Tuesday, July 28, 2015

சைக்கிளில் பாராளுமன்றம் செல்லலாமா?இல‌ங்கை அர‌சிய‌ல் வ‌ர‌லாற்றில் காணாம‌ல்போன‌ சைக்கிளை மீண்டும் ம‌க்க‌ளின் முன்னால்  காட்சிப்பொருளாக‌ வைத்துள்ள‌ன‌ர்.வீட்டுக்கு வெளியே வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ சைக்கிள் உத‌ய்சூரிய‌னின் வெளிச்ச‌த்தில் ச‌ந்திக்குவ‌ந்த‌து.உத‌ய‌ சூரிய‌னின்  ஆதர‌வு இல்லாமையால் புதிய‌வ‌ர்க‌ளுட‌ன் வீடு அணிசேர்ந்த‌போது சைக்கிளும் ஒட்டிக்கொண்ட‌து. ஆச‌ன‌ ஒருக்கீட்டில் திருப்திய‌டையாத‌ சைக்கிள்  த‌னிப்ப‌ய‌ண‌ம் செய்த‌து. தேர்த‌லில் தோல்வி நிச்ச‌ய‌ம் என‌த்தெரிந்த‌த‌னால் தேர்தல்களைத்  த‌விர்த்து வ‌ந்த‌து.ப‌ல‌ ச‌காப்த‌ங்க‌ளாக‌ ஓடாம‌ல் முட‌ங்கி இருந்த‌ சைக்கிளில் பாராளும‌ன்ற‌த்துக்கு ப்போக‌லாம் என்ற‌ ந‌ப்பாசை சில‌ரிட‌ம் ஏற்ப‌ட்டிருக்கிற‌து.
  திருவிழாக்கால‌ க‌டைக‌ள் போன்று தேர்த‌ல் கால‌த்தில் சில‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் சுயேட்சைகளும்  க‌டை விரிப்ப‌து வ‌ழ‌மை. த‌மிழ் வாக்குக‌ளைச் சித‌ற‌டிக்க‌ ப‌ல‌திசைக‌ளிலும் இருந்து வேலைத்திட்ட‌ங்க‌ள் முடுக்கி விட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.சைக்கிளும் த‌ன் ப‌ங்குக்கு வாக்குக‌ளைத்திசைதிருப்ப‌ சுய‌நிர்ண‌ய‌ம்,தாய‌க‌ம்,தேசிய‌ம் என்ற‌ கோஷ்ங்க‌ளை முன்வைத்துள்ள‌து,
 சைக்கிளுக்கு விழும் வாக்குக‌ளை வைத்துக்கொண்டு தாய‌க‌ம்  தேசியம், சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌ன‌வ‌ற்றை த‌மிழ் ம‌க்க‌ள் எப்ப‌டி நேசிக்கிறார்க‌ள் என‌ எதிரிக‌ள் சிலாகிப்ப‌த‌ற்கு வ‌ழி ஏற்ப‌டுத்திக்கொடுத்துள்ள‌ன‌ர். தாய‌க‌மும் சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ட‌க்கு ம‌க்க‌ளுக்கு ம‌ட்டும்தான் வேண்டுமா கிழ‌க்கு ம‌க்க‌ளுக்கு வேண்டாமா என்ற‌ கேள்விக்கான‌ ப‌தில் இவ‌ர்க‌ளிட‌ம் இல்லை.


 ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌த்துட‌ன் க‌ருத்து பேத‌ம் ஏற்ப‌ட்ட‌த‌னால் காங்கிர‌ஸ் க‌ட்சியில் இருந்து த‌ந்தை செல்வா வெளியேறி த‌மிழ‌ர‌சுக்க‌ட்சியை ஆர‌ம்பித்தார். அன்று காணாம‌ல் போன‌ சைக்கிள் த‌மிழ‌ர் விடுத‌லைக்கூட்ட‌ணி என்ற‌ க‌ட்சியுட‌ன் மீண்டும் அர‌சிய‌ல் க‌ள‌த்துக்கு வ‌ந்த‌து.எதிரும் புதிருமாக‌ இருந்த‌ த‌ந்தை செல்வாவும் ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌மும் ஒன்றாகிய‌து த‌மிழ‌ர்க‌ளில் ப‌ல‌த்தை வெளி உல‌குக்கு வெளிப்ப‌டுத்திய‌து.இவ‌ர்க‌ளுட‌ன் மலைய‌க‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் தொண்ட‌‌மான் கைகோர்த்த‌து இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் ஒற்றுமையை  வெளிப்ப‌டுத்திய‌து. அர‌சிய‌ல் கால‌ நீரோட்ட‌ம் மூன்று க‌ட்சிக‌ளையும் பிரித்த‌து.

 த‌மிழ் ம‌க்க‌ள் எதிர்  நோக்கும் பிர‌ச்சினைக‌ளைத் தீர்ப்ப‌த‌ற்கு பாராளும‌ன்ற‌த்தினால் முடியாது என‌ முட்டுக்க‌ட்டை போட்ட‌வ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ம் செல்லும் வ‌ழி ப‌ற்றி சிந்திக்க‌த் தொட‌‌ங்கி விட்ட‌ன‌ர். த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு  ம‌க்க‌ள் கொடுக்கும் ஆணையின்  வாக்குப் ப‌ல‌த்தை குறைப்ப‌தே சைக்கிள் சின்ன‌த்தில் தேர்த‌லில் நிற்ப‌வ‌ர்க‌ளின் குறிக்கோள். பிரதேச‌ச‌பை, ந‌க‌ர‌ச‌பை, மாந‌க‌ர‌ச‌பை, மாகாண‌ச‌பை தேர்த‌ல்க‌ளில் வெற்றிபெற‌ முடியாத‌‌வ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌த்தேர்த‌லில் வெற்றி பெறுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை எப்ப‌டி ஏற்ப‌டும்?

 இல‌ங்கை அர‌சாங்க‌த்தை எதிர்ப்ப‌தைவிட‌ த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பை எதிர்ப்ப‌தே இவ‌ர்க‌ளின் குறிக்கோள். தேத‌லில் வெற்ரிபெற்றால் என்ன‌ செய்ய‌ப்போகிறோம் என‌ இவ‌ர்க‌ள் ம‌க்க‌ளுக்கு எடுத்துரைக்க‌வில்லை. த‌ம்து அர‌சிய‌ல் திட்ட‌ம் ப‌ற்றி தெளிவுப‌டுத்த‌வில்லை. சைக்கிளுக்கு வாக்க‌ளிக்குமாறு ஆங்காங்கே சுவ‌ரொட்டிக‌ளை காட்சிப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

த‌மிழ் ம‌க்க‌ளி வாழ்வாதார‌ம் திருப்திக‌ர‌மாக‌ இல்லை அவ‌ர்க‌ளின் அடிப்ப‌டித்தேவைக‌ள் பூர்த்தி செய்ய‌ப்ப‌ட‌வில்லை. முகாம் வாழ்க்கை முற்றுப்பெற‌வில்லை சொந்த‌ நில‌த்தில் குடியேற‌ நீதிம‌ன்ற‌ப‌டி ஏற‌ வேண்டி உள்ள‌து.இவைக‌ளில் சில‌வ‌ற்றையாவ‌து பூர்த்தி செய்திருந்தால் சைக்கிளை ம‌க்க‌ள் திரும்பி பார்த்திருப்பார்க‌ள்.

Monday, July 27, 2015

கூ ட்டமைப்பைத்தாக்கும் பத்திஎழுத்தாளர்கள்

Add caption

தேர்தல்  அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தாக்குவதையே பிரதான குறிக்கோளாகக்கொண்டு சில பத்தி எழுத்தாளர்கள் தமது விருப்பத்தை மக்கள் மீது திணிக்கத்தொடங்கி விட்டனர்.கூட்டமைப்பு தவறு விடும்போது சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. கூட்டமைப்பு எடுக்க்கும் முடிவுகள் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என சப்பைக்கட்டு கட்டும் கட்டுரைகள் பல பத்திரிகைகளிலும்  ஃபேஸ்புக்களிலும் நிரம்பி வழிகின்றன.

சம்பந்தர் புலிக்கொடியை கைவிட்டு சிங்கக்கொடியை தூக்குகிறார், சுமந்திரன் இரகசியப்பேச்சு வார்த்தை நடத்துகிறார்.சரவணபவன் இரண்டுபக்கமும் தலை காட்டுகிறார் என்ற சாரப்பட கட்டுரைகளை தமது இஷ்டத்துக்கு எடுத்து விடுகின்றனர்.இர‌ண்டொரு   ப‌ந்தி எழுத்தாள‌ர்க‌ள் த‌ம‌து ம‌ன‌தில் உள்ள‌ க‌ச‌ப்புண‌ர்வுக‌ளை வெளியிட‌ ப‌த்திரிகைக‌ளை க‌ள‌மாக‌ப் ப‌ய‌ன் ப‌டுத்துகின்ற‌ன‌ர்.சொந்த‌ப்பெய‌ரில் க‌ட்டுரை எழுதுப‌வ‌ர்க‌ள் மிக‌வும் குறைவு.  புனைபெய‌ர்க‌ளில் ம‌றைந்து நின்று குத‌ர்க்க‌மான‌ க‌ருத்துக்க‌ளை ம‌க்க‌ள்மீதி திணிப்ப‌தில் இவ‌ர்க‌ள் வெற்றி பெறுகின்ற‌ன‌ர்.ப‌லதையும் சிந்தித்து முடிவெடுக்க‌ முடியாத‌ வாக்காள‌ர்க‌ள்  இப்ப‌டிப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ர்க‌ளின் வ‌லையில் மிகசுலபமாக விழுந்து விடும் ஆப‌த்தான‌ நிலை உள்ள‌து.

கூட்ட‌மைப்பின் மீது சும‌த்த‌ப்ப‌டும் குற்ற‌ச்சாட்டுக‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் ஊடகம்  அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை. ஆகையினால் கூட்ட‌மைப்பு த‌வ‌று செய்கிற‌தோ என்ற‌ ச‌ந்தேகம் ம‌க்க‌ள் ம‌னதில் தோன்ற‌க்கூடிய‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் உள்ள‌து.ம‌க்க‌ளின் ம‌ன‌தில் மிக‌ ஆழ‌மாக‌ ப‌தியும் வ‌கையில் தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளின் த‌லைப்புக‌ளை த‌ம‌து க‌ட்டுரைக்கு சில‌ர் இடுகிறார்க‌ள். கூட்ட‌மைப்பை விம‌ர்சிக்கும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் முக்கிய‌ புள்ளிக‌ளும் புனை பெய‌ரில் கூட்டமைப்பின் மீதான் த‌ம‌து எதிர்ப்பை ம‌க்க‌ளின் ம‌ன‌தில் விதைக்கின்ற‌ன‌ர். இந்த‌விதை கால‌ப்போக்கில் பெரும் விருட்ச‌மாக‌ வ‌ள‌ர்துவிடும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ஏற்ப‌டலாம். புங்குடுதீவு சிறுமிமீதான துஷ்பிரயோக சம்பவத்தில் தமிழரசுக்கட்சியில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிப்பதற்கு சில இணைய தளங்களும் பேஸ்புக் எழுத்தாளர்களும் வரிந்து கட்டிமுயற்சி செய்தனர்.
ச‌ம்பூர் ம‌க்க‌ளின் இட‌த்தை மீட்டுக்கொடுத்த‌து, இராணுவ‌க்க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ இட‌ங்களை மீட்டு ம‌க்க‌ளிட‌ம் கைய‌ளித்த‌து போன்ற‌வ‌ற்றில் த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பின் ப‌ங்கு இருப்ப‌தை வெளிப்ப‌டுத்த‌ சில‌ர் விரும்ப‌வில்லை. அப்ப‌டி வெளிப்ப‌டுத்தினால் அது கூட்ட‌மைப்புக்கு சாத‌க‌மாகி விடும் என்ற‌ ப‌ய‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் உள்ள‌து.

த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு த‌லைமைதாங்கும் த‌மிழ‌ர‌சுக்க‌ட்சியை தாக்கு வ‌தில் சில‌ எழுத்தாள‌ர்க‌ள் அதீத‌ அக்க‌றை கொண்டுள்ள‌ன‌ர். த‌மிழ‌சுக்க‌ட்சியின் மேலாதிக்க‌ம் ம‌ற்றைய‌ க‌ட்சிக‌ளை சிறுமைப்ப‌டுத்துவ‌தாக‌ இவ‌ர்க‌ள் புல‌ம்புகின்ற‌ன‌ர். த‌மிழ‌ர‌சுக்க‌ட்சிதான் இவ்ர்க‌ள‌து பிர‌தான‌ குறிக்கோள். கூட்ட‌மைப்பு வேண்டும் ஆனால் த‌மிழ‌ர‌சுக்க‌ட்சி ப‌ல‌ம‌ற்ற‌தாக் இருக்க‌ வேண்டும் என்ப‌து சில‌ர‌து விருப்ப‌ம்.
  வ‌ட‌மாகாண சபைத் தேர்த‌லின்போதும் ஜ‌னாதிப‌தித்தேர்த‌லின் போதும் கூட்ட‌மிப்பின் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ச்சாடுக்களே   புதிய‌ வ‌டிவில் திரும்ப‌வும் அர‌ங்கேற்றப்ப‌டுகின்ற‌ன‌.

Saturday, July 25, 2015

கட்சி ஒன்று பிரதமர் இருவர்.


தலைவனின் கட்டளையை சிரமேல் தாங்கி சிறப்பாக செய்து முடிப்பவர்களே தொண்டர்கள். தலைவன் இட்ட கட்டளையை  மறுபேச்சில்லாது  நிறவேற்றிய தொண்டர்களினால் தான் அரசியல் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்தன. ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது. அதுபோல ஒரு கட்சியை இரண்டு தலைவர்கள் வழிநடத்த முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  இரண்டு தலைவர்கள் இருப்பது  போன்ற தோ ற் ற பாடு எ ழுந்துள்ளது

 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்குமிக்க சில அரசியல்வாதிகளும்  தோழமைக்கட்சித்தலைவர்களும்  ஜனாதிபதி மைத்திரியின்  தமைமைத்துவத்தை விரும்பவில்லை. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை முன்னிலைப்படுத்த வேன்டும் என விடாப்பிடியாக நிற்கின்றனர். மஹிந்த இழந்த அதிகாரங்களை மீண்டும் அவரின் கையில் திணிக்க வேன்டும் என கங்கண‌ம் கட்டுகிறார்கள்.

அரசியல் சூழ்நிலைக்கைதிபோன்று அவர்களின் கட்டுப்பாட்டில் ஜனாதிபதி இருப்பது போன்ற தோற்றப்பாடு எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் கைகுலுக்க விரும்பாத ஜனாதிபதி மைத்திரி அவருக்கு வேட்புமனு வழங்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.பொதுத்தேர்தலில்  மஹிந்த போட்டியிடுவார் அடுத்த பிரதமர் அவர்தான் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்துக்கூறி வருகின்றனர்.


ஐக்கிய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியில் ம‌ஹிந்த‌ போட்டியிடுவ்ப‌து உறுதியான‌தும் ஜ‌னாதிப‌தியின் க‌ருத்தை அறிய‌ அனைவ‌ரும் விரும்பின‌ர். நீண்ட‌ மெள‌னத்தின் பின்ன‌ர்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தர மாட்டேன் என வாய்திற‌ந்தார் ‌ ஜ‌னாதிப‌தி மைத்திரி. ஜ‌னாதிப‌தியின்  வார்த்தையினால் ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுதந்திர முன்னணி  க‌ல‌க்க‌ம‌டைந்த‌து. ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி ம‌கிழ்ச்சியின் உச்ச‌த்துக்குச்சென்ற‌து.  த‌ன‌து கட்சியில் போட்டியிடுப‌வ‌ருக்கு ஆத‌ர‌வு த‌ர‌மாட்டேன் என‌ க‌ட்சித்த‌லைவ‌ர் ஒருவ‌ர் கூறுவ‌து எத்த‌கைய‌ க‌ச‌ப்பான‌ சொல் என்ப‌தை  சாமானிய‌ரும் அறிவ‌ர். தேர்த‌லில் போட்டியிட‌ ம‌ஹிந்த‌வுக்கு அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்டால் க‌ட்சி இர‌ண்டாக‌ உடைந்துவிடும் என‌ அவ‌ர‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ள் வெள்ளிப்ப‌டையாக‌ கூறின‌ர். ம‌ஹிந்த‌வுக்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌த‌னால் ஹிருணிகாவும்  செல்வாக்குமிக்க‌ சில‌ரும் ஐக்கிய‌தேசிய‌க் க‌ட்சிக்கு மாறிவிட்ட‌ன‌ர்.  கட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இர‌ண்டாகிவிட்டது இப்போது செல்வாக்கு மிக்க‌ இன்னும் சில‌ர் வெளியேறிவிட்ட‌ன‌ர். க‌ட்சியை விட்டு யார் வெளியேறினாலும் ப‌ர‌வாயில்லை. அடுத்த‌  பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌தான் என்று அவ‌ர‌து ஆத‌ர‌வாள‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுகின்ற‌ன‌ர்.

தேர்த‌ல் பிர‌சார‌ம் க‌ட்சித்த‌லைவ‌ரினாலேயே முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌து வ‌ழ‌மை. க‌ட்சித்த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி மைத்திரிக்கு விருப்ப‌ம் இல்லாத‌ ம‌ஹிந்த‌வின் த‌லைமையில் ப‌ர‌ப்புரை ந‌டைபெறுகிற‌து. அநுராதபுரத்தில் நடைபெற்ற‌ முத‌லாவ‌து தேர்த‌ல் பிர‌சார‌க்கூட்ட‌த்தில் க‌ட்சித்த‌லைவ‌ர்  மைத்திரியின் க‌ட்ட‌வுட்க‌ள் க‌ண்ணில் தெரிய‌வில்லை.

ம‌ஹிந்த‌வுக்கு பிர‌த‌ம‌ர் ப‌த‌வி வ‌ழ‌ங்க‌ ச‌ட்ட‌த்தில் இட‌ம் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க் ஷ‌‌.  பிர‌த‌ம‌ரை நிய‌மிக்கும் அதிகார‌ம் ஜ‌னாதிப‌திக்கு இல்லை என‌ முன்னாள் அமைச்ச‌ர்க‌ளான‌ ஜி.எல் பீரிஸ், ப‌ந்துலு குண‌வ‌ர்த‌ன‌ ஆகியோர் தெரிவிக்கின்ற‌ன‌ர்.ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுதந்திர முன்னணி  வெற்றிபெற்றால் ம‌ஹிந்த‌தான் பிர‌த‌ம‌ர் என்பதில்  அவ‌ர‌து ஆத‌ரவாளர்கள்  உறுதியாக‌ உள்ள‌ன‌ர்.ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இதற்கு எதிர் மாறான கருத்தைக்கொண்டிருக்கிறார்.
 ஐக்கிய ‌தேசிய‌க் க‌ட்சியும் அத‌ன் தோழ‌மைக்க‌ட்சிக‌ளும் ம‌ஹிந்த‌ பிர‌த‌ம‌ராக‌க்கூடாது என்ப‌தை ம‌ன‌தில் வைத்து காய்ந‌க‌ர்த்துகின்ற‌ன‌. ஜேவிபியும் ம‌ஹிந்த‌வுக்கு எதிராக‌ க‌ள‌த்தில் நிற்கிற‌து. ஆனால் ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சிக்கு ஆத‌ர‌வு தெரிவிக்க‌வில்லை.ர‌ணிலின் த‌லைமையில் தேசிய‌ அர‌சாங்க‌ம் என்ப‌தே ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சியின் தார‌க‌ ம‌ந்திர‌ம். இத்தார‌க‌ ம‌ந்திர‌த்தால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட‌ க‌ட்சிக‌ள் ர‌ணிலின் க‌ர‌த்தைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌ த‌யாராக‌ உள்ள‌ன‌.

Tuesday, July 21, 2015

சிங்கம் இல்லாத ஐபிஎல்

 . கனவான் விளையாட்டான கிரிக்கெற்றில்    புகுந்துள்ள ஆட்ட நிர்ணயசதிஊழல் என்பனவற்றை தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கொன்சி குரெஞ்ஜேஅசாருதீன் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இவை இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளை  தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.ஐபி எல் லில் அவ்வப்போது தலை காட்டிவந்த முறைகேடு நீதிமன்றத்தில் நிரூ பிக்கப்பட்டதால் சென்னை சுப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் விளையாடுவதற்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான மெய்யப்பன்,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை நிர்வாகி ராஜ்குந் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுகள் நிரூபணமானதால்சென்னை ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இரண்டுவருட தடை விதிக்கப்பட்டது.

சென்னை அணிக்கு இந்தியா முழுவ‌தும் ர‌சிக‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இந்தியாவில் ம‌ட்டும‌ல்லாது உல‌க‌ம் முழுவ‌தும் சென்னை ர‌சிக‌ர்க‌ளே அதிக‌ம்.சென்னை விளையாடும் போட்டியைக்காண‌ வ‌ரும் ர‌சிக‌ர்க‌ளினால் மைதான‌ம் நிர‌ம்பிவிடும். சூதாட்ட‌மும் உச்ச‌க்க‌ட்ட‌த்தை அடைந்துவிடும்.

அணித்த‌லைவ‌ர் மாறாத‌ ஒரே அணி சென்னைதான். டோனியின் த‌லைமையும் வீர‌ர்க‌ளின் ஒற்றுமையும் சென்னையை அதிக‌ இறுதிப்போட்டிக‌ளில் விளையாட‌ வ‌கைசெய்த‌து. டோனி,ரெய்னா,ஜ‌டேஜா,அஸ்வின்,பிராவோ  என‌ அணியின் நிர‌ந்த‌ர‌ வீர‌ர்க‌ளால்  சென்னை ப‌ல‌மாக‌ இருந்த‌து.ப‌யிற்சியாள‌ரின் ப‌ங்கும் வெற்றிக்கு உறுதுணை புரிந்த‌து.

சென்னைக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட்ட‌தால் ர‌சிக‌ர்க‌ள் அதிர்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர். அணிக்குதான் நீதிம‌ன்ற‌ம் த‌டைவிதித்த‌தே த‌விர‌ வீர‌ர்க‌ளுக்கு த‌டை விதிக்க‌ப்ப‌ட‌வில்லை.ஆகையினால் வீர‌ர்க‌ள் வேறு அணியில் விளையாட‌ த‌டை இல்லை.சென்னை வீர‌ர்க‌ள் வேறு அணியில் விளையாடுவ‌தை சென்னை ர‌சிக‌ர்க‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள். ஐபிஎல் என்ப‌து வ‌ருமான‌ம் கொ ழிக்கும் விளையாட்டு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு விளையாடாம‌ல் இருக்க‌ வீர‌ர்க‌ள் விரும்புவார்களா என்ப‌து ச‌ந்தேக‌மே.

ர‌சிக‌ர்க‌ளின் விருப்ப‌மும் வீர‌ர்க‌ளின் விருப்ப‌மும் ஒன்ற‌ல்ல‌. இர‌ன்டும் இரு வேறு திசைக‌ளில் செல்வ‌ன‌.ராஜ‌ஸ்தானுக்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌த‌டை ப‌ற்றிஅதன் ரசிகர்கள் அதிக‌ம் அல‌ட்டிக்கொள்ள‌வில்லை. சென்னை ர‌சிக‌ர்க‌ள் ச‌மூக வலைத்த‌ள‌ங்க‌ளில் த‌ம்து ஆத‌ங்க‌ங்களை கொட்டித்தீர்த்துவிட்ட‌ன‌ர்.சென்னை இல்லாத‌ ஐபிஎல்லை எப்ப‌டிப்பார்ப்ப‌து என ஆத‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். சென்னையின் ந‌ட்ச‌த்திர‌ வீர‌ர்க‌ளை அதிக‌ விலை கொடுத்து வாங்க‌ ம‌ற்றைய‌ அணி உரிமையாள‌ர்க‌ள் த‌யாராக‌ உள்ள‌ன‌ர். 

Tuesday, July 14, 2015

யாழ்ப்பாணத்தில் பலமுனைத் தேர்த்தல் பாராளுமன்ற்த்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் கள‌ம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. தேர்த‌ல் அறிவிப்பை எதிர்பார்த்திருந்த‌வ‌ர்க‌ள் சுறுசுறுப்பாக‌ வேட்பும‌னுவைத்த‌யாரிக்க‌த்தொட‌ங்கி  விட்ட‌ன‌ர். வ‌ட‌க்கு கிழ‌க்கு மாகாண‌ங்க‌ளில் உள்ள‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் விழிப்புட‌ன் ப‌ணியாற்றுகின்ற‌ன‌.

யாழ்ப்பாண‌ மாவ‌ட்ட‌ தேர்த‌ல் க‌ள‌ம் ப‌ல‌ முனைக‌ளில் திற‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. தேர்த‌லுக்காக‌ க‌டையை விரிக்கும் சுய‌ இச்சைக்குழுக்க‌ள் வேட்பும‌னு தாக்க‌ல் செய்ய‌ முடிவெடுத்துள்ள‌ன‌. இன்னொருவ‌ரின் இச்சையைப்பூர்த்தி செய்ய‌ சுயேட்சைக்குழுக்க‌ள் பாராளும‌ன்ற‌ பொதுத்தேர்த‌லை ச‌ந்திக்க‌த்த‌யாராகிவிட்ட‌ன‌.

யாழ்மாவட்டத்தில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு  செய்யப்பட்டனர். அவர்களில் மாவை சேனாதிராஜாஎஸ்.சிறீதரன்,சுரேஸ் பிறேமச்சந்திரன்,ஈ.சரவணபவன்,அ.விநாயகமூர்த்தி ஆகிய‌   ஐந்துபேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.  ஜன நாயக மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் தேவானந்தா,முருகேசு சந்திரகுமார், செல்வஸ்திரி தேவானந்த அலஸ்ரின் ஆகிய‌ மூன்று ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஐக்கிய‌தேசிய‌க்க‌ட்சியின் சார்பில்  விஜ‌ய‌க‌லா ம‌கேஸ்வ‌ர‌ன் வெற்றி  பெற்றார்.

த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் வேட்பாள‌ர் ப‌ட்டிய‌லில் உள்ள‌ மாவை சேனாதிராஜா,எம்.ஏ.சும‌ந்திர‌ன், ஈ.ச‌ர‌வாண‌ப‌வ‌ன்,எஸ்.சிறீத‌ர‌ன், சுரேஷ் பிறேம‌ச்ச‌ந்திர‌ன்,சித்தார்த்த‌ன் ஆகியோர் முன்னிலைப்ப‌டுத்த‌‌ப்ப‌ட்டுள்ள‌‌ன‌ர்.
 
ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா த‌ன‌து க‌ட்சி சின்ன‌த்தில் தேர்த‌லில் போட்டியிடுகிறார்  இத்த‌னை கால‌மும் க‌திரையில் அடைமான‌ம் வைக்கப்பட்டிருந்த   வீணை தூசிதுடைக்க‌ப்ப‌ட்டு ம‌க்க‌ளின் பார்வைக்கு வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.சுத‌ந்திர‌க்க‌ட்சியின் த‌லைமையிலான‌ கூட்ட‌ணியில் இருந்து வெளியேறிய‌ ஈபிடிபி சுத‌ந்திர‌மாக‌ தேர்த‌ல் ச‌ந்திக்கிற‌து.

ஈபிடிபியின் ஆத‌ர‌வு இருந்த‌போது ஒரு உறுப்பின‌ரைக்கூட‌ பெற‌முடியாத‌  ஸ்ரீலங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சி த‌னியாக‌ க‌ள‌ம் இற‌ங்கி த‌ன‌து ப‌ல‌த்தை ப‌ரிசோதிக்க‌ உள்ள‌து. ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கிய‌ அங்க‌ஜ‌ன் மைத்திரி ஜ‌னாதிப‌தியான‌தும் அவ‌ரின் ப‌க்க‌ம் சாய்ந்தார். சுத‌ந்திர‌க்க‌ட்சியின் ப‌ல‌ம் என்ன‌ என்ப‌தை தேர்த‌லின் பின்ன‌ர் அவ‌ர்க‌ள் புரிந்து கொள்வார்க‌ள்.
எப்ப‌டியாவ‌து ஒரு இட‌ம் கிடைக்கும் என‌ விஜ‌ய‌க‌லா எதிர்பார்க்கிறார்.ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சியும் அவ‌ர்மீது ந‌ம்பிக்கை வைத்துள்ள‌து.தேசிய‌ம்  என்ற‌  கோஷ்த்துட‌ன் க‌ஜேந்திர‌குமார் வெளிப்ப‌டுகிறார்.இவர்களுக்கிடையில் அன‌ந்தியும் முன்னாள் போராளிக‌ளுட‌ன் கைகோர்த்துக்கொண்டு வித்தியாத‌ர‌னும் தேர்த‌லுக்கு முக‌ம் கொடுக்க‌ த‌யாராகின்ற‌ன‌ர்.