Tuesday, June 30, 2020

ட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல்' நிராகரித்தது

தனது நாட்டின்  முக்கிய படைத் தளபதியின் கொலை வழக்கில்  அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி  ஈரான் விடுத்த கோரிக்கையை  சர்வதேச பொலிஸ் அமைப்பான  'இன்டர்போல்  நிராகரித்தது.

.ஈரான் ராணுவத்தின் முக்கிய படை தளபதியான  ஜெனரல்  குவாசிம் சுலைமானி  ஈராக்கின் பாக்தாதில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இந்தாண்டு ஜனவரியில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்  அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்தது.இந்நிலையில்  குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  உட்பட  அமெரிக்காவைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள்  அரசியல்வாதிகளை  ஈரான் குற்றவாளிகளாக கூறியுள்ளது. அவர்கள் மீது கைது பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படிஇ இன்டர்போலின் உதவியை  ஈரான் நாடியுள்ளது.

  ஈரானின் இந்தக் கோரிக்கையை  ஐரோப்பிய நாடான பிரான்சின் லியானை தலைமையிடமாக வைத்து செயல்படும்  இன்டர்போல் நிராகரித்து விட்டது.இன்டர்போல் விதிகளின்படி  அரசியல் காரணங்களுக்கான இது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதனால்  ட்ரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.இருப்பினும்  ஈரானின் இந்த நடவடிக்கை  இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.


Monday, June 29, 2020

ட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு

தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்  தொடர்ந்து எங்கள் பாடல்களைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரபல பிரிட்டிஷ் இசைக்குழுவான  ரோலிங் ஸ்டோன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து  ரோலிங் ஸ்டோன்ஸ்  இசைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''அனுமதியின்றி எங்கள் குழுவினரின் பாடல்களை  ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருவதாக பிஎமை என்ற நிறுவனம் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட்   ட்ரம்ப் தொடர்ந்து எங்கள் பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தினால், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

 

எங்களிடமிருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் எங்கள் பாடல்களை  ட்ரம்ப்  பயன்படுத்தி வருகிறார். வெறுப்புப் பிரச்சாரங்களில் எங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை''.என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவினரின் மிகவும் பிரபலமானயூ ஆண்ட் ஆல்வேஸ் கெட் வாட் யூ வான்ட்என்ற பாடல் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதும்  தங்கள் பாடலை  ட்ரம்ப் பயன்படுத்தியதற்கு ரோலிங் ஸ்டோன்ஸ்  குழு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

 

 


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தது ஈரான்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்கெனவே உறவுகள் படுமோசமான நிலைக்கு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சென்று விட்டது, இந்நிலையில் அமெரிக்க  ஜனாதிபதி  ட்ரம்புக்கு  பிடியாணை  பிறப்பித்துள்ளது ஈரான். மேலும் இண்டெர்போலுக்கு தொலைபேசி செய்து ட்ரம்ப்பை கைது செய்ய உதவி கோரியது.

ஈரானின் முதன்மை ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி   ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்தான் காரணம் அவர்தான் குற்றவாளி என்று  குற்றம் சாட்டிய  ஈரான், அமெரிக்க ஜனாதிபதி   ட்ரம்புக்கு   பிடியாணை  பிறப்பித்துள்ளது.

ஜனவரி 3 ஆம் திகதி   காசிம் சுலைமானி   கொலைக்குக் காரணமான ட்ரோன் தாக்குதலுக்கு ட்ரம்ப்  உட்பட  30 பேர் மீது  பிடியாணை  குற்றச்சாட்டு எழுப்பியதாகவும் பிடியாணையில் குறிப்பிடப்பட்ட இவர்கள் மீது கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் டெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்குவாசிமெர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் அலி அல்குவாசிமெர் மேலும் தெரிவிக்கும் போது, ஜனாதிபதி  பதவி பறிபோனாலும்  டர்மப் அவர் மீது டெஹ்ரான் விசாரணை மேற்கொள்ளும் என்றார்.

இந்த பிடியாணை  பற்றி உலக பொலிஸ் அமைப்பான இண்டர்போல் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


பங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி

பங்களாதேஷின் பாதுகாப்புத்துறை செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பங்களாதேச மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னதாக சவுத்ரி டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கடந்த 29 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 6 ஆம் திகதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஜூன் 18 ஆம் திகதி மேலும் உடல்நிலை மோசமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  காலை உயிரிழந்துள்ளார்.


பெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்

கொரோனா கிரு­மிப் பர­­லுக்கு மத்­தி­யில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது வழக்­­மாகி விட்­­தால் அவுஸ்­தி­ரே­லிய மக்­கள் நக­ரங்­­ளி­லி­ருந்து வட்­டார பகு­தி­­ளுக்குக் குடி­பெ­­ரத் தொடங்­கி­யுள்­­னர். நெரி­சல் மிக்க மத்­திய வர்த்­தக பகு­தி­­ளி­லி­ருந்து வெளி­யேறி வட்­டார பகு­தி­களில் விலை குறை­வான சொத்­து­களை வாங்­கு­­தற்­கும் அவர்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­யுள்­­னர்.

சிட்­னிக்கு அரு­கில் உள்ள சதர்ன் ஹைலேண்ட்ஸ் வட்­டாரப் பகு­தி­யில் சொத்­து­களை வாங்­கு­­வர்­­ளின் எண்­ணிக்கை ஏற்­கெ­னவே பெரு­­ளவு அதி­­ரித்­துள்­­தாக அங்­குள்ள சொத்து முக­வர்­கள் கூறு­கின்­­னர். வீடு வாங்க இய­லாத நிலை, அதி­­ரித்து வரும் நெரி­சல் போன்ற கார­ணங்­­ளால் சிட்னி, மெல்­பர்ன் போன்ற பெரிய நக­ரங்­களில் வசிப்­­வர்­கள் வட்­டாரப் பகு­தி­களை நோக்கி ஈர்க்­கப்­­டு­கி­றார்­கள்.

அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் வட்­டாரப் பகு­தி­­ளுக்கு மக்­கள் செல்­வதை ஏற்­கெ­னவே ஊக்­கு­வித்து வந்த நிலை­யில், கொவிட்-19 கார­­மாக வட்­டாரப் பகு­தி­­ளுக்­குச் செல்­வோ­ரின் எண்­ணிக்கை மேலும் அதி­­ரித்­துள்­ளது. வட்­டாரப் பகு­தி­களில் மேம்­­டுத்­தப்­பட்ட இணையச் சேவை கிடைப்­­தால் மக்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதை மேலும் எளி­தாக்­கி­யுள்­­தும் அதற்கு ஒரு கார­­மாகப் பார்க்­கப்­­டு­கிறது.