Showing posts with label மைத்திரி. Show all posts
Showing posts with label மைத்திரி. Show all posts

Saturday, January 14, 2023

ஈஸ்டர்ஞாயிறு தாக்குதலில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு நஷ்ட ஈடு


 2019 ஆம் ஆண்டு இலங்கையை  உலுகிய ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் சம்பவத்தின் வடுக்கள்  இன்னமும் மறையவில்லை.   ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதலால்  வெளிநாட்டவர்களும்  இறந்தார்கள், காயமடைந்தார்கள் ஆகியால் உலகமே அந்தச் சம்பவத்தை அச்சத்துடன் நோக்கியது.

 ஈஸ்டர் தாக்குதலால் மக்கள் பாதிக்கப்பட்ட அதே வேளையில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையிலானமுரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது.  இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறப்போவதாக வெளிநாட்டு புலனாய்வு அரிக்கையிட்டும் ஏன் தடுக்கவில்லை எனா ஜனாதிபதியும், பிரதமரும்  முரண்படனர்.

ஈஸ்டர்   ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் முன்னிலையாகியுள்ளார்.

ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, சட்டத்தரணி கே.வி.எஸ். குனசேகரராஜன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.

பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவித்து உயர்நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது. அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்ப்பு   வழங்கப்படது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

   ஈஸ்ட ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமானவர்களை தண்டிக்க கூடுதல் நடவடிக்கை அவசியம்.  குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கபப்ட வேன்டும்.  தேசிய பாதுகாப்பு என்பது தனிப்பட்ட  ஒருவரின் முடிவல்ல. ஆட்சி மாரினாலுக் தேசிய பாதுகாப்புக் கொள்கை மாற்றமடையக் கூடாது.  ஆனால்,  அன்றைய ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த வில்லை. பொறுப்புக் கூறுவதிலிருந்து பின் வாங்கியதுடன்  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். தேசிய பாதுகாபில் இன, மத  பிளவுகள்  இருக்கக் கூடது.

நிறைவேற்ரு அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியாக  இருந்த்போது  மைத்திரி ஆடியா ஆட்டத்துக்கு நீதிமன்றம் சூடு  போட்டுள்ளது. பாதுகாப்பிச் சபைக் கூட்டங்கலுக்கு அன்றைய பிரதமர் ரணிலை அழைப்பதில்லை. ரணிலுடன் அலோசனை நடத்துவதில்லை.இவை எல்லாம் அதிகாரம் அவரது கையில் இருந்தபோது நடைபெற சம்பவங்கள்.  இப்போ அதிகாரம், பதவி எல்லாம் பறிபோய் முன்னாள் என்ற பெயர் ஒட்டிக்கொண்டுள்ளது. அந்த முன்னாளுக்கான சலுகைகள் எதனையும் நீதிமன்றம் கொடுக்கவில்லை. இந்தத் தீர்ப்பு பல  முன்னாள் களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, January 24, 2022

அரசியல் தலைவர்களின் சதுரங்க ஆட்டம்

இலங்கை அரசியலில் எந்தக் காலமும் இல்லாத ஒரு நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி வெZளியேறும் என்று.  மைத்திரி தெரிவித்திருக்கிறார்.  கட்சியில் இருந்து மத்திரியை அப்புறப்படுத்தப் போவதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.             அரசாங்கத்தின் காலை வார சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால  தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சியில் உள்ள மூன்று மூத்த அரசியல்வாதிகள் மூன்று விதமான கருத்துக் களைத் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியோடு இணைந்து அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரனதுங்க தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரதமராக்கி 52 நாட்கள் நடத்திய அரசியல் நாடாகம் பெரும் சபாக்கேடு என்றும் கூறினார்.

பண்டாரநாயக்கவின் கட்சியை மகிந்தவும், மைத்திரியும் சிரளித்துவிட்டனர் எனத் தெரிவித்த சந்திரிகா பன்டாரநாயக்க குமாரதுங்க.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என  சந்திரிகா  கூறியதை மைத்திரி கேட்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய மரியாதையை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லைமைத்திரியின்  செயற்பாட்டால் அரசியல் அரங்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி காணாமல்    போய்விட்டதாக சந்திரிகா கருதுகிறார்.  அதனை மீட்டெடுக்க வேன்டிய கடப்பாடு அவருக்கு இருக்கிறது. தனது தகப்பன் உருவாக்கிய க்டசியை மீட்டெடுக்க வேன்டும், அல்லது  புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் சந்திரிகா குறியாக இருக்கிறார்.அதற்காக கொழும்பில் உள்ள முக்கியச்த சந்திரிகாவின் முயற்சி  வெற்றி பெறூவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் தங்கி  உள்ளது. ரணிலும் சஜித்தும் ஆளுக்கொரு பக்கம் இருக்கின்றனர். அவர்கள் இருஅவ்ரும் ஒரு நேர் கோட்டில் வரமாட்டார்கள்.   ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி மைத்திரியின் பிடியில் உள்ளது. சந்திரிகா, மைத்திரி,ரணில், சஜித் ஆகிய நால்வரும் இன்றிணைந்தால்தான் எதிர்க் கட்சி பலமாக இருக்கும்.

  அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு முரண்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களையும், ரணில், சஜித் ஆகியோரின் இரு பிரதான எதிர்க்கட்சிகளில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரையும் இணைத்தே புதிய அரசியல் அணியை உருவாக்க சந்திரிகா முற்படுவதாகக் கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சிகளிடையே தற்போது முரண்பாடுகள் உருவாகியுள்ள சூழலில், அரசாங்கத்துக்குள் இருந்து முரண்படும் சிறிய கட்சிகள் வெளியேறி எதிர்க் கட்சிகளோடு இணைய முடியாதவொரு பின்னணியிலேயே, சந்திரிகா புதிய அரசியல் அணியை உருவாக்குவது குறித்துக் கலந்துரையாடி வருகின்றார். ர்கள் சிலருடன் அவர் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய பொது கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள் அதிலிருந்து விலகி பொதுக்கூட்டணியில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் ஏற்கனவே பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது- சிலர் பதவியிலிருந்தவாறே அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு எதிராக செயற்படுகின்றனர்.அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம் சமீபகாலத்தில் இந்த பிளவு வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

அமைச்சரவையின் ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட யுகதனாவி உடன்படிக்கை நீதிமன்றத்தின் முன்னால் உள்ளது - மூன்று அமைச்சர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர்.2019 ௨020 ஜனாதிபதி பிரதமர் தேர்தல்களில் அரசதலைவர்களிற்கு கிடைத்த ஆதரவை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் தலைவர்களிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசாங்கத்திற்குள் இடம்பெறுவது குறித்து தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் ஒரு பகுதியாகயிருந்தவாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அதன் கொள்கைகளை விமர்சிப்பது ஒழுக்கரீதியான நடவடிக்கையாக என ஜனாதிபதி சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது- அந்த கட்சி பல அரசியல் கட்சிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும்  இந்த கூட்டணிக்கு பொதுவேட்பாளராக தலைமை தாங்குவார் என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லைஇது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான இறுதிமுடிவுகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சந்திரிகா,சஜித்,ரணில் ஆகிய  மூவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான்  உரிய இலக்கை அடைய முடியும்.

Thursday, March 31, 2016

சீனாவின் பிடியில் மீண்டும் இலங்கையின் அபிவிருத்தி

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த போது சீனாவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது.இந்தியாவை மிரட்டிப்பணிய வைக்கும் பிரம்மாஸ்திரமாக  அன்றைய இலங்கை அரசாங்கம் சீனாவை முன்னிறுத்தியது. இலங்கயில் நடைபெற்ற போரை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு இந்தியாவின் பரம எதிரிகளான சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்களை வாங்கியது. இலங்கயின் அபிவிருத்திப்பணிகளுக்காக கண்ணை மூடிக்கொண்டு கேட்ட போதெல்லாம் கனட வழங்கியது சீனா. சீனாவின் உதவிகள் இலங்கையை அபிவிருத்தி செய்வதில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியவைச் சீண்டும்  வகையில் இருந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இந்தியாவின் கைப்பொம்மையாக இருந்தது. தமிழ்  ஈழம் கோரிய போராட்டம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் இலங்கையை நெருக்கமடையச் செய்தது.  அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இந்தியாவைக் கணக்கில்  எடுக்காது சீனாவிடம் அதிக உதவிகளைக் கோரினார். அவர் கேட்ட போதெல்லாம் சீனா கடன்  கொடுத்தது. இலங்கயின் அபிவிருத்தியை தனது நட்டு அபிவிருத்தி போல் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றியது.

  இலங்கையுடனான சீனாவின் நெருக்கத்தை இந்திய ரசிக்கவில்லை. இந்தியாவின் எச்சரிக்கையை அன்றைய அரசாங்கம் உதாசீனம் செய்தது.  இந்தியவைச் சீண்டுவதற்காக  சீனாவுக்கு இலங்கை செங்கம்பளம் விரித்தது. சீனாவின் எதிரிகளான அமெரிக்காவும் ஜப்பானும் இலங்கை மீதான சீனாவின் பிடியை சந்தேகக்கண் கொண்டு பார்த்தன.
சீனாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அன்றைய எதிர்க்கட்சிகள் கடுமையாகச்சாடின. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் காரசாரமாக எதிர்த்தார். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு  சீனாவின் உதவி தேவை  என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளார்.  சீனாவிடம் உதவி பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் சினாவுக்குச் செல்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவை  ஆட்சியில்  இருந்து அகற்ற வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக இருந்தன. சில மேற்கத்தைய நாடுகளும் இதற்கு ஆதரவு வழங்கின. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர்  அதற்கு வழிவகுத்தது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற மனித உரிமை, மீறல்  போர்க்குற்றம் என்பனவற்றால்  இலங்கையை ஐ.நாவின் கேள்விக்குப் பத்ஹில் சொல்லவேண்டிய நிலைக்குத்தள்ளியது. ஐ.நாவுக்கு அடிபணியாது இலங்கை நடந்ததால் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தது.
நல்லிணக்கம்  என்ற பெயரில் இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றபின் இந்தியாவும் அமெரிக்காவும் நிம்மதிப்பெருமூச்சு  விட்டன. சீனா அதிர்ச்சியடைந்தது.  முன்னாள் ஜனாதிபதியின் செல்லப் பிள்ளையான சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்தள  விமானநிலையம்,அம்பாந்தோட்டை துறைமுகம்,சர்வதேச  விளையாட்டரங்கு என்பனவற்றில் சீனாவின் கை ஓங்கி இருந்தது.  இலாபமீட்ட  முடியாத விமான நிலையமும் துறைமுகமும் எமக்குத்தேவை இல்லை என்ற கோஷம் தேர்தல் பிரசாரத்தின் போது முன்வைக்கப்பட்டது.   அதே விமான நிலையத்தையும்,துறைமுகத்தையும் இலாபத்தில் இயங்க வைப்பதற்காக சீனாவின் உதவியை நாடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்ல உத்தேசித்துள்ளார்.

 மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது சீனாவிடம் வாங்கிய கடன்களால் நாடு நலிவடைந்துவிட்டது எனக்குற்றம் சாட்டியவர்கள் இன்று கடன் வாங்குவதற்காக சீனாவுக்குச் செல்லப்போகிரார்கள்.  மஹிந்த சீனாவிடம் கடன் வாங்கியபோது   இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கபட்டுவிடும் எனற குற்றச்சாட்டு இன்று பொய்யாகியுள்ளது. உலகத்துக்கு கடன் கொடுக்கும் வகையில் சீனாவின் பொருளாதாரம் உச்சம் பெற்றுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் எப்படியும் தனது வழிக்கு வரும் என்று காத்திருந்த சீனா மகிழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல்கள் இலங்கையில் தரித்து நின்றபோது இந்தியா  சீற்றமடைந்தது அன்றைய அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டு சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்தபோதுஇலங்கையின் தேசியக்கொடியை விட அதிகமாக சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.  சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் பனை ஆரம்பிக்கப்பட்டது.துறைமுக நகரத்தின் 20 ஹெக்டேயர் நிலம் சீனாவுக்கு சொந்தமாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தது. புதிய அரசாங்கம் துறைமுக நகர திட்டத்தை இடைநிறுத்தியது. அந்தத்திட்டம் தமது கையை விட்டுப்போகாது என சீனா உறுதியாக நம்பியது. அந்த நம்பிக்கை வின் போகவில்லை.

துறைமுக நகரத் திட்டத்துக்கு நல்லிணக்க அரசாங்கம் பச்சைக் கொடி காட்டிவிட்டது.முன்னைய அரசாங்கம் உறுதியளித்த 20 ஹெக்டேயர் நிலம் வழங்கப்படமாட்டாது. 99 வருட குத்தகை என ஒப்பந்தம் செயபட்டுள்ளது.  ஹொங்ஹொங்கை   பிரிட்டனிடம் இருந்து 99  வருட குத்தகைக்குப் பெற்ற சீனா இன்று அதனை தனது நாட்டுடன் இணைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் அதிரடிகளால் கலங்கிப்போய் இருந்த சீனா ,இன்று மகிழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார உதவிகள் அனைத்தும் அந்த நாட்டின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்தவை என்றே உலக நாடுகள் கணிக்கின்றன. முன்னைய அரசாங்கத்தின் சீனாவுடனான செருக்கத்தைக் கண்டித்த  இந்தியாவுக்கு புதிய அரசாங்கத்தின் நகர்வு தலையிடியைக் க்டுத்துள்ளது. இலங்கையின் v பொருளாதாரத்தை கட்டிஎழுப்பும் வல்லமை சீனாவிடம் இருப்பதை இந்திய புரிந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ற போர்வையில்  சீனா, இலங்கையில் காலூன்றுவதை இந்திய விரும்பவில்லை
 முன்னைய  அரசாங்கம் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு   சீனாவுடன் நெருக்கமாக இருந்தது. நல்லிணக்க அரசாங்கம் இரண்டு  நாடுகளையும் பகைக்க விரும்பாது. பிரதமர் ரணிலின் சீன விஜயத்தை இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து காய் நகர்த்தும் என்பதில் சந்தேமமில்லை.

ஊர்மிளா 

Sunday, March 27, 2016

ஜனாதிபதிக்கு எதிராக காய் நகர்த்தும் கூட்டு எதிரணி

 

நல்லிணக்க அரசாங்கம் பதவி ஏற்ற தினத்தில்  இருந்து  அதனை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை பொது எதிரணி என்ற பெயரில் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். மஹிந்த மீண்டும் உச்சத்துக்கு வருகிறார். ஜனாதிபதி  ரணிலை விட்டுக்கு அனுப்பப்போகிறார் என்ற கோஷம் முன் வைக்கப்படுகிறது. முன்னாள்  ஜனாதிபதியை முன்னிறுத்தி நடைபெறும் கூட்டங்களும் பேரணிகளும் ரணிலைக் குறிவைத்துத்தான் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரியை தமது எதிரியாக அவர்கள் கருதவில்லை. இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் ஒரே கட்சியியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த   பிதமரை வெளியேற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக்கும் திட்டம் அவர்களிடம் உள்ளது.
புதிய கட்சி ஆரம்பமாகப் போகிறது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைவராகிறார் என்ற பூச்சாண்டி சிலகாலம் காட்டப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு  வெளியேறமாட்டேன் என்று மஹிந்த சொன்னதும் அந்தப் பூச்சாண்டி அடங்கிவிட்டது. என்றாலும்  அவருடைய ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் என கங்கணம் கட்டியுள்ளனர்.
பொது எதிரணியின்  கூட்டங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்த்த மஹிந்த கடந்தவாரம் ஹைபாக் கோணரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்     அக் கூட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பீடம்   உத்தரவிட்டது அதனை சட்டை செய்யாமல் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி உறுப்பினர்கள் 37 பேர்     கலந்து கொண்டனர்..

சி.பி. ரத்நாயக்க, குமார வெல்கம, விமலவீர திசாநாயக்க,சிறியானி விஜேவிக்கிரம, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ,  ஷேஹான் சேமசிங்க, எச்.ஏ.முத்துக்குமாரண, வீரகுமார திசாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜயந்த சமரவீர, , கனக ஹேரத், தாரக பாலசூரிய, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, சிசிர ஜய,டி, இந்திக அனுராதா, மோகன் டி சில்வா, சி.பி. ரத்நாயக்க, சனத் நிஷாந்த, மஹிந்தானந்த  அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாலிந்த திசாநாயக்க,  வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்தில்,   கூட்டு எதிரணிசார்பில், 51 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில், 45 பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய ஆறு பேரில் நால்வர் வெளிநாடு சென்றதாலும், இருவர் மருத்துவமனையில் உள்ளதாலும், கலந்துகொள்ளவில்லை  என்று அவர் கூறியிருக்கிறார்.

  பங்கேற்றவர்களில் 34 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரும் அடங்கியுள்ளனர்.
கட்சியின் அனுமதியின்றி வேறு கூட்டங்களில் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்பவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் பொதுச்செயலர் துமிந்த சில்வா, பொருளாளர். எஸ்.பி.திஸாநாயக்க போன்றவர்கள் எச்சரித்திருந்தனர். கொழும்பு ஹைட்பார்க்கில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பாக மத்திய செயற்குழு சமனான முறையில் முடிவு ஒன்றை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியினர் எதிரிகள் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில்  நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது எதிரணியின் கூதடத்தில் பங்கு  பற்றியவர்களின் மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு உடனடியாக பதில் கிடைக்காது. 

ஐக்கிய தேசியக் கட்சியை வெளியேறி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை அமைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவளர்கள் விரும்புகிறார்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்     தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.  .ஹிக்கடுவை-சீனிகம தேவாலயம்இஇரத்தினபுரிஇ சிறிய கதிர்காமம், சிங்கக்குலிய, மொரட்டுவ, முகத்துவாரம் காளிகோவில், குளியாப்பிட்டி சிலாபம்- முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவில்  ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் தேங்காய் உடைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டினர்

 எந்த வழியிலாவது  ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் துடிக்கின்றனர். இன்றைய நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவளர்களை  வெளியேற்றினால் அது அவர்களுக்கு சாதகமாகிவிடும் என்பதை ஜனாதிபதி மைத்திரி உணர்ந்துள்ளார். ஆகையினால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது  என்ற நம்பிக்கை  எதிரணியிடம் உள்ளது.அந்த நம்பிக்கை நீடிக்கும்வரை அவர்களின் போராட்டம் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிந்த உண்மை.
ஊர்மிளா
சுடர் ஒளி
 மார்ச்23/மார்ச்30



Tuesday, March 15, 2016

சொனனதைச் செய்வாரா ஜனாதிபதி மைத்திரி

அதி உஅயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை ஆறு மாதங்களில் மீள் குடிஏற்றுவேன் என சபதமிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்று மாதங்கள் கடந்த பின்னர் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணியையும் புகழ் பெற்ற பாடசாலையான நடேஸ்வரா கல்லூரியையும் விடுவித்தார். நல்லிணக்க அரசாங்கம் பதவி ஏற்ற  போது எமது  பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற அபிலாசை தமிழ் மக்கள் மனதில் தோன்றியது.  அவற்றில் ஒரு சிலவற்றை இந்த அரசாங்கம் தீர்த்து வைத்தது.ஆனால், ஒரு சில பிரச்சினைகளை ஆறப்போட்டுள்ளது.

வலிகாம மக்கள் அதிக வலியுடன் வாழ்ந்து வருகின்றனர்.  சொந்த நாட்டியேலே  25 வருட அகதி வாழ்க்கை என்பது மிகக்கொடூரமானது. நாட்டின் பாதுகாப்பு என்ற கறித்தியலில் சொந்த மக்களை விரட்டிவிட்டு  இராணுவத்தை அமர்த்தியது  கடந்தகால அரசுகள். தமிழ்மக்கள் விரட்டப்பட்டு சிங்கள இராணுவம் அங்கு குடியேறியது. யுத்தம் முடிந்து விட்டது எமது இடங்களை மீளவும் எங்களிடம் தருங்கள் என மக்கள் கோரிக்கை விட்டபோது பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு இராணுவம் அகற்றப்பட மாட்டாது  என  நல்லிணக்க அரசாங்கம்   பதிலளித்தது. ஜனாதிபதி மைத்திரியின் முயற்சியினால் சில  இடங்கள் பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றன.

தமிழ்  மக்கள் சொந்த இடங்களில் குடியேறுவது சில சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குப்  பிடிக்கவில்லை. இராணுவத்தின் தியாகத்துடன் மீட்கப்பட்ட இடங்களை ஜனாதிபதி மைத்திரி தமிழ் மக்களிடம் கொடுக்கிறார்கள் என அவர்கள் விஷமப் பிரசாரம் செய்கின்றனர். இந்த சிஷமப் பிரசாரம் சிங்கள மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இனவாதிகளின் மனதில் இலேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.  சிங்கள மக்களின் மனதில் ஜனாதிபதிக்கு எதிரான சிந்தனையை இது தூண்டலாம். இவற்றுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

  உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன   விடுவிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் , கல்லூரிகள் ஜனாதிபதியினால் கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது., வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலுள்ள 700 ஏக்கர் காணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

 கடந்த சனிக்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதிஇ தெல்லிப்பளை  கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் 700 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்ததுடன்இ அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 65000 வீடுகளுக்கான வீட்டுத்திட்டத்தினையும்   பார்வையிட்டார்.

  12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்பட்டுள்ளதுடன் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதியினையும் ஜனாதிபதிவழங்கினார்..

 மீள்டியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் ராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாணச சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

மீள் குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. மக்களுக்க்க அமைக்கப்படும் வீடுகள் பொருத்தமில்லாதவை என்ற கருத்து உள்ளது.  அதனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பகிரங்கமாக குறிப்பிட்டார். மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவமிநாதன் முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு  பதிலளித்தார். அங்கு வாழப்போவது மக்கள்தான் என்றாலும் தேவை யான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் எத்தனை காலம்தான் தொடர்ந்து  வாழ முடியும். அகதி முகமா வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சொந்த இடத்தில் வாழப்போகும் மக்கள்  ஒருசில அடிப்படை வசதிகளை எதிர் பார்ப்பதில் தவறு இல்லை

பாதுகாப்பு எனற போர்வையில் தமிழ் மக்களின்  புறவீக இடங்களில் இருக்கும் இராணுவம் அங்கு சகல வசதிகளுடனும் வாழ்கிறது. தமிழ் மக்களின் காணிகளில் தோட்டம் செய்கின்றது. அக் காணிகளின் சொந்தக்காரர்கள்  வாழ்வாதாரத்துக்காக வேறொருவரிடம் கையேந்த  வேண்டிய நிலையில் உள்ளனர்.  இந்த இழி நிலையில் இருந்து மக்கள்  மீள வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கமும் வட மாகாண சபையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

யுத்தம் எனற கோர முகம் வலிகம் மக்களை ஓட ஓட விரட்டியது  நிம்மதியான வாழ்க்கைக்கு ஏங்கும் அவர்களுக்கு உதவுவதற்கு அரச அதிகாரிகள் முன்வரவேண்டும்.
ஊர்மிளா
சுடர் ஒளி
மார்ச்16/மார்ச்22