Sunday, May 31, 2020

கரோனாவையும் மனைவியையும் ஒப்பிட்ட இந்தோனேசிய அமைச்சருக்கு கண்டனம்


 

 கரோனா வைரஸை மனைவியருடன் ஒப்பிட்டுப் பேசிய இந்தோனேசிய அமைச்சர் முகமது மஹ்பூத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அன்றொரு நாள் எனக்கு ஒரு மீம் வந்தது அதில், ‘கரோனா நம் மனைவி போன்றது. முதலில் நாம் கட்டுப்படுத்தப் பார்ப்போம், பிறகு அது முடியாது என்று உணர்ந்து அதனுடன் வாழக் கற்றுக் கொள்வோம்என்று கூறப்பட்டிருந்ததை ஜோக் என்று நினைத்து அவர் பட்டவர்த்தனமாகப்பதிவிட, பெண்கள் அமைப்பும், சமூகவலைத்தள போராளிகளும் அவரை கண்டபடி விமர்சித்தனர்.
பெண்கள் ஒற்றுமை அமைப்பு, ‘கோவிட்-19 தொற்றை ஒழிப்பதில் அரசின் பொறுப்பற்ற தன்மையையும் பாலின பேத ஆணாதிக்க, பெண் விரோத கருத்துகளை எப்படி ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவரது கூற்று தெளிவுபடுத்துகிறதுஎன்று சாடியுள்ளது.


ரசிகர்கள் இல்லாமால் விளையாடுவது வித்தியாசமானது மெஸ்சி: ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - குவித்தோவா


கொரோனா அச்சுறுத்தலால் இடை நிறுத்திவைக்கப்பட்ட விளையாட்டுகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன.  உதைபந்தாட்ட,கிறிக்கெற்,டென்னிஸ் வீர வீராங்கனைகள் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

லாலிகா போட்டிகள் மீண்டும் தொடங்க இருப்பதால் பார்சிலோனா, ஆர்ஜென்ரீனா கப்டன் லியோனல் மெஸ்சி  ஸ்பெயினில் கொரோனா வைரஸ் ஊரங்கிற்கு பல வாரங்களுக்குப் பிறகு பார்சிலோனா அணியுடன் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்,  

  அடிடாஸ் இணையதளத்திற்கு அளித்தபேட்டியில் மெஸ்சி கூறியதாவது:-

பார்வையாளர்கள் இன்றி விளையாடுவது அன்றாட பயிற்சிக்குச் செல்வது போல, உங்கள் அணியினரைப் பார்ப்பது, உங்கள் முதல் சில ஆட்டங்களில் விளையாடுவது போன்றது. முதலில் இது விசித்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நான் விளையாட எதிர்பார்த்திருக்கிறேன்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடுவது "தொடர்ச்சியான சவால்களைக் குறிக்கிறது. ரசிகர்கள் இல்லாமால் விளையாடுவது வித்தியாசமானது.அதற்கு மன ரீதியாக தயாராக வேண்டும் என கூறினா

  செக் குடியரசில் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும்ஹார்டுகோர்ட் டிராடென்னிஸ் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் முன்னணி வீராங்கனை பெத்ரா குவித்தோவா, ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


குவித்தோவா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

 
வீரர்களான எங்களுக்கு ரசிகர்கள் தான் இன்ஜின்கள். அவர்கள் தருகின்ற உற்சாகமும், ஆரவார வரவேற்பும் தான் எங்களை விளையாட தூண்டுகிறது. களத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எனக்கு அழகாகத் தெரியவில்லை. அப்படி விளையாடும் போட்டிகளை கிராண்ட்ஸ்லாம் என்றும் சொல்ல முடியாது. ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விட அவற்றை ரத்து செய்து விடுவது நல்லது என பதிவிட்டுள்ளார்.

உள்ளாடையை முகக்கவசமாக்கிய பெண்மணி


உக்ரைனில் இரண்டு குழந்தைகளின் தாய் தபால் நிலையம் ஒன்றிற்கு முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக் கொண்ட காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகின் பலவேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, பொது இடத்திற்கு எங்கு சென்றாலும், தங்களின் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.அதுமட்டுமின்றி, அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அல்லது சுவாசக் கருவி அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிவில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வருகிறார். அப்போது அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் பேசுவது போன்று உள்ளது. அதன் பின் உடனடியாக தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்துகிறார். இது அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாக, அதன் ஊழியர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இருப்பினும் நிறுவனத்தின் இந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசி ஒருவர், அவள் ஒரு சரியான வழியை கண்டுபிடித்துள்ளார். முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடைகளை பயன்படுத்த யாரும் இதுவரை தடை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.