Saturday, August 10, 2024
Friday, July 30, 2021
நவாலியூரானின் வீசிய புயல்
மானிப்பாயைப் பூர்வீகமாககொண்ட மதனராசா – மனோஜினி குடும்பம் வட்டக்கச்சியில் குடியேறுகிறது. குடும்பம் பெருகும்போது மன்னார்,வவுனியா ஆகிய நகரங்களில் திருமணபந்தம் ஏற்படுகிறது. அடுத்த தலை முறை தொழில் நிமித்தம் கண்டிக்கு இடம் பெயர்கிறது. இந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திருகோணமலையில் வேலை செய்கிறார்.
மதனராசா
– மனோஜினி ஆகியோரைச் சுற்றி உள்ள குடும்பங்களுக்கிடையே
ஏற்படும் இன்பம்,துன்பம், திருமணம், பிறப்பு,இறப்பு, பிரிவு, கோபம் போன்றவற்றையே ”வீசிய
புயல்”
என நவாலியூரான் நாவலாக்கியுள்ளார்.
சுந்தரபாலன்
சுகுணறாஜி ஆகியோரின் குழந்தை பாலகாந்தனுக்கு வயிற்றுப்போக்கு அவனை மானிப்பாய் கி[g]றீன்
மெமோறியல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார்கள். முதல் அத்தியாயத்தில்
வைத்தியசாலையின் வரலாற்றை விளக்குகிறார் நாவலாசிரியர்.
பாலகாந்தனின்
உடல் நிலை பற்றி வட்டக்கச்சியில் வசிக்கும் சுகுணறாஜியின் சின்னம்மா திருமதி மதனராசா
– மனோஜினிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மானிப்பாய்க்குச் செல்கிறார்கள்.
வழியில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகிறது. மனோஜினிக்கு ஏற்பட்ட சிறு காயத்துடன் எதுவித ஆபத்தும் இல்லாமல் மானிப்பாயைச் சென்றடைகிறார்கள்.
பாலகாந்தனுக்கு
போதியளவு சத்துணவு இல்லை. மூளை வளர்ச்சி குறைவு
குடும்ப நிலை காரணமாக பாலகாந்தனை மதனராஜனும் மனோஜினியும் தம்முடன் அழைத்துச் செல்கின்றனர் அவர்களின் பிள்ளைகளான றாஜினா, ஜீவினா, மாஜினா ஆகியோருடன் பாலகாந்தன்
வளர்கிறான்.
மதனராஜனின்
மில்லில் வேலை செய்யும் விமலனிடம் கணக்கு படித்து வகுப்பில் முன்னிலையடைகிறான். மாஜினாவுக்கு
மன்னார் வைத்தியசாலையில் நே[r]ர்ஸ் வேலைகிடைகிறது. மனோஜினியின் பெரிய தகப்பனின் மகன்
ஜீவறஞ்சன் மன்னாரில் கடை வைத்திருக்கிறார். அங்கிருந்து மாஜினா வேலைக்குச் செல்கிறார்.
மதனராஜாவின்
இரண்டாவது மகள் ஜீவினாவுகும் பிரான்ஸில் வசிக்கும் உறவினரான ஜெயசுதனுக்கும் திருமணப்
பேச்சுவார்த்தை நடந்து முற்றுப் பெறுகிறது.ஜீவினா வெளிநாட்டுக்குச் செல்கிறார்.
ஜீவரஞ்சனின்
மகன் றஜீவன் திருகோணமலையில் ஹோட்டலில் வேலை செய்கிறார். மன்னார் வைத்தியசாலையில் வேலை
கிடத்து அவரும் வீட்டுக்கு வருகிறார். மாஜினாவை
றஜீவன் விரும்பியதால் திருமணம் நடைபெறுகிறது.
வெட்டுக்
காயத்துடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாலிபனுக்கு அவசரமாக இரத்தம்
தேவைப்பட்டதால் றஜீவன் தனது இரத்தைத்தைக் கொடுத்தார். அவருடைய தாய் றஜீவனுக்கு நன்றி
சொன்னபோது குடும்பங்களைப் பற்றி கதைத்தார்கள். அப்போதுதான் அது தனது தாயின் சகோதரி
புஷ்பமாலா என்பதை றஜீவன் அறிகிறார். புஷ்பமாலா
கிறிஸ்தவரைக் காதலித்து திருமணம் செய்ததால்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர். அவரைப் பற்றி றஜீவனுக்கு ஒன்றும் தெரியாது.
றஜீவனின் முயற்சியால் பிரிந்த சகோதரிகள் ஒன்றானார்கள்.
தமது
மில்லில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் விமலனை தான் காதலிப்பதாக ஜீவினாவுக்கு மதனராஜனின்
மூன்றாவது மகள் மாஜினா தெரிவித்ததார் பிரான்ஸில்
இருந்து ஜீவினா அரிவித்ததால் திருமனம் நடை பெறுகிறது.
மாஜினாவும்
விமலனும் வவுனியா பாவக்குளத்துக்கு செல்கிறார்கள். மாஜினாவுக்கும்,ராஜீவனுக்கும் கிளிநொச்சிக்கு
இடமாற்ரம் கிடைக்கிறது.மில்லை பாலகாந்தன் பொருப்பெடுத்டுச் செய்கிறான். பாலகாந்தனுக்கும்
தேனுஜாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. நித்தியா, திவ்வியா எனும் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. நவீன மயமான மில் ஒன்ரு அடுத்த ஊரில்
திறக்கப்பட்டதால் மில்லை மூட வேண்டிய நிலை ஏறபடுகிறது.
பாலகாந்தனின்
உறவினராகிய தவநாயகம் தான் வேலை செய்யும் கொம்பனியில் அவருக்கு எக்கவுண்ஸ் வேலை பெற்றுக் கொடுக்கிறார். வேலை கண்டியில்
என்பதால் பாலகாந்தனின் குடும்பம் வட்டக்கச்சியை
விட்டு இடம் பெயர்கிறது. மனோஜினியின் மரண வீட்டுகு
வந்த பாலகாந்தனின் குடும்பம் தம்து இரண்டு
பிள்ளைகலையும் வட்டக்கச்சியில் விட்டுச் செல்கிறார்கள்.
மனைவியை
இழந்த றஜீவன் யாருக்கும் சொல்லாமல் முதியோர்
இல்லத்தில் சேர்கிறார். பாலகாந்தன் குடும்பத்துடன் வட்டக்கச்சியில் குடியேறுகிறார்.
சில பிரிவுகள், துயரங்களின் பின்னர் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாகின்றன. இதனையே “வீசிய
புயல்”
எனும் நாவலாக நவாலியூரான் தந்துள்ளார்.
மக்களின்
வாழ்க்கை முறைகள் வரலாறுகள் என்பனவற்றை இந்த நாவலினூடு பதிந்துள்ளார். 23 அத்தியாயங்கள்.சுமார்
50 பாத்திரங்கள் இந்த நாவலில் நடமாடுகிறார்கள். எல்லோருக்கும் பெயர் சூட்டியுள்ளார்.
இறந்தவர்களையும் பெயரின் மூலமே நாவலாசிரியர் நடமாட விட்டுள்ளார். “ர” என்ற எழுத்தை உபயோகிக்காமல்
“ற”
என்றே பெயர் வைத்துள்ளார். ஆங்கிலச் சொற்களின் இடையே ஆங்கில எழுத்துக்களையும் இணைத்துள்ளார்.
ஜீவநதி, பங்குனி 2021
Wednesday, July 4, 2018
நம்முடன் பயணம் செய்பவர்களை அடையாளம் காட்டும் “அல்வாய்ச் சண்டியன்”
Saturday, May 5, 2018
அடிநிலை மக்களின் கல்விக்காகதோன்றிய விடிவெள்ளிகள்
இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், கண்களுக்குத்தெரிவதில்லை. இமைகளைப்பார்க்க கண்ணாடிதான் தேவை.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை!
மற்றும் ஒரு வெள்ளை இனமாது அவளது கல்விக்கான செலவுகளை பொறுப்பேற்க முன்வருகிறாள். வடகரோலினாவில் இயங்கும் கறுப்பினக்குழந்தைகளுக்காக இயங்கும் ஒரு கல்லூரிக்கு மேரி வருகிறார்.
அங்கு தனது அயராத முயற்சியால் படித்து முடித்து 1907 ஆம் ஆண்டில் கறுப்பினக்குழந்தைகளுக்காகவே ஒரு பாடசாலையை தொடங்குகிறார். எனினும் அதற்காக அவருக்கு கிடைத்த இடமோ ஒரு குப்பைமேடுதான். குப்பையிலும் குண்டுமணி துளிர்க்கும் என்பார்கள்.
ஜேம்ஸ் எம். காம்பிள் என்ற பிரமுகரை ஒரு செய்தித்தாளின் ஊடாக அறிந்துகொண்டு அவரிடம் உதவி கேட்டுச்செல்கிறார் மேரி. அவரோ மேரியின் பாடசாலையை பார்க்கவேண்டும் எனச்சொல்லி ஒரு நாள் வருகிறார். வந்தவர் " எங்கே உமது பாடசாலை?" எனக்கேட்கிறார். "
"அது எனது மனதில் இருக்கிறது" எனச்சொல்லி குப்பைமேட்டின் மீது உருவாக்கப்பட்ட அந்த மோசமான கட்டிடத்தை காண்பிக்கிறார் மேரி. அங்கே ஆசிரியரின் மேசையாக இருப்பது ஒரு மரப்பெட்டிதான். கருணையுள்ளம் கொண்ட மனிதரான காம்பிள், பல வழிகளில் உதவுகிறார். அந்தச் சந்திப்பு முதல் அங்கு "பார்வையாளர் தினம்" அனுசரிக்கவும் மேரி ஏற்பாடு செய்கிறார்.
சிறுதுளி பெருவெள்ளமாக அந்தப்பாடசாலை முன்னேறுகிறது.
இவ்வாறு தானும் வளர்ந்து தனது இனத்துக்குழந்தைகளையும் கல்வியில் வளர்த்து அவர்கள் வாழ்வில் விடிவெள்ளியாகத்தோன்றிய மேரி மெக்லியோட் பெத்யூன், பின்னாளில் பெத்யூன் குக்மேன் கல்லூரியையும் அமைத்து வழிநடத்தி, அதனை பல்கலைக் கழகமாகவும் வளர்த்தெடுத்தார். அவர் ஒரு குப்பை மேட்டில் விதைத்த விதை விருட்சமாய் எழுந்துநிற்கிறது, 1955 மறைந்த அவரது நினைவுகளுடன்.
தேவரையாளி இந்துக்கல்லூரியின் நிறுவனர் பெரியார் சூரனின் சரிதையிலிருந்து, மேரிபெத்யூனின் வாழ்க்கையை இனம்காண்பதா, அல்லது மேரி பெத்யூனின் வாழ்விலிருந்து பெரியார் சூரனை அடையாளம் காண்பதா என்ற சிந்தனை இரண்டு நூல்களையும் மீண்டும் மீண்டும் வாசித்தபோது வந்தது.
அதற்காகவே குறிப்பிட்ட வாசகர் வட்டத்தின் சந்திப்புக்குச்செல்லும்போது சூரன் சுயசரிதையையும் எடுத்துச்சென்று வந்திருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினேன்.
அங்கிருந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இலங்கையின் வடமராட்சியில் பிறந்த பிரபாகரனை தெரிந்தளவுக்கு வடமராட்சியும் தெரியாது. அதனால் சூரனையும் தெரிந்திருக்க நியாயமில்லை.
சூரனின் பேரன் ஏகாம்பரம் ரவிவர்மாவும் ராஜஶ்ரீகாந்தனும் இல்லையென்றால் நாமும் அந்தப்பெரியாரின் வாழ்வையும் போராட்டங்களையும் பணிகளையும் சாதனைகளையும் தெரிந்துகொண்டிருந்திருக்கமாட்டோம்.
இந்நூலில் " இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்த நமது பெரியார் சூரன் எனும் சுந்தர நாயகன்" என்னும் தலைப்பில் ராஜஶ்ரீகாந்தன் எழுதியிருக்கும் முன்னுரையின் வாயிலாக தேவரையாளி இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்ட சூரன் நினைவுமலர், கல்கி எழுதியிருக்கும் இலங்கையில் இரண்டு வாரம் தொடர்கட்டுரை, தெணியான் எழுதியிருக்கும் கட்டுரைகள், பேராசிரியர் சிவலிங்கராஜா , கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை ஆகியோரின் ஆய்வு நூல்கள், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கட்டுரைகள், டானியல் தனது தண்ணீர் நாவலிலும் மல்லிகை ஜீவா தனது சுயசரிதையிலும், த.கலாமணி " எம்மவர்கள்" கட்டுரைத்தொகுதியிலும் சூரனைப்பற்றி பதிவுசெய்திருக்கும் தகவல்களையும் தெரிந்துகொள்கின்றோம்.
சூரன் ஒரு போராளியாகவும் திகழ்ந்திருக்கும் செய்தியும் தெரியவருகிறது.
வதிரியில் அண்ணமார் கோவிலில் நடந்த அடுபலியிடுதலை தடுப்பதற்காக பலிபீடத்தின் மீது தனது தலையை வைத்து, ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் தனது தலையை வெட்டுங்கள் என்று குரல் எழுப்பி மிருக பலியிடலை தடுத்திருக்கிறார்.
மேரி பெத்யூன் தன்னை ஒரு போராளியாகக் காண்பிக்காமல் அன்றைய சூழலை புரிந்துகொண்டு வெள்ளையினத்தவரில் நிறவேற்றுமை பாராட்டாத கருணை உள்ளங்கொண்டவர்களுடன் இணக்கமாகப்பேசி காரியங்களை சாதித்திருக்கிறார்.
ஆனால், அன்றைய வடமராட்சி சூழலின் பின்னணியில் ஒருபுறம் சாதுரியமாக நடந்த மதமாற்றம் - மறுபுறம் மேட்டுக்குடி வெள்ளாளரின் அடக்கு முறை- இவை இரண்டுக்கும் இடையே இரட்டை முட்கிரீடங்களை சுமந்துகொண்டு களமாடியிருக்கிறார்.
அமெரிக்காவில் மெரிபெத்யூனின் பெயரைச்சொல்லும் பெத்யூன் குக்மேன் பல்கலைக்கழகம் போன்று , இலங்கையில் வடமராட்சியில் தேவரையாளி இந்துக்கல்லூரி பெரியார் சூரனின் பெயரைச்சொல்லிக்கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு நூல்களையும் மீண்டும் படித்து முடித்தபோது எனக்கு மெல்பனில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நடன அரங்காற்றுகை நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
அதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நடனக்கலைஞர்கள் அனைவரும் பார்வையை பிறவியிலேயே இழந்தவர்கள்.
அதியற்புதமாக அபிநயம் பிடித்து ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.
செவிப்புலன் மூலம் ராகம், தாளம் அறிந்து அதற்கேற்றவாறு அபிநயத்தோடு ஆடினார்கள். நாம் வியந்தோம். இறுதியில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கும்வேளை வந்தபோது அவர்கள் ஒவ்வொருவரையும் கைத்தாங்கலாக அழைத்துவந்து மேடையில் நிறுத்தி பரிசுகளை கொடுத்தார்கள்.
அவர்கள் ஆடும்போது எந்த இடத்தில் நிற்கவேண்டும். எப்போது எத்தகைய வடிவமும் அபிநயமும் காண்பிக்கவேண்டும் முதலான சங்கதிகள் அனைத்தும் பயிற்சியினால் பெற்றவை.
அவர்களில் ஒரு கலைஞர் தனது ஏற்புரையில்: " வாழ்க்கையில் மூன்று விடயங்கள் முக்கியம். அவை, கனவு (Dream) - போராட்டம் (Struggle) - வெற்றி ( Success). எனச்சொன்னார். இவை மூன்றையும் நாம் மேரிபெத்யூனிலும் பெரியார் சூரனிலும் காண்கின்றோம்.







