Showing posts with label கோட்டாபய. Show all posts
Showing posts with label கோட்டாபய. Show all posts

Tuesday, May 31, 2022

பிரதமர் புதிசு அரசாங்கம் பழசு

  

அரசாங்கத்துக்கு எதிரான மக்களின்  எதிர்ப்பலை மீரிகானவில்  சூறாவளியாக சுழன்றடித்தது.அந்தச் சூறாவளி கோல்பேசில் தர்போது நிலைகொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ,அன்றைய பிரதமர் மஹிந்தவுக்கும் எதிராகபோராட்டம்  சூடுபிடித்தபோதுமஹிந்த ராஜபக்ஷ பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மஹிந்தவுக்குப் பின்னர் பிரதமர் யார் என்ற கேள்வி  எழுந்தபோது பலரின் பெயர்கள் உலவின. ரணில் பிரதமராகப் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிரவைத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்  படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை பிரதமர் பதவி தேடிச் சென்றது.

தனி ஒருவனாக பாராளுமன்றத்தில் இருக்கும் ரணிலுக்குப் பின்னால் செல்லப் போகும்  எம்பிக்கள் பற்றி அறிவதற்கு பொது மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்  போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் மனித்தியாலக் கணக்காக வரிசையில் நிற்கின்றனர். எரிபொருளுக்காக வாகனங்கள் வரிசை கட்டி காந்திருக்கின்றன. பெற்றோல் , டீசல் விலை ஏறியதும்  மாட்டு வன்டியில் பாராலுமன்றத்துக்குச் சென்ற கனவான்கள் யாரும் மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்கவில்லை.

 அந்தக் கனவான்கள்  ஜனாதிபதியின் முன்னால் வரிசையாக நின்று அமைச்சுப் பதவியைப் பெற்றார்கள்.  ஜனாதிபதியை மிக மோசமாஅக்த் திட்டியவர் தான் ஜனாதிபதியின் முகத்தைப் பார்க்கவில்லை என்றும்  சிரிக்கவில்லை என்றும் கதையளந்தார். அவர் ஜானாதிபதியின் முகத்தைப் பார்த்து வாய் நிறைய சிரிக்கும் படத்தை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலகம்  மூக்கை உடைத்தது.

- மே 13 அன்று நான்கு, மே 20 அன்று ஒன்பது, மே 23 அன்று எட்டு பேர் அமைச்சரானார்கள். ஜனாதிபதியையும், பிரதமரையும் சேர்த்து 23  பேர் அமைச்சரவையில் உள்ளனர்.இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்  மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். பதவியைக் காப்பாற்றுவதற்காக மெளனமாக இருந்தவர்கள் எப்படி இலங்கையை மீட்டெடுப்பார்கள் என்ற‌ கேள்விக்கு பதில் இல்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரிக் கட்டமைப்பை சிதைத்த போது, வருடாந்தம் ஏறக்குறைய 600 மில்லியன் ரூபா பெறுமதியான கருவூலத்தை பறித்த போது, இதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக எதிர்ப்புக் குரல் எழுப்ப முதுகெலும்போ தைரியமோ  இலாதவர்கள்தான் இப்பொழுதும் பதவி ஏற்றுள்ளார்கள்.

புதிய அமைச்சர்களில் பலர்     நெல் அறுவடையில் நாடு கிட்டத்தட்ட 60% இழந்துள்ள நிலையில் தெருக்களில்; பிரபலமற்ற சர்க்கரை மற்றும் பாமாயில் ஊழல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பூண்டு ஊழல் ஆகியவற்றில் கருவூலம் கிட்டத்தட்ட ரூ.16 பில்லியனை இழந்தபோது அவர்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர்; விவசாய அமைச்சகம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அசுத்தமான உரத்திற்கு மாற்றாக ஒரு அவுன்ஸ் உரம் கூட பெறாமல் கொடுத்தபோது அவர்கள் மௌனம் காத்தனர்.  

  அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதிய கோட்டையின் துணை நிறுவனத்துடன் யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானபோது அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அமைச்சரவை ஒப்புதலின் விதிமுறைகளை மீறி எரிசக்தி நிறுவனம். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அமைச்சர்களால் இம்முறையாவது சிறப்பாகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் எழுவது தவிர்க முடியாதது.

கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி  ஐக்கிய க்கள் சக்தி, சிலங்கா சுதந்திரக் கட்சி,  முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்ரின் உறுப்பினர்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர். கட்சிக்குத் துரோகம் செய்ஹ இவர்கள் மக்களுக்கு  உதவி செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

 

பஞ்சம் ,பாட்டிணியால்  வாடிய  வெளிநாடுகளைப் பார்த்து பரிதாபப்பட்ட  இலங்கை மக்களைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

 

 

 

 

 

 

 

Monday, March 28, 2022

சர்வதேசத்தின் கவனத்தைப் பெறாத சர்வகட்சி மாநாடு

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்தது சுபீட்சமானதொரு வாழ்க்கை கிடைகும் என எதிர் பார்த்த மக்களுகு ஏமாற்றமே  மிஞ்சியது. முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய இங்கையின் பொருளாதாரம் கீழ் நோக்கி விழுந்தது. பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள்  புறம் தள்ளபட்டன. சர்வ கட்சி மாநாட்டை நடத்தினால் பிரச்சினைகளுக்குத்த் தீர்வு காணலாம் என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சொன்னதால் இன்றைய ஜனாதிபதி கோட்டா சர்வ கட்சி மாநாட்டை நடத்தினார்.

மக்களின் கோபப்பார்வை  அரசின் மீது இருந்த போது சர்வகட்சி மாநாடு  பேசுபொருளாகவில்லை..  அரசியல் அவதானிகள் எதிர் பார்த்தது  போல் சர்வகட்சி மாநாடு பொய்த்துப் போனது. நாடு இருக்கும் நிலையைச் சீரமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட கூட்டணிக் கட்சிகளே தயாராக இல்லாதபோது எதிர்க் கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றுவது சாத்தியமில்லாதது.

சர்வ கட்சிமாநாடு நடைபெறப் போவதாக கதை அடிபட்ட போதே எதிர்ப்பலைகள் ஆரம்பமாகிவிட்டன.பிரதான சிங்கள எதிர்க் கட்சிகள்  சந்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்தன. தமிழ் அரசுக் கட்சியும் சித்தார்த்தனும்  சம்பந்தன்,சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.  இவர்கள்  மூவரும் சர்வ கட்சி மாநாட்டில் காரசர்மாகக் கருத்துச் சொன்னார்கள். இவர்களுடன் சேர்த்து ரணிலும் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். ஊடகங்கள் அனைத்தும் இவர்களின் உரைக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அங்கீகரிக்கப்பட 27 அரசியல் கட்சிகளுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது.  சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சர்வ  கட்சி மநாட்டைப் புறக்கணித்தது. சர்வ கட்சி மாநாடு இலங்கைக்குப் புதியதல்ல.  காலத்தை இழுத்தடித்து பிரச்சினையை மறக்கடிக்கச் செய்வதே முன்னைய அரசுகளின் வேலைத் திட்டமாக இருந்தது. ஆனால், முன்னைய அரசுகளின் சர்வகட்சி மாநாடுகள் எவையும் உருப்படியான முடிவுகளை எட்டவில்லை.  ஜே.ஆர். ஜயவர்கன, பிறேமதாஸ,   ,சந்திரிகா  ஆகியோரின் சர்வகட்சி மாநாடுகள்  கூடிக்கலைந்தன. அன்று அரசியல்வாதிகளின் கருத்துகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.  பெளத்த மதகுருமாரின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டன.

  தலைப்புச் செய்தியாக வரவேண்டிய சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள்  பெட்டிச்செய்தியாகப் பிரசுரமாகின.   சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள் வலுவிழந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் சென்றது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உண்மையான உள்வளர்ச்சி இல்லாத போலி பொருளாதாரக் கட்டமைப்பே இலங்கையின் மோசமானநிலை க்குக் காரணம். விவசாயத்தை கைவிட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை நம்பி இருப்பது,ஆடம்பரமாக மாற்ற திட்டமிட்டு பொருளாதாரத்தை கடனாக வாங்கி செலவு செய்தது, மதவாத இனவாத அரசாங்கம்  

 போன்ற பல சம்பவங்கள் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரண. இப்போது குடும்ப ரசியல் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்களியும் அரவனைது  புதிய அரசியலைச் செய்ய வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இன வாத மனநிலையில் இருப்பவர்கள் மாறினால் இலங்கை சொர்க்கா புரியாக மாறும்.

Friday, January 28, 2022

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்த ஆண்டகை

இலங்கையில் உள்ள  கத்தோலிக்க மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை எனக்கூறிய கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உரிய விசாரணையை நடத்த உதவியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக கடந்த வாரம் கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். விகாரைகள்,சைவ ஆலயங்கள்,மசூதிகள், பாடசாலைகள்,வைத்தியசாலைகள் போன்றவையும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரையாகின.எங்கெங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படக்கூடாதோ அங்கெங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசாங்கத்தின் மீது நம்பிகை இழந்த காரணத்தினால்  ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைக் கோருவதற்கான  முடிவை எடுத்ததாகவும்  இனிமேலும் அரசாங்கததின் உறுதிமொழியை நம்ப முடியாதெனவும் பேராயர் கூறினார்.பிரதான வல்லரசு நாடுகள் மூலமாகவே இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராயர்.

  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  28 ஆம் திகதி நடைபெற்ற தொடர் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட,  காயமடைந்த  மக்களுக்கு உரிய நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

 ஈஸ்டர் ஞாயிறு அன்று,   தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தவர்களையும், நட்சத்திக் கோட்டல்களையும் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறைந்தது 253 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள், ஆனால் , இங்கிலாந்து, டென்மார்க், போர்ச்சுகல், இந்தியா, துருக்கி, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பங்களாதேஷ், அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப்  பயங்கரவாதத் தாக்குதலினால் கொல்லப்பட்டனர்.

நேஷனல் தவ்ஹீத் ஜமாத் (ண்TJ) எனப்படும் அதிகம் அறியப்படாத உள்ளூர் போராளி இஸ்லாமியக் குழுதான் இதற்குக் காரணம் என்று இலங்கை அதிகாரிகள்   தெரிவித்தனர் .முன்னதாக ஐஎஸ் அமைப்பு  தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. நாட்டை உலுக்குய இத் தாக்குதல் போன்று மேலும்ம் பல தாக்குதல்கள் நடை பெறலாம் என்ற அச்சம் உருவானது.  துரிதமாக நடைபெற்ற விசாரனைகளின் பின்னர்   கிழக்கு நகரமான சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றை பொலிஸார்  சோதனையிட்டதில் குண்டுவெடிப்பின் மூளையாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய போதகர் சஹ்ரான் ஹாசிமின் உறவினர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் பல இடங்களிலும் இருந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்குவதில் தீவிரமாக செயற்பட்டவர்களில்   பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒருவர். மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கோட்டாபய வெற்றிபெற்ற பின்னர் அவருடைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளின் பின்னரான சூழலில். நம்பிக்கையிழந்து விட்டார்.

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மகிந்த ராஜபக்ஷ .நாவுக்குச் சென்றார். இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான குற்றச் சாட்டுகள் .நாவில் பாரடுத்தபட்டுள்ளன.

உள்ளகப் பொறிமுறையின் மூலம விசாரணை நடத்தலாம் என இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்தது. அரசாங்க்ம் நடத்தும் விசாரணையில் இலங்கைத்  தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அந்த இடத்துக்கு இப்போது கத்தோலிக்க மக்கள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் ஈஸ்டர் தாக்குதலை  ஜனாதிபதி விசாரணைக்குழு விசாரிக்க ஆரம்பித்தது.

  பொரளை தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டவருக்கும் அங்கு வைக்கப்பட்ட குண்டுக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப் படுத்தும் காணொழிகள் வெளியாகி உள்ளன.   அந்த  தொடர்பான விசாரணைகள் கூட உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளதென்றும் பேராயர் கூறியுள்ளார்.

பேராயரை  சாந்தப்படுத்த அரசாங்கம்  மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கலுக்கும் கயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பேராயர் உறுதியாக இருக்கிறார். ஆணைக்குழுவின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து  வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரனையில் நம்பிக்கை இழந்த   பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை   நீதிகோரி சர்வதேச சமூகத்தை நாடவுள்ளதாகப் பல முறை கூறியிருந்தார். அது  தொடர்பான எந்த ஒரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.  செயற்பாடுகள் எதனையும் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விசாரணையை நடத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதும் அறிவிப்பில் இருக்குமா அல்லது செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடுமா என்பதை காலம் தான் கூற வேண்டும்.