Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts

Sunday, December 8, 2024

சச்சின் கைகளை இறுக பற்றி கொண்ட வினோத் கம்ப்ளி

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், அவரது பால்ய நண்பர் வினோத் கம்ப்ளியும் டிசம்பர் 3ஆம் திக‌தி மும்பையில்    பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தபோது உணர்ச்சிகரமான மறு சந்திப்பைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் மேடையில் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான சந்திப்பின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அச்ரேக்கரின் மாணவர்களான டெண்டுல்கர்,கம்ப்ளி ஆகிய  இருவரும் தங்கள் பள்ளி கிரிக்கெட் நாட்களில் உலக சாதனையான 664 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, அவர்களின் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர்.

வைரலான ஒரு வீடியோவில், சச்சின், கம்ப்ளியை வாழ்த்துவதற்காக முன்னே நடந்து வந்தார். கம்பளியோ, தனது பால்ய பருவ நண்பரின் கையை விட்டுவிட விருப்பமில்லாமல் இறுகப் பிடித்தார். இருவரும் சிறிது நேரம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

டெண்டுல்கர் முன்னேற முயன்ற பிறகும், கம்ப்ளி, டெண்டுல்கரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தனது பிடியை விடுவிக்கத் தயங்கினார். மற்றொரு வீடியோவில், கம்ப்ளி டெண்டுல்கரை அன்புடன் கட்டித் தழுவி அவரது தலையைத் தொட்டார்.

டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, மிகவும் புகழ்பெற்ற தொழில்முறை வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்ட அதே நேரத்தில், கம்ப்ளியின் வாழ்க்கை மிகவும் ஏற்ற இறக்கமான பாதையை எடுத்தது. ஆயினும்கூட, இருவரும் நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Tuesday, September 17, 2024

இந்திய கிறிக்கெற் வீரர்களுக்கு கம்பீர் வைத்த செல்லப்பெயர்

இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ராஜக்களின் ராஜா என்ற புனைப்பெயரை வைத்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.

 இலங்கையில் விளையாடிய  இந்திய கிரிக்கெட் அணி  சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ரி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி பங்களாதேஷுக்கு  எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்க உள்ளது கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இச்சூழலில் தான் இந்திய அணி வீரர்களின் புனைப் பெயர்கள் குறித்து கம்பீர் பேசியிருக்கிறார். அந்தவகையில் எந்த வீரர்களுக்கு அவர் என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

பாட்ஷா - யுவராஜ் சிங்

தபாங் - சச்சின் டெண்டுல்கர்

கிலாடி - ஜஸ்ப்ரித் பும்ரா

மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் - ராகுல் டிராவிட்

கப்பர் - ஷிகர் தவான்

புலி - சௌரவ் கங்குலி

ஷாஹேன்ஷா (ராஜாக்களின் ராஜா) - விராட் கோலி

ஐபிஎல் தொடரின் போது விராட் கோலிக்கும் கம்பீருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கம்பீரை ரசிகர்கள் பார்க்கும் போது எல்லாம் கோலி பெயரை சொல்லி குரல் எழுப்புவது வடிக்கையாக இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்  போட்டியில்நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஒரு போட்டியில் விளையாடின.

அப்போது தங்களது பழைய பகையெல்லாம் மறந்து கம்பீரும் ,விராட் கோலியும் சகஜமாக பேசி சிரித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருவருக்குமான சண்டை முற்றுப்பெற்றது. இந்த நிலையில் தான் விராட் கோலியை ராஜக்களின் ராஜா என்று கவுதம் கம்பீர் புனைபெயர் வைத்து அழைத்துள்ளார்.

Saturday, November 4, 2023

சச்சினை முந்திய ரச்சின் 23 வயதில் புதிய 2 உலக சாதனை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தைல் நடக்கும்  பாகிஸ்தானுக்கு எதிடான  போட்டியில் நியூஸிலாந்தின்  இளம் வீர ரச்சின் ரவீந்திர  புதிய சாதனைகள் படைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

கப்டன் கேன் வில்லியம்ஸ்னுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி  ரச்சின் ரவீந்திர  2வது விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 108 (94)ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். உலகக் கிண்ணத்தில்  முதல் முறையாக விளையாடும் அவர் ஏற்கனவே 2 சதங்கள் அடித்திருந்த அவர் இதையும் சேர்த்து மொத்தம் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில்  அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற   சாதனையை ரச்சின் ரவீந்திர படைத்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற மற்றுமொரு சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.

கிளன் டர்னர் (1975) மார்ட்டின் கப்டில் (2015) கேன் வில்லியம்சன் (2019) ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் 24 வயதுக்குள் அதிக சதங்கள் (3) அடித்த வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் உடைத்துள்ள ரச்சின் ரவீந்திர  புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 24 வயதுக்குள் 2 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 

Wednesday, September 6, 2023

சச்சின் கோலிக்கு இடையேயான விநோத ஒற்றுமை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்பட்டு வருபவர் விராட் கோலி என்றால் அது மிகயல்ல இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே எதிர்பாராமல் நடந்த நான்கு ஒற்றுமையான விடயங்களை இந்த பதிவில் காணலாம்.

1) அறிமுக போட்டி ஒரே திக‌தியில் அமைந்தது :

சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் திக‌தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் திக‌தி இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார். மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அறிமுகமான திக‌தி ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 2) முதல் டெஸ்ட் சதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக:  சச்சின் டெண்டுல்கர் கடந்த 1992-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதேபோன்று விராட் கோலியும் கடந்த 2012-ஆம் ஆண்டு அடிலெய்டு நகரில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார். இருவருமே அவுஸ்திரேலியா மண்ணில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்தனர்.

3) ஐபிஎல் தொடரில் க‌ப்டனாக ஒரேஞ்சு தொப்பி:

 ச்சின் டெண்டுல்கர் கடந்த 2010-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச்  தொப்பையை கைப்பற்றி இருந்தார். அதேபோன்று விராட் கோலி கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணியின் க‌ப்டனாக அதிக ஒட்டங்களை குவித்து ஒரேஞ்ச் தொப்பியை கைப்பற்றினாறார் 

. 4) க‌ப்டனாக ஒரே அணிக்கு எதிராக அறிமுகமானது : 

 சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக க‌ப்டனாக அறிமுகமாகினார். அதேபோன்று விராட் கோலியும் இலங்கை அணிக்கு எதிராகவே ஒருநாள்க‌ப்டனாக அறிமுகமாகினார்.  சச்சின் 1996-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமாகினார். 2014-ஆம் ஆண்டு விராட் கோலியும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் க‌ப்டனாக அறிமுகமாகியுள்ளார்.

Monday, May 15, 2023

மருந்து விற்பனைக்கு எதிராக சச்சின் புகார்

 


பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்வது சட்டபடி குற்றம் ஆகும். இந்நிலையில் சமீபகாலங்களில் பிரபலங்களின் பெயர்கள் இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்ட அடிக்கடி எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரில் சட்டவிரோதமாக ஹெர்பல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் பெயரைப் பயன்படுத்தி `www.sachinhealth.in' என்ற வெப்சைட் மூலம் ஹெர்பல் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த விற்பனைக்கு சச்சின் டெண்டுல்கரிடம் முறைப்படி அனுமதி பெறப்படவில்லை. சச்சின் டெண்டுல்கர் பெயரைப் பயன்படுத்தி சோஷியல் மீடியாவில் விளம்பரமும் செய்யப்பட்டது. உடல், தோல், வலி பிரச்னைகளுக்கான மருந்துகள் அந்த இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதில் முறைகேட்டின் உச்சத்திற்கே செல்வது போல் மருந்துகளை வாங்குபவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட டி-சர்ட் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இது சச்சின் டெண்டுல்கரின் உதவியாளர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த சச்சின் கடும் அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சச்சின் தரப்பில் பொலிஸில்  புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

 உடலில் அந்த ஆயிலை ஸ்பிரே செய்வதன் மூலம் உடல் கொழுப்பு கரையும் என்று இரண்டு வெப்சைட்டுகளில் விளம்பரம் செய்தனர். அதன் விலை 899 ரூபாய் என்று நவீன் என்பவர் சோஷியல் மீடியாவில் விளம்பரம் கொடுத்திருந்தார். தனக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், தனது பெயர் பயன்படுத்தப்படுவதாக சச்சின் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, December 27, 2022

சம்பியன் கனவு அன்று சச்சினுக்கு; இன்று மெஸ்ஸிக்கு

 

ஆர்ஜென்ரீனா அணியின் க‌ப்டன் மெஸ்ஸியை முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்  கிண்ணம்  மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும், அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது அந்த கனவு நனவானது. தற்போது இதே சூழல் தான் மெஸ்ஸிக்கும் நடந்தது.இந்தியாவின் 28 வருட உலகக் கிண்ண‌ கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, ஆர்ஜெண்ரீனாவின் 36 வருட கனவு மெஸ்ஸிக்காக நிறைவேறியுள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 






Tuesday, March 22, 2022

சதம் அடித்த அதிக வயதான வீரர்கள்

கிரிக்கெட் மட்டுமல்லாது எந்த ஒரு விளையாட்டிலும் விளையாடும் தரமான திறமை வாய்ந்த வீரர்களுக்கு வயது என்பது தடை கிடையாது.

வயது ஆகஆக ஒரு சில வீரர்கள் தங்களின் இளம் வயதில் செயல்பட்டதை விட அபாரமாக செயல்பட்டு வயது வெறும் நம்பர் என நிரூபித்த தருணங்கள் ஏராளமாக உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் சதமடித்த டாப் 5 வீரர்களின் பட்டியல்

5. ஷேன் வட்சன்: 

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார். அதன்பின் பெங்களூரு போன்ற அணிகளுக்காக விளையாடி வந்த அவர் தனது கடைசி கட்ட நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனியின் கீழ் விளையாடினார்.

 கடந்த 2018-ஆம் ஆண்டு தடையில் இருந்து மீண்டு வந்த சென்னை அணி லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியசன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 178/6 ஓட்டங்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 179 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வட்சன் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார்.

 ஆனால், மறுபுறம் டு பிளேஸிஸ், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் பெரிய ஓட்டங்கள் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து நங்கூரமாக ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர் உட்பட சதம் அடித்து 117* ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  அபாரமாக செயல்பட்ட அவர் சென்னை அணிக்கு 3-வது கோப்பையை தனி ஒருவனாக வாங்கி கொடுத்தார் என்றே கூறலாம். அதனால் ஆட்டநாயகன் விருது பெற்ற அவருக்கு அந்த சதம் அடித்தபோது வயது 36 வருடம் 244 நாட்களாகும். மொத்தமாக 4 ஐபிஎல் சதங்கள் அடித்துள்ள அவர் இதன் வாயிலாக இந்த பட்டியலில் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.


 4. சச்சின் டெண்டுல்கர்:

 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்து இந்தியாவிற்கு எத்தனையோ வெற்றிகளை வாங்கிக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரிலும் தனது சொந்த ஊரான மும்பைக்கு விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். ஆரம்ப காலங்களில் அந்த அணியின் ப்டனாக விளையாடிய அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட  100* ஓட்டங்கள் எடுத்தார்அந்த போட்டியில் மும்பை தோற்ற போதிலும் 37 வருடம் 356 நாட்கள் வயதில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் சதம் அடித்த இந்திய ப்டன் , இந்திய வீரர் ஆகிய சாதனைகளை படைத்து இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.

 

3. கிறிஸ் கெயில்:


வெஸ்ட் இண்டீசை தேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள், அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்த ஒரு ஜாம்பவான் என கூறலாம். மொத்தம் 6 சதங்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அவர் கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 63 பந்துகளில் 104 ரன்கள் விளாசி சதம் அடித்தார். அதன் காரணமாக அவர் விளையாடிய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது 38 வருடம் 210 நாட்கள் வயதை கடந்திருந்த அவர் இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

 

2. சனத் ஜெயசூரிய:


இலங்கை அணியின் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்ய கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட முதல் வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 157 ஓட்டங்கள் இலக்கை மும்பை துரத்தியது.அப்போது அவருடன் ஜோடியாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் அவுட்டானாலும் மறுபுறம் அனல் தெறிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 48 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 11 சிக்சர்கள் உட்பட சதம் விளாசி 114* ஓட்டங்கள் எடுத்து மும்பையை வெற்றி பெறச் செய்தார். அந்த சதம் அடித்த போது அவரின் வயது 38 வருடம் 319 நாட்கள் என்பதால் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

1.        அடம் கில்கிறிஸ்ட் :

2.         கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றிய அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் அடம் கில்கிரிஸ்ட் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட காலங்களில் கப்டனாக விளையாடினார். குறிப்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ப்டன்ஷிப் செய்த அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து தன்னை ஒரு சிறந்த கப்டன் எனவும் நிரூபித்தார்

 அதன்பின் கடந்த 2011-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு ப்டனாக செயல்பட்ட அவர் தரம்சாலாவில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து 55 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 106 ஓட்டங்கள் விளாசினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 111 ஓட்டங்கள் வித்யாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தனது 39 வருடம் 184 நாட்கள் வயதில் இந்த அபார சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஐபிஎல் கிரிக்கெட் மிக அதிக வயதில் சதம் அடித்த வீரர் மற்றும் ப்டன் என்ற இரட்டைப்  பெருமைகளுடன் சாதனைகளைப் படைக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்தார்.