Showing posts with label ரி20 உலகக்கிண்ணம்22. Show all posts
Showing posts with label ரி20 உலகக்கிண்ணம்22. Show all posts

Monday, October 17, 2022

மேற்கு இந்தியாவை வீழ்த்திய ஸ்கொட்லாந்து

டி20 உலகக் கிண்ண தகுதிகாண்  போட்டியில்  ஸ்கொட்லாந்தை எதிர்த்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள்   42 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. நேற்றைய  முதலாவது போட்டியில் ஆசிய சம்பிய்னான  இலங்கை நமிபியாவிடம் தோல்வியடைந்த அதிர்சி நீங்க முதல் இன்னொரு அதிர்ச்சி உண்டானது. 

 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள நான்கு  அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.  முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ஓட்டங்ளும், கிறிஸ்  ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்கள் எடுத்தனர்..

    161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நம்பிக்கையுடன் மேற்கு இந்தியத் தீவுகள் களம்  இறங்கியது.  தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர்.   மேயர்ஸ் 20 ஓட்டங்களுடனும், , இவின் லீவிஸ் 14 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து கேப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர்.

 பூரன் 4  , புரூக்ஸ் 4  , பவல் 5  , அகைல் ஹோசன் 1 ஓட்டங்களுடனும், அல்ஜாரி ஜோசப்  ஓட்டம் எடுகாமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அ 79 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9வது விக்கெட்டுக்கு ஹோல்டருடன் ஒடெய்ன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இறுதியில்   18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது. ஸ்கொட்லாந்து  அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது ஸ்கொலாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மே

ற்கு இந்தியா சார்பில்  அதிகபட்சமாக் ஹோல்டர் 38 எடுத்தார்.கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நமிபியாவிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.