Showing posts with label கிரிக்கெற். Show all posts
Showing posts with label கிரிக்கெற். Show all posts

Thursday, November 2, 2023

உலகக்கிண்ணத்தில் நவசரக் குறியீடுகளின் அர்த்தம்

இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில்  சம்பியன்  கிண்ணத்தை வைக்கும் மேசை முதல் மைதானங்களில் சுற்றியிருக்கும் பலகைகள் வரை 9 வித்தியாசமான குறியீடுகள் இருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அதை தினந்தோறும் பார்த்தாலும் அது என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு வகையான டிசைன் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த 9 குறியீடுகளும் ரசிகர்களின் 9 வெவ்வேறான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ஐசிசி வடிவமைத்துள்ளது. 

  இந்த 9 குறியீடுகளில் முதலாவதாக ஒரு புள்ளியை வைத்தார் போல் இருப்பது ரசிகர்களின் “மகிழ்ச்சியை” குறிப்பதாகும்.

 2வது குறியீடு உலகக் கிண்ணப் போட்டி  நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ரசிகர்கள் எனும் “சக்தியை” குறிக்கும் வகையில் சூரியனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

3வது க்றியீடு தாக ரசிகர்களுக்கு  மதிப்பு கொடுத்து “வரவேற்கிறோம்” என்பதை உணர்த்தும் வகையில் கையெடுத்து கும்பிடுவது போன்ற குறியீடு இருக்கிறது.

 ரசிகர்களாலேயே உலகக் கிண்ணத்துக்குப் “பெருமை” என்பதை 4வது குறியீடு உணர்த்துகிறது.

 5வது குறியீடு “தைரியத்தை” காட்டும் வகையில் ஈட்டியின் நுனி.

 6வது குறியீடு “வெற்றியை” உணர்த்தும் வகையில் மின்னும் நட்சத்திரம் போன்ற வடிவமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

7வதாக இரவு நேரத்தில் வானத்தில் வெடிக்கும் பட்டாசு போன்ற குறியீட்டை பயன்படுத்தி “ஆச்சரியத்தை”  வெளிப்படுத்துகிTஅது.

8வது குறியீடாக ரசிகர்களின் “ஆர்வத்தையும்” வடிவமைத்துள்ள ஐசிசி 9வதாக தோல்வியை சந்திக்கும் போது வெளிப்படும் “வேதனையை” குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   9 வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நவரச குறியீடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Friday, May 12, 2023

டக் அவுட்டில் ஹிட்மேன் ரோகித் முதலிடம்


 ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் கப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் இரூக்கிறார்.  சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில்   ரோகித் சர்மா ஸ்கூப் ஷாட் ஆட முயன்று டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.   ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 16 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதேபோல் கப்டனாக அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை கப்டனாக மட்டும் ரோகித் சர்மா 11 முறை டக் அவுட்டாகியுள்ளார். இவருக்கு பின் கவுதம் கம்பீர் 10 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 15 முறை டக் அவுட்டாகி தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் , மன்தீப் சிங் ஆகியோர் இரண்டாமிடத்தில் உள்ளனர்.   14 முறை டக் அவுட்டாகி அம்பாதி ராயுடு மூன்றாவது இடத்திலும், 13 முறை டக் அவுட்டாகி பியூஷ் சாவ்லா, கிளென் மேக்ஸ்வெல், பார்த்திவ் படேல், ரஹானே, மணீஷ் பாண்டே ,ஹர்பஜன் சிங் ஆகியோர் 4வது இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தார். 

ஐபிஎல் தொடரில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை துரத்தும்போது அதிக முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த மூன்றாவது வீரராக ரோகித் இருக்கிறார். 

ரோகித் சர்மாவும்,ம் உமேஷ் யாதவும்  இதுவரை 7 முறை இதுமாதிரியான நேரத்தில் ஆட்டமிழந்துள்ளனர்.  இந்த பட்டியலிலில் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் சுனில்  நரைன் 9 முறை ஆட்டமிழந்து  முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் 8 முறை ஆட்டமிழந்து  இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

Monday, February 27, 2023

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

 

 சின்னை சூப்பர் கிங்ஸ் வீரரான   பென் ஸ்டோக்ஸ் அனைத்து ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளிலும்  இடம் பெறமாட்டார் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 ஐபிஎல் நடப்பு சீசன் தொடர் மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் டோனி கப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், டோனி ஐபிஎல் போடிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டோனிக்கு பின்னர் கப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து , அவுஸ்திரேலியா ஆகிய   அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tuesday, April 19, 2022

டெல்லி அணிக்குள் ஊடுருவிய கொரோனா

  இந்தியாவில் கொரோனா பரவல் மறைய தொடங்கியதை அடுத்து பிசிசிஐயின் தீவிர முயற்சி காரணமாக இந்த ஆண்டிற்கான பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சரியாக திட்டமிடப்பட்டு மும்பை,  புனே ஆகிய இரு நகரங்களில் உள்ள‌மைதானங்களில் நடைபெற்று வருகிறது இதுவரை நடைபெற்றுள்ள 29 லீக் ஆட்டங்கள் சிறப்பான முறையில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பிரச்சனை ஐபிஎல் தொடரில் நுழைந்துள்ளது.

  கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி அணியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் டெல்லி அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லி அணி வீரர்கள் கலந்துகொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அதோடு அவர்கள் வேறு எங்கும் செல்லக் கூடாது எனவும் ஹோட்டல் அறையிலேயே மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி அணி அடுத்ததாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்று சரியாக திட்டமிடப்பட்டு ஐ.பி.எல் தொடரானது நடைபெற்ற வேளையில் இடையில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  பாதியில் ஒத்திவைக்கப்பட்டு இரண்டாம் பாதி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

     பிசியோதெரபிஸ்ட் பேட்டரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் டெல்லி அணியை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்செல் மார்ஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  டெல்லி அணியின் மருத்துவர் மற்றும் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர் அதோடு மூன்று     ஹோட்டல் ஊழியர்கள் என    ஆறுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லி அணி முற்றிலுமாக தற்போது தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அதோடு மார்ஷ்க்கு பாதிப்பு சற்று அதிகமாக உள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

Monday, April 18, 2022

சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த மில்லர்

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த சென்னையின் வெற்றியை டேவிட் மில்லர் தட்டிப்பறித்தார.

29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் கப்டன் ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகிய நிலையில் கப்டனாக செயல்பட்ட ரஷீத் கான் நானயச் சுழர்சியில்  வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு ராபின் உத்தப்பா 3 (10)  ஏமாற்ற அடுத்து வந்த மொய்ன் அலி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்ததாக களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு மற்றொரு இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் உடன் இணைந்து சரிந்த சென்னையை மீட்டெடுக்க முயன்றார். 4-வது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய  இந்த ஜோடி 92 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சென்னையை மீட்டெடுத்தது. 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 46 (31) ஓட்டங்கள் எடுத்து ராயுடு ஆடமிழந்தார்.

 மறுபுறம் முதல் 5 போட்டிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து கடும் விமர்சனத்தை சந்தித்த ருதுராஜ் கைக்வாட் இந்த போட்டியில் பொறுப்புடனும் அதேசமயம் அதிரடியாகவும் விளையாடி 48 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 73 ஓட்டங்கள்கள் குவித்தார்.  . கடைசி நேரத்தில் கப்டன் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 2 சிக்ஸர் உட்பட 22* (12) ஓட்டங்களும் சிவம் துபே 19 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.   20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த சென்னை 169 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

170 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் ,நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்த ஓவரிலேயே தமிழக வீரர் விஜய் சங்கரும் டக் அவுட்டாகினார்.  அதற்கடுத்த ஓவரில் இளம் வீரர் அபினவ் மனோகரும் 12 (12) ஓட்டங்களில் நடையை கட்டியதால் 16/3 என ஆரம்பத்திலேயே  குஜராத் தடுமாறியது.

மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹாவும் 11 (18) ஓட்டங்களில் அவுட்டானதால் 48/4 திண்டாடிய குஜராத்தின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்   முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்டு சென்னைக்கு மிகப் பெரிய தொல்லை கொடுத்தார். இடையில் ராகுல் திவாடியா 6 (14) ஓடங்களில் ஆட்டமிழந்தாலும் அதற்காக அசராத அவர் தொடர்ந்து அதிரடி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அதுவரை சிறப்பாக செயல்பட்ட சென்னை பவுலர்களை தாறுமாறாக புரட்டி எடுத்தார்.

அவருக்கு ஜோடியாக கைகோத்த அக்ப்டன் ரஷித் கான் தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக  விளாசி சென்னைக்கு தொல்லை கொடுத்தார். கிறிஸ் ஜோர்டான் வீசிய 18-வது ஓவரில் 6, 6, 4, 6, 1, 2 என 25 ஓட்டங்கள்  அடித்ததால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது.

19வது ஓவரை பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 oddangகளை மட்டுமே விட்டு கொடுத்தார். சிஎஸ்கே அணியில் வேறு வீரர் இல்லாததால் , ஜார்டனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. ஆனால் பந்தின் உயரத்தின் காரணமாக அது நோ பால் என அறிவிக்கப்பட, ஃபிரி ஹிட்டில் பட்லர் பவுண்டரி விளாச, 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

இறுதியில் வெறும் 21 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 ஓட்டங்கள் எடுத்தார்.   கடைசி 3 ஓவர்களில் சென்னையின் தோல்வி கேள்விக்குறியானது.   டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல்  வெறும் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 94* ஓட்டங்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

19.5 ஓவர்களில் 170/7 ஓட்டங்கள் எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 94* ஓட்டங்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

  பிளே ஆஃப் சுற்று கனவைக் கண்டு கொண்டிருந்த சென்னையின் ஆசையில் குஜராத் மண்ணைப் போட்டுவிட்டது.  ஏனெனில் மறுபுறம் துடுப்பாட்டத்தில்  ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ஆரம்ப கட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை கடைசி நேரத்தில் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கியதால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து 9-வது இடத்தில் உள்ளது. இனிமேல் எஞ்சிய 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு சாத்தியம் குறைவு.