Sunday, December 31, 2023

2023 ஆம் ஆண்டின் முதல் 10 உலக விளையாட்டு வீரர்கள்


  2023 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 10 தடகள வீரர்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

1. ஐதானா பொன்மதி (ஸ்பெயின், கால்பந்து)

அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்த FIFA மகளிர் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் வரலாற்று வெற்றியில் பொன்மதி முக்கிய பங்கு வகித்தார் . கோல்டன் பால் விருதைப் பெற்றவ‌ர். பார்சிலோனா UEFA மகளிர் சாம்பியன்ஸ் லீக்கை இரண்டாவது முறையாக வெல்வதற்கும் அவர் உதவினார். ஒக்டோபரில், இந்த ஆண்டு அவரது சிறப்பான விளையாட்டுக்காக‌ அவருக்கு Ballon d'Or Feminin விருது வழங்கப்பட்டது.

               2. ஃபெயித் கிபிகோன் (கென்யா, தடகளம்)

29 வயதான கிபிகோன் 2023 ஆம் ஆண்டில் 1,500 மீ, 5,000 மீ ,ஒரு மைல் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனான புடாபெஸ்ட் உலகத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றார், பெண்களுக்கான 1,500 மீ ஓட்டத்தில் தனது மூன்றாவது உலகப் பட்டத்தை வென்றார்.  

                3 . கெய்லி மெக்கௌன் (அவுஸ்திரேலியா, நீச்சல்)

அவுஸ்திரேலிய பேக் ஸ்ட்ரோக் நிபுணர் ஃபுகுவோகா உலக சம்பியன்ஷிப்பில் பெண்கள் மத்தியில் சிறந்து விளங்கினார், 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் தங்கம் வென்றார். 22 வயதான அவர் புடாபெஸ்டில் நடந்த உலகக் கோப்பையில் 50 மீ ,100 மீ ஆகியவற்றில்  புதிய உலக சாதனைகளைப் படைத்தார், பேக் ஸ்ட்ரோக்கில் அனைத்து தூரங்களிலும் ஒரே நேரத்தில் உலக சாதனை படைத்த முதல் பெண் நீச்சல் வீராங்கனை ஆனார். 2023 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நீச்சல் வீராங்கனையாக உலக நீர்வாழ்வினால் அவர்  தெரிவு செய்யப்பட்டார்.

                     4. கெல்வின் கிப்டம் (கென்யா, தடகளம்)

கிப்டம் அக்டோபரில் 2:01 மணி நேரத்திற்குள் மரத‌ன் ஓடிய முதல் வீரர். அவர் சிகாகோ மரத‌ன் பட்டத்தை 2:00:35 இல் வென்றார், பெர்லினில் தனது சகநாட்டவரான எலியுட் கிப்சோஜ் அமைத்த 2:01:09 சதனையை முறியடித்தார். 2022 இல். வளர்ந்து வரும் கென்யா ஏப்ரலில் லண்டன் மராத்தானையும் வென்றார். உலக தடகளத்தால் 2023 ஆம் ஆண்டிற்கான உலக தடகள வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

               5. மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து, ஃபார்முலா ஒன்)

வெர்ஸ்டாப்பன் 2023 சீசனில் 22 கிராண்ட் பிரிக்ஸில் 19 என்ற சாதனையை வென்றார், தொடர்ந்து மூன்றாவது உலக சம்பியன்ஷிப் பட்டத்திற்காக வரலாற்று சிறப்புமிக்க 575 புள்ளிகளுடன் முடித்தார், இதன் மூலம் அவர் F1 இன் ஆல்-டைம் ஜாம்பவான்களில் ஒருவராக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

                    6 மைக்கேலா ஷிஃப்ரின் (அமெரிக்கா, பனிச்சறுக்கு)

ஆல்பைன் பனிச்சறுக்கு லெஜண்ட் ஷிஃப்ரின் தனது எஃப்ஐஎஸ் உலகக் கோப்பை 2022-23 சீசனை மொத்தம் 88 பட்டங்கள்  பெற்றார்.  சுவீடனின் இங்கெமர் ஸ்டென்மார்க்கின்  86 வெற்றிகளின் அனைத்து நேர உலக சாதனையையும் முறியடித்தார்.  அவர் 21 உலகக் கோப்பையில் அதிக மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கான மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்தார்.

                7. நிகோலா ஜோகிக் (சேர்பியா, கூடைப்பந்து)

ஜோகிக் 2022-2023 சீசனில் டென்வர் நகெட்ஸை    முதல் NBA பட்டத்திற்கு அழைத்துச் சென்றார், அதே நேரத்தில் NBA பைனல்ஸ் MVP விருதைப் பெற்றார். தொடர்ந்து மூன்றாவது சீசனில் வழக்கமான சீசன் MVPஐ வெல்லத் தவறிய போதிலும், ஜோகிக்கின் சராசரியான 24.5 புள்ளிகள், 11.8 ரீபவுண்டுகள் மற்றும் 9.8 அசிஸ்ட்கள் ஒரு கேமிற்கு இன்னும் அவரது திறமைகளை வெளிப்படுத்தின.

                8  நோவக் ஜோகோவிச் (சேர்பியா, டென்னிஸ்)

ஜோகோவிச் தனது 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 2023 இல் தனது நான்காவது யுஎஸ் ஓபனை வென்றதன் மூலம், செரீனா வில்லியம்ஸின் 23 கிராண்ட்ஸ்லாம் சாதனையை  முறியடித்து, ஓபன் சகாப்தத்தில் அதிக ஒற்றையர் சாம்பியன்ஷிப்பைப் பெற்ற வீரராக ஆனார். இந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் , பிரெஞ்ச் ஓபனையும் வென்ற ஜோகோவிச், ஒரு சீசனில் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரர் ன்ற பெருமையைப் பெற்றார். சேர்பிய வீரர் ஆண்டு இறுதிப் போட்டியில் ஏழாவது ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்றார்.

                9  கின் ஹையாங் (சீனா, நீச்சல்)

க்வின் 200 மீற்ற‌ர் பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் உலக சாதனையை முறியடித்தார். ஃபுகுயோகாவில் நடந்த ஒரு உலக சம்பியன்ஷிப்பில் 50 மீ, 100 மீ , 200 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பட்டங்களை வென்ற முதல் நீச்சல் வீரர். அவர் 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் நீச்சல் வீரராக உலக நீர்வாழ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 24 வயதான அவர் தனது ஐந்து தங்கப் பதக்கங்களுக்காக ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான MVP விருதையும் பெற்றார்.

             10. சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்)

டோக்கியோ ஒலிம்பிக்கின் போது ஏற்பட்ட மனநல சவால்களை சமாளித்து, பைல்ஸ் 2023 இல் உலக கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப்பில் தனது ஆறாவது ஆல்ரவுண்ட் பட்டத்தை வென்றதன் மூலம் வெற்றிகரமாக திரும்பினார். ஒலிம்பிக்,  உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் தனது 34வது பதக்கத்துடன், 26 வயதான பெலாரஷ்ய ஜாம்பவான் விட்டலி ஷெர்போவை முறியடித்து அதிக பதக்கங்கள் வென்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய கப்டன் விஜயகாந்த்

தமிழக சினிமாவிலும்அரசியலிலும் தனக்கென்று ஒரு பாதையை அமைத்து வெற்றிக் கொடி நாட்டிய விஜயகாந்தின் பயணம்  முடிவுக்கு வந்துள்ளது.   விஜயகாந்த கடந்து வந்த பாதை இலகுவானதல்லகேலி,கிண்டல்  அனைத்யும்கடந்து உச்சம் தொட்ட வுஜயகாந்த், தான்  உயர்ந்ததுபோல மற்றவர்கள் மேலே செல்ல ஏணி போல் உதவினார்.

நடிகர் எம்.ஜி.ஆர்  அரசியலில் இருந்த போது அவருக்காகவே பல அரசியல் பாடல்கள் எழுதப்பட்டன.அரசியலைப் பற்றிய எந்த ஒரு  எதிர் பார்ப்பும் இல்லாதபோது சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் விஜயகாந்த்.  "வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே..."  என்ற பாடலை போன்றதே அவரது மனம்.

கமல்,ரஜினி  என்ற  இரு பெரும்  துருவ நட்சத்திரங்கள்  சினிமாவில் ஜொலித்த போது விஜயகாந்த்  சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.  முதலில் அவரது நிறம் கேலிக்குள்ளாகியது.   எல்லோரும் ரஜினியைப் போல் வருமா என  கேட்டார்கள். ரஜினிக்கு சவால் விடும் வகையில் சினிமாவில் மிக  ஆழமாகத் தந்து காலைப் பதித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா எனும்  இரு பெரும் ஆழுமைகள் தமிழகத்துக்கு அப்பாலும் தமது அரசியல் பலத்திக் கான்பித்த போது அரசியல் அரங்கில் புகுந்தார் விஜயகாந்த். அண்ணாவின் மறைவுக்க்பு பின்னர் கட்சியைப் பொருப்பேற்று  தனது அரசியல் சாணக்கியத்தை நிரூபித்தவர் கருணாநிதி,எம்.ஜி.ஆரி மறைவுக்குப் பின்னர்  உட்கட்சி  எதிர்ப்புக்கு  மத்தியில் தனது அரசியல் இராஜதந்திரத்தால் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. எந்த விதமான அரசியல் பின்னணியும்  இல்லாமல்   அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியவர்  விஜயகாந்த்.

விஜயகாந்தை   அரசியலில்  தூக்கிவிட்டு  குப்புற விழுத்தியவர்  ஜெயலலிதா. தனது கட்சியைச் சேர்ந்தவர்களின்   துரோகம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் பின்னர் அரசியலில் அவரால் தலைதூக்க முடியவில்லை

கப்டன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்-அரசியல்வாதி விஜயகாந்த், கடந்த 28 ஆம் திகதி   வியாழக்கிழமை  அதிகாலை  காலமானார்.

தமிழ் சினிமாவின் அர்ப்பணிப்புள்ள கலைஞர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதர் என்றும் விஜயகாந்த் அபோற்றப்படுகி||றார். உதவி என கேட்டு வருபவர்களுக்கு   உதவி செய்யும் வள்ளல் குணம் கொண்டவர்.  அவரின் கல்யாண மண்டபத்தில், வெளிஊர்களில் இருந்து வருபவர்களுக்கு, தினந்தோறும் விருந்தளிக்கும் கொடையாளி எனவும் பெயர் பெற்றவர்.

கே.என்.அழகர்சுவாமி ,ஆண்டாள் அழகர்சாமி ஆகியோருக்கு மகனாக, விஜயராஜ் அழகர்சாமியாக ஆகஸ்ட் 25, 1952 இல் பிறந்தார்.

அவரின்  மனைவி பிரேமலதா.விஜய பிரபாகரன் , சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

எம்.ஜி.ஆர் மீது கொண்ட அன்பினால், சினிமா மீது சிறுவயது முதல் ஆர்வம் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

1979ல் எம்..காஜாவின் 'இனிக்கும் இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்..சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை ' படத்தின் மூலம் முதல் கமர்ஷியல் வெற்றியை ருசித்தார்.

பல படங்களில் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.   100வது படமான 'கப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த பிறகு, 'கப்டன்' என்ற பட்டத்தை பெற்றார்.

80 களில், திரைப்படங்களில் பல புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்தார். அதனாலேயே அவர் புரட்சி கலைஞர் என அழைக்கப்பட்டார். ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார் விஜயகாந்த்.1982 இல் 'ஓம் சக்தி' படத்திற்குப் பிறகு, அவர் கமெர்ஷியல் படங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்

1984 இல், அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் வெளியாகி, அனைத்துமே கிட்டத்தட்ட   வெற்றி பெற்று சாதனை படைத்தன.

விஜய், சூர்யா  ஆகியோருன் ஆரம்பகால படங்கலில் நடித்து அவர்களுன் எதிர்கால சினிமாவுக்கு உரமூட்டினார். பிலிம் இன்ஸ்ரிரியூட்டில் படித்து வெளியேறும்  கலைஞர்களுக்கு கைகொடுத்து தூக்கி விட்டார்.  ஊமை விழிகள்  இன்றும்  பேரும் படமாக  இருக்கிறது.  இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு வாய்ப்புக் கொடுத்தவர்.  கதை சொல்ல யார் வந்தாலும் மறுக்காமல் கதை கேட்பார். அன்றைய சாப்பாடு அவர்களுக்கு   விஜயகாந்தில் அலுவலகத்தில்தான்.

விஜயகாந்த் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்ட நாயகனாக  மிளிர்ந்தார். 1992இல், அவர் நடித்த'சின்ன கவுண்டர்' இல் நடித்தார், இது இன்றும் ஒரு உன்னதமானதாக கருதப்படுகிறது.'சேதுபதி ஐபிஎஸ்', 'ஹானஸ்ட் ராஜ்', 'உளவுத்துறை', 'பெரியண்ணா' , 'கண்ணுபட போகுதையா' ஆகியவை 90களில் அவர் நடித்த வெற்றிப் படங்களில் சில.

2000களில், 'வானத்தைப் போல, 'நரசிம்மா' , 'தவசி' உள்ளிட்ட வெற்றிப் படங்கள், அவரின் மற்றொரு அவதாரத்தை வெளிப்படுத்தியது.

.ஆர்.முருகதாஸின் 'ரமணா' திரைப்படம் அவரை ஊழலுக்கு எதிரான போரளியாகியது.   அதுவே அவரை அரசியலுக்கு வர தூண்டியது எனவும் கூறலாம்.

2005ல் அரசியலுக்கு நுழைந்த பிறகு, அவர் சினிமா துறையில் கவனம் செலுத்தவில்லை.


  2005 ஆம் ஆண்டு செப்டெம்பர்  14 ஆம் திகதி , மதுரையில் தனது அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்தார்.ஒரே வருடத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருமாறினார்.அவர் தனது கட்சிக்காக என்றைக்குமே தொடர்களிடத்தில் நன்கொடை கேட்டதில்லை. ஆரம்ப தேர்தலில், தேமுதிக எந்தக் கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு உள்ளாட்சித் தேர்தலிலும் தனது பலத்தை  நிரூபித்தது. 2011-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார்.41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த ஆண்டு திமுகவை விட (திராவிட முன்னேற்றக் கழகம்) தேமுதிக அதிக இடங்களைப் பெற்றதால்  விஜயகாந்த எதிர்க் கட்சித்தலைவரானார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயரிட்டவர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். நடிகர்கள்  அனைவரையு ஒரெ குடியின்  கீழ்  கொண்டுவந்து நடிகர் சங்க கடனை அடைத்த பெருமைக்குரியவர்.

 பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச் செல்வன் பட ஷூட்டிங் மைசூர் அருகே தொடங்கியது. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வாட்டாள் நாகராஜும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் சென்று அங்கு தமிழ்மொழியில் வைக்கப்பட்டிருந்த கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என தகராறு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பொலிஸாஅர்  குவிக்கப்பட்டனர்.   வாட்டாள் நாகராஜின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் காரில் வந்த விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜாவிடம் என்ன பிரச்சினை என கேட்டிருந்தார். பாரதிராஜா விஷயத்தை சொன்னதும் விஜயகாந்தின் கண்கள் சிவந்தன. காரில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் விஜயகாந்த். அப்போது வாட்டாள் நாகராஜ் இருந்த இடத்திற்கு தனி ஆளாக சென்று வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா.. வாடா பார்த்துக்குவோம் என சவால் விட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு கையில் இரும்புக் கம்பியுடன் விஜயகாந்தை பார்த்த வாட்டாள்   தனது ஆதரவாளர்களுடன் ஓடிவிட்டாராம்.

சிவாஜியின்   இறுதி  ஊர்வலத்தின் போது கட்டுகடங்காத ர்சிகர் கூட்டம்  நெருக்கடியை ஏர்படுத்தியதால். தனி ஆளாக வேட்டிக்யை மடித்துக்கட்டி  ரசிகர்களை ஆறுதல்  படுத்தினார்.

  சக்கர நார்காலியில்  விஜயகாந்த் அழைத்து வரப்படுவார். அபோது அவரைப் பார்க  பரிதாபமாக  இருக்கும்.   அதனி பலர் விமர்சனம் செய்தார்கள்.    விஜயகாந்தின்  உடல் நிலை பாதிக்கப்பட்டதால்  கட்சிப்பனிகள்  முடங்கின. விஜயகாந்தின்  மனைவி  பொதுச்செயலாளரானார். அப்போதெ அவரது எதிர்காலம்  வெளிச்சத்த்குக்கு வந்து விட்டது.  ஆனால், இவளவு சீக்கிரமாக விஜயகாந்த் மறைவார் என எதிர்  பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த  வரவேற்பு ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்டது.  விஜயகாந்தின்      இடத்தை பிரேமலதாவால் நிரப்ப முடியாது. 2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே சென்றது. அதனை முன்னேற்றுவதற்டவில்லை. விஜயகாந்த்  இருக்கும் போதே சில கட்சிகள் சில கட்சிகள்  அவரது கட்சியைக் கண்டுகொள்ளவில்லை

ரசிகர்கள், தொண்டர்கள், விஜயகாந்தால் அரவணைக்கப்பட்ட  சினிமாக் கலைஞர்கள்  அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.விஜயகாந்தின் சகாப்தம்  முடிவுக்கு வந்துள்ளது.

Friday, December 29, 2023

ரி10 அணிகளை வாங்கிய சினிமா ஸ்டார்கள்

 ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போன்று ஐ.எஸ்.பி.எல். ரி10 கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.ஹைதராபாத் அணியின் உரிமத்தை நடிகர் ராம் சரன் வாங்கியுள்ளார். பெங்களூரு அணியின் உரிமத்தை நடிகர் ஹிர்திக் ரோசனும், ஜம்மு காஷ்மீர் அணியின் உரிமத்தை அக்‌ஷய் குமாரும், மும்பை அணியின் உரிமத்தை நடிகர் அமிதாப் பச்சனும் வாங்கியுள்ளனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட் CCS Sports LLP  என்ற விளையாட்டு மேலாண்மை அமைப்பு ஆகும்.  இந்த அமைப்பு இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட்டினை நடத்தினாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களே CCS Sports LLP அமைப்பிலும் முக்கிய பொறுப்பில் உள்ளனர். அதாவது பிசிசிஐ-யில் பொருளாளராக பணியாற்றி வரும் ஆஷிஷ் ஷெலர், மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகவும் பிசிசிஐ-யில் உறுப்பினராகவும் உள்ள அமோல் காலே இருவரும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டி உறுப்பினராக உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் தலைமை ஆலோசகராக உள்ளார். இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் தேர்வுக்குழுவில் முன்னாள் இந்திய ப்ளேயர்கள் பர்வின் ஆம்ரே மற்றும் ஜதின் பரஞ்ஜபே நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை இந்த டி10 கிரிக்கெட்டின் முதல் சீசன் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தம் நடைபெறவுள்ளா 19 போட்டிகளும் அங்கீகரிக்கப்பட்ட மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத திறமையான வீரர்களை அடையாளம் காணவே இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் விளையாடும் என்பதால் ஒரு போட்டி அதிகபட்சமாக ஒருமணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும். இது ரசிகர்களுக்கு இந்த போட்டிகளை பார்ப்பதற்கு ஆர்வத்தினை அதிகரிக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த போட்டிக்கு டென்னிஸ் பந்துகள்தான் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த டி10 கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் விதிகள் பின்பற்றப்படுமா அல்லது ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் விதிகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தினை இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட்டை நடத்தும் CCS Sports LLP அமைப்பு தெளிவுபடுத்தவில்லை.


Monday, December 25, 2023

ஐபிஎல் 2024 அதிசயங்கள் ஆச்சரியங்கள்

ஐபில் 2024 மினி ஏலம் துபாயில்    பரபரப்பாக நடந்தது. நட்சத்திர வீரர்களை  வாங்குவதற்கு பல அணிகள்  முட்டி மோதின.சர்வதேசப் போடியில் விளையாடவர்கலுக்கான ஏலத்தொகை எகிறியது. ஏலத்தில் வாங்கப்படாத வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஆண்டு ந்நிராகரிக்கப்பட்ட வீரரை வாங்குவதற்கு பலத்த  போட்டி நிலவியது. ஐபிஎல் இன்  புண்ணியத்தால் சில வீரர்கள்  கோடீச்வரரானார்கள்.இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில் மொத்தமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.இதற்கான 10 அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

                     கோடீஸ்வரனான பழங்குடியின வீரர்


குஜராத் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில் இருந்த அவரை கைப்பற்ற பல முன்னணி அணிகளும் தீவிரம் காட்டின.

சென்னை கூட 1.2 கோடி ரூபாய் வரை ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியில் குஜராத் அணி ராபினை ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேநேரம், கடந்த ஆண்டு இவர் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

இடது கை வீரரான ராபின் மின்ஸ் பிரமாண்ட ஷாட்களை ஆடுவதில் கைதேர்ந்தவராக உள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர், டோனியின் பரமரசிகராவார். டோனியின் வழிகாட்டியான சன்சல் பட்டாச்சார்யா தான் ராபினுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த மின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியால் இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்ட போது பலரது கவனத்தை ஈர்த்தார்.

  ஜார்கண்ட் மாநிலத்திற்காக இதுவரை ரஞ்சிடிராபி போட்டியில் விளையாடியது இல்லை. அதேநேரம், ஜார்கண்ட்டின்  u-19 மற்றும்  u - 25 அணியின் கப்டனாக செயல்பட்டுள்ளார்.

                 ஏலத்தில் ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்து வீச்சாளார்கள்


ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. டாப் 5 வீரர்களில் கூட 4 வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஒருவர் மட்டும்தான் துடுப்பாட்ட வீரராக உள்ளார்.மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை கொல்கத்தா அணி  24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.   பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிட்ஷெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  14 கோடிக்கு வாங்கியுள்ளது.    இந்திய வேகப்பந்து வீச்சாளரானஹர்ஷல் பட்டேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. நடந்து முடிந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேல்.   அதிக விலைக்கு ஏலம் போன ஐந்தாவது வீரராக அல்ஜாரி ஜோசப். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது.

                                நிராகரிக்கப்பட்ட அதிரடி வீரர்


மேற்கு இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஃபில் சால்ட்   நான்காவது ரி20 போட்டியிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.இங்கிலாந்து அணி சார்பாக ஒரு வீரர் சர்வதேச ரி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசுவது இதுவே முதல் முறை. அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்த இங்கிலாந்து வீரராகவும்  சாதனையை நிகழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக இரண்டு ரெஇ20 சதங்களை விளாசிய அதிரடி ஆட்டக்காரரான பில் சால்ட் 1.50 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலையில் .பி.எல் ஏலத்தில் பங்கேற்றிருந்த வேளையில் அவரை எந்த ஒரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.


                              தவறான வீரரை வாங்கிய  பஞ்சாப்

சஷாங்க் சிங் என் 32 வயதுதுடுப்பாட்ட வீரரை  20 கோடி என்ற அடிப்படை விலையில் வாங்கியது பஞ்சாப்.ஆனால், வாங்கிய சில நிமிடங்களிலேயே, தாங்கள் வாங்க நினைத்த வீரர் இவர் இல்லை எனவும், அதனை மாற்றிக் கொள்ள முடியுமா எனவும் பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.

அந்தக் குறிப்பிட்ட வீரருக்கான ஏலம் நிறைவடைந்துவிட்ட படியால், ஏலத்தை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியின் இந்த நடவடிக்கை இணையத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.

  சஷாங்க் சிங் என்ற 19 வயது இளம் வீரரை வாங்கவே தாங்கள் திட்டமிட்டதாகவும், அதே பெயரில் இருந்த வேறு ஒரு வீரரை தவறாக வாங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.ஆனால், புதிதாக வந்த வீரரையும் தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல், ரைலி ரூசௌவ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.