Wednesday, November 29, 2023

ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவ்த்துக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை வழங்குமாறு, 10 அணி நிர்வாகங்களையும் ஐபிஎல் அமைப்பு கேட்டுக்கொண்டது. அதன்படி, நேற்று மாலை அந்த பட்டியலை வழங்குவதற்கான அவகாசம் முடிவுற்றது. இந்நிலையில், ஒவ்வொரு அணியாலும் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள இருப்புத்தொகை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை  

பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி, கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங் மற்றும் அம்பதி ராயுடு (ஓய்வு), டுவைன் பிரிட்டோரியஸ்.

கையிருப்புத் தொகை - ரூ.31.4 கோடி

டெல்லி

ரிலீ ரோசோவ், ரோவ்மேன் பவல், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோடி, ரிபால் படேல், அமன் கான், பிரியம் கார்க், சேத்தன் சகாரியா

கையிருப்புத் தொகை - ரூ.28.95 கோடி

 

ராஜஸ்தான்  

ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்

கையிருப்புத் தொகை - ரூ.14.5 கோடி

 

பஞ்சாப்

பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பாவா, ஷாருக் கான்

கையிருப்புத் தொகை - ரூ.29.1 கோடி

கொல்கத்தா

ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.

கையிருப்புத் தொகை - ரூ.32.7 கோடி

ஐதராபாத்

 

ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் ஷர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித்.

கையிருப்புத் தொகை - ரூ.34 கோடி 

லக்னோ

 

டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெய்தேவ் உனட்கட், மனன் வோஹ்ரா, கரண் ஷர்மா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஸ்வப்னில் சிங், அர்பித் குலேரியா

டிரேடில் வெளியேறிய வீரர்கள்: ரொமாரியோ ஷெப்பர்ட், ஆவேஷ் கான்

டிரேடில் பெறப்பட்ட வீரர்:  தேவ்தட் பாடிக்கல்

கையிருப்புத் தொகை - ரூ.13.9 கோடி

 குஜராத்

யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா.

கையிருப்புத் தொகை - ரூ.13.85 கோடி 

மும்பை

அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்

டிரேடில் பெறப்பட்ட வீரர்: ரொமாரியோ ஷெப்பர்ட்

கையிருப்புத் தொகை - ரூ.15.25 கோடி

 பெங்களூர் :

வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்

கையிருப்புத் தொகை - ரூ.40.75 கோடி

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்கள்

ஆசிய பாராலிம்பிக் கமிட்டியின் மாநாடு, பொதுச் சபை    ஆகியன சவூய்ஜி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற  போது  ஆசியவின் சிறந்த தடகள  ஆண் விரராக  பெங் ஜெங்,சிறந்த  பெண் தடகள வீராங்கனையாக அசிலா மிர்சயோரோவா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த  கை இல்லாத வில்லாளி'ஷீத்தல் தேவி,   சிறந்த இளைஞர் விளையாட்டு வீரருக்கான விருதைப் பெற்றார்.

 சிறந்த ஆண் தடகள வீரர், சிறந்த பெண் தடகள வீரர், சிறந்த இளைஞர் தடகள வீரர், சிறந்த குழு செயல்திறன், சிறந்த புகைப்படம் எடுத்தல் , முன்மாதிரியான ஆசிய அதிகாரி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் நடைபெற்ற சக்கர நாற்காலி கூடைப்பந்து உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈரானின் ஆண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிக்கு சிறந்த குழு செயல்திறன் விருது கிடைத்தது.

பீஜிங் 2022 குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து, டவுன்ஹில் ஸ்கீயர்களின் சுறுசுறுப்பு, திறமை மற்றும் வேகத்தைப் படம்பிடித்ததற்காக ஜப்பானைச் சேர்ந்த மசமைன் கவாகுச்சி சிறந்த புகைப்படக்கலைஞர் விருது பெற்றார்.

  ஆசிய அதிகாரிக்கான இறுதி விருது கொரிய பாரா சைக்கிள் ஓட்டுதல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கொரியா குடியரசைச் சேர்ந்த   யங்-ஜூ லீக்கு கிடைத்தது. அவரது தலைமையில், ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றனர்.

 

Tuesday, November 28, 2023

இத்தாலியின் முதலாவது டேவிச் கிண்ணம்


    1976-க்குப் பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி இதுவரை அதிக முறை அதாவது 32 முறை இந்த கோப்பையை வென்ற அணி அமெரிக்கா ஆகும்.

 கிரிக்கெட்டில் உலகக் கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி  ஸ்பெய்னில் நடத்தப்பட்டு நடந்தது.  இம்முறை அவுஸ்திரேலியாவும், இத்தாலியும் இறிதிப் போட்டியில் மோதின 2-0 என்ற கணக்கில் இத்தாலி ஜெயித்தது முதன் முதலாக டேவிஸ் கிண்ணத்தை வென்றது.  கோப்பையை தட்டித் தூக்கியது.

ஸ்பெயினின் மலாகாவில் நடந்த டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6௩ 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த ஜானிக் சின்னரின் அற்புதமான செயல்திறன் இத்தாலியை 1976 க்குப் பிறகு முதல் டேவிஸ் கோப்பை பட்டத்தை வெல்ல உதவியது.

நேற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்ததோடு, ஆடவர் விளையாட்டின் எதிர்காலமாக விளங்கும் இத்தாலிய வீரர், மலாகாவில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை

தொடக்க ஆட்டத்தில், மேட்டியோ அர்னால்டி 7௫ 2௬ 6௪ என்ற செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை தோற்கடித்து தனது சக வீரரை சுதந்திரமாக ஆடுவதற்கு சரியான தளத்தை வழங்கினார். இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த ஒரு ஆட்டத்தில், இத்தாலிய வீரர் சின்னர், ஒரு இறுக்கமான தொடக்க செட்டை வென்றதால் வேகம் கூடியது.6௩, 6-0 என்ற கணக்கில் அலெக்ஸ் டி மினாரை ஆதிக்கம் செலுத்தியதன் மூலம், ஜானிக் சின்னர் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இத்தாலிய கப்டன் பிலிப்போ வோலண்ட்ரி கூறுகையில், "இந்த அணியில் இந்த வீரர்களை கொண்டிருந்தது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இவர்களை எனது அணியில் கொண்டதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த இரண்டு வருடங்களாக நீங்கள் இங்கு இருந்தீர்கள், அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இத்தாலிக்கு, ரசிகர்கள் எங்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை படைத்தது இந்திய இளம் படை


 திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  இரண்டாவது  ரி20 போட்டியில் இந்தியா 44  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில்      நான்கு விக்கெற்கடை இழந்து 235 ஓட்டங்கள் எடுத்தது  9 191அவுஸ்திரேலியா சகல விக்கெற்களையும்   இழந்து 191 ஓட்டங்கள்  எடுத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய  0அவுஸ்திரேலிய அணியின் கப்டன் மேத்யூ வேட் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். -  முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்  அதிரடியாக  ஓட்டங்களைச் சேர்த்தனர்.   துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் , ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 7 ஆண்டு கால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளது. அதிரடியாக விளையாடிய  ஜெய்ஸ்வால் 25 பந்துகளில்  53 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்  ஆறு ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவின் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றைய போட்டியில் இந்த இளம் படைத்த அடித்த 77 ஓட்டங்கள் பதிவாகியுள்ளது.

2016-ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழந்து 74 ஓட்டங்கள் குவித்து இருந்ததே சாதனையாக இருந்த வேளையில் 7 ஆண்டுகால சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. ருதுராஜ் கெய்க வாட் 53  ஓட்டன்fகளு, இஷான்கிட்தான் 52 ஓட்டங்களும் சூரியகூமார் யாதவ்  19  ஓட்டங்களும் எடுத்தனர். அதிரடி மன்ன ரிக்கு சுங்  9 பந்துகளில்  31  ஓட்டங்கள் எடுத்தார். இந்திய்ச்ச் 20 ஓவ்ச்ர்க்ச்Zளிஒ 235 ஓட்டங்கள் எடுத்தது.

 236ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  ரி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களுக்குள்  இந்திய வீரர்களாக ரோஹித் , ராகுல் ஆகிய இருவரேஅரைச் சதமடித்தனர்.        பவர்பிளே ஓவர்களுக்குM  அரைசதம் அடித்த மூன்ராவது ஆவது இந்திய வீரராக ஜெய்ஸ்வால்  இணைந்துள்ளார்.

Saturday, November 25, 2023

பாரிஸ் ஒலிம்பிக்குக்கு 400,000 புதிய டிக்கெட்டுகள்

  பாரிஸில் அடுத்த ஆண்டு  நடைபெற  உள்ள  ஒலிம்பிக் ,பாராலிம்பிக்ஸிற்கான 400,000 கூடுதல் டிக்கெட்டுகளை மாத இறுதியில் வெளிடப்படும் என  ஒலிம்பிக் கமிட்டி அரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையதளத்தில் நவம்பர் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கும் என்றும், சர்ஃபிங் தவிர அனைத்து விளையாட்டுகளுக்கும் அனைத்து விலை வகைகளிலும் இருக்கைகள் கிடைக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். லாட்டரி இல்லாமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் விற்கப்படும்.

பெரும்பாலான டிக்கெட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளுக்கானவை, தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்கான டிக்கெட்டுகளும் கிடைக்கின்றன என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

புதிய ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு டிக்கெட்டுகள் 50 யூரோக்களுக்கு ($55) கீழ் விற்கப்படும். மிக விலையுயர்ந்த ஒலிம்பிக் டிக்கெட்டுகள் தொடக்க விழாவிற்கு 2,700 யூரோக்கள் ($2,900) ஆகும். மலிவான டிக்கெட்டுகள் 24 யூரோக்கள் ($26).

ஒலிம்பிக்கிற்கான 10 மில்லியன் டிக்கெட்டுகளில் 7.2 மில்லியன் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், அடுத்த ஆண்டு மேலும் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாராலிம்பிக் போட்டிகளுக்கான விற்பனை விவரம் வெளியிடப்படவில்லை. அவற்றில் 2.8 மில்லியனை விற்பனை செய்ய அமைப்பாளர்கள் இலக்கு வைத்துள்ளனர்.

இந்திய அணியின் இரண்டு சாதனைகள்


 விசாகபட்டனட்தில்நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 போட்டியில்   209 ஓட்டங்கள் எனும் இமாலய  இலக்கை விரட்டிய  இந்தியா  ஒரு பந்து  மீதமிருக்கையில் இந்தியா   1 விக்கெற்றால்  வெற்றி பெற்றது.

 நாணயச்சுழற்சியில் வெற்ரி பெற்ற  இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெசுத்தாடிய அவுஸ்திரேலியா   3 விக்கெர்களை இழந்து 208  ஓட்டங்கள்  எடுத்தது. அதிரடியாக விளையாடிய  ஜோஸ் இங்கிலீஷ்  50  பந்துகலில்  110 ஓட்டங்கள் எடுத்தார்.,ஸ்மித் 52 ஓட்டங்கள் எடுத்தார்.

209 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 0, ஜெய்ஸ்வால் 22   ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.      கப்டன் சூரியகுமார் யாதவ் , இசான் கிசான் ஆகியோர் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 112ஓட்டங்கள் சேர்த்தது. . அதில் சூரியகுமார் 80 (42) ஓட்டங்களும்,  இஷான் கிசான் 58 (39) ஓட்டங்களும் எடுத்து வெற்றியை நெருங்கி  ஆட்டமிழந்தனர். ஆனாலும் கடைசி நேரத்தில் திலக் வர்மா, அக்சர் படேல் போன்றவர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்தியா தடுமாறியது. அப்போது போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம்  ங்கு சிங் 22* (14) ரன்கள் விளாசி சிக்ஸருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார்.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 209 ஓட்டங்களைத்  துரத்திய இந்தியா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து புதிய சாதனை படைத்தது.   கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் மேற்கு அணிக்கு எதிராக 208 ஓட்டங்களை இந்தியா  சேசிங் செய்திருந்ததே முந்தைய சாதனையாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக ரி20 போட்டியில் 200 ஓட்டங்களை சேசிங் செய்து இந்தியா வென்றுள்ளது.

  கேஎல் ராகுல், ரோஹித்தை மிஞ்சிய சூரியகுமார்

   கடந்த 2013ஆம் ஆண்டு ராஜ்கோட் நகரில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்களை சேசிங் செய்ததே முந்தைய அதிகபட்ச இலக்காகும். அதை விட இப்போட்டியையும் சேர்த்து மொத்தமாக 5 முறை இந்தியா 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது. ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை  சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

1. இந்தியா : 5*

 2. தென்னாப்பிரிக்கா : 4

 3. பாகிஸ்தான்/அவுஸ்திரேலியா : தலா 3

ரிங்கு சிங் அடித்த   சிக்ஸ் செல்லாது

கடைசி பந்தில் ஒரு ஓட்டம் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது ரிங்கு சிங் மிட் ஆன் திசையில் பிரமாண்ட சிக்ஸரை ஒன்றினை பறக்கவிட்டு போட்டியை முடித்தார். ஆனால் ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் செல்லாது என்றும் போட்டி முன்கூட்டியே முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏன்? அதற்கு விதிமுறை கூறும் விளக்கம்   கடைசி பந்தினை சீன் அபோட் நோபாலாக வீசியதால் போட்டி 19.5 ஓவரிலேயே முடிந்து விட்டது. கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவை என்கிற நிலையில் பந்துவீச்சாளர் நோபால் வீசியதால் அங்கேயே உதிரியாக ஒரு ஓட்டம் வழங்கப்பட்டு விடும். அதனால் அந்த பந்தில் கிடைக்கும் கூடுதல் ஓட்டங்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று விதிமுறை கூறுகிறது.

                  ஜெய்ஸ்வாலை நம்பி ஏமாந்த ருதுராஜ்

209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.  முதல் விக்கெட்டாக ருதுராஜ் ஆட்டமிழந்த விதத்தின் மூலம் அவர் மோசமான சாதனை பட்டியலில் மூன்றாவது இந்திய வீரராக பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

 போட்டியின் போது முதல் ஓவரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசி அட்டகாசமாக இன்னிங்ஸை ஆரம்பிக்க ஐந்தாவது பந்தினை லெக் சைடு திசையில் தட்டிவிட்டு    ஓடினார்.   பீல்டர் பந்தினை த்ரோ அடிப்பதற்கு முன்னதாக இரண்டாவது ரன்னிற்கு ஓடலாம் என்று மறுபுறம் இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை   ஓடிவருமாறு அழைத்தார். ஜெய்ஸ்வாலை நம்பி கெய்க்குவாடும் ஓடிவர பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் தான் ஓடிவந்த கிரீசிக்கு திரும்பினார். இதையும் படிங்க இதனால் அவரை நம்பி ஓடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் ஆகினார்.   ரி20 கிரிக்கெட்டில் பந்தை சந்திக்காமலே டைமண்ட் டக் அவுட்டாகிய மூன்றாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையில் அவர் இணைந்தார்.