Showing posts with label தெரிந்த சினிமா. Show all posts
Showing posts with label தெரிந்த சினிமா. Show all posts

Thursday, February 29, 2024

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -87


 சினிமவின் மீது இருந்த ஆர்வத்தால்  வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னையில் கால் பதித்த பஞ்சு அருணாசலம்  சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர்   என சினிமாவின்  அனைத்திலும்  வெற்றிக்கொடி நாட்டினார்.

 பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார்.  பஞ்சு அருணாசலத்தின்  உறவினார்கள் பலர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும்தகக்கு  ஒரு சந்தர்ப்பம் தரும்படி யாரிடமும்  கேட்கவில்லை. பஞ்சு அருணாசலம் எழுதிய  ஒரே  ஒரு பாட்டு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

சாரதா ஏ.எல்.எஸ் தயாரித்த படம். பாடல் எழுத கவிஞர் ஊரில் இல்லை. அவசரமாக பாடல் தேவைப்பட்டது. கே.வி. மகாதேவன் அவர்கள் தான் இசை. அவருடைய உதவியாளர் புகழேந்தி பஞ்சுவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

அந்த புகழேந்தி பஞ்சுவை பற்றி கே.வி.எம்.மிடம் சொல்ல அவர் அதுக்கென்ன இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டை எழுதித் தரச்சொல்லு, நல்லா இருந்தா யூஸ் பண்ணிப்போம் என்று கூறினார். கே.வி.எம். எப்போதும் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார். பஞ்சுவும் ஒரு அருமையான பாடலை தர அனைவர் ஆமோதிப்புடன் பஞ்சுவின் பாடல் பதிவாகியது. அந்தப் பாடல்தான் ‘மணமகளே மணமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா

. பயத்துடன் பஜ்சு அருணாசலம் எழுதிய பாடல் அரை  நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை திருமண வைபவத்தைல் ஒலிக்கிறது. "  வாராயென் தோழி வாராயோ,  மணப்பந்தல் காண வாராயோ" எனும் பாடல் மணமகளை அழைத்துவரும் தேசிய கீதமாக  இன்றும் தமிழ் மக்கள் வாழும் நாடெங்கும்  ஒலிக்கிறது.அந்தப்பாடலை கண்ணதாசன் எழுதியதாக நம்பும் பலர் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.

" வாராயென் தோழி வாராயோ" தந்த வெற்றியால் கண்ணதாசனின் உதவியாளராக  இருந்த  பஞ்சு அருணாசலம் முழுநேரப் பாடலாசிரியரானார்.பஞ்சு அருணாசலம் என்றதும்  இளையராஜாவை அரிமுகப்படுத்தியவர் என்ற  ஒற்றை வரிதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் பலருக்கும் தெரியாத சங்கதி. ரஜினியின் அடையாளத்தை முதன் முதலில் மாற்ரியவர்  பஞ்சு அருணாசலம்.  வேகமாக நடப்படு கையைக் காலை ஆட்டுவது, சிகரெட்டைபிடிப்பது என்ர ரஜினியின் கெட்டப்பை "புவனா  ஒரு கேள்விக்குரியில் மாற்ரினார்.  ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல் ,  போன்ற படங்கள் ரஜினியின்  இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின. சகல கலா வல்லவன் என கமலை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.

.   இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.எம் செட்டியர் 'நானும் ஒரு பெண்' படத்தில் பூப்போல பூப்போல பிறக்கும் என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கவியரசர் வருத்தப்படவில்லை, வாழ்த்தினார். இவராக வலியப் போய் யாரிடமும் வாய்ப்புக் கேட்டதில்லை. அதுவாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை உபயோகித்துக் கொள்வார், அவ்வளவுதான். கவிஞர் ஊரில் இல்லாத சமயங்களில் பல திரைப்பட கம்பெனிகளுக்கு டிஸ்கஷன் செல்வார். தேவர் பிலிம்ஸ் மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் செல்வார். அவர் சொல்லும் சீன்கள் பிடித்தால் அதற்கேற்றார் போல் ஒரு தொகையை கொடுப்பார்கள். சினிமாவிற்கென்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும் தனியாளாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதும் பேரெடுப்பதும் கஷ்டம். பஞ்சுவிற்கு திடமான எந்தக் குறிக்கோளும் இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலத்தான் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புரட்சித்தலைவருக்கும் கவிஞருக்கும் அரசியல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்தது. இனி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்தார். அந்தச் சமயமத்தில் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு எம்.எஸ்.வி. தான் இசை. கவிஞர் எழுத முடியாத காரணத்தால் பஞ்சுவை கூப்பிட்டு தான் போட்ட டியூனுக்கு பாட்டு எழுதச் சொல்லியிருக்கிறார். அதன்படி பஞ்சுவும் ‘பொன் எழில் பூத்தது புது வானில் என்ற பாடலையும், “என்னை மறந்ததேன் தென்றலே என்ற பாடலையும் எழுதித் தந்திருக்கிறார். பாடலும் பதிவாகி கேஸட் வடிவத்தில் எம்.ஜி.ஆரிடம் சென்றடைந்திருக்கிறது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், “இது கண்ணதாசன் எழுதிய பாடல், என்னை ஏமாற்ற பஞ்சு எழுதிய பாடல் என்று கூறுகிறீர்கள் என்று பாட்டை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

பஞ்சுவுக்கோ அழகையே வந்துவிட்டது. பிறகு எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “என் மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களிடம் பொய் சொல்வேனா?” என்று பலவாறாக சத்தியம் செய்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆர் உண்மையை உணர்ந்து பாடலை பாராட்டியதோடு, “பஞ்சுவை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல், இன்னும் வாய்ப்புகள் தருகிறேன், என்ற கூறியிருக்கிறார்.

ஸ்.பி. முத்துராமன், தேவராஜ், மோகன் போன்றவர்கள் பஞ்சுவுடன் சேர்ந்து ஒரு குழுவானர்கள். உறவு சொல்ல ஒருவன், உறவாடும் நெஞ்சங்கள், மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றன. இதன்பிறகு பஞ்சு ஒரு தயாரிப்பாளர் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் தமிழ்படங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தால் 50 நாட்கள் ஓடும். மிகவும் நன்றாக இருந்தால் 100 நாட்கள் ஓடும். மிக மிக நன்றாக இருந்தால் 175 நாட்கள் ஓடும்.

இந்திப் படங்களைப் பார்த்து, கிந்திபாடல்களைப் பாடிய தமிழக  ரசிகர்களை தமிழ்ப் படத்தின் பக்கமும், பாடல்களின் பக்கமும் திருப்பியதில் பஞ்சு அருணாசலம்  முதன்மையானவர். 

  

Friday, October 27, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 84

வசீகரிக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண், அழகான சிரிப்பு  என்பன  ஈ.வி.சரோஜாவை  நினைவு படுத்துபவை. கதாநாயகி, இரண்டாவது கதாநாயகி, தோழி, நகைச்சுவை,  குணசித்திரம் எதுவாக  இருந்தாலும்  ஜமாய்ப்பவர் ஈ.வி.சரோஜா. கலை அரசி என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஈ.வி.சரோஜா நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். நடனம் தான் அவரை திரை உலகுக்கு அழைத்து வந்தது.

வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக, எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.

1935ல் திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது மகளாகப் பிறந்தார். பிறந்த ஊரின் முதல் எழுத்துடன், தந்தையின் பெயரையும் சேர்த்து ஈ.வி.சரோஜா என்று பெயர் வைத்தார். இவருடன் மூத்த அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர்.வீட்டில் ஒரே மகள் என்பதால் பெற்றோர் இவரை சீரும் சிறப்புமாக மகாலெட்சுமி போல் வளர்த்தனர். சிறுவயது முதலே நடனமாடுவது, பாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவரது 8 ஆவது  வயதில் தந்தை காலமானார்.

வழுவூர் ராமையாபிள்ளையிடம் ஈ.வி.சரோஜா நடனம் கற்றார். 1952ல் என் தங்கை என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்து இருந்தார்.

பணமின்றி வறுமையில் வாழ முடியாது என்ற நிலையில் இறந்து போகிறார் ஈ.வி.சரோஜா. சோகம் தாங்காமல் தானும் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறார் எம்ஜிஆர். படம் கதை எதிர்மறையாக வெளியானதால் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எம்ஜிஆர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே இல்லை.955ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் கே.ஏ.ராமசாமி, ராஜசுலோச்சனா நடித்த நீதிபதி என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் ஈ.வி.சரோஜாவும், அவரது தோழி விஜயலெட்சுமியும் இணைந்து அற்புதமாக நடனமாடினர்.

குலேபகாவலியில் குல்சார் என்ற கதாபாத்திரத்தில் சரோஜா தோன்றி நடித்து அசத்தினார். ஜிக்கியின் பின்னணி குரலில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபுன்னு அசத்தலாக பாடி, ஆட்டம் போடுவார்.

பெண்ணரசி என்ற படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார். பலே ராமுடு என்ற தெலுங்கு படத்தில் நடனமங்கையாக அறிமுகமானார்.

1956ல் வெளியான அமரதீபம், பாசவலை படங்களில் நடித்து நடிப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தார். 1956ல் லேனா செட்டியார் இயக்கத்தில் எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி மதுரை வீரன் படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கிள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார்.

வாங்க மச்சான் வாங்க என்ற பாடலுக்கு ஆடிப்பாடி எம்ஜிஆரை கலாய்த்திருப்பார். அடுத்து கே.ஏ.தங்கவேலு, பானுமதி இணைந்து நடித்த ரம்பையின் காதலி படத்தில் ஊர்வசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

1957ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் படத்தில் அபராஜிதா என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து தில்லானா பாட்டுப்பாடி என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடுவார். ஜெமினிகணேசன், சாவித்ரியின் நடிப்பில் வெளியான கற்புக்கரசியில் சசிகலாவாகத் தோன்றினார்.

எங்கள் வீட்டு மகாலெட்சுமியில் பட்டணம் தான் போகலாமடி பொம்பள என்ற பாடலுக்கு ஆடிப்பாடி ஜமாய்த்திருப்பார். வீரக்கனல், காத்தவராயன், பிள்ளைக்கனியமுது படங்களில் நடித்து முத்திரை பதித்தார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். 1960ல் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் படிக்காத மேதை படத்தில் நடித்தார்.


 டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் ஆடவந்த தெய்வம் படத்தில் பைரவியாக தோன்றி அசத்தினார். 1961ல் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பாக்ய லட்சுமி படத்தில் ஜெமினியின் 2வது மனைவி ராதாவாகத் தோன்றி அசத்தினார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலில் சௌகார் ஜானகி உடன் வீணை வாசித்தபடி அசத்தலாக நடித்தார்.

நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? பாடலில் ஈ.வி.சரோஜா பின்னி எடுத்திருப்பார்.

அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்

குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.

‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்

படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.

சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘

ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.

Tuesday, October 10, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 82

பத்மினி,கே.ஆர்.விஜயா,சரோஜாதேவி,லக்ஷ்மி, ஜெயலலிதா  போன்ர நட்சத்திரங்கள்  மின்னிக்கொண்டிருக்கும் போது  "இயக்குனர் சிகரம்"கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான "அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகமானார் சுஜாதா. பாலச்சந்தரின் அறிமுகங்கள் என்றைக்குமே சோடைபோனதில்லை. சுஜாதாவும் தன் திறமையினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம்  பிடித்தார்.கே.ஆர்.விஜயா,சரோஜாதேவி,லக்ஷ்மி, ஜெயலலிதா  போன்ர நட்சத்திரங்கள்  மின்னிக்கொண்டிருக்கும் போது  "இயக்குனர் சிகரம்"கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான "அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகமானார் சுஜாதா. பாலச்சந்தரின் அறிமுகங்கள் என்றைக்குமே சோடைபோனதில்லை. சுஜாதாவும் தன் திறமையினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம்  பிடித்தார்.

சினிமாவுக்கும் சுஜாதாவின்  தகப்பனுக்கும் ஏழாம் பொருத்தம். சினிமா பற்றிய செய்திகளைப் பார்ப்பதற்கே தடை விதித்தார். அந்த வீட்டில் இருந்து சினிமாவை ஆட்சி செய்ய   பெண்  ஒருவர்  புறப்பட்டதுதான் விதியின் விளையாட்டு. இலங்கையில் பிறந்து வளர்ந்த சுஜாதாவுக்கு சினிமாவில் ஆர்வ் அம் இருக்கவில்லை. ஆசிரியையாக வேண்டும் என்பதே அவரது கனவு.இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த  பிறகு "பொலிஸ் ஸ்டேஷன்"என்ற மலையாள நாடகத்தில் முதல் முதலாக மேடை ஏறிய சுஜாதா நடித்த முதல் படமாக கிருஷ்ணன் நாயரின் இயக்கத்தில் உருவான "தேஜஸ்வினி"என்ற மலையாளப் படம் அமைந்தது.

அந்தப் படத்தில் கதாநாயகனைக் கட்டிப்பிடித்து  நடிக்க வேண்டிய காட்சி கள் ஏராளமாக இருந்ததால்  அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு சென்றபோது சரியாக நடிக்க வேண்டுமே என்று சுஜாதா வேண்டாத தெய் வங்களே இல்லை.ஆனால் முதல் நாள்  அப்படிப்பட்ட காட்சிகள் எதையும் கிருஷ்ணன் நாயர் படமாக்கவில்லை.அதற்கு மாறாக காதலனின் கையைப் பிடித்தபடி சுஜாதா கண்ணீர் விடும் காட்சியைப் படமாக்கினார் அவர். முதல் நாள் படப்பிடிப்பிலே அன்று கண்ணீர் சிந்தத் தொடங்கிய சுஜாதா தன்னுடைய கடைசிப் படமான "வரலாறு"படம் வரை அதை நிறுத்தவே இல்லை.

எக்ஸ்பிரஸ்"படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அந்தப் படத்தில் நடிக்க அவரைத் தேர்ந்தெடுத்தார் பாலச்சந்தர்.அந்தப் படத்தில் அரை நிஜாரும்,குட்டைப் பாவாடையும் அணிந்து  கொண்டு கவர்ச்சிகரமான தோற்றத்தில் டூயட் பாடிய சுஜா      தாவை  நெருப்பு போல்  வாழ்ந்த  "அவள் ஒரு தொடர்கதை"நாயகி கவிதாவின் பாத்திரத்துக்கு பாலச்சந்தர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று அப்போது ஆச்சர்யப்படாதவர்களே இல்லை.

அந்தப் பாத்திரத்திலே நடிக்க கே.பாலச்சந்தரும்,அந்தப் படத்தின் தயாரிப் பாளரான ராம.அரங்கண்ணலும் முதலில் தேர்ந்தெடுத்த நடிகை லட்சுமி.   மூன்று மாதங்களுக்குள் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிக்க அவர்கள் திட்டமிட்டு இருந்ததால்  அப்போது பல படங்களில்  இரவு பகல் பாராமல் மூன்று ஷிப்டுகள் நடித்துக் கொண்டிருந்த லட்சுமியால் அந்தப் பட வாய் ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கவிதா பாத்திரத்துக்கு கே.பாலச்சந்தர்  சுஜாதாவைத் தேர்ந்தெடுத்தபோது  அவர் பேசிய மொழி சிங்களம்,மலையாளம்,தமிழ் ஆகிய மூன்றும சேர்ந்த புது மொழியாக இருந்தது.ஆகவே படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு  முன் னாலே சரளமாகத் தமிழில் பேச அவரை பயிற்சி எடுத்துக்கொள்ளச்  சொன்னார் பாலச்சந்தர்.

அந்தக் கவிதா பாத்திரம் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று அப்போது சுஜாதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இரவு பகல் பாராமல் முறையாகத் தமிழிலே பேச பயிற்சி எடுத்துக் கொண்டார் சுஜாதா.அவரது கடும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.


தமிழிலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "அவள் ஒரு தொடர்கதை " பின்னர் தெலுங்கு,கன்னடம்,இந்தி,பாங்களா என்று பல மொழிகளில் உருவானது. தமிழிலே சுஜாதா ஏற்றிருந்த கவிதா பாத்திரத்தை தெலுங் கிலே ஜெயப்பிரதாவும்,கன்னடத்திலே சுஹாசினியும்,வங்க மொழியில் மாலாசின்ஹாவும்இந்தியிலே ரேகாவும் நடித்தனர்.புதுமுகமான சுஜாதா தந்த உயிரோட்டமான நடிப்பில் பாதியைக் கூட  அனுபவம் வாய்ந்த அந்த நடிகைகளால் தரமுடியவில்லை.

அறிமுகமான முதல் படத்திலேயே படத்தின் ஆணிவேராக இருந்த பாத்தி ரத்தை  ஏற்று சுஜாதா வெற்றி பெற்றிருந்ததால் அவரை முன்நிறுத்தி "அன் னக்கிளி,மயங்குகிறாள் ஒரு மாது,வாழ்ந்து காட்டுகிறேன்,ஒரு கொடியில் இரு மலர்கள்"என்று பல படங்கள் உருவாகத் தொடங்கின. 

"அவள் ஒரு தொடர்கதை,மயங்குகிறாள் ஒரு மாது"போன்ற படங்கள் மேல்தட்டு ரசிகர்கள் மத்தியில் சுஜாதாவிற்கு ஒரு அங்கீகாரத்தை தேடித் தந்தது என்றால் அவரைப்  பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்த பெருமை தேவராஜ் மோகன் இயக்கத்திலும்,பஞ்சு அருணாச்சலத்தின் திரைக்கதை வசனத்திலும் உருவான  "அன்னக்கிளி" படத்தையே சாரும். அப்படி அவரை கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அந்தப் படத் திலே இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்குப்  பங்கு உண்டு.

அன்னக்கிளியைத் தொடர்ந்து எஸ்.பி,முத்துராமன் இயக்கத்திலே "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது"என்ற நியூ வேவ் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார் சுஜாதா.அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

1976 ஆம் ஆண்டில் மட்டும்  பத்து தமிழ்ப் படங்களில் நடித்திருந்த சுஜாதா அது தவிர பல மலையாளப் படங்களிலும் ,தெலுங்குப் படங்களிலும் அந்த ஆண்டில் நடித்திருந்தார்.அந்த பட எண்ணிக்கையைப் பார்க்கும்போது அந்த ஆண்டில் ஏறக்குறைய எல்லா நாட்களும் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை  அவர் கழித்திருக்கிறார் என்பது தெரிய வரு கிறது.

அந்த ஆண்டில் அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்கள் அவரது கதாபாத்திரத்தை முன்நிறுத்தி எடுக்கப்பட்டிருந்த படங்கள்.தமிழ்த் திரைப் படங்களைப் பொறுத்தவரையில் கதாநாயகிகளை முன்னிறுத்தி எடுக்கப் படும் படங்கள் படங்கள் வெற்றி பெறாது என்ற என்ற எண்ணம்  எழுபது களில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகவும் அழுத்தமாக இருந் தது.அந்த எண்ணத்தை   சுஜாதா நடித்த பல திரைப்படங்கள் உடைத்து எறிந்தன.  திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் சுஜாதா  படத்தில் இருந்தாலே படங்கள் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையை அவர் நடித்த பல படங்களின் வெற்றி உருவாக்கியது.

தமிழ்த் திரையுல கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற நிலையிலும் மிகப்பெரிய நடிகை என்ற அந்த கிரீடத்தை அணிந்து கொள்ளாமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழக ஆசைப்பட்ட   ஒரு சாதாரணப் பெண்ணாகவே வாழ்ந்தார் சுஜாதா.

ஆனால் அவர் விருப்பப்பட்டபடி அவரை வாழ விடாமல் அவரைச் சுற்றி ஒரு மாயத் திரையை உருவாக்கி வைத்திருந்தார் சுஜாதாவின் சகோதர ரான மேனன். திரையுலகில் அடி எடுத்து வைத்த ஆரம்ப நாட்களில் தன் னுடைய சகோதரர் மேனனின் முழு கட்டுப்பாட்டில்  இருந்த சுஜாதாவால் தனது சகோதரனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அவர் விருப்பப் பட்ட படத்தில் மட்டுமே அப்போது சுஜாதாவால் நடிக்க முடிந்தது. சுஜாதா வின் பணம்,அவரது கால் ஷீட்டுகள் ஆகிய எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொண்டிருந்த மேனனின் அனுமதியின்றி சுஜாதாவை யாரும் சந்திக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார் அவர்.

1974 ஆம் ஆண்டில் "அவள் ஒரு தொடர்கதை"யின் மூலம் தமிழ்ப் பட உல கில் அறிமுகமான சுஜாதா அடுத்த நான்கு ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 60."இயல்பான நடிப்பிற்கு இவரை மிஞ்சக் கூடிய நடிகைகள் யாரும் எல்லை" என்ற பாராட்டை எல்லோரிடமும் பெற்ற சுஜாதாவை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு .டி .எம் இயந்திரத்தைப் போலத்தான் பார்த்தார்கள்.சுஜாதா இரவும் பகலும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நடித்துக் கொண்டிருக்க அவர் சம்பாதித்த பணத்தில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இது சுஜாதாவின் வாழ்க்கையில் மட்டும் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல என்பதும் தமிழ்த் திரையுலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையில் மிகச் சில நடிகைகள் தவிர எல்லா நடிகைகளும் இப்படிப்பட்ட சூழ்நிலை யில்தான் வாழ்ந்து வருகிறார்கள். திருமணமும் அவரது வாழ்க்கையை  மீட்கவில்லை.