Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, November 18, 2025

கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம்


 கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி 

காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம் 

உலகநாயகன் கமலும், சூப்பர் ஸ்டார் ர‌ஜினியும் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் சூப்பரான வெற்ரிப் படங்கள் 1957 ஆம் ஆண்டு வெளியான அபூரவராகங்கள் படத்தில்  சிறிய வேடத்தில்  ரஜினி அறிமுகமானார்.

ஒரு சில காட்சிகளில்  மட்டும்  நடித்த ரஜினி  பின்னர் கமலுக்கு  இணையாகவும்  போட்டியாளராகவும் மாறினார். கமல், ரஜினி இருவரும் உச்சத்தித் தொட்ட நேரம் 13 படங்களில் மட்டும் நடித்து விட்டு இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என அறிவித்தனர். இவர்களின்  பிரிவு  ரசிகர்களை வருத்தப்பட  வைத்தது.  பின்னர் ரசிகர்கள்  மெளனமாக அதனி ஏற்றுக்கொண்டனர்.

 கமல், ரஜினி  இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை என்றாலும். அவர்களின் நட்பு பலமாக நீடித்தது.  ஆனாலும், இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள்.  சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்  முயற்சி செய்தார்கள். நட்பு வேறு நடிப்பு  வேறு என் பதில் இருவரும்  உறுதியாக இருந்தார்கள்.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கமலஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நஷனல் நிறுவனம் வெறியிட்டச் அரிவிப்பு  இந்தியத் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினியின் 173 ஆவது படத்தை ராஜ்கமல் இன்ரர் நஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர் சி இயக்குவார் என்ற‌ அறிவிப்பு திரை உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியி 173 ஆவது படம் வெளியாகும். அந்தப் படத்தில் படத்தில் கமல் நடிக்கவில்லை. தக்லைவ் படத்தின் மூலம் கமலுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே கம‌லுக்கு உதவி செய்ய ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சியில் திரை உலகம் மூழ்கியது. இரண்டு நாட்களாக இந்தச் செய்தி தீயாக வலம் வந்தது.

பழைய  இயக்குநர்களைக் கைவிட்டு, புதிய இயக்குநர்களை நாடிச் செல்லும் ரஜினி சுந்தர் சியின்  இயக்கத்தில் நடிக்க இருப்பது பேசு பொருளானது. நடிகரைப் ப் அற்றிக் கவலைப் படாமல் திரைக்கதையை நம்பிப் படம் எடுப்பவர்களில் சுந்தர் சியும் ஒருவர். சிரிப்பு, சென்ரிமென்ற்  போன்ரவற்றால் நசிகர்களைக் கட்டி வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர் சுந்தர் சி

அருணசலம் என்ற பிரமாண்டமான வெற்றிப் படத்தை  ரஜினிக்குக் கொடுத்தவர் சுந்தர் சி.  ரஜினியும் சுந்தர் சி யும் ஏற்கெனவே  இணைந்து  வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்கள்.

அன்பே சிவம் என்ற காவியத்தை கமலுகுக் கொடுத்தவர் சுந்தர் சி. கமலுடன் மாதவனும் அன்பே சிவம் படத்தில் நடித்தார். 

கமல், ரஜினி, சுந்தர் சி ஆகிய மூவரும் இணைந்து  பலமுறை  பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இந்த அறிவிப்பு  வெளியாகி இருக்கும். ஆகையால்  2026 ஆம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தார்கள்.

சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புப்பு  பேரிடியாக வந்தது சுந்தர் சியின்  அறிவிப்பு.

 தவிர்க்க முடியாத காரணங்காளைனால் ரஜினியின் 173 ஆவது படத்தில் இருந்து கனத்த  இதயத்துடன் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார். 

கமலின் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது தனது  வாழ்வில் மிகப்பெரிய கனவு என வும் சுந்தர் சி தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்த எல்லாம் சில நேரங்களில் நடப்பதில்லை. நாம் மூவரும்  பேசிக்கொண்டது என் வாழ்க்கையில் மற‌க்க முடியாத அனுபவம் எனவும் சுந்தர் சி தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் என்ன நடந்தது என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

சுந்தர் சி இயக்குவதை ரஜினி ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. கமலின் கட்டாயத்தினால்தான் ரஜினி ஒப்புக்கொண்டார் என சிலர் சொன்னார்கள்.  ஊகங்களும் யூகங்களும்  இந்தப் பிரச்சனையை பூதாகரமாக்கின. 

ஒதுக்கிய பட்ஜெட்டில், திட்டமிட்ட நாளில் படத்தி  வெளியிடும் திறமை சுந்தர் சி யிடம் இருக்கிறாது. அதனால்தான் கலம் அவரைத் தேர்வு செய்தார்.

கனவுப் படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேறக் காரணம் சம்பளப்ப் இரச்சனை  என சிலர் சொல்கிரார்கள்.  ரஜினிய இயக்கும் இன்ரைய இயக்குநர்களுக்கு 50 கோடி  ரூபா கொடுக்கப்படுகிறதாம்.  சுந்தர் சிக்கு 10 கோடி ஒதுக்கப்பட்டதாம். அவர் அதிகமாகக் கேட்டதைக்  கொடுக்க கமல் மறுத்துவிட்டாராம்.

கமலுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயுண்ட் நிறுவனம்  இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கமலும், திமுகவும்  இணையும் படத்தில் சுந்தர் சி இருக்கக்கூடாது என  பாரதீய ஜனதா குட்டையைக் குழப்பியதாகவும்  சில பதிவுகள் வெளியாகின. சுந்தர் சியின் மனைவி குஷ்பு  பாரதீய ஜனதாவின் தலைவர்களில் இருவராக  இருக்கிறார். ஆகையினால் சிலர் இதனை அரசியலாக்குகின்றனர். 

அரசியல் பதிவுகளால் ஆத்திரமடந்த  குஷ்பு டுவிட்டரிஒல்  காரசாரமான பதிவுகளை போட்டபின்னர் அதனை நீக்கினார்.

சுந்தர் சி  சொன்ன இரண்டு கதைகளும் ரஜினிக்குப் பிடிக்கவில்லை. ரஜினிக்குக் கதை பிடிக்கும் வரை கதை கேட்போம் என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.

ரஜினியிடம் சுந்தர் சி இரண்டு கதைகளைச் சொன்னாராம். இரண்டு கதைகளும் ரஜினிக்குப் ப்டிக்க வில்லையாம். அதனால்தான்  சுந்தர் சி விலகினார் என சாரப்பட கமல் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி போன்ற மாஸ் படத்தை ரஜினி விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான கதைகள்  சுந்தர் சியிடம் கட்டாயம் இருக்கும். ஆனால்,    ரஜினிக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக  உள்ளது.

10  வருடங்களுக்கு முன்னர் சுந்தர் சி இயக்கிய படம்  பெட்டிக்குள்  முடங்கி இருந்து இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. மூக்குத்தி அம்மன் 2 பட வேலையில் சுந்தர் சி மும்முரமாக  இருக்கிறார். அடுத்ததாக விஷாலின் படத்தை  இயக்க்ப் போகிறார்.அரண்மனை 5 கைவசம்  உள்ளது.

ரஜினி நிராகரித்த கதைகளை சுந்தர் சி   கட்டாயமாக வெளியிடுவார்.


Saturday, June 7, 2025

தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடைமன்னிப்பு கேட்க கமல் மறுப்பு


 

 கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோர்  நடித்த   தக் லைஃப் திரைப்படம்   கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வெளியிடப்பட்டது. கமல்,மணிரத்னம்,ரஹ்மான் கூட்டணியின் தக் லைஃப்  படத்துக்கு உலகளாவிய ரீதியில் பெரும் எதிர் பார்ப்பு ஏற்பட்டது.

'கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது' என்று கூறியதற்காக கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால்,   கர்நாடகத்தில்  வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. கன்னட மொழியை  கமல் அவமதித்ததாகத் தெரிவித்து கமலுக்கு எதிராக அங்கு போராட்டம் நடை பெற்றது. இதன்  பின்னணியில் அரசியலும் உள்ளது. கர்நாடக அரசியலில் சிக்க விரும்பாத கமல்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதனால் சுமர் 30 முதல் 40 கோடிவரை  தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பாடும்  ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கமலும், மணிரத்தினமும் இணைந்து தயாரித்த படம்

தக் லைஃப். கமலுக்கு எதிராக கர்நாடகாவில்  வழக்குத் தொடரப்பட்டது. மன்னிப்புக் கேட்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

  மன்னிப்பா கேட்க மாட்டேன் என கமல்  தெரிவித்தார். அவர் தவறாக எதையும் பேசவில்லை. தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்பதில் கமல் உறுதியாக  இருக்கிறார்.

கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடப்படாததால், படத்தின் தயாரிப்பு   BOX OFFICE   இல்  35 முதல்40 கோடி மொத்த வசூலையும், தயாரிப்பாளர்களுக்கு    12 முதல் -15 கோடி  வரை  இழக்க நேரிடும் என்று தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜி. தனஞ்சயன் தெரிவித்தார்.

புஷ்பா 2, பாகுபலி 2, RRR ஆகியவை கர்நாடகாவில் மட்டும் உலக வருவாயில்  74 முதல்-104 கோடியை ஈட்டின என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டது.

ஜெயிலர், லியோ, பொன்னியின் செல்வன், கோட் , விக்ரம் போன்ற அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் கூட கர்நாடகாவில் பெரும் சந்தைப் பங்கைக் கொண்டிருந்தன என்று தயாரிப்பாளர் கூறினார்.

"தமிழ் படங்களுக்கும், கர்நாடக சந்தை மொத்த வருவாயில் 7% ஆகும்" என்று தயாரிப்பாளர் கூறினார்.

பணம், வருமானம் எல்லாம் தேவை இல்லை ஒரு முறை சொன்னது சொன்னது தான். மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை எனப்தே கமலின் நிலைப்பாடு.

 ரஜினியே மன்னிப்புக்கெட்டுள்ளார். கமல் ஏன் மன்னிப்புக் கேட்கக்குடாது என நீதி மன்றத்தில் சூடான விவாதம் நடந்தது.

1950-களில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு கன்னட எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினர். அதன்பிறகு ராஜகோபாலாச்சாரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். அவரால் மன்னிப்பு கேட்க முடிந்தபோது, கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியவில்லை.

இதேபோல காலா திரைப்படத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டார். அதனால் அந்த திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது.

 தக் லைஃப் படம் கர்நாடகாவில்  வெளியாக வில்லை. கமலின் ரசிகர்கள் ஓசூருக்குப் படை எடுத்துள்ளனர்.கர்நாடகத்தில் எல்லையில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஓசூர் உள்ளது. ஓசூர் தமிழகத்தில் இருப்பதால் அங்கு  தக் லைஃப் திரையிடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கமல் ரசிகர்கள் ஓசூருக்கு படையெடுத்துள்ளனர்.

ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமலின் கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், கற்பூரம் ஏற்றியும் உற்சாகமடைந்தனர்

இது குறித்து கர்நாடக மாநில ரசிகர்கள் கூறும்போது, “கமலின்தக்லைஃப்திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இதற்காக பல லட்சம் செலவு செய்து கட் அவுட் பேனர்கள் என தடபுடலான ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில் கன்னட மொழி குறித்து கமல் பேச்சால் கர்நாடக மாநிலத்தில்தக் லைஃப்திரைப்படம் வெளியாகவில்லை . இதனை எங்கள் மாநிலத்தில் அரசியல் ஆக்கிவிட்டனர். சினிமாவுக்கு தடை போடலாம் ஆனால் ரசிகர்களான எங்களுக்கு தடை போட முடியாது. அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த கமல் ரசிகர்களும் ஓசூரில் படம் பார்க்க வந்துள்ளோம். இங்கு தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை விட 80 சதவீதம் கர்நாடக மாநிலம் ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர்.” எனக் கூறினர்.

கமலின் படத்துக்குத் தடை போடலாம் ஆனால், ரசிக்கர்களுக்குத் தடை போட முடியாது என்பதை அரசியல் வாதிகள்  உணர்ந்து கொள்வதில்லை.

 

Sunday, December 15, 2024

2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட வீரர்கள்

 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், கூகுள் தனது ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃப் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, ஸ்பெயின் கால்பந்து வீரர் லாமின் யமல் மற்றும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் அவர்களின் சாதனைகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த விளையாட்டு வீரர்கள் 2024 இல் தங்கள் முத்திரையைப் பதித்தனர், அவர்களின் செயல்திறன் மற்றும் தனிப்பட்ட சாதனைகளால்  ரசிகர்களைக் கவர்ந்தனர். 2023ல் கூகுளில் 199.4 மில்லியன் தேடல்களுடன் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 


2024ல் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு வீரர்கள்:


இமானே கெலிஃப்


மைக் டைசன்


லாமைன் யமல்


சிமோன் பைல்ஸ்


 ஜேக் பால்


நிகோ வில்லியம்ஸ்


ஹர்திக் பாண்டியா


ஸ்காட்டி ஷெஃப்லர்


ஷஷாங்க் சிங்

Tuesday, December 3, 2024

பத்திரிகைத் துறையில் சிறந்த ஆளுமை


 இலங்கையில் இன்று அச்சு ஊடகத் துறை பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்த கடும் பிரயத்தனப்பட்டு வருகையில் இத் துறையில் அவ்வப்போது பலர் கோலோச்சி வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  வாசகர்கள் மத்தியில் என்றுமே தங்களின் ஆளுமையால் சிறப்பான இடத்தை பலர் பிடித்துள்ளனர்.அவர்களில் ஒருவராகவே வடமராட்சி வதிரியின் மைந்தன் சூரன்.ஏ. ரவிவர்மா (ரமணி) தனது பணியை தொடர்கிறார்.    

1997 ஏப்பிரல் 6 ஆம் திகதி ‘தினக்குரல்’ பத்திரிகை கொழும்பில் ஆரம்பமான ஓரிரு தினங்களில் உதவி ஆசிரியராக இணைந்த இவர்  பல வருடங்களாக தினக்குரலில் சேவையாற்றி செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல், குறிப்பாக புதன் வசந்தம் பகுதியில் விளையாட்டு,சினிமா உட்பட பல்வேறு  கட்டுரைகளை எழுதி பத்திரிகையை பலப்படுத்தினார்.
இந்த நிலையில் இவரது  ஆற்றலால் ‘இடி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அதனைத் தொடர்ந்து சுடரொளிப் பத்திரிகையிலும் அரிய சேவையாற்றினார். அதன் பின்னர் வீரகேசரியில் இணைந்து செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல்  ஆகியவற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். ‘மெற்றோ நியூஸ்’, ‘மித்திரன்’, ‘வீரகேசரி வார மலர்’ ஆகியவற்றில் பல கட்டுரைகளைத் திறம்பட எழுதினார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட பத்திரிகைத் துறையிலிருந்த ஆர்வம் காரணமாக பல பத்திரிகைகள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் உட்பட வெவ்வேறு துறைகளிலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். அரசியல், விளையாட்டு,சினிமா ஆகியவற்றில் இவர் கொண்டிருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக அத்துறைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் மிகக் கவனிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.தற்போது சினிமா தொடர்புடையதாக இவரது இந்நூல் வெளிவருகிறது.
மிகவும் நேர்மையான ஒரு பத்திரிகையாளரான இவர், பத்திரிகா தர்மத்திற்காக எப்போதும் பாடுபட்டவர். இப்பொழுதும் தனது வயது மூப்பினையும் பொருட்படுத்தாது இருபத்து நான்கு மணிநேரமும் பத்திரிகைத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தற்போது ‘தீம்புனல்’ மின் இதழின் பிரதம ஆசிரியராக இருக்கும் இவரால் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப பல்துறை இதழாக அது பரிமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சிவகணேசன்
செய்தி ஆசிரியர்  
தினக்குரல் 

Friday, November 29, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” – அணிந்துரை


 ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம்

சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். வடமராட்சி மண்ணின் மைந்தன் அவரின் தொடர்பு இந்த இணைய உலகில் தான் கிடைத்தது.

ரவிவர்மாவின் எழுத்துகளை வலைப்பூக்கள் வழியாகப் படித்த போதும், “வடக்கே போகும் மெயில் என்ற அவரது சிறுகதைத் தொகுதியைப் படித்த போதும், என் பால்யகாலத்தில் ஊடகராக இயங்கிக் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்த நெல்லை.க.பேரன் தான் நினைவுக்கு வந்தார்.

தான் கொண்ட களத்துக்கேற்ப எழுத்தைக் கொடுக்கும் பட்டறவு ரவிவர்மாவிடம் உண்டு. அதனால் தான் அவரின் பிரதேச வழக்கியல் சார்ந்த மொழி நடையோடு சிறுகதைகளை எழுதியவர், திரைக்கு வராத சங்கதி வழியாக ஒரு பொதுத்தமிழைக் கையாண்டிருக்கிறார். இதனால் ஈழத்தவருக்கு மட்டுமன்றி தமிழகத்தவரும் இலகுவில் இவரின் மொழி நடையோடு இயல்பான வாசிப்பனுபவத்தைப் பெற முடியும்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும். சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம்சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள் என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தமுடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள். எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு. இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார். 

நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.  

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Tuesday, November 19, 2024

ஒஸ்கார் நாயகனைக் கைவிட்டார் மனைவி சாய்ரா பானு


 கிசுகிசு, பிரச்சனை ஆகியவற்றில் சிக்காத சினிமாப் பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தான் உண்டு தன் வேலை உண்டு என  இசைத்துறையில் முன்னேறிய ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு வெளியிட்ட அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி  இந்தியாவின் பல மொழிகளில்  கோலோச்சிய ரஹ்மான்  ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததம் மூலம் சினிமாவின் மிக  உயரிய விருதான ஒஸ்கார் விருதை இரண்டு கைகளிலும் தூக்கிப் பிடித்தார்.

  தனது கணவர் ஏஆர் ரஹ்மானைப் பிரிவதாகசாயிரா பானு அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.  சுமார் 30 வருட திருமண பந்தம்  முடிவுக்கு வந்துள்ளது.  இந்த தம்பதிக்கு கதிஜா,   என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக சாயிரா பானு  வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.  தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள்,பிரிவினைகள்,  ஆடிக்கடி ஏர்படும் சணடைகள் ஆகியனவே  இந்த முடிவுக்குக் காரணம் .  இவர்கள் திருமண உறவு வெளியே சுமுகமாக இருந்தாலும் உள்ளே நிறைய மனக்கசப்பு இருந்துள்ளது.

 இதுதொடர்பாக அவர்களது  மகன் ஏஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 வார்த்தைகளில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ இந்த நேரத்தில் எங்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட உணர்வுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். உங்களின் புரிதலுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த பெரிய சண்டைதான் இவர்களின் விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறிவிட்டது என்கிறார்கள். அதன்பின்பே இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு முன் தங்கள் மகள்கள், மகன் ஆகியோருடன் ஆலோசனை செய்து அதன்பின்பே பிரியும் முடிவை எடுத்துள்ளனர்.

 

. தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வக்கீல் மூலம் வெளியிட்ட அறிவிப்பு பலரது இதயங்களையும் உடைத்து விட்டது. பொய்யாக  இருக்காதா என ரஹ்மானின் ரசிகர்கள் ஏங்கினர். ஒரு வேளை வதந்தியாக இருக்குமோ என்றுதான் பலரும் முதலில் நினைத்தனர். ஆனால் உண்மை என்று தெரிந்ததும் பலருக்கும் இது அதிர்ச்சிதான்.

ஆனால் நமக்குப் பிடித்தமானவர்கள் பிரியும்போதுதான் பெரும் வேதனை ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் கோடானு கோடி தமிழர்களின் இதயங்களில் வீற்றிருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது பாடல்களுக்கு பலரும் அடிமையாகவே உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் விவாகரத்து முடிவுக்குப் போகிறார் என்றால் அது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதில் வியப்பு இல்லைதான்.

இத்தனைக்கும் மிக மிக மனம் ஒத்த தம்பதியாக வலம் வந்தவர்கள் இவர்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட தனது மனைவியுடன் மேடையில் தோன்றினார் ரஹ்மான். அப்படி ஒரு அழகான காட்சி அது. ஆனால் அவர்கள் பிரியப் போகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.

இந்த நிலையில் தனது மனைவியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு எக்ஸ் பதிவைப் போட்டிருந்தார். அதில், 30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடுவோம் என நம்பினோம், ஆனால் விஷயங்கள் வேறு மாதிரியாகப் போய் விட்டது. பார்க்க முடியாத அது எட்டி விட்டது. உடைந்து போன இதயங்களின் பளுவைத் தாங்க முடியாமல், கடவுளின் அரியாசனமே நடுங்கிப் போய் விடும். இது எங்களை சிதறடிப்பதாக இருந்தாலும் கூட, உடைந்த  சிதறல்களை மீண்டும் அதனதன் இடத்தில் ஒன்று சேர்ப்பது கடினம்.


 எங்கள் மீது அன்பும், அக்கறையும் காட்டிய நண்பர்களுக்கும், அனைவருக்கும் நன்றி. மிகவும் துயரமான நேரத்தில் நாங்கள் இருக்கும் இந்த சமயத்தில் எங்களது பிரைவசியை மதிப்பதற்கும் நன்றி என்று கூறியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

தமிழ் திரையுலகில் சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இதில் ஜிவி பிரகாஷ் குமார்   ஏஆர் ரஹ்மானின் உடன்பிறந்த சகோதரியின் மகன் ஆவார்.

  தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

 தனுஷ், சமந்தா, ஜெயம் ரவி, இமான் ஆகியோரைத் தொடர்ந்து  ஏ.ஆர் ரகுமான் மனிவியை விட்டுப் பிரிந்துள்ளார்.  

சமீப காலமாகவே திரைத்துறையில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. திரைத்துறை என்று இல்லை, ஒட்டுமொத்தமாகவே மக்களிடையே இணைந்து வாழும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பல காரணங்கள் இதற்கு சொல்லலாம். ஆனால் முன்பை விட பல மடங்கு விவாகரத்துகள் அதிகரித்து விட்டன. முன்பு போல இப்போது யாரும் தயங்குவது இல்லை, சகித்துக் கொண்டிருக்கவும் விரும்புவதில்லை. பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லை என்ற நிலை வரும்போது உடனடியாக விவாகரத்துக்குப் போய் விடுகிறார்கள்.    

Thursday, February 29, 2024

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -87


 சினிமவின் மீது இருந்த ஆர்வத்தால்  வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னையில் கால் பதித்த பஞ்சு அருணாசலம்  சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர்   என சினிமாவின்  அனைத்திலும்  வெற்றிக்கொடி நாட்டினார்.

 பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார்.  பஞ்சு அருணாசலத்தின்  உறவினார்கள் பலர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும்தகக்கு  ஒரு சந்தர்ப்பம் தரும்படி யாரிடமும்  கேட்கவில்லை. பஞ்சு அருணாசலம் எழுதிய  ஒரே  ஒரு பாட்டு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

சாரதா ஏ.எல்.எஸ் தயாரித்த படம். பாடல் எழுத கவிஞர் ஊரில் இல்லை. அவசரமாக பாடல் தேவைப்பட்டது. கே.வி. மகாதேவன் அவர்கள் தான் இசை. அவருடைய உதவியாளர் புகழேந்தி பஞ்சுவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

அந்த புகழேந்தி பஞ்சுவை பற்றி கே.வி.எம்.மிடம் சொல்ல அவர் அதுக்கென்ன இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டை எழுதித் தரச்சொல்லு, நல்லா இருந்தா யூஸ் பண்ணிப்போம் என்று கூறினார். கே.வி.எம். எப்போதும் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார். பஞ்சுவும் ஒரு அருமையான பாடலை தர அனைவர் ஆமோதிப்புடன் பஞ்சுவின் பாடல் பதிவாகியது. அந்தப் பாடல்தான் ‘மணமகளே மணமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா

. பயத்துடன் பஜ்சு அருணாசலம் எழுதிய பாடல் அரை  நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை திருமண வைபவத்தைல் ஒலிக்கிறது. "  வாராயென் தோழி வாராயோ,  மணப்பந்தல் காண வாராயோ" எனும் பாடல் மணமகளை அழைத்துவரும் தேசிய கீதமாக  இன்றும் தமிழ் மக்கள் வாழும் நாடெங்கும்  ஒலிக்கிறது.அந்தப்பாடலை கண்ணதாசன் எழுதியதாக நம்பும் பலர் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.

" வாராயென் தோழி வாராயோ" தந்த வெற்றியால் கண்ணதாசனின் உதவியாளராக  இருந்த  பஞ்சு அருணாசலம் முழுநேரப் பாடலாசிரியரானார்.பஞ்சு அருணாசலம் என்றதும்  இளையராஜாவை அரிமுகப்படுத்தியவர் என்ற  ஒற்றை வரிதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் பலருக்கும் தெரியாத சங்கதி. ரஜினியின் அடையாளத்தை முதன் முதலில் மாற்ரியவர்  பஞ்சு அருணாசலம்.  வேகமாக நடப்படு கையைக் காலை ஆட்டுவது, சிகரெட்டைபிடிப்பது என்ர ரஜினியின் கெட்டப்பை "புவனா  ஒரு கேள்விக்குரியில் மாற்ரினார்.  ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல் ,  போன்ற படங்கள் ரஜினியின்  இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின. சகல கலா வல்லவன் என கமலை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.

.   இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.எம் செட்டியர் 'நானும் ஒரு பெண்' படத்தில் பூப்போல பூப்போல பிறக்கும் என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கவியரசர் வருத்தப்படவில்லை, வாழ்த்தினார். இவராக வலியப் போய் யாரிடமும் வாய்ப்புக் கேட்டதில்லை. அதுவாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை உபயோகித்துக் கொள்வார், அவ்வளவுதான். கவிஞர் ஊரில் இல்லாத சமயங்களில் பல திரைப்பட கம்பெனிகளுக்கு டிஸ்கஷன் செல்வார். தேவர் பிலிம்ஸ் மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் செல்வார். அவர் சொல்லும் சீன்கள் பிடித்தால் அதற்கேற்றார் போல் ஒரு தொகையை கொடுப்பார்கள். சினிமாவிற்கென்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும் தனியாளாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதும் பேரெடுப்பதும் கஷ்டம். பஞ்சுவிற்கு திடமான எந்தக் குறிக்கோளும் இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலத்தான் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புரட்சித்தலைவருக்கும் கவிஞருக்கும் அரசியல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்தது. இனி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்தார். அந்தச் சமயமத்தில் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு எம்.எஸ்.வி. தான் இசை. கவிஞர் எழுத முடியாத காரணத்தால் பஞ்சுவை கூப்பிட்டு தான் போட்ட டியூனுக்கு பாட்டு எழுதச் சொல்லியிருக்கிறார். அதன்படி பஞ்சுவும் ‘பொன் எழில் பூத்தது புது வானில் என்ற பாடலையும், “என்னை மறந்ததேன் தென்றலே என்ற பாடலையும் எழுதித் தந்திருக்கிறார். பாடலும் பதிவாகி கேஸட் வடிவத்தில் எம்.ஜி.ஆரிடம் சென்றடைந்திருக்கிறது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், “இது கண்ணதாசன் எழுதிய பாடல், என்னை ஏமாற்ற பஞ்சு எழுதிய பாடல் என்று கூறுகிறீர்கள் என்று பாட்டை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

பஞ்சுவுக்கோ அழகையே வந்துவிட்டது. பிறகு எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “என் மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களிடம் பொய் சொல்வேனா?” என்று பலவாறாக சத்தியம் செய்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆர் உண்மையை உணர்ந்து பாடலை பாராட்டியதோடு, “பஞ்சுவை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல், இன்னும் வாய்ப்புகள் தருகிறேன், என்ற கூறியிருக்கிறார்.

ஸ்.பி. முத்துராமன், தேவராஜ், மோகன் போன்றவர்கள் பஞ்சுவுடன் சேர்ந்து ஒரு குழுவானர்கள். உறவு சொல்ல ஒருவன், உறவாடும் நெஞ்சங்கள், மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றன. இதன்பிறகு பஞ்சு ஒரு தயாரிப்பாளர் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் தமிழ்படங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தால் 50 நாட்கள் ஓடும். மிகவும் நன்றாக இருந்தால் 100 நாட்கள் ஓடும். மிக மிக நன்றாக இருந்தால் 175 நாட்கள் ஓடும்.

இந்திப் படங்களைப் பார்த்து, கிந்திபாடல்களைப் பாடிய தமிழக  ரசிகர்களை தமிழ்ப் படத்தின் பக்கமும், பாடல்களின் பக்கமும் திருப்பியதில் பஞ்சு அருணாசலம்  முதன்மையானவர். 

  

Sunday, December 31, 2023

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய கப்டன் விஜயகாந்த்

தமிழக சினிமாவிலும்அரசியலிலும் தனக்கென்று ஒரு பாதையை அமைத்து வெற்றிக் கொடி நாட்டிய விஜயகாந்தின் பயணம்  முடிவுக்கு வந்துள்ளது.   விஜயகாந்த கடந்து வந்த பாதை இலகுவானதல்லகேலி,கிண்டல்  அனைத்யும்கடந்து உச்சம் தொட்ட வுஜயகாந்த், தான்  உயர்ந்ததுபோல மற்றவர்கள் மேலே செல்ல ஏணி போல் உதவினார்.

நடிகர் எம்.ஜி.ஆர்  அரசியலில் இருந்த போது அவருக்காகவே பல அரசியல் பாடல்கள் எழுதப்பட்டன.அரசியலைப் பற்றிய எந்த ஒரு  எதிர் பார்ப்பும் இல்லாதபோது சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் வரிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் விஜயகாந்த்.  "வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே..."  என்ற பாடலை போன்றதே அவரது மனம்.

கமல்,ரஜினி  என்ற  இரு பெரும்  துருவ நட்சத்திரங்கள்  சினிமாவில் ஜொலித்த போது விஜயகாந்த்  சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.  முதலில் அவரது நிறம் கேலிக்குள்ளாகியது.   எல்லோரும் ரஜினியைப் போல் வருமா என  கேட்டார்கள். ரஜினிக்கு சவால் விடும் வகையில் சினிமாவில் மிக  ஆழமாகத் தந்து காலைப் பதித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா எனும்  இரு பெரும் ஆழுமைகள் தமிழகத்துக்கு அப்பாலும் தமது அரசியல் பலத்திக் கான்பித்த போது அரசியல் அரங்கில் புகுந்தார் விஜயகாந்த். அண்ணாவின் மறைவுக்க்பு பின்னர் கட்சியைப் பொருப்பேற்று  தனது அரசியல் சாணக்கியத்தை நிரூபித்தவர் கருணாநிதி,எம்.ஜி.ஆரி மறைவுக்குப் பின்னர்  உட்கட்சி  எதிர்ப்புக்கு  மத்தியில் தனது அரசியல் இராஜதந்திரத்தால் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. எந்த விதமான அரசியல் பின்னணியும்  இல்லாமல்   அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியவர்  விஜயகாந்த்.

விஜயகாந்தை   அரசியலில்  தூக்கிவிட்டு  குப்புற விழுத்தியவர்  ஜெயலலிதா. தனது கட்சியைச் சேர்ந்தவர்களின்   துரோகம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் பின்னர் அரசியலில் அவரால் தலைதூக்க முடியவில்லை

கப்டன் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்-அரசியல்வாதி விஜயகாந்த், கடந்த 28 ஆம் திகதி   வியாழக்கிழமை  அதிகாலை  காலமானார்.

தமிழ் சினிமாவின் அர்ப்பணிப்புள்ள கலைஞர்களில் ஒருவராகவும், சிறந்த மனிதர் என்றும் விஜயகாந்த் அபோற்றப்படுகி||றார். உதவி என கேட்டு வருபவர்களுக்கு   உதவி செய்யும் வள்ளல் குணம் கொண்டவர்.  அவரின் கல்யாண மண்டபத்தில், வெளிஊர்களில் இருந்து வருபவர்களுக்கு, தினந்தோறும் விருந்தளிக்கும் கொடையாளி எனவும் பெயர் பெற்றவர்.

கே.என்.அழகர்சுவாமி ,ஆண்டாள் அழகர்சாமி ஆகியோருக்கு மகனாக, விஜயராஜ் அழகர்சாமியாக ஆகஸ்ட் 25, 1952 இல் பிறந்தார்.

அவரின்  மனைவி பிரேமலதா.விஜய பிரபாகரன் , சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

எம்.ஜி.ஆர் மீது கொண்ட அன்பினால், சினிமா மீது சிறுவயது முதல் ஆர்வம் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

1979ல் எம்..காஜாவின் 'இனிக்கும் இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்..சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை ' படத்தின் மூலம் முதல் கமர்ஷியல் வெற்றியை ருசித்தார்.

பல படங்களில் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.   100வது படமான 'கப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த பிறகு, 'கப்டன்' என்ற பட்டத்தை பெற்றார்.

80 களில், திரைப்படங்களில் பல புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்தார். அதனாலேயே அவர் புரட்சி கலைஞர் என அழைக்கப்பட்டார். ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார் விஜயகாந்த்.1982 இல் 'ஓம் சக்தி' படத்திற்குப் பிறகு, அவர் கமெர்ஷியல் படங்கள் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்

1984 இல், அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் வெளியாகி, அனைத்துமே கிட்டத்தட்ட   வெற்றி பெற்று சாதனை படைத்தன.

விஜய், சூர்யா  ஆகியோருன் ஆரம்பகால படங்கலில் நடித்து அவர்களுன் எதிர்கால சினிமாவுக்கு உரமூட்டினார். பிலிம் இன்ஸ்ரிரியூட்டில் படித்து வெளியேறும்  கலைஞர்களுக்கு கைகொடுத்து தூக்கி விட்டார்.  ஊமை விழிகள்  இன்றும்  பேரும் படமாக  இருக்கிறது.  இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு வாய்ப்புக் கொடுத்தவர்.  கதை சொல்ல யார் வந்தாலும் மறுக்காமல் கதை கேட்பார். அன்றைய சாப்பாடு அவர்களுக்கு   விஜயகாந்தில் அலுவலகத்தில்தான்.

விஜயகாந்த் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்ட நாயகனாக  மிளிர்ந்தார். 1992இல், அவர் நடித்த'சின்ன கவுண்டர்' இல் நடித்தார், இது இன்றும் ஒரு உன்னதமானதாக கருதப்படுகிறது.'சேதுபதி ஐபிஎஸ்', 'ஹானஸ்ட் ராஜ்', 'உளவுத்துறை', 'பெரியண்ணா' , 'கண்ணுபட போகுதையா' ஆகியவை 90களில் அவர் நடித்த வெற்றிப் படங்களில் சில.

2000களில், 'வானத்தைப் போல, 'நரசிம்மா' , 'தவசி' உள்ளிட்ட வெற்றிப் படங்கள், அவரின் மற்றொரு அவதாரத்தை வெளிப்படுத்தியது.

.ஆர்.முருகதாஸின் 'ரமணா' திரைப்படம் அவரை ஊழலுக்கு எதிரான போரளியாகியது.   அதுவே அவரை அரசியலுக்கு வர தூண்டியது எனவும் கூறலாம்.

2005ல் அரசியலுக்கு நுழைந்த பிறகு, அவர் சினிமா துறையில் கவனம் செலுத்தவில்லை.


  2005 ஆம் ஆண்டு செப்டெம்பர்  14 ஆம் திகதி , மதுரையில் தனது அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்தார்.ஒரே வருடத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருமாறினார்.அவர் தனது கட்சிக்காக என்றைக்குமே தொடர்களிடத்தில் நன்கொடை கேட்டதில்லை. ஆரம்ப தேர்தலில், தேமுதிக எந்தக் கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு உள்ளாட்சித் தேர்தலிலும் தனது பலத்தை  நிரூபித்தது. 2011-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (அதிமுக) இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார்.41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த ஆண்டு திமுகவை விட (திராவிட முன்னேற்றக் கழகம்) தேமுதிக அதிக இடங்களைப் பெற்றதால்  விஜயகாந்த எதிர்க் கட்சித்தலைவரானார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயரிட்டவர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். நடிகர்கள்  அனைவரையு ஒரெ குடியின்  கீழ்  கொண்டுவந்து நடிகர் சங்க கடனை அடைத்த பெருமைக்குரியவர்.

 பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச் செல்வன் பட ஷூட்டிங் மைசூர் அருகே தொடங்கியது. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வாட்டாள் நாகராஜும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் சென்று அங்கு தமிழ்மொழியில் வைக்கப்பட்டிருந்த கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என தகராறு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பொலிஸாஅர்  குவிக்கப்பட்டனர்.   வாட்டாள் நாகராஜின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் காரில் வந்த விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜாவிடம் என்ன பிரச்சினை என கேட்டிருந்தார். பாரதிராஜா விஷயத்தை சொன்னதும் விஜயகாந்தின் கண்கள் சிவந்தன. காரில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் விஜயகாந்த். அப்போது வாட்டாள் நாகராஜ் இருந்த இடத்திற்கு தனி ஆளாக சென்று வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா.. வாடா பார்த்துக்குவோம் என சவால் விட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு கையில் இரும்புக் கம்பியுடன் விஜயகாந்தை பார்த்த வாட்டாள்   தனது ஆதரவாளர்களுடன் ஓடிவிட்டாராம்.

சிவாஜியின்   இறுதி  ஊர்வலத்தின் போது கட்டுகடங்காத ர்சிகர் கூட்டம்  நெருக்கடியை ஏர்படுத்தியதால். தனி ஆளாக வேட்டிக்யை மடித்துக்கட்டி  ரசிகர்களை ஆறுதல்  படுத்தினார்.

  சக்கர நார்காலியில்  விஜயகாந்த் அழைத்து வரப்படுவார். அபோது அவரைப் பார்க  பரிதாபமாக  இருக்கும்.   அதனி பலர் விமர்சனம் செய்தார்கள்.    விஜயகாந்தின்  உடல் நிலை பாதிக்கப்பட்டதால்  கட்சிப்பனிகள்  முடங்கின. விஜயகாந்தின்  மனைவி  பொதுச்செயலாளரானார். அப்போதெ அவரது எதிர்காலம்  வெளிச்சத்த்குக்கு வந்து விட்டது.  ஆனால், இவளவு சீக்கிரமாக விஜயகாந்த் மறைவார் என எதிர்  பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த  வரவேற்பு ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்டது.  விஜயகாந்தின்      இடத்தை பிரேமலதாவால் நிரப்ப முடியாது. 2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே சென்றது. அதனை முன்னேற்றுவதற்டவில்லை. விஜயகாந்த்  இருக்கும் போதே சில கட்சிகள் சில கட்சிகள்  அவரது கட்சியைக் கண்டுகொள்ளவில்லை

ரசிகர்கள், தொண்டர்கள், விஜயகாந்தால் அரவணைக்கப்பட்ட  சினிமாக் கலைஞர்கள்  அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.விஜயகாந்தின் சகாப்தம்  முடிவுக்கு வந்துள்ளது.