Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Tuesday, February 28, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -58



 

  

தமிழ் சினிமாவில் வாய்ப்புத்தேடி அலைந்த வாலிகளைத்துப்போனார்.  கவிஞர் கண்னதாசனையே திரை உலகினர்  பெரிதும் நம்பினார்கள். அவர் பாடல்கள்  கொடுக்கத் தாமதமானாலும் காத்திருந்து பாடல்களைப் பெற்றனர். எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்கள்  பட்டி  தொட்டி என்க்கும் ஒலித்தன.  வாய்ப்புத் தேடித் தவமிருந்த வாலி தனக்குக் கிடைத்த சின்னச் சின வாய்ப்புகளைப் பயன் படுத்தி தனது திறமையை  வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆருக்காக தெய்வத்தாய், படகோட்டி ஆகிய படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதினார்.  அந்த இரண்டு படங்களின் பாடல்களும்  மக்களுக்குப் பிடித்து விட்டதால் எம்.ஜி.ஆரின் மனதில் வாலி இடம் பிடித்தார்.

எம்ஜிஆர் -கண்ணதாசன் என்ற  வெற்றிக் கூட்டணிக்குள்  வாலியும் இணைந்தார்.  எம்.ஜி.ஆர்,  வாலி கூட்டனியிலும்  பாடல்கள்  பிரமாதமாக  இருந்தன.  58ம் ஆண்டு ‘அழகர்மலைக் கள்வன்’ என்ற படத்தில் பாட்டெழுதத் தொடங்கினார் கவிஞர் வாலி. படத்துக்கு ஒரு பாடல் எழுதி வந்தார். அந்தப் படமும் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை கிடைத்து வந்தது. 61ம் ஆண்டு, எம்ஜிஆர் நடித்து, அறிஞர் அண்ணாவின் வசனத்தில் வந்த ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் ஒரு பாடல் எழுதினார். பாட்டு ஹிட்டானது என்றாலும் கண்ணதாசன் - எம்ஜிஆர் கூட்டணி வலுவாக இருந்த காலம் அது.


முக்தா சீனிவாசனின் இயக்கத்தில், ஜெமினி கணேசன் நடித்த ‘இதயத்தில் நீ’ படத்தில் கண்ணதாசனும் மாயவநாதனும் வாலியும் எழுதியிருந்தார்கள். மாயவநாதனும் மிகச்சிறந்த பாடலாசிரியர்தான். சொல்லப்போனால், மாயவநாதன் எழுதிய பல பாடல்கள், கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று கொண்டாடப்பட்டன. அந்த அளவுக்கு மாயவநாதன் பாடல்கள் எழுதி பிரபலமாகியிருந்தார். பின்னாளில், வாலியின் பாடல்களைக் கேட்டுவிட்டு, கண்ணதாசன் பாடல்கள் என்று பலரும் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கண்ணதாசன் பாட்டு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

‘இதயத்தில் நீ’ படத்தில் வாலி எழுதிய பல பாடல்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 63ம் ஆண்டு இந்தப் படம் வெளியான அதே காலகட்டத்தில், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், ‘கற்பகம்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் முதன்முதலாக எல்லாப் பாடல்களையும் எழுதினார் வாலி. பெண் குரல் கொண்ட எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இதே சமயத்தில், பாலசந்தரின் கதை, வசனத்தில் , கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் ‘அவளுக்கென்ன’ பாடலை எழுதினார். இன்று வரைக்கும் அந்தப் பாடல் ஹிட் லிஸ்ட் வரிசையில் இருக்கிறது. 64ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த ‘தாயின் மடியில்’ படத்துக்கு வாலியும் பாட்டு எழுதினார்.இந்த வருடம்தான் ‘தெய்வத்தாய்’ படம் வெளிவந்தது

’இந்தப் புன்னகை விலை’ என்ற பாடல், ’வண்ணக்கிளி சொன்னமொழி என்ன மொழியோ?’, என்ற பாடல், ’ஒருபெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ என்ற பாடல் என எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் உண்டு. அது எம்ஜிஆரின் திரைப் பயணத்தில் டாப் கியர் எடுப்பதற்கும் அரசியல் வாழ்வில் பல படிகள் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் பாடல்... ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’. இந்தப் பாடல், எம்ஜிஆரை மிகப்பெரிய உயரத்தில் இருந்து உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வாலியை உயரத்துக்குக் கொண்டு சென்றது.

இதையடுத்து, இதே 64ம் ஆண்டில், ஜி.என்.வேலுமணி தயாரிப்பில், டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், மனோரமா நடிப்பில் வெளியானது ‘படகோட்டி’.

இந்தப் படத்தில், ஒரேயொரு பாட்டெழுதத்தான் வாலியை அழைத்தார்கள் என்றும் அந்தப் பாட்டு எம்ஜிஆருக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் எல்லாப் பாடல்களையும் வாலியைக் கொண்டே எழுதவைத்தார் என்றும் சொல்லுவார்கள்.

எம்ஜிஆர் படத்துக்கு எல்லாப் பாடல்களுமே வாலி எழுதியது ‘தெய்வத்தாய்’ படத்தில்தான். இதன் பின்னர் ‘படகோட்டி’ படத்தில் எல்லாப் பாடல்களும் எழுதினார்.

‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ என்றொரு பாடல். ’என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’, என்றொரு பாடல். ’கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு’, ‘தொட்டால் பூமலரும்’, ’பாட்டுக்குப் பாட்டெடுத்து‘ என்ற பாடலும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ என்ற பாடல்கள் அனைத்துமே அப்படியொரு ஹிட்டைப் பெற்றன.

மீனவர்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில், இன்னும் இரண்டு பாடல்கள் எழுதியிருந்தார் வாலி. ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்’ என்ற பாடலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற பாடலும் அடைந்த வெற்றிக்கு அந்தக் கடல்தான் எல்லை.

மீனவக் குடும்பங்களில் என்றில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் பாடல்களும் டி.எம்.எஸ்., சுசீலாவின் குரலும் இன்னும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ’ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்பன போன்ற வரிகள், கடலில் கால் வைக்காதவர்களின் மனங்களையும் அசைத்து உலுக்கியது.

எம்ஜிஆரின் மறக்கமுடியாத பட வரிசையில் ‘படகோட்டி’க்கு இடம் உண்டு. கவிஞர் வாலியின் திரை வாழ்வில் ‘படகோட்டி’க்கு இடமுண்டு. 1964ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி வெளியான ‘படகோட்டி’ படம் வெளியானது. 56 ஆண்டுகளானாலும் ‘தொட்டால் பூமலரும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ முதலான பாடல்களை மறக்கவே முடியாது!

’கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’... எம்ஜிஆர் - வாலி கூட்டணியின் 2வது மெகா ஹிட் பாடல்கள்!

Wednesday, February 9, 2022

தெரிந்த சினிமா தெரியாத சஙக்தி 4


 

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

  சுமைதாங்கி படத்துக்காக  கவியரசர் கண்ணதாசன் எழுதிய   பாடலுக்கு இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்நாதன் ராமமூர்த்தி இசையமைக்க பிபி.ச்ரினிவாஸ் பாடிய பாடலின் ஆரம்ப வரிகள் அவை. மூன்று வரிகளில் நான்கு கேள்விகள்   கேட்கப்பட்டன. துன்ப்ழத்திலும் துயரத்திலும் இருக்கும் ஒருவரிடம் இக் கேள்வியை நாம் கேட்டால் அவர் சொலும் பதிலால் நாம்  கலங்கிவிடுவோம்.  நாம் நமது துயரத்தை  பட்டியலிட அவர் உடைந்து விடுவார்.

ஆனால், கண்ணதாசன் அந்த நான்கு கேள்விகளுக்கும் நான்கு பதில்களிக் கூறி ஆறுதல் சொல்கிறார்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

அந்தப் பாடல் முழுவதும் கேள்விக்கான அற்புதமான பதில்களளை கண்ணதாசன் வடித்திருப்பார். 

எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டேவிடுங்கள் என கண்ணதாசன் அறிவுறுத்தியுள்ளார். "மயக்கமா கலக்கமா" எனும் பாடல் பலருக்கு உந்து சக்தியாக  இருந்தது. சினிமா வாய்ப்புத் தேடிச் சலித்துப்போன வாலி ஊருக்குப் புறப்பட முடிவெடுத்தபோது அவரின் வாழ்க்கையை மாரியது அந்தப் பாடல். திரைப் படத்தில் ஒலிக்கும் பாடல்கள் அதில் நடிக்கும் ஏதோ ஒரு பாத்திரத்தின் மனதை மாற்றுவதாக அமையும். அது கற்பனை.  உண்மையிலேயே அப்படிப்பட்ட பாடல்கள் பலருன் வாழ்க்கையை மற்றி அமைத்துள்ளன.

ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னைக்குச் சென்ற  வந்த சமயம் அது. அகில இந்திய ரேடியோ,

நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக வாய்ப்பு கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம் தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும் சரியாக  அமையவில்லை.நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வறுமைஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு. “சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராதுநம்ம ஊருக்கே போய்விடவேண்டியதுதான்என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கேவந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கிங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒருபிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க, ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்சரிபாடுங்கஎன்று சொல்லஸ்ரீனிவாஸ்மயக்கமா கலக்கமாபாடலை பாடத்துவங்குகிறார். பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ

இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டுஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சுஎன்று சொல்லி பெட்டியை எடுத்து உள்ளே வைத்தார்.  இந்தச் சம்பவத்தை வாலி பல பேட்டிகளில் சொல்லியுள்ளார்.

திரை உலக வாய்ப்புத்தேடி சென்னைக்குச் சென்ற கண்ணதாசனுக்கும் பல துன்பங்கள் துயரங்கள் நேர்ந்தன. அவற்றை எல்லாம் முறியடித்து எவரும் தொட முடியாத உச்சத்துக்குச் சென்றார் கண்ணதாசன்.  "மயக்கமா கலக்கமா எனும் பாடல்  மூலம் தன்  வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானத்துக்கு பதிலளித்தவர் கண்ணதாசன்.

சென்னைக்கு சென்று இறங்கியபோது தன்னை விரட்டிய அந்த இடத்தில் தனது செல்வாக்கை கண்ணதாசன் படம் பிடித்து வெளிப்படுத்தினார்.

கண்ணதாசன் அன்றைய  மெட்ராஸ்க்கு  சென்ற போது அவருக்கு வயசு 16 இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு  சென்றபோது கையில் பணம் இல்லை.  1942 அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயினில் இருந்து மாலையில் இறங்கினார். எங்கே போவதெனத் தெரியவில்லை. கண்ணதாசனின் ஊரவர்கள் இருக்கும் நகரத்தார் விடுதிக்குச் செல்ல வேண்டும். அது எங்கே இருக்கிறது.அந்த இடத்துக்கு எப்படிப் போவது எனத் தெரியாமல்  கடற்கரை வீதியால் நடந்தார்.  எங்கும் ஒரே இருட்டு விடிந்ததும் போகலாம் என நினைத்து ஒரு ஓரமாகப் படுத்தார்.

திடீரென யாரோ அவரைத் தட்டி எழுப்பினார். க்சண்ணைத் திறந்து பார்த்தபோது ஒரு பொலிஸ்காரர்   யார் நீ? இங்கே எதுக்குபடுத்திருக்கே?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை மிரட்டினார்.

தனது நிலைமையைச் செல்லி கெஞ்சினார் கண்ணதாசன்.  அதெல்லாம் ச்ரிப்பட்டு வரது என அந்தப் பொலிஸ்காரர் கண்ணதாசனை  விரட்டினார்.

  நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…”  என்று பொலிஸ்காரர் சொன்னார்.  காசு கிடைக்காததால் பொலிஸ்காரர் கண்ணதாசனை விரட்டி விட்டார். “இந்த ஏழையிடம் நாலணா இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லைஎன கண்ணதாசன்  பின்னாளில் எழுதினார்.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த கண்னதாசன் படிபடியாக உயர்ந்தார். ‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்என்கிற சொந்த நிறுவனத்தில்  ஜெமினி கணேசனை கதாநாயகனாக நடிக்க  ஸ்ரீதரின் இயக்கத்தில்  சுமைதாங்கிஎனும் படத்தைத் தயாரித்தார்.அந்த படத்தில் தான்  "மயக்கமா கலக்கமா" எனும் பாடல் இடம் பெற்றது.

 சென்னைக்கு சென்று இறங்கிய போது பொலிஸ்காரரால் விரட்டபட்ட இடத்தில்தான் அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. பாடலின் போது ஜெமினியைக் கடந்து செல்லும் கார்கள் அனைத்தும் கண்ணதாசனுக்குச் சொந்தமானவை.