Showing posts with label யுவராஜ் சிங். Show all posts
Showing posts with label யுவராஜ் சிங். Show all posts

Friday, December 10, 2021

யுவராஜ் சிங்கின் இரண்டாவது இன்னிங்ஸ்


 

2011 உலகக் கிண்ண  சம்பியன் அணியின் தொடர் நாயகனான ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் செவ்வாயன்று வெளியிட்ட வீடியோவில் மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் காண்பார் என்பது போல் சூசகமான செய்தியை  வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங்  பதிவு செய்த வீடியோவில் ‘இட் இஸ் டைம் ஃபார் மை செகண்ட் இன்னிங்ஸ் என்று கூறியுள்ளார், 2வது இன்னிங்ஸுக்குத் தயார் என்று அவர் கூறுவது கிரிக்கெட் மட்டையை மறுபடியும் பிடித்து களமிறங்குகிறாரா, அல்லது புதிய அணியில் எதுவும் பயிற்சியாளராக இணைகிறாரா என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல்-க்கு வந்துள்ள இரண்டு புதிய அணிகள் அவரை வீரராகவே சேர்க்கிறதா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.தொடர்புடைய செய்திகள்

ஏற்கெனவே அவர் சூசகமாக முன்பு தெரிவிக்கும் போது பிப்ரவரியில் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய வீடியோவில்,  “It's that time of the year. Are you ready? Do you have what it takes? Have a big surprise for all you guys! Stay tuned!" என்று கேப்ஷன் போட்டுள்ளார் யுவராஜ்.

Thursday, September 16, 2021

அசைக்க முடியாத ஐபிஎல் சாதனைகள்

ஐபிஎல் 2021 தொடர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் நிலைநாட்டபடுவதும் அவை முறியடிக்கப்படுவதும் வழமையான சம்பவங்கள். ஐபிஎல் இல் பதியப்பட்ட மிக முக்கியமான் மூன்று சாதனைகளை முறியடிக்க முடியுமா என்ற  ஆவல் எழுந்துள்ளது.

கிங் கோலியின்   973 ஓட்டங்கள்

விராட் கோலியின் தலைமையிலான ஆர்சிபி ஐபிஎல் கிண்ணத்தை ஒருமுறை கூட வெல்வில்லை. 2016 ஐபிஎல் தொடரில் கோலி அடித்த 973 ஓட்டங்களை எவராலும் எட்ட முடியாது. அந்தத்தொடரில் கோலி நான்கு சதங்கள் அடித்தார்.

  கிறிஸ் கெய்ல் புயல்

பந்து வீச்சாள‌ர்களுக்கு எதிரான  நடமாடும் சிம்மசொப்பனம் ஒருவர் உண்டு என்றால் அது யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்தான். 2013‍ஆம் ஆண்டு சர்ச்சைகள், சூதாட்ட மோசடிகள் புகார்கள் எழுந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 175 ஓட்டங்களை விளாசியது மறக்க முடியாதது என்பதை விட உடைக்கவும் முடியாதது. பிரெண்டன் மெக்கல்லம் முதல் ஐபிஎல் தொடரில் விளாசிய 158 ஓட்ட  சாதனையை கெய்ல் உடைத்தார், ஆனால் கெய்லை உடைக்க ஆளில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவு சதமானதுடன் அதிகபட்ச ஓட்டமாகவும் மாறியது. 66 பந்துகளுக்கு 175 ஓட்டங்கள். நெருங்க முடியாத சாதனை 

இரண்டு ஹட்ரிக் நாயகன் யுவராஜ் சிங்

2007  ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணப்  போட்டியில்   ஒரு ஓவரில்  ஆறு சிக்சர்களை   விளாசி சாதித்தவர் யுவராஜ் சிங். டோனி இவரை பந்து வீச்சில் பயன்படுத்தி  2011 உலகக் கிண்ணத்தை வென்றார்.  இவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒரு தொடரில் இரன்டு  ஹாட்ரிக் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக 3/22 என்று ஹட்ரிக் எடுத்த யுவராஜ் அதே தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக பஞ்சாப் பெற்ற ஒரு  ஓட்ட வித்தியாச  வெற்றியில் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஒரே ஐபிஎல் தொடரில் இரண்டு  ஹட்ரிக் சாதனைளை புரிந்த ஒரே வீரர் ஆவார். இந்தச் சாதனையை உடைப்பதும் கடினம்.