Thursday, January 31, 2013

அரசியல் பகடையில் விஸ்வரூபம்


தமிழக அரசியலைப்புதியபாதையில் அழைத்துசென்றபெருமை தமிழ்சினிமாவையேசாரும். பிரிக்கமுடியாதிருந்த  தமிழ் சினிமாவும் தமிழகமும் வேறுவேறு பாதையில் புறப்படத்தயாராகிவிட்டன.வந்தாரை வரவேற்கும் தமிழகத்திலிருந்து வெளியேறத்தயாராகிவிட்டார் கமல்.சர்ச்சைகள் வரும் முன்னே கமல்படம் வரும் பின்னே  என்பது அண்மைக்காலப் பதிவாக உள்ளது.விஸ்வரூபம் படத்துக்கான எதிர்ப்பு விஸ்வரூபமாக வியாபித்துள்ளது.

    விஸ்வரூபம் படக்கதை ஆப்கானிஸ்தானைச்சுற்றி நடப்பதனால் முஸ்லிம்களைப்புண்படுத்தும் கொச்சைப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இருக்கலாம் என்று சந்தேகித்த முஸ்லிம் அமைப்புகள் தாம் பார்த்தபின்பே படத்தைத்திரயிடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல என்று அடித்துக்கூறினார் கமல்.படத்தைப்பார்த்த முஸ்லிம் அமைப்புகள் தாம் சந்தேகப்பட்டது உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தின.முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி படத்தைத்திரையிட கமல் முயற்சி செய்ததனால் முஸ்லிம் அமைப்புகள் தமிழக அரசிடம் மனுக்கொடுத்தன.

  விஸ்வரூபப்பிரச்சினையைக்கையில் எடுத்த தமிழக அரசு படத்தித்திரையிட அதிரடியாகத்தடை விதித்தது.சட்டம் ஒழுங்கு சீர்குலையும்  அன்பதைக்காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமுல் செய்தது.தமிழக அரசின் தடை உத்தரவினால் அதிர்ச்சியடைந்த கமல் ரசிகர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா,கேரளா, கர்நாடகம் ஆகியவற்றுக்குப்படை எடுத்தனர். தமிழக அரசின் தடை காரணமாக விஸ்வரூபத்தைத்திரையிட கர்நாடக அரசு தயங்கியது.இரண்டு நாட்களின் பின் பலத்தபதுகாப்புடன் படத்தித்திரையிட்டது. தமிழக் அரசின் தடை தமிழக அரசைக்கட்டுப்படுத்தவில்லை
 தமிழக அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் கமல். இரவோடு இரவாக மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தான் நினைத்ததைச்சாதித்தது தமிழக அரசு. விஸ்வரூபம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தமிழக அரசு கூறியது. ஆனால்,விஸ்வரூபம் திரையிடப்படாமலே சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தது.

    தமிழக அரசின் தடையை நீதிமன்றம் நீக்கியதால் சிலதியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டினால் படக்காட்சி இடை நிறுத்தப்பட்டது.தியேட்டர்கள் மீது கல் வீசப்பட்டது,கண்ணாடி அடித்துநொருக்கப்பட்டது,பனர் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது, பெற்றோல் குண்டு வீசப்பட்டது,பெற்றோல் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.திரை அரங்குகளுக்குப்போதிய பாதுகாப்பு வழங்காது அலட்சியமாக இருந்தது தமிழக அரசு.

   த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் பிர‌முக‌ர்க‌ளும்,சினிமா உல‌க‌மும் கம‌லின் பின்னால் அணிதிர‌ண்டுள்ள‌ன‌ர்.துப்பாக்கி ப‌ட‌த்துக்கு முஸ்லிம்க‌ள் எதிர்ப்புக்காட்டிய‌போது அமைதியாக‌த்தீர்த்து வைத்த‌ த‌மிழ‌க‌ அர‌சு க‌ம‌லுக்கு தொட‌ர்ச்சியாக‌த்தொல்லை கொடுக்கிற‌து.

    விஸ்வ‌ரூப‌ம் பிர‌ச்சினை விரைவில் முடிவுக்கு வ‌ந்துவிடும் த‌மிழ‌க அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையினால் கொதித்துப்போயுள்ள‌ க‌ம‌லின் ர‌சிக‌ர்க‌ள் த‌மிழ‌க அர‌சைவீழ்த்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்துள்ள‌ன‌ர்.அர‌சிய‌லும் ஆன்மீக‌மும் வேண்டாம் என்றிருக்கும் க‌ம‌லை த‌ன‌து அர‌சிய‌ல் ப‌ல‌த்தால் அசைத்துப்பார்த்துள்ள‌து த‌மிழ‌க‌ அர‌சு.

Tuesday, January 29, 2013

கருணாநிதி வழியில் சோனியா


காங்கிரஸ்தலைவர்களும்தொண்டர்களும்எதிர்பார்த்தமுக்கியமானபதவியைராகுல் காந்திக்குக் கொடுத்து வாரிசு  அரசியலைஉறுதிசெய்துள்ளார்சோனியா காந்தி.ஜவர்ஹர்லால்நேரு,இந்திராகாந்தி,ராஜீவ்காந்திஆகியோருக்குப்பின்ன‌ர்காங்கிரஸ்கட்சியைராகுல்காந்தியின்கையில்ஒப்படைக்கும்திட்டத்தைஅரங் கேற்றியுள்ளார் சோனியா காந்தி.

காங்கிரஸ்கட்சியின்துணைத்தலைவர்பதவிராகுல்காந்திக்குவழங்கப்பட்டுள்ளது.  சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்திதான்என்பதுஎழுதாதசட்டமாக உள்ளது.இந்தியப்பிரதமராகமன்மோகன்சிங்வீற்றிருந்தாலும்ராகுலுக்குதன்பதவியைத்தாரைவார்க்கத்தயாராகவேஉள்ளார்.காங்கிரஸ்கட்சியின்மூத்ததவைர்களில்பலர்உள்ளபோதும்சோனியாகாந்தியேபலம்மிக்கவராகஉள்ளார்.காங்கிரஸ்கட்சிநெருக்கடிகளைச்சந்தித்தபோதுஅதனைத்தூக்கிநிறுத்தியவர்கள்சோனியாவின்பின்னால்அடக்கமாகநிற்கின்றனர்.காங்கிரஸ்கட்சிநெருக்கடிகளைச்சந்தித்தபோது ராகுல் காந்தி அரசியல் பக்கம்  திரும்பியும் பார்க்கவில்லை.

நே ரு வம்ச த்து அரசியல் வாரிசாக இந்திராகாந்தியில்வளர்க்கபட்டவர்சஞ்சய் காந்தி.விமானவிபத்தில்சஞ்சய்காந்திஇறந்ததனால்வாரிசுஅரசியலுக்காகதாய் இந்திரா காந்தியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்ராஜிவ்காந்தி,சஞ்சய் காந்திஉயிருடன்இருந்திருந்தால்மனைவிமேனகாகாந்தியும்மகன்வருண்காந்தியும் முன்னிலை பெற்றிருப்பார்கள்.

காங்கிரஸ்கட்சியின்முக்கியமானமாநாடுகளும்,கூட்டங்களும்நடைபெறும்போதெல்லாம்ராகுல்காந்திக்குப்பொறுப்பானபதவிவழங்கப்படும்என்றஎதிர்பார்ப்புஇருந்தது.ராகுல்காந்திக்குமுக்கியபொறுப்புவழங்கப்படுவதற்குகாஙகிரஸ்ட்சியில்உள்ளவர்கள்எதிர்ப்புத்தெரிவிக்கமாட்டார்கள்.காங்கிரஸின்பின்னால்அணிவகுப்பதற்குதலைவர்களும்தொண்டர்களும்தயாராகவேஉள்ளனர். எதிர்பார்ப்புகள்எழுந்தவேளைஅமைதியாகஇருந்துவிட்டுயாரும்எதிர்பார்க்காத தருணத்தில் ராகுலுக்கு  துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்குப் ஸ்ராலின் என்பதுஅரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ரகசியம்ஸ்டாலினும்ராகுலும்காலம்தாழ்த்தியேதுணைத்தலைவர்பதவியைபெற்றுள்ளனர்.ராகுல்துணைத்தலைவராவதற்குஎந்தவிதமானஎதிர்ப்பும்இருக்கவில்லை.ஸ்டாலினுக்குஎதிராகஅண்ணன்அழகிரிபோர்க்கொடிதூக்கியுள்ளார். அழகிரியின் நெருக்குதலினால் ஸ்டாலினைத் துணைத் தலைவராக்கப் பல சந்தர்ப்பங்களைகருணாநிதிதவறவிட்டார்.அஞ்சாநெஞ்சன்அழகிரியின்எதிர்ப்புக்கு அஞ்சாது மகன் ஸ்டாலினை துணைத் தலைவராக்கினார் கருணாநிதி.

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டே ராகுல் காந்தி துணைத்தலைவராக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ்கட்சியில்பிரசாரமும்கூட்டணிப் பங்கீடும்ராகுல்காந்தியின்விருப்பத்துக்கமையவேநடைபெறும்ராகுலுக்கும் திராவிட முன் னேற்றக் கழகத்துக்கும்எட்டாப்பொருத்தமாகஉள்ளது.திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும்அதன்தலைவர்களுக்கும்ராகுல்காந்திமரியாதைவழங்குவதில்லை.டில்லியிலிருந்துமிழகம்செல்லும்காங்கிரஸ்தலைவர்கள்மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச்  சந்திப்பார்கள். தமிழகம் செல்லும் ராகுல்காந்திருணாநிதியையையும்திராவிடமுன்னேற்றத்தலைவர்களையும்சந்திப்பதில்லை.நாடாளுமன்றப்பொதுத்தேர்தலில்காங்கிரஸையேபெரிதாகம்பியுள்ளது.திராவிடமுன்னேற்றக்கழகத்தின்தர்காலம்ராகுல்காந்தியின்கைகளிலேயே உள்ளது.

புதியதலைமைத்துவத்தைஅடையாளம்காட்டியுள்ளார்சோனியாகாந்திஇந்திய நாடாளுமன்றத்தேர்தலில்ராகுல்காந்தியின்பின்னால்அணிதிரளதலைவர்கள்தயாராகஉள்ளனர்.மாநிலங்களில்ராகுலால்அமைக்கப்பட்டஇலட்க்கணக்கானஅங்கத்தவர்களைக்கொண்டஇளைஞர்அணிஅவரின்பின்னால்அணிதிரளதயாராக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரதானஎதிர்க்கட்சியானபாரதீயஜனதாக்கட்சிபலம்மிக்க  தலைவர்இல்லாதுதடுமாறுகின்றது.ஒருகாலத்தில்பலம்மிக்கத‌லைவராகஇருந்துஅத்வானியிடம்பழையமிடுக்குஇல்லை.பாரதீயஜனதாக்கட்சியின்தலைவருக்குமாநிலத்துக்குவெளியேசெல்வாக்குஇல்லை.சுஸ்மாசிவராஜ்நரேந்திரமோடிஆகியஇருவருக்குத்தான்இந்தியஅளவில்செல்வாக்குள்ளது.மோடியைமுனனிறுத்திஇந்தியநாடாளுமன்றபொதுத்தேர்தலைச்சந்திக்கவேண்டும்என்றஎண்ணம் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பலரிடம் உள்ளது.


குஜராத்தில்அசைக்கமுடியாதசெல்வாக்குடன்இருக்கும்மோடிக்குஇந்தியாவில்செல்வாக்குஇருக்குமாஎன்றசந்தேகம்எழுந்துள்ளது.குஜராத்தில்முஸ்லிம்களக்குஎதிராகநடைபெற்றகலவரங்களால்முஸ்லிம்கள்மத்தியில்மோடிக்குஎதிர்ப்புஉள்ளது.குஜராத்மாநிலமுஸ்லிம்கள்மோடிக்குஆதரவுதெரிவித்தாலும்இந்திய முஸ்லிம்கள் மோடிக்கு எதிராக வே இருப்பார்கள்.

பாரதீயஜனதாக்கட்சியில்பலமானசெல்வாக்குமிக்கதலைவர்இல்லாதநிலையில்அடுத்தபிரதமர்வேட்பாளர்ராகுல்காந்திஎன்பதைமறைமுகமாகஅறிவித்துள்ளனர் சோனியாகா காந்தி.

ராகுல்காந்தியின்திட்டப்படிகடந்தகாலங்களில்வடஇந்தியாவில்சந்தித்தமாநிலத்தேர்தல்களில்காங்கிரஸ்கட்சிதோல்வியடைந்தது.பாரதீயஜனதாக்கட்சியின்செல்வாக்குரிந்துள்ளமையினால்நாடாளுமன்றப்பொதுத்தேதர்தலில்வெறி பெறலாம்என்றநம்பிக்கைகாங்கிரஸுக்குஉள்ளது.மதரீதியானஅரசியலுக்குஇந்தியாவில்  எதிர்ப்புக்கிளம்பியுள்ளதால்பாரதீயஜனதாக்கட்சியின்மதரீதியான பிரசாரம்பிசுபிசுக்கும்வாய்ப்புஉள்ளது.மதசார்பற்றஆட்சிஅமைவதையேஇந்தியமக்கள்விரும்புகின்றனர்.ஆகையினால்காங்கிரஸ்கட்சிமிகுந்தநம்பிக்கையுடன் உள்ளது.

ஜவஹர்லால்நேரு,இந்திராகாந்தி,ராஜீவ்காந்திஆகியோருக்குப்பின்பிரதமராகும்வாய்ப்புராகுல்காந்திக்குப்பிரகாச‌மாகஉள்ளது.சோனியாகாந்திவெளிநாட்டவர்.அவர்பிரதமராகக்கூடாதுஎன்பதில்உறுதியாஇருந்தபாரதீயஜனதாக்கட்சியினால்அதேபோன்றஒருகுற்றச்சாட்டைமுன்வைத்துராகுலுக்குஎதிராகப்போராடமுடியாதநிலைஉள்ளது.வெளிநாட்டுப்பெண்ணின்மகன்பிரதமராகக்கூடாதுஎன்றபிரசாரம்மக்கள்மத்தியில்சலசலப்பைஏற்படுத்தப்போபாவதில்லை.ராஜீவின்மகன்இந்திராவின்பேரன்,நேருவின்பீட்டன்என்றஅனிகலன்கள் ராகுலுக்குப் பாதுகாப்பாக உள்ளன.
ரமணி
 மெட்ரோநியூஸ் 25/01/13


Wednesday, January 23, 2013

தடம் மாறியதமிழ்ப்படங்கள் 47


மனைவியின் தங்கைமீது ஏற்படும் விபரீத ஆசையால் குடும்பமே சின்னாபின்னமாகிய கருவுடன் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஆசை."

   பூரணம் விஸ்வநாதனின் மகள் ரோகினி. கணவன் பிரகாஷ்ராஜ், டில்லியில் இராணுவ மேஜராகப்பணிபுரிகிறார். பல வருடங்களின் பின் ஊருக்கு குடும்பத்துடன் வருகிறார் ரோகினி. ரோகினியின் தங்கை சுவலக்ஷ்மியைக்கண்டதும் பிரகாஷ்ராஜின் காமத்தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.ரோகினியின்  கைக்குழந்தையை மிகவும் நேசிக்கிறார். விடுமுறை முடிந்ததும் ரோகினிகுடும்பத்துடன்டில்லிக்குச்செல்கிறார்.டில்லியில் வேலை செய்தாலும் பிர‌காஷ்ராஜின் ம‌ன‌ம்  சுவ‌ல‌க்ஷ்மியையேசுற்றிவ‌ந்த‌து.

   ப‌ஸ்ஸில் ரிக்கெற்றைத்தொலைத்துவிட்டு தேடும் சுவ‌ல‌க்ஷ்மிக்குத்த‌ன‌து ரிக்கெற்றைக்கொடுத்து உத‌வி செய்கிறார் அஜித்.ரிக்கெற்ப‌ரிசோத‌க‌ரிட‌ம் அக‌ப்ப‌ட்டுச்செல்லும் அஜித்தைப்ப‌ரிவிட‌ன் பார்க்கிறார் சுவ‌ல‌க்ஷ்மி. சுவ‌ல‌க்ஷ்மியின் மீது காத‌ல் வ‌ச‌ப்ப‌டுகிறார் அஜித்.த‌ன‌து காத‌லைப்ப‌ல‌முறை சொல்ல‌ முய‌ன்று தோற்றுப்போகிறார். அஜித்த‌ன்மீது கொண்ட‌காத‌லை அறிந்த‌தும் ப‌ச்சைக்கொடி காட்டுகிறார் சுவ‌ல‌க்ஷ்மி.
    ரோகினியின் திரும‌ண‌த்துக்காக‌க் க‌ட‌னாக‌ வாங்கிய‌ ப‌ண‌த்தைக்கொடுக்க‌ முடியாது திண்ட்டாடுகிறார் பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன்.பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌னுக்கு வ‌ட்டிக்குப்ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள் வீடு தேடிச்சென்று மிர‌ட்டுகிற‌ர்க‌ள்.இத‌னை அறிந்த‌ பிர‌காஷ்ராஜ் வ‌ட்டியுட‌ன் ப‌ண‌த்தைக்கொடுக்கிறார்.வீட்டுக்குத்தொலைபேசி இண‌ப்பையும் ஏற்ப‌டுத்திக்கொடுக்கிறார். க‌ண‌வ‌னின் விப‌ரீத‌ ஆசையை அறிந்த‌ ரோகினிப‌த‌றுகிறார்.த‌ன‌து ஆசைக்கு ம‌னைவி ரோகினி ஒப்புக்கொள்ளாமையினால் அவ‌ளைக்கொலை செய்கிறார்.

  பாலில் ம‌ய‌க்க‌ ம‌ருந்து கொடுத்து  ரோகினி ம‌ய‌ங்கிய‌பின் முக‌த்தை பொலித்தீனா‌ல் மூடி க‌ழுத்தையும் கையையும் காலையும் ச‌ப்பாத்து லேசினால்க‌ட்டி மூச்சுத்திண‌றி ரோகினி ம‌ர‌ண‌ம‌டைகிறார்..ரோகினிக்கு அடிக்க‌டி நெஞ்சுவ‌லி வ‌ருவ‌த‌னால் நெஞ்சு வ‌லியினால் ரோகினி ம‌ர‌ண‌மான‌தாக‌ பிர‌காஷ்ராஜ் கூறுகிறார்.மனைவி ரோகினியின் இறுதிக்கிரியைகளை முடித்துவிட்டு டில்லிக்குச்செல்லும் பிர‌காஷ்ராஜ், மாம‌னையும் சுவ‌ல‌க்ஷ்மியையும் கூட்டிச்செல்கிறார்.

     த‌ங்க‌ள் குடும்ப‌ப்பிர‌ச்சினைக‌ளைத்தீர்த்துவைத்த‌ பிர‌காஷ்ராஜ்மீது ந‌ம்பிக‌கைவைத்து பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌னும் சுவ‌ல‌க்ஷ்மியும் பின்னால் செல்கின்ற‌ன‌ர்.பிர‌காஷ்ராஜின் காம‌த்தீக்குத்தான் ப‌லியாக‌ப்போவ‌தைத்தெரியாத‌ சுவ‌ல‌க்ஷ்மி குழ‌ந்தையை அர‌வ‌ணைத்த‌ப‌டி சென்றார்.

    சுவ‌ல‌க்ஷ்மி ஆழ்ந்த‌ உற‌க்‌க‌த்தில் இருந்த‌போது க‌த‌வை மெதுவாக‌த்திற‌ந்து ர‌சித்துப்பார்த்தார் பிர‌காஸ்ராஜ்.காற்றிலே மேலாடை வில‌குவ‌தைக்க‌ண் வெட்டாம‌ல் பார்த்தார்.ஆழ்ந்த‌ உற‌க‌க‌த்தில் இருந்த‌ சுவ‌ல‌க்ஷ்மி திடீரென‌க்க‌ண் விழித்துப்பார்த்த‌போது  பிர‌காஷ்ராஜ்  த‌ன்னை வெறித்துப்பார்ப்ப‌தைக்க‌ண்டு அதிர்ச்சிய‌டைகிறார்.  
   எதுவிதா ப‌த‌ற்ற‌முமின்றி மிக‌ நிதான‌மாக‌ அறையினுள் நுழைந்த‌ பிர‌காஷ்ராஜ் குழ‌ந்தையைத்தூக்கிச்சென்றார்.குழ‌ந்தையின் மீது பிர‌காஷ்ராஜ் கொண்ட‌ பாச‌த்தை உண‌ர்ந்து பூர‌ன‌ம் விஸ்வ‌நாத‌னும் சுவ‌ல‌க்ஷ்மியும் ம‌கிழ்சிய‌டைந்த‌ன‌ர்.

    சுவ‌ல‌க்ஷ்மியைத்தேடி டில்லிசெல்லும் அஜித் ந‌ண்ப‌னின் உத‌வியுட‌ன் அவ‌ளைக்க‌ன்டு பிடிக்கிறார்.சுவ‌ல‌க்ஷ்மியைத்தான் திரும‌ண‌ம்செய்யும் விருப்ப‌த்தைத்தெரிவிப்ப‌த‌ற்காக‌ அவ‌ளின் திரும‌ண‌ம் ப‌ற்றி மாம‌னிட‌ம் க‌தைக்கிறார் பிர‌காஷ்ராஜ்.அப்போது சுவ‌ல‌க்ஷ்மி அஜித்தைக்காத‌லிப்ப‌தைக்கூறிய‌  பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன்  இர‌வு விருந்துக்கு ஏற்ப‌டு செய்த‌ த‌க‌வ‌லையும் தெரிவிக்கிறார்.சுவ‌ல‌க்ஷ்மியின் காத‌லை அறிந்து அதிர்ச்சிய‌டைந்த‌  பிர‌காஷ்ராஜ் த‌ன‌னைச்சுதாக‌ரித்துக்கொண்டு அஜித் எற்பாடுசெய்த‌ இர‌வு விருந்தில் க‌ல‌ந்து கொள்ள‌ச்ச‌ம்ம‌திக்கிறார்.

   அஜித்தும் பிர‌காஷ்ராஜும் க‌தைத்துக்கொண்டு செல்லும்போது அஜித்தின் மீது ஒருவ‌ர் மோதுகிறார். அந்த‌நேர‌ம் அஜித்தின் ப‌ர்ஸை பிர‌காஷ்ராஜ் உருவுகிறார்.சாப்பிட்டு முடிந்த‌தும்  ப‌ர்ஸ் இல்லாமையால் அஜித் அதிர்ச்சிய‌டைகிறார்.த‌ன்னுட‌ன் மோதிய‌வ‌னைக்க‌ண்டு ச‌ந்தேக‌த்தில் அவ‌னைச்சோதிக்கிறார். அவ‌னிட‌ம் ப‌ர்ஸ் இல்லை.பிரகாஷ்ராஜ் மீது ச‌ந்தேக‌ம் கொண்டு பிர‌காஷ்ராஜைச்சோதிக்க‌வேண்டும் என்கிறார்.பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன் த‌டுக்கிறார். ஹோட்ட‌ல் பில்லை பிர‌காஷ்ராஜ் க‌ட்டுகிறார்.
  பிர‌காஷ்ராஜைப்ப‌ற்றிய‌ உண்மைக‌ளை மேல‌திகாரி நிழ‌ல்க‌‌ள் ர‌வியிட‌ம் அஜித் கூறிய‌தை அவ‌ர் ந‌ம்ப‌ம‌றுக்கிறார்.சுவ‌ல‌க்ஷ்மியின் ப‌ட‌த்துட‌ன் த‌ன‌து ப‌ட‌த்தை பிர‌காஷ்ராஜ் இணைப்ப‌தைப்பார்த்த‌  நிழ‌ல்க‌ள் ர‌வி அதுப‌ற்றி வின‌வுகிறார். ம‌னைவி ரோகினியின் ம‌ர‌ண‌த்திலும் ச‌ந்தேக‌மடைகிறார்.பிர‌காஷ்ராஜின் ஏற்பாட்டில் விப‌த்து என்ற‌பெய‌ரில் நிழ‌ல்க‌ள் ர‌வி கொல்ல‌ப்ப‌டுகிறார்.

    மேல‌திகாரியிட‌ம் பிர‌காஷ்ராஜைப்ப‌ற்றிக் கூறிய‌ அஜித்மீது பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன் வெறுப்ப‌டைகிரார்.பிர‌காஷ்ர‌ஜ் ந‌ல்ல‌வ‌ர் என்று அஜித்துக்கு உண‌ர‌வைக்க‌ சுவ‌ல‌க்ஷ்மி முய‌ற்சிசெய்கிறார்.
அஜித்தின்வீட்டில்போதைவ‌ஸ்துவைத்துஅவரைபொலிஸில்பிடித்துக்கொடுக்கிறார் பிர‌காஷ்ராஜ்.சுவ‌ல‌க்ஷ்மியின் எதிகால‌ம் ப‌ற்றி பூர‌ன‌ம் விஸ்வ‌நாத‌ன் க‌வ‌லையடைந்திருந்த‌ வேளையில் குழ‌ந்தையை சுவ‌ல‌க்ஷ்மி  அதிக‌ம் நேசிப்ப‌தைக்கூறி  இர‌ண்டாம் தார‌மாக‌ சுவ‌ல‌க்ஷ்மியைத்திரும‌ண‌ம் செய்ய‌ப்போவ‌தாக‌க்கூறுகிறார் பிர‌காஷ்ராஜ். ச‌ந்த‌ர்ப்ப‌ சூழ்நிலையால் பீர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன் ஒப்புத‌ல‌ளிக்கிறார்.

  அஜித்தைவிடுத‌லை செய்வ‌தாக‌க்கூறி சுவ‌ல‌க்ஷ்மியை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்கிறார் பிர‌காஷ்ராஜ்.காரிலேசுவ‌ல‌க்ஷ்மி இருக்க‌ சிறைக்குச்சென்ற‌ பிர‌காஷ்ராஜ் ச‌க‌ல‌ உண்‌மைக‌ளையும் அஜித்திட‌ம் கூறுகிறார்.த‌ன்னைத்திரும‌ண‌ம்செய்வ‌த‌ற்க்காக‌ அக்காவைக்கொலை செய்த‌ பிர‌காஸ்ராஜின் சூழ்ச்சியால் அஜித் சிறையிலிருக்கும் உண்மையை அறிந்த‌ சுவ‌ல‌க்ஷ்மி அதிர்ச்சிய‌டைகிறார்.

     பிர‌காஷ்ராஜின் சுய‌ரூபத்தை‌த்தெரிந்து கொண்ட‌ பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌னும் சுவ‌ல‌க்ஷ்மியும் குழ‌ந்தையுட‌ன் சென்னைக்குச்செல்ல‌த்த‌யாராகின்ற‌ன‌ர். அப்போது அங்கே வ‌ந்த‌ பிர‌காஸ்ராஜ் பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌னை அடித்து ம‌ய‌க்க‌ம‌டைய‌ச்செய்து விட்டு சுவ‌ல‌க்ஷ்மியின் மீது த‌ன் ஆசையை ‌த்தீர்க்க‌ முய‌ற்சிசெய்கிறார். சிற‌யிலிருந்து த‌ப்பிவ‌ந்த‌ அஜித் சுவ‌ல‌க்ஷ்மியைக்காப்பாற்றுகிறார். அஜித்தின் தாக்குத‌லால் பிர‌காஷ்ராஜ் ம‌ய‌க்க‌ம‌டைகிறார்.

  குழ‌ந்தை பேச்சுமூச்சு இல்லாம‌ல் கிட‌ப்பதைக்க‌ண்ட‌ அஜித்தும் சுவ‌ல‌க்ஷ்மியும் குழந்தையை வைத்திய‌சாலைக்குக்கொண்டுசெல்கின்ற‌ன‌ர்.ம‌ய‌க்க‌ம் தெளிந்த‌ பூர‌ண‌ம் விஸ்வ‌நாத‌ன் க‌த‌வி ய‌ன்ன‌ல் ந்ல்லாவ‌ற்றையும் முடிவிட்டு காஸைத்திற‌ந்துவிடுகிறார்.   ம‌ய‌க்க‌ம் தெளிந்த‌ பிர‌காஷ்ராஜ் காஸ் ம‌ண‌த்தின் மூல‌ம் விப‌ரீத‌த்தை உண‌ர்கிறார்.பிர‌காஸ்ராஜின் கொடூர‌முக‌த்திக்கூறிவிட்டு  தீப்பெட்டியைப்ப‌ற்ற‌ வைக்கிறார் பூரணம் விஸ்வ‌நாத‌ன்.  வீடு தீப்ப‌ற்றி இருவ‌ரும் இற‌க்கின்ற‌ன‌ர்.

   வித்தியாச‌மான‌ க‌தைக்க‌ருவைக்கொண்ட‌ இப்ப‌ட‌ம் பெரு வெற்றிபெற்று அஜித்துக்குப்புக‌ழைத்தேடிக்கொடுத்த‌து.    அஜித்தின் ஆறாவ‌து ப‌ட‌ம் ஆசை. மூன்று ப‌ட‌ங்க‌ளில் க‌தாநாய‌க‌னாக‌ ந‌டித்த‌ அஜித்தின் முத‌லாவ‌து வெற்றிப்ப‌ட‌ம் ஆசை. அத‌ன்பின் அஜித்மீது ர‌சிகைக‌ள் ஆசைப்ப‌ட்ட‌ன‌ர்.

   அஜித்,அறிமுக‌நாய‌கி சுவ‌ல‌க்ஷ்மி,பூர‌ணம் விஸ்வ‌நாத‌ன்,பிர‌காஷ்ராஜ், நிழ‌ல்க‌ள் ர‌வி,வ‌டிவேலு பாபிலோனா,பூஜாப‌த்ரா,ஆகியோர் ந‌டித்த‌ன‌ர். பிர‌காஸ்ராஜின் வில்ல‌த்த‌ன‌ம் பிர‌மிக்க‌வைத்த‌து. வ‌டிவேலு ந‌டித்துள்ளார் ஆனால் ம‌ன‌தில் நிற்க‌வில்லை.க‌தை,திரைக்க‌தை,வ‌ச‌ன‌ம் உத‌வி ச‌ங்க‌ர் ராம‌ன். இசை தேவா. பாட‌ல்க‌ள் வாலி, வைர‌முத்து‌.க‌தை,திர‌க்க‌தை வ‌ச‌னம், இய‌க்‌க‌ம் வ‌ஸ்ந்த்.
   
   எஸ்.பி,பால‌சுப்ர‌ம‌ணிய‌ம்,.சித்ரா, ஹ‌ரிஹ‌ர‌ன்,சொர்ண‌ல‌தா,அனுராதா ஸ்ரீராம், சுரேஸ் பீட்ட‌ர், சுஜாதா,அனுப‌மா, மாஸ்ட‌ர் ஜி.வி.பிர‌காஸ் அகியோடின் குர‌லில் கொஞ்ச‌ நாள் பொறுத‌லைவா,  புல் வெளி த‌ன்னில் புல்வெளி த‌ன்னில், ஓஹோ ஒரு முறை எந்த‌ன், மீன‌ம்மா அதிகாலை‌யில், அய்யோ அய்ய‌ய்யோ ஷோக்க‌டிக்குது சோனா ஆகிய‌பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்க‌ளைக் க‌வ‌ர்ந்த‌ன‌.

 ஹ‌ரிக‌ர‌ன் பாடிய‌ கொஞ்ச‌ நாள் பொறுதலைவா, சித்ரா உன்னிகிருஷ்ண‌ன் பாடிய‌  புல்வெளி புல் வெளி த‌ன்னில் ஆகிய‌பாட‌ல்க‌ள் இன்றும் ம‌ன்தில் நிற்கின்ற‌ன‌.

 ம‌னை‌‌வி ரோகினி இற‌ந்ததும் கைக்குழ‌ந்தையை ம‌டியில் வைத்து பிர‌காஷ்ராஜ் இறுதிக்கிரியை செய்த‌து ம‌ன‌தை உறுத்திய‌து. ஆசை ப‌ட‌த்தில் சூர்யாவை ந‌டிக்க‌வைக்க வ‌ஸ‌ந்த் முய‌ற்சிசெய்தார். சினிமாவில் விருப்ப‌ம் இல்லாத‌த‌னால் சூர்யா ம‌றுத்துவிட்டார். அஜித்துக்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ நேருக்கு நேர் ப‌ட‌த்தின் மூல‌ம் அறிமுக‌மானார் சூர்யா.

  ஜெமினி,ப‌த்மினி,பி.எஸ்.வீர‌ப்பா,என்.எஸ்,கிருஷ்ண‌ன், டி,ஏ, ம‌துர‌ம் ஆகியோர் ந‌டித்த‌ ஆசை எனும் திரைப்ப‌ட‌ம் 1956 ஆம் ஆண்டு வெளிவ‌ந்த‌து.
ர‌ம‌ணி
மித்திர‌ன் 06/01/13

Monday, January 21, 2013

ஜெயலலிதாவின் தனி வழி அ.தி.மு.க. வுக்கு தலைவலி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை ஆகியவற்றில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடப்போவதாக ஜெயலலிதா அறிவித்ததனால் அவரது கூட்டணிக் கட்சியினர் கதிகலங்கிப் போயுள்னர். ஜெயலலிதாவின் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியன மிகுந்த உற்சாகமடைந்துள்ளன.
  தமிழகச‌ட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த், ச‌ரத்குமார்,,இஸ்லாமியக் கட்சி இடதுசாரிகள் ஆகிய இணைந்துபோட்டியிட்டன. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தில் இருந்தபோது புதிய ஆட்சி அமைப்பதற்காக ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தார்கள். தான் எதிர்பார்த்த முதலமைச் ச‌ர் பதவி கிடைத்ததும் விஜயகாந்தை ஓரம் கட்டினார். ஜெயலலிதா தன்னை ஓரம் கட்டுவது தெரிந்தும் ஜெயலலிதாவை எதிர்க்காது  பொறுமையாக இருந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவின் சுயரூபம் தெரியாத விஜயகாந்த் இலவுகாத்த கிளிபோல் காத்திருந்து ஏமாந்துவிட்டார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலத் தேர்தலிலும் தனிக் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை உள்ளது. மாநிலத்தில் பலமான கட்சிகளுடன் கூட்டு அமைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸும் பாரதிய ஜனதாக் கட்சியும் முயற்சிசெய்கின்றன. இந்த நிலையில் கூட்டணி இல்லாது 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போபாவதாக ஜெயலலிதா அறிவித்ததை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சில தலைவர்கள் வியப்புடன்  நோக்குகின்றனர். ச‌ட்டச‌பைத்தேதர்தலின் போது கட்சியின் செல்வாக்கும் வேட்பாளரின் செல்வாக்கும் வெற்றியைத் தீர்மானித்துவிடும். நாடாளுமன்றத் தேர்தல் அப்படி அல்ல பல ச‌ட்ட ச‌பைத் தொகுதிகள் அடங்கியதே ஒரு நாடாளுமன்றத் தொகுதி. பல தொகுதிகள் இருப்பதனால் கட்சியின்செல்வாக்கும் வேட்பாளரின்செல்வாக்கும் வெற்றி பெறப்போதுமானதல்ல. கூட்டணி இல்லாது வெற்றி பெற முடியாது என்பது அடிமட்டத் தொண்டனுக்கும் கொடுத்த உண்மை.

இந்தியப் பிரதமர் கனவை மனதில் வைத்@த 40 தொகுதிகளிலும் தனித்துப் @பாட்டி என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அஸ்திரம் எதிர்பார்த்த இலக்கை அடைய முன்ன@ர புஸ்வாணம் ஆகிவிடும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் ஆட்சி அமைக்கும் Œந்தர்ப்பம் உள்ள கூட்டணியை மாநில மக்கள் விரும்புவர். தமிழகத்தில் தனித்துப் @பாட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் பாரதி ஜனதாக் கட்சி அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் ச ந்தர்ப்பம் ஏற்பட்டால்  சழற்சி முறையில் முதல்வராகலாம் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியுடன் அல்லது மூன்றாவது அணியுடன் இணைந்து போ ட்டியிட்டால் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தனித்துப்போ ட்டியிட்டால் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு அனைத்தும் பொ ய்யாகிவிடும். பலமான கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டபோதே 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்த ஜெயலலிதாவால் கூட்டணி இல்லா து40 தொகுதிக‌ளிலும் வெற்றி பெறுவது இயலாத காரியம்.

சட்ட சபைத்தேர்தலில் விஜயகாந்த், இடதுசாரிகள், சரத்துகுமார், தொ லுங்கு   வேளாளர் கட்சி, இஸ்லாமியக் கட்சிகள் ஜெயலலிதாவின் தலைமையில் கீழ்போட்டியிட்டன. கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேற்றப்பட்டு விட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போ து பேரம் பேச லாம் என்று நினைத்திருந்த கூட்டணித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அறிவிப்பினால் அதிர்ந்து போ யுள்ளன.

ஜெயலலிதா ஒரு பக்கம் திராவிட முன் னே ற்றக் கழகம், காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என்பது உறுதியாகியுள்ளது. திராவிட முன்னே ற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணியில் விஜயகாந்தையும் இணைக்கும்  ஆர்வம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பாடம் படிப்பிப்பதற்காக இந்தக் கூட்டணியில் விஜயகாந்தும் இணையும்ச ந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.

ஜெயலிதாவுடன் கூட்டணி அமைத்து ஏற்பட்ட அவமானத்தினால் யாருடனும் கூட்டணி இல்லை என்ற பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கிவிட்டார்  விஜயகாந்த். ஜெயலலிதாவைத் தாக்கியும் கருணாநிதியைப் பாராட்டியும் அண்மைக் காலமாக கருத்துத் தெரிவித்து வருகிறார் விஜயகாந்த். விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்குகள் வரிசையில் வந்து கொண்டிக்கின்றன. எப்படித்தான் அவதூறாகப்பே சினாலும் கருணாநிதி வழக்குப் போடமாட்டார் என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தைத் தமது கட்டணிக்குள் கொண்டு வருவதற்கான சாதக சமிக்ஞைகளை திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வெளியிட்டு வரும் வேளையில் நான்கு வழக்குகளுக்கு முகம் கொடுக்க முடியாதவர் என்று அவரைக் கடுப் பேத்தியுள்ளார் அழகிரி. திராவிட முன்  னேற்றக் கழக வாரிசு போட்டியில் அழகிரி வெளி யேற்றப்பட்டு விட்டதால் அழகிரியின் இப்பே   ச் சு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தப்போ வதில்லை.

தமிழக அரசியலில் அசைக்க முடியாத ச‌க்தியாக விளங்கிய வைகோகாவும் டாக்டர் ராமதாஸும் இப் போதேடுவாரற்ற‌ நிலையில் உள்ளனர். வைகோவும் டாக்டர் ராமதாஸும் கூட்டணியில் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைமாறி அவர்கள் இல்லாம லேயே வெற்றி பெறலாம் என்ற உண்மை வெளிச்ச‌த்துக்கு வந்துள்ளது. வைகோவின் நெருங்கியச‌காவும் பிரசாரப் பீரங்கியுமாக இருந்த நாஞ்சில்  ச ம்பத் அண்மையில் அண்ணா திராவிட முன் னேனற்றக் கழகத்தில் சரணடைந்துவிட்டார். வைகோவுடன் இருப்பவர்கள் தொடர்ந்து அவருடன் இருப்பார்களா என்ற  ச ந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதாவால் வஞ்சிக்கப்பட்டு தமிழகசட்டசபைத் சேதர்தலில்போட்டியிடாது ஒதுங்கினார் வைகோ. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராது தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதனால் இடதுசா ரிகளும் வைகோவும் இணைந்து போட்டியிடும் சா த்தியம் உள்ளது.

டாக்டர் ராமதாஸின் நிலை மிகமோச மாகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சாதிப் பிரச்சினையைத் தூண்டி குளிர் காய் வதாக ராமதாஸ் மீது குற்றம் சும த்தப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல‌ இடங்களில் நடைபெறும் சா திச்சண்டைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி யே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகன் அன்புமணிக்காக ஏதாவது ஒரு கூட்டணியில் இணைவதற்கு துடிக்கிறார் ராமதாஸ். ஆனால் ராமதாஸைத் தமது கூட்டணியில்  சேர்ப்பதற்கு சில தலைவர்கள் தயங்கும் நிலை உள்ளது.
 தமிழகம், புதுவை ஆகிய 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தனித்துப் போ ட்டியிட்டால் திராவிட முன்  னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக அமையும் இந்தியப் பிரதமரைத் தே தர்வு  செ ய்யும் ஆறு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உத்தரப் பிர  தேச‌ த்தில் 80, மகாராஷ்டிராவில் 48, ஆந்திராவில் 42, மே ற்கு வங்காளத்தில் 42, பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் 292 தொகுதிகள் உள்ளன. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மட்டும் வெற்றி பெற்றால் போதாதது ஏனைய மாநிலங்களிலும் கணி  ச மான வெற்றியைப் பெற்றால்தான் இந்தியா பிரதமராகும் வா#ப்பு ஏற்படும். ஆகையினால் தனி வழி என்ற அறிவிப்பை ஜெயலலிதா, வாபஸ் பெறவேண்டிய நிலை ஏற்படும். அடிக்கடி முடிவை மாற்றும் ஜெயலலிதா நாடாளுமன்றப் பொதுத்தே ர்தல் அறிவிப்பின் பின்னர் புதிய கூட்டணிக்குத் தலைமை ஏற்படும் நிலை உள்ளது.
 

Friday, January 18, 2013

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 46


    காதலுக்குப்பெறோர் எதிர்ப்புத்தெரிவித்ததனால் இரகசியமாகப் பதிவுத்திருமணம் செய்து விட்டுத்தமது வீடுகளில் வசிக்கும் இளைஞனினதும் யுவதியினயதும் ஒரு வரிக்கதைதன் 2000 மாம் ஆண்டு வெளியான "அலைபாயுதே" திரைப்படம்.

   நண்பனின் திருமணத்துக்காக கிராமத்துக்குச்செல்லும் மாதவன் ஷாலினியைக்கண்டு தனது மனதைப்பறிகொடுக்கிறார்.பின்னர் ஷாலினியை ரயிலில் கண்டதனால் ஷலினியைத்தேடி ரயில் நிலையத்தில் தவம்கிடக்கிறார்.நண்பர்க‌ளின் உதவியுடன் ஷாலினியைக்கண்டுபிடிக்கிறார். தன் காதலை ஷாலினியிடம் மாதவன் தெரிவிக்க முதலில் மறுத்த ஷாலினி பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார்.

  மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார் ஷாலினி. ஷாலினியின் படிப்புக்காகத்திருமணம் செய்யாது வேலைக்குப்போகிறார் அக்கா சுவர்ணமால்யா.செல்வ‌ந்த‌க்குடும்ப‌த்தில் உள்ள‌ மாத‌வ‌னின் விருப்ப‌த்துக்காக‌ ஷாலினியைப்பெண்பார்க்க‌ப்போகின்ற‌ன‌ர் மாத‌வ‌னின் பெற்றோர். மாத‌வ‌னின் த‌க‌ப்ப‌னின் அல‌ட்சிய‌ப்பேச்சு ஷாலினியின் த‌க‌ப்ப‌னுக்குப் பிடிக்கவில்லை. அத‌னால் திரும‌ண‌பேச்சு முறிவ‌டைகிற‌து.

   மாத‌வ‌னை ம‌ற‌க்க‌முடியாது ம‌ன‌ம் வ‌ருந்துகிறார் ஷாலினி. மாத‌வ‌னாலும் ஷாலினியை ம‌ற‌க்க‌முடிய‌வில்ல‌. த‌ம‌து திரும‌ண‌த்துக்குப்பெற்றோர் ஒப்புக்கொள்ள‌மாட்டார்க‌ள் என்ப‌தை உண‌ர்ந்த‌ மாத‌வ‌னும் ஷாலினியும்பெற்றோருக்குத்தெரியாது  பதிவுத்திரும‌ண‌ம் செய்ய‌முடிவு செய்கின்ற‌ன‌ர்.

   ந‌ண‌ப‌ர்களின் உத‌வியுட‌ன் கோயிலில் ப‌திவுத்திரும‌ண‌ம் செய்து மாலைம‌ற்றி த‌ம்ப‌திய‌ராகின்ற‌ன‌ர்.ஷாலினியின் அக்கா சுவ‌ர்ண‌மால்யாவும் இப்ப‌திவுத்திரும‌ண‌த்துக்கு ஒப்புத‌ல‌ளிக்கிறார்.ய்ஹிரும‌ண‌ம் முடிந்து இருவ‌ரும் த‌ம‌து வீட்டிலிருந்து வேலைக்குச்செல்கிற‌ன‌ர்.

  சுவ‌ர்ண‌‌மால்யாவுக்குத்திரும‌ண‌ ஏற்பா‌டு நடைபெறுகிற‌து.  மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க‌வ‌ருகின்ற‌ன‌ர்.பெண்ணைபிடித்த‌த‌னால் திரும‌ண‌த்துக்குச்ச‌ம்ம‌த‌ம் தெரிவிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவில் வேலைசெய்யும் த‌ன் ம‌க‌னுக்கு ஷாலினியைக்கொடுப்பீர்க‌ளா என‌ மாப்பிள்ளைவீ ட்டா‌ர்கேட்ட‌தும்  ஷாலினியின் த‌க‌ப்ப‌ன் ஒப்புக்கொள்கிறார். ஷாலினி அதிர்ச்சி அடைகிறார்.

    ஷாலினிக்குப்ப‌ட்டுச்சேலை உடுத்து மாப்பிள்ளைவீட்டார்முன்நிறுத்துகிறார் தாய்.க‌க‌ல‌வென‌ப்பேசிய‌ ஷாலினி அமைதியாகிறார். பெண்ணுக்கு வெட்க‌ம் வ‌ந்து விட்ட‌தென‌ அங்குள்ள‌வ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். ஷாலினியைத்திரும‌ண‌ம் செய்ய‌ விருப்ப‌ம் என‌ மாப்பிள்ளை கூறுகிறார். த‌ன‌க்குத்திரும‌ண‌ம் முடிந்துவிட்ட‌து என்ற‌ உண்மையைக்கூறுகின்றார் ஷாலினி.ஷாலினியின் ர‌க‌சிய‌ப்ப‌திவுத்திரும‌ண‌ம் ப‌ற்றிய‌ உண்மை தெரிந்த‌தால் சுவ‌ர்ண‌மால்ய‌வின் திரும‌ண‌ம் த‌டைப்ப‌டுகிற‌து.‌


  வீட்டை விட்டு வெளியேறிய‌ மாத‌வ‌னும் ஷாலினியும் த‌னிக்குடித்த‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர்.வைத்திய‌சாலையில் டொக்ட‌ராக‌க்க‌ட‌மையாற்றுகிறார் ஷாலினி. ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இணைந்து ஐ ரி கொம்ப‌‌னி ந‌ட‌த்துகிறார் மாத‌வ‌ன்.சின்ன‌ச் சின்ன‌ப்பிர‌ச்சினைக‌ளினால் குடும்ப‌த்தில் பூச‌ல் ஏற்ப‌டுகிற‌து.ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வு ஒற்றுமை மாறிமாறி வ‌ருகிற‌து.

  த‌க‌ப்ப‌னின் உட‌ல்நிலை பாதிக்க‌ப்ப‌ட்ட‌த‌னால்அவ‌ரைப்பார்க்க‌ப்போக‌வேண்டும் என்கிறார் ஷாலினி.மாத‌வ‌ன் அத‌ற்கு உட‌ன் ப‌ட‌வில்லை.ஷாலினியின் த‌க‌ப்ப‌ன் இற‌க்கிறார். ம‌ர‌ண‌வீட்டுக்குச்சென்ற‌ ஷாலினியை தாய் ஏற்றுக்கொள்ள‌வில்லை த்ம‌து இர‌க‌சிய‌த்திரும‌ண‌த்தால் நின்றுபோன‌சுவ‌ர்ண‌மால்யாவின் ந‌ட‌த்த‌ முஇய‌ற்சிசெய்து வெற்றிபெறுகிறார் மாத‌வ‌ன்.

    ம‌னை‌வி ஷாலினியை கூட்டி வ‌ருவ‌த‌ற்காக‌ ர‌யில் நிலைய‌ம் செல்கிறார் மாத‌வ‌ன். நெடுநேர‌மாக‌க்காத்திருந்தும் ஷாலினி வ‌ர‌வில்லை. வைத்திய‌சாலைக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தொலைபேசி அழைப்பெடுத்து ஷாலினியைப்ப‌ற்றிவிசாரிக்கிறார். வைத்திய‌சாலையிலிருந்து ஷாலினி புற‌ப்ப‌ட்டுவிட்ட‌தாக‌க்கூறுகின்ற‌ன‌ர்.


    மாத‌வ‌னும் ந‌ண்ப‌ர்க‌ளும் ஷாலினியைத்தேடுகின்ற‌ன‌ர். பொலிஸ் நிலைய‌த்தில் புகார் செய்கின்ற‌ன‌ர். பொலிஸார்  உரிய‌ந‌ட‌வ‌டிக்கை எடுக்காத‌த‌னால் மாத‌வ‌ன் ஆத்திர‌ப்ப‌டுகிறார்.
 

    விப‌த்தில்காய‌ம‌டைந்த‌ஷாலினிவைத்திய‌சாலையில்அனும‌திக்க‌ப்ப‌டுகிறார்ஷாலினியை மோதிவிட்டு ஓடித்த‌ப்புகிறார் குஷ்பு.சார‌தி அனும‌திப்ப‌த்திர‌ம் இன்றி ம‌னைவி செலுத்திய‌ வாக‌ன‌த்தில் அடிப‌ட்டபெண்ணைப்பார்க்க‌வைத்திய‌சாலைக்குச்சென்ற‌ ஐ.ஏ.எஸ் அதிகாரி அர‌விந்த‌சாமி காய‌ம‌டைந்த‌பெண் த‌ன் ம‌னைவி என‌க்கூறுகிறார்.பொலிஸுட‌ன் தொட‌ர்புகொண்டு உண்மையைக்கூறிய‌ அர‌விந்த‌சாமி ஷாலினியின் உற‌வின‌ரைத்தேடும்ப‌டி கூறுகிறார்.

 
    விப‌த்தில் காய‌ம‌டைந்த‌ ஷாலினி ஆப‌த்தான‌ நிலையிலிருப்ப‌தால் அர‌விந்த‌சாமியின்மீது ஆத்திர‌ம‌டைந்த‌ மாத‌வ‌ன்,த‌ன் ம‌னைவிக்கு ஏதும் ந‌ட‌ந்தால் அர‌விந்த‌சாமியின் உடிர் இருக்காது என‌ அச்சுறுத்துகிறார்.அப்போது என் க‌ண‌வ‌ன் மீது த‌ப்பு இல்லை. வாக‌ன‌த்தைச்செலுத்திய‌துநான்தான் என்கிறார் குஷ்பு.

   க‌ண‌வ‌னும் ம‌னைவியும் ஒருவ‌ரை ஒருவ‌ர் விட்டுக்கொடுக்காத‌ அந்த‌த்த‌ருண‌த்தை அறிந்து நெகிழ்ச்சிய‌டைகிறார் மாத‌வ‌ன். அந்த‌ நிமிட‌த்தில் மாத‌வ‌னின் ம‌ன‌ம் மாற்ற‌ம‌டைகிற‌து.ம‌னைவிக்காக‌ எல்லாவ‌ற்றையும் விட்டுக்கொடுப்பேன் என‌ உறுதி பூணூகிறார்.

  மாத‌வ‌ன்,ஷாலினி, சுவ‌ர்ண‌ம‌ல்யா,விவேக்,ஜெய‌சுதா,பாஸ்க‌ர்,ந‌ட‌ராஜ் ஆகியோ ந‌டித்த‌ன‌ர்.ஒலிப்ப‌துவு ஏ.எல்.ல‌க்ஷ்மி நாராய‌ண‌ன். க‌லை ராக‌வ‌ன். க‌தை செல்வ‌ராஜ் ,ம‌ணிர‌த்ன‌ம். ஒளீப்ப‌திவு  பி ஸ்ரீராம்.த‌யாரிப்பு,எழுத்து இய‌க்க‌ம் ம‌ணிர‌த்ன‌ம்.பாட‌ல்க‌ள் வைர‌முத்து. இசை ஏ.ஆர்.ர‌ஹ்மான்.


ஆஷாபோன்ஷே,ச‌ங்க‌ர்ம‌காதேவ‌ன்,சுவ‌ர்ண‌ல‌தா,எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணீய‌ம்,ச‌ர‌ண்ந‌வீன்,ஹ‌ரிக‌ர‌ன்,கிளிங்ட‌ன்,ஸ்ரீநிவாஸ்,சாத‌னாச‌ர்க்க‌ம் ஆகியோர் பாடிய‌பாட‌ல்க‌ள் புக‌ள் பெற்ற‌ன‌.
 
  எவ‌னோ ஒருவ‌ன்,செப்ரெம்ப‌ர்மாத‌ம்,காத‌ல் ச‌டுகுடு,ப‌ச்சைநிற‌மே ஆகியா பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்களின் ம‌ன‌தில் இட‌ம் பெற்ற‌ன‌.ஸ்ரீ நிவாஸ், சாத‌னா ச‌ர்க்க‌ம் ஆகியோர் பாடிய‌  சினேகித‌னே சினேகித‌னே ர‌க‌சிய‌ சினேகித‌னே ந்ன்ற‌ பாட‌லின்றும் காதில் ரீங்கார‌மிடுகிற‌து.

 ம‌ணிர‌த்தின‌த்தின் க‌ற்ப‌னையில் உருவான‌ க‌தை ந‌டிக‌ர் பிர‌சாந்தின் வாழ்க்கையில் உண்மையான‌து.
ர‌ம‌ணி
 மித்திர‌ன்
13_20/01/13
Thursday, January 17, 2013

திரைக்குவராதசங்கதி 54மந்திரி குமாரியின் பாடல்கள்அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். வாராய்நீவாராய்,உலவும்தென்றல் காற்றினிலே ஆகிய பாடல்கள் திருச்சி லோகநாதனைகண் முன்னால் நிறுத்தின. அதேபடத்தில்ரி.எம். சௌந்தரராஜன்ஒருபாடல்பாடிஇருந்தார்.அன்னம்இட்வீடட்டிலேகன்னக்கோல்சாத்தவேஎண்ணம்கொண்டபாவிகள்மண்ணாய்போகநேருமேஎன்றஅப்பாடல்ரி.எம்.சௌந்தரராஜனின்கணீரென்றகுர‌லைவெளிச்சம்போட்டுக்காட்டியது.ஜி.ராமநாதனின்இசையில்வெளியானஅப்படத்தின்பாடல்கள்அனைத்தும் மனதைவிட்டுநீங்காதுள்ளன.எம்.ஜி.ஆரின்படங்களுக்குஇசைஅமைத்தால்.அவர்ஒப்புக்கொண்டபின்னர்தான்பாடல்ஒலிப்பதிவுசெய்யப்படும்.ஜி.ராமநானின்திறமையில்நம்பிக்கைவைத்தஎம்.ஜி.ஆர்அவருடையஇசையமைப்பில்தலையிடுவதில்லை

டி.எம்.சௌந்ததரராஜனின்குரலில்மயங்கியஜி.ராமநாதன்அவரைக்கதாநாயகனாக்கிபட்டினத்தார்என்றபடத்தைஎடுத்தார்.பட்டினத்தார்படம்வளர்ந்துகொண்டிருக்கும்போதுகடனும்மறுபுறத்தில்வளர்ந்துகொண்டுசென்றது.தனதுகவலையை எம்.ஜி.ஆரிடம் கூறியஜி.μõமநாதன்தனக்குஒருபடம்நடித்துத்தரும்படி கேட்டார்.எம்.ஜி.ஆரும்அதற்குஒப்புதலளித்தார்.பாடல்காட்சியைக்கூறிபாடலைகொடுத்துவிட்டால்போதும்.அதன்பின்யாருடையதலையீட்டையும்ஜி.ராமநாதன்விரும்புவதில்லை.தயாரிப்பாளர்களின்தலையீடுஉள்ளஏ.வி.எம்.,ஜெமினிபோன்றபெரியநிறுவனங்களுக்குஅவர்பணியாற்றாததற்குஅதுவேகார‌ணம்என்றுஅவரைப்பற்றிநன்குஅறிந்தவர்கள் கூறியுள்ளனர்


.நடிகைமாதுரிதேவி,ரோஹினிஎன்றபடத்தைத்தயாரித்தார்.அப்படத்துக்குஇசைஅமைப்பாளராகஜி.ராமநாதனைஒப்பந்தம்செய்தார்.பாடல்களைஎழுதியவர்கவிஞர்மருதகாசி.இருவரும்யாருடையதலையீட்டையும்விரும்பாதவர்கள்.மாதுரிதேவிசிலபெங்காலிபாடல்களைகிராமபோனில்போட்டுக்காட்டிஅப்பாடல்போன்றுஇசைஅமைக்கவேண்டும்என்றுகூறினார்.அவருடையதொல்லைபொறுக்கமாட்டாதஜிராமநாதன்இடையிலேவிலகிவிட்டார்.ஜி.ராமநாதனின்வேண்டுகோளின்பேரில்கே.வி.மகாதேவன்அப்படத்துக்குஇசைஅமைத்தார்.பொன்முடிபடத்தின்நாயகன்நர‌சிம்மபார‌திக்கானபாடல்கள்அனைத்தையும்ஜிராமநாதன்பாடிஇருந்தார்.கே.வி.மகாதேவன்இசைஅமைத்தஅல்லிபெற்றபிள்ளை படத்தில் எசமான் பெற்ற செல்வமே என் சின்ன எசமானே என்ற பாடலையும் ஜி. ராமநாதன் பாடியுள்ளார்.பாடியதுடன் மட்டும் அவர் நின்று விடவில்øல. ஆயிர‌ம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி படத்தில் முனிவர் வேடத்தில்பாடி நடித்தார்

 சேலம்மார்டன்தியேட்டர்களில்சீர்காழிகோவிந்தராஜன்துணைநடிகராகஇருந்த‌போதுஅவருடையதிறமையைஇளம்கண்டஜிராமநாதன்சீர்காழிக்குஉற்சாகமூட்டினார்.நீசிறந்தபாடகனாகவருவாய்என்றுஅன்றேகூறிவிட்டார்.கோமதியின்காதலன்என்றபடத்தில்ஜிராமநாதனின்இசையில்சீர்காழிகோவிந்தராஜன் பாடல்களைப்பாடினார்.அவற்றில்வானமீதில்நீந்திஓடும்வெண்ணிலாவேநீவந்ததேனோஜன்னலுக்குள்வெண்ணிலாவேஎன்றபாடல்எத்தனைமுறைகேட்டாலும்திகட்டாதது.தபேலா,வயலின், சீர்காழியின் குர‌ல்மூன்றும் இணைந்த ஒரு அற்புதக் கலவை அப்பாடல்.
ரமணி
மித்திரன்    01/04/2007
115

Saturday, January 12, 2013

வாரிசுப்போட்டி முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியில் ஸ்டாலின் வெறுப்பில் அழகிரிதிராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய வாரிசுப் போட்டிக்கு முடிவுரை எழுதி விட்டார் கருணாநிதி.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை ஜாடை மாடையாகத் தெரிவித்து வந்த கருணாநிதி தனக்குப் பின் ஸ்டாலின் தான்  என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தலைவரான கருணாநிதியை அவ்வப்போது அசைத்து பார்ப்பவர் அவருடைய மகன் அழகிரி. தனது சாணக்கியத்தினால் அரசியல் எதிரிகளை வீழ்த்தும் கருணாநிதிக்கு வாரிசுச் சண்டை மிகப்பெரிய தலையிடியாக இருந்தது.. அழகிரி அரசியலில் காலடி எடுத்து வைத்ததும் கட்சியில் பிளவு ஆரம்பமாகி விட்டது.

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தலைவர் என அன்பழகன் உட்பட மூத்த தலைவர்கள் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த போது கருணாநிதி தான் கட்சியின் தலைவர் கருணாநிதிக்குப் பின் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போர்க் கொடி தூக்கினார் அழகிரி.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ வெளியேறிய பின்னர். தென் பகுதியில் கட்சியை வளர்ப்பதற்காக மதுரையைத் தேர்ந்தெடுத்தவர் அழகிரி. அழகிரியின் அதிரடியால் அவரது கைக்குள் அடங்கியது மதுரை.

முதுமையிலும் ஓய்வின்றி பணி செய்யும் கருணாநிதி தலைமைப் பொறுப்பை இறக்கி வைக்கப் பலமுறை முயன்றார். அவரின் முயற்சிகளுக்கு அழகிரி முட்டுக்கட்டைப் போட்டார் ஸ்டாலின் அழகிரி ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வரும் வேளையில் கனிமொழி அரசியல் பிரவேசம் செய்தார்.

ஸ்டாலின் அழகிரி ஆகியோரின் பின்னால் ஒரு கூட்டம் இருப்பது போல் கனிமொழியின் பின்னாலும் ஒரு கூட்டம் திரிந்தது. ஆனால் அவர்களினால் ஸ்டாலினுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.அழகிரியும் கனிமொழியும் இணைந்து ஸ்டாலினுக்கு எதிராக இயங்குவதாகச் செய்தி வந்தது. இந்த நிலையில்  ஸ்டாலினின் கை ஓங்கி  இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு உள்ளது. அழகிரியின் ஆதரவு மதுரையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆட்சி மாறிய பின்னர் அழகிரியுடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்களில் சிலர் மெதுவாகக் கழன்று விட்டனர்.

சென்னையில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றிய கருணாநிதி எனக்குப் பின் சமுதாயப் பணிகளை ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்றார். அடுத்த பத்து நிமிடங்களில் எனக்குப் பின் ஸ்டாலின்  தான் தலைவர் என்று இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டன. விஷமத்தனமான‌ இந்தப்பிரசாரம் அழகிரியைக் கொதிப்படைய வைத்தது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் தவிர எனையவர்கள் இந்தச் செய்தியால் மகிழ்ச்சியடைந்தனர்.

 திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களில் கூட்டம்சென்னையில் மறுநாள் நடைபெற்ற போது ஸ்டாலினின் தலைவர் செய்தி பற்றி பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி விளக்கமாக எடுத்துரைத்தார். எனக்குப் பின் சமுதாயப் பணியைத்தான் ஸ்டாலின் ஆற்றுவார் என்று விளக்கமளித்தார் கருணாநிதி .விடாக்கொண்டனாக பத்திரிகையாளர் ஒருவர் தி.மு.க முதன்மையான அரசியல் இயக்கம் அந்த இயக்கத்தில் உள்ள உங்களுக்குப் பின் ஸ்டாலின் என்று சொன்னால் அது தலைவர் என்று தானே அர்த்தம் என்று மடக்கினார். அந்தப் த்திரிகையாளர்களின் கேள்விக்குத் தம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினார் கருணாநிதி.சந்தர்ப்பம் கிடைத்தால் த‌லைவர் பெயருக்கு ஸ்டாலினின் பெயரை முன் மொழிவேன் என்று கூறினார் கருணாநிதி. பல வருடங்களாக இழுபறியில் இருந்த ஒரு பிரச்சினைக்கு கண நேரத்தில் முற்றுபுள்ளி வைத்தார் கருணாநிதி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகள் நடைபெறும் போதெல்லாம் தலைவர் பதவிக்கு ஸ்டாலினின் பெயரை கருணாநிதி அறிவிப்பார் என்ற பரபரப்பான செய்திகள் வெளிவரும். கருணாநிதியின் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை அருகில் நின்று பார்ப்பது போன்று பலர் கட்டுரை எழுதுவார்கள் அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் அப்போது ஏமாற்றமாகின. யாரும் எதிர்பாராத நிலையில் தனக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த அறிவிப்பை அழகிரி ரசிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவியில் அழகிரி ஒரு கண் வைத்துள்ளார். அதனால் தான் கருணாநிதி தான் கட்சியில் தலைவர் அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்குப் பின் என்ற பேச்சே வரக்கூடாது என்று கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறிய அழகிரி கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தனது ஆதரவாளர்களை முன்பொரு முறை தேர்தலில் நிறுத்தியவர் ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக அழகிரி காய் நகர்த்தும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

அழகிரியுடன் மதுரையைச் சேர்ந்த ஒரு சிலரே கட்சியை விட்டு வெளியேறக்கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக கட்ட சபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழகிரிக்கு ஆதரவு வழங்குவது சந்தேகம். அழகிரிக்கு ஆதரவானவர்களும் கருணாநிதியின் அறிவிப்பை மீறி செயல்படுவதற்கு தயங்குவார்கள். தன் மகன் துரை தயாநிதியை அரசியலில் தனது வாரிசாகக் கொண்டு வர விரும்பிய அழகிரிக்கு கருணாநிதியின் அறிவிப்பு கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

கட்சிக் கட்டுப்பாட்டைமீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். அழகிரிக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு இந்த அறிவிப்பு மறைமுக எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அடுத்த தலைவர் ஸ்டாலினின் தான் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு எதிராக அழகிரி மட்டும் தான் குரல் கொடுத்து வருகிறார். அழகிரியின் எதிர்ப்பினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை.

தந்தைக்குப் பின் நான் என்ற வாரிசு அரசியலை எதிர்பார்த்து அரசியல் களத்தில் ஸ்டாலின் குதிக்கவில்லை காங்கிரஸ் கட்சியின் மிசா சட்டமே அவரை அரசியலுக்குத் தள்ளியது. மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதே ஸ்டாலினின் அரசியல் திருப்புமுனையாக அமைந்தது.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் 14 வயதில் பிரசாரம் செய்தார். 20 வயதில் திராவிட முன்னேற்றக்கழகப் பொதுக்குழு உறுப்பினரானார். 1984 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பின்னர் நான்கு முறை தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975 ஆம் ஆண்டு முதன் முதலாக கைது செய்யப்பட்டார். அதன் பின் பல போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றார்.1996 ஆம் ஆண்டு சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்களில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூறிய போது அமைதியாக இருந்தார் கருணாநிதி. ஜெயலலிதா  அமுல்படுத்தியசட்டத்தினால்  சென்னை மேயர் பதவியைத் துறந்து சட்ட சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
2003 ஆம் ஆண்டு ஸ்டாலினைப் பொதுச் செயலாளராக்கினார். கருணாநிதி எம்.ஜி.ஆர். வகித்த பதவி என்பதனால்  ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.2009 ஆம் ஆண்டு துணை முதல்வரானார். இப்போது  அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று அறிவித்து வாரிசுப் போட்டிக்கு முடிவுரை எழுதியுள்ளார் கருணாநிதி.ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த அங்கீகாரம் ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது.
மெட்ரோநியூஸ் 11/01/13Saturday, January 5, 2013

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 45பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்வதுதண்டனைக்குரியகுற்றம். செல்வச்செருக்குமிக்க ஒருவர் தன் மகன் பொறியியலாளராகவரவேண்டும் என்பதற்காக படிப்பில் திறமைமிக்க ஒருவனை தன்மகனின் பெயரில் பொறியியல் கல்லூரியில் படிக்கவைத்து தனது ஆசையை நிறவேற்றும் படம்தான் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தின் கதை.

  பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஜீவாவும், ஸ்ரீகாந்து ஒரே அறையில் தங்குகின்றனர்.பழைய மாணவர்களின் நகைச்சுவைக்காட்சியுடன் ஆரம்பமான நகைச்சுவைக்காட்சிகள் படம் முடியும் வரை தொடர்கிறது.படம் முடிந்தபின்னும் காட்சிகள் அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன.பகிடிவதை செய்யும் பழைய மாணவர்கள், கல்லூரிக்குள் நுழையும் விஜயையும் பகிடிவதைக்கு அழைக்கிறார்கள்.எலக்றிக் ஷொக்கொடுத்து பகிடிவதயிலிருந்து தப்புகிறார் விஜய்.
 

  ஜீவவும்,ஸ்ரீகாந்தும் து குடும்பநிலமை காரமாகப்படித்துப்பட்டம் பெறவேண்டும் என ஷ்ரப்பட்டுப்படிக்கின்றர்.ஞ்சன் பாரி வேந்தன் என்றபெயரில் டிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

  விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோருடன் டிக்கும் த்யன் புத்தத்தில் உள்ளதை அப்படியே பாடமாக்கி ஒப்பிக்கிறார். ஆசிரியர்கள் அவரைப்பாராட்டுகிறார்கள்.புத்தத்தில் உள்ளதைப்பாடமாக்கி ஒப்பிப்பதை விஜய் விரும்பவிலலை.

  ல்லூரிமுதல்வர் த்யராஜின் ண்டிப்புமாணர்களைக்கக்கடையவைக்கிறது.த்யராஜின் ண்டிப்பினால் ஒருமாணன் ற்கொலை செய்கிறார்.விஜயுடன் சேரவேண்டாம் என்று ஜீவாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் புத்திமதி போன்று எச்சரிக்கை விடுக்கிறார் த்யராஜ்.

  த்யராஜின் ள் இலியானாவுக்கு திரும நிச்சதார்த்தம் டைபெறுகிறது.இலியானாவுக்கு நிச்சயிக்கப்ப மாப்பிள்ளை த்தாசை பிடித்தர் னிதரை திப்பதில்லை என்று கூறுகிறார் விஜய். இலியானா அதனை றுக்கிறார்.உண்மையை உணவைத்த விஜயைக்காதலிக்கிறார் இலியானா.

  ன்னாலான உதவியை எலோருக்கும் செய்கிறார் விஜய்.டிக்காமல் சுற்றித்திரிந்த விஜய் முதல் மாணனாகச்சித்தியடைகிறார்.ஷ்ரப்பட்டுப்படித்து குறைந்த புள்ளிகளுடன் சித்தியடைந்தர்கள்விஜயைப்பார்த்து அதிசப்படுகின்றர்.

  ல்லூரிவிழாவில் த்யன் பேசுவற்குத்தயாரித்த உரையில் விஜய் ன் திருவிளையாடலைச்செய்து ங்களை மாற்றிவிடுகிறார்.ற்பித்தார் என்பதை ற்பழித்தாரெனப்பாடமாக்கி உரையாற்றுகிறார் த்யன்.அந்த அவமானத்தால் பாதிக்கப்பட்ட த்யன்,உங்களை விட உயர்ந்த இடத்துக்கு ருவேன் என ம் செய்கிறார்.

த்யராஜின் நெருக்கடியினால் மாடியிலிருந்து குதித்துத்தற்கொலை செய்ய முயற்சி செய்த ஜீவாவின் கால் முறிகிறது.நினைவிழந்து ஆபத்தான் நிலையிலிருந்த ஜீவா ,விஜயின் முயற்சியால் உயிர் ப்புகிறார்.
விஜயின் ஆலோசனைப்படி ஜீவாவும்,ஸ்ரீகாந்தும் தாம் விரும்பிய துறைக்குச்செல்கின்றர்.

  ல்லூரி வாழ்க்கை முடிந்ததும் தான் ச்ந்ய்த த்தின் டி ண்பர்களைக்காணருகிறார் த்யன்.ஜீவாவையும் ஸ்ரீகாந்தையும் ந்தித்துத் ன் உயர் நிலையைத்தம்பட்டடிக்கிறார்.மூவரும் விஜயைத்த்தேடிச்செல்கின்றர்.விஜய் இருக்கும் ஊரை அறிந்து ஞ்சன் பாரிவேந்தனின் வீடு எங்கே என விசாரிக்கின்றர்.

  ஞ்சன் பாரிவேந்தனின் வீட்டுக்குச்சென்றபோது பாரியின் ப்பன் இறந்ததாக அறிகின்றர். பாரி எங்கே எனக்கேட்கின்றர். அங்கிருந்த ஒருவர் கைகாட்ட பாரியுன் பின்னால் நின்று பாரி எனக்கூப்பிடுகின்றர்.அப்போது பாரி திரும்பிப்பார்ககிறார். அங்கே அவர்கள் தேடிவந்த விஜய்க்குப்பதிலாக எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார்.ஸ்ரீகாந்த்,ஜீவா. த்யன் ஆகியமூவரும் அதிர்ச்சியடைகின்றர்.நான்தான் ஞ்சன் பாரிவேந்தன் என்கிறார்  எஸ்.ஜே.சூர்யா.
  
   சுவரிலே மாட்டியிருந்த புகைப்பம் அவர்களின் ந்தேகத்தைத்தீர்த்தது.ல்லூரியில் சித்தியடைந்த மாணர்கள் இருக்கும் அப்புகைப்பத்தில் முதல்வர் த்யராஜுக்கு அருகில் இருந்த விஜய்க்குப்பதிலாக எஸ்.ஜே.சூர்யாவின் ம் இணைக்கப்பட்டிருந்தது.ஏதோ ஒரு தில்லுமுல்லு டைபெற்றிருப்பதை அறிந்த மூவரும் வெளியேறுகின்றர்.

   மூவரும் றுநாள் எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டிற்குச்செல்கின்றர்.எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியைக்காட்டியதும் த்யன் த்தில் ஓடிவிடுகிறார்.எஸ்.ஜே.சூர்யவின் ப்பனின் அஸ்திக்கத்தை க்குழியினுள் போடப்போவதாக மிரட்டி உண்மையை அறிகின்றர்.

  பாடசாலயில் டிக்காத சிறுவன் விஜய் ரும்பகையில் க்கைச்சரியாகச்செய்ததை அறிந்த ஆசிரியர்,விஜயை இழுத்துச்சென்று எஸ்.ஜே.சூர்யாவின் ப்பனின் முன்னால் நிறுத்துகிறார்.ன் ன் முட்டாள் என்பதைத்தெரிந்த எஸ்.ஜே.சூர்யாவின் ப்பன் ன் ன் ஞ்சன் பாரிவேந்தன் எனும் பெயரில் விஜயைப்படிக்க வைக்கிறார்.எஸ்.ஜே.சூர்யாவின் பெயரில் ங்களுடன் டித்தது விஜய் என்பதை அறிகின்றர்.விஜய் இருக்கும் இடத்தைத்தெரிந்துகொண்டு அஸ்திக்கத்தைக்கொடுத்துவிட்டு வெளியேறுகின்றர். அஸ்திக்கத்தினுள் அஸ்தி இல்லாததைக்கண்டு அதிர்ச்சியடைகிறார். எஸ்.ஜே.சூர்யா. அஸ்திக்கம் மாறிய உண்மையை வேலைக்காரன் மூலம் அறிகிறார் சூர்யா
    
   இலியானாவுக்குத்திருமம் டைபெறுவதை  அறிந்த மூவரும் திருமவீட்டுக்குச்சென்று திருமத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துச்செல்கின்றர்.பாடசாலையின் ஆசிரியராக் விஜய் இருப்பதை அறிகின்றர்.பாடசாலையின் விஞ்ஞான உபங்களைப்பார்த்துவிஜய் அங்கு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றர்.விஜயைக்கண்ட ஸ்ரீகாந்த் ஜீவா இலியானா ஆகியமூவரும் கிழ்ச்சியடைகின்றர்.


 தத்தில் தான் வெற்றி பெற்றதாக இறுமாப்படைகிறார் த்யன்.கொசக்கி புகழ் எனும் கோடீஸ்வனுடன் ஒப்பந்தம்செய்வற்காக இந்தியாவுக்குவந்ததாகக்கூறிய த்யன் கொசக்கி புகழைத்தேடிச்செல்கிறார்.தான் தேடிவந்த கொசக்கி புகழ் விஜய் என்பதை அறிந்த த்யன் ன்னிப்புக்கேட்கிறார்.


  தை, திரக்க்கதை ங்கர்  ன் கார்க்கி.ரா னோஜ் ம்ஷா எடிட்டிங் அந்தோனி டிப்புஇசை ரிஸ் ஜெயராஜ் இயக்கம் ங்கர்.ஆல் இஸ்வெல்  என் பிரண்டைப்போலஹாட்டிலே ற்றரி,இருக்கானா இடுப்பிருக்கானாஅஸ்க்லஸ்கா எந்தன் ண்ணே ஆகிய பாடல்கள் சிகர்களின் தைக்கர்ந்த.

  ராஜி ஹிரானி சேதன் த் எழுதிய ஃபை பாயிண்ட் ம் ஒன் வாட் நாட் டுடு அட் டி எனும் நாவலைத்தழுவி ஹிந்தியில்வெளிகி வெற்றிபெற்ற‌‌ திரீ இடியட்ஸ்  மே மிழில் ண்பன் எனும் பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.

 விஜய் ம் எனும் எதுவித அடையாளமும் இல்லாதம்.ஆர்ப்பாட்ட அறிமுகம்,ஞ்ச் க் எதிவும் இல்லை.டிப்பு வாழ்க்கையை ப்படுத்தவேண்டும் வேலை பெறுவற்காகப்படிக்கக்கூடாதுஎன்றத்துவத்தை விளக்கும்பம்.சித்தியடைந்தர்களை ஒரேமாதிரிப்பார்கவேண்டும் முதலிடம் டைசி இடம் என்ற பேதம் இருக்கக்கூடாது என்பதை உணர்த்தியம்.
 ங்கர் இயக்கிய முதலாவது ரீமேக்பம்.விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,த்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,த்யன் ஆகிய பிரங்களின் பாத்திரங்கள் அனைத்தும்முக்கியத்துவமானவை.த்யனின் டிப்பு மிக அபாரம்.

விஜய்,சூர்யா ஆகியோர் ட்சிப்பதாக முதலில் அறிவிக்கப்பது.விஜய்க்காகக்கதை எழுதிக்காத்திருந்து ஏமாந்த எஸ்.ஜே.சூர்யா ழசை ந்து விஜயுடன் இணந்து டித்தார்.டத்தைப்பார்த்துமுடிந்ததும் ஆல் இஸ் வெல் எனச்சொல்லவைத்துள்ளார் இயக்குநர் ங்கர்.