Wednesday, May 30, 2018

ஐபிஎல்லில் விருதுகளை அள்ளிய ரிஷாப் பந்த்

   அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் கேப் -
பஞ்சாப் அணி வீரரான ஆந்தரே டை 14 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்தினார். சிறந்த பந்து வீச்சு 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதற்கு முன் வென்றோர்
2008 - சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 22 விக்கெட்கள்
2009 - ஆர்பி சிங் (டெக்கான்) - 23
2010 - பிரக்யான் ஓஜா (டெக்கான்) - 23 விக்கெட்கள்
2011 - லசித் மலிங்கா (மும்பை) - 28  விக்கெட்கள்
2012 - மார்னே மார்க்கல் (டெல்லி) - 25 விக்கெட்கள்
 2013 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 32 விக்கெட்கள்
2014 - மோகித் சர்மா (சிஎஸ்கே) - 23 விக்கெட்கள்
 2015 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 26 விக்கெட்கள்
2016 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 23 விக்கெட்கள்
2017 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 26 விக்கெட்கள்

  அதிக சிக்சர் அடித்த வீரருக்கான -
 ரிஷப் பந்த் (டெல்லி)   14 ஆட்டங்களில் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
  வோடபோன் அதிவேக அரைசதம் விருது
பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ஓட்டங்கள் அடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 6
  டாடா நெக்சான் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது -
சுனில் நரேன் (கொல்கத்தா) இந்த சீசனில் மிகச் சிறந்த ஸ்டிரைக்கிங் ரேட் உள்ள வீரருக்கு கோப்பையும் டாடா நெக்சான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

  எப்பிபி ஸ்டைலிஷ் வீரர் - ரிஷப் பந்த் ரூ.10 லட்சம், கோப்பை வழங்கப்பட்டது. டிவி வர்ணனையாளர்கள் தேர்வு செய்தனர்.
  பேடிஎம் பேர் பிளே விருது - மும்பை அணி.

  மிகச் சிறந்த வளர்ந்து வரும் வீரர் - ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையை டெல்லி அணியின் ரிஷப் பந்த் வென்றார்.
11. மோஸ்ட் வேல்யுபவல் பிளேயர் - சுனில் நரேன் (கொல்கத்தா) ரூ. 10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதற்கு முன் வென்றோர்
2008 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)
 2009 - ஆடம் கில்கிறிஸ்ட் (டெக்கான்)
2010 - ஜாக்ஸ் காலிஸ் (பெங்களூர்)
2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)
 2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)
2013 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)
2014 - கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்)
2015 - ஆந்தரே ரசல் (கொல்கத்தா)
2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) 2017 - பென் ஸ்டோக்ஸ் (புனே)

ஐபிஎல் 2018 சாம்பியன்


சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்றது. கப்டன் கூல் டோனி தலைமையிலான அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ரூ.20 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சம்பியனானது.   வீரர்கள், பயற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது  
இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 - மும்பை இந்தியன்ஸ்
2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 2015 - மும்பை இந்தியன்ஸ்
2016 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 - மும்பை இந்தியன்ஸ் 1. ஐபிஎல்
 2018 சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
 

 இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி -
 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.  
 இதற்கு முன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி
 2008 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2009 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2010 - மும்பை இந்தியன்ஸ்
2011 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2012 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2013 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2014 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 2015 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2016 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
 2017 - ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ்

அதிக ஓட்டங்கள் குவிப்புக்கான ஒரேஞ்ச் கேப்
 கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்) ஹைதராபாத் அணியின் கப்டன் ஷேன் வில்லியம்சன் 17 ஆட்டங்களில் 735 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 8 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்சம் 84 ஓட்டங்கள். ரூ.10 லட்சமும்  கிண்ணமும்  வழங்கப்பட்டது.

இதற்கு முன் வென்றோர்
2008 - ஷான் மார்ஷ் (பஞ்சாப்) - 616 ஓட்டங்கள்
2009 - மேத்யூ ஹேடன் (சிஎஸ்கே) - 572 ஓட்டங்கள்
2010 - சச்சின் டெண்டுல்கர் (மும்பை) - 618 ஓட்டங்கள்
2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 608 ஓட்டங்கள்
2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 733 ஓட்டங்கள்
 2013- மைக்கேல் ஹசி (சிஎஸ்கே) - 733 ஓட்டங்கள்
 2014 - ராபின் உத்தப்பா (கொல்கத்தா) - 660 ஓட்டங்கள்
2015 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 562 ஓட்டங்கள்
2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) - 973 ஓட்டங்கள்
 2017 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 641 ஓட்டங்கள் 

Tuesday, May 29, 2018

உலகக்கிண்ணத்தில் விளையாடாத வீரர்கள்

 
உலகக்கிண்ண உதைப்நதாட்டத் திருவிழா ஜூன் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதிவரை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. 32  நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியில்  விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக 23 வீரர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல வீரர்களில் பெயர் இறுதிப் பட்டியலில் இல்லாமையால்  அவர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிறுவயதில் பயிற்சி பெறும்போது சிறந்த விளையாட்டு வீரனாக வரவேண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவு சகலரின் மனதிலும் தோன்றும். தேசிய அணியில் இடம் பிடித்து விட்டால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடவேண்டும் என்ற உத்வேகம் எழும். பயிற்சியாளர் எடுக்கும் அதிரடியான முடிவு விளையாட்டு வீரரின் கனவைச் சிதைத்துவிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.  கடந்தகாலங்கலைப் போலவே பிரபலமான சில வீரர்களை பயுற்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர்

உலகக்கிண்ண்ண தகுதிகாண் போட்டியில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களின் அண்மைக்கால செயற்பாடு திருப்திகரமாக இல்லாமையால் அவர்கள் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பயிற்சியாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக சிறந்தமுறையில் விளையாடும் வீரர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர். அணிக்குத் தேவையான சில வீரர்கள் காயம் காரணமாகத் தவிர்க்கப்பட்டுள்ளனர். இதனால் முக்கியமான வீரர்கள் இல்லாத அணியை எதிர்கொள்ளும் அணி வீரர்கள் மனதளவில் உற்சாகமடைவார்கள்.  தனது மனதைக் கவர்ந்த வீரர் இல்லாத குறையை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தனது நாடு அல்லது தான் விரும்பும் நாடு உலகக்கிண்ணத்தைப் பெறவேண்டும் என்பதே ஒரு ரசிகனின் விருப்பமாகும்

  சம்பியன் லீக் இறுதிப்போட்டியில் தோளில் காயமடைந்த எகிப்து அணித்தலைவர் முகமது சாலா உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவது சந்தேகம்.  இதனால் எகிப்துக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட பிறேஸில் அணித் தலைவர் நெய்மர் பெப்ரவரிக்குப் பின்னர் விளையாடாததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெய்ன்

உலகின் பிரபலமான கிளப்களுக்கான  விளையாடும் ஸ்பெய்ன் வீரர்கள் அந்த நாட்டு தேசிய அணியிலும் இடம் பிடித்துவிடுவார்கள். ஸ்பெய்ன் பயிற்சியாளர் ஜுலன் லொபடிகியு அறிவித்த உலகக் கிண்ண வீரர்களில் முக்கியமானவர்களின் பெயர் இல்லமையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்


  ஸ்பெயினின் இளம் ஸ்ட்ரைக்கர் அல்வாரோ மொராட்டா.  கடந்த வருடம் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக அசத்தி வந்த 24 வயதான மொராட்டாவை,அதிக எதிர்பார்ப்புகளோடு வாங்கியது இங்கிலாந்தின் முக்கியமான கிளப்பான  செல்சீ. ஆனால், ஆரம்பத்தில் கெத்து காட்டி கோல்கள் அடித்த அவரால்  சீசனின் இறுதிவரை அந்த ஃபார்மை தக்கவைக்க முடியாமல் போக,  லீக்கில் வெறும் 11 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார்.  எப். கிண்ண இறுதிப்போட்டியிலும் கடைசி நேரத்தில் பதில் வீரராகக் களம் இறக்கப்பட்டார். இதனால் உலகக் கிண்ண அணியில் இருந்து அவர் கழற்றிவிடப்பட்டார்..

மொராட்டாவைப் போலவே செல்சீ அணிக்காக விளையாடிவரும் அனுபவ மிட்ஃபீல்டர்களான  செஸ் ஃபேப்ரிகாஸ், பெட்ரோ  மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் யுவான் மாடா ,ஆண்டர் ஹெரேரா, அர்செனல் இளம்புயல் ஹெக்டர் பெல்லரின் இபார்சிலோனாவின் 'வெர்சடைல்' செர்ஜி ராபெர்டோ ஆகியோரும்  உலகக்கிண்ண அணியில் இடம் பெறவில்லை.
இங்கிலாந்து

  இங்கிலாந்தின் பாதுகாப்பு அரணான கோல்கீப்பர் ஹார்ட் உலகக்கிண்ண அணியில்  சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஹார்ட் துடிப்பிடன் விளையாடி பல வருடங்களாகிவிட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.இந்த சீசனில் கடன் அடிப்படையில் வெஸ்ட் ஹாம் அணிக்கு 19 போட்டிகளில் விளையாடிய ஹார்ட் அங்கும் தனது திறமையை நிரூபிக்கத் தவறியதால் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் கெரத் சவுத்கேட் அவரை அணியில் சேர்க்கவில்லை.

பிறேஸில்

உலகக்கிண்ண ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் முதன்மையானது பிறேஸில். உலகின் சிறந்த ரைட் பேக். பிரான்சின் லீக் ஒன் சாம்பியனான  பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிவரும் 35 வயதான டேனி ஆல்வஸ், டிஃபெண்டர். டிஃபென்ஸ் மட்டுமல்லாமல், அட்டாக்கிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர்.   ஃபிரெஞ்ச் கப்  இறுதிப் போட்டியில்  முழங்காலில் காயம் அடைந்த டேனி ஆல்வஸ், ஒரு மாதத்துக்கும் மேல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். எனவே, 2006 முதல் பிறேஸில்  தேசிய அணியில் தவறாமல் இடம் பிடித்துவரும் அவர்இ வேறு வழியின்றி உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியதால்  பிறேஸில் ரசிகர்கள்  வருத்தமடைந்துள்ளனர்.. அவரைப் போலவே, மற்றொரு சிறந்த டிஃபெண்டரானஇ செல்சீயின் டேவிட் லூயிஸின் பெயரும் பிறேஸில் பயிற்சியாளரான டிடே அறிவித்த இறுதி வீரர்கள் பட்டியலில்  இடம் பெறவில்லை

ஆர்ஜென்ரீனா
 
2014 உலகக்  கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் இம்முறை சம்பியனாகும் கனவில் இருக்கிறது ஆர்ஜென்ரீனா. இன்டர் மிலன் கப்டனான மாரோ இகார்டியை  பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்போலி புறக்கணித்திருப்பது  பலவித விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாரோ இகார்டி, 29 வயதான ஸ்டிரைக்கர். இன்டர் மிலன் அணியின் கப்டன். இத்தாலியின் சீரி தொடரில், 33 போட்டிகளில் விளையாடி 29 கோல்கள் அடித்துள்ள அவர், இந்த சீசனின் இன் ஃபார்ம் ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர்; தொடரின் டாப் ஸ்கோரரும் அவரே தான். ஆனால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு மாரோ இகார்டிய தகுதியற்றவர் என சம்போலியால்   நிராகரிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஆர்ஜென்ரீனாவின் முன்னிலை கோல்கீப்பரான  செர்ஜியோ ரோமெரோ, இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும்  திடீரென அவர் காயத்தால் விலகியுள்ளது ஆர்ஜென்ரினா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெல்ஜியம்

  2014 உலகக்  கிண்ணப் போட்டியில்  `black horses'  என வர்ணிக்கப்பட்ட அணி பெல்ஜியம். அதற்கேற்ப காலிறுதி வரை முன்னேறியது. ஆனால்இ இம்முறை அந்த அணியின் மிட்ஃபீல்டர் நெய்ன்கோலன் காரணமே இல்லாமல் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியில் சர்வதேச போட்டியில் இருந்து  ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துவிட்டார் அவர்.
30 வயதான ரட்ஜா நெய்ன்கோலன், இத்தாலி நாட்டு கிளப்பான ரோமாவின் முக்கியமான வீரர்களில்  ஒருவர். சாம்பியன்ஸ்லீக் தொடரின் அரையிறுதி வரை ரோமா முன்னேற  முக்கிய காரணமாகவும் இருந்தவர். ரோமாவுக்காக இந்த சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவருக்கும்,பெல்ஜியத்தின் பயிற்சியாளரான ராபர்டோ மார்டினெஸுக்கும் இடையில் நல்லுறவு இல்லாததுதான்  இந்த உலகக் கிண்ணத்  தொடரிலிருந்து நைங்கோலன் வெளியேற்றப்படக் காரணமே.

பிரான்ஸ்

1998 உலகக் கிண்ண சாம்பியனான ஃபிரான்ஸ், இந்தமுறை யும்   சம்பியனாகும்  முனைப்பில் உள்ளது ஃபிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்காம்ப்ஸ் அறிவித்த இறுதி வீரர்கள் பட்டியலில்  பல முக்கியமான மூத்த வீரர்களின் இடம் பெறவில்லை.. 

அலெக்சாண்ட்ரே லக்கஸெட், சென்ற வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு ஃபிரான்ஸின் ஒலிம்பிக் லியானிலிருந்து, இங்கிலாந்தின் அர்செனலுக்கு பறந்த 26 வயது ஸ்டிரைக்கர். ஆனால், ஃபிரான்ஸில்  அவருக்கு இருந்த மதிப்பு இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. எப்போது இங்கிலாந்துக்கு வந்தாரோ அப்போதே அவரின் உலகக் கிண்ணக் கனவுகளும் கலையத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால்  பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் 32 போட்டிகளில் வெறும் 14 கோல்கள் மட்டுமே அடிக்க,உலகக் கிண்ண  வாய்ப்பு பறிபோனது.

அதேபோல், மான்செஸ்டர் சிட்டி அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 'காஸ்ட்லி டிஃபெண்டர்' 23 வயதான அய்மெரிக் லபோர்டேவுக்கும்    அணியில் இடமளிக்கவில்லை ஃபிரான்ஸின் பயிற்சியாளரான  டெஸ்காம்ப்ஸ். மேலும், மான்செஸ்டர் யுனைடெட்டின் அந்தோணி மார்ஷியல்,ரியல் மாட்ரிட்டின் நம்பர் 9 கரிம் பென்சிமா, யூரோ நாயகன் டிமிட்ரி பயட் ஆகியோரும் கூட இந்த உலகக்  கிண்ணப் போட்டியில்  விளையாடப் போவதில்லை.

போத்துகல்

ஹரியல் மாட்ரிட் சூப்பர்ஸ்டார்'  கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான  போத்துகல்  அணியிலும் பல  முன்னணி வீரர்கள் இடம் பிடிக்கவில்லை.  2016 ல், யூரோ கிண்ண சம்பியனான போத்துகல் அணியிலிருந்த பல முக்கியமான அனுபவம் வாய்ந்த  இளம் வீரர்கள்இ இந்த உலகக் கிண்ண வீரர்கள்  பட்டியலில் இல்லை.  

யூரோ கப் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ரெனாடோ சான்ச்செஸும் ஒருவர். அந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வாங்கியதும் அவரே. ஜேர்மனியின் பேயர்ன் முன்ச் அணியிலிருந்து லோன் மூலம் இங்கிலாந்தின் ஸ்வான்சீ அணிக்கு வந்த மிட்ஃபீல்டரான சான்செஸ் அங்கு தனது திறமையை வெளிப்படுத்தாமையால்  இப்போது உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு பறிபோய்விட்டது.

. அதேபோலவே, யூரோ கப் இறுதிப்போட்டியில்  வெற்றிக்கான கோல் அடித்த ஹசூப்பர் ஹீரோ' எடரு, போர்த்துகல் அணியின் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, போர்த்துகலின் அனுபவ வீரர்கள் நானி ,பார்சிலோனா வீரர்களான ஆண்ட்ரே கோமெஸ், நெல்சன் செமெடூ ஆகியோரும் இந்த உலகக் கிண்னப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டனர்.

பெரு

பெரு அணியின் கப்டன் பாவ்லோ கரேரா போதை மருந்து விவகாரத்தில் சிக்கியதால்    உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை. பெருவின் ஹஆல் டைம்' டாப் ஸ்கோரரான அவர்,கடந்த ஒக்டோபரில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.  ஃபிஃபாவின் ஒரு வருட தடையை அப்பீல் செய்து குறைத்த அவர், ஆறு மாதங்கள் விளையாடத் தடைபெற்ற நிலையில்,பின்னர் அந்த தடையை 14 மாதங்களாக நீடித்து தீர்ப்பளித்தது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (சிஏஎஃப் . இதனால் பெருவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது 

  உலகக் கிண்ணப் போட்டியில்  விளையாடும்  வாய்ப்பை இழந்தாலு  இவர்கள் அனைவருமே  தங்கள் அணிகளின் வெற்றிக்காகவும் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியில் தங்களது அணியை வெற்றிபெறவைத்து சம்பியனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  அணியில் இடம்பெறக் கடுமையாக உழைத்தவர்கள்.  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பறிகொடுத்த இந்த வீரர்கள். சம்பியன் கிண்ணத்தை முத்தமிடும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.