Saturday, April 28, 2018

முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் வெற்றி


 

                      ஸ்ரேயாஸ் ஐயர்
 டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில்டெல்லி டேர்டெலில்ஸ்  55 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற   கொல்கத்தா அணி   பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 219  ஓட்டங்கள் எடுத்தது.  இந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணி அடித்த அதிக பட்ச ஓட்டங்கள் இதுவாகும். 220  ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கி நோகித் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20  ஓவர்களில் விக்கெற்களை இழந்து  164 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி விளையாடிய போட்டிகளில் மும்பைக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றது. மற்றைய அனைத்துப்  போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் கம்பீர் தலமைப் பொறுப்பில் இருந்து விலகினார்இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிஓட்டங்களிக்  குவித்தனர். இதனால் டெல்லி அணி  5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள்  எடுத்தது
 

                            ரசல்

 . இளம் வீரர் பிரித்வி ஷா, 38 வது பந்தில் .பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். இவர், 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டாக,  27 ஓட்டங்களில் வெளியேறினார்..

முதன் முதலாக கப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ், அரைசதம் கடந்தார். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாச, மொத்தம் 29 ஓட்டங்கள் கிடைத்தன.  40 பந்துகளைச் சந்தித்த. ஸ்ரேயாஸ்  10 பவுண்டரி 3 சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காது 93 ஒட்டங்கள் எடுத்தார்.

கடின இலக்கைத் துரத்திய கொல்கட்டா அணியின் முன்னிலை வீரர்கள் நிலைக்கவில்லை.  கிறிஸ் லின் 5  உத்தப்பா , 9 பந்துகளில்  நரைன் 26,ராணா 8  .. தினேஷ் கார்த்திக் நீடிக்கவில்லை. ஷுப்மன் 37, ஷிவம் 0 என, வரிசையாக வெளியேறினர் 30 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்த ரசல் ஆட்டமிழக்ககொல்கட்டாவின்
தோல்வி உறுதியானது

                  டெல்லி வீரர்களின் மகிழ்ச்சி
கொல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் மட்டும் எடுத்து, வீழ்ந்தது. டில்லி அணி, 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் 7 ஓட்டங்களுடனும்.மிட்சல் ஜான்சன் 12 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்ரேயாஸ், தனது 23 வயது, 142 வது நாளில், டெல்லி அணி கப்டனாக   களமிறங்கினார். இதையடுத்து, கோஹ்லி (22 வயது, 187 நாள்), ஸ்மித் (22 வயது, 344 நாள்), ரெய்னா (23 வயது, 112 நாள்) அடுத்து, .பி.எல்., அரங்கில் குறைந்த வயதில் கப்டனாக களமிறங்கிய, நான்காவது வீரர் ஆனார்.


கடந்த 2010, மார்ச் 25ல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கம்பிர் பங்கேற்கவில்லை. தற்போது 8 ஆண்டுகள் கழித்து .பி.எல்., போட்டியில்  காம்பிர்.விளைய்ட்டவில்லை.

                    கொல்கட்டாவின் வியூகம்

டில்லி அணிக்காக ரூ. 11 கோடிக்கு வாங்கப்பட்டவர் 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிஸ். இதுவரை 4 போட்டிகளில், 46 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய இவர், முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கிறிஸ் மோரிஸ் தொடரில் இருந்து விலகிக் கொள்ள, மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஜூனியர் டலா, 28, டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார்.
    


Friday, April 27, 2018

மின்னல் வேக டோனியின் புதிய சாதனை.


  
பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் டோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது
இந்த போட்டியில் தொடக்கத்தில் டோனி வேகமாக ஓடிய பீல்டிங் ஒன்று வைரல் ஆனது. டி காக் அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடினார். காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளவுஸை தூக்கி போட்டுவிட்டு அவர் வேகமாக ஓடி பவுண்டரியை தடுத்தார்.

 அவரின் இந்த பீல்டிங் மிகவும் வைரல் ஆனது. பலரும் இவரை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.  ''டோனிக்கு வயதாகிவிட்டது என்று கூறி இப்போதும் பலர் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்'' 
எவ்வளவு வேகம் இந்த பந்தை தடுப்பதற்காக இவர் மொத்தம் 28 மீற்றர் ஓடி இருக்கிறார். இதை இவர் மொத்தம் 6.12 நொடிகளில் கடந்து இருக்கிறார். இந்த நேரம் பந்தை தடுப்பதையும் சேர்த்து ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் 22 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடி இருக்கிறார், என்று கிறிக்கெற் ஜாம்பவான்கள் கணித்து இருக்கிறார்கள். காலில் பேட் கட்டிக்கொண்டு இப்படி ஓடுவது மிகவும் கடினம் ஆகும்.

 ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோனி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருந்தது. பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோனியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீற்றர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். உசேன் போல்ட் முதல் 20 மீற்றர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோனியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.
  

ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் வீழ்ந்தது பஞ்சாப்


   
ஐபிஎல் அரங்கில் துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரி சிக்ஸர்களாக அடித்து  தமது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத்தின் பந்து வீச்சாளர்கள் துல்லியமான பந்து வீச்சில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச்செய்து தமது அணியை வெற்ரி பெற வைத்துள்ளனர்.
 111 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடிய மும்பாயை 87 ஓட்டங்களில் முடக்கிய ஹைதராபாத்தின் பந்து வீச்சாளர்கள் பஞ்சாப்பை 119 ஓட்டங்களில் பஞ்சராக்கிய பஞ்சாப் ஹைதராபாத்தையும் குறைந்தஓட்டங்களில் வீழ்த்தியது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்வின களத்தடுப்பைத் தேர்வு செய்தார். அஷ்வின், பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், மில்லர் நீக்கப்பட்டு, மனோஜ் திவாரி, கெய்ல் சேர்க்கப்பட்டனர்.முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 132ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் ஓவர்களில் விக்கெற்களை இழந்து  ஓட்டங்கள் எடுத்து ஓட்டங்களால் வெற்ரி பெற்றது.

ஹைதராபாத்அணிக்கு கப்டன் வில்லியம்சன், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராஜ்புட் 'வேகத்தில்' மிரட்டினார். இவரிடம் சிக்கிய வில்லியம்சன், .பி.எல்., அரங்கில் முதன் முறையாக 'டக்' அவுட்டானார். தவான்  11 ஓட்டங்களுடனும் சகாவும் 6 ஓட்டங்களுட்ஃபனும் இவரிடம் சிக்கினர். சாகிப் அல் ஹசன்  28 ஓட்டங்களுடன் வெளியேறினார்.. 4, 9, 46 என, மூன்று முறை தப்பிப்பிழைத்த மணிஷ் பாண்டே, 51 பந்துகளில்  53 ஓட்டங்கள் எடுத்தார்.  . ஹைதராபாத்  அணி, 20 ஓவரிவர்களில் 6 விக்கெட்டுக்கு 132ஓட்டங்கள்.  எடுத்தது. ராஜ்புட் 5 விக்கெற்களை வீழ்த்தினார். இந்த ஐபிஎல் சீசனில் முதலில் ஐந்து விக்கெற்களை கைப்பற்றினார்.

133
என்ற எளிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல் 32 ஓட்டங்களும் கெய்ல்  23 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தஜோடி  ஜோடி நல்ல துவக்கம் தந்தது.  கெயில் இதற்கு முன்னால் நான்கு முறை சந்தீப் சர்மாவின் பந்தில் அவுட்டாகியிருப்பதால் அவரை வைத்து ஓபனிங் ஸ்பெல் தொடங்கினார் கேன் வில்லியம்சன்   குறிந்த வெற்றி இலக்கு என்பதால் இருவரும் நிதானமாக விளையாடினர். 9-வது ஓவரில் இருந்து 14-வது ஓவர் முடியும் வரை வெறும் 25 ஓட்டங்கள்தான் எடுத்தது பஞ்சாப்.  அகர்வால் 12, கருண் நாயர் 13, பின்ச் 8,   திவாரி 1, டை 4 ஸ்ரண் 2 அஷ்வின்  4 ஓட்டங்கள் என வரிசையாக வெளியேறினர்.   அதிர்ச்சி தந்தார். விக்கெற் இழக்காமல் 55 ஓட்டங்கள் எடுத்த பஞ்சாப் , 101 ஓட்டங்களில், சரிந்தது.  , பஞ்சாப் அணி 19.2 ஓவரில், 119 ரன்னுக்கு சுருண்டு, 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பஞ்சாப் வீரர் ராஜ்புட், 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெற்கலை வீழ்த்தினார்.ர். .பி.எல்., அரங்கில் பஞ்சாப் வீரரின் சிறந்த பந்துவீச்சு  இதுவாக அமைந்தது. இதற்கு முன், 2012ல் புனே ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக, மஸ்கரானஸ் 25 ரஓட்டங்களுக்கு  5 விக்கெற்களை வீழ்த்தி இருந்தார்
சாகிப் அல் ஹசன்,


  
அகர்வாலை அஆட்டமிழக்கச்செய்த ஐதராபாத்தின் சாகிப் அல் ஹசன், .பி.எல்., அரங்கில் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

  
பஞ்சாப் அணியின்கலத்தடுப்பு  மோசமாக இருந்தது. மணிஷ் பாண்டே, 4, 9, 46 ஓட்டங்களில் கொடுத்த மூன்று 'கேட்ச்களை' கோட்டை விட்டனர். பதான் 7ஓட்டங்களில்  கொடுத்த வாய்ப்பை, திவாரி நழுவ விட்டார். 
பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அங்கீத் ராஜ்பூட் ஐந்து விக்கெற்களை எடுத்து இருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.  அங்கீத் ராஜ்பூட் மொத்தம் 4 ஓவர் வீசி 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். மொத்தமாக இவர் ஐந்து விக்கெட் எடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து விக்கெட் எடுத்த முதல் நபர் இவர்தான் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஆனாலும் பஞ்சாப் அணி கடைசியில் ஹைதராபாத் பந்துவீச்சில் சுருண்டது.

இதில் அங்கீத் முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். ஷிகர்தவான், சாகா, கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே என்று வரிசையாக முதல் நான்கு வீரர்களின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் கடைசியில் முகமது நபி விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் அணிக்காக இவர் 3 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டார். அப்போதே இவர் மீது பலர் கவனம் செலுத்தினார்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். இவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. வலது கை மிதவேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
இந்த போட்டியில் அங்கீத், ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்துவிட்டு, மோசமாக கத்தினார். பின் ஷிகர் தாவணி நோக்கி தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்