மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த போது சீனாவின் செல்வாக்கு அபரிமிதமாக
இருந்தது.இந்தியாவை மிரட்டிப்பணிய வைக்கும் பிரம்மாஸ்திரமாக அன்றைய இலங்கை அரசாங்கம் சீனாவை
முன்னிறுத்தியது. இலங்கயில் நடைபெற்ற போரை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு
இந்தியாவின் பரம எதிரிகளான சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்களை வாங்கியது.
இலங்கயின் அபிவிருத்திப்பணிகளுக்காக கண்ணை மூடிக்கொண்டு கேட்ட போதெல்லாம் கனட
வழங்கியது சீனா. சீனாவின் உதவிகள் இலங்கையை அபிவிருத்தி செய்வதில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.
சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியவைச் சீண்டும் வகையில் இருந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவின் கைப்பொம்மையாக இருந்தது.
தமிழ் ஈழம் கோரிய போராட்டம் இந்தியாவுக்கு
எதிரான நாடுகளுடன் இலங்கையை நெருக்கமடையச் செய்தது. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இந்தியாவைக்
கணக்கில் எடுக்காது சீனாவிடம் அதிக
உதவிகளைக் கோரினார். அவர் கேட்ட போதெல்லாம் சீனா கடன் கொடுத்தது. இலங்கயின் அபிவிருத்தியை தனது நட்டு
அபிவிருத்தி போல் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றியது.
இலங்கையுடனான சீனாவின் நெருக்கத்தை
இந்திய ரசிக்கவில்லை. இந்தியாவின் எச்சரிக்கையை அன்றைய அரசாங்கம் உதாசீனம்
செய்தது. இந்தியவைச் சீண்டுவதற்காக சீனாவுக்கு இலங்கை செங்கம்பளம் விரித்தது.
சீனாவின் எதிரிகளான அமெரிக்காவும் ஜப்பானும் இலங்கை மீதான சீனாவின் பிடியை
சந்தேகக்கண் கொண்டு பார்த்தன.
சீனாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அன்றைய எதிர்க்கட்சிகள் கடுமையாகச்சாடின.
எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காரசாரமாக
எதிர்த்தார். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் உதவி தேவை என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளார். சீனாவிடம் உதவி பெறுவதற்காக பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க அடுத்த மாதம் சினாவுக்குச் செல்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் இந்தியாவும்
அமெரிக்காவும் உறுதியாக இருந்தன. சில மேற்கத்தைய நாடுகளும் இதற்கு ஆதரவு வழங்கின. இலங்கையில்
நடைபெற்ற இறுதிக்கட்ட போர் அதற்கு
வழிவகுத்தது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற மனித உரிமை, மீறல் போர்க்குற்றம் என்பனவற்றால் இலங்கையை ஐ.நாவின் கேள்விக்குப் பத்ஹில்
சொல்லவேண்டிய நிலைக்குத்தள்ளியது. ஐ.நாவுக்கு அடிபணியாது இலங்கை நடந்ததால்
ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தது.
நல்லிணக்கம் என்ற பெயரில் இலங்கையில்
புதிய அரசாங்கம் பதவியேற்றபின் இந்தியாவும் அமெரிக்காவும்
நிம்மதிப்பெருமூச்சு விட்டன. சீனா
அதிர்ச்சியடைந்தது. முன்னாள் ஜனாதிபதியின்
செல்லப் பிள்ளையான சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.
மத்தள விமானநிலையம்,அம்பாந்தோட்டை
துறைமுகம்,சர்வதேச விளையாட்டரங்கு
என்பனவற்றில் சீனாவின் கை ஓங்கி இருந்தது.
இலாபமீட்ட முடியாத விமான நிலையமும்
துறைமுகமும் எமக்குத்தேவை இல்லை என்ற கோஷம் தேர்தல் பிரசாரத்தின் போது
முன்வைக்கப்பட்டது. அதே விமான
நிலையத்தையும்,துறைமுகத்தையும் இலாபத்தில் இயங்க வைப்பதற்காக சீனாவின் உதவியை நாடி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்ல உத்தேசித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக
இருந்தபோது சீனாவிடம் வாங்கிய கடன்களால் நாடு நலிவடைந்துவிட்டது எனக்குற்றம்
சாட்டியவர்கள் இன்று கடன் வாங்குவதற்காக சீனாவுக்குச் செல்லப்போகிரார்கள். மஹிந்த சீனாவிடம் கடன் வாங்கியபோது இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கபட்டுவிடும்
எனற குற்றச்சாட்டு இன்று பொய்யாகியுள்ளது. உலகத்துக்கு கடன் கொடுக்கும் வகையில்
சீனாவின் பொருளாதாரம் உச்சம் பெற்றுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் எப்படியும்
தனது வழிக்கு வரும் என்று காத்திருந்த சீனா மகிழ்ச்சியடைந்துள்ளது.
சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல்கள்
இலங்கையில் தரித்து நின்றபோது இந்தியா சீற்றமடைந்தது
அன்றைய அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டு சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்
இலங்கைக்கு விஜயம் செய்தபோதுஇலங்கையின் தேசியக்கொடியை விட அதிகமாக சீனாவின்
தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. சீனாவின்
உதவியுடன் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் பனை ஆரம்பிக்கப்பட்டது.துறைமுக
நகரத்தின் 20 ஹெக்டேயர் நிலம் சீனாவுக்கு சொந்தமாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த
அறிவித்தல் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தது. புதிய அரசாங்கம் துறைமுக நகர
திட்டத்தை இடைநிறுத்தியது. அந்தத்திட்டம் தமது கையை விட்டுப்போகாது என சீனா
உறுதியாக நம்பியது. அந்த நம்பிக்கை வின் போகவில்லை.
துறைமுக நகரத் திட்டத்துக்கு நல்லிணக்க அரசாங்கம் பச்சைக்
கொடி காட்டிவிட்டது.முன்னைய அரசாங்கம் உறுதியளித்த 20 ஹெக்டேயர் நிலம்
வழங்கப்படமாட்டாது. 99 வருட குத்தகை என ஒப்பந்தம் செயபட்டுள்ளது. ஹொங்ஹொங்கை
பிரிட்டனிடம் இருந்து 99 வருட
குத்தகைக்குப் பெற்ற சீனா இன்று அதனை தனது நாட்டுடன் இணைத்துள்ளது. புதிய
அரசாங்கத்தின் அதிரடிகளால் கலங்கிப்போய் இருந்த சீனா ,இன்று
மகிழ்ச்சியடைந்துள்ளது.
சீனாவின் பொருளாதார உதவிகள் அனைத்தும் அந்த நாட்டின் பாதுகாப்புடன்
பின்னிப்பிணைந்தவை என்றே உலக நாடுகள் கணிக்கின்றன. முன்னைய அரசாங்கத்தின் சீனாவுடனான
செருக்கத்தைக் கண்டித்த இந்தியாவுக்கு
புதிய அரசாங்கத்தின் நகர்வு தலையிடியைக் க்டுத்துள்ளது. இலங்கையின் v
பொருளாதாரத்தை கட்டிஎழுப்பும் வல்லமை சீனாவிடம் இருப்பதை இந்திய புரிந்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா, இலங்கையில் காலூன்றுவதை இந்திய
விரும்பவில்லை
முன்னைய அரசாங்கம் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு சீனாவுடன் நெருக்கமாக இருந்தது. நல்லிணக்க
அரசாங்கம் இரண்டு நாடுகளையும் பகைக்க
விரும்பாது. பிரதமர் ரணிலின் சீன விஜயத்தை இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து காய்
நகர்த்தும் என்பதில் சந்தேமமில்லை.
ஊர்மிளா