Showing posts with label ரோகித். Show all posts
Showing posts with label ரோகித். Show all posts

Thursday, February 2, 2023

3 வருடங்களின் பின்னர் 30 ஆவது சதம்



  இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இந்தோரில் நடைபெற்ற மூன்ராஅவ்து  ஒருநாள்  போட்டியில்  83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை ரோகித் சர்மா செய்தார்.  இந்திய அணியில் தொடக்க வீரர்களான கப்டன் ரோகித் – கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 20212 0 ஓட்டங்கள்  எடுத்தனர். மேலும், இருவருமே சதம் விளாசி மிரட்டினர். ரோகித் 101 ஓட்டங்களிலும், கில் 112ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

இந்த போட்டியில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கப்டன் ரோகித் சர்மா  மூன்று வருடங்களின்  பின்னர்சதம் அடித்து மிரட்டினார் ரோகித் கடைசியாக  2020  ஆம் ஆண்டு  ஜனவரி 19 ஆம் திகதி  பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில்   சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது தான் அவர் 3 ஆண்டுகளுக்குப்பிறகு தனது 30-வது ஒருநாள் சதத்தை விளாசி இருக்கிறார். 

இந்த அபார சதம் மூலம் ரோகித், அவுஸ்திரேலியாவின் முன்னாள் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் மூன்றாவது அதிக சதங்களை சமன் செய்தார். மேலும், தொடக்க ஆட்டக்காரராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்கள் அடித்த சனத் ஜெயசூர்யாவை (28 சதம்) சமன் செய்தார்

  இதே இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிசம்பர் 2017ல், இலங்கைக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் தனது அதிவேக ரி20 சதத்தையும்

 ரோகித்பதிவு செய்தார்.ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார். மொத்தமாக 85 பந்துகளை எதிர்கொண்டு இருந்த ரோகித் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 101 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள். 

சச்சின் டெண்டுல்கர் – 452 இன்னிங்ஸில் – 49 சதங்கள்

விராட் கோலி – 261 இன்னிங்ஸில் – 46 சதங்கள்

ரோகித் சர்மா – 30 சதங்கள் – 234 இன்னிங்ஸ்

ரிக்கி பொண்டிங் 365 இன்னிங்ஸ்களில் – 30 சதங்கள்

சனத் ஜயசூர்யா – 433 இன்னிங்ஸ்களில் – 28 சதங்கள்

 

Monday, November 7, 2022

ரோஹித்தின் குட்டி ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபா அபராதம்


 மெல்போர்ன் ட் மைதானத்தில் ரி20 உலகக்  கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. ஸிம்பாப்ப்வேகு எதிராக விளையாடியைந்திய     71 ஓட்டகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  இந்த போட்டியின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மெல்போர்ன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் தற்போது இணையத்தில் வீடியோவாகவும், செய்திகளாகவும் ரசிகர்கள் மத்தியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இந்திய அணி  வெற்றிக்கு அருகில் சென்றபோது போட்டி சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த எந்த ஒரு விவரமும் ஒளிபரப்பப்படவில்லை.

ஆனால் அந்த நேரத்தின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.   மிகவும் இளம் வயதே ஆன ரசிகர் ஒருவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான அதிகாரிகளை மீறி ரோகித் சர்மாவை பார்க்க கையில் இந்திய கொடியுடன் அவரை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்த பாதுகாபு  அதிகாரிகள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரோஹித் சர்மா அந்த ரசிகரை அடிக்க வேண்டாம், திட்டவும் வேண்டாம் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். முஹமது ஷமியும் பாதுகாப்பு அதிகாரியிடம் அவரை பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் வேறு ஏதும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அப்படி அவர்கள் கூட்டிக்கொண்டு போகும்போதே ரசிகரை நோக்கி ரோஹித் சர்மா சில வார்த்தைகளையும் பேசினார்.

அந்த சிறு வயது ரசிகருக்கு இந்திய மதிப்பில் 6.5 லட்சம் அபராதம் விதித்து மெல்போன் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என அனைத்துமே முக்கியம். அதனால் மைதானங்களில் அத்துமீறி நுழைப்பவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட வேளையில் அந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த ரசிகருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.