Showing posts with label ஐபிஎல்2015. Show all posts
Showing posts with label ஐபிஎல்2015. Show all posts

Monday, May 25, 2015

ஐபிஎல் விருதுகள்


ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41  ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள் மற்றும் பரிசுகள் பற்றிய ஒரு பார்வை:


சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.

 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562  ஓட்டங்கள் விளாசியிருந்தார்.

   அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.


 அதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.

 சிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439  ஓட்டங்கள் வாரிக் குவித்தார்.
 மேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.

இறுதி போட்டியில் அதிக சிக்சர் அடித்தவருக்காக தனி விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் கெய்ரன் பொல்லார்ட் தட்டிச் சென்றார். அவர் 3 சிக்சர்கள் விளாசியிருந்தார்.




   வம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும்  கப்டன் டோனி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.

   ஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.

 கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.
 

Sunday, May 17, 2015

முதல் இடத்தில் சென்னை

  
பஞ்சாப்புக்கு எதிராக போட்டியில் ஏழு விக்கெற்களால் வெற்றிபெற்ற சென்னை  முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன் பிளேஓவ் போட்டியில் விளையாடும் முதல்  அணியாக தெரிவானது. மொஹாலியில்  நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்பில்   மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஸ்மித்,மோகித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக ஹஷி நெஹ்ரா ஆகியோர்  சேர்க்கப்ப்ட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கப்டன் பெய்லி துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தார்.  பஞ்சாப்பின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் சகாவும் வோரவும் சுமாராக விளையாடினர்.சென்னையின் பந்துவீச்சும் களத்தடுப்பும் பஞ்சாப்பை தடுமாற வைத்தது.13.5 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 78 ஓட்டங்களை எடுத்தது பஞ்சாப். பெய்லி மக்ஸ்வெல்,மில்லர் என எதிர்பர்த்த அனைவரும் விரைவாக வெளியேறினர். ஏழாவது விக்கெற்ரில் இணைந்த அக்சர் படேல், ரிஷி தவான்   ஆகியோர் பஞ்சாப்பை காப்பாற்ரினர்.இவர்கள் இருவரும்4.1 ஓவர்களில் 44 ஓட்டங்கள் அடித்தனர். படேல் 32 ஓட்டங்கள் எடுத்தார். தவான் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள் எடுத்தார் நெஹி இரண்டு விக்கெற்கள் கைப்பற்றினார்.பஞ்சாப் 20 ஓவர்களில் ஏழுவிக்கெற்களை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தது.

131 என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கியசென்னையின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹஷி ஒரு ஓச்சத்துடனும் மக்குலம் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். ஏழாவது விக்கெற்றில் இணைந்த டுபிளசிஸ்,ரெய்னா ஜோடி வெற்றியை நெருங்கியது. டுபிளசிஸ் 55 ஓட்டங்களி ஆட்டம் இழந்தார்.ரெய்னா டோனி ஜோடி 32 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. ரெய்னா 45 டோனி 25 ஓட்டங்கள் அடித்தனர். 16.4 ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து 134 ஓட்டங்கள் அடித்த சென்னை ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.  நெஹி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.அக்சர் படேலை அவுட்டாக்கிய பிராவோ, .பி.எல்., அரங்கில் 1000  ஓட்டங்கள், 99  விக்கெற்களைவீழ்த்திய முதல்ஆல்-– ரவுண்டர்ஆனார். இதுவரை 88 போட்டியில் 1134  ஓட்டங்கள், 99  விக்கெற்களை  வீழ்த்தியுள்ளார்.             

பஞ்சாப் வீரர் குர்கீரத் சிங்கை அவுட்டாக்கிய சென்னை அணி  கப்டன் டோனி, .பி.எல்., அரங்கில் அதிகஸ்டம்பிங்செய்த விக்கெற்  கீப்பர்களில், தினேஷ் கார்த்திக்கை (119ல், 23 ‘ஸ்டம்டு’) சமன் செய்தார். அடுத்த இடத்தில் கோல்கட்டாவின் உத்தப்பா (119ல் 22) உள்ளார்

கடந்த ஐபிஎல்லில் 11 ப்போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடந்த பஞ்சாப் 22 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. இந்த ஆண்டு மூன்ரு போட்டிகளில் வெற்ரி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து  ஆறு புள்ளிகளுடன்  கடைசி இடத்தில் உள்ளது.


Saturday, May 16, 2015

முதல் இடத்துக்கான போட்டி


ஐபிஎல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது  எட்டு அணிகளும் 13 போட்டிகளில் விளையாடிவிட்டன. டில்லியும் பஞ்சாப்பும் அடுத்த சுற்றை நினைத்துப்பார்க்க முடியாது   பின்தங்கி உள்ளன. ஐந்து வெற்றி எட்டுத்தோல்வி 10 புள்ளிகளுடன் டில்லி ஏழாவது இடத்திலும் மூன்று வெற்றி பத்து தோல்வி ஆறு புள்ளிகளுடன் பஞ்சாப் எட்டாவது இடத்திலும் உள்ளன. இடுத்த போட்டியினால் இவற்றுக்கு எந்த பிரயோசனமும் இல்லை ஆனால் எதிரணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பஞ்சாப்புடனான போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் நிம்மதியாக முதல் இடத்தில்  இருக்கலாம் மாறாக தோல்வியடைந்தால் மற்றைய போட்டிகளின் வெற்றி தோல்வியின் பின்னரே சென்னையின் இடம் உறுதி செய்யப்படும்.முதலாவது போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக192 ஓட்டங்கள் அடித்த சென்னை பஞ்சாப்பை 97 ஓட்டங்களில் முடக்கியது. ஆகையினால் சென்னை ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

   இரண்டாவது இடத்தில் இருக்கும்பெங்களூரும் இதேநிலையில் உள்ளது. டில்லியுடனான போட்டியில்   வெற்றி பெற்றால்  முதல் இடம் அல்லது   தோல்வியடந்தால் காத்திருக்க வேண்டும்   இவை இரண்டும்மோதிய முதல் போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றது. டில்லி 95 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தது..டில்லி வென்றால் பெங்களூரின் நிலை சிக்கல்தான். ஏழுவெற்றி  ஐந்து தோல்வி  மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு 15புள்ளிகளைப் பெற்றது பெங்களூரு.

ஏழு வெற்றி ஆறு தோல்வி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கொல்கத்தாவும் ஆறு வெற்றி ஐந்து தோல்வி மழையால் இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டு 14 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தானும் மோத உள்ளன.ஏழு வெற்றி ஐந்துதோல்வி மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது கொல்கத்தா ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்தராஜஸ்தானுக்கு மழையும் சுப்பர் ஓவரும் சதிசெய்து ஆறாவது இடத்துக்கு தள்ளியது.
191 ஓட்டங்கள் அடித்த ராஜஸ்தானுக்கு பதிலடியாக பஞ்சாப் 191 ஓட்டங்கள் அடித்து சவால் விட்டது. சுப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெங்களூர்  200 ஓட்டங்கள் அடித்தது.மழை காரணமாகா    
  போட்டி கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.இவை இரண்டுக்குமிடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஏழு வெற்றி ஆறு தோல்வி 14 புள்ளிகளைப்பெற்ற ஹைதராபாத்  நான்காவது இடத்திலும் மும்பை ஐந்தாவது இடத்திலும் உள்ளன. வெற்றி பெற்றால் பிளே ஓவ் சுற்றில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகும் முதல் நான்கு  போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அடுத்து  ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் இருக்கிறது.
 இவை இரண்டுக்குமிடையேயான் முதல் போட்டியில் மும்பை வெற்றி பெற்றது.