Saturday, August 18, 2012

திரைக்குவராதசங்கதி 42
தூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்படம் ஏ.வி.எம்மின் வெற்றிப் பட வரிசையில்இடம்பிடித்தது.

போதைக்கு அடிமையாகி விடக் கூடாதுஎன்ற நல்ல நோக்கத்தில்எடுக்கப்பட்டபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறொருபடத்துக்காக படமாக்கப்பட்டது என்பதுஅதிகமான ரசிகர்களுக்குத் தெரியாது.திரைப்படத் தயாரிப்பாளரான வித்துவான்வே. லட்சுமணனும், ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் மகன் சரவணனும் ஒருநாள் கதைத்துக் கொண்டிருக்கும் போது,""நானும் மணியனும் சேர்ந்து பத்து இலட்சம் ரூபா செலவில் ஹிந்திப் டமொன்றுக்காகஅருமையான கிளைமாக்ஸ் காட்சியைஎடுத்தோம். படம் சரியாகப் போகவில்லை.ஆகையால் அது மக்களைச் சென்றடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதை ஒருமுறை பாருங்கள்'' என வித்துவான் வே.லட்சுமணன், எம். சரவணனிடம் கூறினார்.
வித்துவான் வே. லட்சுமணன் கூறிய கிளைமாக்ஸ் காட்சியை எம். சரவணன் பார்த்தபோது அது அவருக்குப் பிடித்து விட்டது.அந்த கிளைமாக்ஸைத் தரும்படி சரவணன்கேட்டார். அதைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட வித்துவான் வே. லட்சுமணன் 50ஆயிரம் ரூபா தரும்படி கேட்டார். பேரம்பேசியதில் 30 ஆயிரம் ரூபாவுக்கு அந்தகிளைமாக்ஸ் காட்சியை வித்துவான் வே.இலட்சுமணனிடம் இருந்து எம். சரவணன்வாங்கினார்.
மிகச் சிறந்ததொரு கிளைமாக்ஸ் காட்சிகையில் உள்ளது. அதனை தூங்காதே தம்பிதூங்காதேயில் எப்படி இணைப்பது என்றசிக்கல் எழுந்தது. அதனைச் செய்து கொடுக்கக் கூடிய ஒருவர் திரை உலகில் இருக்கிறார். அவர்தான் விசு. விசுவைக் கூப்பிட்டுகிளைமாக்ஸ் காட்சியைப் போட்டுக் காட்டினார்கள்.தூங்காதே தம்பி தூங்காதே கதையில் செந்தாமரையின் பாத்திரத்தை புகுத்தி கிளைமாக்ஸை மிகச் சிறப்பாகச் செய்து கொடுத்தார் விசு. அப்படத்தில் இடம்பெற்ற ஹெலிஹொப்டர் காட்சி விசுவின் ஐடியாவில்உதித்தது.
"நானாக நானில்லை தாயே' எனும் பாடலுக்காகவே ஜமுனாவை கமலின் தாயாகநடிக்க அழைத்தார்கள். எந்த விதமான கிரபிக்ஸ் வேலையும் இல்லாமல் இன்னொருபடத்துக்காக உருவாக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி தூங்காதே தம்பி தூங்காதேக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.ஏ.வி.எம். தயாரித்த இன்னொரு வெற்றிப்படம் "நல்லவனுக்கு நல்லவன்', "தர்மாத்முடு' என்ற தெலுங்கு படம்தான் நல்லவனுக்குநல்லவன் என தமிழில் வெளியானது.

தெலுங்குப் படத்தைப் பார்த்த ஏ.சி.திருலோகசந்தர் தமிழில் அப்படத்தை எடுக்கலாம் என எம். சரவணனுக்கு பரிந்துரைசெய்தனர். தயாரிப்பாளரும் நடிகருமானபாலாஜியும் அந்தப் படத்தைப் பார்த்தார்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த பாலாஜி அப்படம் நடிகர் திலகத்துக்குசரிப்பட்டு வராது என நினைத்து அதை தமிழில் படமாக்கும்முயற்சியைக்கைவிட்டார்.சிவாஜி நடித்ததோல் விப் படமான "ஹிட்லர்உமாநாத்' தான் தர்மாத் முடு எனதெலுங்கில்வெளியாகியுள்ளது.
அதையேமீண்டும் தமிழாக்கம் செய்வது நல்லதல்ல என்று பஞ்சுஅருணாசலம் கூறினார். ஆனால் எம். சரவணனும், இயக்குனர் எஸ்.பி. முத்துராமனும்அதைத் தமிழில் தயாரிக்க வேண்டும் என்றுவிரும்பினார்கள். விசுவைஅழைத்து தெலுங்குப் படத்தைப்போட்டுக் காட்டினார்கள். சின்னச்சின்ன மாற்றங்கள் செய்தால்தமிழில் நல்லா வரும் என்றார்விசு. விசுவுக்கு ஒரு தொகைபேசி படவேலை ஆரம்பமானது.
எம். சரவணன் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகை போதுமானதல்ல என விசு கூறினார்.முதலில் படத்தை முடிப்போம்மிகுதியைப் பிறகு பார்க்கலாம்என்று எம். சரவணன் கூறினார்.நல்லவனுக்கு நல்லவன் படவேலை மளளவென நடந்தது.ரஜினி, ராதிகா நடித்தார்கள்.படம் முடிந்ததும் போட்டுப் பார்த்த எம். சரவணனுக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.
இரு ஒரு மசாலாப் படம். முடிவு மென்மையாக கவிதைபோல் உள்ளது. ஆக்ஷன்கிளைமாக்ஸ் தான் படத்தை வெற்றி பெறச்செய்யும் என்றார் எம். சரவணன். ரஜினிக்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் மென்மையான கிளைமாக்ஸே பிடித்திருந்தது.

படம் முழுவதும் முடிந்து சென்சார் ஆகிவிட்டது. இந்த நிலையில் எம். சரவணனின்விருப்பப்படி ஆக்க்ஷன் கிளைமாக்ஸ் காட்சிபடமாக்கப்பட்டு அதற்கும் சென்ஸார்வாங்கி விட்டார்கள். மென்மையான கிளைமாக்ஸை விட ஆக்ஷனின் கிளைமாக்ஸ்தான்அனைவருக்கும் பிடித்திருந்தது.
ஆகையால் ஆக்க்ஷன் கிளைமாக்ஸின் படம்வெளியாகி பெரு வெற்றி பெற்றது.விசுவை அழைத்து பேசிய தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுத்தார் எம். சரவணன். விசு அதிர்ச்சியில்உறைந்து விட்டார்.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வேலைநிறுத்தக் காட்சி ஒன்று உண்டு. ரி.வி. எஸ்.நிறுவனத்தில் நடந்த உண்மையான வேலைநிறுத்தத்தை வைத்தே அக்காட்சி படமாக்கப்பட்டது.""என்னைத் தானே...'' என்ற காலத்தால்அழியாத பாடல் நல்லவனுக்கு நல்லவன்படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் வி.சி.குகநாதனின் படத்துக்காக வைரமுத்துவால்எழுதப்பட்டு இளையராஜா இசையமைக்ககே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் வி.சி. குகநாதனின் படத்தில் அப்பாடல் இடம்பெறாததனால் எம். சரவணன் அப்பாடலை வாங்கிநல்லவனுக்கு நல்லவனில் இணைத்தார்.
ரமணி
மித்திரன்
101.a

11 comments:

முரளிகண்ணன் said...

அனைத்தும் அருமையான சங்கதிகள்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எந்தக் கதை, எந்தப் பாடல் வேறு எந்தத் திரைப்படத்தில் சரியாக உட்காரும் என்பது ஏவிஎம் செட்டியார்கள் போன்ற சிலருக்கு, இயல்பாக வாசம் பிடிப்பது போலத் தோன்றிவிடும் என்று நினைக்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்கள் மாறி இருந்தாலும் படத்திற்கு பொருத்தமாக இருந்தது... பகிர்வுக்கு நன்றி ஐயா...

வர்மா said...

முரளிகண்ணன் said...
அனைத்தும் அருமையான சங்கதிகள்


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

வர்மா said...

அறிவன்#11802717200764379909 said...
எந்தக் கதை, எந்தப் பாடல் வேறு எந்தத் திரைப்படத்தில் சரியாக உட்காரும் என்பது ஏவிஎம் செட்டியார்கள் போன்ற சிலருக்கு, இயல்பாக வாசம் பிடிப்பது போலத் தோன்றிவிடும் என்று நினைக்கிறேன்...

அவரின் அனுபவம் தான் வெற்றியைத்தேடிக்கொடுத்தது
அன்புடன்
வர்மா

வர்மா said...

திண்டுக்கல் தனபாலன் said...
பாடல்கள் மாறி இருந்தாலும் படத்திற்கு பொருத்தமாக இருந்தது... பகிர்வுக்கு நன்றி ஐயா.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

Anonymous said...

அந்த இந்தி படத்தில் நடித்து யார், அது எப்படி சொருக பட்டது? விவரம் இல்லையே.

வர்மா said...

அந்த ஹிந்திப்படம் பற்றிய விபரம் சரியாகத்தெரியவில்லை
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்நன்றி
அன்புடன்
வர்மா

தி.தமிழ் இளங்கோ said...

சுவையான சங்கதிகள்! இந்த கட்டுரையை இப்போது படித்தாலும் ஆர்வமாகவே ரசனையோடு உள்ளது!

வர்மா said...


தி.தமிழ் இளங்கோ
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

ponkavibrahman said...

வணக்கம்..!தங்களின் வலைப்பூ என்னை மலைக்க வைக்கி றது...யாவும் அறிவின்
அழகின்பம் கண்டது போல் உள்ளன..
!