Tuesday, September 27, 2011

குழம்பியது கூட்டணிகுழப்பத்தில் கட்சிகள்

திருச்சி மேற்கு இடைத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என்பனவற்றினால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற கட்சிகள் உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என கனவில் இருந்தனர். கூட்டணித் தலைவர்களின் கனவைத் தவிடு பொடியாக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மாநகரசபை மேயர் வேட்பாளர்களை அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து கூட்டணித் தலைவர்கள் விடுபட முன்னர் 72 நகராட்சிகளுக்கும் 52 பேரூராட்சிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தல் ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிக்க முன்பே வேட்பாளர்களை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் வெளியிடுவது வழமை. வழமையை மீறி தேர்தல் திகதி பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளிவரும் முன்பே தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய விபரங்களை ஜெயலலிதா வெளியிட்டதனால் கூட்டணிக் கட்சிகள் அதிர்ந்து போயுள்ளன.
தமிழகத்தில் 10 மாநகர சபைகள், 98 நகரசபைகள் 555 பேரூராட்சி மன்றங்கள், 385 உள்ளூராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித்தலைவர், கவுன்சிலர் உட்பட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் இருந்து அதிகமானோர் தேர்வு செய்யப்படும் சந்தர்ப்பம் உள்ளதால் கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமது கட்சியினரை முன்னிலைப்படுத்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் விரும்புகின்றனர்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலைச் சந்தித்தன. உள்ளõட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை ஜெயலலிதா புறக்கணித்ததனால் என்ன செய்வதென்று தெரியாது விஜயகாந்த் தடுமாறுகிறார். ஜெயலலிதாவின் முடிவு தவறானது எனத் தெரிந்தும் அதனைக் கண்டிக்காது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தக் காத்திருக்கின்றனர் ஏனைய கட்சித் தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டன. இந்தக் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. முதல் ஆளாக டாக்டர் ராமதாஸ் இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தங்கபாலு கோஷ்டி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்று துதிபாடியது. இளங்கோவன் நடராஜா போன்றவர்கள் அமைதி காத்தனர். திராவிட முன்னேற்றக் கழகமே கதி என திருமாவளவன் இருந்தார்.
கருணாநிதியின் தனி வழி முடிவு காங்கிரஸுக்கும் திருமாவளவனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனித்துப் போட்டியிட காங்கிரஸும் திருமாவளவனும் விரும்பவில்லை. தனித்துப் போட்டியிட போவதாக காங்கிரஸ் அறிவித்தாலும் விஜயகாந்தின் வருகைக்காக கதவைத் திறந்து வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜயகாந்தும் விரும்பவில்லை. முகத்தில் அடித்தது போல் அவமானப்படுத்திய ஜெயலலிதாவுடன்சமரசம்பேச‌ விஜயகாந்தின் கௌரவம் இடம்கொடுக்கவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மாக்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் பேச்சுவõர்த்தை நடத்த தயாராகவுள்ளது. கொடுப்பதைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ள கொம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

திருமாவளவனுடன் இணைவதற்கு ராமதாஸ் விரும்புகிறார். தனித்துப் போட்டியிடும் ஆயத்த நடவடிக்கைகளை வைகோ ஆரம்பித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பாரதீய ஜனதாக் கட்சி என பல்முனை போட்டி உள்ளாட்சி தேர்தலை கலகலப்பாகப் போகிறது.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதவுள்ள இத் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம்பிச்சை வெற்றிடமாக உள்ள அத்தொகுதியின் இடைத் தேர்தல் ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய தடுமாறிய கருணாநிதி திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் உஷாராகி விட்டார் கருணாநிதி.
மரியம் பிச்சையின் உறவினர் ஒருவரான முஸ்லிம் ஒருவரை ஜெயலலிதா வேட்பாளராக அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா பரம்ஜோதி என்பவரை வேட்பாளராக அறிவித்தார். மரியம் பிச்சையின் வெற்றிக்கும் பெரிதும் பங்காற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது. ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை.
இதேவேளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய உண்ணாவிரதத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த நரேந்திர மோடி தனது கட்சியின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன் தம்பித்துரை ஆகியோரை குஜராத்துக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னிச்சையாக செயற்படுவதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலை ஏற்படும். இது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம்.
திருச்சி மேற்கு சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று குழம்பியிருந்த கருணாநிதி மரியம்பிச்சை தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நேருவை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
கருணாநிதிக்கும் மத்திய அரசியல்வாதிகளின் அணிவகுப்பு ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றுக்குப் பலியானவர்களில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர்கள் கைது செய்யப்படுவதை நடு நிலையாளர்கள் விரும்பவில்லை. நடு நிலையாளர்களின் வாக்குகள் நேருவை வெற்றி பெறச் செய்யும் என்று கருணாநிதி நம்புகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஏழாயிரம் வாக்குகளினால் நேரு தோல்வியடைந்தார். சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்த முயற்சித்தது, பரம குடியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வழங்கிய ஆதரவு என்பன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமாக உள்ளன.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு25/09/11


Sunday, September 25, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 5

சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு துருவங்களுக்கிடையில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த முத்துராமன் நடித்த மறுபிறவி அவருக்கு கெட்டபெயரை வாங்கிக் கொடுத்தது. வயது வந்தவர்கள் பார்க்கும் படம் என்ற ஏ முத்திரையுடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களின்கோபத்தையும் பத்திரிகைகளின் வெறுப்பையும் ச‌ம்பாதித்தது. இப்படத்தில் தாராளமான கவர்ச்சிக் காட்டிய மஞ்"ளாவுக்கு கவர்ச்சி படங்கள் வந்து குவிந்தன.
கல்லூரிப் @பராசிரியர் முத்துராமனுக்கு அவரிடம் படிக்கும் மாணவி மஞ்சுளா, பேராசிரியர் முத்துராமனை காதலிக்கிறார். முதலில் மறுப்புத் தெரிவிக்கும் முத்துராமன் பின்னர் மஞ்சுளாவை திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். காதலித்தவனை திருமணம் செய்து முதலிரவு கனவுடன் காத்திருந்த மஞ்சுளாவை முத்துராமன் நெருங்கவில்லை. இதற்கான காரணத்தைதேடிய போது தன் தாயின் உருவத்தை ஒத்த மஞ்சுளாவைத் தாரமாக நினைத்துப்பார்க்க முடியவில்லை என்கிறார் முத்துராமன். முத்துராமனின் தாயாகவும் தாரமாகவும் இரட்டை வேடத்தில் கலக்கினார் மஞ்சுளா.
கண்ணியமான பேராசிரியர் முத்துராமனும் அடக்கமான மாணவி மஞ்சுளாவும் குடும்பத்தில் ஒன்றிணைய முடியாது தவிக்கின்றனர். அவர்களின் உணர்ச்சிப்போராட்டங்கள் ச‌ற்று வெளிப்படையாகத் திரையில் மின்னின. நல்ல கருத்துள்ள படங்கள் வெளியாகி வெற்றிவாகை சூக்கொண்டிருந்த வேளையில் வெளியான மறுபிறவி ரசிகர்களின் மனதை கவராததால்தோல்விபடமானது.
தமிழ்த்திரை உலகில் முன்னணிக் கதாநாயகர்களை இயக்கி வெற்றிக்கண்ட டி.ஆர்.ராமண்ணா இப்படத்தை இயக்கினார். வித்தியாச‌மான கதைக்கரு என்பனால் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். டி.ஆர்.ராமண்ணா. புனர்ஜென்மம் என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பாக வெற்றிபெற்ற கதையையேயே தமிழில் மறுபிறவி என்ற பெயரில் வெளியிட்டார்கள். மது, ஷீலா இணைந்து நடித்த இப்படம் மலையாளத்தில் படைத்தசாதனையை தமிழில்செய்யவில்லை.
மஞ்சுளாவின் தகப்பனாக அசோகனும் தாயாக சுகுமாரியும் நடித்தனர். திருமண வயதையடைந்த மஞ்சுளாவுக்கு அவர்கள் மாப்பிள்ளை தேடியபோது தான் காதலித்த பேராசிரியரை திருமணம் முடித்தார் மஞ்சுளா. மகளின் திருமண வாழ்வு ச‌ந்தோதாஷமாக இல்லாததை அறிந்த அசோகனும் சுகுமாரியும் காரணத்தைத் தேடுகிறார்கள். முத்துராமனின் இயலாமைக்கு காரணம் என்ன என்று தேடிய போதுதான் தாயின் உருவத்தை ஒத்த தாரத்துடன் உறவு கொள்ள முடியாத நிலையை வெளிப்படுத்துகிறார் முத்துராமன்.
உளவியல் ரீதியான இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக டாக்டர் கோவூரின் உதவியை நாடுகிறார் அசோகன். டாக்டர்கோவூரின் உளவியல் சிகிச் சையினால் உருவம் ஒரேமாதிரி இருந்தாலும் தாயும் தாரமும் வேறு என்ற உணமையை உணர்கிறார் முத்துராமன். அதன் பின் அவர்களின் தாம்பத்தியம் தினமும் முதலிரவாக மாறுகிறது.
1973 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் முத்துராமன், மஞ்சுளா, அசோகன், சுகுமாரி, தேங்காய் சீனிவாச‌ன் , ம னோரமா அகியோர் நடித்தனர். டி.ஆர்.பாப்பாவின் இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. டி.ஆர்.பாலுவின் வச‌னம் படத்துக்குச் சிறப்புச் சேர்த்தது.
ரசிகர்களின் மதிப்பை பெற்ற முதபுதராமன் மறுபிறவியில் நடித்ததை பத்திரிகைகள் கடுமையாக சாடியதால் பத்திரிகையாளர்கள் மாநாட்டைக் கூட்டி தனது வருத்தத்தை தெரிவித்தார் முத்துராமன்.
மித்திரன்25/09/11

Tuesday, September 20, 2011

வெளியேறுகிறது தி.மு.க.தனியாகிறது காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கடந்த வாரம் சிக்கல் விழுந்த வாரமாக அமைந்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் டான்சி நிலப்பேர வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. பரமகுடியில் நடைபெற்ற கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஏழு பேர் பலியானது தமிழக அரசுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி பரமகுடியில் இருக்கும் தேவேந்திரகுல மக்களின் தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தேவேந்திரகுல மக்கள் வழிபாடு செய்வார்கள். இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற ஜான்பாண்டியனுக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. பரமகுடிக்கு அவர் சென்றால் வன்முறை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். பரமகுடி இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. இராமநாதபுர மாவட்டத்துக்கு ஜான்பாண்டியன் சென்றால் கலவரம் ஏற்படும். ஆகையினால் அவர் இராமநாதபுர மாவட்டத்துக்கு வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தடையை மீறி ஜான் பாண்டியன் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை அறிந்த பரமகுடி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கலைக்க முயன்றபோது கலவரம் அடிதடி என்ற நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். பொலிஸார் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
ஜான்பாண்டியன் இராமநாதபுர மாவட்டத்துக்குச் சென்றால் கலவரம் ஏற்படும் என்று காரணம் காட்டி அவரைக் கைது செய்தார்கள். ஆனால் ஜான் பாண்டியன் இராமநாதபுரத்துக்குச் செல்லாமலே கலவரம், உயிரிழப்பு, தமிழக அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை அடக்கிய பொலிஸார் எச்சரிக்கைவிடாது பொதுமக்களை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிய வருகிறது. பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதலில் பொலிஸார் தவறு செய்துவிட்டதாக அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா இதனை சாதிக் கலவரமாக வர்ணித்துள்ளார். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படவில்லை என்ற ரீதியிலாக அறிக்கை மூலம் பொலிஸாரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்துள்ளார்.
இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தின்போது பரமகுடியில் பதற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு மாதமாகத் திட்டமிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும் பொலிஸாரால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பரமகுடியில் ஆரம்பித்த கலவரம் மதுரையிலும் எதிரரொலித்தது. அரசாங்கத்தின் சொத்துக்களும் பொதுமக்களின் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
பரமகுடியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஊடகங்கள் விலாவாரியாக எடுத்துரைத்தன. இதை எல்லாம் கணக்கில் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா இதனை சாதிக் கலவரமாக அடையாளப்படுத்தியுள்ளார். பரமகுடியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில்தான் மோதல் இடம்பெற்றது. இரண்டு சாதிகளுக்கிடையே மோதல் நடைபெறவில்லை. பரமகுடியில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அந்தக் கொலையின் பின் எதுவித அசம்பாவிதமும் பரமகுடியில் ஏற்படவில்லை. தலிக் மாணவனின் கொலையையும் பரமகுடிக் கலவரத்தையும் முடிச்சுப் போட்டு பொலிஸாரையும் அரசாங்கத்தையும் காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்கிறார்.
பரமகுடிச் சம்பவம் தமிழக எதிர்க்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழக அரசைச் சாடுவதற்கு இது வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது பரமகுடிச் சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக உள்ளாட்சித் தேர்தலும் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலபேர வழக்கும் ஒரே நேரத்தில் வருவது ஜெயலலிதாவுக்குப் பாதகமாக உள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் ஸ்பெக்ரம் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலபேபர வழக்கும் பரமகுடி கலவரமும் எதிர்க்கட்சிகளுக்கு பலத்தைக் கொடுத்துள்ளன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஸ்பெக்ரம் வழக்கு தற்போது சோர்வடைந்துள்ளது. சோர்ந்து போயிருந்த டான்சி நிலப்பேர விவகாரம் சூடு பிடித்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஒக்டோபர் 20ஆம் திகதி ஆஜராகப் போவதாக ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு திகதி கொடுத்துள்ளார் ஜெயலலிதா. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துள்ளார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தமக்கு சாதகமாகவே கருத்தில் கொள்ளும் இந்தப் பிரசாரத்தை ஜெயலலிதா எப்படி முறியடிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் எதுவித குழப்பமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறிவிட்டது. மதில் மேல் பூனையாக பிடிகொடாது உள்ளார் திருமாவளவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்ற இளங்கோவன் கோஷ்டியும் திராவிடமுன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி தொடர்வதாக தங்கபாலு கோஷ்டியும் பரப்புரை செய்து வருகின்றன.
இந்தக் குழப்பமான நிலையிலிருந்து கருணாநிதி வெளியேறி விட்டார்.
உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப்போட்டியி டப் போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் புதுத்தெம்பை அளித்துள்ளவேளையில் காங்கிரஸ் தலைவர் களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழக ச‌ட்டமன்றத்தேர்தலின் போது காங்கி ரஸின் மிரட்டலுக்குப் பணிந்த கருணாநிதி உள்ளாட்சித்தேதர்தலில் தன்னிச்சையாக முடி வெடுத்துள்ளார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் இணைந்துபோட்டியிடுவதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியாதது அதன் பலவீனம். காங்கிரஸ் கட்சியின் பலத் தையும், பலவீனத்தையும் நன்கு தெரிந்த கருணாநிதி ச‌ந்தர்ப்பம் பார்த்து காங்கிரஸைத் தூக்கி எறிந்துள்ளார்.
அன்னா ஹசாரேயின் போராட்டத்தினால் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி க்குக்குந்தகத்துக்கிடமாக உள்ளது. மத்திய அரசில் இருந்து வெளியேறுவதன் முதல் கட்டமாகவே காங்கிரஸ் கட்சியைப் புறக் கணித்துள்ளார். கருணாநிதி, திராவிட முன் னேற்றக் கழகத்துக்கு எதிராக வாய்ச்சவடால் விடும் இளங்கோவன்போன்றவர்களுக்குத் நல்ல பாடம் புகட்டுவதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
நாடாளுமன்ற,ச‌ட்டமன்றத் தேர்தல்களை விட வித்தியாச‌மான உள்ளாட்சித் தேர்தல் சிறு கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் வெற்றி மூலம் கட்சி பலப் படுத்தப்படுகிறது. உள்ளாட்சித்தேர்தலில் கட்சியின் வெற்றியை விட செல்வாக்கு மிக்கவரின் வெற்றியே பெரிதாகப் பேச‌ப்படும். கூட்டணி இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் வெற்றி பெறமுடியாது. என்று கூறுபவர்களுக்குப் பதிலளிக்கும் முகமாகவே உள்ளாட்சித்தேர்தலை நோக்குகிறார் கருணாநிதி.
கருணாநிதியின் முடிவு அண்ணா திராவிட முன்@னற்றக் கழகத்துக்கு மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. அசுர பலத்துடன் இருக்கும். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் உள் ளாட்சித்தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக் கையில் உள்ளது.
சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூட்டாளிக் கட்சிகளுக்குத் தாராளமாகத் தொகுதிகளை ஒதுக்கினார்கள். அப்படி அதிகளவில் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இப்போதைக்கு இல்லை. உள்ளக மன்றங்களில் பலமாக இருக்க வேண்டும் என்றே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. தமது பலத்தை நிரூபிப்பதற்கு பலப் பரீட்சையில் இறங்கத் தயாராகிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு18/09/11


Saturday, September 17, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்4

கவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் திரையில் வரும் இதுபோன்ற முகம் சுழிக்கும் காட்சியமைப்பாலர் விரும்புவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவதில் ஒரு சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிக அக்கறைக் காட்டுகிறார்கள். படத்துக்குத் தேவையில்லாத நேரத்தில் கதாநாயகி நீச்சலுடையில் தோன்றுவதும், மழையில் நனைந்து பாடுவதும், பாடிக்கொண்டே குளிப்பதும் ரசிகர்களுக்கு பழகிவிட்டது. சாமி இயக்கிய சிந்து சமவெளி என்ற திரைப்படம் மிக மோசமான தமிழப்படம் என்ற விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
மாமனுக்கும் மருமகளுக்கும் இடையேயான கள்ளக் காதல் என்ற ஒருவரி கதையுடன் களம் புகுந்த இயக்குனர் சாமி அப்படத்தில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் பாலியல் வக்கிரம் உடையவர்களாகப் படைத்துள்ளார். பல பெண்களுடன் தொடர்புகொள்ளும் கிராமத்து முரடனுக்கு எய்ட்ஸால் பாதிக்கப்படுவதை மிருகம் என்ற படமாகவும் கணவனின் தம்பி மீது காதல் கொள்ளும் பெண்ணின் வக்கிரத்தை உயிர் என்ற படமாகவும் தந்தவர்தான் இயக்குநர் சாமி. மிருகம் என்ற படம் அவருக்கு ஓரளவு நல்ல பெயரைப் பெற்றக் கொடுத்தது. உயிர் என்ற படம் சாமி மீது மிக மோசமான விமர்சனத்தை சுமத்தியது. சிந்து சமவெளி அவரை ஒதுக்கியது.
சிந்து வெளி என்றால் புதிய நாகரிகம் வளர்ந்ததை சரித்திர மாணவர்களின் மனம் அசைப்போடும். சிந்து சமவெளி என்றால் பாலியல் வக்கிரம் நிறைந்த படம் என்று சாமி நிரூபித்துள்ளார். போரில் காயமடைந்து தொடர்ந்து சேவையாற்ற முடியாது வீட்டுக்கு திரும்பிவரும் இராணுவ வீரன் கஜினி அவரது மகன் ஹரிஸ்கல்யாண் மகனின் மனைவி அனகா இம் மூவரைப் பற்றிய கதையே சிந்து சமவெளி. ஆசிரியர் பயிற்சிக்காக ஹரிஸ்கல்யாண் விடுதியில் தங்கியுள்ளார். வீட்டிலே தனித்திருக்கும் தகப்பனின் மனதில் கொழுத்து விட்டெரியும் காமத்தீ மருமகளின் மேல் விழுகிறது. சந்தர்ப்பவசத்தால் இருவரும் தவறிழைத்துவிடுகின்றனர். மருமகளாக வாழ வந்த பெண்ணை மனைவியாக்கிய கொடுமை அந்த சந்தர்ப்பத்துடன் முடிந்துவிடாது படம் முழுக்க தொடர்கிறது. கணவன் மீதான ஈடுபாடு குறைந்து மாமன் மீது அதிக அன்பு வைக்கிறாள் மருமகள்.

மாமன் மருமகள் உறவு மறைந்து இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்கிறார்கள். நவநாகரிக உடைகளை வயது முதிர்ந்த மாமன் மருமகளுக்கு அணிந்து பார்ப்பது, பியர் குடிக்கும்படி மருமகளை வற்புறுத்துவது எல்லாம் ஆபாசத்தின் உச்சக்கட்டம் இப்படத்தின் காட்சிகள் மட்டுமல்லாது வசனங்களும் கொச்சையாகவும் தாயையும் தாரத்தையும் இழிவுபடுத்துபவையாகவும் உள்ளன.
இப்படத்தின் இன்னொரு பாத்திரம் வயதான முதியவர் அவருக்கு குழந்தை இல்லை. உறவினரின் மகனை தத்தெடுத்து வளர்க்கிறார். அன்பாக வளர்த்த மகன் முதியவரின் மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். நகைச்சுவையில் கலக்கும் கஞ்சாகருப்பா பாரியாராக வந்து தனது காம இச்சையை பூர்த்தி செய்கிறார். சாமியின் கற்பனையில் உதித்த பாத்திரங்கள் அனைத்துமே பாலியல் சுகம் தேடி அலைபவையாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா உலகம் இப்படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. விரச காட்சிகள் நிறைந்த மலையாள சினிமாவை பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்கள் சிந்து சமவெளியை புறக்கணித்தவிட்டார்கள். கதாநாயகனாகும் கனவுடன் அறிமுகமான ஹரிஸ்கல்யாண் இப்படத்தின் பின் காணாமல் போய்விட்டார். அறிமுக நடிகையான அனகா சிந்து சமவெளி படத்தில் நடித்ததற்காக மனம் வருந்திய அனகா தனது பெயரை அமலாபால் என மாற்றியுள்ளார். சிந்து சமவெளி தனது முதல்படம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வெட்கப்பட்டார். மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அமலாபால் தனது முதல்படம் இந்து சமவெளி என்பதை கூறுவதற்கு வெட்கப்படுகிறார்.

மித்திரன்18/09/11



Friday, September 16, 2011

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்குழம்பிக் கிடக்கும் கூட்டணி

பிரமாண்டமான வெற்றியுடன் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி மேற்கு இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களும் ஜெயலலிதாவுக்குப் பலப் பரீட்சையாகவே அமைய உள்ளன. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது பெற்ற வெற்றியை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது குறைந்த மொத்த வாக்குகளால் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் அதனையேதமது துரும்புச் சீட்டாக்கி ஆளும்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற மரியம் பிச்சை அமைச்சரவையில் இடம்பிடித்தார். சட்டசபை உறுப்பினராகப் பதவியேற்க கடந்த மே மாதம் சென்னைக்குச் சென்று கொண்டிருக்கையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் மரியம் பிச்சை. அப்போது எதிர்க்கட்சிகளின் சதியால் ஏற்பட்ட விபத்து என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அது விபத்து என்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித நெருக்கடியும் இன்றி வெற்றி பெற்று விடும். ஆளும் கட்சி என்ற பலம் இருப்பதனால் கூட்டணிக் கட்சிகளின் தயவை அதிகம் நாட வேண்டிய அவசியம் இல்லை. சட்ட சபைத் தேர்தலில்போது பெற்ற வெற்றியை விட அதிக வெற்றியைப் பெறுவதற்கு கூட்டணிக் கட்சிகளின் தயவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவசியம்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைதனால் ஒக்டோபர் கடைசி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகிறது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களைக் கட்சிகள் செய்யத் தொடங்கி விட்டன. தமிழகசட்ட சபைத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மாக்ஸிட் கட்சி, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் முன்னேற்றகப் பேரவை ஆகியன போட்டியிட்டன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா அல்லது சில கட்சிகள் வெளியேறி விடுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் @தர்தலையும் Œந்திக்க @வண்டும் என்று கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். தமிழகச்சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடருமா இல்லையா என்பதை ஜெயலலிதா இன்னமும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
தமிழக அரசைக் கைப்பற்றுவதற்காக கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலால் தனது பிடியைத் தளரவிட்ட ஜெயலலிதா உள்ளாட்சித்தேர்தலின்போது அளவுக்கதிகமாக விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெலலிதாவுடன் கூட்டணி சேராது தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டிருந்தால் விஜயகாந்தின் கட்சி இப்படிப்பட்ட பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்காது. உள்ளாட்சி மன்றங்களிலும் இதேபோன்று வெற்றியைப் பெறுவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார். அதற்குரிய சந்தர்ப்பத்தை ஜெயலலிதா இலகுவில் வழங்கமாட்டார். எதிர்பார்த்த உள்ளாட்சி மன்றங்கள் கிடைக்காத போது தனித்து போட்டியிடுவதா அல்லது கிடைத்தது போதுமென்று திருப்திபடுவதா என்பøத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் விஜயகாந்துக்கு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் முன்னரைப் போல உறவாடவில்லை. என்றாலும் இரண்டு கட்சிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளன. தமிழக அரசு கொடுக்கும் நெருக்குதலைச் சமாளிக்க முடியாத திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. தமிழக அரசை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இதுவரை குரல் கொடுக்கவில்லை. ஊழல் மோசடி, நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை கைது செய்யப்படுகிறார்கள். சில குற்றச்சாட்டுகள் உண்மையானவை. சில போலியானவை.


சமச்சீர்க் கல்வியைத் தமிழக அரசு முடக்கியதை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளே குரல் கொடுத்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்காளிகளான காங்கிரஸ் மௌனம் காத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருந்தபோதிலும் தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ் வெளியேறிவிட்டார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட மாட்டாது என்று அறிவித்துவிட்டார். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக சட்ட சபைத் தேர்தலில் ஒதுங்கி இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையும் இதுதான். தனித்து போட்டியிடப் போவதாக வைகோவும் ராமதாஸும் அறிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் உள்ளாட்சித் தேர்தல் பற்றி வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை. தனக்குத் சாதகமான உள்ளாட்சி மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் திருமாவளவனுக்கு உள்ளது. காங்கிரஸைக் கழற்றி விட வேண்டும் என்று திருமாவளவன் விரும்புகிறார். காங்கிரஸைக் கைவிட கருணாநிதி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் திருமாவளவன் தொடர்ந்து இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது உள்ளாட்சி மன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தெரிந்து விடும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனது ரசிகர்களைக் களமிறக்க விஜய் தயாராகிவிட்டார். சீமானும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க தேர்தல் பரப்புரை பரபரப்பாகிவிடும்.
சொத்துகள் குவித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, இளவரசி சசிகலா, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான வழக்கு பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் இதுவரை நேரில் ஆஜராகாத ஜெயலலிதாவை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சார்பில் வாதிடும் ஹரீஷ் சால்வே, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபல வழக்கறிஞர். ஜெயலலிதா, நேரில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சி செய்து வெற்றி பெற்றார். ஆனால் நீதிபதிகளின் திடுக்கிடுப் பிடியினால் இவரின் வாதம் எடுபடவில்லை. ஜெயலலிதா ஆஜராகும் நாளை 12 ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அண்டை மாநில நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை. ஜெயலலிதா நீதிமன்றத்துக்குச் சென்றால் அது தேசிய அளவில் பிரபலமாகிவிடும். ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சிகளின் தொலைக்காட்சிகளில் அந்தச் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும். ஊழல் குற்றச்சாட்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களைப் பிடித்து சிறையிலிடும் தமிழக அரசுக்கு இது மிகப் பெரிய அடியாக இருக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமது தவறுகளை மறைத்து விடுவதற்கு ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் தயாராகி விட்டனர்.


வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு04/09/11


Sunday, September 11, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 3

அப்பாவிக் கணவனாக அறிமுகமாகி வில்லனாக பரபரப்பூட்டி கதாநாயகனாக உயர்ந்த ரஜினிகாந்த் மீண்டும் பெண்களைச் சீரழிக்கும் வில்லனாக நடிதத படம் நெற்றிக்கண் பெண் பித்துப்பிடித்த பிரபல தொழிலதிபராக ரஜினி நடித்தார். அழகான பெண்களைத் தன் படுக்கையில் விழத்தி அனுபவிக்கும் பாத்திரத்தில் தனக்கே உரிய இட்டகாசத்தை வெளிப்படுத்தினார்.
கொள்ளைக்கோஷ்டி, சதிகாரர்கள், குடும்பச் சொத்துக்காக அலைபவர்கள் பெண் பித்து பிடித்த வில்லன்களை போன்றவர்களை அடித்துத் துவம்சம் செய்யும் கதாநாயகனான ரஜினி காந்த் பெண் பித்துப்பிடித்த பாத்திரத்தில் நடிப்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகத்தை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு பிரதான வில்லன் பாத்திரத்தை ரஜினிக்குக் கொடுத்தார். படத்தைத் தயாரித்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர்.
பெண்களை சீரழிக்கும் தந்தையாகவும் ரஜினியை திருத்தும் மகனாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடித்தார். கதாநாயகனும் வில்லனும் தமது அபிமான நடிகர் என்பதனால் வில்லன் ரஜினியை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பெண் பித்தனாக பெண்களை சீரழிக்கும் கொடுமைக்கார வில்லனாக ரஜினி நடித்தார். ரஜினியின் ரசிகர்கள் அவரை வில்லனாகப் பார்க்கவில்லை. ரஜினியாகவே பார்த்தனர். வில்லன் என்ற பாத்திரம் அடிப்பட்டு கதாநாயகனுக்கு சமமான பாத்திரமாக ரஜினி மிளிர்ந்தார்.
அபூர்வராகங்களில் அப்பாவிக் கணவனாக அறிமுகமாகினார் ரஜினி. ரஜினியின் மனைவியை காதலிப்பவர் கமல். மூன்று முடிச்சுப் படத்தில் கமலின் காதலி ஸ்ரீதேவியை ஒருதலைப்பட்சமாகக் காதலிக்கிறார் ரஜினி. ரஜினியின் பாலியல் பார்வையை உணர்ந்த ஸ்ரீதேவி காதலன் கமலிடம் உண்மையை கூறுகிறாள். நண்பனைப்பற்றித் தன் காதலி கூறிய உண்மைகளைக் கமல் நம்பவில்லை. ரஜினியின் சதியால் விபத்து என்ற பெயரால் கமல் கொல்லப்படுகிறார். விதி வசத்தால் ரஜினியின் தகப்பனை இரண்டாந்தாரமாக ஸ்ரீதேவி மணக்கிறார். பல படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகனான ரஜினி மீண்டும் வில்லனாக மாறியபடம் தான் நெற்றிக்கண்.

நம்பியார், அசோகன், வீரப்பா போன்ற வில்லன் நடிகர்களை ரசிகர்கள் வெறுத்தனர். ஆனால் வில்லன் ரஜினியை ரசிகர்கள் வெறுக்கவில்லை. வில்லன் ரஜினியும் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். பெண் பித்துப்பிடித்த பிரபல தொழிலதிபரான ரஜினிக்கு அழகான மனைவி, சமுதாயம் மதிக்கும் தொழிலதிபர், திருமணத்தை எதிர்பார்க்கும் மகன் ஆனாலும் அழகானப் பெண்களைக் கண்டால் சபலமடைந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அனுபவிக்கத்துடிக்கும் ஆசை இன்னமும் அடங்கவில்லை. கணவனின் சுயரூபம் தெரிந்ததும் மனைவி வேதனைப்படுகிறாள். தாயின் துயரத்தை அறிந்த மகன் தந்தையைத் திருத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறார்.
சபலத்தீ கொண்ட ரஜினி தன்னிடம் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணைக் கெடுத்தவிடுகிறார். இதனை அறிந்த மகன் ரஜினி அவளைத்தான் வீட்டுக்கு அழைத்துவந்து தன் மனைவி என அறிமுகப்படுத்துகிறார். என் குழந்தையை அவள் வயிற்றில் சுமக்கிறாள் என்று கூறுகிறார். தன்னால் கெடுக்கப்பட்ட பெண் தனக்கு மருமகளாக வருவதா என்று சீறுகிறார் தந்தை. உண்மையை அறிந்த மனைவி வேதனைப்படுகிறாள். நடப்பது நாடகம் என அறியாத மகன் ரஜினியின் காதலி தன் காதலனை வெறுக்கிறாள். தாய், தகப்பன், காதலி ஆகிய மூவரின் உணர்வுப் போராட்டதில் சிக்கித்தவிக்கிறார் ரஜினி. இறுதியில் தந்தை ரஜினி திருந்துகிறார். மகன் ரஜினி காதலியுடன் சேர்கிறார். தந்தையால் கெடுக்கப்பட்ட பெண் வெளிநாட்டுக்குச் செல்கிறாள்.
1981 ஆம் ஆண்டு வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. விசு கதை, வசனம் எழுதினார். ரஜினி, லக்சுமி, சரிதா, மேனகா, சரத்பாபு, விஜயசாந்தி, தேங்காய்சீனிவாசன், கவுண்டமணி, ஐ.எஸ்.ஆர் ஆகியோர் நடிததனர். கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். ரஜினியின் வெற்றிப்படங்களில் ஒன்றாக நெற்றிக்கண் பதிவானது. பெண் பித்துப்பிடித்து அலையும் ரஜினியின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. தமிழில் வெற்றிபெற்ற இப்படம் முசலோடிசி தசார பண்டுகர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி அங்கும் வெற்றிக்கொடி நாட்டியது.
மித்திரன்11/09/11

Sunday, September 4, 2011

மரணத்தை வெல்லபோராடுகிறது தமிழகம்

ராஜீவ் காந்தியின் கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு இந்திய ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து தமிழகம் கொந்தளித்துப் போயுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுதலையாவதற்கு மூவரும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ராஜீவைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இம் மூவரின் பின்னால் இயங்கிச் செயற்பட்டது. ஜனாதிபதியின் அலுவலகத்தில் 11 வருடங்கள் தூங்கி வழிந்த கருணை மனு கடந்த வாரம் தூசுதட்டி எடுக்கப்பட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் கடந்த மாதம் 12 ஆம் திகதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழக்கையில் சந்தித்திராத மிகப் பெரிய நெருக்கடிக்கு முகங் கொடுத்தார். ஜனாதிபதியின் முடிவை வேலூர் சிறைக்குத் தெரியப்படுத்த வேண்டியது தமிழக உள்துறையின் கடமை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உத்தியோகபூர்வமாகத் தெரிந்ததும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண நாள் நிச்சயிக்கப்படும்.
தூக்குத் தண்டனை என்பது சட்டப்படி செய்யும் கொலை. தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும். தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் வாதம். பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது. 20 வருடங்களாக சிறை வாசத்தை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் வாதம்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கியமான சில தகவல்கள் மறைக்கப்பட்டு விட்டன. இக்கொலையின் சூத்திரதாரிகள் யார்? என்று அடையாளம் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் உரியவர்களுக்குக் கேட்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சு அனுப்பிய தகவல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத்துக்கான நாள் குறிக்கப்படடு விடும் என்பதனால் தமிழக முதலமைச்சர் மிகவும் நிதானமாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்தõர்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதும் சகலரும் ஜெயலலிதாவை நோக்கித் திரும்பினார்கள். தமிழக முதல்வர் நினைத்தால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்று பரவிய செய்தி தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்ததும் காமராஜர் காலத்தில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. காமராஜரைப் போன்று ஜெயலலிதாவும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்ற கோஷம் வலுப்பெற்றது.
அரசியல் ரீதியாக நெருக்கடியை ஜெயலலிதாவுக்குக் கொடுப்பதற்காகவே 11 வருடங்களின் பின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். புலி உறுப்பினர்கள் மூவரின் உயிரை ஜெயலலிதா காப்பாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் மீது சுமத்தப்படலாம். இரு தலைக் கொள்ளி எறும்பான நிலையில் தவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து மத்திய உள்துறை அமைச்சின் முடிவை வேலூர் சிறை அதிகாரிக்கு அறிவித்தார்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியேõரின் தூக்குத் தண்டனை உறுதியானதும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரினதும் பார்வை ஜெயலலிதாவின் மீது திரும்பியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தன. தமிழகத்தின் உணர்வலைகள் ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியைத் தோற்றுவித்தன. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி தஞ்சையில் செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். மேலும் இருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரும் தமக்கு உயிர்ப் பிச்சையளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்குதல் செய்தனர். ஜெயலலிதாவால் செய்ய முடியாததைத் நீதிமன்றம் செய்யும் என்ற நம்பிக்கை தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் மீது நம்பிக்கை இழந்தவர்கள் நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்தார்கள்.
மத்திய அரசின் காய் நகர்த்ததலை நன்கு புரிந்து கொண்ட ஜெயலலிதா, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர். ஜெலலிதாவின் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு தமிழ கசட்ட சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சற்று ஆறுதலைக் கொடுத்தது. 2002 ஆம் ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியேõரின் கருணை மனுவை அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் அமைச்சரவை நிராகரித்தது என்ற தகவலை ஜெயலலிதா வெளியிட்டு அம் மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியவர் கருணாநிதி என்று சுட்டிக் காட்டினார்.
பேரறிவாளன், சந்தன், முருகன் ஆகியோரின் சார்பின் இந்தியாவின் மிகப் பிரபலமான வழக்கறிஞராகிய ராம் ஜெத்மலானி ஆகியோர் ஆஜரானார்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு அவர்களின் மரண தண்ட னையை தள்ளிப் போட்டது. ஒன்பதாம் திகதி இறப்பதற்கு நாள் குறிக்கப்பட்ட மூவரின் உயிர் தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளது.
மரண தண்டனை விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு இன்னொரு நெருக்கடி காத்திருக்கிறது. ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜெயலலிதாவுகு இரண்டுவருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது அதை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள்ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சில இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்செயலாக மாறியது. கோவை, வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்ற பஸ் தர்மபுரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா என்ற மூன்று மாணவிகள் பஸ்ஸினுள் கருகி பலியானார்கள்.
தர்மபுரி எரிப்பு வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவருக்கும் சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இம்மூவரின் மேன்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இவர்களின் கருணை மறு ஜனாதிபதியின் அலுவலகத்தில் உள்ளது. இவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டால் ஜெயலலிதாவின் நகர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது கட்சிக்காரர்களைக் காப்பாற்றுவதா? கைவிடுவதா? என்ற இக்கட்டான சூழல் அவருக்கு எழக்கூடும்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இது இந்திய அரசியலின் அடுத்து வரப்போகும் புயலுக்கு எதிர்வு கூறலாக உள்ளது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மலின் கருணை மனு ஜனாதிபதி மாளிகையில் தூங்குகிறது. அஜ்மலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டால் இந்தியா பாகிஸ்தான் முறுகல் நிலை மேலும் தீவிரமடையும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு04/09/11






Saturday, September 3, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 2

நடிப்புக்கு சிவாஜி, சண்டைக்கு எம்.ஜி.ஆர் என தமிழ் சினிமா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் காதலில் தனி முத்திரைப் பதித்தவர் ஜெமினி கணேசன். நடிகர் திலகம் மக்கள் நடிகர் என்ற பட்டங்களுக்கு இணையாக காதல் மன்னன் என்ற பட்டப்பெயர் வெள்ளித்திரையில் மின்னியது. இளம் பெண்களின் காதல் நாயகனாக மிளிர்ந்தார் ஜெமினி கணேசன். அவர் தனது காதலை படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் தொடர்ந்தார். காதல் மன்னன் ஜெமினியின் இடத்தை காதல் இளவரசன் கமல் பிடித்தார்.
கமலை அன்புடன் மாப்பிள்ளை என அழைப்பார் ஜெமினி. மாப்பிள்ளை நீயும் என்னைப்போல காதலில் விழுந்திடாதே என அடிக்கடி எச்சரிப்பார். ஜெமினியின் வழியைப் பற்றிப்பிடித்த கமல் காதலில் தனி முத்திரைப் பதித்தார். கமலின் படத்தில் முத்தக் காட்சி கட்டாயம் இருக்கும் என்ற நிலை உருவானது. கமலுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகியின் உதடு கவனம் என்று கிசு கிசுக்கள் வெளியானது. ஜெமினியின் மடியில் தவழ்ந்து சினிமாவில் அறிமுகமான ராசியால் காதலில் விழுந்தார் கமல்.
ஸ்டூடியோக்களில் உருவான தமிழ் சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. சினிமா எப்படி உருவாகிறது எனத் தெரியாத பாமரனுக்கும் சினிமா பற்றிய மாயப்படத்தை சொல்லிக் கொடுத்த பாரதிராஜாவின் வித்தியாசமான திரைப்படம் சிகப்புரோஜாக்கள், யார் அவள், அதே கண்கள் போன்ற மர்மப்படங்களைப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு சினிமா புதியதொரு அனுபவத்தைக் கொடுத்தது. சிகப்புரோஜாக்கள் இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனின் கொலை வெறி என்ற ஒருவரி கதையை திகிலூட்டும் விதத்தில் திரையில் தந்தார் பாரதிராஜா. பெண்களால் பாதிக்கப்பட்டு பெண்கள் மீது உண்டாகும் வெறுப்பினால் பெண்களை கொலைச் செய்யும் இளம் தொழிலதிபர் திலீபனாக கமல் நடித்தார். தனிமையான பங்களா, ரோஜாத்தோட்டம் பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் கருமை நிறமான பூனை. மனதில் திகில் உண்டாக்கும் மனிதர்கள், பெண்களின் அவலக்குரல் என்பன படத்துக்கு வலுவூட்டின. கருமை நிறமான அந்தப் பூனை திடீரெனத் தோன்றி மீயாவ் என்று அலறும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் தியேட்டரில் இருக்கின்றோம் என்ற எண்ணம் அகன்று தனிமையில் கறுப்பு பூனையிடம் சிக்கிவிட்டோமோ என்ற திகிலில் படபடவென இதயம் துடித்தது.
பெண்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறி நாயகனுக்கு ஏற்படும்போது அதை நிறைவேற்றுவதற்காக கமல் மேற்கொள்ளும் முயற்சிகள் இயக்குநரின் வித்தியாசமான கற்பனை பெண்களை கொல்ல வேண்டும் என்று துடித்த மனதினுள் ஒரு மூலையில் உறைந்துக் கிடந்தகாதல் துளிர்விடும் போது அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார் கமல். கொலைக்காரனின் மனதில் இப்படி ஒரு காதலா? என்று ஏக்கம் ஏற்படுகிறது. காதலி சாரதாவாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பும் இளமையும் படத்திற்கு மேலும் மெருகூட்டின.
காதல் திருமணத்தில் முடிகிறது. அன்பு மனைவியை தனது அந்தரங்க பங்களாவுக்கு அழைத்துச் செல்கிறார் கமல். பிரபல தொழிலதிபரின் மனைவியாக ஸ்ரீதேவி புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து புகுந்த வீட்டுக்குச் செல்கிறாள். அங்கு சென்ற பின்னர் தான் தனது கணவனின் சுயரூபம் தெரிகிறது. தனது உண்மையான பக்கத்தை மனைவி தெரிந்தால் அவளையும் கொலை செய்யத் துணிகிறார் கமல். ஸ்ரீதேவி கொல்லப்படுவாரா இல்லையா என்ற பதைப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இடையில் புகுந்த பொலிஸ் கமலை கைது செய்கிறது. சிறையில் அவருக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுகிறது. கமலின் வருகைக்காக காத்திருக்கிறாள் ஸ்ரீதேவி.
1978 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக இருந்தது. கதை திரைக்கதை இயக்கம் பாரதிராஜா. கிராமத்து படங்கள் மூலம் மண் வாசம் தந்த பாரதிராஜா சிவப்பு ரோஜாக்கள் மூலம் ரசிகர்களை திகிலடைய வைத்தார். இசைஞானியின் இசை படத்துக்கு மேலும் மெருகூட்டியது. பின்னனி இசை கதைக்கு மேலும் வலுவூட்டியது. ஆங்கிலப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இசைஞானி ஏற்படுத்தினார்.
பாக்கியராஜாவின் வசனம் படத்துக்கு வலுவூட்டியது. கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். நியாஸின் ஒளிப்பதிவு மனதில் பதிந்தது.
கமல் ஸ்ரீதேவி கவுண்டமனி வடிவுகரசி ஜீ.சீனிவாசன் எல்.காஞ்சனா நடித்தனர். இவர்களுடன் கே.பாக்கியராஜா சிறிய வேடத்தில் தோன்றினார். 25 வாரங்களுக்கு மேல் ஒடி வெள்ளிவிழவையும் எட்டியது. ஏர்ந்தாகுலாபிலு எனும் பெயரில் தெலுங்கிலும், ரெட்ரோஸஸ் எனும் பெயரில் ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
மித்திரன் 04/09/11

Friday, September 2, 2011

சாதித்தது அ.தி.மு.க.வேதனையில் தி.மு.க

தமிழக அரியாசனத்தில் ஜெயலலிதா கோலோச்ச ஆரம்பித்து நூறு நாட்கள் கடந்து விட்டன. இந்த நூறு நாட்களில் அவர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரின் வழமையான பிடிவாதத்தினால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த முயற்சித்து அவமானப்பட்டõர். இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டத்தின் உதவியுடன் முடக்கும் வேலையை கன கச்சிதமாகச் செய்து வருகிறார்.
தமிழக சட்ட சபை வரலாற்றில் என்றும் இல்லாத புதிய வரலாற்றுப் பெருமையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அவர். மே மாதம் 16 ஆம் திகதி மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமி
ழக முதல்வராகப் பொறுப்பேற்க முன்னரே புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்திலிருந்து மீண்டும் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாறும் என்று அறிவித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுபேற்றதும் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று ஆரவாரம் அடங்கு முன்னர் பதவியிலிருந்து சிலர் பந்தாடப்பட்டனர். வேறு சிலர் இலாகா மாற்றப்பட்டனர்.
மதுரையின் மீதான ஜெயலலிதாவின் உக்கிரப் பார்வையால் மதுரை கலகலத்தது. அழகிரிக்குப் பக்கபலமாக இருந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அடுத்த குறியார் என்று பரபரப்பான கேள்வியுடனேயே காலைப் பொழுது விடிகிறது. மதுரையைச் சுற்றி இருந்த மாயை இருள் அகன்றுவிட்டது.
தமிழக தேர்தல் காலத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு லப்டொப், கிரைண்டர் மிக்ஸி கொடுப்பதற்காக வேலைத் திட்டம முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜெயலலிதாவின் குரல் மிக உச்சத்தில் உள்ளது. வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களை விட ஜெயலலிதாவின் குரலுக்கு அதிக மதிப்புக் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் ஆட்சிபீடம் ஏறியதும் மத்திய அரசியுடன் ஜெயலலிதா சமரசமாகச் செல்வார் என்று எதிர்பார்க்க ப்பட்டது.
ஆனால், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசை வழி நடத்துவதற்கு ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார்.
கச்சதீவு விவகாரத்திலும் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கச்சதீவு ஒப்பந்தத்தின்படி இலங்கை நடக்கவில்லை. இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி விட்டது. இந்திய மத்திய அரசு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார். ஜெயலலிதாவைத் திருதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வரை ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஒரு பக்கத்தால் நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா. புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவது, சித்திரை முதலாம் திகதியே மீண்டும் தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடுவது ஆகிய அறிவிப்புகள் கருணாநிதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தினுள் நுழையமாட்டேன் என்ற சபதத்தை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
கோட்டையினுள்ள தலைமைச் செயலகத்தில் வசதிகள் போதியளவு இல்லை. தவிர
அந்தக் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணங்களினால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரின் முயற்சி வெற்றிபெறாத நிலையில் கருணாநிதியின் முயற்சியினால் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது மெரீனாவுக்கு அருகே தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுவதற்கும் முயற்சி செய்யப்பட்டது. நிர்வாகச் சிக்கல் பொது மக்களுக்கு சிரமம் என்பதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.


2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மகாபலிபுரத்தில் நிர்வாக நகரம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகம் அமைத்தால் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. ராணி மேரி கல்லூரி இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். ராணி மேரி கல்லூரி மாணவிகளின் எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். அடையாறு சுற்று சூழல் பகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் எல்லாம் பறிபோவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக இத் திட்டம் கைவிடப்பட்டது.
சகல வசதிகளும் உடைய தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவை என்பதை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உணர்ந்திருந்தார்கள். அவர்களால் செய்ய முடியாததை கருணாநிதி செய்து முடித்தார். 2008 ஆம் ஆண்டு ஒமாந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி ஆரம்பமானது. 2010 மார்ச் மாதம் 13 ஆம் திகதி புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகப் பல கட்டடங்கள் இடித்து அழிக்கப்பட்டன. பல ஆண்டு பழமையான கலைவாணர் அரங்கம், இயற்கை விநாயகர் கோயில், சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் தலைமை அலுவலகமான எம்பயர் கட்டிடம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலக கட்டிடம், திருவல்லிக் கேணி தீ அணைப்பு நிலையம், தலைமைச் செயலக ஊழியர் குடியிருப்பு, பழைய கில்ட் பத்திரிகையாளர் அலுவலகம், பழைய எம்.எல்.ஏக்கள் விடுதி நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
அவசர அவசரமாக அள்ளித் தெளித்த
கோபத்தில் அரையும் குறையுமாக புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டதால் அப்போதே புகார் எழுந்தது. கருணாநிதியால் வீம்புக்காகத் திறந்து வைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பழிவாங்கும் நோக்கில் ஜெயலலிதா முடக்கியுள்ளார். புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. புதிய தலைமைச் செயலகத்தில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளõர். அலுவலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் மருத்துவமனை அமைப்பது சாத்தியமில்லை. மருத்துவமனை அமைப்பதற்குரிய அடிப்படை வசதிகள் எவையும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இல்லை. ஆகையினால் இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சித்திரை மாத முதலாம் திகதி தமிழ்ப் புதுவருடம் முன்பு ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்புப் கிடைத்துள்ளது. தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப்புத்தாண்டு என்று 2008 ஆம் ஆண்டு கருணாநிதி அறிவித்தார். கருணாநிதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் வரவேற்கவில்லை. அரசு ஆணைப்படி தை மாதம் முதலாம் திகதி புது வருடமாக கொண்டாடப்பட்டது. பழமையில் ஊறித் திளைத்தவர்கள் சித்திரை மாதம் முதலாம் திகதியையே தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியல் சட்டத்தினால் மாற்ற முடியாது என்பதை கருணாநிதி உணரத் தவறி விட்டார். தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப் புது வருடம் என்பது எனது முடிவல்ல 500 புலவர்கள் கூடி ஆராய்ந்து எடுத்த முடிவு என்று கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் விருப்பப்ப டியே 500புலவர்களும் ஆமோதித்தார்கள் என்பது வெளிப்படையானது.
ஜெயலலிதாவின் ஆட்சியிலே செம்மொழிக்கு இடமில்லை. கருணாநிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காக இடமின்றித் தடுமாறுகிறது செம்மொழி கோட் டையிலுள்ள புதிய தலைமைச் செயலகத்திலேதான் செம்மொழி நூலகம் இயங்கியது. தலைமைச் செயலகம் கோட்டைக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மொழி நூலகத்துக்கான நிலையான இடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் நூறு நாளாட்சியில் பொது மக்களுக்குப் பெரிய பாதிப்பு எவையும் ஏற்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறையில் உள்ளனர். இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் களையும் முறைகேடுகளையும் கண்டறிவதிலேயே தமிழக அரசு அதிக அக்கறை காட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரச அமுல்படுத்திய திட்டங்களை மறுபடியும் முடக்கியுள்ளது. பழிவாங்கும் அரசியலிலிருந்து ஜெயலலிதா இன்னமும் மீளவில்லை.

வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு29/08/11


புரட்சிக்குப் பலியான கடாபி

எண்ணெய் வளம் மிகுந்த லிபி யாவை 42 வருட காலம் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்த கடாபி யின் ஆட்சி கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடி வுக்கு வந்தது. 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முத லாம் திகதி இராணுவப் புரட்சி மூலம் லிபியாவை கைப்பற்றிய கடாபி 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நேட் டோவின் ஆதரவில் நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள மிகப் பெரிய நாடு லிபியா. லிபியாவின் கிழக்குப் பகுதியில் எகிப்து, தென்பகுதியில் சூடான், ஸ்காட், நைஜீரியா, மேற்குப் பகுதியில் அல்ஜீரியா, முனீஷியா ஆகிய நாடுகள் உள்ளன. வட பகுதியில் மத்திய தரைக் கடல் உள்ளது. நாட்டின் பெரும்பகுதி பாலைவனம். 65 இலட்சம் மக்கள் தொகை கொண்ட லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். "ன்னி முஸ்லிம்கள் 97 சதவீதமானவர்கள். லிபியாவில் பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீதமாக உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம் 30 சதவீதம் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்÷ காட்டின் கீழ் உள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிடியில் இருந்த லிபியா 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் லிபியாவின் மன்னராகப் பதவியேற்றார். இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களில் ஒருவர் முயாமர் அபுமின்யர் அல் கடாபி புரட்சியின் மூலம் லிபியாவில் ஜனாதிபதியாவேன் என்றோ உலகளாவிய புரட்சி லிபியாவை கைப்பற்றும் என்றோ கடாபி நினைக்கவில்லை. 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி லிபியாவின் கிர்ட் நகர் அருகே உள்ள பாலை வனத்தில் கூடாரத்தில் பிறந்தார் கடாபி. கடாபடா என்ற சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்தவர் கடாபி. லிபிய இராணுவ அக்கடமியில் 1965 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். அரபு உலகம் மதிக்கும் தலைவர் எகிப்தின் அன்றைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் வழி காட்டலில் ஈர்க்கப்பட்டவர் கடாபி.


லிபிய இராணுவத்தில் பணியாற்றிய கடாபி 1966ஆம் ஆண்டு பெங்காசி இராணுவப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி அக்கடமியில் பயிற்சி பெற்றார். மீண்டும் நாடு திரும்பி இராணுவத்தில் பணியாற்றினார். லிபியாவில் மன்னராட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை இவரது மனதில் அதிகமானது. லிபிய மன்னர் இத்ரிஸ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக துருக்கி நாட்டிற்குச் சென்ற போது இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
லிபியாவின் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிய கடாபி லிபியாவின் முடி சூடா மன்னராகவே இருந்தார். ஆட்சி அதிகாரம் அனைத்தையும் ஜனநாயகம் என்ற போர்வையில் தன் கையில் எடுத்தார். கடாபியின் குடும்பம் சகல வசதிகளையும் அனுபவித்தது. லிபிய மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. லிபிய அரபுக் குடியரசு என்று புது நாமம் சூட்டப்பட்டது. முப்படைகளின் தளபதியாகவும் ஆளும் கவுன்சில் தலைவராகவும் தன்னை அறிவித்தõர். 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடாபிக்கு எதிராக ஒரு சில இராணுவ வீரர்கள் புரட்சி செய்ய முயற்சி செய்தார்கள். கடாபியின் உளவுப் படை அதனை முறியடித்தது.
1970-72 வரை பிரதமராகவும் இராணுவ அøமச்சராகவும் பதவி வகித்தார். 1979 ஆம் ஆண்டு ஆட்சியாளராகினார். மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை மலரச் செய்யப் போவதாக உறுதியளித்த இவர் தொடர்ந்து சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். ஆட்சியைப் பிடித்ததும் வெளிநõட்டவர்களை விரட்டியடித்தார். மக்களின் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறியவர் பச்சைப் புத்தகம் என்ற பெயரில் தனது கொள்கைகளை லிபியாவில் பரப்பினார். கடாபியின் விருப்பப்படியே லிபியாவின் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. நாட்டின் நிரந்தர சகோதரத் தலைவர் புரட்சி வழிகாட்டி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. சகல வசதிகளையும் செல்வங்களையும் கடாபியின் குடும்பம் அனுபவித்தது. பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தது. கடாபியைக் காப்பாற்றுவதற்காக விசேட படைகள் உருவாக்கப்பட்டன. இவரது மெய்க்காப்பாளர்கள் அனைவரும் இளம் பெண்களே. கடாபியின் பாலியல் பலவீனம் பற்றி அப்போது சில தகவல்கள் இருந்தன. அதுபற்றி யாரும் அப்போது பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை. விக்கிலீக்ஸ் இதனை அம்பலப்படுத்தியது. கடாபிக்கு எதிரான குரல்கள் அனைத்தும் அவ்வப்போது அழிக்கப்பட்டன.
எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சியும் அதன் பின்னராக நடந்த ஆட்சி மாற்றமும் கடாபியின் எதிர்ப்பாளர்களுக்கு உற்சாக மூட்டின. கடாபிக்கு எதிரான போராட்டங்களும் கிளர்ச்சிகளும் பெப்ரவரி 15ஆம் திகதி லிபியாவின் பெங்காசி நகரில் ஆரம்பித்தன. இப்போராட்டம் லிபியாவின் பல நகரங்களுக்கும் பரவியது. பேஸ்புக் இணையத்தளம் என்பன இப்போராட்டங்களுக்கு வலுவூட்டின. கிளர்ச்சியாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திய லிபியாவின் இராணுவம் தொழில் நுட்பப் போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. கடாபியின் காட்டாட்சியை அகற்றுவதற்காக களமிறங்கிய புரட்சிப் படை பெங்காசி மிஸ்ராட்டா ஆகிய நகரங்களை கைப்பற்றியது.
கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மேலதிக இராணுவம் அதி நவீன ஆயுதங்களுடன் அடக்கு முறைகளைக் கையாண்டது. புரட்சிப் படையை ஒடுக்குவதற்காக லிபிய இராணுவம் வன்முறைகளை கையாண்டது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் எதிர்ப்பை வெளியிட்டு லிபியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. புரட்சிப் படையினர் வசமாகிய லிபியாவின் கிழக்குப் பகுதியை நிர்வாகம் செய்ய அமெரிக்காவின் தலைமையில் மார்ச் 5ஆம் திகதி இடைக்காலக் கவுன்சில் அமைக்கப்பட்டது. மார்ச் 7ஆம் திகதி முதல் இங்கிலாந்து பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் இணைந்து கொண்டன. புரட்சியாளர்களுக்கு எதிராக லிபிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. நேட்டோ படைகள் வான் வெளிக்கண்காணிப்பை ஏற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுக ளில் மூக்கை நுழைத்து அமெரிக்கா கையைச் சுட்டுக்கொண் டதால் லிபியாவில் அமெரிக்கா தலைமைவகிப் பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் கண்காணிப்பு தலை மைப் பதவியிலிருந்து விலகியது அமெரி க்கா. ஐ.நா.வின் அனுமதியுடன் நேட்டோ பொறுப்பேற்றது. ஜூன் 27 ஆம் திகதி சர்வதேச நீதிமன்றம் கடாபி க்கும் அவரது மகன் சயீட் அல் இஸ் லாம் மீதும் பிடி ஆணை பிறப்பித்தது. கடாபியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும் பிய நாடுகள் புரட்சிப் படைக்கு ஆயுத உதவி செய்தன.

லிபியா மீதான கடாபியின் பிடி மெது மெதுவாக விலகத் தொடங்கியது. லிபியாவின் பிரதான நகரங்களை புரட்சிப் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கடந்த 21ஆம் திகதி புரட்சிப் படையினர் திரிபோலி மீது மும்முறை தாக்குதல் நடத்தினர். வட பகுதியான கடற்பரப்பை நேட்டோ படை முற்றுகையிட்டது. கடந்த ஆறு மாத காலமாக பகிரங்கமாக தோன்றாது கடாபி வானொலியில் நாட்டு மக்களுக்கு உøரயாற்றினார். இறுதிப் போரில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். கடாபியின் வானொலி உரை நாட்டு மக்களை உற்சாகப்படுத்தவில்லை. எல்லாமே முடிந்து போன நிலையில் அவர் திரிபோலியில் இருப்பதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அந்த வானொலி உரை ஒலிபரப்பப்பட்டது.
லிபியாவுக்குள் புரட்சிப் படை நுழைந்து கடந்தவாரம் திரிபோலியருகே உள்ள சுபியா என்ற நகரைப் புரட்சிப் படையினர் கைப்பற்றிய போதே திரிபோலி விரைவில் வீழ்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடாபியின் விசுவாசமான படை இறுதி வரை போராடியது. போராட்டம்
முடிந்து விட்டது என்பதை உணர்ந்த சில படையினர் புரட்சிப் படையினரிடம் சரணடைந்தனர். திரிபோலி மக்கள் புரட்சிப் படையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். திரிபோலி நகரில் முக்கிய இடமாக கிரீன் சதுக்கம் புரட்சிப் படை வசமானது. இங்கு தான் கடாபி உரை நிகழ்த்துவார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இச் சதுக்கத்தில் அடிக்கடி நடைபெறும். கிரீன் சதுக்கத்தை தியாகிகள் சதுக்கம் என்று பெயரிட்டது புரட்சிப்படை

லிபியா புரட்சிப்படை வசமானது. கடாபியும் அவரது குடும்பமும் தலைமறைவாகிவிட்டனர். லிபிய நகரின் கீழே உள்ள நவீன சுரங்கங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சல்லடை போட்டு கடாபியை தேடி வருகிறது புரட்சிப்படை. கடாபி லிபியாவில் பதுங்கி இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடாபி கைது செய்யப்பட்டால் லிபியாவில் விசாரணை செய்யப்படுவாரா அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பதை புதிய அரசாங்கமே முடிவு செய்யும்.
புரட்சிப் படையின் கிளர்ச்சியை முறியடிப்பேன் எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று பெப்ரவரி மாதம் வானொலியில் உரையாற்றிய கடாபி தலைமறைவாகி விட்டார். தனது ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது விசுவாசமிக்க படையினர் நெடு நாட்களுக்குப் போராடமாட்டார்கள். உலக நாடுகள் புரட்சிப் படைக்கு உதவி செய்கின்றன என்பதை உணர்ந்த கடாபி எகிப்து, துனிஷியா, மொராக்கோ, அல்ஜிரியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு தூது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. லிபிய பிரதமர் அல்பக்தாதி அரச தொலைக்காட்சித் தலைவர் அப்துல்லா மன்சூர் ஆகியோருக்கு மட்டும் துனீஷியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
கடாபியின் மனைவி சாடியா மகள் ஆயிஷா மகன்மாரான ஹனீபா,மொஹமட் ஆகியோர் தமது நாட்டில் அடைக்கலமடைந்திருப்பதாக அல் ஜீரியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
42 ஆண்டு லிபியாவை ஆட்டிப் படைத்த தலைவர் நாட்டையும் மக்களையும் கைவிட்டு தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். 27 வயதில் இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த கடாபி 69 ஆவது வயதில் இரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11







.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11