Thursday, March 31, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 தமிழ்த்திரை உலகில் பல வெற்றிப் படங்களைத்தந்தவர். பல நடிகர்களுக்கு இவரின் படங்கள் திருப்புமுனையாக  இருந்தன. புதிய நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், தொழில் நுட்பங்கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். இவர் தயாரித்த  கிந்திப் படங்களும் சக்கை போடு போட்டன. சண்டைப் படங்கள்,சமூகபபடங்கள் மட்டுமன்றி பக்திப் படங்களையும் தந்தவர்.  சிங்கம், புலி,யானை,, ஆடு,பசு,பாம்பு,கோழி,குரங்கு,குதிரை போன்றவற்றையும் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்க வைத்தவர்.  அவர்தான் சாண்டோ சின்னப்பா தேவர்.

தண்டாயுதபாணி பிலிம்ஸ் தேவரின்..... என்ற நீண்ட  கம்பனியின் சொந்தகாரன். நடிப்பதர்கு ஆசைப்பட்டு திரை உலகை நோக்கிச் சென்ற சின்னப்பா தேவர் தவிர்க்க முடியாத தயாரிப்பாளரானார்.  பூஜை போடுகின்ற அன்றே படம் வெளியாகும் நாளை அறிவிப்பார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.  பால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, மல்யுத்தத்தில் அதீத அக்கறை காட்டினார்.  திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

சின்னப்பாவின் ஊரில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.   அப்படத்தின் இயக்குநர் படத்தில் நடிக்கிறாயா என சின்னப்பாவிடம் கேட்டார். மகிழ்ச்சியுடன் சின்னப்பா ஒப்புக்க்கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னர்  சின்னப்பா நடித்த காட்சி படத்தில் வராது என்றும்  வேரு ஒரு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் தருவதாகவும் இயக்குநர் சொன்னார். கட்டுமஸ்தான் உடலமைப்புக்  கொண்ட சின்னப்பா டூப்பாக நடித்தார்.  ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும்  என சின்னப்பா முயற்சி செய்தார்.  சினிமா வாய்ப்பு தேடி அலைகையில் எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் உதவியால் ராஜகுமாரியில் ஒரு காட்சியில் நடித்து 45 ரூபா சம்பளமாகப் பெற்றார்.

எம்.ஜி.ஆருடன் இணைந்துக் படங்கள் தயாரித்தவர் என்ற பெருமை பெறு


ம் அளவுக்கு உயர்ந்தவர். தேவர் தயாரிப்பாளராகி தனது தம்பி எம்.ஏ. திருமுகத்தையே டைரக்டராக்கி எம்ஜிஆரை வைத்து முதன் முதலில் தயாரித்து 1956-ல் வெளியிட்ட ‘தாய்க்குப் பின் தாரம்’ சக்கை போடுபோட்டது. ஆனால் தெலுங்கில் எம்ஜிஆரை கேட்காமல் வெளியிட்டதில் தகராறு முளைத்தது.

உடனே வாள்வீச்சில் எம்ஜிஆருக்கு முன்பே பெயரெடுத்த முன்னணி நடிகர் ரஞ்சனை வைத்து ‘நீலமலை திருடன்’ எடுத்தார். பின்னர், கன்னட நடிகர் உதயகுமார், ஜெமினி கணேசேன், பாலாஜி போன்றோரை வைத்து அடுத்தடுத்து படங்களை கொடுத்தார். எம்ஜிஆரும் தேவரை கண்டுகொள்ளவில்லை, தேவரும் எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1960-ல் அசோகனை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’ என்று ஒரு படத்தை ஆரம்பித்தார்.. பாடல்களெல்லாம்ஒலிப்பதிவாகிவிட்டன  ஆகிவிட்டன. பாடல்களை எதேச்சையாக கேட்ட எம்ஜிஆருக்கு வரிகளும் டியூனும் அற்புதமாய் தெரிந்தன. நைசாக கதையையும் கேட்டார். அங்குதான் பிடித்தது அசோகனுக்கு சனி. இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று எம்ஜிஆர் கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். விளைவு? அசோகன், படத்தில் வில்லனாக்கப்பட்டார். தாய் சொல்லை தட்டாதேவில் எம்ஜிஆர் ஹீரோவானார்.  பீம்சிங், சிவாஜி ஜோடி  "ப" வரிசைப்படங்கள் வெற்றி பெற்றன. சாண்டோ சின்னப்பா, எம்.ஜி.ஆர் இணை "த" வரிசைப்படங்கள் வெற்றி பெற்றன. இத்தனை சாதனைகள் செய்தும் சிவாஜி நடித்த படத்தை சாண்டோ  சின்னப்பா தேவர்  தயாரிக்கவில்லை.

தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார்.   ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின.

குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். 

எம்ஜிஆருக்குச் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை திகதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, வெளியாகும் நாளும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை.

அதேபோல், படத்தில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்படும். அவர்களிடம் பேசப்படும். சம்மதம் வாங்கப்படும். டெக்னீஷியன்களும் அப்படித்தான். எல்லாம் முடிவானதும், எல்லோருக்கும் ‘சிங்கிள் பேமெண்ட்’ வழங்கப்படும். அதாவது, ஒரு படத்துக்கான சம்பளத்தை, இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுப்பதெல்லாம் சின்னப்பா தேவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள்.

இந்தித் திரைப்படத்துக்காக, ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள்.

தேவரின் வாழ்க்கையை  புத்தகமாக்க  வேண்டும் என சிலர் தெரிவித்தனர். புத்தகம் எழுத  நிண்ட காலம் தேவைப்படும் . உங்கள்  வாழ்கையை படமாக்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. தேவரின் மனது குளிர்ந்தது. முருகனின் திருவிளையாடல்தான் என் கதை என்றார். முருகனுடைய திருவிளையாடல் தான் என் கதை. . அந்த மருதமலையான், என்னை எப்படி காப்பாத்தி, கரை சேர்த்தான்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமே... அதுல, சினிமாவுக்கு எதெல்லாம் தோதுபடும்ன்னு பாருங்க...' என்றார் தேவர்.

தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள், ஆறு கதைகளாக, தனித்தனியாக சினிமாவிற்கு ஏற்றவாறு உருவாகி, மருதமலை, சுவாமி மலை, பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி கோவில்களில் நடைபெற்றது போல மெருகூட்டப்பட்டது. முருகன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்கள், தேவர் பிலிம்சாரால் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் வாரியார் தோன்றி, சொற்பொழிவு செய்வதாக கதை நகர்ந்தது.

எட்டுமணி நேரம் ஓடக் கூடிய இந்த 'டாகுமென்டரி' படத்துக்கு, தெய்வம் என்று பெயரிட்டனர். தேவர் பிலிம்சில் தொடர்ந்து நடித்தவர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்பட்டது.

கடந்த 1970களில், கோலிவுட்டில், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமாருக்கு அடுத்து, குன்னக்குடி வைத்தியநாதன் பிசியாக இருந்த நேரம். அதனால், அவரை ஒப்பந்தம் செய்தார் தேவர். வழக்கம் போல், பாடல்கள் கண்ணதாசன்.

பாடலுக்கான சிச்சுவேஷனைக் கேட்டார் கண்ணதாசன். ஆனால், படத்தில் சிச்சுவேஷனே இல்லை.

'என்னய்யா... விளையாடறீங்களா... தேவர் அண்ணன் கதையில, பாட்டெழுத சந்தர்ப்பமே இல்லயா...' என்றார். படத்தில் பாடல் சிச்சுவேஷன் இல்லை என்றதும், தேவருக்கு கடும் கோபம்.

கடைசியில் கதை இலாகாவினர், 'அண்ணே... நீங்களும், கவிஞர் அய்யாவும், கோவில் உற்சவங்களை போட்டு பாருங்க... முருகனுக்கு, ஆறு பாட்டாவது கிடைக்காமலா போயிரும்...' என்றனர்.

தினமும் ஒரு, 'எபிசோட்' என்று, எட்டு நாட்கள், திருவிழா காட்சிகளை, மிக பொறுமையாக பார்த்தனர் கண்ணதாசனும், தேவரும்!

வேலனின் ஒவ்வொரு விசேஷமும், பாடலாக ஆனது. உணர்ச்சி வசப்பட்டு எழுதினார் கண்ணதாசன்; அந்தப் படல்கள் அனைத்தும்  இன்றும் பக்திப் பாடல்களாக  ஒலிக்கின்றன.

எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்.

தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் படுதோல்வியைச் சந்தித்த படம்... ‘தேர்த்திருவிழா’வாகத்தான் இருக்கும்.

பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை ‘முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகியிருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம்.

கோவையில் மிகப்பெரிய விநியோகஸ்தர் அவர். தேவரின் படங்களை தொடர்ந்து அவர்தான் அந்தப் பகுதியில் ரிலீஸ் செய்து வந்தார். ஒருநாள் அவரை தேவர் போனில் அழைத்தார். ‘இப்போ எடுத்திட்டிருக்கிற படத்துக்கு நீங்க பணம் எதுவும் தரவேணாம். அதுக்கு பதிலா ஒண்ணு செய்யணும்’ என்றார். ‘சொல்லுங்க முதலாளி’ என்றார். ‘மருதமலைக்குப் போறதுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுங்க போதும்’ என்றார் தேவர். அப்படித்தான் கோயில் பிரபலமானது.

அதேபோல் தேவர் செய்த இன்னொரு விஷயம்... ஐம்பதுகளில், கோவையில் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்ததை ஒருபோதும் மறக்கவில்லை தேவர். ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு தொகையை தனக்கும் இன்னொரு தொகையை உதவிக்காகவும் குறிப்பிட்ட தொகையை முருகன் கோயில்களுக்காகவும் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தன் நண்பர்களுக்குமாகவும் வழங்கி வந்தாராம்.

“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

உதைபந்தாட்ட கலவரத்தில் அதிகாரி மரணம்


  உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண்  போட்டியில் நடைபெற்ற கலவரத்தில் ஸாம்பிய மருத்துவ அதிகாரி மர‌ணமடைந்தார்.

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் உள்ள மொஷூட் அபலா தேசிய மைதானத்தில் நைஜீரியா, கானா அணிகளுக்கு இடையிலான  உலகக் கிண்ண தகுதிச் செஉற்றுப் போட்டி நடைபெற்றது.   1-1 என போட்டி சம நிலையில் முடிந்ததால் உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து நைஜீரியா வெளியேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நைஜீரிய ரசிகர்கள் அங்கிருந்த பொருட்களை வீசி தீயிட்டு கலவரத்தை உண்டுபண்ணினர்.

 இந்தக் கலவரத்தில் ஊக்கமருந்து கட்டுப்பாட்டுக் குழுவில் பணிபுரிந்த ஸாம்பியாவைச் சேர்ந்த  மருத்துவர்ஜோசப் கபுங்கோ,  மூச்சுத்திணறி மரணமானார்.

"செவ்வாயன்று நடந்த போட்டியில் ஊக்கமருந்து அதிகாரியாக கடமையாற்றிய எங்கள் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோசப் கபுங்கோவின் மறைவிற்கு இன்று நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், மேலும் டாக்டர் கபுங்கோவின் குடும்பத்தினருக்கும் முழு கால்பந்து குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஜாம்பியா கால்பந்து சங்கத் தலைவர் ஆண்ட்ரூ கமங்கா கூறினார்.  போட்டிக்கு பிந்தைய வன்முறையின் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நைஜீரிய கால்பந்து கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில், கபுங்கோ, கானா அணியின் டிரஸ்ஸிங் ரூம் அருகே, ஊக்கமருந்து விசாரணைக்காக‌ ஒரு வீரரை அழைத்துச் செல்லக் காத்திருந்த போது அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் நடந்த வன்செயல் பற்றிய விசாரணையை பீபா தொடங்கிய பின்னர் நைஜீரிய கால்பந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

Wednesday, March 30, 2022

உலகக்கிண்ண போட்டியில் விளையாட போத்துகல் தகுதி பெற்றது.


  வடக்கு மசடோனியாவுக்கு எதிரான  பிளேஓஃப் போட்டியில் ப்ரூனோ பெர்னாண்டஸ் இரண்டு கோல்கள்  அடிக்க உககக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதை போத்துகல்  உறுதி செய்தது.

உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில் அதிகம் கவனிக்கப்படாத வடக்கு மசடோனியா ஜேர்மனியை  தோற்கடித்தது.  ஐரோப்பிய சம்பியனான  இத்தாலியை வெளியேற்றி உகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. போத்துகலையும் வடக்கு மசடோனியா, ஆட்டிப்படைக்கும் என எதிர் பார்த்த  போது போத்துகல் இலகுவாக  வெற்றி பெற்றது.
  32-
வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொடுத்த பந்தை பெனாண்டர்ஸ்  கோலாக்கினார்.பெர்னாண்டஸ் 65வது நிமிடத்தில்  இன்னொரு கோல் அடித்தார்.



37
வயதான ரொனால்டோ 2004 யூரோவில் தொடங்கிய தனது 10வது தொடர்ச்சியான பெரிய போட்டியில் விளையாடுகிறார். அவர் நான்கு உலகக் கிண்ணப்போட்டிகளிலும்  ஐந்து யூரோக்களிலும் விளையாடி, 2016 இல் ஐரோப்பிய பட்டத்தை போத்துகலுக்கு பெற்றுக்கொடுத்தார்.115 கோல்களுடன் ஆடவர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக கோல்கள்  அடித்த வீரர், ரொனால்டோ, தொடர்ச்சியாக ஒன்பது சிறந்த போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஒரு முறையாவது கோல் அடித்த ஒரே வீரர் ஆவார்.
1991
இல் முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து சுதந்திரம் பெற்ற வடக்கு மாசிடோனியா, கடந்த ஆண்டு யூரோவில் அதன் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து குழுநிலையை கடக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் இத்தாலிக்கு எதிரான அதிர்ச்சிகரமான 1-0 வெற்றியைத் தவிர, கடந்த ஆண்டு ஜெர்மனியில் அதன் ஐரோப்பிய தகுதிக் குழுவில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் போராடி வென்றது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்   6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

நா ண‌யச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் க‌ப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செயோட்டங்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 10 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் க‌ப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ஓட்டங்களில் ஹசராங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 10 ஓட்டங்க‌களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி  5 விக்கெட்களை இழந்து   67 ஓட்டங்கள்   எடுத்து தடுமாறியது.

  சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜாக்சனை அவரது முதல் பந்திலே வெளியேற்றினார்.

விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் அதிரடி காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் உமேஷ் - வருண் சக்ரவர்த்தி ஜோடி சற்று நிலைத்து நின்று ஓட்டங்கள் குவித்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

129 ஓட்டங்ள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய  அனுஜ் ராவத்  ஓட்டம்  ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பாப் டு பிளெஸ்சிஸ் 5 ஓட்டங்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட‌ விராட் கோலி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில்  உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.

  பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில்   3 விக்கெட்களை இழந்து  40 ஓட்டங்கள் எடுத்து  தடுமாறியது. இதன் பிறகு டேவிட் வில்லி - ரூதர்போர்டு ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடியது. வில்லி 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரூதர்போர்டு  28 ஓட்டங்கள் குவித்து சௌதீ பந்துவீச்சில் ஜாக்சன்-யிடம் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார்.

ஷாபாஸ் நதீம் சிறிது நேரம் அதிரடி காட்டினார். 3 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 20 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவரில் 7 விக்கெட் இழந்திருந்த நிலையில் 7 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக்கில் இருந்தார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பெங்களூரு வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து, பவுண்டரி அடித்து பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் மூலம் பெங்களூரு அணி முதல்வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

சசிகலாவிடம் சரணடைந்த தர்மயுத்தப் போராளி பன்னீர்

 

ஜெயலலிதாவால் ஆசீர்வதிக்கப்பட்டு முதலமைசரானவர் ஓ.பன்னீரச்செல்வம். சசிகலாவால் வஞ்சிக்கப்பட்டு முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால்  அவர் மீது தீரா வன்மம் கொண்டிருந்தார் பன்னீர். சசிகல நம்பி இருந்த எடப்பாடி துரோகம் செய்ததால் அரசியல் அரங்கில் அநாதையானார் சசிகலா. பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்தால்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கும் என்ற நிலை வந்த போது வேண்டா வெறுப்பாக இருவரும் சேர்ந்தனர். பெயருக்கு இரட்டைத் தலைமை. ஆனால்,  ஒற்றைத்தலைமையை நோக்கி காய் நகர்த்தினர்.

ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னால் தர்ம யுத்தம் செய்த பன்னீர் விதித்த முக்கிய நிபந்தனை  ஜெயலலிதாவின்  மரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைக் கமிஷன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை, 2017ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக , அரசு அமைத்தது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால், 2019-ல் நிறுத்தப்பட்ட விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மீண்டும் துவங்கியுள்ளது. விசாரணை ஆனையத்தி வாக்குமூலம் வழங்கும் படி  பன்னீர்ச்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அதனை அவர் தட்டிக்கழித்தார். ஆட்சி மாறியபின்னர் ஓடோடிச்சென்று வாக்குமூலம் கொடுத்தார்.

ஓ.பன்னீர்ச்செல்வம் என்ன சொலப்போகிறார் என்பதை அறிய இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் ஆவலாக இருந்தனர். ஜெயலலிந்தாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை பன்னீர் அவிழ்பார் என எதிர்பார்த்த அனைவரும் ஏமாந்து போயினர். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமில்லை. சசிகலா தரப்பு சதிசெய்யவில்லை, மக்கள் சந்தேகப்பட்டார்கள். அதனால்தான் விசாரணக் கமுஷன் வேண்டும் என்ச்சொனேன் என்று வாக்கு மூலம் கொடுத்தார் ஓ.பன்னீர்ச்செல்வம். எடப்பாடியைச் சிக்க வைப்பதற்காக  பன்னீர் அரசியல் வலையை விரித்துள்ளார்.இது வரை காலமும் சசிகலா என்று சொலிய பன்னிர்ச்செல்வம்  இன்று சின்னம்மா என மதிப்புக் கொடுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையைக் கைப்பற்றுவதர்கு சசிகலாவின் உதவி பன்னீருகுத் தேவைப்படுகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்தில்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதல் முறையாக ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை நடந்த சம்பவங்கள் தொடர்பான பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது... தெரியாது...' என்றே பதில் அளித்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என தெரிவித்த அவர், சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்லும்படி கூறியதாகவும் வாக்குமூலம் அளித்தார். தொடர்ச்சியாக  இரண்டு நாட்கள்  பன்னீர்ச்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. அப்பலோ  மருத்துவமனையின் சட்டத்தரணிகளும், சசிகலாவின் சட்டத்தரனிகளும்  குறுக்கு விசாரணை செய்தனர்.  சுமார் 150 கேள்விகள் பன்னீர்ச்செல்வத்திடம் கேட்கப்பட்டன. அதிகமான கேள்விகளுக்கு தெரியாது ஞாபகம் இல்லை. மரந்து விட்டேன் அனப் பதிலளித்தார். அப்போது பன்னீர் வெளியிட்ட அறிக்கைகளும், பேட்டிகளும் மக்களுக்கு ஞாபகத்தில் உள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமியும், ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சனும் கேட்டனர். இடையிடையே, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் சில சந்தேகங்களை, நீதிபதியிடம் எழுப்பினார். இந்த விசாரணையின் போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவின்  மரணத்தில் நிலவும் மர்மம் தொடர்பாக பல்வேறு விவாதங்களை பன்னீரின் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த முதல் பரபரப்பு வாக்குமூலம், தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். மெட்ரோ திறப்பு விழாவில் சந்தித்தேன். மறுநாள் செப்டம்பர் 22, 2016 அன்று மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்த்த பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. நான் சொந்த ஊரில் இருந்த போது அதை பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வாக்குமூலம் கொடுத்தார்

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான். அது எனக்கு தெரியும் என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் காரணமாக அவர் சுயநினைவோடுதான் வேட்பாளர்கள் தேர்விற்கு ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 அதே சமயம் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு உடலில் என்ன பிரச்சனை, நோய் இருந்தது என்று எனக்கு தெரியாது. அவருக்கு சர்க்கரை அதிகமாக இருந்தது மட்டும் எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார். அதோடு இவரிடம் சிகிச்சை பற்றிய கேள்விகள் எதையும் கேட்க கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சசிகலாதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்டேட்களை தனக்கு வழங்கியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு இருந்த போது அவர் நன்றாக இருப்பதாக சசிகலாதான் என்னிடம் கூறினார். ஜெயலலிதா உடல்நிலை பற்றி என்னிடம் தெரிவித்து வந்தார்.ஆனால் ஆட்சி நிர்வாகம் ரீதியாக சசிகலா என்னிடம் எதுவும் கூறவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது சரியாக 35வது நாளில் அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது பற்றி பேசியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். இதை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் பேசினேன். ஆனால் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதா ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக ப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டி என்னிடம் தெரிவித்தார் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

சிசிடிவி இதில் இன்னொரு முக்கியமான வாக்குமூலம் அப்போலோ சிசிடிவி. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி நிலவி வருகிறது. ஆனால் இந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கும் தனக்கு தொடர்பு இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இதில் சமீபத்தில் கொடுத்த வாக்குமூலம்தான் முக்கியமானது. அதில், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால் மட்டுமே நான் அதை பற்றி விசாரிக்க கோரிக்கை விடுத்தேன். சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் உட்பட 3 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவரின் மரணத்திற்கு முன்பாக சந்தித்ததாக அவர் தனது வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி நீக்கப்பட்ட முன்பாக, டிசம்பர் 5ம் திகதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.  வாக்குமூலங்கள் எழுப்பி உள்ளன.



எதற்காக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அப்போது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் வாயிலாக தகவல் கிடைத்தது. மறுநாள் பிற்பகலில், அப்பல்லோ மருத்துவமனை சென்றேன். அங்கு இருந்த தலைமை செயலர் ராம்மோகன் ராவிடம் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.

 ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அன்றைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக தெரிந்து கொள்வேன். காவிரி குறித்த கூட்டத்திற்கு பின், ஜெயலலிதாவுக்கு இதய பிரச்னை ஏற்பட்டு, உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டதும் எனக்கு தெரியாது. ஆனால், ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், விஜயபாஸ்கரிடம் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு இருந்ததாக கூறினார்.

எந்த ஒரு விசயத்தையும் ஓ.பன்னீர்ச்செல்வம் முழுமையாகச் செய்யவில்லை. இன்னொருவர் செயற்படிதான் நடந்தார். விசாரணைக் கமிசன்  இப்போதுதான் சூடு பிடித்துள்ளது.