Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Tuesday, June 17, 2025

தமிழக அரசியலில் குழம்பிய கூட்டணிக் கணக்குகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்  சூடு பிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலினும், இழந்த ஆட்சியைப் பிடிக்க எடப்பாடியும் வியூகம் வகுக்கின்றனர்.

மெகா கூட்டணி என்ற கோஷம் மட்டுமே எடப்பாடியின் தரப்பில் இருந்து வெளிவருகிறது. ஆனால், எடப்பாடியுடன் கூட்டணி சேர இப்போதைக்கு யாரும் தயாராக இல்லை.

எடப்பாடியின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி என அமித்ஷா சொல்லியுள்ளார்.  ஆனால், அண்ணாமலையின் வாக்கு மூலம் வேறு வகையாக இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.பாஜக ஆட்சிதான் என அண்ணாமலை திருவாய் மலர்ந்தருளுகிறார். தமிழக முதல்வர் கனவில் எடப்பாடி மிதக்கிறார். எடப்பாடியை எப்படி அடக்குவது என அமித்ஷா கணக்குப் போடுகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் குடும்பச் சண்டை நடைபெறுகிறது. அப்பாவும், மகனும் எட்ட்டிக்குப் போட்டியாக  அறிக்கை விடுகிறார்கள். இருவரும்  ஒற்றூமையாக  இருந்த போதே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  குடும்பப் பிரச்சனையால் கட்சி  பிளவுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனபதுபோல்  பிரேமலதா ஒரு கணக்குச் சொல்கிறார். 36 தொகுதிகள்  வேண்டுமாம் ஒரு தொகுதி குறைந்தாலும்  ஒப்புக் கொள்ள மாட்டாராம். ஆனாலும்  கடந்தகாலத்தைப் போல இரண்டு பெரிய கட்சிகளுடனும்  பேரம் பேசுகிறார் பிரேமலதா.

எடப்பாடி   ஏமாற்றி விட்டார் என குற்றம் சுமத்திய  பிரேமலதா  இப்போதைக்கு இறங்கி வருவார் போலத் தெரியாது. எடபாடிக்கும் சுதீஷுக்கும் இடையிலான  பேச்சு வார்த்தையில்  சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு  ராஜ்யசபா  எம்பி பதவி தரப்படும் என எடப்பாடி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால் அவசரப்பட வேண்டாம் என சிலர் பிரேமலதாவுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எடப்பாடியுடன் இருந்த வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சென்றுவிட்டார்.ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரும் பாரதீய ஜனதாவின்  பக்கம் பலமாக  இருக்கின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு, தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு  இருக்கிறது. சசிகலாவின் நிலைதான் கேள்விக்குறியாக  இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கையில் விஜய் சுறுசுறுப்பாக   இயங்குகிறார்.

விஜயுடன் எந்தக் கட்சியும்  இணையவில்லை. ஆனால், மற்றைய  கட்சிகளின்  பிரமுகர்கள் விஜயுடன் கைகோர்த்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயின் கட்சியில்  இணைகிறார்கள்.

ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.ராஜலட்சுமி,   டாக்டர் ஏ.ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

 ராஜலட்சுமி, சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் அதிமுக.,வில் இருந்து விலகி பாஜக.,விற்கு சென்று, பிறகு மீண்டும் அதிமுக.,வில் இணைந்தவர். அதே போல் டேவிட் செல்வன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர்.

வழக்கமாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள், புதிதாக துவங்கப்பட்ட விஜய் கட்சியில் இருந்துள்ளதை  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜயுடன்  பிரேமலதா  இணையலாம் என்ற‌ ஊகங்கள் வெளியாகின்றன.

பிரேமலதாவிடம் ஊடகவியலாளர்கள்         கேட்ட போது, விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன்  கூட்டணி சேர பிரேமலதா விரும்புகிறார். தான் எதிர்பார்க்கு தொகுதிகளை  ஒதுக்க மறுத்தால் தனித்துப்  போட்டியிடப் போவதாகவும் பிரேமலதா சொல்லியுள்ளார்.

தனித்துப் போட்டியிட்டால்  பிரேமலதவால் வெற்றி பெற முடியாது. ஆனால், இன்னொரு கட்சியின் வெற்ரி வாய்ப்பைத் தவிடு பொடியாக்க முடியும்.

ஸ்டாலினுடன்  இருக்கும் திருமாவளவனும், கொம்யூனிஸ்ட்டுகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. காங்கிரஸும்  சில வேளை அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம்.

தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலரவைக்க பாரதீய ஜனதா முயற்சி   செய்கிறது. கடந்த வாரம் அமித்ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.

தேர்தலைக் குறிவைத்து முருகன் மாநாட்டை நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டுளது. முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து   மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேகதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் திக‌தி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

 கடைசியில்  முருகனிடன் சரணடைந்தது  பாரதீய ஜனதாக் கட்சி. 

ரமணி

15/6/25

 

Saturday, June 7, 2025

கூட்டணிக்கு கைகொடுக்கும் ஸ்டாலின் கூட்டணியைக் கைவிட்ட எடப்பாடி

ஸ்டாலினின் தலைமையிலான  இந்தியா கூட்டணி தமிழ்கத்தில் மிக வலுவாகக் கால் ஊன்றியுள்ளது. மெகா கூட்டணியை அமைக்கப்போவதாகச் சவால் விட்ட எடப்பாடியைக் கூட்டணிக் கட்சிகளைக் கைகழுவிவிடுகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது நடைபெறும்  கூட்டணிப் பேரங்களில்  மாநிலங்களவை எம்பிப் பதவியும்  முடிவு செய்யப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன சொல்லைக்காப்பாற்றும் விதமாக கமலுக்கு எம்பிப் பதவியைத் தூக்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி  பிரேமலதாவுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27ம் திகதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19ம்  திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, என்.சந்திரசேகரன் ஆகியோரும், திமுக சார்பில் மற்ற 4 பேரும் எம்.பி.யாக தேர்வாகிர் எம்பியாகினர்

 ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் தேர்வுபெறும் நிலை உள்ளது.

  திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் மு..ஸ்டாலின்   வெளியிட்டார். . திமுக வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள்’’ என அறிவித்துள்ளார்.மற்றைய ஒரு இடம் மக்கள் நீதிமைய கட்சியின் தலைவர் கமலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதியின்  பிர்காரம் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியின் படி ஒரு  எம்பி பதவி தரப்பட வேண்டும் என  பிரேமலதா ஞாபகப் படுத்துகிறார். அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என எடப்பாடி சத்தியம்செய்யாத குறையாக வாக்குமூலம் கொடுக்கிறார்.

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில்,  இரு இடங்களுக்கும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

  தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் தரப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று முதல் முறையாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவிரவாக சுதீஷைக் கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எடப்பாடி அரிவித்துள்ளார்.

  மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  இரண்டு  நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தேமுதிகவுக்கான ராஜ்யசபா சீட் விவகாரம் தொடர்பாகவும் கூட ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.   கட்சி முன்னணியினருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்துள்ளார். அப்போது அனைவருமே ஒரு மனதாக தேமுதிகவுக்கு இப்போது சீட் தர வேண்டாம் என்று கூறி விட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்காக நாம் நிறைய இழந்துள்ளோம். ஜி.கே.வாசனுக்கு சீட் தந்தோம். அவரை நம்மை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த தேர்தலில் பாஜக பக்கம் போய் விட்டார். பாமகவுக்கும் சீட் தந்தோம். அன்புமணி எம்.பி. ஆனார். ஆனால் அவரோ கடைசி நேரத்தில் நமது கழுத்தறுத்து விட்டு பாஜக பக்கம் போய் விட்டார். இப்போது தேமுதிகவுக்கும் அதேபோல கொடுத்தால், அவர்களும் அணி மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தேமுதிக பொருளாளர் சுதீஷை நேரில் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டசபைத் தேர்தல் முடியட்டும். அதன் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் உங்களுக்கு சீட்  தருகிறோம். இப்போது வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம். இதனால்தான் சுதீஷ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

  அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் தனபால் ஆகியோர்   போட்டியிடுவர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ம்பவைத்து ஏமாற்றியதால் மிகுந்த கடுப்பில் இருக்கிறார் பிரேமலதா. இந்த நிலையில்


 தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணியில் இணைய வருமாறு, அதாவது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தேமுதிக ஏற்குமா? அப்படியே ஏற்று திமுக கூட்டணியில் இணைந்தால் அது எந்த அளவிற்கு தேமுதிக.,வின் வளர்ச்சி பலன் தரும்?.. அதை விட முக்கியமாக, திமுக கூட்டணியில் முதலில் தேமுதிகவுக்கு இடம் இருக்கா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேமுதிக தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தேமுதிக.,விற்கு வருகிற ராஜ்யசபா எம்.பி., சீட் தர முடியாது என அதிமுக தலைமை மறுத்து விட்டதால், அதிமுக தலைமை மற்றும் கூட்டணி மீது தேமுதிக கடுமையான அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திமுகவைப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து சிலாகித்து நன்றி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை புகழ்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரேமலதாவின் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, திமுக கூட்டணியில் இணைய வருமாறு தேமுதிக.,விற்கு செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்தார்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்புதல் இல்லாமல் செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்திருக்க மாட்டார்.

எடப்பாடியின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா விஜயின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. விஜயும்,  பிரேமலதாவும் இணையக்கூடாது என்பதால் செல்வப் பெருந்தகை அழைப்பை விடுத்திருக்கலாம்.

விஜயுடன் யாரும் கூட்டனி வைக்கவில்லை.  விஜய்க்கு சாதகமான மன நிலை இளைஞர்கள் மத்தியில் நிலவுவதாலும் தனக்கான வெற்றி வாய்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்து போய் விடக் கூடாது என்று கவனம் காட்டுகிறது திமுக.

இதனால்தான்   இதுநாள் வரை பார்க்காமல் இருந்து வந்த தனது அண்ணன் மு..அழகிரியை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் போய்ச் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள பலவீனத்தை சரிப்படுத்தி விடலாம் என்று முதல்வர் மு..ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் பக்கம் போகும் வாய்ப்புள்ள தேமுதிகவையும் தன் பக்கம் திருப்ப திமுக முயல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சமயத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக இணைவது சரியான முடிவாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி தான். தற்போதுள்ள அரசியல் கள நிலவரம் ஒரு புறம் இருந்தாலும் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தான் உயிருடன் இருந்தது வரை எந்த காரணத்திற்காகவும் திமுக., கூட்டணியில் இணைவது இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். திமுக ஆட்சி காலத்தில் மேம்பால பணிகளுக்காக தன்னுடைய திருமண மண்டபத்தை இடித்தது முதலே தனிப்பட்ட முறையில் திமுக., மீது விஜயகாந்த் கடுமையான கோபத்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி எவ்வளவோ முயற்சித்தும் கூட திமுக., கூட்டணியில் இணைய கூடாது என்பதில் விஜயகாந்த் மிக உறுதியாக இருந்தார்.

பிரேமலதாஅவுக்கு முன்புபோல் வாக்கு வங்கி இல்லை. எதிரணியில் பிரேமலதாவின் கட்சி வெற்றி பெறாது. ஆனால் சில வேளை வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம்.

தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் பிரேமலதா, திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தால் அது கண்டிப்பாக கட்சி தொண்டர்களிடமும், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் தேமுதிக., மீது அதிருப்தியை உருவாக்கும். மற்றொரு புறம் திமுக எதிர்ப்பும் தேமுதிக.,வின் பக்கம் திரும்பும். அப்படி நடந்தால் அது தேமுதிக.,வின் செல்வாக்கையும், ஓட்டு வங்கியையும் மேலும் பலம் இழக்க வைக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் அந்தக் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகும்.

ரமணி

8/6/25 

  

Saturday, April 19, 2025

பாரதீய ஜனதாவின் வலையில் வசமாகச் சிக்கிய அதிமுக‌


 தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். அதிமுக,பாரதீய ஜனதாக் கூட்டணி தமிழகத்தில் சந்தித்த தேர்தல்களில் படுதோல்வியடைந்தது.

அதிமுகவின் தோல்விக்கு பாரதீய ஜனதா தான் காரணம் என எடப்பாடியும் ஏனைய தலைவர்களும் கூறினார்கள். பாரதீய ஜனதாவைத் தூக்கு எறிந்த‌ அதிமுக தனி வழி சென்றது. டெல்லித் தலைமைகள் வேண்டுகோள் விடுத்தும், கூட்டணிக் கதவு திறந்திருக்கிறத் எனத் தெரிவித்தும் எடப்பாடி மனம் இரங்கவில்லை.ஒருநாள் திடுதிப்பென எடப்பாடி இரகசியமாக டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்தித்ததால்  பிரிந்திருந்த கூட்டணி  மீண்டும் அரும்பத் தொடங்கியது.

தமிழ்கத்தில் பதிரிகையாளர்களைச் சந்தித்த அமித்ஷா  கூட்டணி  பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தார் அருகில் எடப்பாடி அமைதியாக  இருந்தார். அங்கு அமித்ஷா மேலும் தெரிவிக்கையில் ,  ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. மதியில் மோடி அரசமைப்பார் ’’ என்றார்.

அதிமுக நிபந்தனை விதிக்கவில்லை, தேர்தல் முடிந்த பின்னரமைச்ச்ரவை என அமித்ஷா கூறியதால்  அமைச்சரவையில் பாரதீய ஜனதா இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை எடப்பாடியிடம்  கேடபோது அவர் கொதித்தெழுந்து விட்டார். அமைச்சரவையில் பாரதீய ஜனதாவுக்குப் பங்கு இல்லை என திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால், மற்றைய மாநிலங்களில்  கூட்டணிக் கட்சியை பாரதீய ஜனதா சிதறடித்த வரலாறு உள்ளது. மகாராஸ்திராவில் பலமான சிவசேனாவை பாரதீய ஜனதா முடக்கி விட்டது.     தமிழ்கத்திலும் அதிமுகவை பாரதீய ஜனதா கபளீகரம் செய்து விடும் என  விமர்சகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.பாரதீய ஜனதாவுடன் கூட்டணி  இல்லை என சத்தியம் செய்த  ஜெயக்குமார் போன்ற த்லைவர்கள்  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கின்றனர்.

எடப்பாடியும் சில அதிமுக தலைவர்கலும் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி பூதாகரமாகதோன்றியுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கே.எஸ். முகமது கனி,  அதிமுவின் சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்து விலகுவதாகப் பரபரப்பு  தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

 “நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல பொறுப்புகளிருந்து பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பாசிச பாஜகவுடன் (பிஜேபி) கூட்டணி வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்.  இப்படிக்கு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசி எனத் தெரிவித்துள்ளார். இது அதிமுக   இதேவேளைஅதிமுக உடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.

சென்ற தேர்தலின் போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன. அதனையடுத்து அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசியதனால், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்து வந்தார்.

இதனையடுத்து, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகியது. இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனித்து தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது அதிமுக ,பாஜக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பாஜகவை சேர்ந்த செட்டிக்குளம் ஊராட்சி தலைவர் அம்மா எஸ்.செல்வகுமார் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று ஒட்டியுள்ள சுவரொட்டியில், நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ‘வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சட்டப் பேரவை தேர்தலுக்கு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற கருத்து பரவிய நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார் என்று நயினார்நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரேஎன்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து இணையதளங்களில் அதிமுக, பாஜக மற்றும் பிறகட்சிகளை சேர்ந்தவர்களும் விமர்சன கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ‘மாடு ரெண்டு, பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் என்று நெட்டிசன்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரமணி

23/4/25 

Friday, March 7, 2025

பாரதீயஜனதாவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழகக் கட்சிகள்

பாரதீய ஜனதாக் கட்சி பதவி  ஏற்ற பின்னர் சத்தம் இல்லாமல் செய்து வரும் காரியங்களால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்க்கும் பாதிப்பு ஏற்படும் என  தமிழகத் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்>

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பி ஆகிய இரண்டு  திட்டங்களை அமுல் படுத்துவதில் பாரதீய ஜனா அரசு முஐப்புக் காட்டி வருகிறது.மத்திய அரசுத் தேர்தலையும்,மாநிலத் தேர்தலையும்  ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா  பிடிவாதமாக உள்ளது.அதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமித்து ஒப்புதல் பெற்றுள்ளது.ஆணைக்குழுவில் இருபவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு ஒத்து ஊதுபவர்கள் என்பது கடந்த கால வரலாறு.

இப்போது தொகுதி மறு சீரமைப்புப்பற்றி  அமித்ஷா உரக்கப் பேசுகிறார். தமிழக எதிர்க் க்டசித் தலைவர்களும்,  மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில  தலைவர்களும் கடும் எதிர்ப்புக் காட்டுகின்றனர்.தமிழக பாரதீய ஜனதா கட்சி, , தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகளைத் தவிர அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

  புதிய நாடாளுமன்றத்தை அமைக்கும்  போதே எம்பிக்களில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு   ஏற்ற வாரு கட்டப்பட்டது.தற்போது 543 எம்பிக்களும்,245 , மாநிலங்களவி எம்பிக்களும் உள்ளனர். புதிய பாராளுமன்றத்தில் 888 எம்பிக்களும், 348 மாநிலங்களவை உறுப்பினர்களும்  அமரக்கூடிய வசதி உள்ளது.

தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டலின் நடத்தினார். அங்கு  சில தீர்மானங்களும் நிற வேற்றப்பட்டன.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 30 வருடத்திற்கு மறு வரையை தள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

 848 தொகுதிகளாக அதிகரித்தால், உத்தரபிரதேசத்தில் 63 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும், தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும். எந்தவகையில் பார்த்தாலும், இந்திய ஜனநாயகத்தை, இந்திய நாடாளுமன்றத்தின் தலைமைப் பொறுப்பை வடவர்கள் எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கும் நிலைதான் ஏற்படும்.

2026 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்போவதை பொதுவாக மக்கள் தொகை கணக்கிட்டு தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி, மற்றும் சுகாதாரம் முன்னெச்சரிக்கை மூலமாக இதை சாதித்து இருக்கிறது.  இப்போது இருக்கின்ற 543 நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து செய்ய இருப்பதால் மக்கள் தொகை குறைவால் எம்பிக்களின் தொகை குறையும் அபாயம் உள்ளது .29 எம்பிக்கள்  இழப்பு ஏற்படும்.

 நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை 848 ஆக ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்துகு  கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.இந்த இரண்டு முறைகளில் தமிழகத்துக்கான  பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிகமாக பிரதிநிதித்துவம் கிடைக்கும்‌.இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும. இது வெறும் உறுப்பினர்களை பற்றிய கவலை இல்லை.   தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை.நம் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கின்ற முக்கிய பிரச்சினைகளில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லாரும் முன் நான் வைக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே  அபாயமான செயல். இதுக்குள் நமக்கான கருத்து வேறுபாடும் வரும் நிச்சயம் இருக்காது என நினைக்கிறேன். கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின் அமைப்பின் கூட்டாட்சிக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்துவ உரிமையில் நேரடியான தாக்குதல். இப்படி சமநிதியற்ற அநீதியான தொகுதி மறு சீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும் என்று  ஸ்டாலின் தெரிவித்தார்.

அனைத்து கட்சி கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் மிகவும் காட்டமாகப் பேசினார்கள். பாரதீயஜனதாவுடன்  இணக்கமாகச் செயற்படும் அன்புமணியும் மிகவும் ஆக்ரோஷமாகக்  கருத்துத் தெரிவித்தார்.

தொகுதி மரு சீரமைப்பால் தமிழகத்தின் தொகுதிகள்  குறைக்கப்பட மாட்டாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்., தி.மு.க. மட்டுமல்ல, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சரான சித்தராமைய்யாவும் தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சரான ரேவந்த் ரெட்டியும்கூட அமித் ஷாவின் வாக்குறுதியை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் "தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களில் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமித் ஷா தெளிவுபடுத்தவில்லை.

மறுவரையறையால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்கிறாரே தவிர, தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் எவ்வளவு இடங்கள் அதிகரிக்கும் என்பதைச் சொல்லவில்லை. எந்த அடிப்படையில் அதிகரிக்கும்?" எனக் கேள்வியெழுப்பினார் ரேவந்த் ரெட்டி.

அதேபோல, கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் அமித் ஷா தென் மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதி நம்பத்தகுந்ததல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

  முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட 58 கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தொகுதி எண்ணிக்கை மறுவரையறையை எதிர்த்தன. இந்த விவகாரத்தை கையாள்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

அதிமுக சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது என்று கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய போது, “தொகுதி மறு சீரமைப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்திடவும், அடுத்தடுத்த போராட்ட செயல் திட்டங்களை வகுக்கவும் நமது முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும். அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி இந்தியாவில் மூன்று முறை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன.

கடைசியாக 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, 1973ல் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. இதற்குப் பிறகு 1975ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் தொகை நிலைபெறும்வரை தொகுதி மறுவரையறையை நிறுத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்யாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. ஆகவே, 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்தால், அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம்.

இந்தப் பின்னணியில்தான் 2026-ஐ ஒட்டி தொகுதி மறுவரையறை நடந்தால், அது தமிழ்நாட்டைக் கடுமையாக பாதிக்கும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன. ஆகவேதான், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென அவை கோருகின்றன.

மத்திய அரசுக்கு எதிராக தமிழ‌கத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கை உள்ளது.

 

ரமணி

9/3/25    

Monday, February 24, 2025

தமிழக கல்வியை முடக்க மத்திய அரசு திட்டம்

 

 தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, 2,401 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, அமைச்சர் மகேஷ் குற்றம்சாட்டி உள்ளார். இது  தமிழ்கத்தின் பேசு பொருளாக மாறியுள்ளது. கட்சி சார்பற்று அனைத்து அரசியல் தலைவர்களும் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், 2018ல் இருந்து செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு 60; மாநில அரசு, 40 சதவீத நிதியை பகிர்வு முறையில் விடுவிக்கின்றன. கடந்த 2023 -- 2024ம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு, 3,533 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், இரண்டு தவணைகளை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது. மூன்றாம் தவணையை, பி.எம்.ஸ்ரீ திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தான் ஒதுக்க முடியும் என்று மிரட்டுகிறது.

அத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளது. அதை ஏற்றால், தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

  ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்ட போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் இல்லாத நிலையில், நிதியை நிறுத்தக்கூடாது என, கடிதம் எழுதிய நிலையில், கடந்தாண்டுக்கான நிதியையும், இந்தாண்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியையும், மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசின் புள்ளி விபரப்படி, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், 17,632.41 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதனால், தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற, கடந்தாண்டுக்கு ஒதுக்கப்பட்ட, 249 கோடி ரூபாய் மற்றும் இந்தாண்டுக்கான, 2,152 கோடி ரூபாய் என மொத்தம், 2,401 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி சமக்ரசிக்ஷா என்ற‌ திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி 1ஆம் திக‌தி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியது.  


மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலினும் ஏனைய அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  மும்மொழிகையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியும். இல்லையென்றால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதனால் பலரும் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதே சமயத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் எனவும் திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

 நவோதயா வித்யாலயா போன்ற மத்திய  அரசு பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதால் தான் தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்கு கொள்கைகளின் காரணமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றமடைந்துள்ளதாக கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக அரசு எந்த திட்டத்தையும் நிறுத்தாது. தமிழக அரசின் நிதியை பயன்படுத்தி தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 1 திக‌தி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் அஞ்சக் கூடாது. தைரியமாக தேர்வை அணுக வேண்டும்.பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் பதட்டத்தை குறைக்க ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம்.கடந்த ஓராண்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 84 புகார்கள் பெறப்பட்டுள்ளது.90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜகவினர் உறுதியாக வருத்தப்படுவார்கள். தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புவார்கள் என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். .

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்   ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ,அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன் ,பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,த‌வெக தலைவர் விஜய், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை  ஆகியோர்  கடுமையானதொனியில்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகிய இருவரும் கட்சிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக மக்கள் ,மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்

ரமணி

23/2/25