Showing posts with label தடம்மாறியதமிழ்ப்படங்கள். Show all posts
Showing posts with label தடம்மாறியதமிழ்ப்படங்கள். Show all posts

Thursday, December 27, 2012

திரைக்குவராதசங்கதி 52


மறக்கமுடியாதபழையகுர‌ல்களில்ஒன்றுஜமுனாராணியினுடையது.இன்றுகுத்துப்பாடல்கள்எனஇள‌களைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும்ஒருவர்.ஜமுனாராணி,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோரின்அந்தக்காலகுத்துப்பாடல்கள்அந்தக்காலஇளைஞர்களைமட்டுமல்லாதுமுதியவ‌ர்களையும்கவர்ந்திழுத்தன.1952ஆம்ஆண்டுமார்டன்தியேட்டர்ஸ்தயாரித்தவளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து குளிர்தாமரை மலர்ப்பொய்கை என்ற பாடலை முதன் முதலாகப்பாடினார் ஜமுனாராணி. அவருடையகுர‌லில் ஒருகவர்ச்சிஇருந்தது.அதேபடத்தில்உள்ளஇன்னொருபாடலானகுலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால்என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இர‌ண்டு பாடல்களும் பார‌திதாசனால் எழுதப்பட்டவை..

டி.எம். சௌந்தரர்ராஜனின் கம்பீர‌க் குர‌லுக்குஇணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள்இன்றைக்கும்மறக்கடியாதவையாகஉள்ளன.ஏழுவயதில்சினிமாவுக்கு குர‌ல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணிபாடியவர். நான்குவயதில் சங்கீதப் போட்டியில்முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காகதேர்வுசெய்யப்பட்டவர்போன்றபெருமைகளின்சொந்தக்கார‌ர். ஜமுனாராணி. 1964 ஆம் ஆண்டு தெலுங்குத்திரைப்படமான தியாகய்யா வெளியானபோதுபிர‌பலஇசைவித்தகர்களின்பாடல்கள்அப்படத்தில்இடம்பெற்றன.அவர்களுடன்ஏழுவயதானஜமுனாராணியும்மதுரைநகரிலோஎன்றபாடலைப்பாடிஇருந்தார்.நடனமங்கையாகத்தான்சினிமாவில்ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில்தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீதி, கருடகர்வ பங்கயம்போன்ற தெலுங்குப் படங்களில்ஜமுனாராணிநடனமாடிஇருந்தார்.1952ஆம்ஆண்டுவெளியாகிதமிழ்த்திரைஉலகின்பெரும்புர‌ட்சியைஉருவாக்கியதேவதாஸ்படத்தில்ஜமுனாராணி பாடிய "ஒ தேவதாஸ் படிப்பு இதானாவாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே'என்ற பாடல் ஜமுனாராணிக்குபெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம்ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச்சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன்தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியர‌சு கண்ணதாசன், பி சுசீலா, ஜிக்கி,பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின்குர‌லும் ஒலிக்க கவியர‌சு முக்கிய கார‌ணியாக விளங்கினார்.1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல்ஜமுனா ராணியால் இப்படியும் பாடமுடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது. அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்றபோது பட்டென ஜமுனாராணியை சிபாரிசுசெய்தார் கவியர‌.அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடியமேலேபறக்கும்ராகெட்டு,மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, ஆளை பயக்கும்பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டுஎன்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள்முடித்ததும் மாமா.... என ஜமுனாராணியின் குர‌ல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது


.கவர்ச்சிப் பாடல்களில் கலக்கிய ஜமுனாராணிக் குமகாதேவி படத்தில் காமுகர் நெஞ்சில்நீதியில்லைஅவருக்குதாய் என்றும் தார‌ம்என்றும்பேதமில்லைஎன்றஉருக்கமான பாடலைஜமுனாராணி நன்றாகப் பாடுவார் என கவியர‌சு கூறினார்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் டல்களுக்குத்தான் அவரின் குர‌ல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாகஎழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி. ஆரும் ஒப்புதலளிக்கவேண்டும்.இவைஎல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம்என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக‌ இருந்தார். இந்தக் குர‌ல் சரிவர‌வில்லை என்றால்கால்ஷீட் செலவை நான் தருகிறேன் என்றார்.அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒலிப்பதிவுஒத்திகையின்போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம்கொடுத்தார்.இந்தப் பாட்டைஉணர்ச்சிபூர்வமாகஉருக்கமாகப்பாடினால்தான்உனக்குவேறுபாடல்களும் கிடைக்கும் இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள். இது என்னுடைய மானப்பிர‌ச்சினை. நன்றாகப் பாடுஎன கவியர‌சர் ஆலோசனை கூறினார்.ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன்திகைத்துவிட்டார்.பாடல்மனதைப்பிசைந்தது.உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாகஇருக்கவேண்டும்எனக்கூறினார்எம்.எஸ்.விஸ்வநாதன்.

மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலை ஜமுனாராணியும் பாடியிருந்தார்.இர‌ண்டு பாடல்களையும்ர‌சிகர்கள்விரும்பிக்கேட்டார்கள்.யார‌டிநீமோகினி,தடுக்காதேஎன்னைதடுக்காதே,குங்குமப்பூவே,பாட்டொன்றுகேட்டேன்பர‌வசமானேன்,சித்திர‌த்தில்பெண்ணெழுதி,சேதிகேட்டோசேதிகேட்டோபோன்றநூற்றுக்கணக்கானபாடல்கள்ஜமுனாராணியின்புகழைப்பறைசாற்றுகின்றன.இளையராஜாவின்இசையில்ஒரேஒருபாடலைமட்டும்ஜமுனாராணிபாடியுள்ளார்.ஜமுனாராணிஎம்.எஸ்.ராஜேஸ்வரிஇணைந்துநாயகன்படத்துக்காகபாடியநான்சிரிச்சாதீபாவளிஎன்றபாடல்இன்றும்ர‌சிகர்கள்விரும்பும்பாடலாகஉள்ளது.ஜமுனாராணியின்தகப்பனின்பெயர்வரதராஜுலுநாயுடு,தாயார்திரெளபதி,வாய்ப்பாட்டுவீணைஆகியவற்றில்சிறப்புத் தேர்ச்சிபெற்றதாயிடம்இசைபயின்றார் ஜமுனா ராணி.

திரைசைஇசைத்திலகம்கே.வி.மகாதேவன்ஜமுனாராணிக்குஅதிகமானவாய்ப்புக்கொடுத்தார்கே.வி.மகாதேவன்வ‌ருடத்துக்கு30டங்களுக்குஇசைஅமைத்தகாலத்தில்வர்ச்சிப்பாடல்களுக்குஜமுனாராணியைத்தான்கூப்பிடுவார்.இர‌ணடுகதாநாயகிகள்ஒருபடத்தில்இருந்தால்இருவரும்இணைந்துபாடல்கள்ஒலிக்கும்போதுஒருகதாநாயகிக்குசுசீலாவும்இன்னொருகதாநாயகிக்குஜமுனாரணியும்பாடுவார்கள்.அத்தனைபாடல்களும்இன்றும்மனதைவிட்டுஅகலாதவை.ஒருகாலத்தில்ஜமுனாராணிவீட்டில்இருந்ததுகிடையாது.அவரைக்காணவேண்டுமானால்ஏதாவதுஒருஸ்ரூடியோவுக்குத்தான்செல்லவேண்டும்.காலைஒன்பது மணிமுதல்ஒருமணிவரை,பிற்பகல்இர‌ண்டுமணியிலிருந்துஇர‌வுஒன்பது மணிவரை, இர‌வு ஒன்பது மணியில் இருந்து நள்ளிர‌வு இர‌ண்டு மணிவரை மூன்றுஷிப்ட்களில்பாடினார்ஜமுனாராணி.இன்றுபோல்நவீனவசதிகள்அன்று இல்லை. பலமுறை ஒத்திகைபார்த்த பின்னர்தான் ஒலிப்பதிவு செய்வார்கள். ஒருஇடத்தில்பிசகினால்மீண்டும்முதலில்இருந்துஒலிப்பதிவுசெய்யப்படும்.எம்.எஸ்.விஸ்வநாதனும்ராமமூர்த்தியும்பிரிந்தபின்னர்விஸ்வநாதன்மளமளவெனமுன்னுக்குச்சென்றுவிட்டார்.அவர்ஜமுனாராணிக்குசந்தர்ப்பம்கொடுக்கவில்லை. ஜமுனாராணியின் மீது மதிப்பு வைத்தராம மூர்த்திக்கு சந்தர்ப்பம் கிடைக்காததனால்ஜமுனாராணியால்தொடர்ந்துபாடமுடியாதநிலைஏற்பட்டது. ஜமுனாராணிக்கு அதிகளவில்வாய்ப்புக் கொடுத்த கே.வி.மகாதேவனும் சினிமாவில்இருந்துஒதுங்கஆர‌ம்பித்ததுஜமுனாராணிக்குபின்னடைவைக்கொடுத்தது.1975 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஜமுனாராணி பாடிய பாடல்கள் எவையும் வெளிவர‌வில்லை.1987ஆம் ஆண்டு நாயகன் படத்தில் இளையராஜாவின்இசையில்நான்சிரித்தால்தீபாவளிஎன்றபாடலைப் பாடினார். ஜமுனா ராணியும் ஜிக்கியும் இணைந்துபாடிய அப்பாடல்மீண்டும் அவர்களின் குர‌லின் மதிப்பை எடுத்துக்காட்டியது.


ரமணி
மித்திரன்


18/03/2007
112,,114


Thursday, December 20, 2012

தடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45


பெண்பித்தனானகணவனைத்திருத்தும்பெண்ணின்கதைதான்1976ஆம்ஆண்டுவெளியானமன்மதலீலை.இளம்பெண்களையும்திருமணமானபெண்களையும்மயக்கிவசப்படுத்தும்கணவனாககமல்நடித்தார்.கமலைத்திருத்தும்மனைவியாககவர்ச்சிநடனமாடிரசிகர்களைக்கிளுகிளுக்கவைத்தஆலம்நடித்தார்.

பெண்பித்தனாகத்திரியும்கமல்,ஆலத்தைமுறைப்படி திருமணம் செய்கிறார். ஒருவர்மீதுஒருவர்அளவுகடந்தபாசத்தையும்அன்பையும்பொழிகின்றனர்.அழகானமனைவிவீட்டில்இருக்கவேறுபெண்களைக்கண்டதும்மனம்தடுமாறுகிறார்கமல்.அழகானபெண்களின்பின்னால்சென்றுஅவர்களதுபலவீனம்அறிந்துதன்வலையில்வீழ்த்துகிறார்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் கமலின்  வலையில் வீழ்ந்து அவரின் காமப் பசிக்கு இரையாகின்றனர்.

கணவனின்காமலீலைகளைஅறிந்தஆலம்அவரைத்திருத்தமுயல்கிறார்.கமலைத்திருத்துவதற்காகஅவரின்கழுத்தில்தாலிகட்டுகிறார்.கழுத்தில்தாலிஇருந்தால்தனதுநினைவுவரும்வேறுபெண்களைத்திரும்பிப்பார்க்கமாட்டார்என்றுநினைக்கிறார்ஆலம்.ஆலம்கட்டியதாலிக்குமதிப்புக்கொடுக்காதுஅதனைக் கழற்றிவைத்துவிட்டுசல்லாபலீலையைத்தொடர்கிறார்கமல்.கமலைத்திருத்தமுடியாதுஎன்பதை அறிந்த ஆலம் விவாகரத்துச் செய்கிறார்.


ஆலம்தன்தாய்வீட்டிற்குச்செல்கிறார்.ஆலம்வீட்டைவிட்டுவெளியேறியதால்கவலைப்படுகிறார்கமல்.அன்றுமுதல்தன்னுடன்வேலைசெய்பவரிடம் தனது மனக்குமுறலைவெளிப்படுத்துகிறார்.நண்பனின்அறிவுரையால்கமல்மனம்மாறுகிறார்.தாய்வீட்டிற்குசென்றஆலம்தனதுதகப்பனும்கம‌லைப் போன்று பெண்பித்தன் என அறிகிறார் தன்தவறை உணர்ந்து இருவரும் மீண்டும் ணைந்து வாழத் தொடங்குகிறார்கள்.

கமல்,ஆலம்,ஜெயப்பிரதா,வை.விஜயா,சுனந்தினி,ஹேமாசௌத்திரி,ஜெயசுதாஆகியோர்நடித்தனர்.இவர்கள் அனைவரும் கமலின்ஆசைக்குஇரையாகும் பாத்திரத்தில்நடித்தனர்.அன்றையகவர்ச்சிநடிகையானஆலம்கதாநாயகியாகநடிக்கஅன்றையபிரபலநாயகிகளானஜெயப்பிரதாஜெயசுதாஆகியோர்சிறியபாத்திரத்தில்நடித்தனர்.மன்மதலீலையில்பெண்க‌ளைமயக்ககமல்புரியும்அங்கசேஷ்டைகள்ரசிகர்க‌ளைப்பெரிதும்கவர்ந்தது.பெண்களைப்பார்த்து"உங்களுக்குத்திருமணமாச்சா"என்றுகமல்கேட்கும்வசனத்தைஅன்றுஉச்சரிக்காதவர்கள் இல்லை.

பாடல்கள்கண்ணதாசன்இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்,கே.ஜே.ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா,வாணிஜெயராம்,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோர் பாடியுள்ளனர்.மன்மதலீலைமயக்குதுஆளைமனைவிஅமைவதெல்லாம்இறைவன்கொடுத்தவரம்  நாதமெனும்கோயிலிலே,ஹலோமைடியர்ரோங் நம்பர்ஆகியபாடல்கள்இன்றும்திகட்டாதுஇனிக்கின்றன. கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் கே. பாலச்சந்தர்.

தமிழில்மன்மதலீலைஎன்றபெயர்வெளியாகிரசிகர்களைக்கவர்ந்தஇப்படம்தெலுங்கில்"மன்மதலீலா"ஹிந்தியில்"மீட்டிமீட்டிபேட்டன்"என்றபெயரில்வெளியாகி பிரபல்யமானது.
மித்திரன்
ரமணி 30/12/12