Showing posts with label ரோஹித். Show all posts
Showing posts with label ரோஹித். Show all posts

Monday, May 12, 2025

அவமானப்படுத்தப்பட்ட ரோஹித் அன்றே கணித்த கில்கிறிஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் திகதி  சர்வதேச டெஸ்ட்டில்   இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின்  வெற்றிகரமான க‌ப்டனாக ரி20 உலகக் கிண்ணம்,  ஐசிசி சம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர்   திடீரென டெஸ்ட் கிறிக்கெற்றில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம்.

  தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக்  கிண்ணத்திக்  கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரி20 , டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

 . 2024-25 இல் நடைபெற்ற இந்தியா ,அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோஹித் சர்மா, அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கப்டன் ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடியிருந்தார்.

 இந்திய மண்ணிலேயே ஓட்டம் குவிக்க முடியாத அவர் அவுஸ்திரேலியாவில் எப்படி  ஓட்டங்களைக்  குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோஹித் சர்மா பங்கேற்றார். முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். ஒரு கப்டன் எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப் பேசியிருந்தார். "'ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் கப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால், அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும். 

ரமணி

11/5/25  


Tuesday, April 16, 2024

டோனி ருத்ரதாண்டவம் மும்பையில் கொடி நாட்டிய சென்னை

   மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த  29வது லீக் போட்டியில்  தலா 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக திகழும்  மும்பை இந்தியன்ஸ், நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 20 ஓட்டங்களால் சென்னை வெற்றி பெற்றது.  20 ஆவது ஓவரின் கடைசி 4 பந்துகளில் ருத்ரதாண்டவம் ஆடிய டோனி 6,6,6,2   என 20 ஓட்டங்கள் அடித்தார். அந்த 20 ஓட்டங்களால் தான் சென்னை வெற்றி பெற்றதாக ரசிகர்கள்  கொண்டாடுகிறார்கள்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்ததுமுதலில் துடுப்படுத்தாடிய சென்னை  20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த சென்னை 206  ஓட்டங்கள் எடுத்தது.  20 ஓவர்களில் மும்பை  6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது.

 ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே 5 (8) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். உள்ளே புகுந்த ப்டன் ருதுராஜ் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.   அவருடன் சேர்ந்து எதிர்புறம் சற்று தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா 2வது விக்கெட்டுக்கு 52 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 (16) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.    சிவம் துபே தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடி காட்டினார்.    சிவம் துபேயுடன்  3வது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ்  5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 (40) ஆட்டமிழந்தார்.

20 ஆவது ஓவரின் 2 ஆவது பந்துல்  டேரில் மிட்சேல் 17 (14) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் டோனி மைதானத்தினுள் புகுந்தார். பாண்டியா வீசிய கடைசி 4 பந்துகளில்  6, 6, 6, 2 என 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு 20* (4) ஓட்டங்கள் அடித்தார்மறுபுறம் கடைசி வரை ஆட்டமிழகாத   சிவம் துபே 10 பவுண்டர் 2 சிக்சருடன் 66* (38) அடித்தார்.  20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த சென்னை 206  ஓட்டங்கள் எடுத்தது.

207 ஓட்ட வெற்றி இலக்கைத் துரத்திய  மும்பைக்கு ரோஹித் சர்மாஇசான் கிசான்  ஜோடி 70  ஓட்டங்கள் அடித்து அச்சுறுத்தியது.இசான் கிசான்  23 ஓட்டங்களுடனும் சூரியகுமார் யாதவ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா சவால் விடுத்தார்திலக் வர்மா 31 , ப்டன் பாண்டியா 2 (6),  டிம் டேவிட் 13 (5), செபார்ட் 1 (2)  , நபியும் 4* (7) ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தனர்.      தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 11 பவுண்டரி 5 சிக்சருடன் ஆட்டமிழக்காமல்  105* (63)  ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பை  6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது.

                       ராகுலின் சாதனையை உடைத்தருதுராஜ் 

5 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்த ருதுராஜ் 69 (40) ஓட்டங்களை 172.50 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 57 இன்னிங்ஸில் 2021* ஓட்டங்கள் எடுத்துள்ளார்ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை   1. ருதுராஜ் கைக்வாட் : 57

2. கேஎல் ராகுல் : 60

3. சச்சின் டெண்டுல்கர் : 63

 4. ரிஷப் பண்ட் : 64

5. கௌதம் கம்பீர் : 68

சென்னையின்  முன்னாள் கப்டன் டோனியின் சாதனையும் ருதுராஜ் உடைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக  ஆட்டமிழக்காமல்   கப்டன் டோனி 63* ஓட்டங்கள் அடித்ததே முந்திய சாதனையாகும்.

                   கடைசி ஓவரில் டோனியின் சாதனைகள்

 ஐபிஎல்  போட்டிகளில் 8 ஆவது வீரராக டோனி விளையாடுகிறார். அதனால், டோனிக்கு துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு.   ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட டோனி,  6, 6, 6 என அடுத்தடுத்த ஹட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய அவர் கடைசி பந்தில்  2 ஓட்டங்கள் எடுத்தார்.   20* (4) ஓட்டங்களை 500.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 20 ஓட்டங்கள் அடித்த ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர் என்ற க்ருனால் பாண்டியாவின்  சாதனையை சமன் செய்தார்.   2020 சீசனில் க்ருனால் பாண்டியா ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இதே போல 4 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதை விட இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் டோனி 3 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் டோனி படைத்துள்ளார்.

   கொல்கத்தாவுக்காக விளையாடும்  மேற்கு இந்திய  வீரர் சுனில் நரேன் 2021 ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நடந்த போட்டியில் டேன் கிறிஸ்டனுக்கு எதிராக தனது முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்தார்.   2023இல் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோவுக்காக அபிஷேக் சர்மாவுக்கு எதிராக  மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரான் முதல் 3 பந்துகளில் சிக்ஸர் அடித்தார்

சென்னை அணிக்காக 250வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை  டோனி படைத்தார். அந்த மைல்கல் போட்டியில் அடித்த இந்த 20 ஓட்டங்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சென்னைக்காக  சுரேஷ் ரெய்னாவுக்கு பின் 5000  ஓட்டங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் டோனி படைத்துள்ளார்.

                     ஹிட்மேன் ரோஹித்தின் சாதனைகள்

சென்னைக்கு எதிரான  போட்டியில்  கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதமடித்து போராடினார்  ரோஹித் சர்மாஇந்தப் போட்டியில் அடித்த‌ 5 சிக்சர்களையும் சேர்த்து ரி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். அத்துடன் ரி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

 1. ரோகித் சர்மா : 500*

2. விராட் கோலி : 383

 3. எம்எஸ் டோனி : 331

ரோஹித் சர்மா இதுவரை ரி20 கிரிக்கெட்டில் 1025 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.   ரி20 கிரிக்கெட்டில் 1000+ பவுண்டரிகளும், 500+ சிக்ஸர்களும் அடித்த முதல் ஆசிய மற்றும் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அவரை தவிர்த்து இந்த உலகிலேயே கிறிஸ் கெயில் மட்டுமே 1000+ பவுண்டரிகள் மற்றும் 500 சிக்சர்கள் (1132 பவுண்டரி மற்றும் 1056 சிக்ஸர்கள்) அடித்துள்ளார்.

 சென்னைக்கு எதிராக ரோஹித் சர்மா 777*  ஓட்டங்கள் அடித்துள்ளார்.   ஈஎல் க்ளாஸிக்கோ எனப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:

 1. ரோஹித் சர்மா : 777*

2. சுரேஷ் ரெய்னா : 710 3. எம்எஸ் டோனி : 675

4. அம்பாதி ராயுடு : 658

5. கைரன் பொல்லார்ட் : 583

 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக  இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரோகித் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக வயதில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் பெற்றுள்ளார்.

1. சச்சின் டெண்டுல்கர் : 37 வருடம் 356 நாட்கள்

 2. ரோஹித் சர்மா : 36 வருடம் 350 நாட்கள்*

3. விரேந்திர சேவாக் : 35 வருடம் 222 நாட்கள் 

  டெக்கான்,மும்பை  ஆகிய அணிக்காக 18 முறை ஆட்டமிழக்காமல் இருந்த  ரோஹித்  வெற்றியை மட்டுமே சந்தித்திருந்தார்முதன் முதலாக அவர் விளையாடிய அணி தோல்வியடைந்தது. அத்துடன் பரம எதிரி மும்பையை கடைசி 5 போட்டிகளில் 4வது முறையாக சென்னை வென்றது

Tuesday, January 16, 2024

ரோஹித் சர்மாவின் சாதனையும் வேதனையும்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  இரண்டாவதிடி20 போட்டியில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.இருப்பினும் அதில் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் கப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

இந்த வெற்றியையும் சேர்த்து ரோஹித் சர்மா கப்டனாக இதுவரை 41 வெற்றிகளை பெற்றுள்ளார்.   சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கப்டன் என்ற எம்எஸ் டோனியின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 72 போட்டிகளில் டோனி 41 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 53 போட்டிகளிலேயே 41* வெற்றிகளை பதிவு செய்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

 ரோஹித் சர்மா 12 தொடர்களில் கப்டனாக வெற்றியை பதிவு செய்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை வென்ற கப்டன் என்ற புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார்

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான 2வது வீரர் என்ற பரிதாபமான சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய வீரர் என்ற பங்களாதேஸ் வீரர் சௌமியா சர்க்கார் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா மற்றுமொரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 

  1. பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து) : 13

 2. ரோகித் சர்மா (இந்தியா) : 12*

 3. கெவின் ஓ’ப்ராயன் (அயர்லாந்து) : 12

 4. சௌமியா சர்க்கார் (பங்களாதேஷ்) : 11

 5. ரிகிஸ் சக்கப்வா (ஜிம்பாப்பே) : 11

Sunday, July 10, 2022

கோலியின் சாதனையை உடைத்த ஹிட்மான்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 போட்டியில் கோலியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுலில்ல் நடைபெற்ற முதல் ரி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது, இதில் ரோஹித் சர்மா 24 ஓட்டங்கள் எடுத்ததில் விராட் கோலியின் பெருமைக்குரிய சாதனையை உடைத்தார்.

விராட் கோலி, வெகு விரைவில் ரி20 சர்வதேச போட்டிகளில் 1,000 ஓட்டங்களை எடுத்த கேப்டனாக இருந்தார், அதாவது கோலி 30 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டி சாதனை புரிந்தார்.

ஆனால் இவர் சாதனையை பாகிஸ்தான் கப்டன் பாபர் அஸாம் முறியடித்தார், பாபர் அஸாம் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரி20 ஓட்டங்களை எடுத்து கோலியை கடந்தார்.

இப்போது இந்திய சாதனையாக இருந்த விராட் கோலியின் விரைவு ரி20 1000 ஓட்டங்களை தன் 29வது இன்னிங்ஸில் கடந்து ரோஹித் சர்மா சாதனை புரிந்தார்.

Wednesday, May 4, 2022

கோலி கைவிட்ட குல்தீப்புக்கு கைகொடுத்த ரோஹித்

ஐபிஎல் 2022 தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இந்தியாவுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அ  உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் வீரர் குல்தீப் யாதவ் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சை கையிலெடுத்து இந்திய அணிக்குள் நுழைவதற்கான அஸ்திரத்தை தொடுத்துள்ளார். இந்த வருடம் டெல்லி க‌ப்பிடல் அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 8.23 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ஊதா தொப்பிக்காக போட்டி போட்டு வருகிறார்.

  இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்து வருகிறார். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அவர் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் பதிவு செய்த 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

  2017இல் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் இந்தியாவிற்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்று 2017 – 2018 போன்ற காலகட்டங்களில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஆனால் இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர்  குல்தீப்பின்  பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தடுமாறி வந்த அவர் மீண்டும் இப்படி சிறப்பாக செயல்படுவதற்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தான் காரணம் என்று அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே தெரிவித்துள்ளார். 

-   2019இல் ஒருசில போட்டிகளில் தடுமாறி நின்ற வேளையில் அவருக்கு அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி ஆதரவு கொடுக்காததே அவரின் பந்துவீச்சில் மேலும் சரிவு ஏற்படுவதற்கு காரணம் என்றும் கபில் பாண்டே கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. 

 “கேப்டன் நம்பிய போதெல்லாம் குல்தீப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனாலும்கூட அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது “நல்ல வேளையாக குல்தீப் யாதவின் கேரியரை ரோகித் சர்மா காப்பாற்றியுள்ளார். ரோஹித் தான் குல்தீப் யாதவின் இந்த எழுச்சிக்கு காரணமாவார். அவர் மிகப்பெரிய வீரர்களிடன் திறமையை எவ்வாறு வெளிக்கொணர்வது என்று தெரிந்து வைத்த மகத்தான கேப்டன். குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக குல்தீப் யாதவை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் அவரும் இரண்டு  விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கையை காப்பாற்றினார்.” 

குல்தீப் யாதவ் கம் பேக் கொடுத்ததற்கான முழு பாராட்டுகளும் ரோகித் சர்மாவை சேரும். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இன்று அவர் இங்கே இருக்க முடியாது. ஒவ்வொரு கேப்டனும் வீரர்களை தேர்வு செய்வதில் வித்தியாசமான ஸ்டைலை கொண்டிருப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி தலைமையில் குல்தீப் நிறைய விளையாடியுள்ளார் என்றாலும் அவர் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்ய விரும்பினார். 

  அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்தார். குறிப்பாக கணிசமாக பேட்டிங் செய்வார் என்பதற்காக குல்தீப்புக்கு பதில் அக்சர் படேலை அவர் தேர்வு செய்தார். ஆனால் ஒரு கேப்டன் என்பவர் எப்போதும் தனது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Monday, December 13, 2021

48 மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட கப்டன்

இந்திய  கிரிக்கெட் அணியின் வெற்ரிகரமான கப்டன் கோலிக்கு இப்படி ஒரு நிலை ரும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தென். ஆபிரிக்க டெஸ்ட் அனியின் கப்டனாக கோலியின் தலைமையில் விளையாடும் அணி வீரர்களின்  பெயர் விபரம் வெளியிடப்பட்ட பின்னர் ஒருநாள் போட்டி அணி தலைவராக ரோஹித் சர்மா  அறிவிக்கப்பட்டார். இதனால் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே ரி20 போட்டிகளுக்கான ப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார்.

கங்குலிக்குப் பின்னர் ஆக்ரோசமான கப்டனாக வலம் வந்தவர் கோலிவாழ்க்கை ஒரு வட்டம் என்று தொடங்கும் வசனம் திருமலை திரைப்படத்தில் விஜய் பேசியது விராட் கோலிக்கு பொருந்தி இருக்கிறது இந்திய கிரிக்கெட்டில் தமக்கு நிகர் ஆளே இல்லாத ராஜாவாக திகழ்ந்தார் விராட் கோலி

விராட் கோலி ப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும் இது சில காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புதான். அதை பிசிசிஐ அறிவித்தவிதம்தான் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ரி20 போட்டிகளில் ப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்த போது, பிசிசிஐ செயலாளர் கங்குலி, கௌரவ செயலாளர் ஜெய் ஷா என பலரும் வீடியோ பதிவில் கோலிக்கு நன்றி கூறியிருந்தனர். ஆனால், இங்கே ஒரு நாள் போட்டிகளின் கப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குவதாகவோ அல்லது அவருக்கு நன்றி தெரிவித்தோ பிசிசிஐயின் ட்வீட்டில் ஒரு வரி கூட இல்லை. வெறுமென ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் ப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஒரு நாள்  போட்டிகளில் ப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் 70.43%. இது இந்திய அணியின் வேறெந்த ப்டன்களின் சாதனைகலை விடவும் அதிகம்.

19 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் கோலி இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில் 15 தொடர்களில் இந்தியா வென்றிருக்கிறது. அவு தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா  ஆகிய நாடுகளில் கப்டனாக  தொடரை வென்று கொடுத்திருக்கிறார்.

2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரையும் 2019 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டி வரையும் இந்திய அணியை அழைத்து சென்றிருக்கிறார். திடீரென ப்டன் பதவியை பறிக்கும் அளவுக்கு கோலி ஒரு மோசமான கேப்டன் இல்லை.

பிசிசிஐக்கும் விராட் கோலி க்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தனித்தனி கப்டன் இருப்பதை பி.சி.சி. விரும்பவில்லையாம். இதன் காரணமாக ஒருநாள் போட்டிக்கான கப்டன் பதவியில் இருந்து தானாக முன்வந்து பதவி விலகுமாறு விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் கோலி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை அணியின் கப்டனாக இருந்து 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பேன் என்று கோலி கூறியுள்ளார். ஆனால் பி.சி.சி. யின் அதிகாரிகள் எவ்வளவு பேசியும் சமாதானம் ஆகவில்லை. இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலி பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்தனர்.

 அந்த 48 மணி நேரத்தில் பதவி விலகவில்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பி.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் எடுத்த முடிவிலிருந்து மாறாத கோலி பதவி விலகாததால் அவரை கப்டன் பதவியிலிருந்து பி.சி.சி. நீக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ஏற்கனவே ரி20 கிரிக்கெட் துணைக் ப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கும் துணை ப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ரோஹித்துக்கு பிறகு கேஎல் ராகுல் அணியின் ப்டனாக நியமனமாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் அவரே துணை ப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது 29 வயதில் இருக்கும் ராகுல் இன்னும் ஆறு ஏழு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பதனால் அவரை துணை கேப்டனாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்தான அறிவிப்பும், தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது