Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Thursday, February 29, 2024

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -87


 சினிமவின் மீது இருந்த ஆர்வத்தால்  வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னையில் கால் பதித்த பஞ்சு அருணாசலம்  சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர்   என சினிமாவின்  அனைத்திலும்  வெற்றிக்கொடி நாட்டினார்.

 பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார்.  பஞ்சு அருணாசலத்தின்  உறவினார்கள் பலர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும்தகக்கு  ஒரு சந்தர்ப்பம் தரும்படி யாரிடமும்  கேட்கவில்லை. பஞ்சு அருணாசலம் எழுதிய  ஒரே  ஒரு பாட்டு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

சாரதா ஏ.எல்.எஸ் தயாரித்த படம். பாடல் எழுத கவிஞர் ஊரில் இல்லை. அவசரமாக பாடல் தேவைப்பட்டது. கே.வி. மகாதேவன் அவர்கள் தான் இசை. அவருடைய உதவியாளர் புகழேந்தி பஞ்சுவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

அந்த புகழேந்தி பஞ்சுவை பற்றி கே.வி.எம்.மிடம் சொல்ல அவர் அதுக்கென்ன இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டை எழுதித் தரச்சொல்லு, நல்லா இருந்தா யூஸ் பண்ணிப்போம் என்று கூறினார். கே.வி.எம். எப்போதும் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார். பஞ்சுவும் ஒரு அருமையான பாடலை தர அனைவர் ஆமோதிப்புடன் பஞ்சுவின் பாடல் பதிவாகியது. அந்தப் பாடல்தான் ‘மணமகளே மணமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா

. பயத்துடன் பஜ்சு அருணாசலம் எழுதிய பாடல் அரை  நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை திருமண வைபவத்தைல் ஒலிக்கிறது. "  வாராயென் தோழி வாராயோ,  மணப்பந்தல் காண வாராயோ" எனும் பாடல் மணமகளை அழைத்துவரும் தேசிய கீதமாக  இன்றும் தமிழ் மக்கள் வாழும் நாடெங்கும்  ஒலிக்கிறது.அந்தப்பாடலை கண்ணதாசன் எழுதியதாக நம்பும் பலர் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.

" வாராயென் தோழி வாராயோ" தந்த வெற்றியால் கண்ணதாசனின் உதவியாளராக  இருந்த  பஞ்சு அருணாசலம் முழுநேரப் பாடலாசிரியரானார்.பஞ்சு அருணாசலம் என்றதும்  இளையராஜாவை அரிமுகப்படுத்தியவர் என்ற  ஒற்றை வரிதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் பலருக்கும் தெரியாத சங்கதி. ரஜினியின் அடையாளத்தை முதன் முதலில் மாற்ரியவர்  பஞ்சு அருணாசலம்.  வேகமாக நடப்படு கையைக் காலை ஆட்டுவது, சிகரெட்டைபிடிப்பது என்ர ரஜினியின் கெட்டப்பை "புவனா  ஒரு கேள்விக்குரியில் மாற்ரினார்.  ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல் ,  போன்ற படங்கள் ரஜினியின்  இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின. சகல கலா வல்லவன் என கமலை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.

.   இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.எம் செட்டியர் 'நானும் ஒரு பெண்' படத்தில் பூப்போல பூப்போல பிறக்கும் என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கவியரசர் வருத்தப்படவில்லை, வாழ்த்தினார். இவராக வலியப் போய் யாரிடமும் வாய்ப்புக் கேட்டதில்லை. அதுவாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை உபயோகித்துக் கொள்வார், அவ்வளவுதான். கவிஞர் ஊரில் இல்லாத சமயங்களில் பல திரைப்பட கம்பெனிகளுக்கு டிஸ்கஷன் செல்வார். தேவர் பிலிம்ஸ் மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் செல்வார். அவர் சொல்லும் சீன்கள் பிடித்தால் அதற்கேற்றார் போல் ஒரு தொகையை கொடுப்பார்கள். சினிமாவிற்கென்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும் தனியாளாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதும் பேரெடுப்பதும் கஷ்டம். பஞ்சுவிற்கு திடமான எந்தக் குறிக்கோளும் இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலத்தான் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புரட்சித்தலைவருக்கும் கவிஞருக்கும் அரசியல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்தது. இனி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்தார். அந்தச் சமயமத்தில் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு எம்.எஸ்.வி. தான் இசை. கவிஞர் எழுத முடியாத காரணத்தால் பஞ்சுவை கூப்பிட்டு தான் போட்ட டியூனுக்கு பாட்டு எழுதச் சொல்லியிருக்கிறார். அதன்படி பஞ்சுவும் ‘பொன் எழில் பூத்தது புது வானில் என்ற பாடலையும், “என்னை மறந்ததேன் தென்றலே என்ற பாடலையும் எழுதித் தந்திருக்கிறார். பாடலும் பதிவாகி கேஸட் வடிவத்தில் எம்.ஜி.ஆரிடம் சென்றடைந்திருக்கிறது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், “இது கண்ணதாசன் எழுதிய பாடல், என்னை ஏமாற்ற பஞ்சு எழுதிய பாடல் என்று கூறுகிறீர்கள் என்று பாட்டை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

பஞ்சுவுக்கோ அழகையே வந்துவிட்டது. பிறகு எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “என் மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களிடம் பொய் சொல்வேனா?” என்று பலவாறாக சத்தியம் செய்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆர் உண்மையை உணர்ந்து பாடலை பாராட்டியதோடு, “பஞ்சுவை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல், இன்னும் வாய்ப்புகள் தருகிறேன், என்ற கூறியிருக்கிறார்.

ஸ்.பி. முத்துராமன், தேவராஜ், மோகன் போன்றவர்கள் பஞ்சுவுடன் சேர்ந்து ஒரு குழுவானர்கள். உறவு சொல்ல ஒருவன், உறவாடும் நெஞ்சங்கள், மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றன. இதன்பிறகு பஞ்சு ஒரு தயாரிப்பாளர் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் தமிழ்படங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தால் 50 நாட்கள் ஓடும். மிகவும் நன்றாக இருந்தால் 100 நாட்கள் ஓடும். மிக மிக நன்றாக இருந்தால் 175 நாட்கள் ஓடும்.

இந்திப் படங்களைப் பார்த்து, கிந்திபாடல்களைப் பாடிய தமிழக  ரசிகர்களை தமிழ்ப் படத்தின் பக்கமும், பாடல்களின் பக்கமும் திருப்பியதில் பஞ்சு அருணாசலம்  முதன்மையானவர். 

  

Tuesday, May 9, 2023

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி


   ‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற  படங்களின் முலம் ரசிகர்களின் மனதில்  இடம்  பிடித்தவர்  இயகுநர் ஞான சேகரன்.   பயோபிக் படங்களான ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தவை.

குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப் பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப் பத்தி ஹாலிவுட்ல வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு. அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு. துதான்  ராமானுஜர் படம் எடுக்க காரணமானது எனச் சொன்னார்  ஞான சேகரன்

அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கலைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு மாறுபட்ட விஷயத்தைப் பேசுவதாகவும் இருந்தது. அதன் உருவாக்கமும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருந்தது. சென்னையில் மத்திய அரசின் சார்பில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்திலிருந்து, தான் இயக்கிய எல்லாப் படங்களையுமே தணிக்கை விதிகளை மீறாதவாறு எச்சரிக்கையோடு உருவாக்கினார்.

அதேபோல ஒரு தணிக்கை அதிகாரியாக அவரது அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. அப்போதெல்லாம் தமிழில் ஆண்டுக்கு 300 படங்களுக்குக் குறையாமல் வெளிவரும். அதனால் ஒரு தணிக்கை அதிகாரியாக ஞான ராஜசேகரன் நிறையப் படங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலருடன்   முரண்பட வென்டிய நிலை ஏற்பட்டது.

 சினிமாவின்  மீது ஆர்வம் கொண்ட ஞான சேகரன் திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்று இளம் வயதிலேயே கனவு கண்டவர்.அதற்காகவே அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல  திரைப்படக் கல்லூரிப் பாடங்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தார்.

 அப்பாவின் விருப்பத்திற்கிணங்க எம்.எஸ்சி., படித்து ஐஏ எஸ் ஆனார். கேரளத்தின் பணிச் சூழல் அவரது சினிமா ஆசைக்கு உரம் இட்டது. அவரது சினிமா குறித்தான புரிதலுக்கு கேரள மாநிலத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பதவி அவரைத் தேடி வந்தது. அவர் கேரள மாநிலத்தில் பணி புரிந்தார். திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞான ராஜசேகரன், கேரளத்தின் பல்வேறு துறைகளில் இயக்குநர் மற்றும் செயலாளர் பதவிகளில் இருந்தவர். மத்திய அரசின் சார்பில் சென்னைத் திரைப்படத் தணிக்கை அதிகாரியாகவும் பணிபுரிந்திருக்கிறார்

ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அவருக்குத் தனது ஆட்சிப் பணியிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியதிருந்தது. பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற விடுப்புகள் வழக்கத்தில் இல்லை. ஆனாலும் அவரது கலை ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. கேரளாவாக இருந்ததால் அது சாத்தியமானது.

ஞான ராஜசேகரனின் தலைமையிலான தணிக்கைக் குழு கமலின்ஹே ராம்பட தணிக்கையின்போது பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியது. இதனால் கமல் கடும் கோபமடைந்தார்.   

ஹே ராம்படத்தின் இறுதியில் மகாத்மா காந்தி கோட்சேயால் சுடப்படும் காட்சியில் காந்தி சுடப்பட்டதும் தரையிலிருந்து உயர எறியப்பட்டு கீழே போய் விழுவார். “என்ன இது... தேசப்பிதாவை இப்படியா காட்டுவது?” என்று தணிக்கைக் குழுவிலிருந்த ஒரு காங்கிரஸ்காரர் கேட்டார். “ஆட்டன்பரோ தனதுகாந்திபடத்தில் இதே காட்சியை எவ்வளவோ மேன்மையாகக் காட்டியிருக்கிறார். இதிலோ ஏதோவொரு மிருகத்தைச் சுடுவதுபோலக் கேவலமாகக் காட்டியிருக்கிறார்என்று அவர் வேதனை தெரிவித்தார். ஆனால், “அந்தக் காட்சியை தணிக்கைக் குழு வெட்டச்சொல்ல முடியாதுஎன்று ஞான ராஜசேகரன் கூறினார்.

இந்த விவாதத்திற்கு பதில் சொன்ன கமல், "கோட்சே உயயோகித்த அதே போர் (Bore) உள்ள துப்பாக்கியைப் பல இடங்களில் தேடியலைந்து லண்டனில்தான் என்னால் வாங்க முடிந்தது. அந்தத் துப்பாக்கியால் ஷூட் செய்தால் நான் படத்தில் காட்டியபடிதான் சுடப்பட்டவர் உயரச்சென்று விழுவார். அதை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன்" என்றார். இயக்குநரின் விருப்ப உரிமை தொடர்பானது என்று கருதி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஞான ராஜசேகரன்.

தணிக்கை செய்யும் படம் பற்றிய விபரம்  அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. தணிக்கை அதிகாரிகள் வந்து விட்டார்கள். தலைவர் ஞான சேகரன் வந்ததும் ஒரு சிலர் அவரிடம் சென்று  " தனது படம் சென்சார் ஆகும்போது படக்காட்சி தொடங்குவதற்கு முன்னால் தணிக்கை அதிகாரியையும் குழுவினரையும் நேரில் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வது  ரஜினியின்  வழக்கம். இப்போது ரஜினி சார் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். கொஞ்சம் காத்திருந்தால் வந்துவிடுவார்" என்றார்.

அதனைக் கேட்ட  ஞான சேகரன்  தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதுவொரு தவறான அணுகுமுறையாகும். இதேபோல மற்ற நடிகர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்பதில்லை. நாங்கள் படத்தைப் பார்த்த பிறகு அவர் வந்து தாராளமாக

அன்று  "பாட்ஷா" படத்தை தணிக்கைக்காகப் பார்த்தார்கள். நடந்தது எதுவும் தெரியாமல் ரஜினி ச்ங்கு சென்றார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும், எதுவும்  பேசாமல் சென்றுவிட்டார்.  படம்  முடியும் தறுவாயில் சென்று தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு வணக்கம் சொன்னார்.   முத்து’, ‘அருணாசலம்’, ’படையப்பாஆகிய படங்களை ஞான ராஜசேகரனின் குழு  பார்த்தபோது ரஜினி அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதுமட்டுமா? "இந்த அதிகாரி இருக்கும்வரை அவர் கொடுக்கும்கட்களை தட்டாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்பீலுக்குப் போகாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். எங்களைச் சந்திக்கலாம். அது அவரது உரிமையும்கூடஎன்றார்.

 

Wednesday, April 5, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -63

 
 சினிமா வாய்புத்தேடிசென்னைக்கு குடிபெயர்ந்த கண்ணதாசன்,  நடைகர்,கவிஞர், கதாசிரியர்,வசனகர்த்தா, தயாரிப்பாளர்  போன்ர பல அவதாரங்களை எடுத்துள்ளார். என்ராலும் கவிஞர் என்பதே அவரது அடையாளமாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி கவிஞர், போல் கவிஞர்  என்றால் அது கண்ணதாசனை மட்டும்தான்  குறிக்கும்.

சினிமாவால் கோடிகோடியாகச் சம்பாதித்த கவிஞர் சினிமாவில் முதலீடு செய்து   பெருத்த நஷ்டமடைந்தார்.விதி,வீம்பு, பழக்க வழக்கம் எல்லாம் கவிஞருக்கு எதிராக நின்றன.

திரைப்பட பாடலாசிரியராகக் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சொந்தமாக படக்கம்பெனி தொடங்கி படங்களைத் தயாரித்தார். சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் பெரும் சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது.

 கண்ணதாசன் தயாரித்த முதல் படம்‘மாலையிட்ட மங்கை’.  பட உலகில் இருந்து விலகி இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு, இப்படம் புதுவாழ்வு அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோரமாவை, திரை உலகில் அறிமுகப்படுத்திய படம் இதுதான் முதல்பட வெற்றி அடுத்த படக்ட்தைத் தயாரிக்கும் ஆசையைத் தூண்டியது. இரண்டாவதாகத் தயாரித்த ‘சிவகங்கை சீமை’ சிறந்த படம். நடிப்பு, வசனம்,கதை அனைத்தும்  மெச்சும்படியாக  இருந்தன. ஆனால்,  வீரபாணடிய கட்டபொம்மனுக்குப் போட்டியாக  சிவகங்கைச் சீமையிலே  வெளியானதால்  தோல்வியடைந்தது.

 கட்டபொம்மனுக்கும், சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை சித்தரிப்பவை. ‘சிவகங்கை சீமை’யில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, வளையாபதி முத்துகிருஷ்ணன், குமாரி கமலா, எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர்.திரைக்கதை-வசனத்தை கண்ணதாசன் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். இது, கறுப்பு- வெள்ளை படம். படம் தயாரானதும், அதை ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு கண்ணதாசன் போட்டுக்காட்டினார். படத்தைப் பார்த்த ஏவி.எம்., ‘படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், கட்டபொம்மன் படத்துடன் மோதவேண்டாம். அந்த படம் வெளியாகி, இரண்டு  மாதங்களுக்குப் பிறகு வெளியிடுங்கள்’ என்று யோசனை தெரிவித்தார். இதை கண்ணதாசன் கேட்கவில்லை. கட்டபொம்மனும், சிவகங்கை சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளிவந்தன

 சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த இந்த படம், தமிழின் முதல் டெக்னிக் கலர் படம். சிவாஜியின்  உணர்ச்சிகரமான நடிப்பு  வீரபாண்டிய கட்ட பொம்மனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சிவாஜிகணேசனின் அற்புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண்ணைக் கவரும் வண்ணம்- இவற்றால், கட்டபொம்மன் ஓகோ என்று ஓடியது. ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக இருந்தும் கட்டபொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்தது

  ‘சிவகங்கைச் சீமை’ படத்தால் தொண்ணூறாயிரம்ரூபா நஷ்டமடைந்தார்.  அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்.ஆனால், வலிமையான விதிகண்ணதாசனை பற்றியது. மேலும் மேலும் இழுத்தது.    `கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படத்தை ஆரம்பித்த கவிஞர் கவலையில் இருந்து மீள முடியாமல் தவித்தார். கண்ணதாசனின்  நிலமையை அறிந்த    இயக்குநர்  பீம்சிங் உதவி செய்ய முன் வந்தார்.சிவாஜி நடிக்க  ஒரு படத்தை இயக்க  ஒபுக்கொண்டார்.சிவாஜி பிம்சிங்  இணைந்த படங்கள் வெற்ரி பெற்ற காலம் அது.  விதி வலியது.  கண்ணதாசன் கேட்கவில்லை. சந்திரபாபுவை கதாநாயகனாக்கி கவலை இல்லாதமனிதனை எடுத்தார். சிவாஜியை விட அதிக சம்பளத்தைக் கேட்டார் சந்திரபாபு.  கண்ணதாசன் ஒப்புக்கொண்டார்.  சந்திரபாபுவின்  ஏமாற்ரு வேலைகள் பற்ரி பலரும் கண்ணதாசனுகு எடுத்துக் கூறினார்கள். நண்பன் கைவிடமாட்டான் என கண்ணதாசன் நம்பினார்.

நன்றி இல்லாத ஊழியர்கள், பொறுப்பில்லாத பார்ட்னர், எல்லாருமாகச் சேர்ந்து பணத்தைப் பாழாக்கினார்கள். சந்திரபாபு தன் வழக்கப்படி, பேசிய தொகைக்கு மேல் கேட்டுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். அந்தத் துயரங்களையும், அவமானங்களையும் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய `கிளைமாக்ஸ்’ கட்டத்தை, நான்கு மணி நேரத்தில் எடுத்தார்கள்>முழுமுதற்காரணம் சந்திரபாபு.

தான் அனுபவித்த துயரங்களை கண்ணதாசன் சுயசரிதையில் சொல்லியுள்ளார்.

அன்று காலை ஏழு மணிக்கு ‘ஷூட்டிங்.’ எடுக்கப்பட வேண்டியதோ ‘கிளைமாக்ஸ்’ கட்டம். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனா அத்தனை பேரும் `செட்’டிற்கு வந்துவிட்டார்கள். பேசிய தொகைக்கு மேல் இருபதாயிரம் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருந்தும் கூட, சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்பதாலே அதிகாலையில் குளிக்கக்கூட இல்லாமல் நானே அவர் வீட்டிற்குப் போனேன். அவர் தூங்குவதாகச் சொன்னார்கள். நான் வெளியில் சோபாவில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, பையனைக் கூப்பிட்டு, ‘சந்திரபாபு எழுந்துவிட்டாரா?’ என்று கேட்டேன்.

‘அவர் பின்பக்கமாக, அப்பொழுதே போய்விட்டாரே’ என்றான் பையன். இந்த அவமானம் மட்டுமல்ல. படம் என்ன ஆகுமோ என்ற பயம், கடன்காரர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்ற கவலை – எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டன. பிறகு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும், அண்ணன் டி.எஸ்.பாலையா அவர்களும் காரை எடுத்துக்கொண்டு, சந்திரபாபுவைத் தேடி அலைந்ததை என்னால் மறக்கமுடியாது. 1960 செப்டம்பர் மாதம் படம் வெளியானபோது என்னை கடன்காரனாக நிறுத்தின.

அன்றைய கணக்குப்படி ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன். பின்நாளில் வட்டி ஏறி, ஏழு லட்சமாகப் பரிணமித்தது. தோல்விகளையும், துயரங்களையும் தாங்கிக் கொள்வதில் எனக்குப் பழக்கம் உண்டு; சிறு வயதில் இருந்தே அந்த அனுபவம் உண்டு. ஆகவே, `கவலை இல்லாத மனிதன்’ படத்தின் தோல்வி என்னை விரக்தி அடையச் செய்யவில்லை. ஆனால், அது உருவாக்கிக் கொடுத்த ஆறு லட்ச ரூபாய்க் கடன், அடிக்கடி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது என் கம்பெனியின் பெயரில் பதினோரு கார்கள் இருந்தன. ஏழு `பியட்’ கார்கள், இரண்டு `ஹிந்துஸ்தான்’ கார்கள், ஒரு `பிளைமவுத்’ கார், ஒரு `ஸ்டேஷன் வேகன்’ கம்பெனிக்கு எதிரே அந்தக் கார்களை நிறுத்தி வைத்தால் கம்பெனியில் ஏதோ விழா நடப்பது போல் தோன்றும். அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக்கொண்டு, பாக்கி அனைத்தையும் கார் மீது பணம் கொடுத்தவர்களின் வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டேன்.

சில கார்களின் மீது இரண்டாயிரம், மூவாயிரம்தான் பாக்கி இருந்தது என்றாலும், அந்தக் கார்களை விற்று மீதிப்பணத்தைக் கொடுக்கும்படி அவர்களிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டேன். யார் கொடுப்பார்கள்? அப்படி நாணயமானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஏதோ இரண்டொருவர் இரக்கப்பட்டுக் கொஞ்சத் தொகை கொடுத்தார்கள்; மற்ற அனைத்துமே போய்விட்டன. கம்பெனி வீட்டைக் காலி செய்து, இருந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து வீட்டிலே போட்டேன்.

சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய ஆடையணிமணி உபகரணங்களை எல்லாம் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். வேலையாட்களையெல்லாம் நிறுத்திவிட்டேன். படம் எடுப்பதை நிறுத்திவிட்டேன், கம்பெனியை மூடிவிட்டேன் என்றதும், சுமார் முப்பது கடன்காரர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். 

மூன்று மாதங்களுக்குள்ளாக 34 வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர் வி.பி.ராமனிடம் போனேன். ‘ஒரு வருஷத்துக்குள் பணம் சம்பாதித்து கடனை கட்ட முடியுமா?’ என்று கேட்டார் அவர். ‘முடியும்’ என்றேன். ஒரு பக்கம் கடன் வந்தால், ஒரு பக்கம் வரவு வரவேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி விழுந்தபோது, இந்தப்பக்கம் ஏராளமான படங்களுக்கு சந்தர்ப்பம் வந்தது. நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு, பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று! இவ்வாறு கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

‘கவலை இல்லாத மனிதன்’ படத்துக்குப்பிறகு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த கே.முருகேசனுடன் கூட்டு சேர்ந்து, ‘வானம்பாடி’ என்ற படத்தை கண்ணதாசன் எடுத்தார்.   இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது

ண்ணதாசனுடைய கடனில் ஒரு பகுதியை அடைக்க இப்படம் உதவியது. பின்னர், கோவை செழியனுடன் சேர்ந்து ‘சுமை தாங்கி’ என்ற படத்தைத் தயாரித்தார்.  இந்தப்படமும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

‘மொத்தத்தில் அப்போதெல்லாம் ஏராளமாகப் பணம் புரண்டு விளையாடிற்றே தவிர, கையிலே தங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன். 1962-ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது. அதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் கதை-வசனம் எழுதிய ‘இரத்தத் திலகம்’ என்ற படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பழைய மாணவர் முத்தையா’வாக கண்ணதாசன் தோன்றி, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்று பாடுவார். 1964-ல் மீண்டும் சொந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்டார், கண்ணதாசன்! படத்தின் பெயர் ‘கறுப்பு பணம்’ பாலாஜி, டி.எஸ்.பாலையா, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இப்படத் தில் முக்கிய வேடத்தில் கண்ணதாசனே நடித்தார். படம் சுமாராகத்தான் ஓடியது.

‘கவலை இல்லாத மனிதன்’ அனுபவத்திற்குப் பிறகும் சொந்தப்படம் தயாரித்தது பற்றி கண்ணதாசன் பின்னர் எழுதும்போது, ‘ஒரு தவறு செய்துவிட்டு, அது தவறு செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டார்.

Tuesday, January 31, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 54

ஸ்ரீதரின்  வெற்றிப்படங்களின் வரிசையில்  கதலிக்க நேரமில்லை  முக்கியமானது. ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகிய  இருவரு சினிமாவில் அறிமுகமான படம்.  நகைச்சுவைப்  படமான காதலிக்க நேரமில்லை ரசிகர்களை மகிழ்வித்தது. இயக்குநர் ஸ்ரீதரும், கவிஞர் கண்ணதாசனும்  மிகவும் நெருக்கமான நண்பர்கள். இடைக்கிடை  இருஅவ்ரும் கோபித்துக்கொள்வார்கள்.  பின்னர் சமாதானமாகி விடுவார்கள்.

  கவிஞர் கண்ணதாசன்  பலருடன்  முரண்படுவதும் பிறகு சேர்வதும் சகஜம். கவிஞர் சிலருடன் மட்டும்தான் நெருங்கிப் பழகுவார். அதில் இயக்குநர் ஸ்ரீதர் முக்கியமானவர். அடுத்தடுத்த வெற்றிகளுடன் ‘வித்தியாசமான இயக்குநர்’ எனப் பெயர் எடுத்திருந்தார். ‘தேன்நிலவு’ தொடங்கி அவரின் எல்லா படங்களுக்கும் கவிஞர்தான் பாடல்கள் எழுதுவார்.ஸ்ரீதர் கவிஞரைவிட இளையவர். அவரை கவிஞர் ‘ஸ்ரீ’ என்றுதான் அழைப்பார்.

  புதுமுகங்களை வைத்து  இயக்கவுள்ள ஒரு புதுப்படம் தொடர்பாகப் பேச  ஸ்ரீதரரும், கண்ணதாசனும்  சந்தித்தனர்.  ஸ்ரீதரின் உதவி இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் சகோதரர்), புரொடக்‌ஷன் மேனேஜர் ,பஞ்சு அருணாசலம்,அவரின் உதவியாளர்களும்அங்கே  இருந்தனர். கவிஞர், எம்.எஸ்.வி., ஸ்ரீதர் மூவரும் உள்ளே அறையில் அமர்ந்து   பேசிக்கொண்டிருந்தனர். மற்றையவர்கள் வெளியே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 

மலேஷியாவில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார்.அவருடைய  பெயர் ரவிச்சந்திரன்.ரொம்ப ஸ்டைலா  இருக்கான்.  அழகான விமானப் பனிப்பெண்ணச் சந்தித்தேன்.  கானிசனா என்ற அந்தப் பெண்ணிடம் நடிக்க சம்மத்மா எனக் கேட்டேன். ஒத்துக்கொண்டார். லவ் காமெடி க்லந்த கலர் படம் எடுக்கப்போரன்.  "காதலிக்க நேரமில்லை" அதுதான் டைட்டில் என ஸ்ரீதர் சொன்னார்.

மிக இளம் வயதிலேயே புகழ் அடைந்ததால் ஸ்ரீதருக்கு தன்னம்பிக்கை அதிகம். அது அவரின் பேச்சிலேயே எதிரொலிக்கும். அது அகந்தையோ, திமிரோ கிடையாது. ஆனால், சமயங்களில் அது எதிரில் உள்ளவர்களைக் காயப்படுத்திவிடும். அன்றும் அப்படி ஆரம்பித்திருக்கிறார். ‘என்னைத் தவிர இந்த ஷாட்டை வைக்கிறதுக்கு எவன் இருக்கான், ஒரு பயலைச் சொல்லுங்க கவிஞரேஎனச் சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் ஸ்ரீ, நீ திறமையானவன்...’ என, கவிஞர் பாராட்டியிருக்கிறார். பிறகு, போகப்போக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோபமாக அறையில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதர். ‘சொந்தப் படம். ஏன் புதுமுகங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்குற?என கண்ணதாசன்  கேட்டபோகு. ஸ்ரீதருக்கு கோபம் வந்து விட்டது.  நான் நினைச்சா எது வேணும் னாலும் பண்ணுவேன். எனக்கு எவனும் தேவை இல்லைர்ன ஸ்ரீதர் சத்தமாகச் சொன்னார்.

 நான் வேணாமா, விஸ்வநாதன்கூட வேணாமா?’என்ரு கணதாசன் கேட்டார்.

 நீங்க ரெண்டு பேரும் பெரிய பக்கபலம்தான். ஆனா, நீங்க இல்லைனாக்கூட என்னால படம் எடுக்க முடியும்ஸ்ரீதர் கோபத்துடன் பதிலளித்தார்.

 அப்படின்னா நாங்க இல்லாம இந்தப் படத்தை நீ எடுத்துப்பாரேன் என்று கண்னதாசன் விளையாட்டாகச் சொன்னார். ஸ்ரீர் கோபப்பட்டு  அறையை விட்டு   கோபத்துடன் வெளியேறினார்.  கண்ணதாசன்  கோபப்படாமல் சிரித்தபடி அமைதியாக  இருந்தார்.

காதலிக்க நேரமில்லை படக்தின்  படப்பிடிப்பு ஒரு வாரத்தில்  பொள்ளாச்சியில் நடைபெற்றது. பாடல் தயாராகவில்லை.  திடீரென சித்ராலய கோபுவை அழைத்த   ஸ்ரீதர், நீ போய் கவிஞர்கிட்ட கதையைச் சொல்லி பாடல்களை ரிக்கார்ட் பண்ணிட்டு வந்துடுஎன,  அனுப்பினார்.  அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டர்கள். கண்ணதாசனும், எம்.எஸ்.விச்வநாதனும் வேண்டாம் எனக் கூரியவர கண்னதாசனிடம் ஒருவரைத் தூது விட்டார்.    ஒரே ஒரு பாட்டு மட்டும் கண்டிப்பா இந்த சிச்சுவேஷனுக்கு வரணும். மத்ததை உங்க இஷ்டத் துக்கு எழுதச் சொல்லிட்டார்என சித்ராலயா  கோபு சொன்னார். கதை, திரைக்கதை   கோபு. காமெடி ஏரியாவில் கோபு  கில்லாடி.

வெறும் நான்கு நாட்களில் ஏழு பாடல்களை எழுதிக் கொடுத்தார் கவிஞர். அதில் வந்தவிஸ்வநாதன் வேலை வேணும்...’ மட்டும்தான் சிச்சுவேஷனுக்கு எழுதியது. மற்ற பாடல்கள் எல்லாம்இந்தப் பாட்டை இங்கே வெச்சுக்கலாம், அதை அங்கே வெச்சுக்கலாம்எனக் கவிஞரும் கோபுவும் முடிவு செய்தவை. ஒலிப்பதிவு முடிந்து    பாடல்களைக் கேட்டுவிட்டு ஸ்ரீதர் துள்ளிக் குதித்துவிட்டார். ‘படம் சூப்பர் ஹிட். பிச்சிக்கிட்டுப் போயிடும். அந்தாளு ஞானிய்யா. ‘நான் இல்லாம நீ நிக்க முடியுமா?’னு சபதம்  போட்டான். அது உண்மைதான்.. இப்பதான்யா எனக்குப் புரியுது. இப்ப சொல்றேன். நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்ஸ்ரீ தரின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

சந்தோஷ மிகுதியால் கவிஞருக்கு ட்ரங்க் கால் புக்பண்ணி பேசினார் ஸ்ரீதர். ‘நீங்க பொள்ளாச்சிக்குப் புறப்பட்டு வரணும். நாலு நாளாவது என்கூடத் தங்கணும்என்றார்.  கவிஞர்  வேண்டாம் என  புறகணித்தவர் அவரை அன்புடன் அழைத்தார்.  கண்னதாசன் நான்கு நாட்கள்  பொள்ளாச்சியில் தங்கி  ஸ்ரீதரை உற்சாகப்படுத்தினா    

60-களில் வந்த படம், ‘சாரதா’. அந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர்தான் எழுதினார். படப்பிடிப்பும் முடிந்தது. படத்தைப் போட்டுப்பார்த்த பிறகு ஒரு பாட்டு சேர்த்தால் நன்றாக இருக்குமே என நினைத்து இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் கவிஞர் ஊரில் இல்லை. படம் வெளியாக வேண்டிய   நெருக்கடி என்பதால் பாடல் அவசரமாகத் தேவைப்பட்டது.  கவிஞர் வெளியூர் சென்று விட்டார் என அவரது உதவியாளர் பஞ்சு அருணாசலம் தெரிவித்தார். அவசரமாகப் பாடல் தேவை என்பதால் படலை எழுதும்படி இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பஞ்சு அருணாசலத்திடம்   கூற்னார்.  பஞ்சு அருணாசலம் மறுப்புத் தெரிவித்தார். கவிஞரிடம் நன் சொல்கிறேன் பாட்டை எழுது என கே.வி.மகாதேவன் வற்புறுத்தினார். தயக்கத்துடன் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்  இன்றுவரை திருமண வீட்டின் தேசிய கீதமாக  ஒலிக்கிறது. அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாக பலர்  இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.  

மணமகளே மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்துவைத்து வா வா...’ என்ற அந்தப் பாடல்  பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஈஸ்ட்மென்கலரில் வெளியான முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். படம் தெலுங்கில் பிரேமிஞ்சி சூடு என்ற பெயரிலும், இந்தியில் பியார் கியே ஜா என்றும், கன்னடத்தில் ப்ரீத்தி மது தமாஷே நோடு என்றும், மராத்தியில் தூம் தாடகா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வசூல் வேட்டையினை நடத்தியது. தொடர்ந்து 175 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது.

ஆனால் இத்தனை சாதனைகளுக்கு முன்னாலும் பெரிய போராட்டத்தினையே இயக்குனர் ஸ்ரீதர் சந்தித்து இருக்கிறார். முதல் பிரச்சனை பூஜையில் துவங்கியது. ஸ்ரீதரின் ஆசையின்படி ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் மகனை கேமராவினை ஆன் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், பூஜை துவங்கிய நேரத்தில் வின்செண்ட் மகன் செட்டில் இல்லை. பூஜை செய்ய வேண்டிய ஐயரும் இல்லை.

இதனால் இயக்குனர் ஸ்ரீதரே சாமிக்கு ஆரத்தி எடுத்திருக்கிறார். ஆனால் அதுவும் அணைந்து விட்டதாம். இப்படி தொடர் தடங்கலால் படக்குழு அதிர்ந்துள்ளது. என்ன தொடர் அபசகுணமாக உள்ளதே எனப் பேசப்பட்டதாம். படப்பிடிப்பு துவங்கினால் ஒரு காட்சியில் கேமராவின் பெல்ட்டும் அருந்து விழுந்து விட்டதாம். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் இந்த பிரச்சனைகளால் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பினை நடத்தினார். அவர் உழைப்பே படத்தினை வெற்றி வழிக்கு அழைத்து சென்றது.