Wednesday, July 26, 2023

மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டம்


    மகளிர்  உலக கிண்ண   9 வது சீசனை அவுஸ்திரேலியாவ் உம் நியூஸிலாந்தும் இணைந்து நடத்துகின்றன.    ஜூலை  20 ஆம் திகதி தொடங்கிய போட்டி   ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைறும் .   1988 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்கள்  உலகக் கிண்ணப் போட்டிகளில்  என்ன விதிமுறைகள் பின்பற்ற்றப்பட்டடதொ

  அதே விதிமுறைகளை பின்பற்றியே   மகளிர்  உலகக்  கிண்ணப் போட்டியும்  நடக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த  உலகக்கிண்ணப் போட்டிகளில் 24 நாடுகள் பங்குபற்ரின  ஆனால், இம்முரை  முதன்  முதலாக 32 நாடுகள் 64  போட்டிகளில் விளையாடுகின்றன. அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், தென் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா , கனடா, கோஸ்டா ரிக்கா, ஜமேக்கா, சாம்பியா, மொரோக்கோ, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா, பிறேஸில், ஆர்ஜென்ரீனா, நோர்வே, ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹைட்டி, போர்ச்சுகல், பனாமா ஆகிய நாடுகள் உகலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன.

பரிசுத் தொகை

சம்பியனாகும்  அணிக்கு  4,290,000 டொலரும், ஒரு வீரருக்கு 270,000 டொலர் என்று மொத்தம் 10,500,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

ரன்னேஸ் அணிக்கு  3,015,000 டொலரும், ஒரு வீரருக்கு 195,000 டொலர் என்று மொத்தம் 7,500,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.

மூன்றாவது பரிசை வெல்லும் அணிக்கு 2,610,000 டொலரும், ஒரு வீரருக்கு 180,000 டொலர் என்று மொத்தம் 6,750,000  டொலர்  பரிசாக வழங்கப்படும்.

 நான்காவது பரிசை வெல்லும்  அணிக்கு  2,455,000 டொலரும், ஒரு வீரருக்கு 165,000 டொலர் என்று மொத்தம் 6,250,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

 5  ஆம் இடத்தை பிடிக்கும் அணிகலூக்கு   2,180,000 டொலரும், ஒரு வீரருக்கு 90,000 டொலர் என்று மொத்தம் 17,000,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

9௧6 ஆம் இடத்தை பிடிக்கும் அணுகளுக்கு  1,870,000 டொலரும், ஒரு வீரருக்கு 60,000 டொலர் என்று மொத்தம் 26,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.

17௩2 ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு  1,560,000 டொலரும், ஒரு வீரருக்கு 30,000  டொலர் என்று மொத்தம் 36,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும் .

  32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை $110 மில்லியன் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பர்ஸ் $440 மில்லியன் ஆகும். FF கோப்பையை வெல்லும் அணிக்கு $10.5 மில்லியன் வழங்கப்படும். அதில் $6.21 மில்லியன் வீரர்களுக்கும், $4.29 மில்லியன் கூட்டமைப்புக்கும் வழங்கப்படும். அவுஸ்திரேலியா , நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்கள் போட்டிகளுக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகள் நடத்தப் படுகிறது. சிட்னி கால்பந்து ஸ்டேடியம் ,ஸ்டேடியம் அவுஸ்திரேலியா என்ற இரண்டு மைதானங்கள் அங்கு உள்ளன.

மலிங்க போன்று பந்துவீசும் மகன் டுவின் மலிங்க‌


 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மலிங்க தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான நியூயார்க் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

 இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள அவருடன் மலிங்காவின் மகனான டுவின் மலிங்காவும் உடன் சென்றுள்ளார். அங்கு நியூயார்க் அணி வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது மகன் டுவின் மலிங்கா அவரைப் போன்று அச்சசலாக பந்து வீசும் பயிற்சி வீடியோ ஒன்றினை எம்.ஐ நியூயார்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 அதில் பந்துவீசும் தன் மகனை பார்த்து : ஆக்சன் எல்லாம் ஒழுங்காக வருகிறது. சரியான வேகத்துடன் நேராக பந்துவீச தொடங்கினால் இன்னும் திறனை மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். ம‌லிங்க‌ அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே டுவின் மலிங்கா வீசும் பந்து ஸ்டம்பை தட்டி செல்கிறது.  தந்தையை போன்றே பந்துவீசும்  டுவின் மலிங்கவின்  வீடியோ து தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமின்றி மும்பைக்கு அடுத்த மலிங்கா ரெடி என ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Tuesday, July 25, 2023

மோடிக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்

இந்திய பொதுத் தேர்தலுக்கு இன்னமும்  ஒன்பது மாதங்கள்  இருக்கையில் ஆளும் கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சியும், எதிர்க் கட்சிகளும், தமது  பலத்தைக் காட்டுவதற்கு  ஏட்டிக்குப்  போட்டியாக  கூட்டங்களை நடத்தியுள்ளன. பான்டாவில் கடந்த மாதம் எதிர்க் கட்சிகள் நடத்திய கூட்டத்தில்  கலந்து கொள்ளாத கட்சிகள்  பெங்களூரில்நடந்த இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டன.

காங்கிரஸுடன்  இணைய  மாட்டோம் என அடம் பிடித்த மம்தா பார்னஜியும்,  கெஜ்ரிவாலும் பங்களூரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆச்சரியப்பட  வைத்தனர்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி உள்ளது. சுமார் ஒன்பது  வருடங்களாக ஆட்சியில்  இருக்கும்  பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  கூட்டம் நடைபெறவில்லை. எதிர்க் கட்சிகள்  ஒன்றிணைவதால்  தேசிய ஜனநாயக் கூட்டணியும்  பிரிந்துபோன கட்சிகளை  ஒன்றிணைத்தது.

 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின்   தலைமையில் அமைந்துள்ள என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியில்   38 கட்சிகள் பங்கேற்றன. இஇந்தக் கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் பலமான கட்சியாக  உள்ளது. மிகுதியான 37 கட்சிகளுக்கு   29 எம்.பிக்கள் தான்  உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட ஏழு கட்சிகள் தலா  ஒரு  எம்பியை மாத்திரம்  கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்ரி பெற்ற  ஒரே  ஒரு எம்பியான ரவீந்திரநாத்தை அண்னா திராவிட முன்னேற்றச்க் கழகம் வெளியேற்ரி விட்டது. ஓ. பன்னீர்ச்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குடும்ப செல்வாக்கினால் தேர்தலில் வெற்றி பெற்றார். ஒற்றைத் தலைவராக  இருக்கும் எட்பாடியின் செல்வாக்கு குறைந்துள்ளதை மோடி  பெரிதாக எடுக்கவில்லை.

மோடிக்குப் பக்கத்தில் எடப்பாடிக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டனி அமைத்தால் தலைமைப் பதவியைத் தூக்கு எரியப் பூவதாக கொக்கரித்த அண்னாமலை அமைதியாகி விட்டார். மோடியையும், அமித் ஷாவையும்  முழுமையாக நம்பி இருந்த பன்னீர் கழற்றிவிடப்பட்டுள்ளார்.  இதில் அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகள்தலா  ஒரு எம்பியையும், ஒன்பது கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.  25 கட்சிகளுக்கு எம்பிக்களே இல்லை.  மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத கட்சிகளுடன் பாரதீய ஜனதா   கூட்டணி  சேர்ந்துள்ளது.

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற த்தசில வாரங்களுக்குப் பிறகு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘ I-N-D-I-A  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. [  இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி-    Indian National Developmental Inclusive Alliance ] இதில் காங்கிரஸ் திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்துள்ளன.

 “அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான” 26 கட்சிகளின் தீர்மானத்தைக் குறிப்பிடுகிறது. “இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் சிதைக்கப்படுகின்றன” என்று அந்த ஆவணம் கூறுகிறது.

அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு “மத்திய முகமைகளை தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் தேவைகளை புறக்கணிக்கிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது. மேலும், மணிப்பூரில் மனிதாபிமான துயரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போதும் உயர்ந்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

“சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களிடமும் நியாயமான முறையில் கோரிக்கைகளை கேட்பது, முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்” என, ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளம்,சிரோமணி அகாலி தளம்,பகுஜன் சமாஜ் கட்சி,பிஜூ ஜனதா தளம்,பாரத ராஷ்ட்ரீய சமிதி,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,

இந்திய தேசிய லோக் தளம் ,அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் , அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியன எந்தக் கூட்டணியிலும் இடம் பெறவில்லை.

காங்கிரஸுடனு, திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் ஒட்டி உறவாடிய கமல் கழற்றி விடப்பட்டுள்ளார்.  மோடியின் தலைமையை ஏற்ற விஜயகாந்தை டெல்லி கண்டு கொள்ள வில்லை.

I-N-D-I-A கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அந்த அந்த மாநிலங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.  பாரதீய ஜனதாவின் தலைமையில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அந்த மாநிலங்களிலேயே செல்வாக்கு இல்லை.தமிழகத்தில் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் செல்வாக்கை இழந்துள்ளது.வாசன், ராமதாஸ் ஆகியோர்  வாக்குகளைச் சிதைப்பார்களே தவிர வெற்றி பெற மாட்டார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  கூட்டணிக் கட்சிகள் வலுவாக  உள்ளன.ஸ்டாலின்,  கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்ற 10  மாநிலத்தின் முதல்வர்கள்  இந்தக் கூட்டணியில்  இருக்கின்றனர். இது அந்தக் கூட்டனிக்கு மிகப் பெரிய பலமாகும்.

மோடி பிரதமராகக் கூடாது என்ற  ஒற்றைச் சொல்லுடன்  I.N.D.I.A  கூட்டணி  களம்  இறங்கி உள்ளது.

தி.முக.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அமுலாக்கத்துறை

இந்திய அரசியலில் ஒட்டு மொத்தப் பார்வையும்  தமிழகத்தின் பக்கம்  உள்ளது. பாரதீய ஜனதாவுன் அரசியல் சித்து விளையாட்டுகளை  முறியடித்து வட இந்தியத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் ஸ்டாலின். அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத  பாரதீய ஜனதா ஆளுநர் அமுலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் அளுத்தம் கொடுக்கிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவி ,  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களை அடக்கி ஆளப் பார்க்கிறார். செந்தில் பாலாஜியைக் கைது செய்து காவலில் வைத்திருக்கும் அமுலாக்கத்துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மகன்  ஆகியோரைக் குறிவைத்துள்ளது.அதிகாலையில் திடீரென அமைச்சர்  பொன்முடி வீட்டுக்குள் நுழைந்த அமுலாக்கத்துறை 18  மணிநேரம் விசாரணை செய்தது. அதே வேளை அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி,  அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்  ஆகியோரின் வீடு  அலுவலகங்கள் ஆகியவற்றில் சல்லடை போட்டுத் தேடியது.

முதலமைச்சர் ஜப்பானுக்குச் சென்ற  போது  செந்தில் பாலாஜியைத் தூக்கிய அமுலாக்கத்துறை அவர் பெங்களூருக்குப் புறப்படும்போது அமைச்சர் பொன்முடியைக் குறி வைத்தது. பெங்களூரின் எதிர்க் கட்சிகளின்  கூட்டம் நடை பெறும் வேளையில் அச்செய்தியைப் பின்னுக்குத் தள்ளுவதற்காக தமிழகத்தில்  அமுலாக்கத் துரை காலடி வைத்துள்ளது.செந்தில் பாலாஜிக்கு எதிரான  குற்றச் சாட்டும்,   பொன்முடிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்  சாட்டும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பதியப்பட்டவை.

“மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. அந்தத் துறையின் இயக்குநரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை முடக்கவும் பலவீனப்படுத்தவும் அதிகார அத்துமீறலைக் கட்டவிழ்த்துவிடுகிறது பா.ஜ.க” என அமலாக்கத்துறைமீது தொடர்ச்சியான விமர்சனத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். சமீபத்தில் அமலாக்கத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் தலையில் பலமாகவே குட்டு வைத்தது. “ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக்காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன... அந்த ஒரு நபரால் மட்டும்தான் அமலாக்கத்துறை இயக்குநருக்கு உரிய கடமையைச் செய்ய முடியுமா... வேறு யாராலும் செய்ய முடியாதா... அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்தப் பதவியின் நிலை என்னவாகும்..?” என மத்திய அரசைக் கேள்விக்கணைகளால் சல்லடையாக்கினர் நீதிபதிகள்.

அமலாக்கத்துறை மீதான நம்பகத்தன்மை, இந்தியா முழுக்க இருக்கும் எதிர்க்கட்சிகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில்தான், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது 2012-ல் பதியப்பட்ட வழக்குக்காக, 11 வருடங்கள் கழித்து அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது  அமலாக்கத்துறை.

 திராவிட முன்னேற்றக் கழகம்   ஆட்சிக்காலத்தில் [2006௨011]  இருந்ட்தபோது , கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம், பூந்துறையிலுள்ள செம்மண் குவாரியை முறைகேடாகத் தன் மகன் கெளதம சிகாமணிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2011-ல் ஜெயலலிதா

 முதல்வராந்தும் ,  அந்தப் புகார் குறித்துத் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார்.  செம்மண் குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட, பல மடங்கு மண் வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது போலீஸ். 2,64,644 லோடு செம்மண் வெட்டியெடுக்கப்பட்டதாக, வானூர் தாசில்தார் குமாரபாலன் அளித்த புகாரின்பேரில், விழுப்பும் மாவட்டக் குற்றப்பிரிவு பொலி ஸார் 2012-ல் வழக்கு தொடுத்தனர்.

அந்தச் செம்மண் வழக்கில் பொன்முடி, கெளதம சிகாமணி, பொன்முடியின் மைத்துனர் ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. பொன்முடி கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்படியே 2012-லிருந்து 2021 வரை இழுத்துக்கொண்டே போனது வழக்கு விசாரணை.  இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கும்படி பொன்முடியும் அவரது மகனும் நீதிமன்றத்தை நாடினார்கள்.  வழக்குக்குத் தடை போட முடியாது  என நீதிமன்றம் கைவிரித்தது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர்தான் அமுலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது என்றாலும். அரசியல் களத்தை நோக்கும்போது  ச்டாலினுக்கு குடைச்சல் கொடுக்கும் நோக்கில் நாள் தெரிவு செய்யப்பட்டது என்ற குற்றச் சாட்டையுக்ம் நிராகரிக்க முடியாது.

2023, ஜூலை 17-ம் திகதி, காலை 6:50 மணிக்கு  சைதாப்பேட்டை, நகர் காலனி வீட்டில்தான் இருந்தார் அமைச்சர் பொன்முடி. அவருடைய மகன் அசோக் சிகாமணியும் அவருடன் வீட்டில்தான் இருந்தார். அமுலாக்கத் துறையினர் வீட்டுக்குள் நுழைந்ததும் வரவேற்ற பொன்முடி, ‘சோதனைக்கான வாரன்ட் இருக்கிறதா?’ எனக் கேட்டார். வாரன்ட்டை எடுத்துக் காட்டியதும், அதற்கு மேல் பொன்முடி எதுவும் பேசவில்லை” என்கிறார்கள் சோதனைக்குச் சென்ற அதிகாரிகள்.வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமைச்சரின் கார், அவர் மகன்களின் உயர்ரக கார்கள் முதற்கட்டமாகச் சோதனையிடப்பட்டன. அவற்றிலிருந்து சில பேப்பர்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் அதிகாரிகள்.

சென்னையில் சோதனை தொடங்கிய சமயத்தில், விழுப்புரம் சண்முகாபுரம் காலனியிலுள்ள பொன்முடியின் வீடு, அவர் மகன் கெளதம சிகாமணியின் வீடு, கயல் பொன்னி & கோ அலுவலகம், விக்கிரவாண்டியிலுள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரி என நான்கு இடங்களில் சோதனையை ஆரம்பித்தது அமலாக்கத்துறை. அனைத்து இடங்களிலும், சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் பாதுகாப்புடன்தான் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் விழுப்புரம் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வாசலிலேயே காத்திருந்தனர் அமலாக்கத்துறையினர். பொன்முடியின் உறவினர் சாவியுடன் வந்து வீட்டுக் கதவைத் திறந்த பிறகே அங்கு சோதனை தொடங்கியது.

வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள், ஒரு லாக்கரைத் திறக்க அதிகாரிகள் சாவியைக் கேட்டபோது, அங்கிருந்த உதவியாளர்கள் பீரோ சாவி தம்மிடம்  இல்லை  என்றார்கள்.  மாற்று சாவி செய்யும்  செய்யும் தொழிலாளி ஒருவரை வரவழைத்து லாக்கரைத் திறக்க முயன்றனர்.  டிஜிட்டல் லாக்கர் என்றபடியால் அவரால் திறக்க முடியவில்லை. 

மகாராஷ்டிரா மாநிலக் கூட்டுறவு வங்கி முறைகேட்டில், அதாவது பல கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மீதும் அமலாக்கத்துறையில் வழக்கு பதிவாகியிருக்கிறது. ஆனால், பாரதீய ஜனதா   கூட்டணிக்கு அஜித் பவார் மாறியதும், அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் அமலாக்கத்துறை எடுக்கவில்லை. அப்படியே பெட்டிப் பாம்பாக முடங்கிவிட்டது. குற்றப்பத்திரிகையில்கூட அவர் பெயர் இடம்பெறாமல் ‘கச்சிதமாக’ அமலாக்கத்துறை பார்த்துக்கொண்டது. ஆனால், தங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு அமலாக்கத்துறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. 

 “ஆம் ஆத்மி தலைவர்கள்மீது கைது நடவடிக்கை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள்மீது விசாரணை எனத் தேர்தல் நெருக்கத்தில் அமலாக்கத்துறையின் பாய்ச்சல்கள், நீதியை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. அவை வாக்குச்சாவடியை நோக்கியும், கூட்டணி வியூகங்களை நோக்கியுமே பாய்ச்சலைக் காட்டுகின்றன. இந்தப் பாய்ச்சல் நாட்டுக்கு மட்டுமல்ல, அமலாக்கத் துறைக்கே ஆரோக்கியமானதல்ல” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

“அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்கில், இதுவரை நூற்றில் இரண்டில்கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. 11 வருடங்களாக அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது... குட்கா உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதில் ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவது ஏன்... இது அப்பட்டமான அரசியல் இல்லையா?” - என திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்புகிறார்.

  அடுத்த குறி அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு  என்கிறார்கள்  பாரதீய ஜனதாவின் தமிழகத் தலைவர்கள். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அமுலாக்கத் துறையை யார் ஏவிவிடுகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும்.

 

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -75

கதாநாயகனுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் சினிமாவில் வில்லனுக்கும்  கொடுக்கப்படுகிறது.கதாநாயகனைத் தூக்கிப் பிடிக்கும் பாத்திரமாக வில்லன் பாத்திரம் அமைவதுண்டு.எம்.என்.நம்பியார்,பி.எஸ்.வீரப்பாவுக்கு இணையாக வின்னத்தனத்தில் மிரட்டியவர்  ஓ.ஏ.கே.தேவர்.  எஸ்.ஏ.அசோகன், ராமதாஸ், ஆர்.எஸ்.மனோகர் .டி.எஸ்.பாலையா என வரிசையாகப் பல வில்லன்கள்  ரசிகர்களைக் கவர்ந்தனர். தூயதமிழ்,கணீரென்ற குரல், மிடுக்கான உடல் அமைப்புடன் தனித்துவமான வில்லனாகப் பவனி வந்தார்  ஓ.ஏ.கே.தேவர்.

மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள சின்னஞ்சிறிய கிராமமான்  ஒத்தப்பட்டியைச் சேர்ந்ந்த இவரின்     பெயர் கறுப்பு .  இவர் படித்த பாடசாலையில்  கறுப்பு எனும் பெயரில்  பலர்  இருந்ததால்,    ஒத்தப்பட்டி ஐயத்தேவர் மகன் கறுப்பு என்பதை ஓ.ஏ.கே என்று சுருக்கிக் கூப்பிட்டார்கள். பின்னாளில் இவரின் சாதியும் பெயருடன் இணைந்துகொள்ள, ஓ.ஏ.கே.தேவர் என  பிரபலமானார். ஒத்தப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயம் செய்வார்கள் அல்லது  இராணுவத்தில் சேர்வார்கள். சிறுவயதில் இருந்தே பாட்டிலும் கூத்திலும் மனதைப் பறிகொடுத்த ஓ.ஏ.கே. தேவர், பள்ளியில் சக மாணவர்களுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, நாடகத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கணீரென்று பாட, அதை வாத்தியார் கேட்டுவிட்டு தகப்பனிடம்  மகிழ்ச்சியாகச் சொன்னார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக  இருந்த மகனை படிப்பு முடிந்ததும் இராணுவத்துக்கு அனுப்பினார் தகப்பன்.  தகப்பனின் விருப்பத்தால் இராணுவத்தில் சேர்ந்த ஓ.ஏ.கே.தேவர், தகப்பன்  இறந்ததன்  பின்னர்  ஊருக்கு வந்து  தங்கிவிட்டார்.

அந்தக் காலத்தில் சக்தி நாடக சபாவின்கவியின் கனவுஎனும் நாடகம் மிகவும் பிரபலம். திருச்சியில் நாடகம் நடஎந்தபோது  ..கே.தேவர் அங்கே சென்று நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தால் கவரப்பட்ட ..கே.தேவர்  சுமார் 25 முறை பார்த்து ரசித்தார். சபாவின் முதலாளி சக்தி டி.கே.கிருஷ்ணசாமியைச் சந்தித்து, ‘கவியின் கனவுநாடக வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசிக்காட்டினார். அதைக் கேட்டு  மகிழ்ச்சியடைந்த அவர்தம்பீ... பெரியாளா வருவேடாஎன்று சபாவில் சேர்த்துக்கொண்டார்..கே.தேவரின் நாடக ஆசை  நிறைவேறியது. ஆனால், சின்னச் சின்னப் பாத்திரங்களில் ..கே.தேவர் நடித்ததால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க  முடியவில்லை

சக்தி நாடக சபாவின் நடிதத   சிவாஜி, நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ..கே.தேவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உண்டானது.

கவியின் கனவுநாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ..கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்றுபுரட்சிக்கவிபாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

  சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியேறினார் ..கே. தேவர்.

..கே.தேவர்  மாடர்ன் தியேட்டரில் இருந்து வெளியேறியதை   அறிந்த   என். எஸ்.கிருஷ்ணன் அவரை அழைத்து    ‘மாமன் மகள்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார்.  1950-ல், ‘மாமன் மகள்படம் மூலமாகத் திரையில் அறிமுகமானார் ..கே.தேவர். ஆரம்பமே அடியாள் கதாபாத்திரம். தன் ஆஜானுபாகுவான உடலையும் உருட்டும் விழிகளையும் வைத்துக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கினார். பிறகு  சின்னச்சின்ன வாய்ப்புகள் வந்தன.

..கே.தேவரை  எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன்  ’நீங்க நடிக்கிறமதுரை வீரன்படம் கதை தெரியும் எனக்கு. திருமலை நாயக்கர் வேஷத்தை இவனுக்குக் கொடுங்க. பிய்ச்சு உதறிருவான்என்றார். அந்தப் படத்தில் திருமலை நாயக்கராக நடித்ததுதான், ..கே.தேவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை.


 கறுப்பு வெள்ளைக் கால சினிமாவில், தன் கண்களாலும் விறைப்பான உடல்மொழியாலும் கடுகடுப்பு கொண்ட முகத்தாலும் முக்கியமாக சன்னமான, அதேசமயம் கொஞ்சம் கடுகடுத்தனமுமான குரலாலும் அசத்துக்கிறார் என்று அப்போது எல்லோராலும் ..கே. தேவர் கொண்டாடப்பட்டார். முறைத்தபடி ஒரு பார்வை பார்த்தாலே ரசிகர்களுக்குக் கதிகலங்கும். அப்படி ஒரு அசத்தல் நடிப்பை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ..கே.தேவருக்கு ஏறுமுகம்தான். வித்தியாசமான படங்களாகவே அமைந்தன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்திரைப்படம், சிவாஜிக்கும் ஜெமினிக்கும் ஜாவர் சீதாராமனுக்கும் ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனுக்கும் மட்டுமின்றி இவருக்கும் புகழைத் தேடித்தந்தது.

எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்தவருக்கு, சிவாஜி படத்திலும் நடிக்கிற வாய்ப்பு வந்தது. சிவாஜி நடத்திய சிவாஜி மன்றத்தில் சேர்ந்து, அவருடன் பல நாடகங்களில் நடித்து வந்தார். பிறகு அங்கிருந்தும் விலகினார். ‘புதிய பறவைபடத்தில் பொலி கேரக்டரில் தனித்துவமான நடிப்பை வழங்கினார். கே.பாலசந்தரின்எதிர்நீச்சல்படத்தில், சின்ன கேரக்டர்தான். ஆனால் அற்புதமாக காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜெய்சங்கருடன்யார் நீபடத்தில் நடித்தார். இவர் வரும் காட்சிகளெல்லாம் பீதியைக் கிளப்பின. எம்ஜிஆருடன்ராஜா தேசிங்கு’, ராமன் தேடிய சீதை’, சிவாஜியுடன்அன்புக்கரங்கள்’, ‘உத்தமபுத்திரன்’, ‘குறவஞ்சி’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘தங்கச்சுரங்கம்’, ‘திருவிளையாடல்’, ‘அன்னை இல்லம்’, ‘கல்யாணியின் கணவன்முதலான ஏராளமான படங்களில் நடித்தார்.

..கே.தேவர்  ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.   மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், தேனி ஆகிய 

ஊர்களில்  அவருடைய நாடகங்களுக்கு கூட்டம் அலைமோதியது. நடுவே கலைஞருடன் நெருக்கம் என்று தொடர்ந்து பரபரவென இயங்கி வந்தார். "பாவலர் பிரதர்ஸ்" என  இயங்கிக்கொண்டிருந்த இளையராஜா சகோதரர்களை ..கே. தேவருக்கு சங்கிலி முருகன் அறிமுகம் செய்தார்நடிப்புக்காக, வசனங்களுக்காக, கதைக்காக கைதட்டல்களையும் பாராட்டுகளையும் வாங்கியிருந்த   ..கே. தேவரின் அன்றைய நாடகத்துக்கு, இசைக்காகவும் பாடல்களுக்காகவும் கரவொலி கிடைத்தன.

   1957-ல் வெளியானமகாதேவி’.  படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து ..கே.தேவர்  நடித்தார். " அடைந்தால் மகாதேவி  இல்லையேல்  மரண தேவி"என்ற வீரப்பாவின்  பஞ்ச் டயலக்குக்கு  கரவொலியால் தியேட்டர் அதிர்ந்ததுஅதேபடத்தில் ,  “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையைஎன்ற ..கே.தேவர் பேசிய வசனமும்  பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன் பின்னர்  மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ..கே.தேவர்