Showing posts with label கிடிக்கெற். Show all posts
Showing posts with label கிடிக்கெற். Show all posts

Sunday, May 17, 2015

முதல் இடத்தில் சென்னை

  
பஞ்சாப்புக்கு எதிராக போட்டியில் ஏழு விக்கெற்களால் வெற்றிபெற்ற சென்னை  முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன் பிளேஓவ் போட்டியில் விளையாடும் முதல்  அணியாக தெரிவானது. மொஹாலியில்  நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்பில்   மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஸ்மித்,மோகித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக ஹஷி நெஹ்ரா ஆகியோர்  சேர்க்கப்ப்ட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கப்டன் பெய்லி துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தார்.  பஞ்சாப்பின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் சகாவும் வோரவும் சுமாராக விளையாடினர்.சென்னையின் பந்துவீச்சும் களத்தடுப்பும் பஞ்சாப்பை தடுமாற வைத்தது.13.5 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 78 ஓட்டங்களை எடுத்தது பஞ்சாப். பெய்லி மக்ஸ்வெல்,மில்லர் என எதிர்பர்த்த அனைவரும் விரைவாக வெளியேறினர். ஏழாவது விக்கெற்ரில் இணைந்த அக்சர் படேல், ரிஷி தவான்   ஆகியோர் பஞ்சாப்பை காப்பாற்ரினர்.இவர்கள் இருவரும்4.1 ஓவர்களில் 44 ஓட்டங்கள் அடித்தனர். படேல் 32 ஓட்டங்கள் எடுத்தார். தவான் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள் எடுத்தார் நெஹி இரண்டு விக்கெற்கள் கைப்பற்றினார்.பஞ்சாப் 20 ஓவர்களில் ஏழுவிக்கெற்களை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது.

131 என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கியசென்னையின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹஷி ஒரு ஓச்சத்துடனும் மக்குலம் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். ஏழாவது விக்கெற்றில் இணைந்த டுபிளசிஸ்,ரெய்னா ஜோடி வெற்றியை நெருங்கியது. டுபிளசிஸ் 55 ஓட்டங்களி ஆட்டம் இழந்தார்.ரெய்னா டோனி ஜோடி 32 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. ரெய்னா 45 டோனி 25 ஓட்டங்கள் அடித்தனர். 16.4 ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து 134 ஓட்டங்கள் அடித்த சென்னை ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.  நெஹி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.அக்சர் படேலை அவுட்டாக்கிய பிராவோ, ஐ.பி.எல்., அரங்கில் 1000  ஓட்டங்கள், 99  விக்கெற்களைவீழ்த்திய முதல் ‘ஆல்-– ரவுண்டர்’ ஆனார். இதுவரை 88 போட்டியில் 1134  ஓட்டங்கள், 99  விக்கெற்களை  வீழ்த்தியுள்ளார்.             

பஞ்சாப் வீரர் குர்கீரத் சிங்கை அவுட்டாக்கிய சென்னை அணி  கப்டன் டோனி, ஐ.பி.எல்., அரங்கில் அதிக ‘ஸ்டம்பிங்’ செய்த விக்கெற்  கீப்பர்களில், தினேஷ் கார்த்திக்கை (119ல், 23 ‘ஸ்டம்டு’) சமன் செய்தார். அடுத்த இடத்தில் கோல்கட்டாவின் உத்தப்பா (119ல் 22) உள்ளார்

கடந்த ஐபிஎல்லில் 11 ப்போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடந்த பஞ்சாப் 22 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. இந்த ஆண்டு மூன்ரு போட்டிகளில் வெற்ரி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து  ஆறு புள்ளிகளுடன்  கடைசி இடத்தில் உள்ளது.