Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Wednesday, June 18, 2025

வீழ்ச்சியடைகிறது இலங்கையின் பொருளாதாரம்

இஸ்ரேல் ஈரான்  போர்  உலகில்  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  யுத்தம் வெடித்த அடுத்த நொடியே  எண்ணெய்  விலை எகிறியது. அதன் தாக்கம்  இலங்கையில் இன்னமும் ஏற்படவில்லை , இது எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியாது . தனது பாதுகாப்புக்காக  ஈரான்  மீது தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல் கூறுகிறது.

 ஈரானின் அணு ஆயுத  உலைகள், விஞ்ஞானிகள்,  தளபதிகள் இஸ்ரேலின்  இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் கையைக்  கட்டிக்கொண்டு இருக்கவில்லை.  ஈரானின் பதில்தாக்குதலால்   இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் பற்றி எரிகின்றன இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம்  இறங்கி உள்ளது.  ஈரானுக்கு ட்ரம்ப்  எச்ச்சரிக்க விடுத்துள்ளார்.

ரஷ்யா,சீனா, அரபு நாடுகள்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   ஈரான், இஸ்ரேல் யுத்தத்தால் வல்லரசுகள்  இரண்டாகி உள்ளன.

  மோதல் அதிகரித்தால் எரிபொருள் விநியோகம், தேயிலை ஏற்றுமதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான துறைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எரிபொருள், தேயிலை துறைகளில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை.  நாளடைவில் பாதிப்பு அதிகமாகலாம்

 இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 20,000 இலங்கையர்களின் பாதுகாப்பு , தெஹ்ரானில் வசிக்கும் சுமார் 50 பேரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய்,தங்கத்தின் விலை உயர்ந்தது

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியாகும் நாடுகளில் ஈரான் முக்கியமானது.  இந்த நிலை தொடர்ந்தால்  கிழக்கு ஆசியாவில் தேயிலை ஏற்றுமதி  வீழ்ச்சியடையும் அபாயம்  உள்ளது. .

சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் , ஹைஃபா ஆகிய நகரங்களில்  வசிபதாக  இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


 விவசாயம். பராமரிப்பாளர்,  கட்டுமானத் துறை, ஹோட்டல்கள்  உணவகங்கள் தொழிற்சாலை ஆகியவற்ரில் இங்கையர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

 மோதல் தீவிரமானதால் இலங்கைகுத் திரும்பும்  கோரிக்கையை எவரும் விடுக்கவில்லை,  இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள 10 இலங்கையர்கள் அபுதாபியில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள  இலங்கைத் தூதரகம் உதவி செய்கிறது. 

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லத்தயாரான 600 இலங்கை யரின்  பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் தற்போது மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். கட்டார் , சவுதி அரேபியா, குவைத் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஆகியவை அனைத்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 80 சதவீதத்திர் உள்ளனர்.

  கடந்த 20 ஆண்டுகளில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் நமது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் சராசரியாக 80 சதவீதத்தை செலுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 6.5 பில்லியன் டொலரை எட்டியது. இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள்.   2025 ஏப்ரலில் 646.10 மில்லியன் அமெரிக்க டொலராக  இருந்த இலங்கையின் பண அனுப்பீடுகள் மே மாதத்தில் 641.70 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

. இந்த முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே அவை நமது நாட்டிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலில் அதிக சதவீதத்தை வழங்குகின்றன. எனவே, அதன் அந்நியச் செலாவணியின் இந்த முக்கிய ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது இலங்கையின்  கட்டாயமாகும்.

  

Tuesday, May 9, 2023

பொருளாதர மீட்சிக்கான பாதையில் செல்ல இலங்கையால் முடியும்

பொருளாதாரத்தால்  பாதிக்கப்பட்ட இலங்கையை மீட்டெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க களத்தில் குதித்தார். அவருக்கு  ஜனாதிபதி பதவி கிடைத்ததும் இலங்கை  உடனடியாக மீண்டு விடும் என எவரும் நம்பவில்லை. இலங்கையின்  பொருளாதாரத்தை  நேர்படுத்துஅதர்கு அவர் பரயத்தனப் பட்டார். பல தடங்கல்கள்   போடப்பட்டன. அனைத்தையும் தாண்டி நிமதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

கடன்  கிடைக்குமா  கிடைக்காதா எனப் பட்டி மன்றம் நடந்த போது கடனைப் பெற்ரு  அரசியல் எதிரிகளைப் பார்த்து   மெதுவாகச் சிரித்தார். அந்தக் கடன் முழுமையாகக் கிடைப்பதற்கு பல படிகளைத் தாண்ட வேண்டி உள்ளது.இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டளவில்  மீட்சிக்கான பாதியில் இலங்கை செல்லும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன்.

 அனைத்து சீர்திருத்தங்களையும், முறையான அமுலாக்கத்தையும், கடனை மறுசீரமைப்பதையும் செப்டெம்பர் மாதத்திற்குள் துரிதப்படுத்தினால், 2024 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் இலங்கை  செல்லும் என  அவர் தெரிவித்துள்ளார்.

 "நிதி, பணவியல், நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்பு நிகர சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திட்டம் மிகவும் லட்சியமானது. இலங்கைக்கான செயல்பாட்டின் அடுத்த கட்டம், அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நல்ல நம்பிக்கையில் ஈடுபடுவது மற்றும் முதல் மதிப்பாய்வுக்கு முன் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் சீர்திருத்தங்களை நிறைவேற்றி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினால், நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்லும்,” என்று அவர் கூறினார். கொரியா குடியரசின் இஞ்சியோனில் வருடாந்திர கூட்டம்.

இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணி மறுஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

“அமுலாக்கம் எவ்வாறு வருகிறது என்பதைப் பார்க்க நாங்கள் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருவோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பான முழு பிரச்சினையையும் நாங்கள் கவனிப்போம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தில் நிறைய சீர்திருத்தங்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்ட சீனிவாசன், செயல்படுத்துவது முக்கியமானது என்று வலியுறுத்தினார். "இந்த ஆண்டு 3% பொருளாதார சுருக்கத்தை நாங்கள் கணித்தாலும், 2024 க்கு 1.5% நேர்மறையான வளர்ச்சியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நான்காண்டு IMF திட்டத்தை பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

IMF பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, இருண்ட வெளிப்புறக் கண்ணோட்டம் இருந்தபோதிலும், ஆசியா மற்றும் பசிபிக் ஆற்றல்மிக்கதாக இருக்கும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு 70% பங்களிக்கும் - சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

IMF அதன் அக்டோபர் 2022 கணிப்பையும் 2023 இல் 0.3% முதல் 4.5% வரை உயர்த்தியுள்ளது. தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை மீண்டும் திறந்த பிறகு இந்த ஆண்டு 5.2% வளர்ச்சி விகிதத்துடன் பிராந்தியத்தின் வளர்ச்சி சீனாவால் வழிநடத்தப்படும். சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது அதன் வழக்கமான முதலீட்டுப் பொருட்களிலிருந்து அல்ல, நுகர்வுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் சீனப் பயணிகளைச் சார்ந்திருக்கும் நாடுகள் பயனடையும் என்றும் அவர் கூறினார்.

கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மெதுவாகத் தொடங்கிய போதிலும், ஏப்ரல் மாதத்தில் 5,118 சீனப் பயணிகளுடன் ஆறாவது இடத்தைப் பெற்று, இலங்கையின் முதல் 10 மூலச் சந்தைகளில் இடம்பிடிக்க சீனா முடிந்தது. மார்ச் மாதத்தில் இது முதல் 10 மூலச் சந்தைகளில் நுழைந்து, ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

Sunday, May 24, 2020

பத்து ஆண்டுகளுக்கு பொருளாதாரம் பாதிக்கப்படும் பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை


கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், எளிதாக மீண்டுவருவது என்பது கடிமானது என்று முன்னணி  பொருளாதார வல்லுநர் நோரொயல் ரூபினி தெரிவித்துள்ளார்.

உலகளவில்  டாக்டர் டூம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி, 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதார சிக்கலை சரியாகக் கணித்துக் கூறியவர். துருக்கியில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்கும் ரூபினி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹார்வார்ட் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ரூபினி ஐஎம்பி அமைப்பில் பொருளதாளாதார ஆலோசகராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ரிசர்வ் வங்கி, உலக வங்கி, இஸ்ரேல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஜனாதிபதி  கிளிண்டன் காலத்தில் அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் உலகளவில் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட தனது பொருளாதார செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்து லாக்டவுன் அறிவித்தது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மனித உயிர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரி்விக்கின்றனர்

இந்த சூழலில்  டாட்டர் டூம் என்று அழைக்கப்படும் நோரியல் ரூபினி கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப்பொருளாதாரம் மீள்வது குறித்து பிபிசிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு 10 ஆண்டுகளுக்குவரை நீடிக்கும் என்பது எனது கணிப்பு. இந்த பாதிப்பிலிருந்து ஒவ்வொரு நாடும் எளிதாக மேலே வருவது என்பது கடினமான காரியம்

கொரோனா வைரஸுக்குப்பின் சுருக்கமாகச் சொன்னால், பலநாடுகளில் வேலையிழப்பு அதிகமாக ஏற்படும், முன்புபோல் வேலைக்கு ஆள்எடுப்பது இருக்காது. அப்படி ஓர் ஆண்டுக்குள் உலகப்பொருளாதாரம் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக உலக நாடுகள் அறைகூவல் விடுத்தால் அந்த பொருளாதாரம் நோய்பீடித்ததாக, வலுவிழந்ததாக, புத்துணர்ச்சியில்லாததாகவே இருக்கும்

இதுவரையாரும் பார்த்திராத  பொருளாதாரச் சரிவு உலக நாடுகளில் இருக்கப்போகிறது. உலகப்பொருளாதாரச்  சிக்கலின்போது கூட உற்பத்தி தடைபடுவதற்கும், வீழ்ச்சி அடைவதற்கும் 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் கரோனா பாதிப்பால், 3 ஆண்டுகள் எடுக்கவில்லை, 3 மாதங்கள் எடுக்கவில்லை, 3 வாரங்களில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவும் மளமளவென சரிந்துவிட்டது.
உலகப்பொருளாதாரத்தில் மீட்சி என்பது “U”வடிவத்தில்தான் இருக்கும் அல்லது “L” வடிவத்தில் இருக்கும். அதாவது மிகப்பெரிய பொருளாதார மந்தமாகத்தான் இருக்கும். கரோனாவினால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வளர்ந்த, வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஏழைகளின் வேலையிழப்பு மோசமாக இருக்கும்

(“U” -வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதர வளர்ச்சி அடிமட்டத்துக்கு வீழ்ச்சி அடைந்து, நீண்டகாலத்தில்தால் மெதுவாக வளர்ச்சி அடையும் அல்லது வளர்ச்சி இல்லாமலும் போகலாம்)
(“L” -வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதார வளர்ச்சி திடீரென மோசமாக சரிவைச்சந்தித்து, அந்த பாதிப்பு நீண்டகாலத்துக்கு தொடர்வதாகும்)

கொரோனாவால் பறிபோன வேலையிழப்புகள் அனைத்தும் பாதியளவுதான் மீண்டும் கிடைக்கும், அதிலும் முன்பு வாங்கிய ஊதியத்தில் பாதியளவும், எந்தவிதமான பலன்களும் இல்லாமல் இருக்கலாம், அல்லது பகுதிநேர வேலையாகக்கூட இருக்கலாம். வேலையில் ஒருவிதமான பாதுகாப்பின்மை, வருமானமும், ஊதியமும் சராசரியாகத்தான் இருக்கும்

2-ம்கட்ட கொரோனா அலை வந்துவிடும் என்பதால், இன்னும் பல நாடுகள் முழுமையாக பொருளாதார நடவடிக்கையைத் தொடங்காமல் உள்ளன. நீ்ங்கள் கடைகளைத் திறந்துவைக்கலாம், கடைக்கு வந்து சென்றவர்கள் திரும்பி வரப்போகிறார்களா என்பதுதான் கேள்வி. சீனாவில் உள்ள பெரும்பலான ஷாப்பிங் மால்கள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகிறது. பாதி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஜெர்மனியில் கடைகள் திறந்திருக்கின்றன, ஆனால் பொருட்களை வாங்க மக்கள் கடைக்கு செல்லவில்லையே

வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளைவிட வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஆசியாவில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும். ஆனால், சீனா, அமெரிக்கா இடையே பெரும் பிளவு உருவாகும் இரு நாடுகளில் யார் சூப்பர் பவர் என்பதை தீர்மானி்ப்பதில் ஆசிய நாடுகள் வலிந்து தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கும்

இந்த ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உலகின் மற்ற நாடுகளுக்குச் செல்லும் போது நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்களா அல்லது எதிராக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழும்.

நீங்கள் எங்களுடைய செயற்கை நுண்ணறிவு முறைகளை, தொழில்நுட்பங்களை, ரோபாட்டிக்ஸை பயன்படுத்துங்கள், அல்லது எங்களின் போட்டியாளரின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்ற போட்டி வரும். உலகில் இன்னும் பிரிவுகள் உருவாகும்.
இவ்வாறு ரூபினி தெரிவித்தார்