Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Monday, July 22, 2024

மக்களின் முடிவுக்கு எதிராக நீதிமன்றக் கதவைத் தட்டும் தலைவர்கள்

  தமிழகத்தில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்முடிவை எதிர்த்து  .பன்னீர்ச்செல்வம், நைனா நாகேந்திரன் ,விஜயபிரபாகரன் ஆகிய மூவரும்  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி,  தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும்,  திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நைனா நாகேந்திரனும் அத்தொகுதிகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  திராவிட முன்னேற்றக் கூட்டணி 39  தொகுதிகளிலும்  வெற்ரி பெற்றது.  புதுச்சேரியிலும் திமுக  கூட்டணி வெற்றி பெர்ரது.

  தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.   தேர்தல் வழக்கு தொடர கடைசி நாளில் மூவரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விஜய பிரபாகரனை விட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும்   தத்தமது தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

 ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ் கனி வேட்புமனு தாக்கலின் போது சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. அதனால் அவரது வெற்றி செல்லாது எனக் கூற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர்   தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று  4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான நெருக்க்கடி கொடுத்தார் விஜய பிரபாகரன். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து சென்னையில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.

 அது போல் நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார் இவ்வாறு பிரேமலதா.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் விளக்கமளிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். உணவு இடைவேளையின் போது முறைகேடு நடந்ததாக சொல்கிறார்களே இதை அப்போதே கேட்டிருக்கலாமே! அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுதானே இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு புறப்பட்டனர். சின்ன பசங்க விளையாட்டில் அம்மாவிடம் புகார் கூறி அவர் பஞ்சாயத்துக்கு வருவது போல் விஜய பிரபாகரன் செய்துள்ளார். தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அவர்கள் இது போல் என் மீது பழி போடுகிறார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திரு்நதார்.

 இந்த நிலையில் இந்த முறைகேடு குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில்   சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்தார்.

ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக..

ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையில் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் பறி போயுள்ளதால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் வளைத்து அவர்களது ஆதரவுடன்தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக சார்பில் உறுப்பினர்களாக இருந்த ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் குறைந்துள்ளது. இவர்கள் நான்கு பேருமே நியமன உறுப்பினர்கள் ஆவர். இவர்களது ஓய்வால் தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. 

ராஜ்யசபாவில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகும். மொத்த பலம் 245 ஆகும். தற்போதைய பலத்தை வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைக்குத் தேவை 113 பேர் ஆகும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே தற்போது வெறும் 101 பேர்தான் உள்ளனர் என்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம் இந்தியா கூட்டணியில் மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸுக்கு 26, திரினமூல் காங்கிரஸுக்கு 13 எம்பிக்கள் உள்ளனர். திமுக, ஆம் ஆத்மிக்கு தலா 10 பேர் உள்ளனர். 

இதுவரை பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த பிஜூ ஜனதாதளம் (9 எம்.பிக்கள் உள்ளனர்) தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. அதற்கு ஆதரவாகவும் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அது கூறி விட்டது.  இதனால் அந்தக் கட்சியின் எம்.பிக்கள் ஆதரவையும் பாஜக இழந்துள்ளது.

இப்போது என்ன சிக்கல் என்றால் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பலம் இல்லை. பிற கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் பாஜக உள்ளது.

  அதிமுக,, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றைதயவை நாட வேண்டிய நிலையில் பாஜாகா உள்ளாது.  இருவருமே முன்னாள் கூட்டாளிகள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் கூட்டணியிலிருந்து விலகியவர்கள். அதேசமயம், இவர்களின் மாநிலத்  தலைமை, தேசியத் தலைமையுடன் நல்லுறவில்தான் இருக்கிறார்கள். 

இதில் அதிமுகவிடம் 4 உறுப்பினர்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வசம் 11 உறுப்பினர்கள் உள்ளனர். மற்றவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, இந்த இரு கட்சிகளையும் தங்களுக்கு ஆதரவாக திருப்புவது பாஜகவுக்கு எளிதானது. எனவே இவர்களின் ஆதரவை வைத்துத்தான் ராஜ்யசபாவில் நிலைமையை சமாளிக்க பாஜக முயலும் என்று தெரிகிறது.

இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சில பல நிபந்தனைகளுடன் பாஜகவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் அதிமுக இறங்கி வருமா என்று தெரியவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியைப் பறி கொடுத்த கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பெரிய வன்முறையே அங்கு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களால் அரங்கேற்றப்பட்டது. அதற்கெல்லாம் பாஜக நிவாரணம் தேடிக் கொடுத்தால், மேற்கொண்டு நாயுடு தரப்பிலிருந்து தொல்லைகள் வராமல் இருந்தால் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க முன்வரலாம் என்று தெரிகிறது.

  லோக்சபாவில் சந்திரபாபு நாயுடு ஆதரவு, ராஜ்யசபாவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு என பாஜகவின் நிலை விசித்திரமானதாக மாறியுள்ளது.

ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை நியமன உறுப்பினர்களாக்கியதே மோடி அரசுதான். எனவே அவர்கள் மோடி அரசுக்கே ஆதரவாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

லோக்சபாவிலும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன்தான் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கே பெரும்பான்மை பலம் இல்லாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, September 25, 2022

மும்முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் காங்கிரஸ் கட்சித் தேர்தல்

இந்தியாவை பலகாலம் ஆட்சி  செய்த காங்கிரஸ் ட்சி  மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ளது.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த  பின்னர் நடபெற்ற முக்கியமான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.

 தேர்தல்களில்  வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை பாரதீய ஜனதா விலைகொடுத்து வாங்கியதுஊழல் வழக்குகள் மிரட்டல் என்பனவற்றால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அணி மாறினார்கள்கட்சியுடன் முரண்பட்ட முக்கியமான தலைவர்கள்  வெளியேறிவிட்டார்கள்மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளதுஎதிர்க் கட்சிகள்  ஓரணியில் இல்லாமல்  பிரிந்து நிற்பதுதான்  பாரதீய ஜனதாவுக்கு  மிகவும் சாதகமாக உள்ளது.

ராகுலும்பிரியங்காவும் முழுவீச்சில் பிரசாரம் செய்த  பஞ்சாப்,உத்த்ரபிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி  டுதோல்வியடைந்ததுஇதனால் விரக்தியடைந்த  காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வெளியேறிவிட்டனர்அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்காக தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடத்தப்ப வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்ததுராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் எனவும்,  நேரு குடும்பத்தில் இல்லாத  ஒருவர் தலைவராக வேண்டும் எனவும் கருத்துகள்  முன்வைக்கப்பட்டன.

 கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததுஇந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல்குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்ததுஅதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு   வெளியிட்டது.

  காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30‍ம் திகதி வரை நடைபெறும் எனவும்வேட்புமனுவை அக்டோபர் 8ம் திக‌ திக்குள் திரும்பபெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒருபக்கம் பரத் ஜோடோ யாத்திரை நடத்திக்கொண்டிருக்கிறார்.  தமிழ்கத்தில் ஆரம்பமான பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடையும்.  இந்தப் பாதயாத்திரை காங்கிரஸுக்கு வலுச்சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. , மறுபக்கம் காங்கிரஸில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே வருகின்றனஇந்த வேலைகள் தொடங்கப்பட்ட நாள் முதலே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமலிருந்தாலும்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் `ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பதவியேற்கவேண்டும்என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர்.

  இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதேநேரத்தில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார்   

2000  ஆண்டு தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோதுபிரச்சாரத்தின் போதுபோபாலில் காங்கிரஸ் அலுவலகத்திலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்ததுபல இடங்களில் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டதுபிசிசி பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதுஅதேபோல் 1997ல் சீதாராம் கேசரிக்கு எதிராக சரத்பவாரும்,ராஜேஷ் பைலட்டும் போட்டியிட்டபோது கொஞ்சம் செல்வாக்கு பெற்றனர்பல இடங்களில் பிரசாரம் செய்தார்கள்இருப்பினும் சீதாராம் கேசரி கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்."

உட்கட்சித் தேர்தல் என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனப்து வெளிப்படையானது.ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்தவர்கள் தாக்கப்பட்டார்கள்இரட்டைத் தலைமையான எடப்பாடிக்கும்பன்னீருக்கும் எதிராக மனுத்தாக்கல்செய்யச் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்.  கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நீதிமன்றத்தின்  விதியால் சிலரின் தலைவிதி மாறியுள்ளது.

காங்கிரஸில் பெரும்பாலானோர் ராகுல் காந்தி தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்கத் தயாராக இல்லைஇதன் காரணமாகச் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டை களமிறக்க முடிவு செய்துள்ளனர் 

ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான்சத்தீஸ்கர்புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றினதம் பங்குக்கும் அவசர அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டிஅதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்கூட்டத்தில், `அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும்மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்குகிறோம்’ என இரண்டே இரண்டு தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

137 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடக்கும் ஐந்தாவது தேர்தல்.அசோக் கெலாட்சசிதரூர்ர் ஆகிய இருவருக்கும் இடையேதான்  போட்டி இருக்கும்கெலாட் சோனியாவின் விசுவாசத்துக்குரியவர்ராகுல்காந்திசோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது டெல்லியில் முன்நின்று போராட்டத்தை தொடர்ந்து அசோக் கெலாட் நடத்தினார்பலமுறை கைது செய்யப்பட்டார்மேலும் சோனியா காந்திராகுல்காந்தியை பாதுகாக்கும் வகையில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கம் அளித்தார்மேலும் அவர் ராஜஸ்தான் முதல்வராக இருப்பதோடுவிரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தின் மேற்பார்வையாளராகவும் உள்ளார்.

காரணம் அசோக் கெலாட் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்இவருக்கும்காங்கிரசுக்கும இடையேயான பந்தம் மிகவும் நீண்டகாலமாக உள்ளதுஇவர் 5 முறை எம்பியாகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்ராஜஸ்தான் முதல்வராகவும் உள்ளார்.

காரணம் அசோக் கெலாட் கெலாட் அரசியல் அனுபம் அதிகம் கொண்டவர்இவர் 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார்இந்திரா காந்திராஜீவ் காந்தி மற்றும் பிவி நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 3 முதல்வராக உள்ளார்

ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட்டுக்கு நல்ல அரசியல் அனுபவம் உள்ளதுஇதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறதுமேலும் இவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுப்பதன் மூலம் ராஜஸ்தானின் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கலாம்இதன்மூலம் ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட தலைவரை உருவாக்கி அங்கு ஆட்சியை தக்க வைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது அசோக் கெலாட் சர்ச்சகைளில் சிக்காத அனுபவம் நிறைந்த அரசியல்வாதிஇந்தியாவின் அரசியல் நிலைப்பாடுமக்களின் எண்ணம் என்பது பற்றி அவர் நன்கு அறிந்தவர்.

அசோக் கெலாட் போல் நேருசோனியாகாந்தியின் குடும்பத்துக்கு அவ்வளவு நெருக்கமானவராக சசிதரூர் இல்லைஅதோடு ஜி23 தலைவர்களிடம் ஒருவராக அறியப்பட்டு வரகிறார். 2020ல் உள்கட்சி சீர்திருத்தங்கள்உயர்மட்ட கூட்டத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என சோனியா காந்திக்க கடிதம் எழுதி இருந்தார்.   இதனால் சசிதரூரை காட்டிலும் அசோக் கெலாட் தான் சோனியா காந்தியின் குடும்பத்துடன் விசுவாசமாக உள்ளது தெரிகிறது.

சசிதரூர் 2009ல் இருந்து தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பட்டு வருகிறார்கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வாகி உள்ளார்காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவின் தலைவராக தற்போது நீடித்து வருகிறார்

அதேவேளையில் சசிதரூர் 2 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார்இரண்டு முறையும் அவர் குறுகிய காலம் மட்டுமே அமைச்சராக இருந்தார். 2009 மே 23ம் தேதி முதல் 2010 ஏப்ரல் 18 வரை முதல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும்அதன்பிறகு 2012 அக்டோபர் 28 முதல் 2014 மே மாதம் வரை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார்இவர் ஐக்கிய நாடுகள் சபையில் 1978-2007 வரை 29 ஆண்டுகள் துணை பொதுச் செயலாளர் உட்பட பல பதவிகளிலும் இருந்துள்ளார். 23 புத்தகங்களை எழுதியுள்ளார். 2006ல் கோபி அன்னானுக்கு பிறகு ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார்அதன்பிறகு விலகினார்இவருக்கு காங்கிரஸ்அரசியல் சார்ந்த பதவிகளை விட பிற விஷயங்களில் தான் அனுபவம் உள்ளதுஇதுவும் சசிதரூருக்கு பிரச்சனையாக உள்ளது.

சசிதரூர்   சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர்ஐபிஎல் கிரிக்கெட் விஷயத்தில் பங்கு வாங்க பதவியை தவறான பயன்டுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்தார்அதன்பிறகு மனைவி சுனந்தா இறப்பு தொடர்பான விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார்அதோடு ட்விட்டரை அதிகமான பயன்படுத்தும் அவர் அதிலும் கருத்துகள் தெரிவித்து சர்ச்சைகளை தன்னுடனே வைத்து கொள்வதே வாடிக்கையாக வைத்துள்ளார். 2021ல் ஆறு  பெண் எம்பிக்களுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை பதிவிட்டு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியதுஇதனால் தான் சசிதரூரை விட அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

இந்தியா,காங்கிரஸ்,சோனியா,ராகுல்,அரசியல்