Tuesday, May 26, 2015

கைகொடுக்குமா கர்நாடகம்?

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் பார்வை கர்நாடகத்தை நோக்கி திரும்பி உள்ளது. அங்கிருந்து நல்ல செய்திவராதா என அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.நீதிபதி  குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்தாலும்  தமிழக அரசியல் தலைவர்கள் அவரை விடுவதாக இல்லை.அப்பீல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கர்நாடகத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக்கட்சிகளும் ஜெயலலிதா நிரபராதி என்பதைக்  கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் அவரைக்  குற்றவாளி என்றே கருதுகிறார்கள்.

ஜெயலலிதா நிரபராதிஎன அவிவுக்கப்பட்டதும்  பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்ஜெயலலிதவின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்தமிழக பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர்க்ளும் கலந்து கொண்டு ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்தினர். இந்தச்சம்பவங்கள் அரசியல் அரங்கில் சந்தேகக்கண் கொண்டு நோக்கப்படுகிறது.

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யும் உரிமை கர்நாடக அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் மட்டுமே உள்ளது..  ஆகையினால் தான் தமிழகத்தலைவர்கள் கர்நாடகத்துக்குநெருக்கடி கொடுக்கிறார்கள்  இரண்டு  தரப்பையும் தவிர மற்றையவர்களும் அப்பீல் செய்யலாம் என சட்டம் இருந்தால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அப்பீல் செய்திருப்பார்கள்.ஆகையினால் கந்நாடகத்தின்   தயவை எதிர் பார்க்கிறார்கள்.

எடுகோள்கள் பலவற்றுடன் கருணாநிதி கர்நாடகத்துக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். விஜயகாந்தும் தன் பங்குக்கு அப்பீல் செய்யும் படி அதிகாரத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார். ராமதாஸ் ஒருபடிமுன்னேறி  தனது கட்சித்தலைவர் கோசி மணியை கர்நாடகத்துக்கு அனுப்பி முதலமைச்சர் சித்ராமையாவை சந்திக்கவைத்தார். தமிழக நெருக்கடிகளால் கடுப்பாகிய கர்நாடக முதல்வர் எங்களுக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம் சட்டப்படி நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்க்கில்  இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்ய   வேண்டும் என அரச தரப்பு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சார்ய பரிந்துரை செய்துள்ளார். கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிக்குமாரும் இதே கருத்தை சிபார்சு செய்துள்ளார். கர்நாடக எதிர்க்கட்சியான பாரதீய  ஜனதா மெளனமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வழக்கு விவகாரத்தில் கர்நாடக  அரசு முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இரண்டுமுறை அமைச்சரவைகூட்டம் நடைபெற்றும் முடிவெடுக்காமல் கலைந்தது.


ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய வேண்டும் என சில அமைச்சர்கள் விரும்புகிறார்கள். ஆனால் சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. டில்லியில் இருக்கும் மேலிடம் அதிக ஆர்வம் காட்டாமல் தள்ளி நிற்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக்கழக எம்பிக்களின் பலம் மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு உதவி புரிகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. தீர்ப்பு பிழை என்ற ஐயப்பாடு சகலதரப்பிலும் இருந்து எழுந்துள்ளது.இச்சந்தேகத்தை தீர்க்கவேண்டிய பாரிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளதுஅப்பீல் செய்யவில்லை என்றால் அது ஊழலுக்கு துணை போகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. ஆகையினால் இந்த வழக்கு மிக பிரபலமானது.வருமானத்துக்கு அதிகமாக பத்து சதவீத சொத்து இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள பொது மக்கள் தயாராக இல்லை. அப்பாவி மக்களின் சந்தேகத்தை கர்நாடக அரசு தெளிவு படுத்த வேண்டும்.

கர்நாடகம் அப்பீல் செய்யும் வரை பார்த்திருக்க முடியாது திராவிட முன்னேற்றக்கழகம் அப்பீல் செய்யும் என  கருணாநிதி அறிவித்துள்ளார்ஜெயலலிதாவை விடமாட்டேன் அப்பீல் செய்யப்போகிறேன் என சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரி சுப்பிரமணியன் சுவாமி  கூறி உள்ளார். பாரதீய ஜனதாக்கட்சியின் முக்கிய பிரமுகராக வலம் வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் சார்ந்த கட்சி ஜெயலலிதாவை பகிரங்கமாக ஆதரிக்கிறது. கட்சியின் கொள்கைக்கு எதிர் மாறாக அவர் செயற்படுகிறார்.

ஜெலலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யப்படுவது உறுதியாகி விட்டது.யார் முதலில் அப்பீல் செய்வார்கள் எப்படி அப்பீல் செய்வார்கள் என்ற விபரம் தெரியவில்லை.ஜெயலலிதா பதவி ஏற்கமுன்பு அப்பீல் செய்திருந்தால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.அப்பீல் அவரின் பதவிக்கு அச்சுறுத்தலாக இருக்காது . என்பதால் அவர் தெம்பாக உள்ளார்  என்றாலும் இராஜினாமாக் கடிதத்தை தயாராக வைத்திருக்கும் படி சுப்பிரமணியன் சுவாம் கிலி எழுப்பி உள்ளார்.அப்பீல் செய்யப்படுவது உறுதிஎன்பதை அறிந்த ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Monday, May 25, 2015

ஐபிஎல் விருதுகள்


ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41  ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள் மற்றும் பரிசுகள் பற்றிய ஒரு பார்வை:


சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.

 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562  ஓட்டங்கள் விளாசியிருந்தார்.

   அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.


 அதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.

 சிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439  ஓட்டங்கள் வாரிக் குவித்தார்.
 மேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.

இறுதி போட்டியில் அதிக சிக்சர் அடித்தவருக்காக தனி விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் கெய்ரன் பொல்லார்ட் தட்டிச் சென்றார். அவர் 3 சிக்சர்கள் விளாசியிருந்தார்.




   வம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும்  கப்டன் டோனி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.

   ஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.

 கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.
 

Sunday, May 24, 2015

ஐபிஎல் அசத்தல்கள்

ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள், கலக்கல் ஆட்டங்கள் பற்றிய ஒரு பார்வை:



நடப்பு சீசனில் மொத்தம் 4 சதங்கள் விளாசப்பட்டன. டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 1 சதங்கள் விளாசியிருந்தனர்
  டிவில்லியர்ஸ் தனிப்பட்ட முறையில் ஒரே போட்டியில் அதிக  ஓட்டங்கள் அடித்த   வீரராவார்.. மும்பை அணிக்கு எதிராக 133  ஓட்டங்கள் அதிரடியாக விளாசி,  ஆட்டமிழக்காது நின்று பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ்.


 அதிவிரைவாக செஞ்சுரி அடித்தவர் என்ற பெருமை, கிறிஸ் கெயிலுக்கு உரியது. பெங்களூர் வீரரான அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 46 பந்துகளில் சதம் விளாசினார். அந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதில் வென்றது.


19 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதம் அடித்த கொல்கத்தா வீரர் ஆன்ட்ரே ரசல் மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஹர்பஜன் ஆகிய இருவருமே அதிவிரைவாக அரை சதம் அடித்த வீரர்களாகும்.


நடப்பு சீசனில் அதிகப்படியான பவுண்டரிகள் விளாசியது ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னராகும். அவர், 65 பவுண்டரிகள் விளாசியிருந்தார்.


நட்பு சீசனில் மொத்தம் 692 சிக்சர்கள் விளாசப்பட்டன. 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. மும்பைக்கு எதிராக 1 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 235  ஓட்டங்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 


  பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 10  ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது நடப்பு சீசனின் சிறந்த பந்துவீச்சு பஞ்சாப் அணியின் மிட்சேல் ஜான்சன், 151.11 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதுதான் நடப்பு சீசனில்    அதிவேக பந்து வீச்சாகும்.
 சென்னைக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் 18 டாட் பந்துகளை வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 9  ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். ஆக, 18 பந்துகளில்  ஓட்டங்கள் கிடைக்கவில்லை. நடப்பு சீசனில் ஒட்டுமொத்தமாக நெஹ்ரா 170 டாட் பந்துகளை வீசி முதலிடம் பிடித்துள்ளார். 22 விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தியுள்ளார்.



நடப்பு சீசனில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியது பஞ்சாப் அணியின் இளம் வீரர் சந்தீப் ஷர்மா. லீக் ஆட்டத்தோடு, பஞ்சாப் நடையை கட்டினாலும்கூட, அவர் 4 மெய்டன்களை வீசியிருந்ததை வேறு பவுலர்களால் முறியடிக்கமுடியவில்லை.



2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
 2013- மும்பை இந்தியன்ஸ்,
 2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
2011- சென்னை சூப்பர் கிங்ஸ்,
2010- சென்னை சூப்பர் கிங்ஸ்,
2009- டெக்கான் சார்ஜர்ஸ்,

2008- ராஜஸ்தான் ராயல்ஸ்

 

Saturday, May 23, 2015

அந்த 217 நாட்கள்

  
  தமிழக முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறை பதவி ஏற்றுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் குறவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் அரசியல் அஸ்தமித்து விட்டது என்று நினைத்தவர்கள் ஏமாந்து விட்டனர். ஜெயலலிதா அப்பீல் செய்வார் தண்டனை நிச்சயம்  என கணக்குப் போட்டவர்களுக்கு  நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு தவறு என தமிழக அரசியல் தலைவர்கள் வரிந்து கட்டி வரிசையில் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். கருத்துக்களை  எல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கினார் ரோசய்யா

ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து விடுதலையாகும்  வரை தமிழக அரசு இயந்திரம் முடங்கியது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவரின்  பார்வை பெங்களூரில் குத்தி நின்றது. ஜெயலலிதாவின் விடுதலைக்காக என்ன எல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டமிடாது  மனதில் பட்டதை எல்லாம் செய்தார்கள்.ஜெயலலிதா விடுதலையானதும் தங்கள் பிரார்த்தனை பலித்து விட்டதாகக் கொண்டாடினார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் அஸ்தமித்துவிட்டதாகக் கருதி முதல்வர் கனவில் இருந்தவர்கள் கனவில் இருந்து விழித்தெழுந்தனர். நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு முறை பதவியை இழந்த ஜெயலலிதா இரண்டு முறையும்   நிரபாராதி என விடுதலை செய்யப்பட்டு மீண்டும் முதல்வரானார். இந்திய அரசியல் வரலாற்றி இப்படி ஒரு சம்பவம்நடைபெற்றதில்லை இனியும் நடைபெறப்போவதில்லை
தேர்தலில் ஜெயித்து வெற்றியடைந்தாலெ ஜெயலலிதாவின் கோபத்தை தாங்க முடியாது.நீதிமன்றமே அவரை விடுதலை செய்ததனால் அடுத்த அவரின் நடவடிக்கை எப்படி இருக்கும் எனக் கணிக்கமுடியதுள்ளது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்பினால் சென்னையே ஸ்தம்பித்தது. பத்தாயிரத்துக்கும் அதிகமன பதாகைகள் நகரெங்கும் கட்டித்தொங்கவிடப்பட்டன.இதற்காக ஒருகோடிக்கும் அதிகமாகசெலவு செய்யப்பட்டது..மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ரஜினி உட்பட பலர் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்மிக எளிமையாக பதவி ஏற்கும் வைபவம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் அட்டகாசமாக நடத்திமுடித்து விட்டனர்.

ஆறுமாதம் ஜெயலலிதா முதல்வராக பணிஆற்றலாம் அதற்கிடையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.217 நாட்கள்முடிந்து விட்டது. இன்றிலிருந்து ஆறுமாத காலக்கெடு ஆரம்பித்து விட்டது.

Thursday, May 21, 2015

கண்டம் நீங்கிய ஜெயலலிதா




வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா  தமிழக முதல்வர் பதவியை மீண்டும் பொறுப்பேற்க தயாராகி விட்டார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா மேன் முறையீடு  செய்து நிரபராதியானார்.

நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பினால் ஏழு மாதங்களாக  வீட்டில் முடங்கி இருந்த ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.தமிழக அமைச்சர் பதவியை கர்நாடக நீதிமன்றத்தில் இழந்த ஜெயலலிதா அதே கர்நாடக நிதிமன்றத்தால்விடுதலை செய்யப்பட்ட பின்பே  மக்கள் முன் தோறுவேன் என சபதம் எடுத்தார். சபதத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா வெள்ளிக்கிழமை மக்கள் முன் தோன்ற உள்ளார்.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் தெய்வத்துக்கும் மேலாக ஜெயலலிதாவைக்கொண்டாடிய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆடிப்போய்விட்டனர். யாகம் சிறப்பூஜை,,காவடி  புனஸ்காரம் என தமிழகத்தின் சகல கோவில்களையும் முற்றுகையிட்டனர்.  ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக ஏற்கி நின்ற தலைவர்களும் தொண்டர்களும் கடவுளின் கடைக்கண் பார்வைக்காக தவம் இருந்தனர்.நீதிபதி குமாரசாமி வடிவத்தில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தினர் கடவுளைக்கண்டனர்.

ஜெயலலிதா விடுதலையான செய்தியின் மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாடுவதற்கிடையில் நீதிபதி குமரசாமியின் தப்புக்கணக்கு வேகமாகப் பரவியது.தீர்ப்பு மாற்றமடையுமா என்ற விவாதக்களம் சூடாகியது. இதை உறு திப்படுத்துவது போல  ஜெயலலிதா யாரையும் சந்திக்காது வாய்திறக்காது அமைதி காத்தார்தப்புக்கணக்கை கையில் எடுத்த எதிர்க்கட்சித்தலைவர்கள் சதுராட்டம் ஆடினர். இவற்றை எல்லாம் அமைதியாக அவதானித்தபடி இருந்த ஜெயலலிதா தான் முதல்வராவதற்குரியநடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக எம் எல் ஏக்கள் கூட்டம் நாளைக்கு நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில்   ஜெயலலிதா முதலமைச்சராக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 23 ஆம் திகதி அவர் முதலமைச்சராகப்பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆறுமாதங்களுக்கு முதலமைச்சராக பதவி வகிக்கலாம். அதற்கிடையில் ஒருதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.


தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது  ஜெயலலிதாவுக்கு  கஸ்ரமானதல்ல.தமிழக அரசு இயந்திரம் அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கும். ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகாமல் சிதறிக்கிடக்கின்றன.