Showing posts with label : உதைபந்தாட்டம். Show all posts
Showing posts with label : உதைபந்தாட்டம். Show all posts

Saturday, June 28, 2014

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்



உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியின் முதல் சுற்று முடிவடைந்துவிட்டது. இரண்டாவது சுற்றில் விளையாட‌ 16 நாடுகள் த‌குதிபெற்றுள்ளன. எதிர்பார்க்கப்பட்ட சில நாடுகள் வெளியேறி எதிர்பார்க்காத சில நாடுகள் உள்ளே வந்துள்ளன.

"ஏ" பிரிவில் பிறேசிலும் குரோஷியாவும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்த்தேன். ஆனால், மெக்சிகோ உள்ளே வந்து விட்டது. இதற்கு மெக்சிகோவின் கோல்கீப்பர் தான் முக்கிய காரணம்.மூன்று போட்டிகளிலும் மெக்சிகோவுக்கு எதிராக ஒரே ஒருகோல்தான் அடிக்கப்பட்டது. பிறேசிலுக்கு ந்திரான போட்டியைச்சமப்படுத்தியதால்தான் மெக்சிகோ இரண்டாவது சுற்றில் விளையாட தகுதி பெற்றது. பிறேசில் 7,குரோஷியா6, மெக்சிகோ4 கோலகள் அடித்தன.

"பி" பிரிவிலிருந்து ஸ்பெய்னும் நெத‌ர்லாந்தும் அடுத்த‌ சுற்றுக்கு த‌குதி பெறும் என‌ நினைத்தேன். நெத‌ர்லாந்துட‌ன் சிலிர்த்தெ‌ழுந்த‌ சிலி உள்ளே போய்விட்ட‌து. முத‌ல் போட்டியில் நெந்த‌ர்லாந்திட‌ம் ஸ்பெய்ன் தோல்விய‌டையும் என‌ எதிர்பார்த்தேன். ஆனால், இப்ப‌டி அவ‌மான‌மாக‌ ட்பெய்ன் வெளியேறும் என‌ நான் நினைக்க‌வில்லை. உல‌க‌க்கைண்ண‌ ச‌ம்பிய‌ன் யூரோ ச‌ம்பிய‌ன், கொன்ப‌ட‌ரேஷ‌ன் கிண்ண‌ப்போட்டியில் இறுதிவ‌ரை‌ முன்னேறிய‌ நாடு என்ப‌த‌னால் பெரிதாக‌ எதிர்பார்த்தேன். ஸ்பெயின் அணியுடைய‌ கோல் கீப்ப‌ரின் செய‌ற்பாடு திருப்திக‌ர‌மாக‌ இல்லை என‌ ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஒரு ச‌ஞ்சிகையில் ப‌டித்தேன். அது உண்மையாகிவிட்ட‌து. நெத‌ர்லாந்து மூன்று போட்டிக‌ளிலும் வெற்றி பெற்ற‌து 10 கோல்க‌ள் அடித்த‌து. எதிராக‌ மூன்று கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சிலி ஐந்து கோல்க‌ள் அடித்த‌து. மூன்று கோல்க‌ள் எதிராக‌ அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஸ்பெய்ன் ஒரு போட்டியில் ம‌ட்டும் வெற்றி பெற்ற‌து.நான்கு கோல்க‌ள் அடுத்த‌து எதிராக‌ ஏழு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

"சி: பிரிவில் இருந்து கிரீஸ், ஐவ‌ரிகோஸ்ற் ஆகிய‌ன‌வ‌ற்றை எஆன் எதிர்பார்த்தேன்.மூன்று போட்டிக‌ளிலும் வெற்றிபெற்ற‌ கொல‌ம்பியா முன்னேறிய‌து. ஒருவெற்றி ஒருதோல்வி, ஒருபோட்டிய‌ச்ச‌ம‌ப்ப‌டுத்தி கிரீஸ் த‌குதி பெற்ற‌து.கொல‌ம்பியா ஒன்ப‌து கோல‌க‌ள் அடித்த‌து எதிராக‌ இர‌ண்டு கோல்க‌ள் ம‌ட்டும் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. கிரீஸ் இர‌ண்டு கோல்க‌ள் ம‌ட்டும் அடித்த‌து. எதிராக நான்கு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே, கொஸ்ர‌ரிகா ஆகிய‌ன‌ "டி' பிரிவில் மோதின‌. ச‌ம்பிய‌ன்க‌ளின் பிரிவான‌ இத‌ன் மீதி அதிக‌ எதிர்பார்ப்பு இருந்த‌து. இங்கிலாந்த‌யும் இத்தாலியையும் எதிர்பார்த்தேன் இர‌ன்டும் என்னை ஏமாற்றிவிட்ட‌ன‌. கொஸ்ர‌ரிகாவும் உருகுவேயும் உள்ளேவந்துவிட்ட‌ன‌. இர‌ண்டு போட்டிக‌ளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச்ச‌ம‌ப்ப‌டுத்தி கொஸ்ர‌ரிக்கா முத‌லிட‌ம் பிடித்த‌து. இர‌ண்டு வெற்றி ஒரு தோல்வியுட‌ன் உருகுவே இர‌ண்டாமிட‌ம் பிடித்த‌து.இத்தாலி ஒருபோட்டியில் வெற்ரிபெற்று இர‌ண்டு பீட்டிக‌ளில் தால்விய‌டைந்த‌து. இங்கிலாந்து ஒரு போட்டியைச்ச‌ம‌ப்ப‌டுத்தி இர‌ண்டு போட்டிக‌ளில் தோல்விய‌டை‌ந்த‌து.கொஸ்ர‌ரிகா நான்கு கோல்க‌ள் அடித்த‌து ந்திராக‌ ஒரு கோல் ம‌ட்டும் அடிக்க‌ப்ப‌ட்ட‌து.உருகுவே நான்கு கோல்க‌ள் அடித்த‌து எதிராக‌ நான்கு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

"ஈ" பிரிவில் பிரான்ஸும், சுவிட்ஸ‌ர்லாந்தும் தெரிவாகி என் மான‌த்தைக்காப்பாற்றின‌. பிரான்ஸ் இர‌ண்டு வெற்றி ஒரு போட்டியைச் ச‌ம‌ப்ப‌டுத்திய‌து. சுவிஸ் இர‌ண்டு வெற்றி ஒரு தோல்வி.பிரான்ஸ் எட்டு கோல்க‌ள் அடுத்த‌து எதிராக‌ இர‌ண்டு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சுவிஸ் ஏழு கோல்க‌ அடித்த‌து எதிராக‌ ஆறு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஐந்து கோல்க‌ள் பிரான்ஸ் அடித்த‌து.
  "எஃப் " பிரிவிலிருந்து ஆர்ஜென்ரீனாவையும் பொஸ்னியாவையும் எதிர்பார்த்தேன். த‌குதிகாண் போட்டியில் ஐரோப்பிய‌ நாடுகளை அச்சுறுத்தி முத‌ன் முத‌லாக‌ உல‌க‌க்கிண்ண‌ப்போட்டியில் விளையாட‌த் த‌குதிபெற்ற‌ பொஸ்னியா ஏமாற்றிவிட்ட‌து.  மூன்று போட்டிக‌ளிலும் வெற்ரிபெற்ற‌ ஆர்ஜென்ரீனா ஆறு கோல்கள் அடித்த‌து. எதிராக‌ மூன்று கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு போட்டிய‌ச்ச‌ம‌ப்ப‌டுத்தி நைஜீரியா இர‌ண்டாவ‌து சுற்றுக்குத் தெரிவாகிய‌து.ந‌ஜீரியா மூன்று கோல்க‌ள் அடித்த‌து. எதிராக‌ மூன்று கோல்கள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

"ஜி"இரிவிலிருந்து ஜேர்ம‌னியையும் போத்துக‌லையும் எதிர்பார்த்தேன். போத்துக‌லின் க‌ன‌வை அமெரிகா சித‌ற‌டித்துவிட்ட‌து. இர‌ண்டு போட்டிக‌ளில் வெற்ரிபெற்று ஒருபோட்டியைச்ச‌ம‌ப்ப‌டுத்திய‌ ஜேர்ம‌னி ஏழு கோல்க‌ள் அடித்த‌து.எதிராக‌ இர‌ண்டு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அமெரிக்காவும் போத்துக‌லும் தலாஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒருபோட்டியைச்ச‌ம‌ப்ப‌டுத்தி, ஒரு போட்டியில் தோல்விய‌டைந்த‌ன‌. இர‌ண்டும் நான்கு புள்ளிக‌ள் பெற்ற‌ன‌. நான்கு கோல்க‌ள் அடித்த‌ன‌. அமெரிக்காவுக்கு எதிராக‌ எஆன்கு கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. போத்துக‌லுக்கு எதிராக‌ ஏழுகோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதில் நான்கு கோல்க‌ளை ஜேர்ம‌னி அடித்த‌து.ஆகையினால் அமெரிக்கா உள்ளே வ‌ந்து விட்ட‌து.

போத்துக‌ல் சுவீட‌ன் ஆகிய‌வ‌ற்றுக்கிடையிலேயான‌ பிளே ஓவ் போட்டியில் வெற்றிபெற்ற‌ போத்துக‌ல் உல‌க‌க்கிண்ண‌ப்போட்டியில் விளையாட‌த்த‌குதி பெற்ற‌து. இப்போட்டி ரொனால்டோ,இப்ராமிகோவிச் ஆகியோருக்கிடையேயான‌ ப‌ல‌ப்ப‌ரீட்சையாக‌வே பார்க்க‌ப்ப‌ட்ட‌து.

"எச்" பிரிவிலிருந்து பெல்ஜிய‌த்தையும் ர‌ஷ்யாவையும் எதிர்பார்த்தேன்.அல்ஜீரியா உள்ளே வ‌ந்து விட்ட‌து.மூன்று போட்டிக‌ளிலும் வெற்றிபெற்ற‌ பெல்ஜிய‌ம்
 நான்கு கோல்க‌ள் அடித்த‌து. எதிராக‌ ஒருகோல் ம‌ட்டும் அடிக்க‌ப்ப‌ட்ட‌து.ஒரு வெற்றி, ஒரு தோல்வி ஒரு போட்டியைச் ச‌ம‌ப்ப‌டுத்திய‌ அல்ஜீரியா ஆறு கோல்க‌ள் அடித்த‌து. எதிராக‌ ஐந்து கோல்க‌ள் அடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.


பிறேஸில் - ஜேர்ம‌னி, ஆர்ஜென்ரீனா- நெத‌ர்லாந்து ஆகிய‌ன‌ அரை இறுதிவரை‌ முன்னேறும் என‌ எதிர்பார்க்கிறேன்.

  

Thursday, April 10, 2014

உலகக்கிண்ணம் 2014

 அல்ஜீரியா,  
பெல்ஜியம், ரஷ்யா ஆகியவற்றுடன் அல்ஜீரியா, தென்கொரியா ஆகியனவும் குழு எச் இல் தமது திறமையைக் காட்டக் காத்திருக்கின்றன. பெல்ஜியம், ரஷ்யா ஆகியவற்றில் பலம், பலவீனம்  பற்றி கடந்த வாரம் பார்வையிட்டோம். அல்ஜீரியா, தென்கொரியா ஆகியவற்றின் பலம், பலவீனம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து அல்ஜீ ரியாவும், ஆசியக் கண்டத்திலிருந்து தென்கொரியாவும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடத் தகுதிபெற்றன

.                        அல்ஜீரியா, 
ருவண்டா, பென்னி, மாலி ஆகிய நாடுகளுடன் குழு ~ஏ|யில் விளையாடிய அல்ஜீரியா ஐந்து வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றது. 15 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. அல்ஜீரியா 13 கோல்கள் அடித்தது. எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன.

குழு ஏஇல் முதலிடம் பிடித்தாலும் பிரேஸிலுக்குச் செல்வதற்காக பிளேஓவ் வரை காத்திருந்தது அல்ஜீரியா. புர்கினா பாஸோவுடனான முதலாவது பிளேஓவ் போட்டியில் 10 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது பிளேஓவ் போட்டி யில் இரண்டு  நாடுகளும் தலா மூன்று கோல்கள் அடித்ததனால்  சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு பிளேஓவ் போட்டிகளிலும் நான்கு கோல்கள் அடித்த அல்ஜீரியா, உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.  அல்ஜீரியா வுக்கு எதிராக 13 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இஸ்லாம் சிலிமன் ஐந்து கோல்கள் அடித்துள்ளார்.
வாஹிட் ஹலிகோட்ஸிட் பயிற்சியாள ராக உள்ளார். 61 வயதான இவர் யுகஸ் லோவேயாவின் முன்னாள் வீரராவார். இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக்  கொண்ட மட்ஜிட் பொகெரா அணித்தலைவராக உள்ளார். 25 வயதான இஸ்லாம் சிலிமனி, இன்ரமிலான் வீரர் ரெய்டர் ஆகியோர் அணியின் சிறந்த வீரர்கள். லக்டர்பெ லோமி, ரிட்சர்ட் மக்ப+ரி, முஸ்தபா சீஸி ரோனி ஆகியோர் முன்னாள் வீரர்களா வர்.
1982ஆம் ஆண்டு முதன்முதலில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யில் விளையாடிய அல்ஜீரியா 1986, 2010ஆம் ஆண்டுகளிலும் விளையாடத் தகுதிபெற்று இப்போது நான்காவது மு யாக உலகக்கிண்ணப் போட்டியில் விளை யாடத் தகுதிபெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு அமெரிக்கா இங்கி லாந்து, ஸ்ரோவேனியா ஆகியவற்றுடன் விளையாடிய அல்ஜீரியா, ஒரு போட்டி யைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடம்பிடித்தது. அல்ஜீரியா கோல் அடிக்கவில்லை. எதிராக இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டன.

தென்கொரியா 

தென்கொரியா
லெபனான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் குழு பி யில் தகுதிகாண் போட்டியில் விளையாடிய தென்கொரியா, நான்கு வெற்றி, ஒரு தோல்வியுடன் ஒரு போட்டி யைச் சமப்படுத்தியது.
தென் கொரியா 14 கோல்கள் அடித்தது. எதிராக நான்கு கோல் கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளி களுடன்  முதலிடம் பிடித்தது. லெப னானுக்கு எதிரான போட்டியில் 60 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கட்டார், லெபனான், உஸபெ கிஸ்தான், ஈரான் ஆகியவற் றுடன் கடைசி தகுதிகாண் போட்டி யில் விளையாடிய தென்கொரியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி, இரண்டு போட்டி களில் தோல்வியடைந்தது. தென் கொரியா 13 கோல்கள் அடித்தது.  எதிராக ஏழு கோல் கள் அடிக்கப்பட்டன. 14 புள்ளி களுடன் இரண்டாவது இடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
சூ  யங் பாக் ஆறு கோல்களும் கெங் ஹோலீ ஐந்து கோல்களும் அடித்தனர். தென் கொரியாவுக்கு எதிராக 19 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.
ஹொங்  மைங்வோ பயிற்சியாளராக உள்ளார். 136 சர்வதேசப் போட்டிகள் உட்பட நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. உலகின் மிகச்சிறந்த 125 வீரர்களில்  இவரையும் ஒருவராக பீலே தெரிவு செய்தார். ஐரோப்பிய கிளப் ரசிகர் களின்  பேராதரவைப் பெற்ற லீ.கங்யங் அணித்தலைவராக உள்ளார். ஐரோப்பிய கழகங்களில் விளை யாடும் கிசுங்யெங், ஜிடெஎங்வோ, கிம் போட குங், பாக்சோயங் ஆகியோர் பலம் மிக்கவர்களாக உள்ளனர். 
1994ஆம் ஆண்டு முதன் முதலில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய தென்கொரியா இப் போது  ஒன்பதாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு அரை இறுதிவரை முன்னேறி நான்காவது இடம்பிடித்தது.

ரமணி 
சுடர் ஒளி 30/03/14

Thursday, March 6, 2014

உலகக்கிண்ணம் 2014

  ஆர்ஜென்ரீனா 
ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, ஈரான், நைஜீரியா ஆகியன குழு எப் இல் தமது பலத்தைக்  காட்டப் போகின்றன. தரவரிசையில் ஆர் ஜென்ரீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. பொஸ்னியா இரண்டு இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தில் உள்ளது. ஈரான் ஏழு இடங்கள் கீழிறங்கி 38ஆவது இடத்திலும் நைஜீரியா ஆறு இடங்கள் கீழிறங்கி 47ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில்  ஒரே குழுவில் இருந்த ஆர்ஜென்ரீனாவும், நைஜீரியாவும் இந்த ஆண்டும் ஒரே குழுவில் உள்ளன.

                      ஆர்ஜென்ரீனா
தென்னமெரிக்காவிலிருந்து தகுதிபெற்ற ஆர்ஜென்ரீனா மிகுந்த சந்தோஷத்தில்  உள்ளது. இந்தப் பிரிவிலிருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலி, வெனிசுவெலா, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடோர், பெரு, உருகுவே ஆகியவற்றுடன் 16 போட்டிகளில் விளையாடிய ஆர்ஜென்ரீனா   ஒன்பது போட்டிகளில்  வெற்றி பெற்று, ஐந்து போட்டிகளைச் சமப்படுத்தி, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.     ஆர்ஜென்ரீனா 35 கோல்கள் அடித்தது. எதிராக 15 கோல்கள் அடிக்கப்பட்டன. 32 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக 31 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

அலஜன்ரோசபலா ஆர்ஜென்ரீனாவின் பயிற்சியாளராக  உள்ளார். ஜவியர் மஸ்ஹொரானோ அணித்தலைவராக உள்ளார். இலட்சக் கணக்கான  ரசிகர்களைக் கவர்ந்த லயனல் மேஸி இருப்பது அணிக்குப்   பலமானது. நான்கு முறை தொடர்ந்து பலன் டி ஓ விருது  பெற்றார். இம்முறையும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இரண்டுமுறை சம்பியனான ஆர்ஜென்ரீனா  இரண்டு  முறை  இறுதிப் போட்டியில் விளையாடி சம்பியன் பட்டத்தைத்தவறவிட்டது.  மேஸியின் உதவியுடன் சம்பியனாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். உதைபந்தாட்ட உலகின்  பலம்மிக்க வீரர்களான பெக்கம், ரூனி, ரொனால்டோ ஆகியோர் விளையாடியும் இங்கிலாந்து, போலாந்து ஆகியன சம்பியன் பட்டம் பெறவில்லை. ஆர்ஜென்ரீனாவும்  மேஸியின் காலத்தில் சம்பியனாகவில்லை என்ற குறை உள்ளது. 
                                    
காலோஸ்ராவஸ், அஞ்சல் டிமரியா, பப்லோ கபரெலா, சேர்ஜியோ, ஆகுரோ, எரிக்லாமெலா, பப்ரிகோ, கொலசினி ஆகியோர் ஆர்ஜென்ரீ னாவின் நம்பிக்கைக்குரிய வீரர்களாவர். மேஸி 10 கோல்களும், அகுரோ 5 கோல்களும் அடித்துள்ளனர்.
மரியோ கெம்பஸ், டானியல் பஸரெல் லா, டியூகோ மரடோனா, பஸ்ரிடா ஆகியோர் ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் வீரர்களாவர். 1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 
20 வயதுக்குட் பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஆறு முறை சம்பயனானது. பீபா கொன்பரேடகள் கிண்ண  சம்பிபயன். இவைதவிர  இரண்டு முறை ஒலிம்பக் சம்பியனானது.
பொஸ்னியா, அண்ட் ஹொஸகோவியா 
                                   பொஸ்னியா, அண்ட் ஹொஸகோவியா
உலகக்கிண்ண உதைபந்தாட்ட வர லாற்றில் முதல்முதலாக  விளையாடத் தகுதி பெற்றுள்ளது. மிக நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின்பன் இந்த நாடு உருவாகியது. பொஸ்னிய, சேபிய, குரோஷிய இன மக்களைக்கொண்ட  நாடு இது.
லிசென்ஸ்ரின், லட்வியா, கிறீஸ், லிதோனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுடன் தகுதிகாண் போட்டியில் விளையாடிய பொஸ்னியா எட்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில்  விளையாடத் தகுதிபெற்றது. பொஸ்னியா 30 கோல்கள் அடித்தது. எதிராக ஆறு கோல்கள்   மட்டும் அடிக்கப்பட்டன. நான்கு போட்டிகளில் பொஸ்னியாவுக்கு எதிராககோல் அடிக்கப்பட வில்லை.
லாசன்ஸ்ரினுக்கு எதிரான முதல் போட்டியில்   8d1 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டி யில் 4d1 என்ற கோல் கணக்கிலும்   வெற்றிபெற்றது. லட்வியாவுக்கு எதிராக போட்டியில் 5d0 கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பொஸ்னியாவுக்கு எதிராக ஒன்பது  மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

சபெல்சுசி பொஸ்னியாவின் பயிற்சியாளராக உள்ளார். 350இற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். பரிஸ் சென் ஜேர்மனியின் முன்னாள் வீரர். பரான்ஸ், துருக்கி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருந்த இவர், 2009ஆம் ஆண்டு பொஸ்னியாவின் பயிற்சியாளரா னார். எமிர்ஸ்பாச்சி அணித்தலைவராக உள்ளார். ரஷ்யா, ஸ்பெய்ன் கழகங்களில்  விளையாடிய  அனுபவம் உள்ளவர்.
எடின் டெஸ்கோ, பொஸ்னியாவின் நட்சத்திர வீரராக  உள்ளார். 27 வயதான இவர், 58 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் இவர் 10 கோல்கள் அடித்துள்ளார். வெடட் இப்ஸிபக் எட்டு கோல்களும், ஸாவெட்டன், மிஸ்மோவிக் ஐந்து கோல்களும்  அடித்துள்ளனர். பரேஸிலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில்  எதிரணிகளுக்கு சவால்விடும் அணியாக பொஸ்னியா விளங்கப்போகிறது.

ரமணி 
சுடர் ஒளி 23/02/14

Thursday, February 13, 2014

உலகக்கிண்ணம் 2014

இத்தாலி
ஐரோப்பாக் கண்டத்தின் பலம் வாய்ந்த இத்தாலி, இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் குழு டி யில் உள்ளன. 1930, 1934, 1982, 2006 ஆம் ஆண்டுகளில் உலகச் சம்பியனான இத்தாலி,  1970, 1994ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத் தைத் தவறவிட்டது. இங்கிலாந்து 1960ஆம் ஆண்டு சம்பியனானது.  குழு டி யில்  உள்ள உருகுவே, கொஸ்ரரிகா ஆகியவற்றின் பலவீனம் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றின் பலம்,  பலவீனம் பற்றி இவ்வாரம் பார்ப்போம்.
                                               இத்தாலி
தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இத்தாலி,  ஐரோப்பாவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பீ பிரிவில் டென்மார்க், செக்கஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஆர்மேனியா, மால்டி ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று நான்கு போட்டிகளைச் சமப்படுத்தியது. இத்தாலி 19 கோல்கள் அடித்தது. எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இத்தாலிக்கு எதிராக 12 மஞ்சள் அட்டைகளும், ஒரு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன. 

1934ஆம் ஆண்டு முதன்முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இத்தாலி, சம்பியன் கிண்ணத்துடன் நாடு திரும்பயது. 1938ஆம் ஆண்டு மீண்டும்  சம்பபினாகி தனது திறமையை நிரூபித்தது. 18ஆவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. 1962ஆம் ஆண்டி லிருந்து 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 14 தடவைகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இத்தாலி 1934, 1938, 1982ஆம் ஆண்டுகளில்   சம்பியனானது. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் உதை பந்தாட்ட சம்பியனானது.

 செசாரி பன்டெலி இத்தாலியின் பயிற்சியாளராக உள்ளார்.  ஆட்டநிர்ணய ஊழலில் இருந்து கடந்த உலகக் கிண்ணத் தோல்வியிலிருந்தும் இத்தாலியை மீட்டெடுத்தார்.  கியன்லுசி பபின் அணித் தலைவராக உள்ளார். கியன் ஜுவலன் அணியின் கோல் கீப்பரான இவர்,  2006ஆம் ஆண்டு  இத்தாலி சம்பயனான போது விளையாடியவர். மரியோ பலோடெலி (மான்சிஸ்ரர் சிற்றி), அன்ரியா ரனோசியா, மார்கோ வெரரி (பரிஸ், சென் ஜேர்மனி) 21 வயதான இவர்கள் மீது இரசிகர்கள்  மிகுந்த எதிர் பார்ப்பில் உள்ளனர். மரியோ பலோடெலி ஐந்து கோல்களும், பப்லோ ஒஸ்பல் டோ நான்கு கோல்களும் அடித்துள்ளனர்.

டினோ யஸாபி, பலோ மல்டினி சில்வியோ பயோலா, டியாதோபகியோ ஆகியோர் இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் வீரர்களாவர்.
2010ஆம் ஆண்டு பரகுவே, செக்கஸ் லோவாக்கியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் குழு எப் இல் இத்தாலி விளையாடியது. இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து  முதல் சுற்றுடன் வெளியேறி நாடு திரும்பயது. இத்தாலி நான்கு கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. உலகக்கிண்ண வரலாற்றில் இத்தாலி  மிக மோசமாகத் தோல்வியடைந்தது

  இங்கிலாந்து 
1960ஆம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து, அடுத்து வந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியதே தவிர, இதுவரை சம்பியன் பட்டத்தைப் பெறவில்லை. உலக இரசிகர்களின் ஆதரவைப் பெற்ற சிறந்த வீரர்களான  பெக்கம், ரூனி போன்ற வீரர்கள்  இருந்தும்  மீண்டும் ஒருமுறை சம்பியனாகவில்லை. தர வரிசையில் 13ஆவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து.

குழு எச் இல் இங்கிலாந்து, உக்ரைன் மொண்டகோரியா,  போலாந்து, மல்டோவா, சன்மரினோ ஆகிய நாடுகள் தகுதிச்சுற்றில் விளையாடின. ஆறு போட்டிகளில்  வெற்றி பெற்று நான்கு போட்டிகளைச்   சமப்படுத்தி 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பரேஸில் பயணத்தை உறுதிசெய்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து 31 கோல்கள் அடித்தது. எதிரணிகள் நான்கு கோல்கள் மட்டுமே அடித்தன. இங்கிலாந்துக்கு எதிரான 13 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான ஆறு போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை. உக்ரைனுக்கு எதிரான ஒரு போட்டி கோல் அடிக்காது சமநிலையில் முடிந்தது. இப் போட்டியில்தான் இங்கிலாந்து கோல் அடிக்கவில்லை. சன்மரினோவுக்கு எதிரான முதல் போட்டியில் 5-0 கோல் கணக்கி லும், இரண்டாவது போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
 போத்துகல்லு எதிரான  முதல் போட்டி யை 1 - 1 என்ற கோல் கணக்கில சம நிலையில் முடித்த இங்கிலாந்து,  இரண்டாவது போட்டியில்  2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இதன் காரணமாக போத்துகடன் பிளேஓவ் போட்டியில் விளையாடத் தள்ளப்பட்டது.
ரூனி ஏழு கோல்களும், பராங்லவட், டனிவெல்பெக் ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். ஆறு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ரூனி ஏழு கோல்கள் அடித்தார்.

ரோய் ஹட்சன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். 66 வயதான இவர், அண்மையில்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். லிவர் பூல் அணி வீரரான ஸ் ரீபன் ஸ்கொட்லாந்து அணியின் தலைவராக உள்ளார். இளம் வீரரான ரோஸ் பெகெலி, ஜக்வில் சர், அலெக்ஸ் பராங்,  அன்ரூஸ் ரவ் சென்ட் ஆகியோர் நம்பக்கையுடன் உள்ளனர்.
சேர் பொப சார்ஸ்டன், பீற்றர் சில்ரன் கிறேலிங்கர் டேவிட் பெக்கம் ஆகியோர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீரர்களாவர்.
2010ஆம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்றது. 2010ஆம் ஆண்டு சி பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, அல்பேனியா, அல்ஜீரியா ஆகியன குழு சி யில் போட்டியிட்டன. ஒரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி  முதலிடம் பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து  நான்கு கோல்கள் அடித்தது. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் ஜேர்மனியுடன் விளையாடி 4-1 கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளி யேறியது.
இங்கிலாந்து, இத்தாலி ஆகியவற்றுக் கிடையேயான போட்டி இரசிகர்களிடம் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியின் முடிவுதான் இரண்டா வது சுற்றுக்குச் செல்லும் நாட்டைத் தீர்மானிக்கும்.
சுடர் ஒளி 
ரமணி  09/02/14