Showing posts with label தென் ஆபிரிக்கா. Show all posts
Showing posts with label தென் ஆபிரிக்கா. Show all posts

Saturday, June 13, 2026

96 ஆண்டுகால சாதனையை முறியடித்த 17 வயது சிறுவன்


 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்   கிண்ண உதைபந்தாட்ட   தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணியின் 17 வயது இளம் வீரர் கில்பர்டோ மோரா களம் கண்டதன் மூலம் 96 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

 உலகக் கிண்ண  வரலாற்றில் மெக்சிகோ அணிக்காக விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கில்பர்டோ மோரா மாற்று வீரராகக் களமிறங்கினார்.

 தற்போது 17 வயது 240 நாட்களே ஆகும் மோரா, இதற்கு முன்பாக 1930ஆம் ஆண்டு நடந்த உலகக்  கிண்ணத்தில்  மெக்சிகோவின் மானுவல் ரோசாஸ் (18 வயது 134 நாட்கள்) படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 96 ஆண்டுகளாக யாருக்கும் எட்டாத இந்த அரிய சாதனையை இந்த இளம் வீரர் தகர்த்தெறிந்துள்ளார்.

 உலகக் கிண்ணத் தொடரில்  மோரா கோல் அடித்தால், பிறேஸில் ஜாம்பவான் பீலேவுக்கு (17 வயது 239 நாட்கள்) அடுத்தபடியாக உலகக்  கிண்ண  வரலாற்றில் கோல் அடித்த 2வது மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

 

 

 

உலகக்கிண்ணப் பெரும் திருவிழா ஆரம்பம்


 உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டி மெக்ஸிகோவில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்து விளையாடிய மெக்ஸிகோ  2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

  ஆட்டத்தின் இரு பாதிகளிலும் ஜூலியன் குவினோன்ஸ்,ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர்  ஒன்பது வீரர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கோல் கணக்கில் வீழ்த்தியது.   அடித்தனர்.

குரூப் பிரிவில் நடந்த இந்த மோதலில், ஒரு தவறான பாஸைப் பயன்படுத்தி குவினோன்ஸ் தனது அணிக்கு ஆரம்பத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். பின்னர், பிரையன் குட்டிரெஸை வீழ்த்தியதற்காக ஸ்பெபெலோ சிதோல் சிவப்பு அட்டை பெற்றார்.

மெக்சிகோவின் இரண்டாவது கோலை ஜிமெனெஸ் தலையால் முட்டி அடித்தார். மேலும், ராபர்டோ அல்வராடோ மீது கடுமையாக ஃபவுல் செய்ததற்காக தெம்பா ஸ்வானேவும் வெளியேற்றப்பட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

குலிசோ முடாவ் மீது மோசமாக ஃபவுல் செய்ததற்காக தடுப்பாட்ட வீரர் சீசர் மான்டெஸ் வெளியேற்றப்பட்டதால், மெக்சிகோ ஒரு வீரர் குறைவாகவே ஆட்டத்தை முடித்தது.

மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் 80,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களின் வலுவான ஆதரவால் உற்சாகமடைந்த "எல் ட்ரி" (மெக்சிகோ அணி), ஆட்டம் தொடங்கியதிலிருந்தே கட்டுப்பாட்டைத் தங்கள் வசப்படுத்தியது.

குரூப் மோதலின் ஒன்பதாவது நிமிடத்தில், கொலம்பியாவில் பிறந்த முன்கள வீரரான குவினோன்ஸ், எரிக் லிராவின் அழுத்தம் காரணமாக பந்து கைமாறியதைத் தொடர்ந்து, கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸின் கால்களுக்கு இடையில் தாழ்வாக பந்தை அடித்து கோல் அடித்தார்.

மெக்சிகோ பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்ததுடன், குறிப்பாக ஆட்டத்தின் பிற்பகுதியில், தென்னாப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தில் இருந்த இடைவெளிகளைத் தொடர்ந்துமுறியடித்தது.

 


Sunday, November 16, 2025

தென்னாப்ரிக்காவை சமாளிப்பாரா கில்?


  இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த   நவம்பர் 14ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமானது.

தென்னாப்ரிக்காவை சமாளிக்குமா இந்தியா? டெஸ்டில் யார் ஆதிக்கம், கில் படைக்கான சவால் என்ன? போன்ற கேள்விகள் ரசிகர்களிடம்  உள்ளது.   தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  இந்தியா விளையாடுகிறது.  தொடர்ந்து   3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில்  இரண்டு நாடுகளும் விளையாட உள்ளன.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 18 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கடைசியாக தென்னாப்பிரிக்க இந்திய மண்ணில் கடந்த 2019-20 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில்,  இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 2015 முதல் சுதந்திரக் கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. அகிம்சை வழிமுறைகள் மூலம் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சுதந்திரத்தை அடைவதில் மகாத்மா காந்தி,  நெல்சன் மண்டேலா ஆகியோரின்  பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தொடருக்கு சுதந்திர கோப்பை தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார். 25 போட்டிகள் ,45 இன்னிங்ஸ்களில், அவர் 42.46 சராசரியாக 47.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,741 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெண்டுல்கர் 7 சதங்களையும்,  5 அரை சதங்களையும் அடித்துள்ளார்.  மூன்று முறை மட்டுமே டக்-அவுட் ஆனார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடம் வகிக்கிறார்.   14 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர்.

உள்ளூரில் அணியை வழிநடத்தாவிட்டாலும், தனது முதல் தொடரையே இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் கப்டன் கில் தொடங்கினார். கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தார். போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டே, அந்த தொடரை சமன்படுத்தியதே பெரும் வெற்றியாக கருதப்பட்டது. இதையடுத்து உள்ளூரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், எந்தவித சவாலும் இன்றி மிகவும் எளிதாக முடிந்தது. இந்நிலையில் தான், வலுவான தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் அணி களமிறங்க உள்ளது.

Thursday, January 2, 2025

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட மூன்று அணிகள் போட்டி


   2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில்  விளையாட தென் ஆபிரிக்கா தகுதி பெற்றுவிட்டது. இருதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவ்புடன் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா,இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகள் களத்தில் உள்ளன.

2021, 2023  ஆகிய இரண்டு இறுதிப் போட்டி ச‌யன்ஷிப்களில் விளையாடி  தோல்வியடைந்த   மூன்றாவது முறையும்  இறுதிப்[ போட்டியில் விளையாடும் என எதிர் பார்க்கப்பட்டது.

 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால்  இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா முன்ன்றசவது இடத்துக்குத் தள்ள‌ப்பட்டது.

 அவுஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.அவுஸ்திரேலியாவுக்கு  இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறன. . இதில் இந்தியாவிற்கு எதிராக சிட்னி டெஸ்ட் போட்டியும் பின் இலங்கையில்  இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உள்ளன.  இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில்  அவுஸ்திரேலியா ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும்.  இதனால் அவுஸ்திரேலியா இரண்டாவது இடம் பிடிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இந்தியா தற்போது 52.78 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு சாதகமான முடிவுகள் அமைய வேண்டும்.

 புத்தாண்டில் தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் இந்தியா பைனலுக்கு செல்லும் வாய்ப்பு  இருக்காது. அது மட்டுமில்லாமல் அவுஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும். இல்லையெனில் இரண்டு போட்டியும் சமனில் முடிய வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்திய அணி பைனலுக்கு செல்லும்.

 இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி இருந்தாலும்  பைனலுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது. இலங்கை அணி 45.45 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. இலங்கை அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியா அவுஸ்திரேலியா மோதும் சிட்னி டெஸ்ட் போட்டி சமனில் முடிய வேண்டும். அது மட்டும் இல்லாமல் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை   இலங்கை  இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியும். 

Saturday, December 7, 2024

உலக டெஸ்ட் சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாட முட்டிமோதும் ஐந்து நாடுகள்

உலக டெஸ்ட் சம்பியனைத்தீர்மானிக்கும்  போட்டிகள்  இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு  புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்து நாடுகளானஇந்தியா,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,இலங்கை,நியூஸிலாந்து  ஆகிய ஐந்து நாடுகள் முட்டி மோதுகின்றன.

  2023 - 25 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது

  அதே நேரத்தில் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

 தென்னாபிரிக்கா -இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே நாட்களில் நடைபெறுகின்றன.

  இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா,நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு மிகவும் குறுகியதாக உள்ளது. எனினும், அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்

 இலங்கை , தென்னாப்பிரிக்காஆகிய  அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு வெற்றி அவசியமாகிறது. ஒருவேளை இலங்கை அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலக நேரிடும்.

மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்      ஆஸ்திரேலியாவும் அதே நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியா இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 90 சதவீதம் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யலாம். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றால் 100 சதவீதம் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

   இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக மாறி உள்ளது. மேலும், இந்த மூன்று போட்டிகளில் தற்போதைய உலகின் நான்கு முன்னணி டெஸ்ட் விரர்களான  விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ,ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.

 எதிர்கால டெஸ்ட் நட்சத்திரங்களாக சுட்டிக் காட்டப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), கமிந்து மென்டிஸ் (இலங்கை), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

 

ரமணி

8/12/24