Showing posts with label பாரதிராஜா. Show all posts
Showing posts with label பாரதிராஜா. Show all posts

Wednesday, April 12, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -64

 தமிழ் சினிமாவில் தனக்கென  ஒரு பாதையை வகுத்து வெற்றி பெற்றவர்  பாரதிராஜா. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அந்த சாதனையை இன்னமும் எவரும் தொட்டுப் பார்க்கவில்லை.

சினிமாவில் தொடர் வெற்றிகளால் பூரித்துப் போன பாரதியாஜாவுக்கு அடுத்த  இரண்டு படங்களும் சறுக்கின.கல்லுக்குள் ஈரம், நிழல்கள் ஆகிய இரண்டு படங்களும் பாரதிராஜாவுக்கு சோதனையாக அமைந்தன. நிழல்கள்  நல்ல படம் என்றாலும் வசூலில்  பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒளிப்பட்திவளர் நிவாஸ், கதாசிரியர்  பாக்கியஜார் ஆகியோர் இல்லாததுதான் பாரதிராஜாவின் தோல்விக்குக் காரணம் என்ர கதை அடிபட்டது. தனது  திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த பாரதிராஜா "அலைகள்  ஓய்வதில்லை" மூலம்  மீண்டும் போற்றப்பட்டார். பாரதிஜா என்ற திறமையாளன்  மீது  மீண்டும்  வெளிச்சம் பாய்ந்தது.

  ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில்பாரதிராஜா   நடித்தார்.  தெலுங்குப் பட உலகில் கொடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும்,  த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்கள். அடுத்ததாக அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில்  ‘நிழல்கள்’ படத்தை தயாரித்து இயக்கினார். நிழல்கள் படத்தின் மூலம்   கதை வசனகர்த்தாவாக  மணிவண்ணனை அறிமுகமானார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை.   ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.‘16  வயதினிலே’ படம் முதல்  பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ்  ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக்  கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.

  நிவாஸ், பாக்யராஜ்  ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப்  பெறவில்லை. பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும்  ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

பாரதிராஜாவின் வெற்றியைப் பார்த்து பிரமித்த  இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் தனக்கொரு பரன் இஅயக்கும் பட்டி கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை பாஸ்கரின்  ‘பாவலர் பிரதர்ஸ்’ நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.

மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட  ‘இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிறிஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.

தனது இரண்டாவது படமான ‘கிழக்கே  போகும் ரயில்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போல ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார்  பாரதிராஜா.புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில் “உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.

சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின்   கண்கள்  அவரைக் கதாநாயகியாக்கியது. திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில் சந்திரிகா பத்தாவதுவகுப்பி படிப்பதாகக் கூரினார்கள். போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார்  பாரதிராஜா.ஒருவாரத்தின் பின்னர்  ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த  நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே  மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்த்தார். நடிப்பதற்கு ஆர்வம்  இல்லாத சந்திரிகவை பரதிராஜாவின்  கமராக் கண் அளவெடுத்தது.


 அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில்  நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து  கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை  முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

 பாரதிராஜாவின் அழைப்பின்  பேரில் சென்னையில் ரஞ்சித்  ஹோட்டலில் சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு சந்திரிகாக் கூட்டிச் சென்றார்பாரதிராஜாவுடன்.

“இவர்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்  அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும் “ஓ… இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாக ‘வாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் ‘ஆர்’ என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகி ‘ரதி’யாகவும் ‘நிழல்கள்’ பட நாயகி ‘ரோகிணி’யாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்த ‘ஆர்’ வரிசையில் ‘ராதா’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.

அலைகள்  ஓயதில்லை படத்தை   திரைப்படம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தில்பார்த்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்  பாரதிராஜாவைப் பாராட்டினார். அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை நடத்தினார். அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கி கெளரவித்தார் எம்.ஜி.ஆர்

Wednesday, January 18, 2023

தெரிந்த சினிமா தெரியாதசங்கதி


 குற்றமும் தண்டனையும்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ ஆகிய நாவல்களின் ஆசிரியர் தஸ்தாவெஸ்கி அவரது உக்டவியாளர் அன்னாவுக்கும்  இடையிலான

 உண்மைக் காதல்தான் முதல் மரியாதை படம்  உருவாகக் காரணமாக இருந்தது. தஸ்தாவெஸ்கிக்கும்  அன்னாவுக்கும் ஏறக்குறைய 40 வயது வித்தியாசம் இருக்கும் .ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை . அவள் இல்லாமல் வாழ முடியவில்லை . தஸ்தாவெஸ்கி இறந்து , 30 வருடங்கள் ஆன பின்பும் கூட அன்னா அவரது நினைவாகவே வாழ்ந்தாள்.  அரசைக் கடுமையாக எதிர்த்து எழுதக் கூடியவர் தஸ்தாவெஸ்கிஅந்த இருவரின் களங்கமில்லா அன்புதான் , `முதல் மரியாதை’ படத்தின் அடிநாதம் . அன்பு என்பது உடலால் வருவதல்ல , மனதால் வருவது . இந்தக் கதையைச் சொன்னதும்

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்.விட்டது .

பாம்குரோவ் ஓட்டலில் வைத்து ஆர்.செல்வராஜிடம் ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து , ‘என் வாழ்வும் தாழ்வும் உன் கையில்தான் இருக்கு …. இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்; ஸ்கிரிப்டாகத் தாருங்கள்’ என்று சொன்னார் .

‘இது எனக்கு எதுக்கு… நீங்க வீட்டை வேற அடமானம் (அப்போது தி.நகரில் உள்ள ஒரு வீட்டை படம் எடுப்பதற்காக பாரதிராஜா அடமானம் வைத்திருந்தார்) வெச்சிருக்கீங்க வேண்டாம்’ என மறுத்தார் ஆர். செல்வராஜ் . . ஒருநாள் அவரை அழைத்து ‘ஸ்கிரிப்ட் ரெடி.. வாங்க’ என்று அழைத்தார் செல்வராஜ் . அன்றே , சென்னையிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஸ்கிரிப்ட்டைப் படித்தார் .

‘நட்புக்கும் காதலுக்கும் இடையே நீ ஒரு கப்பல் ஓட்டியிருக்கே ….. இந்தக் கப்பல் கரை தெரியாத கடலில் மிதக்குது.. கதை சூப்பர்… சூப்பர்!’ என்று, பாராட்டினார் .உடனே , தொலைபேசியில் சித்ரா லட்சுமணனை அழைத்து , படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார் . கதை பிரமாண்டமாக இருந்தது . ஏற்கனவே சிவாஜிகணேசனை ஒரு படத்திலாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த பாரதிராஜாவே சொன்னார் …. ‘நாம சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் …’

நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை ! அவரிடம் போய் பாரதிராஜா , ‘அண்ணே …. இதுதான் படத்தோட ஐடியா , நீங்க நடிச்ச நல்லா இருக்கும்’ என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார் . அப்போது உச்சத்தில் இருந்தார் இயக்குநர் பாரதிராஜா .அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொண்டார். 

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக் கிராமத்தில் படப்பிடிப்பு.. காவிரிக் கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம் . சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம் .எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார் . அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார் . அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட் !

படப்பிடிப்புக் குழுவை விட்டுத் தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார் ….. கிறார் ….. சிகரெட் பாக்கெட் காலியாகிறது .நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி ! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்து விட்டது .

 இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார் . இயக்குநர் சொன்னால் சொன்னதுதான். யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள் .இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார் .நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார் . டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல , தகவல் இயக்குனருக்குத் தெரிவிக்கப்படுகிறது .

தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார்.நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, ‘அண்ணே ….. இதான் எனக்கு வேணும் ! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்’ என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்குத் தயாராகிறார் இயக்குநர் .

நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சி! மேக் அப் , விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார் .

‘அண்ணே, நான் சொல்றேன் …. நல்லா வரும் வாங்க’ , என்று பாரதிராஜா சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது .

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி , ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார் . அப்போதுதான் கவனித்தார்கள். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை . தவறு நடந்துவிட்டது . கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது .

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றார் பாரதிராஜா.. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் பாத்திரம் சிவாஜிக்கு. ‘‘படப்பிடிப்பில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னார் பாரதிராஜா . சிவாஜி ஒரு கணம் ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார் .அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள் . அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார்..  

சிவாஜி், ராதா , வடிவுக்கரசி , சத்யராஜ் , ரஞ்சனி , தீபன் , வீராசாமி , அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள் .  படப்பிடிப்பு ஆரம்பித்த 100 ஆவது நாளில் படம் ரெடியாகிவிட்டது .

இசையமைப்புக்காகப் படத்தை இளையராஜாவிடம் போட்டுக் காட்டினார்கள் .அவர் பார்த்துவிட்டு, `படம் நல்லாயில்ல… இதைத் தூக்கிப் போடச் சொல்லு . தீபன் , ரஞ்சனியை வைத்து வேறு கதையை பாரதிராஜாவைப் பண்ணச் சொல்லு . ஏற்கெனவே கஷ்டத்தில் இருக்காரு . இந்தப் படம் வந்தா மேலும் கஷ்டப்படுவார்’ என்று சொல்லிவிட்டார் கதாசிரியர் செல்வராஜிடம் .இயக்குனர் பாரதிராஜாவுக்குப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

  படத்தைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்கள் … அவர் படம் பார்த்து , முடித்ததும் , ‘இந்தக் குதிரை அதிர்ஷ்டத்தில்கூட ஜெயிக்காது’ என்று சொன்னார்.  ஆனாலும், பாரதிராஜா பயப்படவில்லை …. சோர்ந்து போகவில்லை . இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் .

அப்போது , சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் `சுபாஷினி தியேட்டர்’ இருந்தது . அந்த தியேட்டரில் படத்தைப் போட்டு , படத்தில் பணியாற்றிய மற்றும் நெருக்கமான நண்பர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் படம் பார்க்க அழைத்தார்கள் . அவர்களது கையில் ஒரு பேப்பரைக் கொடுத்துவிட்டார்கள் . படம் பார்த்து முடித்துவிட்டு, அவரவர் கருத்துகளை அதில் எழுத வேண்டும். பெயர் அவசியமில்லை என்று சொல்லப்பட்டது. படத்தைப் பார்த்த பல பெண்கள் `சூப்பர்… பிரமாதம்’ என்று எழுதி விட்டனர் . இப்படியாக , இரண்டு மூன்று முறை வெவ்வேறு ஆட்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள் .

இதன்பின் , படத்தின் மீது பாரதிராஜாவுக்கு மிகப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது .

செல்வராஜும் பாரதிராஜாவும் தாஜ் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . பிறகு, பரிமாறுபவரை அழைத்து பில் கொண்டு வரச் சொன்னார்கள். அவர், `ஏற்கெனவே பணம் கட்டி விட்டார்கள் சார்’ என்றார் .

யார் என்று தேடினால் , அத்தானி பாபு என்கிற கோயம்புத்தூர் விநியோகஸ்தர் . இவர்களுக்காகப் பணம் செலுத்தியிருந்தார் . அவர் படம் பார்த்திருக்கிறார். அவருக்குப் படம் பிடித்திருந்தது .

அவர் பாரதிராஜாவிடம் , `முதல் மரியாதை படத்தை நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று சொன்னார் . பிறகு , ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படத்தை வாங்கி, வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது .

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு ?” என விசாரித்தார்கள் .

அன்றைய நாளில்  25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறார் .

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள் . அவர்கள் கேட்டது , ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட் .

பாரதிராஜா இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த விலை சொன்னார் . 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது . இலாபம் கோடிகளில் கொட்டியது.

Wednesday, August 24, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 31

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் பாரதிராஜாவுக்கென்று தனி இடம்  உள்ளது.  ஸ்ரூடியோவில் முடங்கிக் கிடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. சினிமாவின் ரகசியங்களை வெளியில் பகிரங்கப்படுத்தினால் அதன் தரம் குறைந்து விடும் என பலர் குற்றம் சுமத்தினார்கள். அதை எல்லாம்  உடைத்தெறிந்து பல புதுமைகளை அறிமுகப்படுத்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியபெருமைக்குரியவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்ற பெயர் அவருக்கு சாலப் பொருந்தும்.

கே.ஆர்.ஜியிடம்  உதவியாளராக கே.பாரதிராஜா பணியாற்றிய போது அறிமுகமானவர் சித்ராலட்சுமணன். பத்திரிகையாளர்,பத்திரிகைத் தொடர்பாளர் ஆகிய சித்ராலட்சுமணனுடன்  கே. பாரதிராஜா நெருக்கமாகப் பழக அதிக சந்தர்ப்பம் கிடைத்தது.கே.ஆர்.ஜி யின்  பத்திரிகைத் தொடர்பாளராக சித்ராலட்சுமணன் பணியாற்றியதால்  இருவரும் அலுவலகத்தில் அதிக நேரம் விவாதித்தார்கள்.கதைத்துக் கதைத்து  நடந்து பஸ் நிலையத்துக்குச் செல்வது, பஸ் வரும்வரை கதைப்பது என  இருவரும் உரையாட அதிக சந்தர்ப்பம்  கிடைத்தது.பஸ் நிலையத்தில் நிற்கும்போது "மயிலு" எனும்  பெயரில்  பாரதிராஜா சொன்ன கதையை சித்ராலட்சுமணன் பாராட்டினார். வித்தியாசமான அக்கதை படமாகினால் வெற்றி பெறும் என்பதை  சித்ராலட்சுமணன் கணித்தார். மூன்று மாதங்களின்  பின்னர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு  "மயிலு" படத்தைத் தயாரிக்க முன்வந்தார். "16 வயதினிலே " எனப் பெயரிட்ட அந்தப் படத்தில் கமல்ஹாசன், ஶ்ரீதேவி  ஜோடியாக நடிக்க வேன்டும்  என பாரதிராஜா விரும்பினார். கமலுடன் சித்ராலட்சுமணன் மிக நெருக்கம் என்பதால் அவருடையை உதவியை நாடினார். கமலை  ஒப்பந்தம் செய்வதற்காக சித்ராலட்சுமணனுடன் கே.பாரதிராஜா அருணாசலம் ஸ்ரூடியோவுக்குச் சென்று கதையைப் பற்றிக்கூறியதும்  கமல்  ஒப்புக்கொண்டார்.

பாரதிராஜாவின் அணுகு முறையில் புதியதொரு மாற்றம் உள்ளதை அவதானித்த சித்ராலட்சுமணன் அந்தப் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  சிவசமுத்திரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் 16 வயதினிலே படப்பிடிப்பு நடைபெற்ற போது சென்னையில் இருந்து பத்கிரிகையாளர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்றார் சித்ராலட்சுமணன். பத்திரிகையாளர்களின் மத்தியில்  பாரதிராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு பேசுகையில்,

" இவரை சாதாரண டைரக்டர்  என நினைத்துவிடாதீர்கள்.தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போடும் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கப்போகிறார். பிரபல டைரக்ட்ர்களுக்கு  சவால் விடப் போகிறார்" எனக் கூறினார். அவர் கூறியது போலவே பாரதிராஜாவின் வெற்றி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

  முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து  "செந்தூரப்பூவே " பாடல் காட்சியைப் , வேறு சில காட்சிகளையும் பார்த்த சித்திராலட்சுமணன்  தன்னை மறந்து ரசித்தார்.  அதனைப் பார்க்கும் வரை தயாரிப்பலளராக வேண்டும் என்ற எண்ணம் சித்ராலட்சுமணனுக்கு இருக்கவில்லை.   நான் படம் எடுத்தால் நீக்ன்கள் தான் டைரக்டர் என பாரதிராஜாவிடம் அவர் கூறினார். 16 வயதினிலே பட போஸ்டர்களிப் பார்த்த கமலின் சகோதரர் சாருகாசன் கடுப்பாகினார். முன்னேறிவரும் நடிகரை கோவணத்துடன் படம் எடுப்பதா எனச் சீறினார். கலம் சகோதரனை அமைதிப்படுத்தினார். 16 வயதினிலே   பிரமாண்டமான  வெற்றியைப்  பெற்றது.

"கிழக்கே போகும் ரயில்" படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பாரதிராஜாவிடம் 5000 ரூபாவைக் கொடுத்த சித்ராலட்சுமணன் எனது படத்தின் டைரக்டர் நீங்கள்தான்  என்றார். புதிய முகங்களைப் போட்டு படம் எடுக்கிறேன். படத்தின் ரிசல்ட் தெரிந்த பின்னர் பேசலாம் என்றார் பாரதிராஜா. சித்ராலட்சுமணன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ரிசல்டைப் பற்றிக் கவலை இல்லை  இன்ங்கள்தான் டைரக்டர் என்றார்.

"கிழக்கே போகும் ரயில்" , "சிகப்பு ரோஜாக்கள்"   ஆகிய பாரதிரஜாவின் இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு  பெருவிருந்தாக அமைந்தன.  மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற சொந்த நிறுவனத்துக்காக "புதிய வார்ப்புகள்" படத்தி தயாரித்து இயக்கினார் பாரதிராஜா.  "புதிய வார்ப்புகள்" பட கதாநாயகனுக்காக அப்பாவி இளைஞனைத் தேடிக் களைத்த பாரதிராஜா , தனது  உதவியாளரான கே.பாக்கியராஜை துணிச்சலுடன் கதாநாயகனாக்கினார்.  பாரதிராஜாவின் வேண்டுகோளை முதலில் மறுத்த  பாரதிராஜா பின்னர் ஒபுக்கொண்டார். பாரதிராஜாவின் கண்டு பிடிப்பான பாக்கியாராஜும்  திரை உலகைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் ஆகிய நான்கு படங்களும் வெற்றி பெற்றதால் பாரதிராஜாவின் மீதான எதிர் பார்ப்பு அதிகமாகியது. பாரதிராஜாவின் ஐந்தாவது படமான "நிறம் மாறாத பூக்கள்" வெள்ளி விழாக் கொண்டாடியது. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப்படங்களுடன் அறிமுகமான  இயக்குநர் என்ற பாரதிராஜாவின் சாதனை இன்று வரை நிலைத்துள்ளது.

அலைகள் ஒய்வதில்லை உட்பட பத்துப் படங்களை இயக்கியபின்னர்  சித்ராலட்சுமனனின் காயத்திரி பிலிம்ஸுக்காக மண்வாசனை " படத்தை பாரதிராஜா கையில் எடுத்தார். "மண் வாசனை" படத்தில் நடிப்பதற்காக ராதாவிடம் 40 நாட்கள்  தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கினர் சித்திராலட்சுமணன். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக  இருந்தார். அழைப்பிதழில் ராதாவின் படம் போடப்பட்டிருந்தது. புதிய நடிகர்களை வைத்து படம் எடுக்கலாம் என பாரதிராஜா சொன்னதும்  ஷோபனாவை ஒப்பந்தம் செய்தனர்.

மண் வாசனை" படத்திதின் நாயகி ஷோபனா என்பதை பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டு  பாரதிராஜாவும், சித்ராலட்சுமணனும் பம்பாய்க்குச் சென்று விட்டனர்.  நிறம் மாறாத பூக்கள், கிழக்கே போகும் ரயில் ஆகியன இந்தியில் படமாக்கப்பட்டன. சித்ராலட்சுமணன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர்கள் திரும்பி வந்ததும் ஷோபனா  நடிப்பதற்கு  மறுத்துவிட்டார்.  மாணவியான அவர் நடித்தால் படிப்பு தடைப்பட்டுவிடும் என  தெரிவிக்கப்பட்டது. மூன்றாவதாக தெரிவான ரேவதி கதாநாயகியானார். அப்போது  ரேவதியும் மாணவிதான். தேனிக்கு அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனித்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ரேவது,வினுக்கரவர்த்தி, வை.விஜயா,விஜயன்  போன்றா  நடிகர் நடிகைகளுடன் தொழில் நுட்பக்கலைஞர்களும் அங்கு சென்று விட்டனர். சமையலுக்குரிய  பொருட்கள், பாத்திரங்களுடன் சமையல்காரர்களும் சென்று விட்டனர்.  கதாநாயகன்  இன்னமும் கிடைக்கவில்லை.பாரதிராஜா,சித்ராலட்சுமணன், கலைஞானம் ஆகிய மூவரும் சல்லடை போட்டு கதாநாயகனைத் தேடினார்கள்.நூற்றுக் கணக்கான  இளைஞர்களைப் பார்த்தாகி விட்டது. பாரதிராஜா எதிர்பார்த்த  கதாநாயகன் கிடைக்கவில்லை.  மதுரை மீனாடசியம்மன்  கோவிலைக் கும்பிட்டுவிட்டு பாரதிராஜா கரில் ஏறும்போது பலர் முண்டியடித்து கைகொடுத்தார்கள். அவர்களில்  ஒருவரைக்  காரில் ஏற்றும்படி சித்ராலட்சுமணனிடம்  பாரதிராஜா கூறினார். பாரதிராஜாவின் ஊர்  தேனி என்பதால் அவருக்குத் தெரிந்தவர் என சித்ராலட்சுமணன் நினைத்தார்.

கோட்டலுக்குச் சென்றதும் அந்த இளைஞனை பார்த்துக்கொண்டிருந்த பாரதிராஜா சில கேள்விகள்  கேட்டு சிரி, முறைத்துப் பார் என்றார்.  பின்னர் இவந்தான்யா கதாநாயகன் என்றார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலையல் கடை வைத்திருந்த பாண்டியன் என்ற அந்த இளைஞன் மண் வாசனை படத்தின் கதாநாயகனானார். வெள்ளிவிழா கொண்டாடிய மண் வாசனை மதுரையில் 231 நட்கள்  ஓடியது. மண் வாசனையில் அறிமுகமான பான்டியன் 75 படங்களில் 30 நாயகிகளுடன் நடித்தார்.

Friday, August 1, 2008

பாரதிரஜாவின் கனவு 2

இளையராஜாவின் தமிழ் சினிமா இசையமைப்பாளர் என்ற கனவு நினைவாகும் வேளையில் மின்தடை ஏற்பட்டது. சக கலைஞர் ஒருவர் நல்லசகுணம் என்று நக்கலடித்தார். மின்சாரம் வந்ததும் ரிகேசல் ஆரம்பமாகியது.

இளையராஜா இசையமைத்த பாடல் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டதை போட்டுப் பார்த்தார்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், என ஐந்து நிமிடங்கள் கழிந்த பின்னரும் இளையராஜாவின் இசை கேட்கவில்லை. அப்போது தான் தெரிந்தது ரெக்கோட் ஆகவில்øல என்ற விபரம்.

சற்றும் மனம் தளராத இளையராஜா மீண்டும் தனது கடமையை ஆரம்பித்தார். ஒலிப்பதிவில் திருப்தி இன்மையால் மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு நடைபெற்றது. பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் வெறுத்துப் போய் வெளியேறிவிட்டனர். பஞ்சு அருணாசலம் பொறுமையுடன் காத்திருந்தார். 12 ஆவது முறை செய்யப்பட்ட ஒலிப்பதிவு திருப்தியளித்தது. பல தடை
களுக்கு மத்தியில் இளையராஜாவின் இனிய இசை வெளிவந்தது.

தமிழ் சினிமா இசையில் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்திய பெருமைக்குரியவராக இளையராஜா நோக்கப்பட்டார். அன்னக்கிளி படப் பாடல்களில் மிகச் சிறந்தது எது எனக் கேட்டால் எவராலும் பதிலளிக்க முடியாது. பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன. இளையராஜாவின் இசை தமிழ்த் திரை உலகை கட்டிப்போட்டது. அன்னக்கிளி படத்துக்கு மிகவும் அருமையாக இசை அமைத்த இளையராஜா தன்னைத்தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காது தனது குருவான ஜி.கே. வெங்கடேஷிடம் சென்று அவருக்கு உதவியாளராக கடமையாற்றினார்.

இளையராஜாவின் அன்பு நண்பனான பாரதிராஜாவுக்கு திரைப்படம் இயக்க சந்தர்ப்பம் கிடைத்தது. 16 வயதினிலே என்ற அப்படத்துக்கு யார் இசையமைப்பது என்று தயா
ரிப்பாளரான ராஜ்கண்ணு கேட்டபோது எனது நண்பன் இளையராஜாதான் இசையமைப்பான் என்று கூறினார் பாரதிராஜா. தமிழ்த் திரை உலகில் இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலம். இளையராஜாவைச் சந்திப்பதற்கே மிகவும் கஸ்டமான நேரம் தனது படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்பதைக் கேள்விப்பட்ட ராஜ்கண்ணு மிகவும் சந்தோஷப்பட்டார்.
பாரதிராஜாவும், ராஜ்கண்ணுவும் இளையராஜாவைச் சந்திக்கச் சென்றனர். தனது படத்துக்கு
இசையமைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டதும் எனது சபதத்தை மறந்து விட்டாயா. என்னால் இசையமைக்க முடியாது எற்றார் இளையராஜா.

பாரதிராஜாவின் முதலாவது படத்துக்கு இளையராஜாவின் குருவான ஜி.கே. வெங்க
டேஷ் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்கு ஜி.கே. வெங்கடேஷின்
வேண்டுகோளின் பிரகாரம் நான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறியிருந்தார். இளையராஜா சும்மாதான் சொல்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். இறுதியில் ஜிகே. வெங்கடேஷின் அதட்டலின் பின்னரே பாரதிராஜாவின் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டார்.


16 வயதினிலே படத்தின் கதாநாயகனாக சிவகுமாரைப் போடலாம் என ராஜ்கண்ணு
கூறினார். கமல்தான் பொருத்தமாக இருப்பார் என்று பாரதிராஜா கண்டிப்பாகக் கூறிவிட்டார். கமலின் நடிப்பு 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.


ரமணி
மித்திரன் 30 06 2007

பாரதிரஜாவின் கனவு 1

சென்னைத் தெருக்களில் அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் பாரதிராஜாவும், இளைய
ராஜாவும் அடக்கம். "மயில்' என்ற திரைக்கதைய உருவாக்கிய பாராதிராஜா அதனை
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கழகம் சிறந்த
திரைக்கதைகளுக்கு நிதி உதவி செய்து வந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு
அனுப்பிய விண்ணப்பப்படிவத்தில் கதை இயக்கம் பாரதிராஜா, கமரா நிவாஸ்,
இசை ராஜா என்று குறிப்பிட்டிருந்தார். ராஜா வேறு யாருமல்ல அவர் தான் இளைய
ராஜா.

நிதி உதவி கிடைக்கும். படம் வெளியாகும். அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் தேடிவ
ருவார்கள் என்று பாரதிராஜா காத்திருந்தார். அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
அவருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. தெலுங்கு இசையமைப்பாளரான பெண்டி
யாலா சீனிவாசன் என்பவர் "பட்டாம்பூச்சி' என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகப்
பணிபுரிந்துவந்தார். மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உதவி இசைய
மைப்பாளராகப் பணி புரிந்த கோவர்த்தன் பட்டாம் பூச்சிக்கு உதவியாளராக பணிபுரிந்தார்.

அந்தப் படத்தில் ஓர்கன் வாசிப்பதற்காக இளையராஜாவையும் அழைத்தார் கோவர்த்தன்.
இளையராஜாவின் இசையில் மயங்கிய கோவர்த்தன்,இளையராஜாவுக்கு நிறைய சந்தர்ப்பம் கொடுத்தார். எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கு. இருவரும் இணைந்து இசையமைப்போம். கோவர்த்தன் ராஜா என்று டைட்டிலில்போடுவோம் என்று ஒரு நாள் கோவர்த்தன் இளையராஜாவிடம் கூறினார். இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

பிரபல திரைக்கதாசிரியரான செல்வராஜ் ஒருநாள் இளையராஜாவைத் தேடிவந்து ""டேய் ராஜா உனக்காக பஞ்சு அருணாசலம் சார் கிட்ட கதைத்திருக்கிறேன். வா போய்ப் பார்க்கலாம் என அழைத்துச் சென்றார். பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை செல்வராஜ் அறிமுகப்படுத்தினார்.

இசை அமைத்திருந்தா ஒரு பாட்டுப் படிச்சுக்காட்டு என்று பஞ்சு அருணாசலம் கேட்டார்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பாத்தீங்களா, சுத்தச்சம்பா ஆகிய மூன்று பாடல்களையும் மேசையில் தாளம் தட்டி படித்துக்காட்டினார் இளையராஜா. இளையராஜாவின் பாடலில் சொக்கிப்போன பஞ்சு அருணாசலம் "டியூன் நன்றாக
உள்ளது. இப்பநான் எடுக்கிறபடம் கொமெடிப்படம். நல்லகதை என்றால் உனது டியூன்
வெற்றி பெறும். நான் படம் தயாரித்ததால் நீதான் இசையமைப்பாளர் என்று கூறினார்.

இதே வசனத்தைப் பலமுறை கேட்டதால் இளையராஜா அதனைப் பெரிதாக எடுக்கவில்øல. வழமைபோல ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றினார் இளையராஜா. பஞ்சு அருணாசலம் கதைவசனம் எழுதிய மயங்குகிறாள் ஒரு மாது வெற்றி பெற்றது. ஒருநாள் மிக அவசரமாக வந்த செல்வராஜ் பஞ்சு அருணாசலம் அழைப்பதாகக் கூறி இளையராஜாவை, அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரையும் கண்ட பஞ்சு அருணாசலம், சொன்னாயா என்று செல்வராஜாவைக் கேட்டார். நீங்களே சொல்லுங்கள் என்று செல்வராஜ் கூறினார்.
செல்வராஜ் ஒரு கதை கூறினார். அருமையாக இருக்கு. நான் தயாரிக்கப்போகிறேன்.
நீதான் இசை அமைப்பாளர் என்று பஞ்சு அருணாசலம் கூறினார்.இளையராஜாவும்
சந்தோசப்பட்டார்.கோவர்த்தனும் தானும் இணைந்து இசை அமைப்பதாகக் கூறினார்.
கைராசி, பட்டணத்தில் பூதம் ஆகிய படங்களுக்கு கோவர்த்தன் தனித்து இசை அமைத்தி
ருந்தார். அதனைப்பஞ்சு அருணாசலம் விரும்பவில்லை.நான் இளையராஜாவுக்குத்தான்
சந்தர்ப்பம் கொடுக்கப்போகிறேன் என்றார்.தனது நிலைமையை கோவர்த்தனிடம்
கூறினார் இளையராஜா. இசையமைக்க சான்ஸ் கிடைப்பது மிகவும் கஷ்டம் .ஆகையினால் நீ தாராளமாக இசை அமை என்று கோவர்த்தனன் உற்சாக மூட்டினார்.

பஞ்சு அருணாசலத்தின் படத்துக்கு விஜயபாஸ்கர்தான் வழமையாக இசை அமைப்பார். விஜய பாஸ்கர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. பஞ்சு விஜய
பாஸ்கர் கூட்டணியைப் பிரிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் சஞ்சலப்பட்டு எதற்கு வீண் வம்பு எம்.எஸ்.விஸ்வநாதனைப் போடலாம் என்றார்கள். இளையராஜாதான் இசை அமைப்பாளர் என்பதில் பஞ்சு அருணாசலம் உறுதியாக இருந்தார்.

பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதுவார் என்று கூறினார்கள். கவிஞர் கண்ணதாசன் அவசரமாகச் சிங்கப்பூருக்குச் சென்று விட்டார். அவர் எப்போ வருவார் என்று கேட்டபோது பூஜை முடிந்தபின்னர்தான் வருவார் என்றார்கள். பாடல்களை தான் எழுதுவதாக பஞ்சு அருணாசலம் கூறினார். பூஜை முடிந்து பாடல்பதிவு ஆரம்பமாகும் வேளையில் கரண்ட் கட்டாகியது. இளையராஜாவுக்கு மனதில் இருந்த உற்சாகம் காணாமல் போனது. டோலக் வாசிப்பவர் நல்ல சகுனம் என்றார்.

ரமணி
மித்திரன் 23 06 2007