Saturday, June 30, 2018

உலகக்கிண்ண ஆச்சரியத் துளிகள்


ரஷ்யாவில் நடைபெறும் 21 ஆவது உலகக்கிண்ணப் போட்டியின் ஆச்சரியத்துளிகள்.
 5 கண்டங்கள்.
32 நாடுகள்.
376 வீரர்கள்.
62 போட்டிகள்
முதல் சுற்று வரை 48  போட்டிகள் முடிந்துள்ளன.

லீக் சுற்றில் 48  போட்டிகளில் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 கோல்கள் ஓன் கோல்களாகும். இதன் மூலம் உலகக்கிண்ண வரலாற்றில்   அதிக ஓன் கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக ரஷ்ய உலகக் கோப்பை தொடர் மாறி உள்ளது. 11 கோல்கள் பெனால்ரி மூலம் அடிக்கப்பட்டன.

அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் உள்ளார். அவர், 3 போட்டிகளில் 5 கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியத்தின் ரோமுலு லுகாகு,போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியார் தலா 4 கோல்களுடன் 2-வது இடத்திலும், ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ்,ஸ்பெயினின் டிகோ கோஸ்டா ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.


இவை தவிர உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ், பிறேஸிலின் கோடின்ஹோ உள்ளிட்ட 13 பேர் தலா இரு கோல்கள் அடித்துள்ளனர். மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட 68 பேர் தலா ஒரு கோல் அடித்துள்ளனர்    இடதுகால்,வலதுகால்,பெனால்ரி, தலை  ஆகியவற்ரின் மூலம் கோல் அடிக்கப்பட்டன. இந்த நான்கு வகையிலும் கோல் அடித்த ஒரே ஒரு வீரர் ரொனால்டோ மட்டும் அதேவேளை பெனால்ரி அடிக்காத வீரராகவும் ரொனால்டோவின் பெயர் பதியப்பட்டுள்ளது.
மஞ்சள் அட்டை 158  , சிவப்பு அட்டை 3,   36,349 முறை பந்து பாஸ் செய்யப்பட்டது.

நெய்மர் 17 முறை கோல் அடிக்க முயற்சி செய்துள்ளார். டென்மாக் வீரர் எரிக்சன் 36 கிமீ வேகத்தில்  ஓடியுள்ளார். ஜேர்மனி வீரர் ரொனி குறூஸ் 310 முறை பந்தை சரியான முறையில் பாஸ் செய்துள்ளார். மெக்ஸிகோ கோல் கீப்பர் ஒச்சோ  17 கோல்கலைத் தடுத்து சாதனை செய்துள்ளார்.
பெல்ஜியம்,துனீஷியா ஆகியவற்றுக்கிடையேயானபோட்டியில் அதிக பட்சமாக 9 கோல்கள் அடிக்கப்பட்டன. அதி கூடிய 8 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.  பெல்ஜியம் 5 கோல்களும் தினீஷியா 2 கோல்களும் அடித்தன. பெல்ஜிய்ததுகு எதிராக 3 மஞ்சள் அட்டையும் பனாமாவிக்கு எதிராக  5 மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டன.


இரண்டு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஹரி கேன், 153 நிமிடங்கள் களத்தில் நின்று 5 கோல்கள் அடித்துள்ளார்.வலதுகாலால் இரண்டு கோல்களும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.
 இரண்டு போட்டிகளில் விளையாடிய பெல்ஜியம் வீரர் லுகாலு  149 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார்.இடதுகாலால் இரண்டு கோல்களும் வலது காலால் ஒரு கோலும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.


மூன்று போட்டிகளில் விளையாடிய  போத்துகல் வீரர் ரொனால்டோ, 270 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார். இடது காலாலும் வலது காலாலும் தலையால் முட்டியும், பெனால்ரியிலும் தலா ஒரு கோல் அடித்துள்ளார்.

Friday, June 29, 2018

உலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.


ரஷ்யாவில் நடைபெறும்வது   உலகக்கிண்ணப் போட்டியில் லீக் சுற்று முடிவடைந்து லீக்கில் விளையாடும் 16 நாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  . அதில் விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது இதுவரை 20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. பிறேஸில்,ஆர்ஜென்ரீனா,உருகுவே,ஜேர்மனி,இத்தாலி,ஸ்பெய்ன்,இங்கிலாந்து,பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகள் உலகக்கிண்ன சம்பியனாகின. முன்னாள் சம்பியனான இத்தாலி, உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி  பெறவில்லை. நடப்புச் சம்பியனான ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. மற்றைய நாடுகள் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

 ஃபிபாவின் சார்பில் உலகெங்கும் உள்ள 5 உதைபந்தாட்ட கூட்டமைப்புகள் உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்ற நாடுகளே உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் வென்று, 14 நாடுகளும்,  . ஆசியாவில் இருந்து 5 நாடுகளும், ஆப்பிரிக்காவில் இருந்து 5 நாடுகளும், தென் அமெரிக்காவில் இருந்து 5 நாடுகளும்,  வட அமெரிக்காவில் இருந்து 3 நாடுகளும்,  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
  
தற்போது முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிந்துஇ நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. இதில் ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆகியவற்றுடன் ரஷ்யா, பெல்ஜியம்,குரேஷியா,டென்மார்க்,   போத்துகல், சுவீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள் நொக் அவுட்  சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அறிமுக அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து,நடப்பு சம்பியன் ஜேர்மனி ஆகியவை வெளியேறின. 


ஆசியா பிரிவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா,தென் கொரியா ஆகியவை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. இதில் ஜப்பான் மட்டுமே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.முன்னேறியுள்ளது. அவுஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா, தென்கொரியா ஆகியன முதல் சுற்றுடன் வெளியேறின.

ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து, மொராக்கோ,நைஜீரியா, செனகல்,துனீஷியா ஆகியவை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும் முதல் சுற்றுடன் வெளியேறின. நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்இ அது ஏமாற்றியது. அதே நேரத்தில் நைஜீரியா, துனீஷியா,செனகல் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன.

வட அமெரிக்கா பிரிவு தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்ற கோஸ்டாரிகா, மெக்சிகோ, அறிமுக அணியான பனாமா ஆகியவை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடின. இதில் மெக்சிகோ மட்டும் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா,பிரேசில், கொலம்பியா, பெரு,உருகுவே ஆகியவை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.  இதில் எதிர்பார்த்ததை போலவே முன்னாள் சாம்பியன்களான ஆர்ஜென்ரீனா,பிறேஸில், பிரேசில், உருகுவே ஆகியவற்றுடன் கொலம்பியாவும் நொஅவுட் பிரிவுக்கு முன்னேறியது. பெரு வெளியேறியது.



Thursday, June 28, 2018

ஜேர்மனியை வெளியேற்றிய தென்.கொரியா


பிறேஸிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைக் கையில் ஏந்தி பெருமையுடன் நாடு திரும்பிய ஜேர்மனி, 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் அவமானமாக நாடு திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

1938க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று  உலகக்கிண்ணப்  போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.   2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.    2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும்இ 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறின. இந்த வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம் பிடித்துள்ளது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான் போட்டியில் 1- 0 என்ற கோல்கனக்கில் தோல்வியடைந்த ஜேர்மனி ,சுவீடனுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது

தரவரிசையில் முதலிடத்தில் இடத்தில் இருக்கும் ஜேர்மனிக்கு தோல்வியில் இருந்து மீண்டு வருவது பெரிய விடயமல்ல. கடைசிப் ஓட்டியில் தென்.கொரியாவை ஜேர்மனி எதிர்கொண்டது. ஆசிய நாட்டுக்கு எதிராக பெரிய  வெற்றியைப் பெற்று ஜேர்மனி அடுத்த சுற்றுக்குச் செல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள்.  உதைபந்தாட்ட உலகின் குட்டி நாடான தென்.கொரியா, நடப்பு சம்பியனான ஜேர்மனியை வெளியேற்ரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென்.கொரிய வரலாற்றில் இது பொன் எழுத்துகளால் பொரிக்கப்பட வேண்டிய நாள். ஜேர்மனியில் வரலாற்றில்  இது  கறுப்புதினம்.

  ‘எப் பிரிவில்  நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  நடப்பு சம்பியன் ஜேர்மனி  , ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி   களம் கண்டது.  ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் சம்பியனாகும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.

ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. ஜேர்மனி  அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி வீரர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.

கோல் எதுவும் அடிக்காதஹால்  ஜேர்மனி வீரர்கள் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா வீரர்கள்  சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜேர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.


முடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜேர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு  அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும்  பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன்  தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.

இதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நடந்தது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன்  களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடனின்   அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.

எப் பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ ஆகியன  தலா 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன்   முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ   2-வது இடம் பெற்றது


Wednesday, June 27, 2018

ஆர்ஜென்ரீனாவைக் காப்பாற்றிய வெற்றி


டி பிரிவில் நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதால் ஆர்ஜென்ரீனா அடுத்த சுற்றுக்குச் செல்லத் தகுதி பெற்றது. முதல் போட்டியில் அறிமுக நாடான ஐஸ்லண்ட் 1-1 என்ற   கோல்கணக்கில் சமப்படுத்தியதால் உதைபந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் 3-0 என்ற கோல்கணக்கில் குரோஷியாவிடம் ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது. வெறி பெறவேண்டிய கட்டாயத்தில் நைஜீரியாவுடன் மோதொய ஆர்ஜென்ரீனா 2-1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஆர்ஜென்ரீனா பெரிதும் நம்பி இருந்த மெஸ்ஸி, முதல் இரண்டு போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை.  இந்தத் தொடரில் முதலாவது கோலை அடித்து  நம்பிக்கை ஊட்டினார். ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஆனால், அதனுடைய உணமையான விளையாட்டைக் காணமுடியவில்லை. போட்டியைச் சமப்படுத்துவதிலே நைஜீரியா ஆர்வம் காட்டியதால்  கோல் அடிக்கும் வாய்ப்புகலைத் தவறவிட்டது.  கால் இறுதிக்கு முந்தைய போட்டியில்  பிரான்ஸுடன்  ஆர்ஜென்ரீனா  மோதுகிறது. பிரான்ஸுடன் இதே  போன்று விளையாடினால் அடுத்த சுற்றுடன் ஆர்ஜென்ரீனா வெளியேற வேண்டி ஏற்படும்.

 அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்ற  குரோஷியா ஐஸ்லாண்டை எதிர்த்து விளையாடிய 2-1 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்றது.
சி பிரிவில் பிரான்ஸ், டென்மாக் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் அடிக்கப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.  இந்தத் தொடரில் கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்த ஒரேஒரு போட்டி இதுவாகும்.  வெற்றி அல்லது சமநிலை என்ற இக்கட்டான நிலையில் விளையாடிய டென்மாக் தப்பிப் பிழைத்தது. பிரான்ஸும்  டென்மாக்கும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. அடுத்த சுற்றுக்குத் தெரிவானது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்றகோல்கணக்கில் பெரு வெற்றி பெற்றது. இரண்டு நாடுகளும் முதல் சுற்றுடன் நாடுதிரும்புகின்றன.

Tuesday, June 26, 2018

மெஸ்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டி


உதைபந்தாட்ட உலகில் அசைக்க முடியாத வீரராக வலம் வருபவர்களில் மெஸ்சியும் ஒருவர். ஐரோப்பிய லீக் போட்டிகளில் தான் சார்ந்த அணியை சம்பியனாக்கி மகுடம் சூட்டிப் பார்த மெஸ்ஸியால் தாய் நாட்டுக்கு ஒரு மகுடத்தைச் சூட்ட முடியவில்லை.  மெஸ்ஸியின் போட்டியாளரான ரொனால்டோ 4 கோல்கள் அடித்தார். நெய்மர்,சுவாரஸ்,சாலா ஆகியோர் தலா ஒருகோல் அடித்தனர். மெஸ்சி இன்னமும் ஒருகோலும் அடிக்கவில்லை. தவிர  கோல் அடிப்பதற்குக்கூட உதவவில்லை

தகுதிச்சுற்றில் கடைசிப் போட்டிவரை காத்திருந்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.     ஐஸ்லாந்து,நைஜீரியா,குரோஷியா ஆகியவற்றுடன் டி பிரிவில் ஆர்ஜென்ரீனா இடம் பிடித்தது. இந்தப் பிரிவில் முதலிடம் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஜென்ரீனாவை , புள்ளிப் பட்டியலில் அறிமுக நாடான ஐஸ்லாந்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இரண்டு போட்டிகளில்   வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் குரேஷியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்தும் ஆர்ஜென்ரீனாவும் தலா 1 புள்ளியுடன் உள்ளன. ஆனால் கோல் வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை நான்காவது இடத்துக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.

முதல் போட்டியிலேயே ஆர்ஜென்ரீனாவுடன் 1-1 என சமப்படுத்தி  ஐஸ்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தது குரேஷியா. 3-0 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை வென்றது

இன்று நடக்கும் போட்டியில் நைஜீரியாவை வென்றால் ஆர்ஜென்ரீனா நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அதே நேரத்தில் குரேஷியாவுக்கு எதிராக வென்றால் ஐஸ்லாந்தும் 4 புள்ளிகளைப் பெறும். கோல் வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பது தீரமானிக்கப்படும். அதனால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஐஸ்லாந்து உள்ளது  முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுகிறது. 2016ல் யூரோ கிண்ணப் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்தச் சாதனையை புரிவதற்கு இன்றைய போட்டியில்  வென்றாக வேண்டிய நிலையில் அறிமுக அணியான ஐஸ்லாந்து உள்ளது.

சி பிரிவில் இன்று நடக்கும் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா பெருவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸுடன்   டென்மார்க் மோதுகின்றது..
 சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என அவுஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. அதற்கடுத்து நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது. இரண்டு வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறுகிறது. டென்மார்க் 4 புள்ளிகளுடனும்,ஆஸ்திரேலியா 1 புள்ளியுடனும் உள்ளன.

  பெருவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு கிடைக்கும். ஆனால், பிரான்ஸ், டென்மார்க்ஆகியவற்றுக்கு  இடையே நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தின் முடிவின்படியே அடுத்தச் சுற்றுக்கு நுழைவது டென்மார்க்கா அல்லது அவுஸ்திரேலியாவா என்பது தெரியவரும்.  அவுஸ்திரேலியா வென்றால் 4 புள்ளிகளைப் பெறும். பிரான்ஸுக்கும் எதிரான போட்டியில் வென்றால் அல்லது சமப்படுத்தினால் டென்மார்க் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோல்வியடைந்தால் டென்மார்க்கும் அவுஸ்திரேலியாவும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் நாடு எது எனத் தீர்மானிக்கப்படும். அதனால் பெருவுக்கு எதிராக அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.



எதிர் பார்த்த ரசிகர்களை ஏபாற்றிய ரொனால்டோ


உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போத்துகலும் ஸ்பெய்னும் மூன்றாவது போட்டியை சமப்படுத்தி ஏமாற்றமளித்தது. முன்னைய இரண்டு போட்டிகளிலும் தனி மனிதனாக போராடிய ரொனால்டோ பெனால்டியைத் கோலாக்காமல் ஏமாற்றமளித்தார்.ஸ்பெய்னும் போத்துகலும் ஒரு  போட்டியில் வெற்றி பெற்று , ஒரு போட்டியைச் சமப்படுத்தின. நான்கு கோல்கள் அடித்த இரண்டு நாடுகளும் நான்கு புள்ளிகளைப் பெற்றன. கடைசிப் போட்டியில் வெற்றியும் அதிக கோல்களும் தேவைப்பட்ட நிலையில் இரண்டு போட்டிகளும்  வெற்றி தோல்வியின்றி முடிந்ததால் கால் இறுதிப் போட்டிக்கு இரண்டு நாடுகளும் செல்லுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பி பிரிவில் நடந்த முதல் போட்டியில் போட்துகலும் ஈரானும் மோதின. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ரிகார்டோ குவேரெஸ்மா கோல் அடிக்க போத்துகல்  முன்னிலை பெற்றது. 93வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானின் அன்சார்பிராட் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவானது. 5 புள்ளிகள் பெற்ற போத்துகல்  பி பிரிவில் இருந்து போத்துகல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.


 பி பிரிவின் இரண்டாவது போட்டியில் மொராக்கோவை எதிர்த்து ஸ்பெய்ன் விளையாடியது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் போதாயிப் கோலடிக்க மொராக்கோ முன்னிலை பெற்றது. 19வது நிமிடத்தில் ஸ்பெயினின் இஸ்கோ கோலடித்து சமநிலையை உருவாக்கினார். 81வது நிமிடத்தில் மொராக்கோவின் என் நேசிரி கோலடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது. கடைசியில் 91வது நிமிடத்தில் இயாகோ அஸ்பாஸ் கோலடிக்க ஸ்பெயின் 2-2 என சமப்படுத்தியது. . இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அடுத்த  சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது.  டியோஜோ கோஸ்டா  3 கோல்கள் அடித்து இதுவரை ஸ்பெயினை  காப்பாற்றியுள்ளார்.

ஸ்பெய்னும் போத்துகலும் தலா ஐந்து புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஸ்பெய்ன் முதல் அணியாகவும் போத்துகல் இரண்டாவது அனியாகவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

   பிரிவில்  நடந்த கடைசிப்  போட்டியில்  ரஷ்யாவும் உருகுவேயும்  மோதின. இதில் 10வது நிமிடத்தில் சுவாரஸ் கோலடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது. 23வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேவ் சேம் சைடு கோலடிக்க உருகுவே 2-0 என முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கவானி கோலடிக்க 3-0 என உருகுவே வென்றது. இதன் மூலம் பிரிவில் உருகுவே முதலிடத்தைப் பிடித்தது.ரஷ்யா இரண்டாவதுஅணியாக தெரிவானது.

எகிப்துக்கும் சவூதிக்கும் இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் சவூதி வெற்றி பெற்றது.



Monday, June 25, 2018

முதலிடத்துக்காக முட்டிமோதும் நாடுகள்


ரஷ்யாவில நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  ஏ பீ ஆகிய இரண்டு பிரிவுகளின் கடைசிப் போட்டி இன்று நடைபெறுகிறது. ஏ பிரிவில் ரஷ்யாவும் உருகுவேயும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா ஆறு புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

இன்று ரஷ்யாவும் உருகுவேயும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் நாடு முதல் இடம் பிடிக்கும். போட்டி சமநிலையில் முடிந்தால் கோல்களின் அடிப்படையில் ரஷ்யா முதலிடம் பிடிக்கும். ரஷ்யா எட்டு கோல்கள் அடித்தது ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கோல் அடிக்கப்பட்டது. உருகுவே இரண்டு கோல்கள் அடித்தது.எதிராக  ஒரு கோல்கூட அடிக்கப்படவில்லை.

சவூதியும் எகிப்தும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தன. ஒரு  வெற்றியுடன் நாடுதிரும்புவதற்கு இரண்டு நாடுகளும் விரும்புகின்றன.

பீ பிரிவில் ஸ்பெயினும் போத்துகலும். ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமநிலைப்படுத்தி தலா  நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன.  ஸ்பெய்னும் போத்துகளும் நான்கு கோல்கள் அடித்துள்ளன. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. ஈரான் ஒரு போட்டியில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பீ  பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது  போர்ச்சுகல் ,ஸ்பெயின் ஆட்டம் 3-3 என சமனானது.. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

தற்போதைய நிலையில் ஸ்பெயினும்    போத்துகலும்   தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது

பீ  பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவை ஸ்பெயின் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில்   போர்ச்சுகல் ஈரானை சந்திக்கிறது. 4 புள்ளிகளுடன் உள்ள போர்ச்சுகல்,  3 புள்ளிகளுடன் உள்ள ஈரானை சந்திக்கிறது. முன்னைய இரண்டு போட்டிகளிலும்  ரொனால்டோ  தனி ஆளாக வெற்றியைப்  பெற்றுக் கொடுத்தார். ஆகையால்  இன்றைய ஆட்டத்தில் வென்று போத்துகல் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணித் தலைவர் இரண்டு போட்டிகளில் ஐந்து கோல்கள் அடித்து  முன்னிலைஅயில் உள்ளார்.ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியம் வீரர் லுகாகு இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் ரொனால்டோ அவர்களை முந்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Saturday, June 23, 2018

ஆரம்பமாகிறது கமலின் அரசியல்சதுரங்கம்


தமிழக முதல்வராவதுடான் சினிமா நடிகர்களின்  அதிகபட்ச ஆசை. சினிமாவில் அதி உச்சங்களைத் தொட்ட கமலும் ரஜினியும் இதற்கு விதி விலக்கல்ல. கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் அரசியலை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தபோது ரஜினியின் குரல் ஓங்கி ஒலித்தது. அன்று ஆரம்பித்த ரஜினியின் அரசியல் ஆசை இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரஜினி அறிவித்துக்கொண்டிருக்கிறார். கமல் தனது அரசியல் பயணத்தை அரம்பித்துவிட்டார்.

கமல்,தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கேலிசெய்தார்கள். மற்றைய அரசியல் தலைவர்கள் கமலின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுடன் நெருங்கிப் பழகி கருத்துக் கேட்பது, ஆய்வு செய்வது என கமல் தனது அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துவிட்டார்.

ரஜினியும் கமலும் தமக்காக அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும் கூட்டணி இல்லமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னால்  பாரதீய ஜனதா இருப்பதாக நம்பப்படுகிறது. கமலின் அரசியல் நகர்வின் பின்புலத்தில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் இல்லை. ராகுலையும் சோனியாவையும் கமல் சந்தித்தபின்னர் அந்தக் கேள்விக்கான விடையை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

ராகுலை கமல் சந்திக்கப்போவது பற்றிய தகவல்  தமிழக காங்கிரஸ் தலவர்களுக்கு  முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சந்திப்பு ஊடகங்கள்  மூலம் தான் தமிழக காங்கிரஸ் தலவர்களுக்குத் தெரிய வந்தது. ராகுல் காந்தியும் கமலும் அரசியல் பற்றி பேசவில்லைஎன்ர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை யாரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இது போன்றுதான் திருமாவளவனின் சந்திப்பும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. ராகுலைச் சந்தித்த பின்னர், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலமையிலான கூட்டணியில் போட்டியிடப்போவதாக திருமாவளவன் தெரிவித்தார். கமலும் அதுபோன்ற கருத்தைத்தான் சொல்லியுள்ளார்.

சோனியா, மன்மோகன் ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ்  தலைவர்கள் கருணாநிதியுடன் மிக நெருக்கமாகப் பழகினார்கள்.  ராகுல் காந்தி அந்த நெருக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்திப்பார்கள். தமிழகத்துக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்தி, கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். 2ஜி விவகாரம் காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவைப் பிரித்தது. காற்றிலே ஊழல் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

2ஜி விவகாரத்தைக் கையில் எடுத்து மிரட்டியதால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். கருணாநிதி அதனை விரும்பவில்லை. கருணாநிதி இப்போது அமைதியாக இருக்கிறார். ஸ்டாலினின் முடிவை மற்றைய தலைவர்கள் மறுக்க மாட்டார்கள்.  மூன்றாவது அணியின் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனமான பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழக காங்கிரஸ் தலமைக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் சில முடிவுகளுடன் காங்கிரஸ் ஒத்துப்போவதில்லை. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.  கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் மட்டும்தான்  காங்கிரஸ்  வெற்றி பெற்றது. ஆகையால் காங்கிரஸ் எதிர் பார்க்கும் அதிகளவான தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக்கொடுக்காது.  திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் கமலின் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராகுல் விரும்புகிறார்.

மூன்றாவது அணி என்று முதல் குரல் கொடுத்த மமதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துச் சொன்னதையும் மூன்றாவது அணியை பலப்படுத்த விரும்பும் சந்திரசேகரராவ் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததையும் காங்கிரஸ் தலைவர்கள் ரசிக்கவில்லை. மூன்றாவது அணியின் பக்கம் ஸ்டாலின் சாய்ந்தால், காங்கிஸின்   தமிழகத்தில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க ராகுல், விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தமிழக அரசியல் கூட்டணியில் கமலும் திருமாவளவனும் இணைவார்கள். திராவிடக் கட்சிகளுடன்  சேரமாட்டேன் எனச் சபதம் எடுத்த டாக்டர் ராமதாஸும் வருவார் என காங்கிரஸ் நம்புகிறது. தினகரனுக்கும் பலமான கூட்டணி தேவைப்படுகிறது. ஆகையால் காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணியில் தினகரன் சேருவதற்குச் சந்தர்ப்பம் உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையில் கூட்டணி அமைந்தால் கொடுக்கப்படும் தொகுதிகளைப் பெறுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறுமார்க்கம் இல்லை.  தமிழகத்தில் காங்கிரஸ்தலைமையில் கூட்டணி அமைந்தால் தாம் விரும்பியவாறு அதிகளவான தொகுதிகளில் போட்டியிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது. அவற்றில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி  பெறும்  என்பதைத் தலைவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கும்.

வர்மா

Wednesday, June 20, 2018

அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி


ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்னப் போட்டியில்  ரஷ்யா, எகிப்து ஆகியவை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. ஏனைய நாடுகள் தல ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ரஷ்யா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த எகிப்து கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

உலகக்கிண்ணச் சம்பியனான ஜேர்மனி, இம்முறையும் சம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் தோல்வியடைந்தது. பலமான் அணிகளான ஆர்ஜென்ரீனா, போத்துகல்,ஸ்பெய்ன்,பிறேஸில் ஆகியனமுதலாவது  போட்டியில் வெற்றி பெறாமல் சம நிலையில் முடித்துக்கொண்டன. செனகல்,தென்.கொரியா ஆகியன வியக்கத்தகும் வகையில் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றன.

பிரிவு

 இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்தை 1-0 என உருகுவே வென்றது. ரஷ்யாவுக்கு எதிரான போட்டியிலும் எகிப்து தோல்வியடைந்தது.தற்போதைக்கு ரஷ்யா 6 புள்ளிகளுடனும், உருகுவே தலா 3 புள்ளிகளுடனும் உள்ளன.

பி பிரிவு

இந்தப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. நடட்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக விளையாடி ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில்  3-3 என போர்ச்சுகலை தோல்வியில் இருந்து மீட்டார். ஈரான் 3 புள்ளிகளுடன்  முன்னிலையில் உள்ளது.

சி பிரிவு

பிரான்ஸ்-அவுஸ்திரேலியா ஆட்டம். 2018 ஆம்  ஆண்டு உலகக்கிண்ண வரலற்றில் நிச்சயம் பதிவுசெய்யப்படும்  உதைபந்தாட்ட உலகில் ரீப்பிளே செய்துபார்த்து பெனால்டி கொடுத்த முதல் ஆட்டம் என்பதால். 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஃபிரான்ஸ் அவுஸ்திரேலியாவை ஜெயித்ததற்கு உதவியது.
பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கிரீஸ்மேனின் முதல் உலகக் கிண்ணக் கோல். இதுவரை 6 முறை உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடி இருந்தாலும்,  இதுதான் கிரீஸ்மேனின் முதல் கோல்.
பயிற்சியாளர் ஓகே ஹாராய்தின் வழிகாட்டுதலில்  கடந்த 15 போட்டிகளில் ஒன்றில்கூட டென்மார்க் அணி தோல்வி பெறவில்லை . பெருவுக்கு பெனால்ரி வாய்ப்பு கிடைத்தது.இதுவரை பெனால்டி வாய்ப்பை பெரு அணி தவறவிட்டதேயில்லை. 1-0 என முதல்பாதியில் முன்னிலை பெற்றுவிடலாம் என்பதே பெரு ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்தது. கோய்வாவினால் . அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. பந்து கோலுக்கு மேலே எங்கோ சென்றது. இதனால் இரு அணிகளுக்கும் கோல் எதுவும் இன்றி முதல்பாதி முடிந்தது. இதற்கு முந்தைய ஆட்டத்தில் ஐஸ்லாந்துக்கு எதிராக ஆர்ஜென்ரீனாவின் மெஸ்சியும் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என அவுஸ்திரேலியாவை வென்றது. பெருவை 1-0 என டென்மார்க் வென்றது. பிரான்ஸ், டென்மார்க் ஆகியன தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

டி பிரிவு

அறிமுக நாடான ஐஸ்லாண்டுக்கு எதிரான பெனால்ரியை கோல்கீப்பர்   ஹால்டர்சன் தடுத்தார்.உலகக்கிண்ண வரலாற்றில் இதுவும் முக்கியமானது.. ஆர்ஜென்ரீனாவுக்காக விளையாடும் போட்டிகளில் மெஸ்ஸி தவறவிடும் மூன்றாவது மிக முக்கியமான பெனால்ட்டி வாய்ப்பு இது. பார்சிலோனாவுக்காக ஆடும்போது பெனால்ட்டியை எல்லாம் கோலாக்கிகிறார்..ஆர்ஜென்ரீனா என்றால் மட்டும் கோட்டைவிடுகிறாரே என மெஸ்ஸி மீதான விமர்சனங்கள்  அதிகமாக உள்ளன.

இளம் வீரர்கள் அடங்கிய நைஜீரியா அணி, அனுபவம் வாய்ந்த குரோஷியாவின் யுக்தியை சாதுர்யமாக சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 13-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிச் அடித்த நல்ல ஷாட் மயிரிழையில் கம்பத்திற்கு மேலாக பறந்தது. இது போன்ற மேலும் சில வாய்ப்புகளை குரோஷிய வீரர்கள் வீணடித்தனர்.
32-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை முதலில் குரோஷியாவின் ஆன்ட் ரிபிச்சும் பிறகு சக வீரர் மரியோ மான்ட்ஜூகிச்சும் தலையால் முட்டி தள்ளினர். அப்போது வலை அருகில் நின்ற நைஜீரியா வீரர் ஒஹெனகரோ எடிபோ காலால் தடுக்க முயன்ற போது அது துரதிர்ஷ்டவசமாக அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக (ஓன்கோல்) மாறியது.

கடந்த உலக கோப்பையில்நாக்-அவுட்சுற்றில் பிரான்சுக்கு எதிராக தோல்வி அடைந்த ஆட்டத்தில் நைஜீரியா அணி இதே போல் சுயகோல் போட்டது. உலகக்கிண்ண வரலாற்றில் அடுத்தடுத்த இரு ஆட்டங்களில் சுயகோல் அடித்த முதல் அணி நைஜீரியா தான்.

சூப்பர் ஈகிள்ஸ்என்று செல்லமாக அழைக்கப்படும் நைஜீரியா அணியினரால்  குரோஷியாவின் கோல் பகுதிக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியவில்லை. சொல்லப்போனால் முதல்பாதியில் அந்த அணி இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட உதைக்கவில்லை.
முடிவில் குரோஷியா 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்று   வெற்றியுடன் தொடங்கியது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கிண்ணப்  போட்டியில் தங்களது தொடக்க ஆட்டத்தில் குரோஷியா ருசித்த முதல் வெற்றி இது தான்.


கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் சிறந்த வீரர் விருதைப் பெற்ற லியோனல் மெஸ்ஸியின் மாயம் முதல் ஆட்டத்தில் பலிக்கவில்லை. அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை. மெஸ்சி அடித்த பனால்ரி மிஸ்ஸானது. அவருடைய அர்ஜென்டினா அணி 1-1 என ஐஸ்லாந்துடன் சமன் செய்தது.. மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவை 2-0 என வென்ற குரேஷியா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பிரிவு

 செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது.   பிறேஸில் அணி 1-1 என சுவிட்சர்லாந்துடன் சமன் செய்தது. . செர்பியா 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

எஃப் பிரிவு

நடப்பு சம்பியன் ஜேர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 33 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஜேர்மனியை வெற்றி கொண்டது மெக்சிகோ.
ஏகப்பட்ட அரைவாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் தவித்த மெக்சிகோ லோசானோவின் கோல் மூலம் ஜேர்மனி முகாமில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தோல்விக்கு முன்னதாக 8 உலகக்கிண்ணப் போட்டிகளில் தோற்காமல் ஆடிவந்த ஜேர்மனி தோற்க நேரிட்டது. 1982க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியில்முதல் போட்டியைத் தோற்றுள்ளது. !
2006-ல் ஜோக்கிம் லோ பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்தத பிறகே எந்த ஒரு முக்கிய  பெரிய கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதே ஜேர்மனியின் வழக்கம்.  இலக்கு நோக்கி அடித்தல் கோலுக்கான முனைப்புகள் பாஸ் துல்லியம் என்று ஜேர்மனி ,மெக்சிகோவைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கடைசியில் பினிஷிங்இ கோல்தானே வெற்றி பெறச்செய்யும்.

மெக்சிகோவை விட நிறைய ஷாட்டுகளை (25) ஜெர்மனி அணியினரே அடித்தனர். பந்தும் இவர்கள் (60 சதவீதம்) வசமே அதிகமாக இருந்தது. இருப்பினும் இவர்களின் எல்லா வியூகங்களுக்கும் தங்களது ஆர்ப்பரிப்பான ஆட்டத்தின் மூலம் மெக்சிகோ அணியினர்வேட்டுவைத்தனர்.

  
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. நடப்பு உலக கோப்பையில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி இதுவாகும். 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலகக்கிண்ண முதல்  ஆட்டத்தில் ஜேர்மனி சந்தித்த முதல் தோல்வியாக இது பதிவானது. அதே சமயம் ஜேர்மனி அணியை மெக்சிகோ வீழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு நட்புறவு ஆட்டத்தில் வென்று இருந்தது.

 நடப்பு சாம்பியனான ஜேர்மனி  மெக்ஸிகோவிடம்அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மெக்ஸிகோ அணி 1-0 என ஜேர்மனியை அபாரமாக வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் 1-0 என தென் கொரியாவை வென்றது. சுவீடன், மெக்ஸிகோ ஆகியன தலா 3 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன.

ஜி பிரிவு

பெல்ஜியம் அணி 3-0 என பனாமாவை வென்றது. கடைசி நேர கோலால் 2-1 என துனீஷாவை இங்கிலாந்து வென்றது. பெல்ஜியமும்  இங்கிலாந்தும்  தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

எச் பிரிவு

  ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் போலந்தை 2-1 என செனகல் வென்றது. ஜப்பானும் செனகலும்  தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.