Showing posts with label மும்பை. Show all posts
Showing posts with label மும்பை. Show all posts

Friday, June 6, 2025

உயிரைப் பறித்த வெற்றிக் கொண்டாட்டம்

 ஐபிஎல் வரலாற்றில்  முதன்முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஆடும் அணிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்டது பெங்களூர் அணி. சமூக வலைதளங்களிலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும்.

  18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர்  முதன்முறையாக சம்பியனாகியது,  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற்து. வெற்றிவீரர்களைக் காண்பதற்காக‌ கட்டுக்கடங்காமல்  ரசிகர்கள்  குவிந்தனர். நெரிசல் தள்ளு முள்ளு காரணமாகநேற்று மாலை வரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுமார் 100 க்கு மேற்பட்டவர்கள்    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் மயக்கமடைந்திருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பவுரிங் மருத்துவமனையில் 7 பேர், வைதேகி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தை, ஒரு பெண் அடங்குவர். மற்றவர்கள் 30-க்கும் வயதுக்கும் குறைவான ஆண்கள். இந்த இரு மருத்துவமனைகளிலும் 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 18 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக  பெங்களூர் சம்பியனாகியதை ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினார்கள்.    ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய 28 வயதான  மஞ்சுநாத் கும்பார்   என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற 21 வயதான பினந்தன் என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

சம்பியன் கிண்ணத்துடன் பெங்களூருக்குத் திரும்பிய வீரர்களை வரவேற்க  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  விமான நீலயத்துக்குச் சென்றார்.  பின்னர்,   வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமூக அவலைத்தளங்களில் இவை பகிரப்பட்டதால் ஆர்வமடைந்த ரசிகர்களும், மக்களும்  திரண்டனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைபொலிஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

 கிரிக்கெட் மைதானத்தின் 6, 7-வது கேட் பகுதியில் இலவச பாஸ் பெற்ற ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.   ந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்சிபி அணி ரசிகர் நவீன் கூறும்போது, ``கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கொண்டாட்ட மன நிலையில், சப்தம் போட்டுக்கொண்டு எல்லோரும் கும்பலாக ஓடினர். அதனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறியும், கீழே விழுந்தவர்களை யாரும் தூக்காமல், மிதித்துக் கொண்டே ஓடியதாலும் நிறைய பேர் காயமடைந்த‌னர். சிலர் இறந்து விட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை''என்றார்.

: பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த துயர சம்பவத்துக்கு கர்நாடக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது விளம்பரத்துக்காக அவசரகதியில் இந்த‌ விழாவை அரசு ஏற்பாடு செய்தது. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலேயே 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை முதல்வர் சித்தராமையா விளக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் வசதியோ, போதிய பாதுகாப்பு வசதியோ செய்யப்படவில்லை. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஆயிரக்கணக்கான ரசிக‌ர்கள் அம்பேத்கர் மெட்ரோ நிலையம், கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை ஆகிய மெட்ரோ நிலையங்களில் குவிந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறிய நிலையில், தடுப்புகளை தாண்டிக் குதித்து ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. இதனால் கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை உள்ளிட்ட 8 மெட்ரோ நிலையங்களையும் உடனடியாக மூட மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.

 35 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் குடிய மைதானத்தில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.திட்டமிடாது அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்த அநர்த்தம்  ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கிறிக்கெற்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. காலத்திற்கும் நீடிக்கும் வகையில் படிந்துள்ள இந்த கறையை கர்நாடக அரசு எப்படி  சரி செய்யப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.

 சென்னையும், மும்பையும்தலா 5  முறை சம்பியனாகின அந்த அணிகளுக்கும் அப்போது வரவேற்கப்பட்டன. திட்டமிடலும், ரசிகர்களின் கட்டுக்கோப்பும்  இருந்ததால் அசம்பாவிதம் அப்போது தவிர்க்கப்பட்டது.

 

Thursday, April 17, 2025

ஹைதராபாத்தை வென்றது மும்பை


 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதினநாணயச் சுழற்சியில்  வென்ற மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். முன்னாள் கப்டன் ரோகித் சர்மா, களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.

 மும்பை அணிக்காக 7 ஆண்டு (2018-24) விளையாடிய இஷான் கிஷான், ஐதராபாத  அணிக்காக விளையாடினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 5 விக்கெற்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது.  18.1 ஓவரில் 6 விக்கெற்களை இழந்த மும்பை 166  ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

 அபிஷேக் 40,ஹெட் 28,  நிதிஷ் குமார்ர் 19, கிளாசன் 37 , அனிகேத் 18, கம்மின்ஸ் 8 ஓட்டங்கள் எடுத்தனர்.  

163 வெற்றி இலக்குடன்  மும்பை களம்  இறங்கியது. ரிக்கிள்டனுடன், 'இம்பேக்ட்' வீரராக வந்த ரோகித் சர்மா இணைந்தார். ரோகித் 26 ,   ரிக்கிள்டன் 31 ,  சூர்யகுமார்26,, வில் ஜாக்ஸ் 36,  பாண்ட்யா 21  ஓட்டங்கள் எடுத்தனர்.  மும்பை அணி 18.1 ஓவரில்  6 விக்கெற்களை இழந்து 166 ஒடங்கள் எடுத்தது.  திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 21  ஓட்டங்கள் எடுத்தார்.

மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா. 8வது ஓவரின் 2வது பந்தை வீசினார். அப்போது இடது கணுக்காலில் வலி ஏற்பட, சிக்கல் ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்குப் பின், மீண்டும் பந்துவீசிய இவர், முதல் பந்தில் அபிஷேக்கை அவுட்டாக்கி அசத்தினார்.

  இதே போல அபிஷேக் அடித்த பந்தை (2.5 ஓவர்) பிடிக்க முயன்ற கரண் சர்மா, விரலில் காயமடைய, உடனே வெளியேறினார். முன்னணி பவுலரான இவர், பந்துவீச வரவில்லை.

பிரிமியர் தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் (ஐதராபாத்) 106 ஓட்டங்கள்  விளாசினார். இதன் பின் தொடர்ந்து ஏமாற்றிய இவர், 0, 2, 2, 17, 9 என அவுட்டானார். இந்தப் போடியிலும்  2 ஓடங்களுடன் வெளியேறினார்.கடையாக விளையாடிய‌ 6 போட்டியில் 32  ஓட்டங்கள்  மட்டும் எடுத்துள்ளார்.

பிரிமியர் அரங்கில் குறைந்த பந்தில் 1000  ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் (575 பந்து) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆன்ட்ரி ரசல் (545) உள்ளார். கிளாசன் (594), சேவக் (604), மேக்ஸ்வெல் (610), கெய்ல் (615), யூசுப் பதான் (617), சுனில் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

 

Tuesday, March 25, 2025

ருதுராஜ், ரச்சின் அரைசதம் சென்னை வெற்றி

 சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பைக்யை எதிர்த்து விளையாடிய சென்னை     4 விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது

  மும்பை அணிக்கு ரோகித் சர்மா  18 ஆவது முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றினார்.   ரியான் ரிக்கிள்டன் 13, வில் ஜாக்ஸ் 11  ஓட்டங்களில் வெளியேறினர். க‌ப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51  ஓட்டங்கள்  சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சிக்கிய சூர்யகுமார் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் 3,, திலக் வர்மா 31,, நமன் திர்  11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்  மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155  ஓட்டங்கள் எடுத்தது.  .

156 எனும் எட்டக்கூடிய  இலக்கை சென்னை விரட்டியது.  ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.   ரச்சின் ரவிந்திரா, கப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67  ஓட்டங்கள் சேர்த்த போது  56 ஓட்டங்கள் எடுத்த‌ ருதுருாஜ்  ஆட்டமிழந்தார்.   'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) ஆகிய இருவரும் விக்னேஷின் சுழலில் சிக்கினர்.


  மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4  ஓட்டங் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார்.சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), டோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சென்னையின் நுார் அகமது வென்றார்.

ரோகித் '18'

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். மூவரும் தலா 18 முறை 'டக்' அவுட்டாகினர்.

நுார் அசத்தல்

பிரிமியர் லீக் அரங்கில் மும்பைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை (4 ஓவர், 18  ஓட்டங், 4 விக்கெட்) பதிவு செய்த சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரானார் நுார் அகமது. இதற்கு முன், ரவிந்திர ஜடேஜா (4 ஓவர், 20 ஓட்டங்கள் , 3 விக்கெட், 2023, இடம்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தார்.

  பிரிமியர் லீக் அரங்கில் நுார் அகமதுவின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் குஜராத் அணிக்காக விளையாடிய இவர், மும்பைக்கு எதிராக 37/3 (4 ஓவர்) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

22 பந்தில்

அபாரமாக ஆடிய சென்னை கப்டன் ருதுராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது அதிவேக (22 பந்து) அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் குஜராத் அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடரும் சோகம்

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி, தனது முதல் போட்டியில் தொடர்ந்து 13வது ஆண்டாக (2013-2025) தோல்வியடைந்தது. கடைசியாக 2012ல் மும்பை அணி, தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிரிமியர் போட்டிக்காக சமீபத்தில் சென்னை வந்த 'தல' தோனியின் 'டி-சர்ட்டில்' 'மோர்ஸ் கோடு' ரகசிய மொழியில் 'கடைசியாக ஒரு முறை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

டோனி 43, கூறுகையில்,''நான் விரும்பும் வரை சென்னை அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். இது எனது அணி. நான் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தாலும், என்னை ரசிகர்கள் இழுத்துச் செல்வர்,'' என்றார்.

 

Sunday, February 16, 2025

மார்ச் 22 இல் ஐபிஎல் ஆரம்பம்


 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் மார்ச் 22 ஆம் திகதி ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை முதல் போட்டியில் விளையாட உள்ளன. மே 22 ஆம் திகதி இதே மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

பிளேஆஃப்கள் மே 20 முதல் மே 25 வரை நடைபெறும். குவாலிஃபையர் 1 , எலிமினேட்டர் போட்டிகள் முறையே மே 20, 21 ஆகிய திக‌திகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். தகுதிச் சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தா நகரில் நடைபெறும்.

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இந்த சீசனில் 65 நாட்களில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெறும்.   

Thursday, December 5, 2024

ஐபிஎல் ஏலத்தில் விலைப்படாத ஜாம்பவான்கள்


 ஐபிஎல் 2025 ஏலம் சவூதியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.   இந்த முறை எல்லா அணிகளும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலும் இளம் வீரர்களையே ஏலத்தில் எடுத்தது.  ஐபிஎல்  இலும்,  கிறிக்கெற் உலகிலும் சாதனை  படைத்த பல ஜாம்பவான்களை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை.

ஐபிஎல் 205 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்  இரண்டு நாட்களாக நடந்தது. இந்த ஏலத்திற்காக மொத்தம் 1574 வீரர்கள்  விண்ணப்பித்திருந்த நிலையில் மொத்தம் 577 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 283 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பங்கேற்க எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டித்தீர்த்தது இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாம் நாள் ஏலத்தில் பல அணிகளிடம் குறைவான தொகை மட்டுமே இருந்ததால் பல வீரர்களின் அடிப்படை விலை அதிகமாக இருந்தால் பல அணிகள் வீரர்களை எடுக்க தயக்கம் காட்டினர்.

ஏலம் போகாத வீரர்கள்:

டேவிட் வார்னர்:

 இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர் தனது அடிப்படை விலையாக 2 கோடியை நிர்ணயித்திருந்தார். ஆனால் அவரை ஏலத்தில் இறுதிவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. வார்னர் டெல்லி அணிக்காக அறிமுகமாகி பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கப்டனாக செயல்பட்டு 2016 ஆண்டில் ஐபிஎல் கோப்பையும் வாங்கிக்கொடுத்தார். அதன் பிறகு அணியில் ஏற்ப்பட்ட சின்ன மனகசப்பு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2023, 2024 சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடினாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

                                கேன் வில்லியம்சன்: 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 2015-2022 சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு வரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் 2023 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக 2023 சீசனில் இருந்து விலகிய நிலையில் 2024ஆம் சீசனில் ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்த மெகா ஏலத்தில் அடிப்படை விலையாக வில்லியம்சன் 2 கோடி நிர்ணயத்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்:

  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூரும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 2 கோடியை அவர் அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதிப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஜானி பேர்ஸ்டோ:

 இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனது அடிப்படை விலையாக் 2 கோடி நிர்ணயத்திருந்தார். கடந்த சீசன்களில் சரியாக விளையாடத நிலையில் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை

ப்ரித்வி ஷா:

 சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என்று பெரிதும் பேசப்பட்ட இந்திய வீரர் ப்ரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ஏலத்தில் தனது அடிப்படை விலையையும் 75 லட்சத்துக்கு  அவர் குறைத்த போதிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கடந்த முறை டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்தார் .

  அன்மோல்பிரீத் சிங் ,யாஷ் துல் -,மயங்க் அகர்வால் , பதும் நிசங்க, , பியூஷ் சாவ்லா,   கிறிஸ் ஜோர்டான் ,  சிக்கந்தர் ராசா,  சர்ஃபராஸ் கான் ,டுவைன் பிரிட்டோரியஸ் , , கே எஸ் பரத்  ஆகியோரும் விலைப்படவில்லை.

ரமணி

1/12/24

Sunday, November 10, 2024

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 1574 வீரர்கள் பதிவு


சவூதி  அரேபியாவின் ஜெட்டாவில்நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில்  நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் 2025 வீரர்களின் மெகா ஏலத்தில் 1,574 வீரர்கள் இடம் பெறுவார்கள் என  செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஏலத்தில் உள்ள மொத்த வீரர்களில் 1,165 இந்தியர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். மேலும், 48 இந்திய வீரர்களும், 272 சர்வதேச போட்டியாளர்களும் இந்த நிகழ்வில் தங்கள் பெயரைக் காண்பார்கள்.

ஏலத்தில் 1,117 அன் கேப் செய்யப்பட்ட இந்தியர்களில், 152 பேர் முந்தைய பதிப்புகளில் ஒரு உரிமைக்காக விளையாடியுள்ளனர்.

நாட்டிலிருந்து 91 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்ய விருப்பத்துடன் தென்னாப்பிரிக்கா பிரதிநிதித்துவத்தில் முன்னணியில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முறையே 76 மற்றும் 52 வீரர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடா வீரர்களும் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். சுவாரஸ்யமாக, இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் தங்கள் பெயரை வைத்துள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட பெயர்கள் உட்பட 25 வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க முடியும். ஏலத்திற்கு முன்னதாக மொத்தம் 48 வீரர்களை உரிமையாளர்கள் தக்க வைத்துக் கொண்டதால், இரண்டு நாட்களில் 204 இடங்கள் நிரப்பப்படும்.
320
பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், 1225 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள், 30 பேர் துணை உறுப்பு நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 48 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். உலகம் முழுவதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 272 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
கடந்த வருடங்களில் விளையாடிய 152 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். 965 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக இந்திய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதே போல உலக அளவில் 104 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத புதுமுக வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து 91 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்கள், இங்கிலாந்தில் இருந்து 52 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நியூசிலாந்து நாட்டில் இருந்து 39, வெஸ்ட் இண்டீஸிலிருந்து 33, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தலா 29 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
பங்களாதேஷில் இருந்து 13, கனடாவில் இருந்து 4, அயர்லாந்தில் இருந்து 9, நெதர்லாந்தில் இருந்து 12 என மொத்தம் 1574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் பங்கேற்கும் ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் அனைத்து அணிகளாலும் அதிகபட்சமாக 204 வீரர்களை மட்டுமே வாங்க முடியும்.
204
இடங்களுக்கு தான் 1574 வீரர்கள் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை வாங்க முடியும். அந்த 204 வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளிடமும் 641.5 கோடிகள் கையிருப்பு உள்ளன. இந்த ஏலத்தை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொலை பார்க்க முடியும்.
ஏலத்தில்  பங்கு பற்றும் வீரர்கள் விபரம்  :




நாடு வீரர்கள்
ஆப்கானிஸ்தான் 29
ஆஸ்திரேலியா 76
பங்களாதேஷ் 13
கனடா 4
இங்கிலாந்து 52
அயர்லாந்து 9
இத்தாலி 1
நெதர்லாந்து 12
நியூசிலாந்து 39
ஸ்காட்லாந்து 2
தென்னாப்பிரிக்கா 91
இலங்கை 29
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1
அமெரிக்கா 10
வெஸ்ட் இண்டீஸ் 33
ஜிம்பாப்வே 8

இத்தாலி வீரர் தாமஸ் ஜாக் டிராகா யார்?
இத்தாலியைச் சேர்ந்த வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான தாமஸ் ஜாக் டிராகா, ஜெட்டாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக்  மெகா ஏலத்தில்தாந்து பெயரைப் பதிவு செய்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாயன்று 1574 வீரர்கள் - 320 கேப்ட் வீரர்கள், 1224 அன்கேப் பிளேயர்கள் மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் - மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இடம்பெற்றுள்ள ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

சமீபத்தில் இத்தாலிக்குச் சென்ற முன்னாள்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜோ பர்ன்ஸ் அந்த வீரராக இருக்கலாம் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும்,  24 வயதான டிராகா மெகா நிகழ்வுக்கு பதிவு செய்துள்ளார்.ஏலப் பதிவுப் பட்டியலில், கனடாவின் ஹர்ஷ் தாக்கருக்கு சற்று முன், அவர் 325வது இடத்தில் உள்ளார்.

அவர் இந்த ஆண்டு ஜூன் 9 அன்று லக்சம்பர்க்கிற்கு எதிராக இத்தாலிக்காக ரி20 போட்டிகளில் அறிமுகமானார் மேலும் நான்கு ரி20 போட்டிகளில் பங்கேற்று எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் டிராகா பதிவு செய்வது இதுவே முதல் முறை என்றாலும் , அவர் ILT20 இல் மும்பை இந்தியன்ஸுக்குச் சொந்தமான MI எமிரேட்ஸ் அணியில் ஒரு பகுதியாக இருந்துள்ளார், மேலும் கனடா T20 லீக்கில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.


இத்தாலி ஒரு கால்பந்து பைத்தியம் பிடித்த தேசமாக இருந்தாலும், கிரிக்கெட் அந்த நாட்டில் குழந்தைகளின் படிகளை எடுத்துள்ளது மற்றும் இது பல்வேறு ஐசிசி-இணைந்த நிகழ்வுகளில் இடம்பெற்றுள்ளது.
ரமணி 

10/11/24