா


நியூஸாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 70 வோட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா  உலகக்கிண்ண  இறுதிப்போட்டியில் விளையாடத் துகுதி பெற்றது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில்  4  விக்கெற்களை  இழந்து 497  ஓட்டங்கள் எட்டுத்தது.

ரோகித் 47, கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்கள் எடுத்தனர். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 80, ராகுல் ஆட்டமிழக்காது 39  ஓட்டங்கள் எடுத்தனர்.

நியூஸில்லாந்து வீரர்  மிட்செல்  134 , கேன் வில்லியம்சன் 69  ஓட்டங்கள் எடுத்த பின்னர்  இந்தியாவின்  கை ஓங்கியது.க்சமி 7 விக்கெட்கள் எடுத்துமிரட்டினார்.  48 . 5  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த நியூஸிலாந்து  327  ஓட்டங்கள் எடுத்தது

            நியூஸிலாந்தின் சாதனையை உடைத்த இந்தியா.

மேற்கு இந்தியாவுக்கு எதிராக 2015 உலகக்  கிண்ணத்தில் நியூஸிலாந்து  6 விக்கெர்களை  இழந்து 393  ஓட்டங்கள்  எடுத்ததே முந்தைய சாதனையாகும். இந்தியா  4 விக்கெற்களை இழந்து 397  ஒட்டங்கள் எடுத்து நியூஸிலாந்தின்  சாதனையைத் தகர்த்தது.


 சச்சினின்  சரித்திர சாதனையை  உடைத்து தலை வணங்கிய கோலி

50வது சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக சாதனையை உடைத்தார். சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்தார்.  விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 ஓவர் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்தார். 

 இந்த உலகக்  மொத்தம் 700* ஓட்டங்கள் அடித்து   உலகக்கிண்ண  வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிகஒட்டங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின்  சாதனையை உடைத்தார்.

2003  ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில்  673 ஓட்டங்கள் அடித்தார்.

ஒரு உலகக் கிணப் போட்டியில்  அதிக முறை (8*) 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (2003இல்),சாகிப் அல் ஹசன் (2019இல்) தலா 7 முறை 50+ ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்

                         கெயிலை முந்திய ரோஹித் 3 புதிய உலக சாதனை

5 ஓவர்கள் முடிவதற்குள் 3 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 27 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற  கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2015 உலகக்  கிண்ணப் போட்டியில்26 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாகும். 

உலகக்  கிண்ண வரலாற்றில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் , அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையும் ரோஹித்  சர்மா படைத்துள்ளார்.  றிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

               தொடர்ச்சியாக இரண்டாவது சதமடித்த   ஸ்ரேயாஸ் ஐயர்

 கடைசி லீக்  போட்டியில்  நெதர்லாந்துக்கு எதிராக சதமடித்த  ஸ்ரேயாஸ் ஐயர்  நியூசிலாந்துக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளார். 67 பந்துகளில் அவர் சதத்தை எட்டினார்.

இதன் மூலம் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா (3) 2019 , ராகுல் டிராவிட் (2) 1999  சதமடித்திருந்தனர்.

  ஒருநாள் உலகக்கிணத்தில் ஒரு சீசனில் நம்பர் 4 அல்லது அதற்கு கீழே களமிறங்கியவர்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

முழு பட்டியல்

511* - ஷ்ரேயாஸ் ஐயர் (2023)

499 - ஸ்காட் ஸ்டைரிஸ் (2007)

482 - ஏபி டி வில்லியர்ஸ் (2015)

23 வருட காத்திருப்பு 

2000 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2021 சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தோல்விகளை தொடர்ந்து 23 வருடங்கள் காத்திருந்த இந்தியா ஐசிசி நாக் அவுட் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து சரித்திரம் படைத்துள்ளது.

                                     ஷமி அள்ளிய   விக்கெற்கள்

உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். இவருக்கு முன் கிளென் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் 2வது இடத்திலும், 59 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 3வது இடத்திலும், 56 விக்கெட்டுகளுடன் மலிங்கா 4வது இடத்திலும், 55 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் 5வது இடத்திலும், 53 விக்கெட்டுகளுடன் போல்ட் 6வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா.. விக்கெட் வேட்டையாடிய ஷமி.. 4வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறி சாதனை! அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையையும் படைத்துள்ளார். இவருக்கு முன் மிட்செல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரின் சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார். அதேபோல் உலககோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. மிட்செல் ஸ்டார்க் 941 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முகமது ஷமி 795 பந்துகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.