Saturday, January 5, 2013

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 45



பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்வதுதண்டனைக்குரியகுற்றம். செல்வச்செருக்குமிக்க ஒருவர் தன் மகன் பொறியியலாளராகவரவேண்டும் என்பதற்காக படிப்பில் திறமைமிக்க ஒருவனை தன்மகனின் பெயரில் பொறியியல் கல்லூரியில் படிக்கவைத்து தனது ஆசையை நிறவேற்றும் படம்தான் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தின் கதை.

  பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஜீவாவும், ஸ்ரீகாந்து ஒரே அறையில் தங்குகின்றனர்.பழைய மாணவர்களின் நகைச்சுவைக்காட்சியுடன் ஆரம்பமான நகைச்சுவைக்காட்சிகள் படம் முடியும் வரை தொடர்கிறது.படம் முடிந்தபின்னும் காட்சிகள் அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன.பகிடிவதை செய்யும் பழைய மாணவர்கள், கல்லூரிக்குள் நுழையும் விஜயையும் பகிடிவதைக்கு அழைக்கிறார்கள்.எலக்றிக் ஷொக்கொடுத்து பகிடிவதயிலிருந்து தப்புகிறார் விஜய்.
 

  ஜீவ‌வும்,ஸ்ரீகாந்தும் த‌ம‌து குடும்ப‌நில‌மை கார‌ண‌மாக‌ப்ப‌டித்துப்ப‌ட்ட‌ம் பெற‌வேண்டும் என‌ க‌ஷ்ர‌ப்ப‌ட்டுப்ப‌டிக்கின்ற‌ன‌ர்.ப‌ஞ்ச‌வ‌ன் பாரி வேந்த‌ன் என்ற‌பெய‌ரில் ப‌டிப்பில் அதிக‌ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை.

  விஜ‌ய்,ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோருட‌ன் ப‌டிக்கும் ச‌த்ய‌ன் புத்த‌க‌த்தில் உள்ள‌தை அப்ப‌டியே பாட‌மாக்கி ஒப்பிக்கிறார். ஆசிரிய‌ர்க‌ள் அவ‌ரைப்பாராட்டுகிறார்க‌ள்.புத்த‌க‌த்தில் உள்ள‌தைப்பாட‌மாக்கி ஒப்பிப்ப‌தை விஜ‌ய் விரும்ப‌வில‌லை.

  க‌ல்லூரிமுத‌ல்வ‌ர் ச‌த்ய‌ராஜின் க‌ண்டிப்புமாண‌வ‌ர்க‌ளைக்க‌ல‌க்க‌ம‌டைய‌வைக்கிற‌து.ச‌த்ய‌ராஜின் க‌ண்டிப்பினால் ஒருமாண‌வ‌ன் த‌ற்கொலை செய்கிறார்.விஜ‌யுட‌ன் சேர‌வேண்டாம் என்று ஜீவாவுக்கும்ஸ்ரீகாந்துக்கும் புத்திம‌தி போன்று எச்ச‌ரிக்கை விடுக்கிறார் ச‌த்ய‌ராஜ்.

  ச‌த்ய‌ராஜின் ம‌க‌ள் இலியானா‌வுக்கு திரும‌ண‌ நிச்ச‌ய‌தார்த்த‌ம் ந‌டைபெறுகிற‌து.இலியானாவுக்கு நிச்ச‌யிக்க‌ப்ப‌ட‌ மாப்பிள்ளை ப‌ண‌த்தாசை பிடித்த‌வ‌ர் ம‌னித‌ரை ம‌திப்ப‌தில்லை என்று கூறுகிறார் விஜ‌ய். இலியானா அத‌னை ம‌றுக்கிறார்.உண்மை‌யை உண‌ர‌வைத்த‌ விஜ‌யைக்காத‌லிக்கிறார் இலியானா.

  த‌ன்னாலான‌ உத‌வியை எலோருக்கும் செய்கிறார் விஜ‌ய்.ப‌டிக்காம‌ல் சுற்றித்திரிந்த‌ விஜ‌ய் முத‌ல் மாண‌வ‌னாக‌ச்சித்திய‌டைகிறார்.க‌ஷ்ர‌ப்ப‌ட்டுப்ப‌டித்து குறைந்த‌ புள்ளிக‌ளுட‌ன் சித்திய‌டைந்த‌வ‌ர்க‌ள்விஜ‌யைப்பார்த்து அதிச‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

  க‌ல்லூரிவிழாவில் ச‌த்ய‌ன் பேசுவ‌த‌ற்குத்த‌யாரித்த‌ உரை‌யில் விஜ‌ய் த‌ன் திருவிளையாட‌லைச்செய்து வ‌ச‌ன‌ங்க‌ளை மாற்றிவிடுகிறார்.க‌ற்பித்தார் என்ப‌தை க‌ற்பழித்தாரென‌ப்பாட‌மாக்கி உரையாற்றுகிறார் ச‌த்ய‌ன்.அந்த‌ அவ‌மான‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌த்ய‌ன்,உங்க‌ளை விட‌ உய‌ர்ந்த‌ இட‌த்துக்கு வ‌ருவேன் என‌ ச‌ப‌த‌ம் செய்கிறார்.

ச‌த்ய‌ராஜின் நெருக்க‌டியினால் மாடியிலிருந்து குதித்துத்த‌ற்கொலை செய்ய‌ முய‌ற்சி செய்த‌ ஜீவாவின் கால் முறிகிற‌து.நினைவிழ‌ந்து ஆப‌த்தான் நிலை‌யிலிருந்த‌ ஜீவா ,விஜயின் முய‌ற்சியால் உயிர் த‌ப்புகிறார்.
விஜ‌யின் ஆலோச‌னைப்ப‌டி ஜீவாவும்,ஸ்ரீகாந்தும் தாம் விரும்பிய‌ துறைக்குச்செல்கின்ற‌ன‌ர்.

  க‌ல்லூரி வாழ்க்கை முடிந்த‌தும் தான் ச்ந்ய்த‌ ச‌ப‌த‌த்தின் ப‌டி ந‌ண்ப‌ர்க‌ளைக்காண‌வ‌ருகிறார் ச‌த்ய‌ன்.ஜீவாவையும் ஸ்ரீகாந்தையும் ச‌ந்தித்துத் த‌ன் உய‌ர் நிலையைத்த‌ம்ப‌ட்ட‌ம‌டிக்கிறார்.மூவ‌ரும் விஜ‌யைத்த்தேடிச்செல்கின்ற‌ன‌ர்.விஜ‌ய் இருக்கும் ஊரை அறிந்து ப‌ஞ்ச‌வ‌ன் பாரிவேந்த‌னின் வீடு எங்கே என‌ விசாரிக்கின்ற‌ன‌ர்.

  ப‌ஞ்ச‌வ‌ன் பாரிவேந்த‌னின் வீட்டுக்குச்சென்ற‌போது பாரியின் த‌க‌ப்ப‌ன் இற‌ந்த‌தாக‌ அறிகின்ற‌ன‌ர். பாரி எங்கே என‌க்கேட்கின்ற‌ன‌ர். அங்கிருந்த‌ ஒருவ‌ர் கைகாட்ட‌ பாரியுன் பின்னால் நின்று பாரி என‌க்கூப்பிடுகின்ற‌ன‌ர்.அப்போது பாரி திரும்பிப்பார்க‌கிறார். அங்கே அவ‌ர்க‌ள் தேடிவ‌ந்த‌ விஜ‌ய்க்குப்ப‌திலாக‌ எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார்.ஸ்ரீகாந்த்,ஜீவா. ச‌த்ய‌ன் ஆகிய‌மூவ‌ரும் அதிர்ச்சியடைகின்ற‌ன‌ர்.நான்தான் ப‌ஞ்ச‌வ‌ன் பாரிவேந்த‌ன் என்கிறார்  எஸ்.ஜே.சூர்யா.
  
   சுவ‌ரிலே மாட்டியிருந்த‌ புகைப்ப‌ட‌ம் அவ‌ர்க‌ளின் ச‌ந்தேக‌த்தைத்தீர்த்த‌து.க‌ல்லூரியில் சித்திய‌டைந்த‌ மாண‌வ‌ர்க‌ள் இருக்கும் அப்புகைப்ப‌ட‌த்தில் முத‌ல்வ‌ர் ச‌த்ய‌ராஜுக்கு அருகில் இருந்த‌ விஜ‌ய்க்குப்ப‌திலாக‌ எஸ்.ஜே.சூர்யாவின் ப‌ட‌ம் இணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.ஏதோ ஒரு தில்லுமுல்லு ந‌டைபெற்றிருப்ப‌தை அறிந்த‌ மூவ‌ரும் வெளியேறுகின்ற‌ன‌ர்.

   மூவ‌ரும் ம‌றுநாள் எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டிற்குச்செல்கின்ற‌ன‌ர்.எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியைக்காட்டிய‌தும் ச‌த்ய‌ன் ப‌ய‌த்தில் ஓடிவிடுகிறார்.எஸ்.ஜே.சூர்ய‌வின் த‌க‌ப்ப‌னின் அஸ்திக்க‌ல‌ச‌த்தை ம‌ல‌ச‌ல‌க்குழியினுள் போட‌ப்போவ‌தாக‌ மிர‌ட்டி உண்மையை அறிகின்ற‌ன‌ர்.

  பாட‌சால‌யில் ப‌டிக்காத‌ சிறுவ‌ன் விஜய் க‌ரும்ப‌ல‌கையில் க‌ண‌க்கைச்ச‌ரியாக‌ச்செய்த‌தை அறிந்த‌ ஆசிரிய‌ர்,விஜ‌யை இழுத்துச்சென்று எஸ்.ஜே.சூர்‌யாவின் த‌க‌ப்ப‌னின் முன்னால் நிறுத்துகிறார்.த‌ன் ம‌க‌ன் முட்டாள் என்ப‌தைத்தெரிந்த‌ எஸ்.ஜே.சூர்யாவின் த‌க‌ப்ப‌ன் த‌ன் ம‌க‌ன் ப‌ஞ்ச‌வ‌ன் பாரிவேந்த‌ன் எனும் பெய‌ரில் விஜ‌யைப்ப‌டிக்க‌ வைக்கிறார்.எஸ்.ஜே.சூர்யாவின் பெய‌ரில் த‌ங்க‌ளுட‌ன் ப‌டித்த‌து விஜ‌ய் என்ப‌தை அறிகின்ற‌ன‌ர்.விஜ‌ய் இருக்கும் இட‌த்தைத்தெரிந்துகொண்டு அஸ்திக்க‌ல‌ச‌த்தைக்கொடுத்துவிட்டு வெளியேறுகின்ற‌ன‌ர். அஸ்திக்க‌ல‌ச‌த்தினுள் அஸ்தி இல்லாததைக்க‌ண்டு அதிர்ச்சிய‌டைகிறார். எஸ்.ஜே.சூர்யா. அஸ்திக்க‌ல‌ச‌ம் மாறிய‌ உண்மையை வேலைக்கார‌ன் மூல‌ம் அறிகிறார் சூர்யா. 
    
   இலியானாவுக்குத்திரும‌ண‌ம் ந‌டைபெறுவ‌தை  அறிந்த‌ மூவ‌ரும் திரும‌ண‌வீட்டுக்குச்சென்று திரும‌ண‌த்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துச்செல்கின்ற‌ன‌ர்.பாட‌சாலையின் ஆசிரிய‌ராக் விஜ‌ய் இருப்ப‌தை அறிகின்ற‌ன‌ர்.பாட‌சாலையின் விஞ்ஞான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளைப்பார்த்துவிஜ‌ய் அங்கு இருப்ப‌தை ஊர்ஜித‌ம் செய்கின்ற‌ன‌ர்.விஜ‌யைக்க‌ண்ட‌ ஸ்ரீகாந்த் ஜீவா இலியானா ஆகியமூவ‌ரும் ம‌கிழ்ச்சிய‌டைகின்ற‌ன‌ர்.


 ச‌ப‌தத்தில் தான் வெற்றி பெற்ற‌தாக‌ இறுமாப்ப‌டைகிறார் ச‌த்ய‌ன்.கொச‌க்கி ப‌ச‌ புக‌ழ் எனும் கோடீஸ்வ‌ர‌னுட‌ன் ஒப்ப‌ந்த‌ம்செய்வ‌த‌ற்காக‌ இந்தியாவுக்குவ‌ந்த‌தாக‌க்கூறிய‌ ச‌த்ய‌ன் கொச‌க்கி ப‌ச‌ புக‌ழைத்தேடிச்செல்கிறார்.தான் தேடிவ‌ந்த‌ கொச‌க்கி ப‌ச‌புக‌ழ் விஜ‌ய் என்ப‌தை அறிந்த‌ ச‌த்ய‌ன் ம‌ன்னிப்புக்கேட்கிறார்.


  க‌தை, திர‌க்க்க‌தை ஷ‌ங்க‌ர்  ம‌த‌ன் கார்க்கி.க‌ம‌ரா ம‌னோஜ் ப‌ர‌ம‌ஹ‌ம்ஷா எடிட்டிங் அந்தோனி டிப்புஇசை ஹ‌ரிஸ் ஜெய‌ராஜ் இய‌க்க‌ம் ச‌ங்க‌ர்.ஆல் இஸ்வெல்  என் பிர‌ண்டைப்போலஹாட்டிலே ப‌ற்ற‌ரி,இருக்கானா இடுப்பிருக்கானாஅஸ்க்ல‌ஸ்கா எந்த‌ன் க‌ண்ணே ஆகிய பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்க‌ளின் ம‌ன‌தைக்க‌வ‌ர்ந்த‌ன‌.

  ராஜி ஹிரானி சேத‌ன் ப‌க‌த் எழுதிய‌ ஃபை பாயிண்ட் ச‌ம் ஒன் வாட் நாட் டுடு அட் ஐ ஐ டி எனும் நாவ‌லைத்த‌ழுவி ஹிந்தியில்வெளிகி வெற்றிபெற்ற‌‌ திரீ இடிய‌ட்ஸ்  ப‌ட‌மே த‌மிழில் ந‌ண்ப‌ன் எனும் பெய‌ரில் வெளியாகி வெற்றி பெற்ற‌து.

 விஜ‌ய் ப‌ட‌ம் எனும் எதுவித‌ அடையாள‌மும் இல்லாத‌ப‌ட‌ம்.ஆர்ப்பாட்ட‌ அறிமுக‌ம்,ப‌ஞ்ச் ட‌ய‌ல‌க் எதிவும் இல்லை.ப‌டிப்பு வாழ்க்கையை வ‌ள‌ப்ப‌டுத்த‌வேண்டும் வேலை பெறுவ‌த‌ற்காக‌ப்ப‌டிக்க‌க்கூடாதுஎன்ற‌த‌த்துவ‌த்தை விள‌க்கும்ப‌ட‌ம்.சித்திய‌டைந்த‌வ‌ர்க‌ளை ஒரேமாதிரிப்பார்க‌க‌வேண்டும் முத‌லிட‌ம் க‌டைசி இட‌ம் என்ற‌ பேத‌ம் இருக்க‌க்கூடாது என்ப‌தை உண‌ர்த்திய‌ப‌ட‌ம்.
 ஷ‌ங்க‌ர் இய‌க்கிய‌ முத‌லாவ‌து ரீமேக்ப‌ட‌ம்.விஜ‌ய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,ச‌த்ய‌ராஜ்,எஸ்.ஜே.சூர்யா,ச‌த்ய‌ன் ஆகிய‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் பாத்திர‌ங்க‌ள் அனைத்தும்முக்கிய‌த்துவ‌மான‌வை.ச‌த்ய‌னின் ந‌டிப்பு மிக‌ அபார‌ம்.

விஜ‌ய்,சூர்யா ஆகியோர் ந‌ட்சிப்ப‌தாக‌ முத‌லில் அறிவிக்க‌ப்ப‌ட‌து.விஜ‌ய்க்காக‌க்க‌தை எழுதிக்காத்திருந்து ஏமாந்த‌ எஸ்.ஜே.சூர்யா ப‌ழசை ம‌ற‌ந்து விஜ‌யுட‌ன் இண‌ந்து ந‌டித்தார்.ப‌டத்தைப்பார்த்துமுடிந்த‌தும் ஆல் இஸ் வெல் என‌ச்சொல்ல‌வைத்துள்ளார் இய‌க்குந‌ர் ஷ‌ங்க‌ர்.

No comments: