Thursday, May 6, 2021

எதிர்க் கட்சித் தலைவருக்கு அ.தி.மு.கவில் போட்டி

தமிழக  சட்டசபைத்  தேர்தலில்  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம் தோல்வியடையடைந்தது.  பத்து  வருடங்களாக  ஆளும்  கட்சியாக  மிளிர்ந்த  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம் இப்போது  எதிர்க்  கட்சியாக  உள்ளது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம்  வெற்றி  பெற்றால்  எடப்பாடி  பழனிச்சாமிதான்  முதலமைச்சர்  என  ஓ. பன்னீர்ச்செல்வம்  அறிவித்தார். முதல்வராகும்  ஆசை ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு  இருந்தபோதும் எடப்பாடியை   முதல்வராக  அறிவித்தார்.  தமிழக  சட்டசபைத் தேர்தலில்   அண்ண திராவிட  முன்னேற்றக்  கழகம்  வெற்றி  பெறும் என எடப்பாடி   நம்பியபோதும் பன்னீர்ச்செல்வத்துக்கு  அந்த  நம்பிக்கை இருக்கவில்லை  என்பதனால்  முதலமைச்சர்  பதவியை  விட்டுக்கொடுத்தார். இப்போது எதிர்க்கட்சித்தலைவர்  பதவியை தனக்குத் தரவேன்டும்  என பன்னீர்ச்செல்வம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெடுஞ்செழியன், கருணாநிதி, க.அன்பழகன், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் எனப் பல தலைவர்கள் தமிழக  சட்டசபைத் தலைவர்  பதவியில் இருந்துள்ளனர் சட்ட  மன்ற‌  உறுப்பினர்களின்  எண்ணிக்கையில்  பத்து சதவிகிதத்தை ஒரு கட்சி பெற்றிருந்தால், அக்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும். தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 உருப்பினர்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்த கட்சியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும்.

அமைச்சருக்கு நிகரான அந்தஸ்த்துடைய இந்தப் பதவிக்கு சலுகைகள் ஏராளம். அரசு பங்களா, பொலிஸ் பாதுகாப்பு, வாகன வசதி, பயணப்படி, மருத்துவ வசதிகள் என ஆட்சி முடியும் வரை அரசின் சலுகைகளை அனுபவிக்கலாம். மிக முக்கியமான விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மீது விரிவான விவாதம் நடத்தக் கோரவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் முதல் இருக்கையில் அமரவும் எதிர்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் நேரடியாகக் களத்தில் மோதிக்கொண்ட ஏழு தேர்தல்களுக்குப் பிறகு, இருவரும் இல்லாமல் இரண்டு  கழகங்களும் முதன்  முதலில்  மோதிக்கொண்ட  முதலாவது  சட்டசபைத் தேர்தலில்  ஸ்டாலின்  வெற்றி பெற்றுள்ளார்.கருணாநிதியின்  வாரிசு  எனபதை  கடந்த  இரண்டு  தேர்தல்களில்  ஸ்டாலின்  நிரூபித்துள்ளார்.

ஆட்சியை இழந்தாலும்  கணிசமான வெற்றியுடன் தனது  தலைமையை எடப்பாடி  வெளிப்படுத்தியுள்ளார். திராவிட  முன்னேற்றக்  கழகத்  தலைவர்ளும்  கூட்டணித்  தலைவர்களும்  தமிழகம்  எங்கும்  பிரசாரம்  செய்தனர்.   எடப்பாடி  மடும்தான்  தமிழகம் எங்கும் சூறாவளிப்  பிரசாரம்  செய்தார்.  துணை  முதலமைச்சர் பன்னீரும்  அமைச்சர்களும் தமது  தொகுதிக்குள்  முடங்கிவிட்டனர். அவர்கலுக்கு  எதிரான  கடுமையான  போட்டியாளர்களை  திராவிட  முன்னேற்றக்  கழகம்  இறக்கியதால் தொகுதியை  விட்டு  வெளியேற  அவர்களால்  முடியவில்லை.

எடப்பாடியின்  நடவடிக்கைகளினால்தான்  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம்  தோல்வியடைந்தது  என பன்னீர்ச்செல்வம்  கூறுகிறார்.வன்னியருக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை என இந்தத் தேர்தலில் தென்மாவட்டத்தில்  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழ‌கம்  சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம் என  பன்னீர்  பட்டியலிடுகிறார்.

 தேவையில்லாத விவகாரங்களைக் கிளப்பி, தேர்தல் நேரத்தில்   பெரிய நெருக்கடியை உருவாக்கி  தோல்விக்கு  எடப்பாடிதான்  காரணம்  எனபதில்  பன்னீர்  உறுதியாக  இருக்கிறார்.

 எல்லா எதிர்ப்பையும் மீறி தென்மாவட்டத்துல 20 தொகுதிகளில் அண்ணா  திராவிட   முன்னேற்றக்  கழகம்  வெற்றி  பெற்றுள்ள‌து.  ஜெயலலிதா  இருந்தபோது   அவருக்கு  அடுத்தபடியாக  பன்னீர்தான் இருந்தார். சசிகலா இடையில்  புகுந்ததால்  எடப்பாடி  பலமிக்கவராகிவிட்டார். 

எதிர்க்  கட்சித்  தலைஅர்  பதவிக்கு  ஆசைப்பட்ட  பன்னீர்ச்செல்வம்  தனது  ஆதரவாள‌ர்களுடன்  இதுபற்றி  ஆலோசித்தார். இதனால்  எடப்பாடி  அதிர்ச்சியடைந்துள்ளார். எடப்பாடி  அனுப்பிய‌  தூதுவர்களால்  பன்னீரைச் சமாதானப்படுத்த  முடியவில்லை.

 சொந்த மாவட்டமான சேலத்திலும், தன்னை ஆதரிக்கும் கொங்கு மண்டலத்திலும் அசைக்க முடியாத வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார்  எடப்பாடி  பன்னீர்ச் செல்வம். தேர்தலில்  வெற்றி  பெற்றவர்கலில்  அதிகமானோர்  எடப்பாடியின்  விசுவாசிகள். ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசிகளான ஜே.சி.டி.பிரபாகரன், மாஃபா பாண்டியராஜன், மதுரை எஸ்.எஸ்.சரவணன், கம்பம் சையது கான், மதுரை கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம்  போன்ற  பலர் தோல்வியடைந்துள்ளனர். தென்  மாவட்டங்களில் வெற்றி  பெற்ற  செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் பன்னீருக்கு நிச்சயம் தோள் கொடுக்க மாட்டார்கள். டெல்டா பகுதியில் ஜெயித்த ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் போன்றவர்களும் எடப்பாடியை எதிர்க்கும் சூழலில் இப்போது இல்லை.

அண்னா  திராவிட   முன்னேற்றக்  கழகம்  வெற்றி  பெற்ற  65  தொகுதிகளில்  சரிபாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்துதான் கிடைத்திருக்கிறது என்பதால் எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.  எடப்பாடிக்கு  விட்டுக்கொடுத்தால் பன்னீர்ச்செல்வம்  கடைசிவரை  இரண்டாம்  இடத்தில்தான் இருக்கவேண்டும்.


தன்னை  எதிர்த்துப்  போட்டியிட்டவருக்கு  எந்த  ஒரு  சந்தர்ப்பமும்  வழங்காத  எடப்பாடி  மிகப்பெரிய  வெற்றி  பெற்றார். அவருக்கு இணக்கமாக இருந்துவரும் தங்கமணியும் எஸ்.பி.வேலுமணியும் அதேபோல வெற்றி  பெற்றதால்  கட்சியில் அவரின் இடத்தை அசைக்க முடியாமல் செய்திருக்கிறது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழ்கத்தின்  சார்பில்  சார்பில் சட்டமன்ற  தேர்தலில்  வெற்றியடைந்த  பலர்  எடப்பாடியின் ஆதரவாளர்கள். எனவே, இப்போதைக்கு  எடப்பாடியின் கை  ஓங்கியுள்ளது. பிரச்சினை  பெரிதானால்   இரட்டைத்தலைமையை  எடப்பாடி இல்லாதொழித்து  சகல அதிகாரங்களையும்  தனது  கையில் எடுத்துக்கொள்வார். அப்போது  பன்னீர்ச்செல்வம்  பனிந்துபோவாரா அல்லது  இன்னொரு  தர்ம   யுத்தத்துக்குத் தயாராவாரா என்பதை  அரசியல்  நோக்கர்களின்  கேள்வியாக  உள்ள‌து.

Tuesday, May 4, 2021

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியின் ஏற்றமும் இறக்கமும்

  இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்த  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும்  தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்  மீண்டும் தமது  கட்சியின் அங்கீகாரத்தைப்  பெற்றுள்ளன. விஜயகாந்தின் தேசிய  முற்போக்கு  திராவிடக்  கட்சி  படுதோல்வியடைந்ததால் அங்கீகாரத்தை  இழந்துள்ளது. ஒருதொகுதியிலும்  வெற்றி பெறாவிட்டாலும் 6.85 சதவீத  வாக்கு  பெற்ற  நாம்  தமிழர்  கட்சி  அங்கீகாரம்  பெற்ற கட்சியாக பரிணமிக்கிறது.

 தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. கடந்த மே மாதம் 2 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கூட்டனி   அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது . மு. ஸ்டாலின் மே 7ம் திகதி  முதல்வராகப் பதவியேற்கிறார்.

தமிழகதேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்ற விபரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

வெற்றி விவரம் திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 18 விசிக - 4 மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4 சிபிஎம் - 2 சிபிஐ - 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி1, மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றீந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்,மக்கள்  விடுதலைக்  கட்சி,  ஆதித்  தமிழர்  பேரவை  ஆகியன  போட்டியிட்ட  தொகுதிகளில்  தோல்வியடைந்தன.

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக ‍ 4 , புரட்சி  பாரதம்  1 தொகுதியில்  வெற்றி பெற்றது. வாசனின்   தமிழ்  மாநில  காங்கிரஸ்  , பெருந்தலைவர்  மக்கள்  கட்சி,  தமிழ்  மக்கள்  முன்னேற்றக்  கழகம், மூவேந்தர்   முன்னேற்றக்  கழகம்,  மூவேந்தர்  முன்னேற்ற  முன்னணி, பசும்  பொன்  தேசியக்  கழகம் ஆகிய  கட்சிகள்  போட்டியிட்ட  தொகுதிகளில்   வெற்றி  பெறவில்லை.

 கமலின் மக்கள் நீதி  மய்யம், சீமானின்  நாம் தமிழர்தினகரனின்  அம்மா  மக்கள்  முன்னேற்றக்  கழகம் ஆகியன ஒரு தொகுதியில்  கூட  வெற்றி  பெறவில்லை.   கமலின்  கட்சியும்தினகரனின்  கட்சியும்  வெற்றி  பெறவில்லை  ஆயினும்   பலதொகுதிகளில் பிரதான  வேட்பாளர்களுக்கு  போட்டியாக  இருந்தன. கொங்கு  மண்டலத்தில் கமலின்  கட்சி  கணிசமான  வாக்குகளைப்  பெற்றுள்ளது

அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகத்தை விட, 4.4 சதவீதம் வாக்குகளை அதிகமாகதிராவிட  முன்னேற்றக்  கழகம்  பெற்றுளது. இந்திய  நாடாலுமன்றத்  தேர்தலைல்  பெற்ற  வாகுகளை விட  அதிகமான  வாக்குகளை  இரண்டு  பிரதான  கட்சிகளும்  பெற்றுள்ளன. இதனால் இரண்டு  கட்சிகளின்  வாக்கு  சத  வீதமும்  அதிகரித்துள்ளன. 234 தொகுதிகளிலும்  தனியாகப்  போட்டியிட்ட  சீமானின்  நாம்  தமிழர்  கட்சி  6.85 சதவீத  வாக்குகளைப்  பெற்று மூன்றாவது  கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.., 37.7 சதவீதம்; .தி.மு.., 33.3; காங்கிரஸ், 4.27; பா..., 3.80; பா.., 2.62; இந்திய கம்யூ., 1.09; மார்க்சிஸ்ட் கம்யூ., 0.85; நாம் தமிழர் கட்சி, 6.85; மக்கள் நீதி மய்யம், 2.45; விடுதலை சிறுத்தைகள் கட்சி, 1.06 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன..தி.மு.., 2016 சட்டசபை தேர்தலில், 40.88 சதவீத வாக்குகளை பெற்றது.

 2019 நாடாளுமன்றத்   தேர்தலில், 19.19 சதவீத  வாக்குகளை மட்டும் பெற்றது. தற்போதைய, சட்டசபை தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் அதிகரித்து, 33.3 சதவீதமாகி உள்ளது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.., 31.7 சதவீதம் வாக்குகளை பெற்றது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில், 33.5 சதவீதமாக அதிகரித்தது. இந்த தேர்தலில், 37.7 சதவீதம் வாக்குகளை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, 6.85 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இக்கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 1.06 சதவீதம்; 2019  நாடாலுமன்றத் தேர்தலில், 3.85 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற, சட்டசபை தேர்தலில், இரண்டு எம்.எல்..,க்கள் அல்லது 6 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும். நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.

  திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணியில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற பாட்டாலி  மக்கள்  கட்சியும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக மாறியுள்ளன...மு.., கூட்டணியில் இடம் பெற்று,


போட்டியிட்ட  அனைத்து  தொகுதிகளிலும்  படுதோல்வியை சந்தித்த தேசிய  முற்போக்கு  திராவிட  கழகம்  அங்கீகாரத்தை இழந்துள்ளது. அக்கட்சியின், வாக்கு  சதவீதம் மிக மோசமாக சரிந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வாகு  சதவீதம் அதிகரித்துஉள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அக்கட்சி சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்  தேர்தலில் வாக்களித்தவர்களைவிட  இந்த சட்டசபை தேர்தலில், 23.87 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். அண்ணா  திராவிட  முன்னேற்றக்க  கழகமும், திராவிட  முன்னேற்றக்  கழகமும் நாடாளுமன்றத்  தேர்தலில், அதிக இடங்களை கூட்டணிக்கு கொடுத்ததால், அக்கட்சிகளுக்கான ஓட்டுவாக்கு  சதவீதம் சரிந்தது.

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காகவே, சிறிய கட்சிகளையும் தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து, இரு கட்சிகளும், தலா, 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டன.இதன் காரணமாக, இந்த கட்சிகளுக்குமான வாக்கு  சதவீதம் அதிகரித்துள்ளது.

Monday, May 3, 2021

மே 7 ஆம் திகதி முதல்வராக பதவி ஏற்கிறார் ஸ்டாலின்


 தமிழக சட்ட சபை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபெற்ற திராவிட  முன்னேற்றக் கழகக் கட்சியின்  தலைவர் ஸ்டாலின் எதிர் வரும் 7 ஆம் திகஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளார்.. திராவிட முன்னேற்றக் கூட்டணி 159  இடங்கலில் வெற்றி  பெற்றது. திராவிட  முன்னேற்றக் கழகம்  தனித்து 125  இடங்களில்  வெற்றி   உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட  வேட்பாளர்களில்  8 பேர்  வெற்றி பெற்றதால் திராவிட  முன்னேற்றக் கழகத்தில் பலம் 133 ஆக அதிகரித்துள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  கூட்டணியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன தலா 4 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன..அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் திராவிட  முன்னேற்றக்  கழகத் தலைவர்  ஸ்டாலின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

  தேர்தல் வெற்றிக்குப்பின் நேரு உள் அரங்கில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

திராவிட  முன்னேற்றக் கழகத்தின்  மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல்வராகிறார். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா  குற்றவாளியாக தீர்ப்பு வெளியானதால் . பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின்  மறைவுக்குப்   பின்னர்  சசிகலாவை  முதல்வராக்க  முயற்சி  செய்யப்பட்டது.  ஜெயலலிதாவுடன் சசிகலாவும்  குர்ரவாலி  என  தீர்ப்பு  வெளியானதால்  தனக்கு  விசுவாசமான  எடப்பாடை  பழனிச்சாமியை  முதலமைச்சராக  அறிவித்தார்   சசிகலா.

தமிழக முதல்வராகிறார் ஸ்டாலின்; கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழக சட்டசபைத்  தேர்தல்  முடிவடைந்த  பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்   திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத்  தெரியவருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் மீது தமிழக  மக்கள்  வெறுப்படைந்துள்ளனர் என தேர்தலுக்கு முன்னைய கருத்துக்  கணிப்புகள்  தெரிவித்தன. தேர்தலுக்குப்  பின்னரான  கருத்துக் கணிப்புகளும்  அதனை  உறுதிப்படுத்தியுள்ளன.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கூட்டணியின்  முதல்வர்   வேட்பாளராகஎடப்பாடி கே பழனிசாமி முன்னிறுத்தப்பட்டார்.   திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணியின்  முதல்வர்  வேட்பாளராக   மு..ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். டி.டி.வி தினகரன், ( அமமுக ) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) ஆகியோரும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர்.

அண்ணா  திராவிட  முன்னேற்றக் கழக  கூட்டணியில்  பாரதீய  ஜனதாக்  கட்சி,  பாட்டாளி  மக்கள்  கட்சி உட்பட 10 கட்சிகள் இணைந்து தேசிய  ஜனநாயக கூட்டணி  எனும்  பெயரில்   தேர்தலைச்  சந்தித்தன.

 திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ்,, மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்றக்  கழகம்,  விடுதலைச்  சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்  உட்பட 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்தன.

டிடிவி தினகரனின்  தலைமையிலான கூட்டணியில் வியஜகாந்ந், எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சரத்துமாரின்  கட்சி, ஐஜேகே என மொத்தமாக 12 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த்தனர். சீமான் கூட்டணி  இல்லாமல் 234  தொகுதிகளிலும்  வேட்பாளர்களை  நிறுத்தினார்.

தமிழக தேர்தலில்  ஐந்தும்முனைப்  போட்டி  என்றாலும் இரண்டு  பிரதான  கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டி  என்பதை   கருத்துக்  கணிப்புகள்  உறுதிப்படுத்தியுள்ளன.


எடப்பாடி   பழனிச்சாமி, . பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமையில்  அண்ணா  திராவிட  முன்னேற்றக் கழகம் தேர்தலைச்  சந்தித்தது.  இரட்டைத்  தலைமையில்  அதிகாரம்  மிக்கவர்  யார்  என்பதில்  இருவருக்கும்  இடையில் கருத்து  வேறுபாடு  இருந்தது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம்  தோல்வியடைந்தால், இரட்டைத் தலைமைக்கு  ஆபத்து  உள்ளது.

அண்ணா திராவிட  முன்னேற்றக்க்  கழகத்தின்  குடுமி   பாரதீய  ஜனதாக்  கட்சியின்  கையில்  உள்ளது. தமிழக  முதல்வரை   பாரதீய  ஜனததான் தெரிவு செய்யும்  என  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்  எல்.  முருகன்    அறிவித்து சலசலப்பை  ஏற்படுத்தினார்.

திராவிட  முன்னேற்றக்  கழகக்  கூட்டணியில்  எதுவித  சலசலப்பும்  இல்லை. அண்ண  திராவிட  முன்னேற்றக்  கழகத்தையும்,  பாரதீய  ஜனதாக்  கட்சியையும்  விமர்சித்து    தேர்தலில்  பிரசாரம்  செய்யப்பட்டது.


தேர்தலுக்கு   முன்னைய   கருத்துக்  கணிப்புகளும்  தேர்தலுக்குப்  பின்னரான  கருத்துக்  கணிப்புகளும் திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணிக்கு  சாதகமாகவே  உள்ளன. அண்ணா  திராவிட   முன்னேற்றக்  கழக  கூட்டணிக்கு  50  தொகுதிகள்  கிடக்கும்  என  கருத்துக்  கணிப்புகள்  தெரிவிக்கின்றன. அந்த  50  தொகுதிகளிலும்  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம் தான்  வெற்ரி  பெறுமா அல்லது  கூட்டணிக்  கட்சிகளுக்கு  ஒன்றிரண்டு தொகுதிகள் கிடைக்குமா என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாரதீய  ஜனதா  போட்டியிட்ட சகல  தொகுதிகளிலும்  தோல்வியடைய  வேண்டும்  எனபதே எதிர்க்  கட்சிகலின்  பிரசாரத்தில்  முக்கிய  வேண்டுகோள். ஒரு  தொகுதியிலாவது  வெற்றி  பெற  வேண்டும்  என  பரதீய  ஜனதா  விரும்புகிறது.

தமிழகத்தில்  உள்ள 234 தொகுதிகளில், 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில் 3,585 பேர் ஆண்களும், 411 பேர் பெண்களும் மற்றுமுள்ள 2 பேர் மூன்றாம்பாலினத்தவர்களும் ஆவார்கள். கடந்த ஏப்ரல் 6‍ம் திகதி நடைபெற்ற தேர்தலில்  மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.


கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் தமிழக தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது

ஏபிபி - சி-வோட்டர் 

ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் ரிசர்ச் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு. கூட்டணி முந்தி நிற்கிறது. இந்தக் கூட்டணி அதிகபட்சமாக 172 இடங்கள் வரை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு. கூட்டணிக்கு  46.7 சதவிகித வாக்குகளும், .தி.மு. கூட்டணி 35 சதவிகித வாக்குகளும்  கிடைக்கும்  என்று ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு. + : 160-72,.தி.மு. + : 58-70, .நீ.+ : 0-2, ..மு. - 0-2,மற்றவை - 0-3 

ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ்

ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு. கூட்டணி அதிகபட்சமாக 170 இடங்கள் வரை பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு. கூட்டணி 48.9 சதவிகித வாக்குகளையும், .தி.மு. கூட்டணி 35.5% வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு.+ :160-170, .தி.மு.+ : 58-68, .நீ.+ : 0-2,..மு.+ : 4-6, மற்றவை: 0  

கூட்டணி தவிர்த்து கட்சிவாரியாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ரிபப்ளிக் ரி.வி

தி.மு.: 137-147,காங்கிரஸ்: 13-17 ,.தி.மு.: 49-59  , பா..: 2-4 ,பா..: 5-7 ,.நீ.: 0-2, ..மு.: 4-6 ,மற்றவை: 6-10                                                   

இந்தியா ருடே - ஆக்ஸிஸ் மை இந்தியா

இந்தியா ருடே யும் Axis My India நிறுவனமும் இணைந்து நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில், தி.மு. கூட்டணி அதிகபட்சமாக 195 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு. 48 சதவிகித வாக்குகளையும், .தி.மு. 35 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்பிருக்கிறது எனவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு. கூட்டணி: 175-195, .தி.மு. கூட்டணி - 38-54,   ..மு. கூட்டணி - 1-2 ,.நீ. கூட்டணி - 0-2 ,மற்றவை – 0

.தி.மு.., தி.மு.-வோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எத்தனை இடங்களை வெல்லும் என்பதையும் கணித்திருக்கிறது இந்தியா ருடே 

காங்கிரஸ்: 16-18.வி.சி.: 3-5, இடதுசாரிகள்: 9-11, பா..: 2-4 , பா..: 2-4 ,.யூ.எம்.எல்: 0-1 

Today's Chanakya 

Today's Chanakya கருத்துக்கணிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பிலும் தி.மு. கூட்டணிதான் முந்தி நிற்கிறது. அதிகபட்சமாக 186 இடங்களை வரை தி.மு. கூட்டணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தோராயமாக தி.மு. 51% வாக்குகளையும், .தி.மு. 37% வாக்குகளைப் பெறும் எனவும் ருடேஸ் சாணக்கியா கணித்திருக்கிறது

தி.மு.+ :175-186, .தி.மு.+ : 57-68, .நீ.+ : 2-6,

தந்தி ரிவிவி

தந்தி  ரிவி  நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் தி.மு. கூட்டணியே முன்னிலைவகிக்கிறது. 133 இடங்களில் தி.மு. கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது

தி.மு.+ : 133, .தி.மு.+ : 68,  கடும் போட்டி: 33

P-MARQ 

கருத்துக்கணிப்புகள் நடத்தும் நிறுவனமான P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பில், தி.மு. அதிகபட்சமாக 190 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது

தி.மு.+ : 165-190,  அ, தி.மு.+ : 40-65 , ..மு.+ : 1-3,  .நீ.+ : 1-3, மற்றவை: 0-3

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான பிறகு, ``தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னதைத்தான் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன.

 சொல்லிவைத்தது  போன்று  அனைத்து கருத்துக்  கணிப்புகளும்  திராவிட  முன்னேற்றக்   கழக  கூட்டணியின்  வெற்றியை  உறுதிப்படுத்தியுள்ளன.

கமலின்  கட்சியும், தினகரனின்  கட்சியும் வெ பெறும் வாய்ப்பிருப்பதாக  அனைத்துக் கருத்துக்  கணிப்புகளும்  தெரிவிக்கின்றன. சீமானின்  கட்சி  வெற்றி  பெறும்  என எந்த  ஒரு  கருத்துக்  கணிப்பும்  தெரிவிக்கவில்லை. திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டனிக்கு  50  சத  வீதத்துக்கு  அதிகமான  வாக்குகள்  கிடைக்கும் என கருத்துக்  கணிப்புகள் தெரிவிக்கின்றன