Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

Tuesday, July 1, 2025

குற்றவாளிக்கூண்டில் நெதன்யாகு

அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில்  இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

நெதன்யாகு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்  இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள்  இஸ்ரேலிலும்  உள்ளனர். நெதன்யாகுவின்   அமைச்சரவையிலேயே அவரை எதிர்ப்பவர்கள்  இருக்கிறார்கள். 

"பீபீ' என   அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை,  பின்னார் 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின்  பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல்  இன்ஸுவரை இஸ்ரேலின்  பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு

 இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.

2023 ஆம் ஆண்டு காஸாவில்  ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகுவுக்கு எதிரான  ஊழல் குற்றச் சாட்டு வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நெதன்யாகு  குற்றம் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில் வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.

அன்றைய இஸ்ரேலிய  அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இலஞ்சம், மோசடி, நம்பிக்கை மீற  ஆகிய மூன்று வழக்குகள் நெதன்யாகுவுக்கு எதிராகப்  பதியப்பட்டன.

இஸ்ரேலிய வரலாற்றின்  முதன் முதலாக குற்றவியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.

இலஞ்சக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும்,   மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று  வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

 குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார். 

நெதன்யாகு பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.  ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால்  விசாரணை தாமதமாகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராக   போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச விசாரணை நடைபெற  வேண்டும் என்ற கருத்தும்  தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.

நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப்  அறிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில்  எழுந்துள்ளன.

இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை   

Wednesday, June 18, 2025

வீழ்ச்சியடைகிறது இலங்கையின் பொருளாதாரம்

இஸ்ரேல் ஈரான்  போர்  உலகில்  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  யுத்தம் வெடித்த அடுத்த நொடியே  எண்ணெய்  விலை எகிறியது. அதன் தாக்கம்  இலங்கையில் இன்னமும் ஏற்படவில்லை , இது எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியாது . தனது பாதுகாப்புக்காக  ஈரான்  மீது தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல் கூறுகிறது.

 ஈரானின் அணு ஆயுத  உலைகள், விஞ்ஞானிகள்,  தளபதிகள் இஸ்ரேலின்  இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் கையைக்  கட்டிக்கொண்டு இருக்கவில்லை.  ஈரானின் பதில்தாக்குதலால்   இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் பற்றி எரிகின்றன இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம்  இறங்கி உள்ளது.  ஈரானுக்கு ட்ரம்ப்  எச்ச்சரிக்க விடுத்துள்ளார்.

ரஷ்யா,சீனா, அரபு நாடுகள்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   ஈரான், இஸ்ரேல் யுத்தத்தால் வல்லரசுகள்  இரண்டாகி உள்ளன.

  மோதல் அதிகரித்தால் எரிபொருள் விநியோகம், தேயிலை ஏற்றுமதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான துறைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எரிபொருள், தேயிலை துறைகளில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை.  நாளடைவில் பாதிப்பு அதிகமாகலாம்

 இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 20,000 இலங்கையர்களின் பாதுகாப்பு , தெஹ்ரானில் வசிக்கும் சுமார் 50 பேரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய்,தங்கத்தின் விலை உயர்ந்தது

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியாகும் நாடுகளில் ஈரான் முக்கியமானது.  இந்த நிலை தொடர்ந்தால்  கிழக்கு ஆசியாவில் தேயிலை ஏற்றுமதி  வீழ்ச்சியடையும் அபாயம்  உள்ளது. .

சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் , ஹைஃபா ஆகிய நகரங்களில்  வசிபதாக  இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


 விவசாயம். பராமரிப்பாளர்,  கட்டுமானத் துறை, ஹோட்டல்கள்  உணவகங்கள் தொழிற்சாலை ஆகியவற்ரில் இங்கையர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

 மோதல் தீவிரமானதால் இலங்கைகுத் திரும்பும்  கோரிக்கையை எவரும் விடுக்கவில்லை,  இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள 10 இலங்கையர்கள் அபுதாபியில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள  இலங்கைத் தூதரகம் உதவி செய்கிறது. 

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லத்தயாரான 600 இலங்கை யரின்  பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் தற்போது மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். கட்டார் , சவுதி அரேபியா, குவைத் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஆகியவை அனைத்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 80 சதவீதத்திர் உள்ளனர்.

  கடந்த 20 ஆண்டுகளில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் நமது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் சராசரியாக 80 சதவீதத்தை செலுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 6.5 பில்லியன் டொலரை எட்டியது. இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள்.   2025 ஏப்ரலில் 646.10 மில்லியன் அமெரிக்க டொலராக  இருந்த இலங்கையின் பண அனுப்பீடுகள் மே மாதத்தில் 641.70 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

. இந்த முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே அவை நமது நாட்டிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலில் அதிக சதவீதத்தை வழங்குகின்றன. எனவே, அதன் அந்நியச் செலாவணியின் இந்த முக்கிய ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது இலங்கையின்  கட்டாயமாகும்.

  

Tuesday, February 11, 2025

இடம் பெயர்ந்த காஸா மக்களுக்கு சவால்விடும் குளிர்காலப் புயல்

 காஸா பகுதியில் ஒரு பேரழிவு தரும் குளிர்காலப் புயல் வீசி வருகிறது, இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் பலவீனமான கூடாரங்கள், புயல், குளிர் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவை.  காஸா மக்களுக்கு, புயல் என்பது வெறும் இயற்கையின் செயல் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பிளந்த பேரழிவுகளின் வரிசையில் ஒரு கூடுதல் சோகம்.

பராக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஓம் அகமது அல்-ரம்லி, புயல் தனது கூடாரத்தை நாசமாக்கிய பிறகு, தனது உடைமைகளைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடினார்.

 பாலஸ்தீன அரசியல்வாதிகள்  காஸாவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி சண்டையிடுகிறார்கள், ஆனால் இந்தப் போருக்கான இறுதி விலையை செலுத்துவது மக்கள்தான்.நிலம் அடர்ந்த சேற்றின் சேற்றாக மாறுவதால் நிலைமை மோசமடைகிறது, இடம்பெயர்ந்தவர்களை சிக்க வைத்து, தப்பிக்கவோ அல்லது உதவி பெறவோ தடையாகிறது.

இடைவிடாத மழையும், பலத்த காற்றும் முகாம்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு புகலிடம் இல்லை.எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை சூடாக வைத்திருக்க எந்த வழியையும் இழக்கச் செய்துள்ளது. ஈரப்பதமான மற்றும் குளிரான சூழ்நிலையில் வாழ்வதால், மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.

வடக்கு  காஸாவில், நிலைமை அதே அளவுக்கு மோசமாக உள்ளது. ஜனவரியில் ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்திரத்தன்மையின் சாயல் கிடைக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள், இடிபாடுகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை.

வீதிகள், வீடுகள் ,உள்கட்டமைப்புகள் என்பன  அழிக்கப்பட்டுள்ளன, மேலும் உயிர்வாழ்வது அன்றாடப் போராட்டமாகிவிட்டது.

தாங்க முடியாத இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மனிதாபிமான அமைப்புகளுக்கு அவசர துயர அழைப்புகளை அனுப்பி, இன்னும் உறுதியான கூடாரங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் சிறிதளவு நிவாரணத்தை வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் இந்த அழைப்புகளை எதிரொலித்து, காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.சுகாதார சேவைகள் பற்றாக்குறையின் மத்தியில் குளிர் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்படி,  காஸாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோதலால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் அடைக்கலம் தேடும் முகாம்களில் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் எதுவும் இல்லை. சுத்தமான தண்ணீர், வெப்பமூட்டும் உபகரணங்கள் , அத்தியாவசிய மருந்துகள் என்பன  பற்றாக்குறையாக உள்ளன.

 ஊர்மிளா

Sunday, January 5, 2025

விடை பெற்ற 2024 விட்டுச் சென்ற வடுக்கள்

பழையன கழிதலும்  புதியன புகுதலும் எனப் பொதுவாகச் சொல்வார்கள்.ஒரு வருடம்  முடிவடைந்து  புதிய வருடம் ஆரம்பிக்கும்போது விடை பெற்ற ஆண்டு விட்டுச் சென்ற வடுக்களை மறக்க முடியாது.

 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய அரசியலில் பல முக்கியமான சம்பவங்கள், திருப்பங்கள் நடந்துள்ளன.  காஸா போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உயிரைழப்பு,சொத்துசேதம், இடப்பெயர்வு என்பன காஸாவைக் கலங்கடிக்கின்றன. பங்களாதேஷ்,ஈராக் நாட்டுத் தலைவர்கள்  தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். தனது  நாட்டு எதிரிகள் அனைவரையும் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.சிலநாடுகளின் ஆட்சி  கவிழ்க்கப்பட்டது.

லெபனானின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேல், ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையேயான போரில்  ஹமாஸுக்கு உதவிய  லெபனனின் மீது  இஸ்ரேல் மோசமான தாக்குதல்களை நடத்தியது. அதில் உச்சக்கட்டமாக பொஸ்பரஸ் குண்டுகளை  இஸ்ரேல் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.  வெள்ளை பாஸ்பரஸ் மக்களையும் பொருட்களையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. நொடியில் தீயை இது உருவாக்கும். அதேபோல் நச்சுவாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக மரணத்தை கொடுக்காமல் சில நாட்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பூச்சு கொல்லியாக இது பயன்படுத்தப்படும் இதை குண்டாக மாற்றி பயன்படுத்தும்போது  அது உயிரை கொடுமைப்படுத்தி கொல்லக்கூடியது.

ஜேர்மனியில் ஆட்சி கவிழ்ந்தது

ஜேர்மனிய   பாராளுமன்றத்தில்  ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ்க்கு எதிரான  நடந்த‌நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் ஜேர்மனி அரசாங்கம் கவிழ்ந்தது. பிரான்ஸ் அரசு கவிழ்ந்த சில நாட்களில் ஜேர்மனி அரசு கவிழ்ந்துள்ளது. ஐரோப்பா நாடுகள் அண்டை நாடுகள் இடையே இந்த விவாகரங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 இந்தியா, கனடா உறவில்  விரிசல்

இந்தியாவால்  தேடப்படும் நபரான சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின்   பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

 சீக்கியத் தலைவரை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின்னணியில் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக ட்ரூ டோ  தெரிவித்துள்ளார்.

இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.

அந்தக் கொலைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என  இந்தியா தெரிவித்ததை கனடா நம்பத் தயாராக  இல்லை.


கேள்விக்குறியான கனடா பிரதமரின் எதிர்காலம்

 கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள் மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.

  நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த சில வாரங்களில் இதனால் ஜஸ்டின் இராஜினாமா செய்யலாம். கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் எதிர்காலம் குறித்து ட்ரூடோவுடன் ஆலோசனை செய்ததில்.. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதி நிலைமையில் நிலவும் சிக்கல்கள் காரணமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், ட்ரூடோ மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார்

இஸ்ரேலை மிரட்டிய ஹமாஸ் தலைவர் கொலை

 ஹமாஸ் படையின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த 3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் அங்கு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் அங்குக் கொல்லப்பட்டார். பலமுறை குறிவைக்கப்பட்டு தப்பியவர் சின்வார்.

 உயிர்களைக் காவு வாங்கிய போர்

 இஸ்ரேல் - ஹமாஸ் ‍ இடையிலான மோதல் உச்சம் அடைந்தது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின்  தாக்குதல் காஸாவுக்கு வெளியே  ஈரான்,லெபனான், ஏமன் ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்தது.

Sunday, October 6, 2024

மத்தியகிழக்கில் மினி உலகப்போர்


 

மத்தியகிழக்கில் மினி உலகப்போர்

ஆயுதங்களைப்  பரிசீலுக்கும்

அறிவிக்கப்படாத  உலகப் போர் 

இஸ்ரேல், பாலஸ்தீன   மோதலாக  உருவெடுத்த மத்தியகிழக்கு யுத்தம்  இன்று இஸ்ரேல், ஹமாஸ், இஸ்ரேல் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் ஹூதி  யுத்தமாக  உருவெடுத்துள்ளாது. இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தும்  ஹிஸ்புல்லா,ஹமாஸ், ஹூதி ஆகியவற்றுக்கு உதவும் லெபனான்,சிரியா,ஏமன் ஆகிய நாடுகளின்  மீது இஸ்ரேல்  போர் தொடுத்துள்ளது.

கடந்த    வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸவில் ஹமாஸ்  அதிரடித்த தாக்குதல் நடத்தி இஸ்ரேலை நிலை குலைய வைத்தது. ஹமாஸைப் பழிவாங்க  இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. ஹமாஸுக்கு ஆதர்வாக ஹிஸ்புல்லா  இஸ்ரேல் மீத் தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா  இயங்குவதால் இஸ்ரேலின் பார்வை  லெபனனின் மீதுவிழுந்தது.

ஹிஸ்புல்லாவின் தலைவர்களிக் குறிவைத்து நடத்திய தாக்குதல்கள்  வெற்றியளித்தன. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உட்பட  ஏழு முக்கிய தலைவர்கள்  இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகினர்.

 இஸ்ரேலியத்  தரைப்படைகள் லெபனானுக்குள் அணிவகுத்துச் சென்றபோது, ​​அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் ஆதரவுடன் பெரிய அளவிலான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது.

ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலையானது, குழுவை இப்போதைக்கு இழுத்துச் செல்லும் ஒரு தந்திரோபாய சாதனையாகும், மேலும் அது நீண்ட காலத்திற்கு முடக்கப்படலாம், ஆனால் லெபனானுக்குள் இருந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை அகற்றும் ஒரு மூலோபாய சாதனை

இஸ்ரேல் பல தலைமுறை போராளித் தலைவர்களை குறிவைத்துள்ளது, அவர்களின் அமைப்புகள் படுகொலைகளுக்குப் பிறகு தப்பிப்பிழைத்தன அல்லது உருவாகின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெஹ்ரானில் கொல்லப்பட்ட நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இருவரும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பின்னர் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தலைவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஹிஸ்புல்லாஹ் தளபதிகளின் முழுத் தொகுதிகளையும் அகற்றி, குறிப்பாக பரந்த அளவில் இருந்தன. ஆனால் சேதம் அதன் தற்போதைய வடிவத்தில் குழுவிற்கு ஆபத்தானதாக நிரூபித்தாலும், அதன் சரிவு அதிக பாதுகாப்பிற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது.

1980 களின் முற்பகுதியில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஹிஸ்புல்லா அங்கு பலமானது.. 

தொலைதூர வான்வழித் தாக்குதல்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உளவு போன்றவற்றில் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானைக் காட்டிலும் இஸ்ரேல்  அதிக நன்மையடைந்துள்ளது.

ஜோர்டான் இஸ்ரேலுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கியுள்ளது மற்றும் ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் இராணுவ கூட்டணியில் சேர்ந்தது.

இஸ்ரேல் லெபனானுக்குள் நுழையத் தயாராகும் போது, ​​ஜோர்டானின் வெளியுறவு மந்திரி அய்மன் சஃபாடி, தனது அண்டை நாடு பாதுகாப்பு அல்லது இராணுவ மேலாதிக்கத்தை நாடுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.  

ஹிஸ்புல்லா,ஹமாஸ்,ஹூதி  ஆகிய குழுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. லெபனானை  அச்சப்படுத்திய இஸ்ரேலின்  பார்வை ஈரானின் மீது விழுந்துள்ளது.ஈரானின் அணு உலைகள்  இரானின் குறியாக  இருக்கலாம் என  உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.அணு உலைகளைத் தாக்க அனுமதிக்கப்போவதில்லை என  அமெரிக்கா கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு இராணுவ, பொருளாதார  தளங்கள் உட்பட பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. ஆனால் அனைத்தும் எச்சரிக்கையுடன் வருகின்றன. ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலிலும்  இஸ்ரேலின் இலக்காக இருக்கலாம்.

ஈரான்   பலவீனமான வான் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது  இஸ்ரேலிய ஏவுகணைகள் அல்லது விமானப்படை குண்டுவீச்சைத் தடுக்க  அது போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . பின்னர்,  ஈரானின் முந்தைய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல்  பதிலளித்து, இராணுவ-தொழில்துறை நகரமான இஸ்பஹானில் ஈரானின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது, ரஷ்ய S-300. இது இஸ்ரேலின் திறன் என்ன என்பதை ஈரானுக்கு வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக்குதல்.


ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் செவ்வாயன்று இஸ்ரேல் மீதான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒரு பிரதிபலிப்பாகக் கூறப்படுகிறது , பிடென் இந்த பிரச்சினை வியாழன் விவாதத்தில் இருந்ததைக் குறிக்கிறது. சில மதிப்பீடுகளின்படி, 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் எண்ணெய் முனையம்தான் அதிகம் குறிப்பிடப்பட்ட இலக்கு, இதில் பெரும்பாலானவை சீனாவுக்கானவை. மற்ற முக்கிய வசதிகளில் ஈரானின் உள்நாட்டு எண்ணெய் தேவைகளில் கணிசமான விகிதத்தை கையாளும் ஈராக் எல்லைக்கு அருகில் உள்ள அபாடான் சுத்திகரிப்பு நிலையம் அடங்கும்.

இஸ்ரேல் ஒரு வித்தியாசமான தந்திரத்தை எடுக்கலாம், ஈரானில் இலக்கு கொலைகளை அதன் திட்டத்தை விரிவுபடுத்தலாம். ஜூலை இறுதியில் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதன் மூலம் தெஹ்ரானில் படுகொலைகளை நடத்த முடியும் என்பதை அது ஏற்கனவே காட்டியுள்ளது . நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து ஒன்றை அது வெடிக்கச் செய்தது.

2020 நவம்பரில் ரிமோட் கண்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே உட்பட பல ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது . எவ்வாறாயினும், இஸ்ரேல் வெளிப்படையான ஏவுகணைத் தாக்குதலுக்கு குறைந்த முக்கிய பதிலைப் பரிசீலிப்பதாகத் தெரியவில்லை,

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானை தாக்கி வருகிறது. ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது சாதாரண தாக்குதல் கிடையாது. இஸ்ரேலின் ஆணிவேரையே அசைத்து பார்த்த தாக்குதல். நாங்கள் 99% ஏவுகணைகளை மறித்துவிட்டோம்.. ஈரான் எங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறலாம். ஆனால் ஈரானின் 80% ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கை தாக்கி உள்ளதாகவே உலக போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்.. அந்த பதிலடி போரை கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்.. இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது.. அது உலகப்போரையே உருவாக்கும்.

 இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இரண்டு போர்களையும் கணக்கிட்டால் 10 நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளன‌. இதெல்லாம் உலகப்போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது

  உலகப்போருக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போர் தொடங்குவதற்கான சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்க தொடங்கி உள்ளனர்.உலக அளவில் புதிய வேர்ல்டு ஆர்டர் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன. வேர்ல்டு ஆர்டர் என்பது தற்போது இருக்கும் உலக நிலை.  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம்., ஆசியாவில் சீனா - இந்தியாவின் வலிமை, சீனா - ரஷ்யாவின் நட்பு இதை எல்லாம் வேர்ல்டு ஆர்டர் என்பார்கள். 

இதுதான் உலகப்போர் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் போர், இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர், உக்ரைன் ரஷ்யா போர், தென் கொரியா வடகொரியா போர் காரணமாக உலகப் போர் மூளும் அபாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் பல நாடுகளில் பல்வேறு வகையான மோதல்களுக்கு வழிவகுக்கும் அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கும் அப்பால் போரை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 இதில் போருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக சிறிய உலகபோராக இல்லாமல் இது பெரிய உலகபோராக மாறலாம். பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது. 

வர்மா

6/10/24